Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கவிதைப் பூங்காடு

கவிதைகள் | பாடல் வரிகள்

பதிவாளர் கவனத்திற்கு!

கவிதைப் பூங்காடு பகுதியில் கள உறுப்பினரல்லாதோரின் கவிதைகள், கவிதை மொழியாக்கம், உலகக் கவிதை, பாடல் வரிகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் யாழ் கள உறுப்பினர்கள் அல்லாதவர்களின் கவிதைகள், கவிதை மொழியாக்கங்கள், பாடல் வரிகள் போன்றன மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
ஈழத்தை சேர்ந்த, பூர்வீகமாகக் கொண்டவர்களின் படைப்புக்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படவேண்டும். ஏனைய கவிதைகள் தரமான கவிதைகளை அறிமுகம் செய்யும் நோக்கில் இலக்கிய மின் இதழ்களில் இருந்து மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. கண்ணயரும் நேரங்களில் காணுகின்ற கனவுகளும் கண்விழிக்கும் போதுகளில் மோதுகின்ற நினைவுகளும் அந்த நாள் நினைவுகளே அன்பான பெற்றோரின் அரவணைப்பில் வளர்ந்ததுவும் பள்ளிப் பருவத்தில் பாடித்திருந்ததுவும் துள்ளித்திரிந்து துள்ளாட்டம் போட்டதுவும் அடம்பிடித்து அம்மாவிடம் அடிவாங்கி அழுததுவும் இந்த வயதினிலும் இனிக்கும் நினைவுகளே . கல்யாணம் கட்டி கணவனுடன் வாழ்ந்ததுவும் குழந்தை பல பெற்று குதூகலமாய் இருந்ததுவும் வாழ்க்கையில் போராடி நொந்ததுவும் வென்றதுவும் நெஞ்சில் இருந்தாலும் நிழல்களாய் தெரிவனவே பிள்ளைகள் வளர்ந்து கரைசேர்ந்து பேரப்பிள்ளைகளும் பிறந்தபின்னர் குடும்பமாய் புலம்பெயர்ந்து குடிபுகுந்தோம் குளிர்நாட்டில் குளிர்நாட்டில் இருந்தாலும் குறையேது…

    • 2 replies
    • 2.9k views
  2. இன்று நினை நன்றே நினை ............. பிறந்து விட்டது புது வருடம் , தை பிறந்தால் வழி பிறக்கும் . வலிகளை மறந்து ஒரு புறம் தள்ளி விட்டு இறை யுணர்வுடன் வழி பிறக்க வேண்டுவோம் கோபம் கொள்வதாலோ விரக்தியடைவதாலோ கணணி வேகத்துக்கு ஈடு கொடுத்து , வெற்றி சேதிகளை பெறவேண்டும் என்று , அவா படுவதை விட்டு ,வலிகள் மூலம் தான் வழி பிறக்கும் என்று சிந்தித்து நமது கடமைகளை உணர்ந்து மற்றவர்களும் உணர வைத்து,எமது பணியை முன்னெடுப்போம் .தாயக வலிகள் மூலம் நாமும் பங்கெடுப்போம் எமக்கு முன் நீண்ட பணி காத்து இருக்கிறது சிந்திப்ப்போம் சிந்திக்க் வைப்போம். இதுவே என் கள உறவுகளுக்கு என் பொங்கல் புதுவருட வாழ்த்து .(சங்கல்பம் ). நட்புடன் நிலாமதி அக்கா.

  3. யாழ் இணையத்தின் சமூக, இலக்கியப் பணி, தமிழர்களை ஒருங்கிணைக்கும் பணி போற்றுதலுக்குரியது. யாழ் இணையம் மேன்மேலும் வளர்க!

    • 2 replies
    • 700 views
  4. அவர்களா இவர்களா ? மண் ஒழுங்கையும் மழை வெள்ளம் அரித்த மார்க்கண்டர் வளவும் மெளனம் கரைத்த சூனியப் பொழுதொன்றில் - உன் உயிர் குடித்த வேட்டொலியும் மீதமாய்........ சாட்சிக்கும் ஆளின்றி சட்டமும் அரவமின்றி காட்சிக்கு வைத்தாற் போல் காலையில் நீ கண்கள் பிதுங்கி பிடரிக்குள் புகுந்த சன்னத்தின் கோதுகள் ஆதாரமாய்.... 'புலி" செத்துக்கிடப்பதாய் பொய் சொல்லிப் போனார்கள் நீ என் அயலான் என்று சொல்லும் துணிவின்றி நானும் மெளனமாய்.... ஆளவரம் கேட்கிறது அகால இருள் திரள்கிறது ஆட்காட்டிப் பறவையின் அந்தரக் குரல்.... அவர்களா இவர்களா எவர்கள் ? என் வீட்டுப் படலையின் கிடுகுத்தட்டி விலகுகிறது மனிதவுரிமை மன்றில் - அன்றேல் ம…

    • 2 replies
    • 1k views
  5. ஏய் கிபிரே.... உச்சமேறி வந்து உருட்டி விட்டோடுகிறாய் அச்சமில்லை யெனின் அடி வாரம் வந்து பாரேன்... கந்தக தீயினிலே கருகி நீ விழுவாய் - உன் சாம்பல் எடுத்து சடங்குகள் செய்வார்.... முகிலை கிழித்து வந்து மூச்சை அடக்கி போறாய் - நீ வல்லவன் தானென்றால் தாழ பறந்து வாவேன்.... ஜயாயிரம் அடிமேலேறி ஜயா நீ பறந்து போறாய் அச்சத்தில் நீ இருக்கு அதில் வேறு செருக்குனக்கு.... ஏறி வந்தேன் எறிந்து விட்டோடுகிறாய்? இத்தனை அச்சமா இம்ரான் படையணிக்கு...? -வன்னி மைந்தன் -

  6. அழவேண்டும் ஒரேயொரு முறை ஓங்கி அழவேண்டும். அழுகை அடையாளமாகவோ அவதானமாகவோ இருந்துவிடக் கூடாது. அழுகை மீதான குறிப்புக்கள் இன்னொருவரால் கடத்தப்படுமாகையால் அழுகைக்கு காரணமாகிவிடவும் கூடாது. தலைகோதவும் விரல்களைகளை வருடவும் மடி சாய்த்து கன்னம் தடவவும் அணைத்து முதுகை நெகிழ்க்கவும் ஒருவரும் இருக்கவும் கூடாது. என் அழுகை இறுதியானதாகவும் இயல்பானதாகவும் உண்மையானதாகவும் இருக்க உதவுங்கள். எப்போது அழுதேன். சுயநலத்தால் குரலெடுத்து கண்ணீர்விட்டுத் தொலைத்ததையெல்லாம் அழுகைக்குள் எப்படியடக்குவது. ஒலியில்லாமல் கண்ணீரில்லாமல் ஒடுங்கி தளர்ந்து நின்றதையெல்லாம் எதில் அடக்குவது? அழவேண்டும் ஓங்கி அழவேண்டும் அது நான்…

  7. தெரியவில்லை எனக்கு தெரிந்தால் நீ சொல்லு.... ஜயனே... யான் அறியவில்லை வரலாறு அறிந்தால் வந்து நீ சொல்லு.... தெரியவில்லை எந்தனுக்கு தெரிந்தால் வந்து நீ சொல்லு.... புரியாமால் வந்து இங்கு பளுகவில்லை நானிங்கு.... ஆழ ஆராய்ந்தால் அதை வந்து நீ சொல்லு.... எந்தனுக்கு விலையாக கொண்டு வந்து நீ வில்லு.... எம் தமிழர் மீதினிலே எறி வந்து நீ சொல்லு... காலம் புராவும் அக்கருத்தை நீ வில்லு.... ஒரு காலம் போவேன் யான் ஊண்டியே தான் பொல்லு.... அன்நேரம் கூட நான் வாழ்த்துவேன் உன் சொல்லு... அறியாமால் இருக்கிறேன் அறிந்தாலே நீ சொல்லு.... அறியாமை விலகட்டும் ஜ…

  8. குறிஞ்சிப் பாடல் -வ.ஐ.ச.ஜெயபாலன் கரும் திரை அசையும் தோற்பாவைகளாய் நெளியும் நீல மலைத்தொடர்களின் மேல் முலை சிந்தச் சிந்த நிலா நட்சதிரக் கன்றுகளைத் தேடுது. சொட்டும் நிலாப் பாலில் கரையும் இருளில் பேய்களே கால்வைக்க அஞ்சும் வழுக்கு மலைப் பாதை பாம்பொடு பாம்பாய் நெளிகிறது. மின்மினிகள் துளை போடும் இருள் போர்த்த காட்டின் வழி நீழ கமழும் நாவல்மரங்கள் உதிர்க்கும் கனிக்கு கரடிகள் அலையும் இரவில் பூத்துக் குலுங்குது முல்லை. ஆதிவாசிகளே அஞ்சும் வன இருளில் வண்ணத்துப் பூச்சிகளும் உறங்கும் இந்தக் கொடிய நள்ளிரவில் ஏன் பூத்தாய் காட்டு முல்லை. நான் மண்ணுக்கு பழசு கவிஞா பொறுத்திரு என்று நகைத்த முது முல்லை சுட்டும் திசையில் …

    • 2 replies
    • 620 views
  9. கெரிலா போர் உதிகளைக் காடுகளைக் கைவிட்டு வெளிகளிலே முடிசூடி எழுந்த கதை எங்கள் கதை எங்களது காடெல்லாம் எதிரி ஆழ ஊடுருவ, பெரு வெளியின் பொறிக்குள்ளே, வீரமுடன் படை நடத்தி வீழ்ந்த கதை எங்கள் கதை.

    • 2 replies
    • 824 views
  10. வெற்றி.... மன திருப்தியை .... கொடுக்கும் ... தோல்வி .... மன உறுதியை ... கொடுக்கும் .....!!! தோல்வியென்னும் ... அக்கினிக்குள் வெந்து .... வெற்றியென்னும் ... அன்னத்தை உண் ....!!! ^ எழுந்திரு போராடு வெற்றி கே இனியவன்

  11. ஆக்ரோசமான நீலவானில்... அரைமதி நிலவின் மீதேறி... அலைக்கழிந்த பயணம்! நிலமிழந்த நிலையில்... புலம்பெயரும் விலையில்... யாரோ தலைமையில்... போவோர் கவலையில்... ஏதேதோ தேவைகள்! சில கால முன்னெடுப்பில்... பல தடவை பின்னெடுப்பு! மனதில் அணையா அடுப்பாய்... நடுக்கடலில் அசையும் துடுப்பு! மலை அலை தாவி... நீர்த் திவலைகள் மேவி... புயல் மழை தூவ... கரு முகில்களுக்குள் நிலவு மெல்ல மெல்ல அமிழ்ந்து போகும்! பசியோடு தாகத்தோடும் பழகிய தொண்டைக்குழிகள் களைத்துப் போகும்! வந்தோர் கண்ணீர் உப்புநீரில் கலக்க, மீன் தின்றது போக... மீதி மிதந்து சில நாளில் கரையொதுங்கும்!

  12. ஹைகூக்கள் பொருமி தவித்தன ஏதிலியாகா ஏதிலிகள் சாவகாசமாக செருமிக்கொண்டிருக்கிறது சர்வதேசம் எட்டி எட்டி பறிக்கின்றாள் கனியை எட்டவில்லை ஏங்கியது கன்னிக்காய் மனது. கொடுத்துக்கொண்டிருக்கிறேன் தீரவில்லை திகட்டவில்லை முத்தங்கள். வைக்கோல் கன்று காட்டி ஏமாற்றிய பால்க்காரனுக்கு நிஜக் குழந்தை காட்டப்பட்டது சிக்னல் பிச்சைக்காரி. பிடியின் வழி வளைந்து வளர்கின்றன பானைகளும் குழந்தைகளும். பிடியின் வழி வளைந்து வளர்கின்றன பானைகளும் குழந்தைகளும். கிளறுகின்றது கோழி குப்பையோடு குடலையும் - பசி மனிதாபிமானம் அற்றவர்களெனப்பட்டவர்களுக்கு(???!!!) மனிதாபிமானம் உள்ளவர்களெனப்பட்டவர்கள்(???!!!) வழங்குவது மரணம்!!!. இடைவிடாத அடை மழை சுக…

  13. நீ இல்லாத ... பொழுதில் ... நான் ....!!! நீர் இல்லாத இடத்தில் மீன் ....!!! ^^^ ஒரு வார்த்தை கவிதைகள் கவிப்புயல் இனியவன் உன் எண்ணங்களை... சுமந்து ... தவிர்க்கும் .... நான் .....!!! வலையில் சிக்கி தவிக்கும் மீன் .....!!! ^^^ ஒரு வார்த்தை கவிதைகள் கவிப்புயல் இனியவன்

  14. என் கவிதையை ரசிக்கிறாய் கண்ணீர் விடுகிறாய் காதலை வெறுக்கிறாய் உயிரே ...!!! என் காதல் வரிகள் எழுத்துக்கள் அல்ல -உன்னை நினைத்து எழுதும் ஆத்மாவின் உயிர் வரிகள் ....!!!

  15. Started by உடையார்,

    மே 18....!!! எங்கள் தேசம் எரிந்து போனது.. எங்கள் உறவுகள் கருகிப்போனார்கள்.. எங்கள் கனவுகள் கலைந்து போயின... எங்கும் சாவீட்டு சத்தமே காதில் விழுந்தது. எத்தனை நாட்கள் வலி சுமந்தோம்! எத்தனை நாட்கள் உயிர் கருகினோம்! எத்தனை நாட்கள் பசியில் துடித்தோம்! எத்தனை நாட்கள் கதறி அழுதோம்! துண்டுதுண்டாய் சிதறிப்போனது சின்னப்பிஞ்சு கண்முன்னே பிள்ளையின் உயிர் பிரிய கட்டியணைக்க கையில்லா அம்மா குண்டு துளைத்து குடல் கிழிந்து தொங்கி குற்றுயிராய் குழறி அழுதாலும் கண்கள் பிதுங்கி விழுந்து மரண ஓலம் எழுப்பினாலும் நின்று துயர் தீர்க்க நேரம் இன்றி உயிரை மட்டும் கையில் கொண்டு ஓடினோமே!!! முலையில் பால் வற்றி குருதி வடியும் அதையும் பசியால் பிஞ்சு குடிக்க வலியால்…

    • 2 replies
    • 948 views
  16. Started by மாறன்,

  17. கைகோர் தமிழா கைகோர்........! கைகோர் தமிழா கைகோர்........! இந்த பூமியில் வாழ கைகோர்...! தூய தமிழனாய் வாழ கைகோர்..! உழுதுண்டு வாழ்ந்தவர் நாங்கள்.! அதை உலகுக்கு தந்தவர் நாங்கள்.! நிலம் இன்றி அகதியாய் சிறுபான்மை......சின்னமாய் நாங்கள்! மூத்தவர் ஆண்டு சென்றுவிட... வந்தவர் நாம் மெனியாய் .. அடிமையாய் தொடர்கின்றோம் ......... எட்டு கோடியாய் உள்ளோம் ....! எட்டி உதைத்திட ஒன்று சேர்வோம்...... பூமியில் திசையெங்கும் வாழ்கின்றோம்.... சொந்தமாய் நிலம் ஒன்று சேர்ப்போம........ தொழுது நாம் வாழ்ந்த கோவில் அங்கு குண்டுகள் வீழ்கின்றது இன்று சிறு துண்டு தசைகளாய் வீழ்ந்து - சாகிறான் தமிழன் தினமும் ............. நிலாச் சோறு உண்ட முற…

  18. அகிலமெங்கும் உன் பெயர் குழந்தை அடிமை நாட்டில் நீ ஓர் தீவிரவாதி! ஆம் நீ ஓர் தீவிரவாதி! பார்வைக் கணையால் பதைக்க வைக்கும் நீ ஓர் தீவிரவாதி பறக்கு முன்னே உன் இறகொடித்த பின்னும் பார்வையால் கொல்லும் நீ ஓர் தீவிரவாதி! மனிதம் இழந்த‌ மனிதர் மத்தியில் மனம் தேடும் நீ ஓர் தீவிரவாதி! அப்படிப் பார்க்காதே அன்பே அதைத்தாங்கும் வலிவெமக்கில்லை மன்னித்து விடு தேவதையே இது மானிடர் வாழும் பூமி! தேவதைகளுக்கு இங்கே இடமில்லை! இல்லாத இறைவைனின் இறையாண்மை இங்கு வேதம்! அரசியல் சட்டமென்றோர் அரக்கச் சட்டையணிந்த‌ அசுரர் வாழும் அவனியிப் பூமி! தமிழனாய் பிறந்ததால் தன்மானம் இருப்பதால் சுடப்பட்டாய் நீ சுதந்திரம் கேட்டதால்! …

  19. சுனாமிப்பாதிப்பின்போது எழுதிய கவிதைகள் சுனாமியிலே மடிந்த எம் சொந்தங்களுக்குச் சமர்ப்பணம். ---------------------------------------------- கட்டடிப் போட்ட நாய்போல் காலை நக்கும் கடலே - உன்னை அழகியவோர் அவளாக நினைத்திருந்தேன் - உன் அலைச் சேலை உயர்ந்த பின்பு தான் தெரிகிறது நீ ஓர் அருவருக்கத் தக்க மிருகமென்று ஆங்கிலேயன் உனக்கு வைத்த தமிழ்ப் பெயர் சீ! ஐப்பானியன் தனக்குத் தெரிந்த தமிழில் உனக்கு வைத்தான் பெயர் சுனாமியென்று ஆமியடித்தது போதாதென்று சுனாமி நீ வேறு வந்திருக்கிறாய் பஃறுளி ஆற்றையும் பன்மலையடுக்கத்துக் குமரிக்கோட்டத்தையும் கொடிய நீ கொண்டாய் பூம்புகார் உன்னால் புதையுண்டு போனது துவாரகா நகரம் துவம்சமானது இவ்வாறுதான் நீ தென் குமரியின் வாழ்வை உன் வக…

    • 2 replies
    • 617 views
  20. இருட்டில் வாழ்கிறோம் ..........ஆனால் விடியும் திசை தூரமோ தூரம்......... அதுவரை மனம் தளராமல் பயணிப்போம் ............... விடியலின் தோற்றங்கள் கண்களுக்கு புலப்பட தெரிந்துவிட்டது ................. .ஆகவே விடிந்து விடும் என்று நாம் குந்தியிருக்காமல் .......... தொடர்ந்து பயணிப்போம் முழுமையான விடிவை நோக்கி ................ ஏனனில் எம்மை நோக்கி விடிவு வராது ..............நாம்தான் விடிவை நோக்கி செல்லவேண்டும் ............. நாம் வைக்கும் காலடிகளின் ஒவ்வொரு வேகத்திலேயுமே ........எம் விடிவின் வேகம் தீர்மானிக்கப்படுகிறது .... ஒளிர்ந்த முகத்துடன் ,மலர்ந்த முகத்துடன் ........ஆதவன் எம்மை வரவேற்க ........காத்திருக்கிறான் ..

  21. உங்களின் நினைவுகள்.....! காற்தடம் கரைத்து உப்பளக் காற்றிடை மிதந்து போர்த்தடம் தேடி உப்புக்காற்றின் உதைப்பில் உங்களின் நினைவுகள்..... நெஞ்சினில் நிறைந்த நண்பரின் ஞாபக ஊற்றினில் நாட்குறிப்பினில் காற்றழுத்தக் காற்றழுத்தக் கரைதொட்ட அலையின் கரைமணலில் உங்களின் நினைவுகள்..... நேற்று இவ் வெளியினில் நெஞ்சுயர்த்திப் போகிறோம் என்ற என் தோழியர் முகங்களில் பூத்திருந்து அப் புன்னகை அரும்பலில் உங்களின் நினைவுகள்.... காற்றில் நுளைந்து கடலில் கரைந்து - என் மூச்சில் நிறைந்து முகவரி மறுத்துப் பெயருமில்லாப் பொருளுமில்லா மெளனக் கிடக்கையில் மாவீரப் பெருமைகள் குவிய போனவென் தோழமைக் குரல்களில் உங்களின் நினைவுகள்...…

    • 2 replies
    • 900 views
  22. ஈழத் தமிழர்களின் அவலத்தை பற்றிய சிங்களக் கவிதைகள். தற்பொழுது ஐரோப்பிய நாடொன்றில் அகதியாக புலம்பெயர்ந்து வாழும் சிங்களக் கவிஞர் மஞ்சுள வெடிவர்த்தன எழுதியவை. "தமிழர்கள் ஒடுக்கப்படும் பொழுது சிங்கள மக்கள் எதிர்க்கவில்லை", என்று இன்னமும் நினைத்துக் கொண்டிருப்பவர்களுக்கு, இந்தக் கவிதைகளை சமர்ப்பிக்கிறேன். துவாரகா உந்துல, சந்திரமண்டலமெனத் தலை சாய்த்திருந்த சிறையில் ... தண்ணீர் மென்மையானதா நொந்ததா மனவெளி சுரங்கங்களில் கலகத்தின் அழிவுண்டான இரவொன்றில் தமிழ்ச் சகோதரியைப் பற்றி எதற்காக கலவரம்? கனவுகளின் முன்னணிக்கு உண்மையாகவே வெடி பட்ட நாளில் கண்ணீர் வரிசையிட்டதோ வழி நீளவும் பிக்குவின் காவியுடையைப் போல காத்திருந்த செங்கொடி யாருடைய குருதியால் சிவந்ததென்பது ம…

  23. இனியவனே உனக்காக நீ இருக்கும் போதும் என்னைப் போல் யாரும் உன்னை நேசிக்கவில்லை நீ இறக்கும் போதும் யாரும் உன்னுடன் இறக்கப் போவதில்லை ஆனாலும் அவர்களுக்கெல்லாம் பயந்து கொண்டு உன்னை நேசிக்கும் என்னை எப்போதும் ஏமாற்றிவிடுகிறாய் நீ உன்னை நான் துரோகி என்று சொல்லவில்லை.... பாவி என்றும் சொல்லவில்லை..... அந்தளவுக்கு என்னிடம் தைரியம் இல்லடா..... மறக்கத்தான் நினைக்கிறேன் ஆனால் முடியவில்லை சொல் தாங்கமாட்டேன் கல் இல்லை என் இதயம் கசக்காதே உன் வார்தைகளால் வலிக்குதடா...... பலர் வாழும் உலகம் இது... நீயும் வாழனும் தானேடா எங்கேனும் நீ சந்தோசமாய் வாழ்ந்திடு...

    • 2 replies
    • 914 views
  24. மனதில் ஓர் காதல் பரிசு..... கவிதை - இளங்கவி சேர்ந்த உதடுகளுக்கிடையில் சீனப் பெருஞ் சுவராய் அவளின் தலைமுடிகள அவன் உதட்டை உறுத்தின........ அவள் மூச்சின் வெப்பம் மூச்சால் வெளிவர மறுத்து அவள் கண்களூடே வெளிவர அவன் கண்களோ- அவளின அனல் மூச்சின் வெப்பம் தாளாமல் அதைத் தணிப்பதற்கு வேறு இடம் தாவியது....... அங்கே குளிரும் அறையில் கொதி மலைகளின் தழுவல்..... இரத்த நாடிகளின் வேகம் அதன் உச்சத்தில் இருக்க... இரத்த நாளங்களோ அதற்குப் பக்கத் துணையிருக்க.... போதாது என்று- அவன் ஏக்கம் கூடவும்..... போதும் வரை போராடு என்று அவளின் உணர்வும் சேரவும்.... அந்த அறையில் சில நிமிடப் புயல்கள்.... சில கணங்கள் அமைதி.... பல நிமிட அணுயுத்தம் …

  25. கொத்துக் கொத்தாய் பூத்த மலர்கள் தலைகள் சாய்ந்து... பசுமை இலைகள் பழுத்து விழுந்து... சுட்ட சூரியன் வெப்பம் தனிந்து... பகல்ப் பொழுதும் இருள் கவிழ்ந்து... வெண்திரைப்பனி வானத்தை மூடி... குளிரின் வலிமை உடலைத்துளைக்க... பிறந்தது குளிர்காலம் போனது இனிய மோகம்... மீண்டும் பிறக்கும் அந்தக்காலம் -இனி... மீண்டும் மீள்வோமா-நாம் அந்த இளமைக்காலம்?

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.