Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கவிதைப் பூங்காடு

கவிதைகள் | பாடல் வரிகள்

பதிவாளர் கவனத்திற்கு!

கவிதைப் பூங்காடு பகுதியில் கள உறுப்பினரல்லாதோரின் கவிதைகள், கவிதை மொழியாக்கம், உலகக் கவிதை, பாடல் வரிகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் யாழ் கள உறுப்பினர்கள் அல்லாதவர்களின் கவிதைகள், கவிதை மொழியாக்கங்கள், பாடல் வரிகள் போன்றன மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
ஈழத்தை சேர்ந்த, பூர்வீகமாகக் கொண்டவர்களின் படைப்புக்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படவேண்டும். ஏனைய கவிதைகள் தரமான கவிதைகளை அறிமுகம் செய்யும் நோக்கில் இலக்கிய மின் இதழ்களில் இருந்து மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. நண்பர்களுக்கு ஓரிரு வார்த்தைகள். எல்லாருக்கும் மணிவாசகனின் வணக்கங்கள். இந்தக் கவிதையும் கொஞ்சம் நீளமாத் தான் போச்சுது. அதுக்காக கோவிச்சுக் கொண்டு இடையிலை நிப்பாட்டிப் போடாமை முழுக்க வாசியுங்கோ சும்மா ஆக்களைக் கவரத் தான் இப்படித் தலைப்பு ஒண்டு போட்டனான். அதுக்காக ஆம்பிளைப் பிள்ளையள் வாசிக்காமை விட்டிடாதேங்கோ. ஆம்பிளைப் பிள்ளைகள் பொம்பிளைப் பிள்ளைகள் எல்லாம் என்ரை கவிதையை முழுசா வாசிச்சுப் போட்டு என்ரை கவிதை மாதிரி நீளமா உங்கடை விமாசனத்தை எழுதுங்கோ. நல்ல பிளைளைகள் தானே. இப்ப கவிதையைத் தொடங்கட்டே? சீர்தூக்கிப் பாருங்கள் சீரழிவாய்ப் போய்விட்ட சீதனம் செய்துவிட்ட சிறுமையினைப் பாரென்று சினந்திருக்கும் பெண்களுக்கு சந்தோச வாழ்க்கைக்கு சாபமாய்ப்…

    • 29 replies
    • 5.8k views
  2. Started by விகடகவி,

    எங்குதான் கற்றாய் நீ பொய்.. இளமை சொல்கிறதா... ஆசை சொல்லத் தூண்டுகிறதா.. இதுவரை இல்லாமல்.. இப்போது.. பொருத்தம் இல்லாமல்.. பொய்சொல்கிறாயே.. நீ உரைப்பதை நம்பிவிடும்.. முட்டாளா நான் மாறிவிட்டேன் என்று எண்ணிவிட்டாயா..முட்டாள்க் காதலனே... நீ நிற்பது கடல் நடுவில்.. நான் நிற்பது கரைமணலில்.. நீதான் இங்கு வரவேண்டும் நானல்ல.. காதல் மனதைத் தொடும் கலை.. உடலைத் தொட அலைவது கொலை காமம் தாம்பத்யத்தை ஸ்திரப்படுத்த... காதலைப் பலவீனப்படுத்த அல்ல நீ நேசிப்பது என்னையென்றால்.. நான் என் இதயத்தை என்று எடுத்துக் கொண்டேன்.. நீ உடலை என்பதைக் காட்டிச்சென்றாய்.. உன் வேலையாகவில்லை என்று எரிகிறாய்.. என் காதலன் கண்ணியத்தை எண்ணி நான் அழுகிறேன்.. பரிபூரண இதயத்தைக் க…

  3. Started by அஞ்சரன்,

    பொய்யும் புரட்டும் ... சிரட்டையும் கையுமாம் .. என் அப்பத்தா அடிகடி .. முணுமுணுக்கும் சொல் .. வழி கேட்டா சொல்லார் பின் .. வக்கனையா விடுப்பு கேட்பார் .. எதுக்கு போறிங்க என்னத்துக்கு என்று .. கேள்வி மேல் கேள்வி வைப்பார் .. உள்ளதை உள்ளபடி சொல்லார் பொய்யர் .. சுற்றி வளைத்து சுழல விட்டு .. கெட்டித்தனம் என தமக்குள்ள எண்ணி .. அத்தனை முட்டாள் தனம் செய்யும் ... இவர்கள் வாய் திறந்தாள் வானவெடி .. மனிதனுள் மனிதனை விற்கும் .. வித்தை அறிந்தவர்கள் பொய்யர்கள் .. கேட்டால் வாழ வழி என்பார் ... வேறு நல்வழி தேடார் பொய்யர் .. நடுநிலை ..கரைநிலை என்று காரணம் வேறு .. கண்ணை பார்த்து மூக்கு என்று சொல்பவர் .. இல்லை என நீ சொன்னால் கொள்கைவாதி .. …

  4. பொய் சத்தியம் மனைவியிடம் சத்தியம் வாங்கி பல காலம் விட்டிருந்த சிகிரெட்டைய் யாரும் பார்க்காத நேரம் பற்றவைக்க நினைத்தது குரங்கு ஆனால் ஒளிந்திருந்த மற்றுமோர் குரங்கொன்று கண்டுவிட்டது கடவுளிடம் சொல்லுவதாக சொன்னது பறவாயில்லை அவரை நான் சமாளிப்பேன் என்றது குரங்கு கோவம் வந்த மற்றக் குரங்கு மனைவியிடம் சொல்வதாக வெருட்டி விட்டது. பா.உதயன்

  5. தமிழினமே.......நீ தகிக்காதே தவிக்காதே தளர்ந்து விடாதே.... துடிக்காதே துவளாதே துன்பப்படாதே..... மறக்காதே மயங்காதே மடிந்து விடாதே....... ஓடாதே ஒழியாதே ஓய்ந்து விடாதே....... தயங்காதே தலை குனியாதே தனியாதே தாகம் தான் தமிழீழத் தாகம் தான் திக்காதே திணறாதே திகைக்காதே பொய்க்காதே தமிழீழம் பொய்க்காதே.

    • 0 replies
    • 1.4k views
  6. என் சிரிப்புகளும் பொய் சொல்கின்றன இயல்புகளும் தம் இயல்பினை இழந்துவிடுகின்றன மரபியல் தாண்டிய முடிவுகளால்... மரத்துப்போய் விடுகின்றது மனசு...! புதிதாய் எதையோ தேடுகின்றது கிடைக்காது என்று தெரிந்தும் அதற்காகவே ஏங்குகிறது நேரகாலம் தெரியாமல்... வந்துபோகும் நினைவுகளால், கண்களோடு சேர்ந்து... நனைந்துபோகின்றது மனசும். பாரமான இதயம் பற்றியெரிய... ஈரமான மனசு கொதித்து, ஆவியாகிக் கிளம்புகின்றன ஏமாற்றங்கள். கலகலப்பாய் சிரித்துக்கொண்டிருக்கும் என்னில், என் அழுகையைத்தவிர... வேறெதுவும் உண்மையில்லை...!

  7. பொய்த்துத்தான் போகாயோ ******************************* சத்தம் இன்றி - பெரும் யுத்தம் இன்றி சலசலப்பு ஏதுமின்றி சிணுங்கி வழிகிறாள் சிலநாளாய் வானமகள் முன்பெல்லாம் அவள் வரவு கண்டு ஆனந்தித்த பொழுதுகள் அளவுக்குள் அடக்க முடியாதவை மனம் ஆனந்தப்பூங்காற்று பாடி மமதையிலே திழைத்திருக்கும் மண் மணம் நாசி ஊடு புகுந்து மண்ணில் வாழ்ந்த நாளை மறுபடியும் மறுபடியும் கிளறி நிற்கும் ஊர் போய் வந்த பின்னர் உறவுகள் நிலை கண்ட பின்னர் பெய்யெனப் பெய்யும் மழை பிய்ந்த கூரை வழி வழிந்து நிறைவில்லா வீடுகளை நிறைத்து நின்றதனை கண்டதனால் நீ எம்மவர் நிலை மாறுமட்டும் பொய்த்துத்தான் போகாயோ எனும் பெரும் ஏக்கம் நெஞ்சமெங்கும்... #ஈழத்துப்பித்தன் 01.02.2016 …

    • 0 replies
    • 1.8k views
  8. மாரீசன் என்ற மாயமானில், மதியிழந்த சீதா தேவியின், மயக்கம் போல, இரவு பகலாகத், தினமும் பூக்கின்ற,, இணையத் தளங்களின் பூக்களால், பாலும், நீரும் கலந்த கிண்ணத்திளிருந்து, பாலை மட்டும் பிரித்தெடுக்கும், வல்லமையில்லாத, பாவப் பட்ட அன்னப் பறவையாய், உண்மையும் பொய்யும், ஒன்றுடன் ஒன்று, குலவிக் கலவும் , உலகத்தில், உண்மையைத் தேடுகின்றேன்! பொன்னும், மணியும், புன்னகைகளும் அணிந்து, பொய்மை வலம் வருகின்றது. மண்ணின் மைந்தர்கள், என்ற கவசம் பூட்டித், தென்றல் காற்றின் மென்மையோடு, பொய்மை உலா வருகின்றது. புனிதமேனும் பேழையில். பத்திரமாகப் பூட்டிவைத்துப், பீடத்தில் அமர்த்தித், தூவிய அர்ச்சனைப் பூக்களிலும், துளித் துளியாய்ச் சிந்திய, துவர்ப்பு…

  9. நிரந்தரமற்ற கனவுகளை நினைவில் சுமந்து வாழ்ந்தேன் இன்று என் விழிகளில் நீ சுமக்க வைத்தது கண்ணீரைத் தானே... பசுமையான என் வாழ்வில் வந்து பாசத்தைக் காட்டி வேசம் போட்டாய்.. என் பாசங்களை வெறுத்தேன் பொங்கி வந்த ஆசைகளைப் பொசுக்கிப் போட்டாய்.. சில நாட்களில் பழகி தொடர் நாட்களில் விலகி விட்டாய்.. உன் வரவுக்காய் ஏங்கிய என் விழிகள்-இன்று உன் கனவுக்காய் ஏங்குகின்றன... காவியத்தின் நாயகனாய் உனைக் கண்டேன் காதல் காவியத்தைத் தேர்ந்தெடுத்தேன் கற்பதற்கு.. ஆரம்பம் சுவையாய் இனித்ததால் காவியத்தக்காய் என்னை அற்பணித்தேன்.. இந்த உலகத்தையே காவிய நாயகனாய் நினைத்தேன்.. பசியை மறந்தேன்.. படுக்கையை இழந்தேன் கண் உறங்காமல் …

    • 6 replies
    • 1.6k views
  10. பொய்யுக்கு தானடா பொம்பள வாழுறாள் மெய்தனை காட்டியே மாயங்கள் செய்யிறாள் ஆம்பள மனச கஷ்ட படுத்திறாள் கல்யாணம் கட்டிப்பின் கைவிட்டு செல்கிறாள் உலகம் சுத்துது தன்னாலே உலக சுத்திறன் பெண்ணாலே காதல் பற்றியே சொன்னாலே கோபம் கொள்கிறன் தன்னாலே பேஸ்புக்கில் காதல் மலர்வது தப்பப்பா பேஸ்புக்கால் காதல் அழிவதும் தப்பப்பா பட்ட துன்பமிது கேட்டால் நீ நண்பேண்டா ஏற்கமறுத்தால் நான் என்னத்த சொல்வேண்டா பேஸ்புக்கில் பசங்கள தேடிப்பிடிக்கிறாள் வயசுக்கு ஏற்றதாய் வேசங்கள் போடுறாள் அப்பப்ப பெயரை மாற்றி இடுகிறாள் செல்லம் என்றழைத்து சேட்டைகள் செய்கிறாள் எங்கடா எங்கடா காதல் மலருது வாலிபம் இப்போ காமத்தில் அலையுது காலேச்சு பொண்ணுக கர்ப்பமா போகுது சின்னச்சிறுசுக அப்பா ஆகுது ஆணுக்கும் பெண்ண…

  11. கண்ணீரே கதியென்றான இனமொன்று... தன் தண்ணீருக்கு போராடும் நிலைமை பாரேன்! செந்நீர் சிந்திய இனமன்று... அதே செந்நீரில் மூழ்கிப் போனது பாரேன்! மலையாள மாந்திரீகம் டெல்லிவரையென்ன... உன்னையும் ஆட்டிப்படைக்கும் பாரேன்! தமிழா!!!!!!!!!!!! கண்ணீரே கதியென்று கிடவாதே! செந்நீரில் குளித்தேனும்... செம்மொழியர் நாமென......... செயலில் காட்டுவோம்!! நீ எரியாதே... எரி! அடி வாங்காதே... அடி!! பணியாதே...... மிதி!!! மனிதச் சங்கிலிகளை... நாடகமேடைகளில் போடாதே! பட்டினிப் போரை மணிக்கணக்கில்..... நடிக்காதே!! நீ உனக்காகப் போராடு! இனிமேல் இல்லை....... எம் பொறுமைக்கும் எல்லை!! பொறுத்தது போதும்........! பொங்கியெழு தமிழா!! தமிழன் எங்கு அடிபட்…

  12. ஒரு போராளியின் மகனின் மரணத்தை மற்றொரு பதிப்பாக கண்ட கோலம் ... நெஞ்சுக்குள் எரிமலையை வெடிக்கச் செய்தது. மனிதநேயம் செத்தவர்கள் செய்கின்ற படுகொலைகளில் இதுதாம் உச்சகட்டம். போகட்டும். அணையப் போகும் விளக்கு பிரகாசமாகத்தானே எரியும்? தமிழ்க்குடிகளுக்கு நேர்ந்த கொடுமைகளுக்கெல்லாம் நிச்சயம் பதிலடி உண்டு. ஒரு பாலகனை அழைத்து வைத்துக்கொண்டு உணவுகொடுத்து நெஞ்சில் சுட்டுக் கொல்வதற்கு எப்படி மனம் வந்தது? மிருகம் கூட அப்படி எண்ணாதே? சிறிது நேரத்தில் தாம் கொல்லப்படுவோம் என அறியாது பசியாறிக்கொண்டிருக்கும் அந்தப் பிஞ்சைக் கொல்ல எப்படி ஐயா துணிச்சல் பிறந்தது? மனிதனுக்குப் பிறந்தவர் செய்கிற காரியமா இது? இந்திய தூக்குத் தண்டனைக் குற்றவாளிகள…

    • 0 replies
    • 414 views
  13. பொறுமைகாத்த தமிழன் படை பொங்கி எழுந்தது தலைநகரில் வெறியர்படை தலைகள் தெறிக்குது மகிந்தாவின் சிந்தனையாம் மதிகெட்டு ஓடுது தலைவரின் சிந்தனையில் தமிழர்படை முன்னேறுது போர்என்று வந்தபடை போராயுதம் போட்டு ஓடுது கடலிலே கடற்புலிகள் கடல்வீரம் காட்டுது கடற்படை வெறியான் கடற்கலங்கள் வெடித்துசிதறுது தற்காப்புப் போரில் தமிழன்படை வென்றுகுவிக்குது ஓயாதலைகள்5 இல் வெறியர்படை ஓடுதுஅங்கே ஓடுதுவிரைந்து இந்தமீட்புப்போரில் தம் உயிர் ஈந்த இம் மாவிரருக்கு வீரவணக்கம்

    • 14 replies
    • 2.6k views
  14. போர் கண்டு பொலிவிழந்த தேசம் எமது பேரல்லல் கொண்டு இன்றும் இருக்கிறது பெருமைகள் சொல்லி ஆற்றிட முடியா பேரவலம் கண்டேதான் பேசாது நிற்கிறது எத்தனை ஆண்டுகள் எம் காலில் நின்றோம் நாம் அத்தனையும் அழிந்து ஆவியாகிப் போனது கொத்தளங்கள் சுமந்து கொடிகட்டி ஆண்டவர் நாம் கேடுகள் சுமந்து கேட்பாரற்றுக் கிடக்கின்றோம் வீதிகள் எங்கும் விளக்கொடிந்து வழக்கொழிந்து வீடுகள் எங்கணும் விலையற்ற மனிதராய் கூடைகள் நிறைக்கும் குப்பைகளாய் நாங்கள் கூடுகளின்றிக் கூனர்களாய்க் கிடக்கின்றோம் பண்பாடு காத்து பார் புகழ வாழ்ந்தவர் நாம் பட்டினிகொண்டு பரிதவித்து நிற்கின்றோம் மானமிழக்கா மாண்பு மிக்கவர் நாம் மாசுபட மடையரிடம் மண்டியிட்டு நிற்கின்றோம் கல்தோன்றி மண்தோன்றாக் காலத்து மூத்தகுடி காலூன்ற நிலை…

  15. Started by Kavian,

    தேவியே, தேவாரம் பாடும் பக்தன் நான் ஆவியே ஆராதனை உனக்கானபோது ஆரவாரம் எதற்கு தாரை தப்பட்டைகள் எதற்கு - உந்தன் முத்திரை ஒன்று என்மூச்சாக ஆகாதா! அபிசேகமும் ஆராதனையும் உனக்கென் றானபோது உன்வரம் ஒன்றே என் வார்த்தைகளின் வளமல்லவா வாய்பேசா விட்டால் என்ன உன் னுதடுகளின் ஒவ்வொரு ரேகைகளும் ஊட்டச் சத்தல்லவா? மனமேடைதனிலே மழைபொழியும் அன்பில் உளிபொழியும் அம்மி உணர்வுகளில் உயிர்த்தேன் தனமிடையில் சரிந்து தலைபுதைய மகிழ்ந்து உயிரோடு பரவும் உறவாக வளர்ந்தேன்!

    • 0 replies
    • 636 views
  16. விளக்கு கம்பங்கள் விடுமுறை இன்றிரவிற்கு இரவுக்காவலாளி வேலை ஞாயிறு வர காத்திருந்த திங்கள் குளமும், எரியும் நிறைந்த கார்காலம் முடிந்த முன்பனிக்காலம் குளத்தில் அன்னம் ஏற்படுத்திய நீர்த்திவலை தொடமுன் கரையை தொட நீந்தியதிலோன்று அகாலத்திலிருந்து காத்திக்கிடந்தவனின் நீர்த்திட்டில் வடக்கே பலமைல் பிரயாணம் சென்று நடுநிசியில் வீடு திரும்பிய குடியானவன் மனம்போல் ஆரவாரமின்றி அமைதியாய் சூரியகாந்தி ஆதவன் வரவைநோக்கி சரக்கு ரயில் தண்டவாளத்தை கடந்து வெகுநேரம் கழிந்த பின்னும் கையசைத்தபடி காலைக்கடன் முடிக்க சென்ற சிறுவர்குழாம் ஓட்டமும் நடையுமாய் வரப்பில்போகும் அன்னம்மா இடையில் மோதும் தூக்குவாளியின் ஓசைகேட்டு நிமிர்ந்த நடவுச்சிலைகளின் ச…

  17. பொய்கையில் பூத்த பொற்தாமரை என்று பொழிவாய் கூறியவன் பொருள் தேடி வந்தவுடன் பொதியில் புதைந்தானே பொறுத்தது போதுமென்று பொம்மையாய் வாடி நிற்க பொன்னி அல்லவே நான் பொங்கல் வந்தால் பொற்காலம் பிறக்கும் என்று பொது அறிவு கொண்டவள் பொருட்படுத்தவும் தயங்க மாட்டேன் பொருத்தமான தருணம் வரும் பொறுத்தது போதுமென்று பொங்கி எழ நேரம் வரும் பொருளாதாரத்தில் நானும் உயர்ந்து பொறுப்பதிகாரியாய் இருப்பேன் உனக்கு - மீரா குகன்

    • 8 replies
    • 761 views
  18. போ புயலே.. போய்விடு... ஏழையரின் பெருமூச்சை விடவா நீ பெருவீச்சு வீசுவாய்?..நிவர் புயல் - வைரமுத்து கவிதை சென்னை : நிவர் புயல் வலுப்பெற்றுள்ள நிலையில் கவிஞர் வைரமுத்து புயல் குறித்த கவிதை ஒன்றை பதிவிட்டுள்ளார்.கவிஞர் வைரமுத்து தனது ட்விட்டர் பக்கத்தில், போ புயலே போய்விடு பச்சைமரம் பெயர்த்துப் பல் துலக்காமல் வேய்ந்தவை பிரித்து விசிறிக் கொள்ளாமல் குழந்தையர் கவர்ந்து கோலியாடாமல் பாமர உடல்களைப் பட்டம் விடாமல் சுகமாய்க் கடந்துவிடு சுவாசமாகி விடு ஏழையரின் பெருமூச்சை விடவா நீ பெருவீச்சு வீசுவாய்? ” என்று பதிவிட்டுள்ளார் https://m.dinakaran.com/article/news-detail/633780

  19. Started by வர்ணன்,

    பணக்காரன்....... நீ! இருப்பதை இழிப்பதில்! ஏழை நீ...... விரல்களை கருக்கியபின் புல்லாங்குழல் வாசிப்பதில்! ஆமையும் ஓடிச்சாம்....... முயலும் ஓடிச்சாம்........... அது வென்றதோ.... இல்லை - இது வென்றதோ....... நீ வெல்லமாட்டாய் - நம்பு! வெற்றிக்கும் தோல்விக்கும் எல்லைகளிருக்குமாம்.... உனக்கு? இடுப்பிலிருந்த துணி அவிழ்த்து... கண்ணைக்கட்டினால்....... இருட்டாகிடுமா பூமி? அம்மணமாய் ஆனாய் போ!

    • 8 replies
    • 1.3k views
  20. போகமட்டீரோ நீரும் நரகத்திற்கு...... சிங்களவா உனக்குத் தமிழர் செங்குருதி தானா உணவு பல தசாப்தங்கள் கடந்தும் பசி அடங்கவில்லையா உனக்கு இன்னும் எத்தனை தசாப்தங்கள் தேவை உனக்கு இனப்படுகொலை புரிந்து, உன் ஈனப்பசியைப் போக்குதற்கு வேணுமடா இது எமக்கு வேறுபாடு பாராமல் அன்று உன் கையில் ஆட்சியினைத் தந்ததற்கு சாபமடா எம் பிறப்பு, அதை காட்டுதடா நாட்டு நடப்பு போதுமடா எம் தவிப்பு போகமாட்டீரோ நீரும் நரகத்திற்கு

  21. போகின்ற தமிழகம் எலி நிகர்த்த நெஞ்சினாய் போ போ போ ஏழ்மை தன்னில் மிஞ்சினாய் போ போ போ பழி முடிக்க அஞ்சினாய் போ போ போ படையிலாது துஞ்சினாய் போ போ போ வலி மிகுந்த தமிழரை நம்பாது வடவர் தன்னை நம்பினாய் போ போ போ கிலி மிகுந்த மதியினால் மென் மேலும் கீழ்மையில் உழன்றனை போ போ போ விதி கெடுத்த மதியினாய் போ போ போ வீணிலே உறங்கினாய் போ போ போ சதி நிறைத்த உறவினாய் போ போ போ சாவிழிம்பில் நின்றனை போ போ போ பொதி நிறைத்த பொய்மைகள் மேல் ஆர்வம் போக்கி நின்று தேங்கினாய் போ போ போ எதிரி தன்னை நம்பினாய் போ போ போ இழிமை வாழ்வு கூட்டினாய் போ போ போ பலமிழந்த தோளினாய் போ போ போ பழமை பேசு தொழிலினாய் போ போ போ குலமிழந்த நிலையினாய் போ போ போ குருதி கண்டு…

    • 2 replies
    • 893 views
  22. போகிறார் பொறிஸ் ஜோன்சன் 🇬🇧 பிழை செய்த பொறிசார் கதிரையை விட்டு போகிறார் ஏதோ சில ஜனநாயகம் இங்க இருக்கு ஆனால் இலங்கையில் அத்தனை சனமும் கத்தியும் என்ன கோத்தா கோ கோம் என்று சொல்லியும் என்ன இயமன் தான் வந்தாலும் இவர் போகாராம் இன்னும் இருக்கிறார் கோத்தா இலங்கையை தின்ற படி இறுக்கிக் கதிரையை பிடித்தபடி அங்க ஏது ஜனநாயகம். பா.உதயன் ✍️

  23. வசந்தகாலம் ......... பச்சையம் விரிந்த புல்வெளியும் பல வா்ண அழகு மலா்களும் வீதியின் இருமருங்கும் வியாபித்திருக்க பள்ளி விடுமுறையில் மழலைகள் துள்ளி விளையாடும் பூங்காவை நோக்கி நான் என் பேரனுடன் நடைபயில இரண்டாவது படிக்கும் அவனது கையிலும் ஜ போன் வீதியில் ஓடிஓடி மூலைக்கு மூலை எதையோ தேடி அலைந்தான் அன்று தும்பி பொன்வண்டுதேடி மாட்டு வால் தடத்துடன் ஓடி விளையாடிய என் அண்ணன் தம்பிகளின் இளமைப் பருவம் நினைவில் ஊசலாட இவனென்ன தேடுகிறான் என்று எண்ணித் திகைத்து வீதியில் கவனமாக நடத்கும்படி எச்சாித்தபடி நான் அவன் சொன்னான் போக்கிமான் பிடிக்கிறானாம் காலமும் தேசமும் மாறினாலும் தேடல் ஒன்றுதான் என்று என் நினைவில் நிழலாட அவனைத்தவிர மூலைக்கு மூலை …

  24. போதிமரத் தேவதை..... இளங்கவி - கவிதை..... என் பக்கத்தில் என் கண்மனி நடந்துவர..... கவலையான முகத்திற்காய் காரணம் கேட்கிறேன்...... சொல்லாமல் தொடர்கிறாள்..... காற்றின் வேகத்தில் அவளின் கண்களுக்குள் ஏதோ சென்றுவிட...... முடியாமல் கண்ணை மூடுகிறாள்..... நான் பதை பதைத்து அவளின் பக்கத்திலே சென்று என்ன என்று கேட்டு அவள் கண்ணை ஊதுகிறேன்..... விடு என்னை என்று வெறுப்பாக விலகுகிறாள்..... கண்ணில் தூசி விழுந்ததற்கே இப்படித் துள்ளுகிறாய்....! தாய் மண்ணில்.... குழந்தைகளின் மண்டையில் கொத்துக் குண்டல்லா போட்டான்.... நீ என்ன செய்தாய்....? மூன்று லட்சம் மக்கள் முகாமில் ஒரு நேர உணவின்றி முடங்கிக் கிடைக்கையிலே நீ என்ன செய்கிறாய…

  25. போதுமடா சாமி! கட்டிய கோவில்களும் போதும் வெட்டிய புதைகுழிகளும் போதும் அமைத்த ஆலயங்களும் போதும் தொலைத்த உறவுகளும் போதும் எரித்த தீபங்களும் போதும் எரிந்த சடலங்களும் போதும் படித்த பஜனைகளும் போதும் வடித்த கண்ணீரும் போதும் எடுத்த காவடிகளும் போதும் கடித்த குப்பிகளும் போதும் இழுத்த சப்பரங்களும் போதும் இழந்த சரித்திரங்களும் போதும் படைத்த படையல்களும் போதும் கிடைத்த வெகுமதிகளும் போதும் சாமியால் பிழைத்த மனிதர்களும் போதும் மனிதரால் பிழைத்த சாமிகளும் போதும் போதாமல் இருப்பதின்று மனிதருக்காய் வாழும் மனிதர்கள் http://gkanthan.wordpress.com/index/saami/

    • 5 replies
    • 1.1k views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.