கவிதைப் பூங்காடு
கவிதைகள் | பாடல் வரிகள்
கவிதைப் பூங்காடு பகுதியில் கள உறுப்பினரல்லாதோரின் கவிதைகள், கவிதை மொழியாக்கம், உலகக் கவிதை, பாடல் வரிகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள உறுப்பினர்கள் அல்லாதவர்களின் கவிதைகள், கவிதை மொழியாக்கங்கள், பாடல் வரிகள் போன்றன மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
ஈழத்தை சேர்ந்த, பூர்வீகமாகக் கொண்டவர்களின் படைப்புக்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படவேண்டும். ஏனைய கவிதைகள் தரமான கவிதைகளை அறிமுகம் செய்யும் நோக்கில் இலக்கிய மின் இதழ்களில் இருந்து மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
5129 topics in this forum
-
சில பெண்களை பார்க்கும் பொழுது கரும்பலகையில் எழுதிய எழுத்துக்கள் ஈரத்துணியால் துடைக்கப்பட்டது போல மனதில் இருந்தவை எல்லாம் மறைந்து விடுகின்றன...
-
- 3 replies
- 1.4k views
-
-
கவிதையின் கவிதைகள் http://3.bp.blogspot.../Photo-0052.jpg மனம் மாறும் மனங்கள் தினந்தோறும் மாறும்! உனைத்தேடும் இதயம் நிதமிங்கு ஏங்கும்! கரைதொடாத அலைகளுக்காய் கரைகள் காத்திருக்க, திசைமாறிய காற்றில் வழிமாறிய அலைகளாய்... பெண்கடல் ஆர்ப்பரிக்க, ஈரப்படாத கரைகள்... சுடுமணாலாய் உதிர்கிறது! கவிதை அனுப்பிய கவிதை பகுதி 04 ஐப் பார்க்க இங்கே அழுத்துங்கள் . http://www.yarl.com/forum3/index.php?showtopic=105723
-
- 2 replies
- 846 views
-
-
நீர்த்துளி வடிவ நாட்டில் சிந்துகின்றான் ஈழத்தமிழன் உயிர்த்துளிகளை... அறிந்த பொது கொட்டுதடா எங்கள் உள்ளத்தில் உதிரத்துளிகள் ஆகாயமும் சிந்தியது மழைத்துளிகளை கண்ணீர் துளிகளாய்... படித்தேன்... மழைத்துளி மண்ணின் உயிர்த்துளி என்று; ஆனால் உயிர்த்துளி...? http://kavithai7.blogspot.fr/2012/08/blog-post_10.html#more
-
- 0 replies
- 473 views
-
-
தமிழகத்தை நனைக்கும் ஈழத்தின் கண்ணீர் மழை! தமிழீழம் எங்கும் கேட்கிறது மரணத்தின் ஓலம்! தமிழகம் எங்கும் ஒலிக்கிறது உறவுகளின் பூபாளம்! உலகத் தமிழரின் ஒற்றைத் தலைவனாய் கருணைக் கடலில் மீண்டும் உயர்ந்து நிற்கிறார் கலைஞர் ஐயா! ஒன்றன் பின் ஒன்றாய் உணர்வுகளின் சங்கமத்தில் ஒரே குடையில் நகர்கிறது தமிழர்களின் ஊர்வலம்! புரட்சிக் கொடியின் கீழ் அடக்கி வைத்த நெருப்பின் உணர்வுகள் கொப்பளித்து தமிழ்த் தாயின் பிள்ளைகள் ஒர் அணியில் திரள்கிறது! குண்டு மழையின் குருதியில் குளிப்பது எங்களின் நிலையானதால் வான் மழையின் கண்ணீரில் குதிக்கவும் நீங்கள் துணிந்துவிட்டீர்கள்! தமிழினக் கொலையே தாரக மந்திரமாய்க் கொண்டு தலைகீழாய்த் தொங்கும்…
-
- 0 replies
- 834 views
-
-
ஈழப் பண்ணையில் கந்தன் என்ற கமக்காரன் கட்டி வளர்த்த காளை மாடுகள்.. பண்பட்டு மண் பண்படுத்தி மக்களுக்காய் உழைத்தன ஓர் காலம். இன்றோ.. கட்டறுத்து சொந்த நிலங்கள் மேயும் கட்டாக்காலிகளாய்..! வளர்த்தவரையே மூர்க்கம் கொண்டு முட்டி மோதி சாகடிக்கும் நிலையும் காணீர். விசமிகளும் கரடிகளும் விசயத்தோடு பழி தீர்க்கும் படலம் தொடர்பில்.. எதிரிகளின் கைப்பாவைகளாய் மூர்க்கம் கூட்ட கட்டாக்காலிகளிடம் சாராய வெறியூட்டும் நிலையும் காணீர்..! எச்சரிக்கை..! எப்பொருள் யார் யார் வாய் கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்பது அறிவு.
-
- 11 replies
- 1k views
-
-
தை பிறந்தால் வழிபிறந்தது அன்று எத்தனை தை பிறந்தும் தமிழனுக்கு மட்டும் வழி பிறக்க வில்லையே ஏர் கொண்டு உழுது பயிர்கள் தான் செய்தோம் ஊரெங்கும் பச்சை வயல் பசுமைகள் கண்டோம் எவரையும் நம்பாது நாம் விழைத்து நம் மண்ணில் தன்னிறைவு கொண்டோம் செம்பாட்டு மண்ணில் செழித்து வளர்ந்திடும் செவ்விளநீரொடு மா பலா வாழை என வாயினிக்க நாமணக்க வகை வகையாய் வாழையிலை மஞ்சள் வானுயர்ந்த கருப்பு கட்டிப் பொங்கி மகிழ்ந்திட்டோம் யார் கண்ணோ பட்டதனால் நாமிருந்த பூமியெல்லாம் நாசமாய் போனதனால் நாள் கூட நமக்கின்றி நாதியற்றுப் போனோம் ஏர்கொண்டு ஏற்றமுடன் எமைக் காத்தோம் இன்று ஏழைகளாகி எதிர்பார்த்து ஏந்தி எம் கைகளை எல்லோரை நோக்கி ஏளனப் பொருளாகி எதுமற்ரோராகி எச்சில் இலைகளாய்…
-
- 9 replies
- 865 views
-
-
ஏன் வந்தாய்? ஊரென்ன பார்க்க வந்தாயா? உன் உறவுக்கு சொல்லி வந்தாயா? சோரம் போகா வன்னி மண் தீரம் தெரியாமல் வந்தாயா? தீயவனே ஆவி ஒடுங்கி-உன் உடல் ஊர்போகும் நாள்தெரிய வந்தாயா? பண்டார வண்ணியனின் பரம்பரை பிறந்த மண்ணில் சிங்கம் புணர்ந்து பிறந்த வம்சத்தின் சிறு நரிக்கென்னவேலை? வணங்கா மண் வன்னியின் வரலாறு தெரியாமல்-மூடனே களங்காணா உன் அமச்சரின் கதை கேட்டு வந்தாயோ? அகங்காரம் தலைக்கேற ஆணவம் மிகக்கொண்டு இளக்காரம் என எண்னி தமிழய்ச்சியின் வளைய்க்கரம் சீண்டிப்பார்க்க வன்னிக்கு வந்தாயோ? வளைக்கரம் வலிமை கொண்ட வண்ணிமண் எங்களது இங்கே கொலைக்களம் உனக்காக கொடியவனே நாளை எண்ணு அடங்காப்பெருவீரம் பிறப்பெடுத்து ஆர்ப்பரிக்கும் …
-
- 3 replies
- 1.1k views
-
-
ஈழத்தின் கரவெட்டியில் இருபத்தேழு ஆண்டுகள் முன் இன்னுயிராய் வந்துதித்தான் ஈழமகன் முருகதாசனவன் பத்து மாதம் பக்குவமாய் பாதுகாத்துப் பெற்றுன்னை பட்டங்கள் பெறவைத்து பார்புகழ வைத்தார் உன் பெர்றோர் வன்னியிலே வஞ்சகர் வதைகளில் சிக்கி வாழ்விழந்து எம்மினம் வீழ்தல் கண்டு வெந்தழலாய் உன்மனது கோபம் கொண்டதனால் கொடியவர் கொட்டம் அடக்கிட ஐநா முற்றலிலே உன் உடல் எரித்து உயிர் நீக்கி உறங்கச் சென்றனையோ? உயிருக்காய் உடலுக்காய் உணவுக்காய் உறவுக்காய் உயிர் காக்கவென உழைத்திடுவோர் மத்தியிலே உன் தாயைத் தந்தையை ஓடிவிளையாடிய தங்கையை தம்பியை நீ மறந்து துடித்த எம் இனத்துக்காய் தீயினில் குளித்ததை எம் அகக் கண்ணால் கண்டு நாமும் துடிக்கிறோம் உன்னைப் போல் ஒருவனின் உத்தமனி…
-
- 14 replies
- 717 views
-
-
பேனையை விட எனக்கு பென்சிலாக இருக்க ஆசை ஏனெனில் நீ சீவி கூர் பார்க்கையில் உன் கன்னங்களில் அடிக்கடி... முத்தமிடலாம்.
-
- 2 replies
- 969 views
-
-
ஒற்றைச் சொல்லு வலி(NO VISA) 1990 ஆனையிறவுசமர் தரையிறக்கம் இடப்பெயர்வு அகதிமுகாம் இடப்பெயர்வு முகாம் பசி பட்டினி இழப்பு வலி இடப்பெயர்வு...(3) முகாம் செல்லடி பொம்பர் கெலி நேவிக்காரன் படுகொலை இடப்பெயர்வு முகாம் 1995 யாழ்இடப்பெயர்வு கிளாலி படுகொலை வன்னி முகாம் போராட்டம் இடப்பெயர்வு இடப்பெயர்வு இடப்பெயர்வு......(6) முல்லைத்தீவு ஆனையிறவு வெற்றிகள் சமாதானம் ஏ9 ஓமந்தை கொழும்பு சுனாமி அவலம் சாவு இடப்பெயர்வு மகிந்த சண்டை சண்டை படுகொலை கொத்து குண்டு படுகொலை போராட்டம் சண்டை முள்ளிவாய்க்கால் பாதுகாப்புவலயம் படுகொலை இடப்பெயர்வு வவுனியா முகாம் சித்திரவதை சிறை ஏழாம் மாடி அடி உதை காசு லஞ்சம் புத்தளம்…
-
- 2 replies
- 1k views
-
-
அப்பா என் அப்பா ஏழை தான்! ஆனாலும் என்னை எப்போதும் ஏழையாக வளர்க்க நினைத்தது இல்லை. என் தாய் என்னை இடுப்பில் வைத்திருக்கும் பொழது தனக்கு தனக்கு இணையாகத்தான் தந்தை யை காட்டினாள். ஆனால் என்தந்தையோ என்னை தோளில் ஏற்றித் தான் கான இயலாத ஒன்றையும் காணவைக்கிறார். அப்பா என்னும் பொக்கிசம் நாம் அருகில் இருக்கும் போது நமக்கு தெரிவதில்லை, தாயை இழக்கும்பாசத்தையும் . தந்தை இழக்கும் போது பாதுகாப்பையும் இழந்து விடுகின்றோம் . மரமாய் வளர்ந்து கிளை பரப்ப உரமாய் இருந்தவர் தந்தை, எந்த உறவு பக்கத்தில் இருந்து எதைசொன்னாலூம். அப்பாவின் ஒரு வார்த்தைக்கு இடாகுமா? அப்பா எப்பவும் எங்களுக்கு காவல் தெய்வம். முடிந்த வரை எமக…
-
- 4 replies
- 2.7k views
-
-
கடல் நீரிலே துள்ளும் மீனினம் போல், என் மனதிலே துள்ளும் உணர்வுகளுக்கு, உயிர் கொடுத்து உலவிட வந்துள்ளேன்.
-
- 30 replies
- 4.3k views
-
-
உங்களின் நினைவுகள்…..! காற்தடம் கரைத்து உப்பளக் காற்றிடை மிதந்து போர்த்தடம் தேடி உப்புக்காற்றின் உதைப்பில் உங்களின் நினைவுகள்.....! நெஞ்சினில் நிறைந்த நண்பரின் ஞாபக ஊற்றினில் நாட்குறிப்பினில் காற்றழுத்தக் காற்றழுத்தக் கரைதொட்ட அலையின் கரைமணலில் உங்களின் நினைவுகள்.....! நேற்று இவ் வெளியினில் நெஞ்சுயர்த்திப் போகிறோம் என்ற என் தோழியர் முகங்களில் பூத்திருந்து அப் புன்னகை அரும்பலில் உங்களின் நினைவுகள்....! காற்றில் நுளைந்து கடலில் கரைந்து – என் மூச்சில் நிறைந்து முகவரி மறுத்துப் பெயருமில்லாப் பொருளுமில்லா மெளனக் கிடக்கையில் மாவீரப் பெருமைகள் குவிய போனவென் தோழமைக் குரல்களில் உங்களின் நினைவுகள்.....! போற்றிட உம் பெருமைகள் பேசிடப் பேராயிரம் கவிதைகள் தோற்றன ஈற்…
-
- 2 replies
- 634 views
-
-
கோபுரம் கட்டி முடிக்கையில்....... அத்திவாரம் - ஆட்டம் கண்டதோ? மெல்ல முழைத்த உன் பாத விரல்கள்... பூமியில் அழுந்துமுன் - பொசுங்கி போயிற்றோ? ஏதுடா சமாதானம்? என்னையும் -உன்னையும் எரித்தபின் ஏதும் வந்தால் அது - சமாதானமா? அதன் பெயர் சமாதி! நான்கு வருடங்களாச்சு ....... கண்டதென்ன?...... செம்பருத்திக்கும் ....... தெருவினோர .......கழிவு நீருக்கும்...... வேறுபாடு............... பிரித்து பார்க்க முடியாமல் பேதலித்து கிடக்கிறாய்......! உன் பிறப்பின் அடையாளம் மெல்ல மெல்ல ....... அதன் ஆயுள் முடிக்கிறதே ..... அறிந்தாயா- நீ? கண்மணிக்குள் இரத்தம் பாயாதுதான்......... இல்லையென்று இல்லை....... உன் இதயத்தில் கூட அதன் இயக்கம் …
-
- 9 replies
- 1.7k views
-
-
ஏங்கிய காலங்கள் போதும் கன்னம் சிவந்ததோர் காலம் - எழில் கவிகள் படித்ததோர் காலம். சின்ன வரையரைக்குள்ளே - உன் சிந்தை இழந்ததோர் காலம். வண்ணமயில் என்றும் கூறி.. வஞ்சிக் கொடியென்றும் கூறி... எண்ணம் எங்கும் மென்மை தூவி... -உந்தன் வன்மை அடக்குவர் தோழி! அங்கங்கள் அழகுதானடி -அதை அங்கங்கே போற்றுவர் தேடி.. உங்கருத்தைக் கேட்க யாரடி? - அடி உன்னதப்பெண்ணே! நீ கூறடி!! நுண்ணிடை என்றொரு கூட்டம் - உன்னைப் பண்ணிடை கற்பனை பாடும். மண்ணிடம் காட்டு உன் தாகம் - அதுவுன் பெண்ணுடல் நீத்தாலும் வாழும். கங்கை உனக்கென்ன தங்கையா? மங்கை உdக்கின்னும் மருட்சியா? உன்கையை வான் வரை உயர்த்தி -அதில் உலகை ஈர்க்கலாம் முயற்சி! மையல் காட்டும் கண்ணில் மயங்காத் தையலர் மேன்மையை உணர் நீ! உய்யல் வ…
-
- 13 replies
- 2k views
-
-
பற்றி எரிகிறது பாலஸ்தீனம்-பா.உதயன் பற்றி எரிகிறது பாலஸ்தீனம் அன்று ஒரு நாள் முகம் எரிந்த முள்ளிவாய்க்கால் போலவே எரிந்துகொண்டிருப்பது பாலஸ்தீனம் மட்டும் இல்லை அமெரிக்காவினதும் ஐரோப்பாவினதும் பொய்ச் சத்தியமும் போலி முகங்களும் வரலாற்றுத் துரோகங்களும் அவர்கள் மனசாட்சியும் கூடவே எரிகிறது ஐ நாவின் அறமும் அதன் தர்மமும் அமைதியாகவே பார்த்திருக்கிறது எரிந்து கிடக்கும் சாம்பலில் இருந்து எப்போதாவது ஒரு பூ பூக்காத என்று ஏங்கித் தவிக்கின்றன பாலஸ்தீன குழந்தைகள். பா.உதயன்✍️
-
- 2 replies
- 434 views
-
-
பொய்கையில் பூத்த பொற்தாமரை என்று பொழிவாய் கூறியவன் பொருள் தேடி வந்தவுடன் பொதியில் புதைந்தானே பொறுத்தது போதுமென்று பொம்மையாய் வாடி நிற்க பொன்னி அல்லவே நான் பொங்கல் வந்தால் பொற்காலம் பிறக்கும் என்று பொது அறிவு கொண்டவள் பொருட்படுத்தவும் தயங்க மாட்டேன் பொருத்தமான தருணம் வரும் பொறுத்தது போதுமென்று பொங்கி எழ நேரம் வரும் பொருளாதாரத்தில் நானும் உயர்ந்து பொறுப்பதிகாரியாய் இருப்பேன் உனக்கு - மீரா குகன்
-
- 8 replies
- 764 views
-
-
-
மலைப் பனியோடு மனதின் பனியும் உருக வான் நோக்கிக் கை பரப்பி சூரியன் கை வீணையாய் இசைக்கின்றாள். இது புலம் பெயர்ந்த பின்னாடி அவள் கோடைதொறும் நிகழ்த்துகின்ற கூத்துத்தான். பொன்னி நதி பண்டைப் பழசானாலும் மாரிப் புதுவெள்ளத்தில் கன்னிதானே. வாழிய தோழி வளர்க உன் பாடல் என்றேன். வாடா என் சூரியத் தோழனே வந்தென்னை அள்ளி அணைத்திடடா. கந்தல் வெண்பனிப் போர்வை வீசி வானவிற் சேலைகட்டி என்போல் குதூகலமாய் சூழும் துருவத்து மலை சிகரங்களே. கண் இறங்கும் பாதை எல்லாம் வண்ணக் கம்பளமாய் விரிகின்ற பள்ளத்தாக்கே. சாரல் பாறைகளிடையே துளிர்க்கின்ற திராட்சைகளே. போதை தருகின்ற புது வசந்தத் தேன் காற்றே. என்தேச விடியலின் பல்லியத்தை என்னுடைய சன்னலைத் தேடி இசைக்…
-
- 4 replies
- 1.3k views
-
-
ஓவியங்கள் செந்-தமிழ் ஓலைக்காவியங்கள் உள்ளத்து உணர்வுகளின் உன்னதக் கோலங்கள் கண்கண்ட கவிதைகளை கவர்ந்திடும் வண்ணமிட்டு கலை நயம் கலந்து காட்சியாக விரியவிடும் எண்ணற்ற சிந்தனையை-மன எண்ணத்தில் தீட்டி விடும் மாசற்ற புதுமை மொழி மண்ணுலகில் மகிமை வரி பட்டறிந்த பண்டிதனும் பாரறியா பாமரனும் பார்த்து அறியும்-இனிய பன்னாட்டு தொடர்பு மொழி எதுகை மோனையில்லை எடுகோள் எதுவுமில்லை தூரிகை தூவிவிடும் தூய்மையான கவிதை
-
- 12 replies
- 10.1k views
-
-
வாராய் தைப்பாவாய்! வாராய் தைப்பாவாய்! வாராய்! வையம் தழைத்தோங்க வழிவகைகள் தனைக்கொண்டு வாராய் தைப்பாவாய்! வாராய்! உய்விக்கும் உழவர் குலம் உதயனுக்குப் படியளக்க, மையிட்ட விழியாளே!.. மலர்ந்து நீ வாராயோ! பெய்யும் மழை நின்று வெய்யோன் கரம் நீட்டக் கைகள் தனை அசைத்துக் கனிமயிலே! வாராயோ! செய்யுள் படித்திருக்கும் சேற்று வளர் நெல்லாகி சுந்தரமாய் நடமிட்டுச் செந்தமிழே! வாராயோ! பொய்மை ரதமேறிப் போரைப் பெரிதேவும் தூய்மை மறந்தோரைத் துடைத்தெறிய வாராயோ! தொய்யும் மெய்யரையும், துவளும் கொடியரையும் மெய்யாய் நிலை நிறுத்த மெல்லியளே வாராயோ! ஐயந்தனை நீக்கி அனைவர் வாழ்வினிற்கும் ஆதாரத் தோளாக ஆரணங்கே வாராயோ! தையலே!, தளிரே!, தங்கமணிக் கதிரே கேள்! வையம் …
-
- 4 replies
- 1.6k views
-
-
கனன்றே எரிவாய் தீக்கனலாக...... காலத்தின் உப்பரிகையில் கை கொட்டிச் சிரிக்கிறான் காலன் இது யாரோ ஒருவரின் கனவுக் கலைப்பல்ல விடுதலை விரும்பும் விதியின் விரல் பிடித்து விளையாடும் மொழியாக தினமும் இழப்புக்கள் அறுவடைக்கு ஆட்களை அசைபோடும் இரைமீட்பில் ஆண்டவனை அர்ச்சிக்கும் வரம் பெற்ற வள்ளலுக்கும் வழங்கிய பரிசு மரணம் குழந்தை இயேசு குடிகொண்ட மண்ணில் நிரந்தரமாய் நீ விடைபெற்ற செய்தி அறிந்ததால் அதிர்ந்தோம் அந்நிய மண்ணில் தடம் பதித்தாலும் மண்ணின் நினைப்பில் மனம் புதைந்தே கிடக்கும் மண்ணின் விழுதுகள் நாம் இறை உணர்வினில் கனல் மணக்கும் ஏழிலான வெண்மலரே மானிட வதையினால் மனம் கனக்க உம்மை கல்லறைக்குள் வைத்தோம் இது காலத்தின் கட்டளை ஈழ விடுதலையில் இதய…
-
- 2 replies
- 1.5k views
-
-
எந்தத் தூய கோவிலுள்ளும்தூசு நுழையும்ஆயினும் உள்ளெரியும் தீபம்பேசாதுஅதன் ஒளிர்வில் உள் நுழையும் தூசே தானொளிர்ந்து பேசும்...
-
- 1 reply
- 1.3k views
-
-
அப்பா! எல்லா அப்பாக்களையும் போல் நீயும் இருந்திருந்தால் என் தாத்தாவும் பாட்டியும் இந்நேரம் முசிறியில் மூச்சோடு இருந்திருப்பார்கள்! அப்பா! எல்லா அப்பாக்களையும் போல் நீயும் இருந்திருந்தால் என் அக்கா அமெரிக்காவிலும் என் அண்ணன் கனடாவிலும் நான் இலண்டனிலும் சொகுசாகப் படித்துக் கொண்டிருப்போம்! என் அப்பாவா நீ இல்லையப்பா நீ நீ நீ எங்கள் அப்பா! எங்கள் என்பது... அக்கா அண்ணன் நான் மட்டும் இல்லை! எங்கள் என்பது... செஞ்சோலை காந்தரூபன் செல்லங்கள் மட்டும் இல்லை! எங்கள் என்பது... உலகெங்கிலும் உள்ள என் வயது நெருங்கிய என் அண்ணன்கள் என் அக்காள்கள் என் தங்கைகள் என் தம்பிகள் அனைவருக்குமானது! ஆம்...அப்பா! நீ எங்கள் அனைவருக்குமான 'ஆண் தாய்' அப்பா! அதனால்தான் சொல்கிறேன்... நான் மாணவனாக இருந…
-
- 5 replies
- 762 views
-
-
எங்களுக்காகவும் தீபங்கள் ஏற்றுங்கள்...!!! எங்கே உங்கள் இதயங்களை கொஞ்சம் திறவுங்கள்-கல்லறைகளில் கண்மூடித்துயிலும் உங்கள் பிள்ளைகள் வந்துள்ளோம். அட கல்லறைகள் இல்லையென்றால் என்ன...? உங்களின் இதயங்கள் தானே நாங்கள் துயிலும் துயிலும் இல்லங்கள். துயிலும் இல்லங்களை இடித்த போது எங்களுக்கு வலிக்கவே இல்லை. என் இனமே என் சனமே நீ துடித்தாய். அதை நாங்கள் மட்டுமே அறிவோம். எங்கே உங்கள் இதயங்களை கொஞ்சம் திறவுங்கள்-கல்லறைகளில் கண்மூடித்துயிலும் உங்கள் பிள்ளைகள் வந்துள்ளோம். தூரங்கள் அதிகமானாலும் சொந்தங்கள் விட்டுப்போகாது. துயரங்கள் அதிகமானாலும் பாசங்கள் குறைந்து போகாது. நீங்கள் வந்து எங்கள் கல்லறைகளில் விளக்கேற்றா விட்டாலும் உங்கள் விழிகளில் விழிகளில்…
-
- 3 replies
- 883 views
-