Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கவிதைப் பூங்காடு

கவிதைகள் | பாடல் வரிகள்

பதிவாளர் கவனத்திற்கு!

கவிதைப் பூங்காடு பகுதியில் கள உறுப்பினரல்லாதோரின் கவிதைகள், கவிதை மொழியாக்கம், உலகக் கவிதை, பாடல் வரிகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் யாழ் கள உறுப்பினர்கள் அல்லாதவர்களின் கவிதைகள், கவிதை மொழியாக்கங்கள், பாடல் வரிகள் போன்றன மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
ஈழத்தை சேர்ந்த, பூர்வீகமாகக் கொண்டவர்களின் படைப்புக்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படவேண்டும். ஏனைய கவிதைகள் தரமான கவிதைகளை அறிமுகம் செய்யும் நோக்கில் இலக்கிய மின் இதழ்களில் இருந்து மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. கண்ட நாள் முதல் இந்த நாள் வரை.... கவிதை..... உன்னுடன் சேரத்துடிக்கும் முன்னர்.....! மின்மினியாய் என் கண்ணில் வந்தாய்.... முல்லையாய் மணம் வீசிச் சென்றாய்.... காகிதப் பூவாய் எந்தன் மனம் கவர்ந்தாய்... குயில் இசைபோல் பாடிச் சென்றாய்..... உன்னுடன் சேரத் துடித்தபோது.... ! என் மனதின் எண்ணங்கள் ஆனாய்.... என் பசிக்கோ உணவும் ஆனாய்..... என் மனதில் வண்ணத்துப் பூச்சியாய் இறகும் அடித்தாய்.... தொட்டாச் சிணுங்கிபோல் சிணுங்கவும் செய்தாய்.... பின் நாளில் நாம் சேர்ந்த போது....! விடிவெள்ளியும் வானமும் ஆனோம்... மயக்கும் சூரியனும் மாலைப் பொழுதும் ஆனோம்... மயிலும் மழையும் ஆனோம…

  2. நீ சொன்ன ஒரு வார்த்தை.... ஆயிரம் கஸல் கவிதையை ... தோற்றிவிட்டது ....!!! சுதந்திர பறவைகளை ... திறந்த சிறைச்சாலைக்குள் .... அடைத்துவிடும் .... காதல் ......!!! இதயங்களை .... இணைக்கும் .... சங்கிலி -காதல் ... துருப்பிடிக்காமல் .... பார்த்துக்கொள் .....!!! முள் மேல் பூ அழகானது ..... என் இதயத்தில் பூத்த .... முள் பூ நீ ................!!!! நீ காதலோடு...... விளையாட வில்லை .... என் மரணத்தோடு ..... விளையாடுகிறாய் ......!!! ^ இது எனது 1000 கஸல் இத்தனை காலமும் ஊக்கம் தந்த அனைத்து அன்பு உள்ளங்களுக்கும் உளமான நன்றி ^ அடுத்து புதியதோர் கஸல் தொடர் ஆரம்பிக்கிறேன் ^ " முள்ளில் மலரும் பூக்கள் " க…

    • 1 reply
    • 649 views
  3. அழிந்த வெளியில் ஒலிக்கும் மயானப் பாடல்கள் அரண்களைக் கரைத்துக் கொண்டிருக்கிறது சிதைமேட்டில் அழிக்க முடியாத உயிரும் முகமும் வளர்ந்து கொண்டிருக்கிறது உடைத்தெறியப்படுவதும் சிதைத்து புதைக்கப்படுவதும் யாரோ ஒருவருடைய பிள்ளையை. நொருக்கப்பட்ட கல்லறைகளை என்ன செய்ய முடியும்? எதிலும் நிரப்ப முடியாத எலும்புத்துகள்களை அவர்கள் தங்கள் உணவுக்கோப்பைகளில் நிரப்ப இயலுமா? அவற்றை தின்று தீர்த்து பசியாறி ஆடலாமா? பெற்றவர்கள் யாரோ எல்லாம் இருதயத்திற்குள் அடித்தழுது புலம்பும்பொழுது கண்ணீர் சிதைகளை நனைக்கின்றன. யாரோ ஒருவருடைய பிள்ளை ஏதோ ஒன்றுக்காக வெடிபட்டு வீழ்ந்திருக்கிறது நெருங்க முடியாத எருக்கலைக்காட்டில் உள் நுழைந்து சாம்பிராணிகளை யாரே கொளுத்தியிருக்கி…

  4. மரமென்றும் சொல்ல முடியாத தமிழன் ஏ... மரங்களே! ................................ என்ன பார்க்கிறீர்கள்? உங்களை அல்ல... மரங்களைத்தான். உங்களிடம்தான் பதவி மோகம் பஞ்சோத்தித் தன்மை காட்டிக் கொடுப்பு கழுத்தறுப்பு நடவடிக்கை போட்டி பொறாமை பொருள் தேடி அலைச்சல் நெஞ்சில் வஞ்சம் நேர்மையில்லாத் தன்மை சாதி சமய பேதம் சதி நடவடிக்கைகள் இப்படிப் பல... அதனால்தான்... உங்களை அல்ல... நீங்கள் நாட்டுக்கு என்ன செய்தீர்கள்? நம் மக்களுக்குத்தான் என்ன செய்தீர்கள்? அவர்களுக்கு ஒரு நேர உணவுக்கு உதவுங்கள் என்றால் ஓலமிட்டு ஒப்பாரி வைக்கிறீங்கள் அவர்களுக்காக ஆர்பாhட்டம் செய் என்றால் ஐஐயோ... வேலை என்பீர். ஆனால் மரங்கள் அப்படியில்லையே! அதனால்தான் உங…

  5. அந்த ஆண்டவனும் ஊனம் தான் வழமையானது என் பிராத்தனைகளை அவன் கேட்பதை, நான் உணராவிட்டால், அந்த ஆண்டவன், காது கேளாதவன். என் கேள்விகளுகெல்லாம் அவன் அமைதியாய் சொல்லும் பதில்களை நான் உணராவிட்டால், அந்த ஆண்டவன், வாய் பேச முடியாதவன். என் செயல்களில் உள்ள நல்ல வற்றை அவன் பார்ப்பதை நான் உணராவிட்டால், அந்த ஆண்டவன், பார்வை அற்றவன். என் பிரச்சனைகளை தீர்த்துவெய்க்க ஒவ்வொறு முறையும் அவன் கைகொடுப்பதை நான் உணராவிட்டால், அந்த ஆண்டவன், கைகள் இல்லாதவன். என் தனிமையான பயணங்களில் என் தோழனாய் என்னுடன் அவன் நடப்பதை நான் உணராவிட்டால், அந்த ஆண்டவன், கால்கள் இல்லாதவன். நாம் உணராவிட்டால், அந்த ஆண்டவனே ஊனமாகி விடுகிறான்!!! நம் ஊனமுற்ற நண்பர்களின் கெதி? ஆதரிப்போம் நம் உணர்வுகளால்!!!…

  6. வெல்லட்டும் விடுதலைச் சுடர்!

  7. கரைந்து ஓடும் காலங்களின் கரை சேரா நாட்களுடன் கனவுகளைச் சுமந்து கால்கடுக்க நடக்கின்றனர் கண்களை மூடியபடியே காரணம் அற்றவர்கள் காற்றும் சென்றிடமுடியா கனதியான வெளிகளினூடே கர்ப்பம் சுமக்க முடியாதவராய் கருகிப் போனவர் முன்னே கபடு நிறைந்த முகங்களுடன் கல்லறை தேடுகின்றனர் கிரகிக்க முடியாத கணக்குகளை கிஞ்சித்தும் காணமுடியாது கிளர்ந்தெழும் கீற்றுக்களாய் கீழ்ப்படிய மறுப்போர்க்கான கடைநிலைக் கருவறுப்பாய் காகங்களின் கரைதல்கள் கோரமுகங்கள் உருமாற கொடுவினையின் உருவங்களாய் கொள்கைகள் அற்றவராய் கூற்றுக்கள் குதிர்களாக கும்மாளத்துடன் அலைகின்றன காற்றின் கடும் வீச்சில் கலைந்தே குலைந்துபோகும் கனமற்ற கடதாசிக் குருவிகள்

  8. வேதியியலும் காதலும் --------------------------ஐதரசனின் இரண்டு பங்கும் .... ஒட்சிசனின் ஒருபங்கும் .... சேர்ந்த கலவையே நீர் -H2O .....!!! என்னுடைய நினைவுகளையும் ..... உன்னுடைய நினைவுகளையும் .... வேதனையுடன் சுமந்து கொண்டு .... இருக்கும் நம் காதல் ... வேதியல் சூத்திரம் தான் ....!!! வேதியல் வகுப்பறையில் .... வேதியல் படித்தானோ .... தெரியவில்லை .... வேளை தவறாமல் ... உன் வேடிக்கைகளை ரசித்திருக்கிறேன் .....!!! வேதியலில் ... ரேடியத்தை கண்டு பிடித்த .... மேரி கியூரி குடும்பம் .... வேதனையான மரணத்தை .... அடைந்தார்கள் .... புற்றுநோய் ......!!! காதலும் .... ஒரு புற்றுநோய் .... உன் நினைவுகளால் நானும் ... என் நினைவுகளால் நீயும் .... கொஞ்சம் கொஞ்சமாக .... இறந்து கொண்டிருக்கிறோம் ....!!!

  9. Started by கோமகன்,

    [size=5][/size] [size=5]குழந்தை[/size] புட்டிப் பாலை எட்டிப் பறித்துக் குடித்தது குட்டி பலூனை தட்டித் தட்டிச் சிரித்தது தொட்டில் மீது பெட்சீட் நனைத்தது தூங்கும்போது "நரி வெருட்டி" சிரித்தது இரவிரவா கத்தியழுது அப்பா அம்மாவின் நித்திரையைக் குழப்பியது தவழ்ந்து தவழ்ந்து பின் தள்ளாடி நிமிர்ந்து பெற்றோர் கைபிடித்து நடை பழகியது என , இவையெல்லாம் இப்பொழுது ஞாபகம் இல்லையெனினும் வேறோரு குழந்தை செய்வதைப் பார்த்து நாமும் அப்போது இப்பிடித்தானோ!? என உள்ளுக்குள்ளே சிரிப்பது வழமை! நன்றி : கவிதையின் கவிதைகள் .

  10. [size=5]" நீ ஒரு பொய்க்காரி "[/size] கரி நாக்கா எனக்கு...? கண்ணாடியில்தான் பார்க்கவேண்டும்! அதனால்தானோ என்னவோ... முதன்முதலாய் உனக்கெழுதிய கவிதையின் பெயரும் அதுவாய்த்தான் இருந்தது! ‘ஏனடி இப்படிச் செய்தாய்?’ என கேட்கத்துடிக்கிற என் எண்ணத்தை... கொஞ்சம் அடக்கி வைத்திருக்கின்றேன்! உன் மனதைத்தொட்டு... பின் உன்னைத்தொட்ட என் ஸ்பரிஷங்களின் உணர்வுகள் அடங்குமுன்னே, என் ஒட்டுமொத்த உணர்வுகளையும் வலிகளில் ஒருமிக்க வைத்ததேனடி? நான் வாழ்ந்த உலகத்தின்... ஒரேயொரு தேவதையாய் நீ இருந்தாய்! என் அதிஅன்புக்குரியவளாய்... நீதான் இருந்தாய்! இன்று எங்கிருக்கிறாயடி என் தேவதையே?? காதலின் குணமே இதுதானா? - இல்லை காதலிப்பவர் மனம் இதுதானா?? என…

  11. சிறுவர்கள் பீரங்கிகளை முறிப்பார்கள் தீபச்செல்வன் சிறுவர்களுக்காக பீரங்கிகளும் துப்பாக்கிகளும் விமானங்களும் சேகரிக்கப்பட்டிருக்கின்றன துப்பாக்கிகள் என்ன செய்யப்போகின்றன? ஒன்றில் அவை சோர்வடைந்து சரிந்து போகும் அல்லது கூர்மையடைந்து முகங்களைக் கிழிக்கும் நீதான் புரட்சியை ஆயுதமாக்குபடி நிர்பந்திக்கறாய் எதிர்ப்பை கிளப்பும் களத்தை திறக்கிறாய் புரட்சியையும் எதிர்ப்பையும் கொல்ல முடியாது சனங்களை அடக்கும்பொழுது புரட்சி குருதியில் பெருக்கெடுக்கிறது வாழ்வின் பாடலை நாம் பாடிக் கொண்டிருக்கும் நிலத்தைவிட்டு அந்நியப்படைகளே! எப்பொழுது வெளியேறிச் செல்வீர்கள்? வாழ்வை மூடியிருக்கும் உங்கள் அதிகார நிழலை எப்பொழுது விலக்கிக் கொள்வீர்கள்? முதியவர்கள் …

  12. இப்படியான செய்திகள் இனி எங்கே எம் காதுகளை எட்டப் போகின்றன என்றிருந்தோம்! எட்டிவிட்டது...! என்ன சொல்வது? ஆனந்தம் தாழ முடியவில்லை! பொங்கும் மகிழ்ச்சிக்கு அளவே இல்லை...! நீண்ட நாட்களின் பின்னர் பாரம் குறைவதாய் உணர்கிறோம்! நெஞ்சின் கனம் எல்லாம் கரைந்து போனதாய் ஒரு உணர்வு...! நெடுநாள் தகித்த எரிமலை ஒன்று எகிறிப் பிளந்து வெடித்தது போல, எல்லாமும் கைகளில் வந்தது போல ஒரு எல்லை இல்லாத ஆனந்த உணர்வு...! என்றாலும் இந்த மகிழ்ச்சியிலும் கண்ணீரே வெள்ளம் போல வருகிறது..! ஏதோ ஒன்று எங்கோ தொலைந்ததாய் ஒரு வலி..! ஒருமுறை எல்லா உறவுகளும் ஒன்று கூடி ஓ என்று ஒப்பாரி வைத்து களைப்பாகும் வரை கதறி அழ வேண்டும் போல் உள்ளது. ஏன் அழுகிறோம்? எதற்காக அழுகிறோம்? யாரை நினைத்து அழு…

  13. நம்பிக்கை ------------------- நீண்டு நிமிர்ந்திருந்த புத்தனின் கண்கள் மூடியபடி சாரையாய் நீண்ட பக்தர்களின் கைகளில் வெள்ளைத்தாமரைகள் புத்தம் சரணம் கச்சாமி வழிபடுங்கள் நம்பிக்கையோடு கீழ்ப்படிதலோடு மீண்டும் மீண்டும் இந்த நாடு உங்களுக்கே உரித்தாகும் இதைக் கேட்ட புத்தர் பரிகசிப்போடு தனக்குள் சொல்லிக் கொண்டார் இந்த முட்டாள் மனிதர்களின் குருட்டு நம்பிக்கைகளுக்கு அளவில்லாமல் போயிற்றே.. எனது விதிப்பின் படியும் விதியின் கணக்குப் படியும் வழிபாட்டுடனும் நம்பிக்கையுடனும் என்னை அதிகம் அழைத்தவர்களுக்கே இந்த நாடு சொந்தமாகும் என்பதை அறியாதிருக்கிறார்களே (ஹலீல் ஹிப்ரானின் கவிதை ஒன்றை வாசித்த போது எனக்குள் ஏற்பட்ட தாக்கம்)

  14. சத்திய சோதனை-பா.உதயன் கொடிய இரவின் பிறப்பில் எலும்பும் சதையுமாக எரிந்து கொண்டு இருந்தது முள்ளிவாய்க்கால் இருளின் நடுவே சிலுவை தாங்கி இறைவன் வருவான் என நிலவை பார்த்தோம் இறந்த தாயின் முலையில் குழந்தை பால் குடிக்க இழுத்து வந்து நெருப்பு மூட்டினர் எங்களின் வீட்டில் யூதர்கள் வந்தனர் ஜேசுவை கேட்டனர் ஆயிரம் ஆயிரம் சிலுவையில் அவர்களை அறைந்தனர் உயிர்த்து இருந்தவர்களை இன்னும் ஒரு முறை புதைத்தனர் கனவுகள் உடைந்து கல் அறைக்குள் ஒழித்து கொண்டன முள்ளிவாய்க்கால் முழுமையாக மூச்சு இழந்தது மிஞ்சி கிடக்கும் சாம்பலில் இருந்து எலும்பை எண்ண அங்கு யாரும் சாட்சிக்கு இல்லை …

    • 2 replies
    • 646 views
  15. ____________________ லூர்த்தம்மா! காலம் பற்றி என்ன சித்தரிப்புக்களை நான் செய்ய வேண்டியிருக்கிறது? நாறி வதைத்துக்கொண்டிருக்கும் எல்லாச் சொற்களையும் உனக்காக அசைத்து கொட்டுகிறேன். மழைக் காலத்திற்கிடையில் நமது காணியில் மேடு ஒன்றில் வீடு ஒன்றை அமைப்பதற்காகவே இரவுகளில் கற்களைத் தேடிக்கொண்டிருக்கிறேன். நான் அவர்களிடம் சொன்னேன் குழந்தைகள் ஒரு பொழுதும் விரும்பி துப்பாக்கிளை தூக்கி வரவில்லை என்பதை. அபிராஜிடம் துப்பாக்கி ஒன்று மீட்கப்பட்டதாக சொல்லுகிறார்கள். அபிராஜை இன்னும் நான் பார்க்கவிலை. வெயில் கொட்டிக்கிடந்த நாளில் மிகத் தெலைவுக்குச் சென்றும் அவனை பார்க்கமுடிவில்லை. யாரையும் குறைகூறக்கூடாது? எதைப் பற்றியும் விபரிக்க முடியாதிருக்கி…

  16. உயிர் மெய்யெழுத்தால் உனை கோர்க்க நினைக்கின்றேன் என் உயிரே கரைகிறது ஓலமிட்டழுகிறது கோர்த்துவைத்த மணிமாலையின் முத்தொன்று தனித்து கழன்று தன்னை தொலைக்கிறது அண்ணா எம்மை மாலையாக்கி மகிழ்ந்தவனே உனை ஓசையின்றி ஔியுமின்றி மறைத்து சென்றதும் ஏனோ வெற்று காகிதம் என்னுள்ளே வெளிச்ச ரேகைகளை விசிறிக்காட்டியவன் நீ வேர்விட விளைநிலம் காட்டினாய் நீர் விட்டு நிதம் நின்றாய் ஊர்விட்டு வந்த எமக்கு உன் எழுத்துக்களால் உயிர் தந்தாய் வெற்றுக்கூடாக்கி விரைந்து எங்கே பறந்தாய் நினைவால் கொல்கின்றாய் நெஞ்சினுள் கனக்கின்றாய் உன்தன் ஆசிக்காய் உயிர்க்கும் எங்கள் எழுத்துக்கள்

    • 0 replies
    • 646 views
  17. அடர்ந்த பனிக் கூதலில் நட்சத்திரங்களின் மெல் ஒளியின் படர்தலில் இரவின் நிசப்தத்தை இரசித்துக்கொண்டு இரண்டு இதயங்கள் தொலை தூரப் படபடப்பில் இமைகளை மூடிவிட சாளரம் வளியே முத்மிடும் சாரல் காற்றின் ஸ்பரிசத் தக தகப்பில் மூச்சுக்காற்றின் சுகந்தம் அறிதல் உற கொம்பொன்றில் கொடிபடரும் பேரழகாய் கரை தடவும் மெல்லலையில் மணல்க் கோடாய் மாண்ட நடு இரவின் பொழுதுகள்தான் பொய்த்தனவே ஏக்கத் துடிப்பான எண்ணங்கள் இணைந்துவிட

  18. மண்ணில் நாம் வந்து பிறந்துவிட்டோம் வாழ்வு எது என்றும் அறிந்துவிட்டோம் எண்ணிலாத ஏக்கங்களை எம்மைச் சூழ ஏற்றிவிடோம் பொன்னின் ஆசைகள் போதையாகிட பொருள் மட்டுமே வாழ்வுமாகிட பேரவா கொண்டு பேதைமை கொண்டு போட்டிகள் கொண்டிங்கு போதையிலேயே வாழுகிறார் மண்ணின் ஆசைகள் மனதெங்கும் மாய்த்திட மானமிழந்து மதிகெட்டலைந்து சுற்றமிழந்து சுறுசுறுப்பிழந்து சொந்தமிழந்து சொத்துமிழந்து செக்குமாடுகளாய் வாழுகிறார் பெண்ணின் ஆசையில் கண்ணும் குருடாகிட பேரிடர் பல தாங்கியே நிதம் பெண்டிர் மறந்து பெருமை மறந்து பித்தராய்ப் பலர் வாழுகிறார் உயிர் காக்க உணவே இன்றி உடல் காக்க உடையும் இன்றி உறவேதும் உதவிட இன்றி உணர்வு கொன்று உயிர் காவ உள்ளம் வென்று உணர்வு காக்கும் உருக்குலைந்த உண்…

  19. Started by சொப்னா,

    ஒரு கவித படிச்சேங்க . ரெம்பவே ஃபீலிங்கா இருந்திச்சு . உங்ககூட ஷேர் பண்ணிக்கிறேன் . நிலந் தொடாமல் மிதந்தேன் உலர்ந்த மணற் துகளால் உருவானவளாக மெதுமெதுவாக உடல் பாரமிழக்கிறது நான் லேசாகி உதிர்கிறேன் அலைகள் என்னை மோதுகின்றன யார் அவற்றை எனை நோக்கி வரச் செய்தது? திரும்பத் திரும்ப வெண்நுரைகளைத் என் தேகத்தில் பூசின எவர் அவற்றை என்னிடம் துரத்தியது? யார் கரையில் என்னை வீசியது? எவரது கைகளவை? காணாமல் போகிறேன் நீரோடு கலக்கிறேன் கண்கள் உற்றுப் பார்க்க முடியாத ஆழத்தில் உறைந்து கிடக்கிறேன் ஈரமண்ணாக. http://thoomai.wordpress.com/category/%e0%ae%95%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%a4%e0%af%88%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d/

  20. மூச்சடங்கிப்போன இறுதிப்பொழுதுகள் ஆண்டுகள் ஆறானதோ? எங்கள் உறவுகள் அணுஅணுவாய் வதைபட்டு அல்லல்கள் பலபட்டு துடிதுடித்து சாவடைந்து ஆண்டுகள் ஆறானதோ? இரசாயன நெருப்புக்குள் வெந்து கருகி மடிந்தும் பச்சிளங்குழந்தைகள் பாழும் குண்டுகளால் பரிதவித்து இறந்தும் ஆண்டுகள் ஆறானதோ? சதிவலை பின்னியநாடுகளை இறுதிவரை நம்பி காத்திருந்து உயிர் பறிக்கப்பட்டு ஆண்டுகள் ஆறானதோ? பதுங்குகுழிகள் வெட்டி உயிரை பாதுகாக்க முடியாத வலயத்துள் பல நூறாயிரம் எறிகணைகள் வீழ்ந்து பதைபதைத்து எம் உறவுகள் துடிதுடித்துசாவடைந்து ஆண்டுகள் ஆறானதோ? நம்பிக்கை வைத்த நாடுகள் தான் கூடிச் சதி புரிந்தது தெரியாமலும் அயல்நாட்டு அரசின் பக்கபலத்துடன்தான் இனவாத சிங்கள அரசு இனப்படுகொலை செய்கின்றது என்பதை அறியாமலும் அன்று எம்உ…

  21. உயிரின் வலி அறிவாயோ மானிடா ஊனுருக்கி உடல் கருக்கி உள்ளனவெல்லாம் மறக்கும் உயிரின் வலி அறிவாயோ உள்ளக் கருவறுத்து ஒவ்வொரு நொடிப்பொழுதும் உயிர் வதைத்து உணர்வு கொல்லும் உயிரின் வலி அறிவாயோ எதுவுமற்று ஏதுமற்று எங்கெங்கோ மனம் அலைத்து ஏக்கங்கள் கொள்ளவைக்கும் உயிரின் வலி அறியாயோ எதிரியாய் எமை வதைத்து எட்டி நின்றே வகுத்து எல்லையில்லா துன்பம் தரும் உயிரின் வலி அறியாயோ எண்ணத்தை எதிரிகளாக்கி எல்லையற்று ஓடவைத்து என்புகள் மட்டுமே ஆனதாய் என் உயிரின் வலி அறியாயோ சரணடைந்து சரணடைந்து சர்வமும் இழக்க வைத்து சக்தியெல்லாம் துறந்து நிற்கும் உயிரின் வலி அறியாயோ மானிடா உயிரின் வலி அறிவாயோ

  22. கே. சச்சிதானந்தனின் கவிதை ஒன்று. இதை ஜெயமோகன் அவரது தளத்தில் வெளியிட்டிருக்கின்றார். எங்கும் போரால் நிறைந்திருக்கும், அப்பாவி மக்களை ஆதரவற்றவர்களை பலவீனமானவர்களை கொன்று குவிக்கும் இன்றைய உலகிற்கு ஏற்ற ஒரு கவிதை இது வென்றோம் என்றவர்களே தோற்றவர்கள் ஆகின்றனர். https://www.jeyamohan.in/208930/ ********************************************************** இறுதிவிருப்பம் ---------------------- நான் அசோகன் பிணக்குவியல்களின் துயரம் நிறைந்த காவல்காரன் சகோதரர்களின் தலைகளை மிதித்து ரத்தநதியை கடக்கும் துரியோதனன் குருதிகலசத்தை கிரீடமாக்கிக்கொண்ட வெறும் ஊன்தடி என் கழிவிரக்கம் …

  23. முத்துப் போன்ற தீர்மானம்-நம் முதல்வர் காத்தார் தன்மானம் ஒத்துப் போக அனைவருமே-நல் ஒற்றுமை காட்டி தமிழினமே சத்தாம் வழிவகை வடித்தாரே-புகழ் சரித்திர முடிவு எடுத்தாரே பத்தொடு ஒன்றா ?இதுவல்ல-இந்த பாட்டில் முழுவதும் நான்சொல்ல அருளாதாரம் அணு அளவும்-என்றும் அறியா பக்சே உள்ளளவும பொருளாதார தடை ஒன்றே-சிங்களர் போக்கினில் மாற்றம் தருமென்றே ஒருநாள் கூட எண்ணாதீர்-வந்த ஒற்றுமை கெடவே பண்ணாதீர் திருநாள் காணின் தனிஈழம்-எட்டுத் திசையும் தமிழினப் புகழ்பாடும் ஒன்றே செய்யினும் நன்றாமே-அதை உடனே செய்தீர் இன்றாமே குன்றே எதிரே மறித்தாலும-கை குறுக்கே குழியே பறித்தாலும நின்றே முதல்வர் ஆய்வீரா-ஈழம் ந…

    • 1 reply
    • 641 views
  24. பனி உமிழும் மாலைப்பொழுதில் மொழிபெயர்ப்பு: பேராசிரியர் மு.விஜயகுமார் ஆங்கிலத்துறைப் பேராசிரியர் வேல்டெக் ரங்கா சங்கு கலைக் கல்லூரி ஆவடி, சென்னை – 600062 யாருடைய‌ பனித்துகள்கள் இவைகள்? தெரிவது போல உணர்கிறேன். அவரின் வீடோ அருகே உள்ளகிராமத்தில் நானோ இங்கு ஓய்வில். என்இருப்பை அறிய வாய்ப்பில்லை. காடுகள் முழுவதும் பனித்துளிகளின் கைகள் படர்ந்துள்ளது. என் இளமை ததும்பும்குதிரை பனிஉதிரும் காடுகளுக்கும் சிலைபோன்ற ஆறுகளுக்கு இடையைவீடுகளற்ற இடத்தை கண்டு சற்றே குழம்பியது. அதன் கழுத்தில் உள்ள மணிகள் அசைந்து தவறுகள் நேராமல் கவனமாக இருக்க வேண்டி கட்டளையிட்டது. …

  25. Started by Kavian,

    தேவியே, தேவாரம் பாடும் பக்தன் நான் ஆவியே ஆராதனை உனக்கானபோது ஆரவாரம் எதற்கு தாரை தப்பட்டைகள் எதற்கு - உந்தன் முத்திரை ஒன்று என்மூச்சாக ஆகாதா! அபிசேகமும் ஆராதனையும் உனக்கென் றானபோது உன்வரம் ஒன்றே என் வார்த்தைகளின் வளமல்லவா வாய்பேசா விட்டால் என்ன உன் னுதடுகளின் ஒவ்வொரு ரேகைகளும் ஊட்டச் சத்தல்லவா? மனமேடைதனிலே மழைபொழியும் அன்பில் உளிபொழியும் அம்மி உணர்வுகளில் உயிர்த்தேன் தனமிடையில் சரிந்து தலைபுதைய மகிழ்ந்து உயிரோடு பரவும் உறவாக வளர்ந்தேன்!

    • 0 replies
    • 640 views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.