Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கவிதைப் பூங்காடு

கவிதைகள் | பாடல் வரிகள்

பதிவாளர் கவனத்திற்கு!

கவிதைப் பூங்காடு பகுதியில் கள உறுப்பினரல்லாதோரின் கவிதைகள், கவிதை மொழியாக்கம், உலகக் கவிதை, பாடல் வரிகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் யாழ் கள உறுப்பினர்கள் அல்லாதவர்களின் கவிதைகள், கவிதை மொழியாக்கங்கள், பாடல் வரிகள் போன்றன மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
ஈழத்தை சேர்ந்த, பூர்வீகமாகக் கொண்டவர்களின் படைப்புக்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படவேண்டும். ஏனைய கவிதைகள் தரமான கவிதைகளை அறிமுகம் செய்யும் நோக்கில் இலக்கிய மின் இதழ்களில் இருந்து மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. வித்து காசு பாத்துறாதண்ணே எம்புட்டு நேரம் நிற்கிறது சீக்கிரமா படமெடுண்ணே அம்மாக்கு ஒத்தாசையா செங்கல் தூக்கனும் அழுக்குத் துணி மாத்தி கலைஞ்ச முடியை வாரி பூச்சுடி அழகா போஸ் கொடுக்க வருச பொறப்புக்கு வாண்ணே இந்த படத்தை எங்கயும் வித்து காசு பாத்துறாதண்ணே பள்ளிக்கூட போற வயசில்ல பக்கபலமா அம்மாக்கு இருக்கேன் குழந்தைத் தொழிலாளினு சொல்லி பொழப்பை கெடுத்துராதண்ணே உழைச்சாத்தான் பசிக்கிற வயிறும் சந்தோசப்படும் இந்த விசயம் படத்தில தெரியுமாண்ணே! http://www.greatestdreams.com/2010/03/blog-post_04.html

  2. என்றென்றும் நன்றியுடன்..... முப்பாலுக்கு அப்பாலும் முதற்பாலாய் தாய்ப்பாலுடன் தமிழ்ப்பாலும் ஊட்டி நோய் ஏதும் அணுகாது நோன்பிருந்து சேயாய் எமை எல்லாம் செம்மையாய் வளர்த்தெடுத்த தாயே உனை வாழ்த்த தமிழில் வார்த்தையில்லை நீ தண்ணீர் ஊற்றி வளர்த்திருந்தால் நாம் தறுதலையாய் வளர்ந்திருப்போம் நீயோ கண்ணீர் ஊற்றி எம்மைக் கண்ணியமாய் வளர்த்ததனால் உன் கண்ணின் நீரெல்லாம் ஆனந்தக் கண்ணீராய் மாறியது கண்ணீரோடு விதை விதைப்போர் கம்பீரத்தோடு அறுத்திடுவார் என்று சொன்ன வேதமொழி என்றும் பொய்ப்பதில்லை எத்தனை இரவுகள் நீ உறக்கத்தைத் தொலைத்து விட்டு எம் இரவுகளைப் பகலாக்க உன் இரவுகளை இழந்திருந்தாய் எத்தனை தடவைகள் நீ உன் கனவுகளைத் தொலைத்து விட்டு எம் எதிர் க…

  3. தமிழர்களும் மனிதர்கள் தான்!!! அண்ணாவை காணவில்லை என அழுதாள் "தங்கச்சி" அவளும் காணாமல் போனாள்..!!! என்ர பிள்ளையை திருப்பித்தாங்கோ என கதறினாள் ஒரு "தாய்" அவளும் காணாமல் போனாள்..!!! இதயமே இல்லாத இரும்புமனிதர்கள் தேசத்தில் கண்ணீர் வடிப்பது தண்டனைக்குரிய "குற்றம்"! மனிதமே இல்லாத மிருகங்கள் தேசத்தில் விழி நீரின் "வலி" தெரியாது அழுபவனுக்கு மரண "தண்டனை"! நாக்குகள் அறுக்கப்படும் நரக பூமியில் கேள்வி கேட்பவன் "தீவிரவாதி" நீதியே இல்லாத "நிர்வாண" நாட்டில் கோமணத்தோடு திரிபவன் "குற்றவாளி"! கேட்க நாதியற்ற இனமாய் இருப்பதால் நாய் கூட துணிந்து காலைத்தூக்கும் "நரக தேசம்"! விசர் நாய்க்கு தண்ணீருக்குப் பயம் வெறிநாய்களுக்கு தமிழனின் கண்ணீ…

  4. நாம் என்ன ஊமையா? இந்த நிமிடம் இதே வருசம்.. இமைகளின் மீது....... இரும்பு பறவைகள் .... எரிதிராவகம் வீசி போன நாள்! இந்த நாள்..! சிலுவை சுமந்த ஜீவனின் மடியில்..... சிதைகளாய் எம்மை - ஆக்கிவிட்டுபோன பேரினவாதத்தின் ...... தமிழன் குடல் வெளி எடுத்து.. கும்மி அடித்த நாள்! விலா எலும்பு நோக பெற்றவள் வயிறும் வைரம் என்றும் அவள் கருதிய மகனும் ஒன்றாய் குடல் கிழிந்து செத்தாரே.. உலகமே உனக்கு அது தெரியுமா? நாம் என்ன செய்தோம் இறைவா? நாம் என்ன உனக்கு தீராத பகையா? நெஞ்சு மீது மூட்டிய தீ இன்னும் ஈரம் பாயாமல் ஊரெல்லாம் இருக்கிறதே கொல்லுங்களேன்- எம்மை தொலைந்தோம் நாம் என்று.. யாருக்கும் சொல்லியும் விடுங்களேன்! இருக்கும் ப…

    • 27 replies
    • 3.6k views
  5. உன் நிழல் கூட இனி உனக்கு இல்லை!! வெட்டி வெட்டி எறிந்தாலும் நகம் துளிர்விடும்...! துட்டகைமுனு படை... விட்ட தவறை.... சரி செய்ய.. விளங்காமல் தவிக்கும்! செத்து செத்து பிழைக்கும்... இனத்தின் முகத்தில்-ஒரு சிரிப்பு பூக்கும்...!! யூலை படுகொலை... ஆரம்பம் அவருக்கே-இனி முடித்து வைக்க.... முடியுமா அவராலே? தன் வினை.. தன்னைச் சுடும்... தமிழனை எரித்தவர்.. வாழ்வு........ இனி தலைவர் அனுமதி பெற்றே... தன் நிழலைக்கூட இனி தான் நம்பும்!!

    • 16 replies
    • 2.3k views
  6. ஏன் பேச புலி போச்சு....??? மீண்டும் ஒரு ஜெனிவாவில பேச்சு.... அங்கு புலி காண்பதுவோ என்னவென்று போச்சு....??? முன்னர் நடந்த பேச்சுக்கென்ன ஆச்சு....??? இன்று அமைதி கிழித்து போரங்கு மூண்டு போச்சு.... இல்லை தீர்வு எண்ணு உருவாகி ஆச்சு.... அப்புறமா மீண்டும் பகையோடு வேங்கை ஏன் பேச போச்சு....??? வன்னி மைந்தன்

  7. முதன்முதலாய் அம்மாவுக்கு கவிஞர் வைரமுத்து எழுதிய கவிதையை இணைக்கிறேன் ஆயிரம்தான் கவிசொன்னேன் அழகழகாய்ப் பொய்சொன்னேன் பெத்தவளே உன்பெருமை ஒத்தைவரி சொல்லலையே காத்தெல்லாம் அவன்பாட்டு காகிதத்தில் அவனெழுத்து ஊரெல்லாம் அவன்பேச்சு உன்கீர்த்தி எழுதலையே எழுதவோ படிக்கவோ இயலாத தாய்பற்றி எழுதியென்ன லாபமென்று எழுதாமல் விட்டேனோ பொன்னையாதேவன் பெற்ற பொன்னே குலமகளே என்னைப் புறந்தள்ள இடுப்புவலி பொறுத்தவளே வயிரமுத்து பிறப்பான்னு வயிற்றில்நீ சுமந்ததில்லை வயிற்றில்நீ சுமந்தஒண்ணு வைரமுத்து ஆயிடுச்சு கண்ணுகாது மூக்கோடை கறுப்பா ஒருபிண்டம் இடப்பக்கம் கிடக்கையிலை என்னென்ன நினைச்சிருப்ப கத்தி எடுப்பவனோ களவாடப் பிறந்தவனோ …

  8. Started by yaal_ahaththiyan,

    நமக்குள் போர் நிறுத்த ஒப்பந்தம் வேண்டாம் நமக்குள் சமாதான ஒப்பந்தம் செய்து கொள்வோம் அப்படியென்றாலாவது சமாதான மீறல் புரிகிறாயா என்று பாப்பம் நான் குடிக்கவேயில்ல இருந்தபோதும் குடிகாரனாய் நடிக்கிறேன் உன்னை பேசவைக்க வேண்டுமே என்ன தவம் செய்ததோ என் வார்த்தைகள் உனக்காய் கவி எழுதுகையில் மெய் எழுதுக்களும் உயிர் பெற்று விடுகின்றது மழை விட்டது உனக்கும் தெரியும் எனக்கும் தெரியும் இருந்தும் என் குடைக்குள் இன்னும் நீ கோவம் வரும் போது உன்னை நினைக்க சொன்னாய் வராத போதும் உன்னை நினைத்தேன் இப்ப என்னை நினைப்பாயோ யாழ்_அகத்தியன்

  9. காதல் பிரிவுகள் பலவகை .....!!! காதல் புரிந்துவிட்டு பல்வேறு காரணங்களுக்காக உயிரை துறக்காமல் காதலை துறப்பது ....!!! ----------------- கவிதை 01 ----------------- இரண்டு ரோஜாக்கள் அழகாக பூத்து ... உதிர்ந்து விழுவது .... காம்பு என்னும் பகுதி ... நினைவுகளோடு ... இருந்து கொண்டே இருக்கும் ...!!! +++++++ உயிராய் காதலித்து கொண்டிருக்கும் போது ஒரு உயிர் உலகை விட்டு பிரிவது ஆனால் தற்கொலையில்லை ....!!! ------------- கவிதை 02 ------------- இரண்டு ரோஜாக்கள் .... அழகாக பூத்து .... ஒரு ரோஜா கருகிவிட .... மற்றைய ரோஜா .... வாடிக்கொண்டிருப்பது....!!! +++++++++++++ உயிராய் காதலித்த உள்ளத்தில் ஒன்று எங்கே சென்றது...? எப்படி பிரிந்தது ....? மீண்டும் வருமா ..? ------------- கவிதை 03…

  10. தரிசனத்தின் சூக்குமப்பொழுதொன்றில் கண்ணீர் ரேகைளை அழித்து பிரியத்தின் கோடுகளை வரையத் தொடங்குகிறாய். பொன்னி, ஆராதனைக்குரியவளே, பிரபஞ்சப் பெருங்கோடுகளடியில் சிதறுண்டு கிடக்குமென் கனவுகளை பார். துருவ நிரலை மீறி நுழைந்த வலசைப்பறவையாய் அத்துவானவெளியில் ஒற்றறுத்துப் பாடுமென் குரலைக்கேள். துளைகளைத் தீண்டும் காற்றின் துயரங்களை நானறிவேன். பிரியமே, ஒரு பின்பனிக்கால குளிர் சுமந்துவரும் உன் பிரியத்தை எப்படி இழப்பேன். "உயிரே உயிரில் வலி எப்போதும் முடியாதென்றுரைக்கும் நீ" எந்தப் பருவத்தில் வந்தடையப்போகிறாய் ? உன்னிருத்தல் அன்பாலானது அன்பாலனதெல்லாம் பெருந்துயரானது. அன்பின் துயரப்புள்ளிகளில் மிதந்தலையும் சரீரம் நிர்மலமானது. நான் மிதந்தலைகிறேன். …

  11. Started by nunavilan,

    நீ சிந்திய சிரிப்புகளையெல்லாம் சேமித்துவைத்திருந்தேன் இரண்டுவருடசேமிப்பை எடுத்துப்பார்க்கிறேன். எதிலுமே என் பெயரில்லை என் பக்கத்தில் நின்றவர்களை பார்த்து சிரித்தது பல என் முன் நின்றவர்களுக்காய் சில பின் நின்றவர்களுக்காய் சில எவரையோ எண்ணியபடி எனை பார்த்து சிந்தியவை சில எல்லாவற்றையும் கழித்தபோது எஞ்சியவை எனக்காக சில ஏளன புன்னகைகள் என் மனக்காயங்களுக்கு-அவை மருந்தா, திராவகமா தெரியவில்லை ஆனாலும் அள்ளி அள்ளி பூசிக்கொள்கிறேன். இதயதில் உன் பெயரையும் உயிரில் உன் முகவரியையும் சுமந்தபடி! சிலம்பூர் யுகா, துபாய் [yughas@yahoo.com]

    • 3 replies
    • 1.3k views
  12. நீயல்லவோ உயிரே ....!!!***பத்து மாதம் என்னை சுமந்து பெற்றவள்என் உயிர் தாய் ....!!!வாழ்நாள் முழுதும் உன்னைசுமக்க இருக்கும்என்னை என்னவென்று ...அழைப்பாய் உயிரே ...?உயிரை உயிரால் எடுத்து ...என் உயிரை சுமப்பவளே ....தாயின் இன்னொரு பிறப்பு ....நீயல்லவோ உயிரே ....!!!+கே இனியவன் காதல் கவிதைகள் உன்னை வயிற்றில்சுமக்கும் பாக்கியம்தாய்க்கு கொடுத்தாய் ....!!!உன்னை தோளில்...சுமக்கும் பாக்கியம்தந்தைக்கு கொடுத்தாய் ...!!!உன்னை இதயத்தில் ....சுமக்கும் பாக்கியத்தை ...எனக்கு கொடுத்தாய் .....!!!வாழ்க்கை முழுவதும் ....ஏதோ ஒருவகை சுமை ....காதல் எல்லா சுமைகளின் ....கூட்டு மொத்தம் ....!!!+கே இனியவன் காதல் கவிதைகள் வளர விட்டேன் காதலை ....மனதில் அதுவே இன்றுஎன்னை மாற்றி சுற்றவைத்து விட்டது....!…

  13. Started by pakee,

    [size=4][/size] [size=4]இந்த மரம் அந்த நதி எல்லாமே [/size][size=1] [size=4]இது எதுவுமே மாறல[/size][/size][size=1] [size=4]ஆனால்[/size][/size][size=1] [size=4]என் வாழ்க்கைல எவ்வளவு மாற்றங்கள்[/size][/size][size=1] [size=4]இது எவ்வளவு பெரிய சோகம் [/size][/size][size=1] [size=4]மறக்க முடியல[/size][/size] [size=4]சந்தோசம் என்றால் ஓடி போய் அணைக்க நண்பன் [/size][size=1] [size=4]கவலை என்றால் மடியில் சாயா அம்மா [/size][/size][size=1] [size=4]ஏதும் என்றால் தோளில் தட்டி கொடுக்கும் அப்பா [/size][/size][size=1] [size=4]இப்ப எல்லாமே இழந்து தனிய இருக்கிற மாதிரி உணர்வு[/size][/size][size=1] [size=4]சின்ன வயசில் வந்த காதல்[/size][/size][size=1] [size=4]காதலிக்க…

    • 4 replies
    • 1.2k views
  14. Started by Sembagan,

    துணிவு வானம் குளிர்ந்து மழை கொட்ட வயல் நிலங்கள் நீர் நிறைந்திருக்க நாற்று நடுகையிட்டு நன்றாய்; பொலிவு தரும் நம்பிக்கையில் பட்ட கடனோடு கடன்; பட்டு பகலிரவாய் பாடுபட்டு பயிர் வளர்த்தேன். கொத்துக் கொத்தாய் நெல் மணிகள.; மண்தந்த மட்டற்ற மகிழ்வோடு மனம் மகிழ்ந்து விற்ற கடன் அடைத்து மிஞ்சியதெமக்கென்ற நினைப்பதனில் நெஞ்சம் நிறைந்திருக்க விண்ணிடிந்து மண்ணில் வீழ்ததுபோல் சட்டென்று வீழ்ந்த விலையால் நட்ட கூலிக்கும் காணாத விற்று வந்த பணத்தில் வட்டி கட்டி வறுமையும் துரத்த வரும்போகம் நிமிர்வோம் என்ற துணிவோடு வாசல் வந்தேன். - வ.மனோகரன் - அகதி நானுமோர் அகதியென்ற நிலைமாறி வாழும் புலம் சொந்தமாச்சு. மாறிடும் நாட்க…

    • 0 replies
    • 1.4k views
  15. கலி முத்திப் போச்சு இன்னும் மேலே மேலே எட்டாத உயரத்தைத் தொட்டுவிடும் துடிப்புடன் இறக்கைகளை அடித்து எழும்பிட முயல்கிறாய் ஆயினும் வாடையின் வேகம் உன் ஆடையை உரசி கட்டுக்குள் அடங்காத உன் கனத்த இறக்கைகளை முறித்திட முயல்கையில் ஏதிர்க் காற்றை முறியடித்து நீயோ எத்தனை தவிப்புடன் காற்றின் திசை நோக்கி வேகம் பிடிக்கிறாய் வேகம் அதைவிட வேகம் ஆனாலும் நீ பெட்டைக்குருவி பேதமை உன்னுடன் கூடப் பிறந்த புpறவிக் குணமா? ஏனோ தெரியவில்லை ஏகிறி எகிறி உன் சிதறிய கனவுகளுடன் கீழே கீழே இன்னும் கீழே மண்ணோக்கிய உன் மனச் சிதைவுகளுடன் வலியின் வேதனையை மிடறுக்குள் விழுங்கியபடி மனப் புதிருக்குள் மண்டிக் கிடக்கின்றாய் விதியின் கையிலோர் விளையாட்டு…

  16. கருணாநிதியின் 'அவாள்' கவிதையால் சலசலப்பு புதன்கிழமை, ஆகஸ்ட் 20, 2008 சென்னை: முதல்வர் கருணாநிதி பிராமண சமுதாயத்தைச் சேர்ந்த ஒருவர் குறித்து பூடகமாக எழுதியுள்ள கவிதை பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. கருணாநிதி தனது கவிதையில் சாடியிருப்பது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி செயலாளர் வரதராஜனைத்தான் என்ற கருத்தும் எழுந்துள்ளது. முதல்வர் கருணாநிதியின் கவிதைகள் அவ்வப்போது சலசலப்பை ஏற்படுத்துவதுண்டு. ஆனால் நேற்று அவர் வெளியிட்டுள்ள கவிதை ஒன்று பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. காரணம், அந்தக் கவிதையில் பிராமண சமுதாயத்தைச் சேர்ந்த ஒரு தலைவர் குறித்து கருணாநிதி பூடகமாக சாடியுள்ளார். யார் அந்தத் தலைவர் என்பது யாருக்குமே புரியவில்லை. இதனால் இந்தக் கவிதை பரபரப்பை ஏற்…

  17. என்ன மாயம் நீ செய்தாய் யாழ்களமே என்ன மாயம் நீ செய்தாய் நீ கட்டிளம் காளையா கன்னிப் பெண்ணா தமிழைத் தாயென்று போற்றுதனால் உனையும் நான் பெண் என்பேன் அழகிய பெண்ணே நீ இத்தனைநாள் என்முன்னே உன் முகம் காட்டாது எங்கே மறைந்திருந்தாய். இரவு பகலென்று ஊனுறக்கம் இல்லாது கன்னியரும் காளையரும் உனைச்சுற்றி நிற்கின்றார் உற்சாகம் தரு மருந்தாய் உன்னை உணர்வதனால் உலகெங்கும் உள்ளோரை ஒன்று கூட்டி ஊர்ப்புதினம் அத்தனையும் உணர்வோடு சொல்லி ஆக்கம் தருவோரை அரவணைத்தும் நிற்கின்றாய் திண்ணையிற் கூடி திகட்டும்வரை நாம் பேச தடையொன்றும் சொல்லாத தாராள மனதோடு தொண்டுதான் செய்கின்றாய் தொடர்ந்தெமக்கு உன்னை அறிந்ததனால் உன்னோடு இருப்பதனால் உலகில் பிறந்திட என…

  18. இருட்டில் வாழ்கிறோம் ..........ஆனால் விடியும் திசை தூரமோ தூரம்......... அதுவரை மனம் தளராமல் பயணிப்போம் ............... விடியலின் தோற்றங்கள் கண்களுக்கு புலப்பட தெரிந்துவிட்டது ................. .ஆகவே விடிந்து விடும் என்று நாம் குந்தியிருக்காமல் .......... தொடர்ந்து பயணிப்போம் முழுமையான விடிவை நோக்கி ................ ஏனனில் எம்மை நோக்கி விடிவு வராது ..............நாம்தான் விடிவை நோக்கி செல்லவேண்டும் ............. நாம் வைக்கும் காலடிகளின் ஒவ்வொரு வேகத்திலேயுமே ........எம் விடிவின் வேகம் தீர்மானிக்கப்படுகிறது .... ஒளிர்ந்த முகத்துடன் ,மலர்ந்த முகத்துடன் ........ஆதவன் எம்மை வரவேற்க ........காத்திருக்கிறான் ..

  19. அழக்கூட முடியவில்லை அடைத்துப் போகிறது நெஞ்சு! உள்ளத்தில் உறைந்தவளே றிசானா..! உன் மரணச் செய்தி இன்னும் மரணித்துப் போகவில்லை எங்களை விட்டும்! சுவனத்துக் குயிலே! உன் விடுதலைக்காய் எத்தனை உள்ளங்கள் இரவு பகல் அழுதன தெரியுமா..? எல்லாம் முடிந்து விட்டது. இறைவன் அழைத்துக் கொண்டான் உன்னை! என்று நம்புகிறோம் ஏற்பாட்டை ஏற்றுக் கொள்கிறோம். றிசானா! செல்லமாய் விளையாடும் சின்ன வயதில் சிறை சென்ற வண்ண மொட்டு நீ.. அதைக்கூடத் தாங்காமல் உன்பெற்றோர் தீயில் விழுந்த புளுவாய் தீய்ந்து போனதை நாம் அறிவோம். இப்போது இறந்துபோனதை எப்படி ஏற்றுக் கொள்ளப் போகிறார்கள்..! உன் மரணச் செய்தி கேட்டவுடன் தாய் மொழிந்த வார்த்தைகள் 'எண்ட மகள மௌத்தாக்கிட்டாங்களா..?' இன்னும் …

  20. தற்கொடைகள் வீண் தற்கொலைகளாக வேண்டாமே...! முத்துக்குரமன் மூட்டிய தீ எங்கும் மூசியெரிகிறது. தமிழன் செத்துக் கிடப்பதை உலகோ சத்தமின்றிச் சகிக்கிறது. பலம் கொண்ட மட்டும் பகைவன் பலியெடுக்கும் கொலையிருந்து மீளுதற்காய் புலமெங்கும் தமிழன் போர் வீச்சாய் எழுகிறான். ஈழம் பெறும் நாளை கையிலெண்ணிக் கடுங்குளிரின் விறைப்பிலும் வீதிகளில் இறங்கி நீதி கேட்கும் நிலையிலுள்ளான். பலம் வெல்லும் என்ற நிசம் புரிந்தும் நம்பிக்கையுடன் தமிழன் நெடுந்தவம் புரிகின்றான் - இக் கடுந்தவத்தின் பரிசெமக்கு காலம் தருமென்ற நினைப்போடு. தினம் வரும் செய்திகளால் - உயிர் மனம்வாடித் துவளுகின்ற துயர் உயிரைத் தின்கிறது - எனினும் தொடரான ஈர்ப்புக்கள் குறயாமல்…

    • 5 replies
    • 1.8k views
  21. நாற்றோடு காற்றுவந்து மோதும் - - கரைகழுவிபோகும் அலைகள் ஏதோ ராகம் பாடும்- - பூ ஒன்றின் இதழெடுத்து பொட்டிடு தோழி- - பொன்மாலையதன் வண்ணம் அள்ளிவந்து வாயிலை அலங்கரி! இராவென்ன பகல் என்ன சொல்லு? நீ இரவுக்குள் பகலாகி நில்லு! மழையென்ன வெய்யில் என்ன -சீ போ! வாழ்வென்ன பலமுறை வருமா? உந்தன் வாழ்வு முடிந்து போனால் -பூமி அதை உனக்கு திருப்பி தருமா? வானத்தை பாரடி தோழி- நீல நிறத்தை கரைத்தூத்தியங்கே நிலவுக்குள் பின்னால் சென்று ஒழிந்து கொண்டதாரடி? வானம் குடைபிடிக்கிறது பார்-பார்! அதன்கீழ் எனக்காய் நானொருமுறை - உனக்காய் நீ ஒருமுறை- - வாழ்ந்து பார்ப்போமே?- வா வா! வரைமுறையென்ற தாலிகட்ட பிறர்யார்? உந்தன் வாழ்வதற்க்கு வேலி போட அவர் யார்? புன்னகைக்க…

    • 6 replies
    • 2.3k views
  22. என் இதயக் கோயிலுள் தெய்வம் நீயே! என் இதயத்தை எடுத்துக் கொண்டவனும் நீயே! காதலுக்கு வரைவிலக்கணம் தந்தவனும் நீயே! காதலுக்கு வழிகாட்டியவனும் நீயே! என் வாழ்க்கையை உணர்ந்தவன் நீயே! என் வாழ்க்கைத் துணைவனும் நீயே! நான் காதலிக்கும் ஒருத்தனும் நீயே! எனக்காக பிறந்தவனும் நீயே! :P :P

    • 13 replies
    • 2.5k views
  23. ஈழ மண்ணினதும் மக்களினதும் விடுதலைக்காகக் களத்தில் நின்று புரட்சிக்கனல் கக்கிய அந்த மாபெரும் கவிஞனை சும்மா புதுவையென்றாலே தமிழ்த் தேசியவாதிகள் யாவருமறிவர். 2009 இலிருந்து காணாமற்போனோர் பட்டியலில் சேர்க்கப்பட்டுவிட்ட அக்கவிஞனை முகநூலில் சிலர் இன்று நினைவு கூர்ந்ததால் அவரைப் பற்றி முன்பொருகால் நானெழுதிய இந்தக் கவிதையை இங்கு பதிவிடுகிறேன். தணலை மூட்டிய தமிழ்க் கவி வாணன் புதுவையென்னும் புகழுக்குரியவன் புனிதவேள்விக் கவிகளியற்றுவோன் எதுகை மோனை இலக்கணச் சாத்திரம் எதிலுங் கட்டுப் படாதவன் ஆயினும் வதுவை செய்து கவிமகள் தன்னையே வாழ்வு முற்றும் அவட்கென வாழ்ந்தவன் மதுவைத் தன்றன் தமிழிற் கலந்தனன் மாந்தி வீழ்ந்து மயங்கினர் ஆயிரம். அகவை ஐம்பது ஆ…

    • 3 replies
    • 1.3k views
  24. Started by இலக்கியன்,

    உன் முகம் காணாது என் மனம் வாடுதம்மா கண்களின் ஈரம் அது என்னை நனைக்குதம்மா உன் இமைகள் மூடுகையில் என் கண்கள் ஏங்குதம்மா பாசக் கயிற்றினாலே என் இதயம் நோகுதம்மா உன் குரல் கேட்கையிலே என் உள்ளம் ஆறுதம்மா வாழ்க்கையின் வழியில் முள்கள் குற்றுதம்மா வலியின் நோவுகள் இங்கு உன் நினைவு ஆற்றுதம்மா

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.