கவிதைப் பூங்காடு
கவிதைகள் | பாடல் வரிகள்
கவிதைப் பூங்காடு பகுதியில் கள உறுப்பினரல்லாதோரின் கவிதைகள், கவிதை மொழியாக்கம், உலகக் கவிதை, பாடல் வரிகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள உறுப்பினர்கள் அல்லாதவர்களின் கவிதைகள், கவிதை மொழியாக்கங்கள், பாடல் வரிகள் போன்றன மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
ஈழத்தை சேர்ந்த, பூர்வீகமாகக் கொண்டவர்களின் படைப்புக்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படவேண்டும். ஏனைய கவிதைகள் தரமான கவிதைகளை அறிமுகம் செய்யும் நோக்கில் இலக்கிய மின் இதழ்களில் இருந்து மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
5129 topics in this forum
-
ஆக்கிரமிப்பு நிலங்கள் .... மீளளிப்பு செய்யப்படுகின்றன .... ஆவலுடன் சென்ற மக்களின் ... திகைப்பும் திண்டாட்டமும் ..!!! எது என் குடியிருப்பு ...? எது எங்கள் சுடுகாடு ...?
-
- 1 reply
- 579 views
-
-
-
அசையாத திலீபன்களும் அன்னை பூபதிகளும் கவிதை - இளங்கவி குட்டித் திலீபன்களாய் எங்கள் குமரர்கள் வீதியிலே கட்டிவத்தி விட்டதையா காளை இரத்தம் அவர் உடம்பினிலே..... அன்னை பூபதியாய் எங்கள் அம்மாக்கள் தெருக்களிலே அகிம்சை போராட்டம் குளிரிலே அமைத்த அந்தக் குடிலினிலே..... கொண்டகொள்கை மாறாது தங்கள் உயிர் பாராது தமிழினத்தின் விடியலுக்காய் தான் எரியும் மெழுகுகளாய் தங்கள் உடலெல்லாம் கசங்க கண்களும் பார்வை மங்க நீர்த்துளிகள் சிலகண்டாலும் நெல்லரிசி காணாமல் தமிழர் விடியலுக்காய் பல உயிர்கள் வேள்விகள் நடத்துகின்றார்...... பரமேஸ்வரன் இன்றும் மரணத்தை பார்த்தவண்ணம் நடக்கின்றான் பாதையது தவறாமல் தன் லட்சியத்தை தொடர்கின்றான் வேதனை வி…
-
- 0 replies
- 578 views
-
-
வேண்டாம் நண்பா விட்டுவிடு ...! விபரன் இனி நாம் சகோதரத்துவத்துடன் வாழலாம் எனவும், பிரச்சனைகள் எல்லாமே தீர்ந்து விட்டதாகவும்... நீயே முடிவு செய்கிறாய்...!! உனது தலதாவிலும், தலை நகரிலும், குண்டுகள் வெடித்ததையும்; தசாப்தங்கள் கடந்தும் மறக்கவியலாத நீ, எல்லாவற்றையும் மன்னித்ததாக… இப்போ பெருந்தன்மையுடன் எனது தோழிலே கை போடுகிறாய்..! உன்னுள்ளே பெருமைப்பட்டும் கொள்கிறாய்..!! தாலி... இன்னமும் சிங்களச்சிறைகளுக்குள் அடகு வைத்த தமது தாலிகளை மீட்க வேண்டி வீதிகளிலே பல பெண்கள் திரிவதை பார்த்தாயா..? அவர்கள் திருமணம் செய்ததெல்லாம் மனைவியாக வாழவே அன்றி விதவையாக மாழ்வதற்கல்ல.. உயர் பாதுகாப்பு வலயம்... உனது சுற்றுலா வண்டிகள் கவனித்திருக்க கூட…
-
- 0 replies
- 577 views
-
-
குறிப்பு: இக்கவிதை நான் வாசிக்கும் போது ஈழ மக்களின் அழிவும் அண்டைய தேசத்து அரசியல் "பருந்து/கழுகுகளுமே" என் கண்ணுக்கு புலப்பட்டார்கள் பருந்து உங்கள் சின்னஞ் சிறிய வயதிலாவது பார்த்து அனுபவித்திருக்கிறீர்களா, பருந்து ஒன்று கோழிக் குஞ்சொன்றை அடித்துச் சென்ற காட்சியை? அதன் கூர்மையான நகங்களால் உங்கள் முகம் குருதி காணப் பிராண்டப் பட்டதுபோல் உணர்ந்திருக்கிறீர்களா? பறவை இனத்திற் பிறந்தாலும் விண்ணிற் பறக்க இயலாது குப்பை கிண்டித் திரியும் அதனை துடிக்கத் துடிக்க ஓர் உயரத்திற்கு அழைத்துச் சென்ற அந்தக் காட்சி! அக் குஞ்சோடு குஞ்சாய் மரித்து அப் பருந்தோடு பருந்தாய் பறந்து திரிந்திருக்கிறீர்களா பாதையில்லா வானத்தில்? குப்பைகளை ஆங்கே நெளியும் புழுக்களை கோழிக…
-
- 0 replies
- 577 views
-
-
-
விடிவைத் தேடிப் பாதளக் குழிக்குள் முடிவை நாடிச் செல்வது போல் ஏதுமில்லா மாகாண சபை போதுமென்பார் இருக்கையிலே தமிழிங்கு வாழு மோடி - தோழி எம் கலையிங்கு தேறு மோடி சூத்திரத் தமிழன் ஆளக்கூடாது எனச் சாத்திரம் பேசிச் சதி செய்யும் ஆத்திர ஆரியர்கள் இங்கிருக்கையில் தமிழ்தான் வளருமோடி தோழி எம் கலைதான் மிளிருமோடி பெருவிளக்காயிருந்து பெருந்தியாகம் புரிந்து எமக்காக அணைந்த மாவீரர்க்கு ஒரு விளக்கேற்ற ஒற்றுமை இல்லாத போது தமிழை வளர விடுவாரோடி தோழி எம் கலையை ஒளிர விடுவாரோடி வந்தாரை வாழவைப்பது பண்பாடடி வந்தேறிய தெலுங்கனையும் கன்னடத்தியையும் ஆளவைத்து அடிமையாய் இருப்பது இளிச்சவாய்த்தனமடி தோழி கையாலாகக் கூட்டமடி நம்மை நாம் ஆள வேண்டுமடி நம் மொழியோடு க…
-
- 4 replies
- 576 views
-
-
Naam TamilarGermany சுமார் ஒரு மணி நேரம் முன்பு · கரும்புலி அடிமுடி அறிய முடியாத அற்புதம்....! கரும்புலி சாவுக்கு தேதிகுறிக்கும் சரித்திரம். கந்தகத்தை மேனியிற் கட்டிய சந்தனம். வீதியுலாவுக்காக வெளியில் வராத விக்கிரம். உயிர்மூச்சை ஊதிவிடும் உன்னதம். அடிமுடியை அறியமுடியாத அற்புதம். தென்றலும், புயலும் சேர்ந்ததான கலவை. இவர்களை எழுதத் தொடங்கினால்… வார்த்தைகள் வறுமை அடையும். உளவியலாளர்கள் உள்ளே புகுந்தாலும் வெறும்கையோடுதான் வெளியே வருவார்கள். கற்பனைக்கவிஞர்கள் கவிதை எழுதினால் அற்புதம் என்பார்கள். அடுத்தவார்த்தை வராது. சித்திரக்காரர்க…
-
- 1 reply
- 576 views
-
-
1947ல் இலங்கையில் சிங்கள ஆதிக்கம் ஏற்பட்டதில் இருந்து இருந்து அதனை நிராகரித்து தமிழ் இன விடுதலைக்காக உயிர்நீத்த சகல கட்சிகளையும் இயக்கங்களையும் சேர்ந்த மாவீரர்களுக்கும் இலங்கைத் தமிழர் சமூக விடுதலைக்காக எழுந்து சாதி சமூக ஏற்றத்தாழ்வுகளை எதிர்த்தும் ஈழத் தமிழ் முஸ்லிம் உறவுக்காகவும் வீழ்ந்த மாவீரர்களுக்கும் எனது அஞ்சலிகள் மருதப் பாட்டு வ.ஐ.ச.ஜெயபாலன் கருகும் நீரில் தலைகீழாக மருத மரங்களும் என் நினைவுகளும் நெளிய சிற்றாறு நடக்கிறது. பறக்கிற குறு மணலோடு பார்வையில் தென்படும் இராணுவத் தடங்கள் கண்ணை உறுத்தியபோதும் போர் ஓசைகள் மவுனித்த துணிச்சலில் பாலியாற்றம் கரையில் இருந்தேன். இருந்தும் என்ன நம் வீர விந்துகள் இன்னும் சிறையில் என்பது நெருடும். தென்…
-
- 0 replies
- 575 views
-
-
எங்களுக்காய் அஞ்சலிப்போம் - நகுலேசன் கண்ணிலே தூசி என்றால் கைகள் வழக்கு வைத்து கூட்டம் வைத்து கடிதம் எழுதி காத்திருப்பதில்லை இங்கோ வாழும் வயதில் உண்ணா நோன்பிருந்து வாழ்வையே தந்தவன் நினைவெழுத மறுத்தவன் வாசலில் காத்திருப்பு இன்று அவகாசமும் முடிந்தது வசதியாய் ,ஒதுக்கமாய் நேர வரையறையுடன் உண்ணா நோன்பு போராட்ட அறை கூவல் கூடவே வழமைபோல் போட்டி போட்டு அறிக்கைக் கூவல் ’மக்கள் புரட்சி வெடிக்கட்டும்’ என்றபடி மறைந்தவனுக்கு முன்னரேயே மரணித்துப் போனோமா… அனுமதி அவசியமில்லை எங்களுக்காய் அஞ்சலிப்போம்! – நகுலேசன் https://vanakkamlondon.com/literature/ilakiya-saral/2020/09/85463/
-
- 0 replies
- 575 views
-
-
சுதந்திரம் என்றால் என்ன? நிஜத்தைப் புரிந்த கவிதைக் குரல் சுதந்திரம் என்றால் என்னவென்பது பற்றி எங்களுக்கு பல பிம்பங்கள் உண்டு. சிதறிய கண்ணாடித் துண்டுகள் என அவை சிதைந்து கிடக்கின்றன. உள்ளத்தில் ஓல ஒலி எழுப்புகின்றன எமது உள்ளத்தின் உணர்வுகளின் வெளிப்பாடாக ஒலிக்கிறது ஒரு குரல் ஆனால் அது தமிழ்க் குரல் அல்ல. சிங்களக் கவிஞனின் குரல். பிரச்சனையின் அடிநாதத்தைப் புரிந்த குரல் பெண்கள் கல்வி ஆய்வு நிறுவனம் வெளியிடும் பிரவாகினி செய்தி மடலில் வெளியான கவிதை இது எழுதியது :- அலோகா ரணசிங்க மொழிபெயர்ப்பு :- மாக்ஸ் பிரபாஹர் சுதந்திரம் கிடைத்தது சோதரா, சுதந்திரம் கிடைத்தது அத்தனை நிலத்தையும் அபகரித்தணைத்திட சுதந்திரம் கிடைத்தது சோதரா சுதந்திரம் கி…
-
- 0 replies
- 575 views
-
-
அன்று கையில் புத்தகமும் கையுமாய் கல்வியும் கண்ணுமாய் அன்னை தந்தை ஆசிரியன் சொற்படிமாய் தமிழ்த் தம்பிமார் இருந்தார்கள் இன்று வாயில் புகையும் தண்ணியுமாய் கையில் கத்தியுமாய் வாளுமாய் கொன்று திரிகிறார்கள் அன்று ஒரு காலம் மேய்ப்பவன் ஒருவன் இருந்தான் ஏன் என்று கேட்க அங்கு ஒரு ஒழுங்கு இருந்தது அமைதி பேண தமிழருக்காய் ஒரு படை இருந்தது இன்று என்ன இருக்கின்றது இன்று எவரும் இல்லாமல் ஏன் என்று கேட்க தானாய் தம்மையே அழிக்கிறார்கள் தமிழர் தெரிந்து கொள்ளுங்கள் எம்மை ஆக்கிரமித்து இருப்பவனுக்கும் நாம் அழிவது தானே விருப்பம் இனி என்ன தான் மிஞ்சி இருக்கப் போகிறது கஞ்சிக்கு கடைசியில் என்ன செய்வீர் …
-
- 8 replies
- 574 views
-
-
காற்று கொதிக்கிறது நீ மௌனத்தை கரைத்திருக்கிறாய் மரங்களும் ஏரிகளும் கூட எரிந்துபோகலாம் இனி.. ஏன் இந்த இளவேனில் பொழுதில் உன் விழிகள் துயரப் பாடலை கேட்கிறது.. நேற்றைய உறைபனிவிலக்கி, ஒழுகும் கதிர்கள் தரைகளை தழுவுவதைப் பார் வீட்டுக் கூரைகளில், இலைபோர்க்கும் மரங்களில் மின்சாரக்கம்பிகளில் பெயர் தெரியாத பறவைகளின் மகிழ்வைப் பார் நீ புல்லாங்குழல். காற்றை புகவிட மறுக்கிறாய்.. தூசிகளை நிரப்பி பெருமிக் கிடக்கிறாய் அநாதையாகி அலைகிறது நேற்றைய உன் குழலோசை.. நேற்றுக்கும் நாளைக்கும் இடைப்பட்ட பொழுதொன்றை மென்றுவிட்டு போகிறாய்.. எப்போது அசைமீட்கப்போகிறாய்....?
-
- 6 replies
- 574 views
-
-
வன்னிக்காடு வைகாசி - 2013 : நிலாந்தன் வண்ணாத்திப் பூச்சிகள் கதிர்காமத்திற்குப் போகும் வழி. சிறுமஞ்சட் பூப்பரவிய வேட்டைப் பாதை. மடுக்காட்டில் வீரை பழுத்திருக்கும். முழங்காவிற் காட்டில் பாலை பழுத்திருக்கும். முறிப்புக்காட்டில் கொண்டல் பூத்திருக்கும் பறங்கியாற்றில் வண்ணாத்திப்பூச்சிகள் சிறகாறும் வேட்டைக்காரர்கள் இல்லை வேட்டைப்பாடல்களும் இல்லை காவலரணில் சலித்திருக்கும் சிப்பாயின் கைபேசி அழைப்பிசை மட்டும் இடைக்கிடை கேட்கும் காடு **** மார்கழி வன்னி - 2012 காப்பற்சாலை சாம்பலையும் கண்ணீரையும் மூடிக் கம்பளம் விரிக்கப்படுகிறது. தறப்பாள் வீடுகள் மழையில் மிதக்கின்றன. காட்டாறு கைவிடப்பட்ட காவலரண்களை அறுத்துப் பாய்கிறது. உத்தரித்த கிராமங்களிற்கோ உய…
-
- 1 reply
- 574 views
-
-
கண்ணே உன் முத்தமும் அரபு வசந்தம் போலடி [size=3] என் இதயத்தை ஆக்கிரமித்ததால் கண்களால் கைது செய்ததால் நினைவில் சித்திரவதை செய்வதால் பெண்ணே நீயும் கொடும் படை போலடி உடலெங்கும் பெரும் கிளர்ச்சி செய்த்தால் உணர்விலே கொடும் தீப்பற்ற வைத்ததால் இதயத்தில் ஆட்சி மாற்றம் ஏற்படுத்தியதால் கண்ணே உன் முத்தமும் அரபு வசந்தம் போலடி எட்டா விலையில் இருப்பதால் தடவலால் ஊக்கம் பெறுவதால் தகவல் பரிமாற்றம் செய்வதால் பலான பெண்ணே நீயும் ஐ-பாட் போலடி வன்பொருளும் மென்பொருளுமிருப்பதால் என்பொருள் முடிவடையச் செய்வதால் என் நேரத்தை என்றும் இழுத்தடிப்பதால் பெண்ணே நீயும் கணனி போலடி[/size][size=3] Posted by வேல் தர்மா at 02:18 Thanks: http://velthar…
-
- 1 reply
- 574 views
-
-
சிசிர சிறிபத்தன -உன்னால் தேச அறிவு பண்பாடு கேலிக்குள்ளானது; பேராசிரியர் பெருமையும் கேள்விக்குள்ளானது திலீபன் அஞ்சலி மறுப்பை எதிர்த்த தமிழர் போராட்ட பொருளறியாமல் ’தமிழர் வணிகம் புறக்கணி’ என்றாயே.! இனவாத வணிகனாய் போன அலோபதி வைத்திய பீடாதிபதியே.. இன வாத அரசின் பிச்சைப் பதவிகளுக்காகவா இந்தளவுக்கு இழிந்து போனாய்.? இந்த நாட்டின் இனவாத நோய் இந்தளவுக்கு முற்றிப் போனதா.? https://vanakkamlondon.com/literature/ilakiya-saral/2020/09/85854/
-
- 0 replies
- 573 views
-
-
ஆதி மனிதன் பேச மொழியற்று ஆடைகள் அற்று திரிந்த அந்நாளில் எல்லாம் இருந்தன அண்டவெளி அழகாக இருந்தன. பூமி ஆடை கட்டி பூரித்திருந்தது. பச்சை நிறத்தில் பாவாடை, நீல நிறத்தில் மேலாடை பூவாடை கட்டிய பூமி தாய், நீராடையும் கட்டி இருந்தாள். மரங்களை விறகுக்காக வெட்டாத கோடரி பாவனைக்கு வராத காலம் காடுகள் கற்பழிக்க படாது காயங்களின்றி கிடந்தன. குயில்களின் பாட்டை எல்லோரும் கேட்டனர் எவரும் கல்லெடுத்து அடிக்கவில்லை. கந்தக கலப்பில்லாத காற்றும், அமிலமற்ற ஆற்று நீரும் கிருமி நாசினியற்ற கிழங்கு வகையும் பேசா மனிதனை போசித்தன. இயற்கை மாசற்ற மனிதனை உருவாக்கியது. பேச மொழி அற்று இருந்த போதும் மனிதன் சிரித்தான். யானையை வாலில் பிடித்து தூக்கும் வல்லமை அவனுக்கிருந்தது. கூட்டமாக ந…
-
- 0 replies
- 571 views
-
-
http://www.imeem.com/vaseeharan/music/NoO0...yadiyil_vallam/ பாடலைக் கேட்பதற்கு இங்கே அழுத்தவும் பல்லவி தாளையடியில் வள்ளம் எடுத்து தாய்நாட்டை விட்டுப் போகின்றோம் தமிழ் நாட்டின் கரையைத் தேடி உயிரைச் சுமந்து போகின்றோம் நீயொரு வள்ளத்திலே- அடி நானொரு வள்ளத்திலே இந்தக் கடலில் கரைந்து போவோமோ இல்லை கடலைக் கடந்து போவோமோ சரணம்-1 மேற்கில் சாய்ந்த சூரியன்-நாளை எங்கள் கண்ணில் விடியலாம் மேகக் கூந்தல் காற்றில் விரிய எங்கள் மேனியும் சிலிர்க்கலாம் எனக்குத் தெரியும் வெண்ணிலவு அன்பே உனக்கும் தெரியலாம் எனக்குள் எரியும் காதல் நெருப்பை கடல் நீரும் குடிக்கலாம் உப்புக் காற்றின் ஈரம் வந்து காதில் இனிப்பைச் சொல்லுமோ அனலில் வீழ்ந்த எங்கள் …
-
- 0 replies
- 571 views
-
-
ஈழம் எங்கள் தேசம் தமிழ் ஈழம் எங்கள் தேசம் அதை அந்நியன் செய்கிறான் நாசம் பச்சைப் பசேலேன்ற வயற்காடு இன்று பச்சிளம் குழந்தைக்கும் சுடுகாடு வந்தாரை விருந்தோம்பும் புகலிடம் இன்று அந்நியப் படைகளின் உறைவிடம் எல்லாள மன்னனின் கோட்டை இன்று குள்ள நரிகளின் சேட்டை பாட்டன் பூட்டனின் களியாட்டம் இன்று சிங்களப் பேய்களின் வெறியாட்டம் இனியும் பொறுக்குமா எம்மினம் இது கங்கை கொண்ட தமிழினம் ஆற்றில் இரும்பு போல் தாழ மாட்டோம் காற்றில் சருகு போல் வீழ மாட்டோம் ஆற்றில் சருகு போல் மிதந்து நிற்போம் காற்றில் இரும்பு போல் நிலைத்து நிற்போம் நட்போடு வந்தவனை வாழ வைப்போம் நஞ்சோடு வந்தவனை வாளால் முடிப்போம் கையில் எடுப்போம் நெருப்…
-
- 0 replies
- 571 views
-
-
யார் மீட்பாரோ! --------------------- எம்மை அழித்த இன்னொரு ஆமியாய் வந்த சுனாமியே எந்தனை உயிர்களை காவு கொண்டாய்! சாவுகள் சூழ்ந்து சாய்ந்த மனங்களை சாவுகளாலே மீண்டும் சாய்த்தாய்! ஆண்டுகள் கடந்து போகின்ற போதிலும் எம்முடன் வாழ்ந்தவர் நினைவுகள் வாழுமெம்முடன் என்பதை அறிவே அறியுமல்லவா! துயரங்களாலே நிறைந்த வாழ்விலே தோள்கொடுத்த எம் மீட்பரும் இன்றி தொலைகின்ற வாழ்வினை யார் மீட்பாரோ! மீடபராய் யாரும் இல்லாவிடினும் துட்டராயேனும் இல்லாதிருக்கும் நிலையொன்று வேண்டும் நிம்மதிகான வழியொன்றும் வேண்டும் வலிகளைக் கடந்து நிமிர்ந்திட வேண்டும் உலகிலே தமிழினம் நிலைபெற வேண்டும்! சுனாமியில் சாய்ந்த உறவுகள் நினைவோடு கடலிலே மீண்டும் இறங்கியது போல் கரைகளைத் தேடப் புதிய திசைகளைத் தேடுவோம் நாமே!
-
- 0 replies
- 571 views
-
-
காதலின் வடிவங்கள்....... மேல் நாட்டுக் காதலும் நம் நாட்டுக் காதலும்.... ஆர்ப்பரிக்கும் கடலலையில் வேகப்படகில் நின்று விளையாடும் உணர்ச்சியது இந்த மேல் நாட்டுக்காதல் ! அமைதியான ஆற்றினிலே அந்திப் பொழுதினிலே அமைதியாகப் படகுதனில் பயணிக்கும் உணர்ச்சியது நம் நாட்டுக் காதல் ! நெரிசலான கூட்டத்தினில் நகரத்தின் வீதியிலே நிற மின் குமிழின் வெளிச்சத்திலே உலா வரும் உணர்ச்சியது மேல் நாட்டுக்காதல் ! வெண்ணிலவு பார்த்திருக்க வெண் மணலில் கால் பதித்து மின்மினிகள் ரசித்தபடி உலாவரும் உணர்ச்சியது நம் நாட்டுக்காதல் ! வாகனங்கள் சத்தத்திலே இரவில் உறங்கும் உணர்ச்சி அது ! இரவின் நிசப்தத்தில் அமைதியான உறக்கம் …
-
- 0 replies
- 570 views
-
-
உடலிருந்தும் உறவிழந்து அழுகுதே தமிழினம் துயர் துடைக்க யார் வருவார் நீங்கள் இல்லையே தமிழன்னை காத்த மலை ஒன்று சரிந்ததே அன்று உலகத்தில் எம்மை உரைத்த பிறந்தாக வேண்டும் நீங்கள் இன்று !!! (முகநூல்) உலகமெங்கும் ஏற்றுக்கொண்ட ஈழ ராஜ தந்திரி உலகமெங்கும் தமிழரின் உரிமை சொன்ன மந்திரி தழு தழுத்த குரலோடு தர்மம் சொன்ன வாய்மொழி தலைவன் மீது அன்பு கொண்டு அனலில் நின்ற பெரும்புலி எம் தேசம் தந்த பெறுமதி எம் தேசத்தின் குரல் !!!
-
- 0 replies
- 570 views
-
-
[size=3] கவிதை அல்ல...![/size] [size=3] பேப்பரும் ரெடி[/size][size=3] பேனாவும் இருக்கிறது[/size][size=3] நல்ல சாய்வு நாற்காலியில் தான் உள்ளேன்[/size][size=3] பக்கத்தில் சூஸ் இருக்கிறது..![/size] [size=3] இடது பக்கம் சாம்பல் கிண்ணம்[/size][size=3] அதன் அருகில் சிகரெட்[/size][size=3] மற்றும் போத்தல்[/size][size=3] சோடா...தண்ணீர் கூட இருக்கிறது...[/size] [size=3] என்னை சரி செய்து கொண்டு[/size][size=3] துண்டை போர்த்திய படி[/size][size=3] முகட்டை நோக்கிய சிந்தனைகளுடன்[/size][size=3] பிள்ளையார் சுழி கூட போட்டு விட்டேன்...[/size] [size=3] பறவைகளின் இடைவிடாத கூக்குரல்[/size][size=3] காதுகளை துளைக்கும் சிள்வண்டுகள்[/size][size=3] தவளைகளின் க…
-
- 1 reply
- 569 views
-
-
ஆர்கலிவானம் புணர்ச்சி வேட்கையில் தன்னிறம் உழல கார்மேக இதழ்கள் கனைகடலைத் தழுவ கலவிமேவலில் வான் தனைமறந்து மின்னலிசைக்க நறுந்தென்றல் பரவி கலவி வெம்மையகற்ற விண்வெளி இருள்பரப்பி குடைவிரிக்க மோகமிகுதலில் தன்முனைப்பு அறுந்து ஏகாந்த அமைதி நிலவ கனைகடல் அடங்கி விசும்பின் துளிகள் ஏற்க பிரபஞ்சம் எங்கும் புது உயிர்களின் தோற்றம்....... ஆர்கலிவானம் - சத்தத்துடன் முழக்கமிடும் வானம் கனைகடல் - கத்தும் கடல் கலவிமேவலில் - கலவி விருப்பம் விசும்பின் துளிகள் - மழைத்துளிகள்
-
- 1 reply
- 569 views
-
-
உலகினினில் இழிய நாடு சிறீலங்கா - மனித உரிமையை மதியா நாடு சிறீலங்கா ஞாலத்தில் இழிய நாடு சிறீலங்கா - புத்த ஞானத்தை மறந்த நாடு சிறீலங்கா பாரினில் இழிய நாடு சிறீலங்கா -கொலைப் போரினை நாடும் நாடு சிறீலங்கா புவியினில் இழிய நாடு சிறீலங்கா - பல புதைகுழி கொண்ட நாடு சிறீலங்கா வையத்தில் இழிய நாடு சிறீலங்கா - இன வெறியர் வாழும் நாடு சிறீலங்கா அவனியில் இழிய நாடு சிறீலங்கா - சில அரக்கர்கள் ஆளும் நாடு சிறீலங்கா தரணியில் இழிய நாடு சிறீலங்கா -அப்பாவித் தமிழர் சாகும் நாடு சிறீலங்கா http://gkanthan.wordpress.com/index/izhiya-naadu/
-
- 0 replies
- 568 views
-