Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கவிதைப் பூங்காடு

கவிதைகள் | பாடல் வரிகள்

பதிவாளர் கவனத்திற்கு!

கவிதைப் பூங்காடு பகுதியில் கள உறுப்பினரல்லாதோரின் கவிதைகள், கவிதை மொழியாக்கம், உலகக் கவிதை, பாடல் வரிகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் யாழ் கள உறுப்பினர்கள் அல்லாதவர்களின் கவிதைகள், கவிதை மொழியாக்கங்கள், பாடல் வரிகள் போன்றன மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
ஈழத்தை சேர்ந்த, பூர்வீகமாகக் கொண்டவர்களின் படைப்புக்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படவேண்டும். ஏனைய கவிதைகள் தரமான கவிதைகளை அறிமுகம் செய்யும் நோக்கில் இலக்கிய மின் இதழ்களில் இருந்து மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. பிரிய சிநேகிதி, மன்னிப்பாய்...! மெளனத் தவம் கலைத்துச் சகுனம் பார்க்காது காதலென்னும் மாய வார்த்தை சொன்னேன்! உள்ளம் மூடி வைக்காது... பள்ளம் விழுந்ததடி உன் பார்வை பட்டென்றேன் நீயும் பட்டென பதில் சொன்னாய் என்னைச் சட்டென வெட்டி விட்டாய் சட்டென தேறிவிட்டேன் வெளியில் சிரித்தவாறு ஆனால் உள்ளம் இன்னும் வலியில் அழுதவாறு வெள்ளமென உவகை தோன்றுதடி உன்னோடு இருக்கும்போது! இதற்குப் பெயர் காதலென்று அர்த்தம் செய்தேன்! கடைசிவரை குற்றம் செய்தேன்! உன் கனவுக் கட்டிட வாசலில் கூட நிற்கத் தகுதியிருக்குமா எனக்கு? நீ நுழைவுத் தேர்வு நடத்தவில்லையே சிநேகிதி... ஆனாலு…

  2. படித்ததில் மனதுக்கு பிடித்திருந்துச்சு, இணைத்துவிட்டேன் எங்கோ பிறந்தோம்! எங்கோ வளர்ந்தோம்! அனைவரும் இங்கே! சந்தித்துக் கொண்டோம்! இதயத்தை நட்பால சிந்தித்துக கொண்டோம்! முகங்களைப் பற்றி யோசித்ததுமில்லை! இனம் பணம் பார்த்து நேசித்ததுமில்லை! எதிர் பார்ப்புகள் எதுவுமில்லை! ஏமாற்றங்கள் சிறிதுமில்லை! அவரவர் கருத்துக்களை இடம் மாற்றிக்க கொள்வோம்! பாரட்டுக்களை பரிமாறிக்க கொள்வோம் ! சின்ன‌ சின்ன‌ ச‌ண்டைக‌ள் இடுவோம் சீக்கிர‌த்திலேயே ச‌மாதான‌த்திற்கு வ‌ருவோம்! கவலைகளை கிள்ளி எறிவோம்! இலட்சியஙகளை சொல்லி மகிழ்வோம்! நன்மைகள் வளர முயற்சிப்போம்! நட்பால் உயர்ந்து சாதிப்போம்! நன்றி - adhikesan.blogspot.com

  3. உயிர்கள் அற்ற உடல்களோடு உறங்கி இருக்கிறேன் பிணங்கள் எரியும் வெளிச்சத்தில் நிலாரொட்டி உண்டிருக்கிறேன் குண்டு மழைக்குள்ளும் குடையோடு இடம்பெயர்ந்திருக்கிறேன் அசைக்கமுடியாத ஆணிவேரின் உச்சியிலிருந்து சுனாமியால் தப்பியிருக்கிறேன் இருபத்தி நான்கு மாதங்கள் இருட்டறையில் சிவராத்திரி மேளமாய் அடிவாங்கியிருக்கிறேன் பெயர் தெரியாத பனிமலை தேசத்தில் பிணமாய் உருண்டிருக்கிறேன் கைப்பாசை உதவியோடு ஐந்துநாள் பட்டினியை பிச்சை எடுத்து முடித்திருக்கிறேன் விழுந்தால் மீனுக்கு நான் பாய்ந்தால் எனக்கு நான் தெரிந்தும் கப்பல்விட்டு கப்பல் பாய்ந்திருக்கிறேன் ஆனால்..... என்னை மூச்சுவிட்டுக் கொண்டே முயற்சிக்காமல் இருக்கச் சொன்னால் மூ…

  4. Started by nirubhaa,

    முகம் மற்றுமோர் உயிருள்ள கண்ணாடி.. உண்மையும் பேசும் -அதுபோல் பொய்யும் பேசும் ...! அகத்தின் அழகு முகத்தில் என்றார்... அகம்,முகம் அப்படியென்ன இணைப்பு அதற்குள்.? ஒன்று பேசுவதை மற்றொன்று காட்டிக் கொடுக்கிறதே...! முகம் முதலில் ஓர் அறிமுகச் சாதனம் ...¨! முகமே பலசமயம் நம் முகவரியும் ஆகும்..! நினைவின் விம்பங்கள் - பதியப்படும் நிலம் முகம்..! மனம் மகிழ்ந்தால் முகம் ஒளிரும்...! துக்கமானால் அது அழும்...! முன்னால் நிற்பவருடன் பேசுவதா வேண்டாமா , நல்லவரா கெட்டவரா - முகம் தீர்மானிக்கும்...! உள்ளே இருப்பது அன்பா விஷமா ...! முகம் சொல்லும்...! அன்பை சொல்ல சொல் தேவையில்லை - முகமே போதும் நம் எண்ணங்கள் சொல்ல...! விருப்புக்களுக்கு முதலில் சம்மதம் சொல்வதும் - வெறுப்புக்கள…

    • 0 replies
    • 1.4k views
  5. ஆனந்த விகடனில் இந்த வாரம் (26.11.15) "நடு விழா" என்ற எனது கவிதை வெளியாகியுள்ளதை யாழ் களத் தோழர்களுடன் பகிர்ந்து கொள்கிறேன். நடு விழா! என்னைக் கொன்று அழைப்பிதழ் அடித்தார்கள் என்னைக் கொன்று இடம் அமைத்தார்கள் என்னைக் கொன்று மேடை சமைத்தார்கள் என்னைக் கொன்று இருக்கை செய்தார்கள் என்னை நட உன்னை அழைத்தார்கள்! நன்றி: ஆனந்த விகடன்.

  6. திராவிடமா தமிழியமா?

    • 0 replies
    • 982 views
  7. ஓற்றை தீயே ஒற்றை தீயே ஓசையில்லாமல் விழுந்ததேனோ ! பற்றை மனதை வெட்டையாக்கியதேனோ ! கற்றை கற்றையாய் களித்திருந்தேன் காற்றில் கரைத்தெறிந்ததேனோ ! சிப்பியென எனையெண்ணி முத்தொன்றை சேர்க்க முனைந்தேன் முடிவறியுமுன்னே முழுதாய் பறித்தெறிந்தாய் ஓற்றை வெண்ணிலா ஓய்யார உறக்கத்தில் பற்றேதுமின்றி பாவியாய் இருந்ததே ! இமைக்கும் நொடியினுள் இருளாக்கி மறைந்தாய் எனக்குள்ளே என்னை உருக்கி ஏழ்மைக்காதலை வளர்த்து வைத்தேன் காற்றினில் கரைத்து காதலை பறித்தெறிந்தாய் ஓற்றை தீயே ஒற்றை தீயே ஓசையில்லாமல் விழுந்ததேனோ ! பற்றை மனதை வெட்டையாக்கியதேனோ ! கற்றை கற்றையாய் களித்திருந்தேன் காற்றில் கரைத்தெறிந்ததேனோ ! மூன்றெழுத்தே என் மூச்சென்று முடிவாய் வாழ்ந்திருந்தேன் …

    • 4 replies
    • 1.1k views
  8. AI திருட்டு - பஞ்ச பூதங்கள் என்று எனது AI செல்லதிடம் கேட்டபோது அவள் தந்த கவிதை😂 நிலம் எனும் தாய் தன் மார்பில் நம்மை தாங்கி, நீரின் ஓசையில் நம் உணர்வுகள் பாய்ந்து, காற்றின் சுவாசத்தில் நம் சிந்தனைகள் ஓடி, நெருப்பின் வெப்பத்தில் நம் உயிர் ஜொலித்து, ஆகாயத்தின் அமைதியில் நம் ஆன்மா பரவி... பூமியின் உறுதியால் நம் பாதங்கள் நிலைபெற்று, நீரின் நெகிழ்வால் நம் நெஞ்சங்கள் மெலிதாகி, வாயுவின் வேகத்தில் நம் கனவுகள் பறந்து, அக்னியின் ஆற்றலில் நம் ஆழங்கள் வெளிப்பட்டு, ஆகாசத்தின் அகலத்தில் நம் ஆத்மா ஒளிர்ந்தது. இவை ஐந்தும் நம்முள் ஒவ்வொரு நொடியும் இசைபோல் ஒலிக்கின்றன, உறுதி, உணர்வு, இயக்கம், ஒளி, அமைதி — இவை இல்லாமல் உயிர் இல்லை, இவை ஒன்றாகவே நம் ஆன்மாவின் மொழி.

  9. மழை எப்போது எங்கே விழவேண்டும் என்பதை தீர்மானிப்பது காற்று எதிரியே நீ எதுவரை வரவேண்டும் எங்கே விழவேண்டும் என்பதை தீர்மானிப்பவர்கள் விடுதலைப் புலிகள் புலிகள் முன் நகராது இருக்கும் வரைதான் வெற்றிக்களிப்பில் கர்ஜனை செய்வீர்கள் பொன்சேகா படைகளே ஒன்றன் பின் ஒன்றாய் ஏவுங்கள் எறிகணைகளை பறந்து வந்து போடுங்கள் குண்டுகளை பொறுத்துக் கொள்கின்றோம் எமது தேசத்தின் அமைதி குலைத்த சிங்களமே… எங்கள் தலைவனின் மௌனம் கலையும்போது வதைபடுவாய் பொறுத்துக்கொள்… எதிரியே உன் தளத்தில் வந்து நின்றவாறு புலிகள் ஏவும் உனது எறிகணைகள் உன் தலையில் வீழ்ந்து வெடிக்கும் என்பதைக் கருத்தில்க்1கொள் குதித்து வ…

  10. கல்மடுக்குளத்தில் காத்திருந்த கண்ணீர் கண்களிலே அடக்கி வைத்த தமிழனின் கண்ணீர் கல்மடுக் குளமாய் உடைந்து ஓடுகிறது. குண்டு மழை கிழித்த உயிர்களின் நெடுநாள் சாபமாய் இதய நெருப்பு அங்கே எரிமலையாய் எரிகிறது எம் தேசத்தைப் போல அதிர்ந்து போய் உலகத் தெருக்களில் நமது வாழ்க்கையும் நடக்கிறது அடி வயிறு வெடிக்க ஐயோ என்று கத்தும் தாய் ஐந்து வயதுப் பிள்ளையை துண்டு துண்டாய் தேடுகிறாள் விலங்குகளின் கைகளில் வில்லான ஏவுகணை எல்லா நாடுகளின் ஒப்பந்தமாய் பொழிகிறது முந்நூறு தமிழர் பலி பலநூறு பேர் படுகாயம் பாதுகாப்பு வலயத்தை பீரங்கி கேலி செய்கிறது. புதுக்குடியிருப்பின் புன்னகை சுதந்திரபுரச் சந்தியில் உடையார் கட்டாகி வல்லிபுன…

  11. தீரமும் துயரமும் தோய்ந்த திருநாடு (சிறுவன்) ஆடடா கண்ணா அதற்கு நான் பாடுறேன் அம்மா சோச்சி ஆறிபோச்சேயென் றோடிப்போன காலம் போச்சு ஆனதென்ன ஆகாததென்னென் றாராஞ்சு பார்க்க நேரமாச்சு. (எல்லோரும்) ஆடடா கண்ணா........ (சிறுவன்) அப்பாக்கும் துணிசல் இருக்கு பலே பலே அவர் அநியாயத்தை எதிர்த்திருக்கார் கூறே கூறே சிங்களது சேகுலரை திருப்பி அனுப்பி செந்தமிழில் வரையுமென்று செப்பி நிற்க கோபம் கொண்ட கூலிகள் குழிபறித்து கோள் சொல்லி கொள்ளி வைச்சு வேலை தள்ள வேலை இன்றி வீடு வந்தார் எங்கள் அப்பா (எல்லோரும்) வேலை இன்றி வீடு வந்தார் எங்கள் அப்பா வேலை இன்றி வீடு வந்தார் எங்கள் அப்பா (சிறுவன்) சிங்களமே வெளியேறு செந்தமிழ் நாட்டால் செய்யாட்டில் செய்ய வ…

  12. Started by nunavilan,

    கள்ளத்தோணி இம்முறையும் குழந்தையை நாங்கள்தான் கொன்றோம் ஏனெனில் அவனுக்கென்று எம்மிடம் எதுவுமில்லை மூன்று வயதுச் சிறுவனொருவனுக்கு ஆழ்கடலில் என்ன வேலையென நீங்கள் கேட்கக்கூடும்? அவன் தன் தந்தையைச் தேடிச்சென்றான் தந்தை எதற்காகச் சென்றார்? யாருக்கும் இங்கு ஒன்றுமில்லையே அதனால் அக்குழந்தையை நாம்தான் பேர்த் நகருக்குச் செல்லுமாறு துரத்தினோம் தந்தைக்கு கொடுப்பற்காக நெடுநாளாக வைத்திருந்த முத்தங்களைத் தவிர அவன் எதையும் எடுத்துச்செல்வில்லை கடலில் இறங்கிய பொழுது முன்னால் எதிர்கரையும் மரணமும் மிதந்தது எனினும் அவன் சென்றான் ஏனெனில் அவனுக்கென்று நிலம்தான் இல்லையே …

  13. எம் தேசம் மீட்டெடுத்தே... ------------------------- உலகின் கண் திறக்க உயிரை விதையாக்கி பெரும் சபதம் எடுத்தவரே மரணம் வருகையிலும் தமிழர் வாழ்கவென உரைத்தவரே உம் பாதம் தொழக்கூட அருகதையற்றோனாய் அன்னியத் தெருக்களில் அலையும் நிலையினிலும் உங்களை மறவோமே! தலைவன் வாழுமிடம் தமது இருப்பிடமாம் என்று அணியம் செய்தவரே பெரும் மனிதப் புதிர்கள் ஐயா மானம் மண் மீட்பில் என வாழ்ந்த தமிழ் மானிடரே உங்கள் பாதம் தொழுகின்றோம்! எமக்கும் சேர்த்தே நீவிர் ஒரு தேசம் படைக்கவென உயிர் தானம் செய்தீரே உமைச் சுமக்க முடியவில்லை! உம் நினைவைச் சுமந்தபடி எம் தேசம் மீட்பதென உறுதி எடுக்கின்றோம்! வலியின் துயர் சுமந்து உம் நினைவின் கருச்சுமந்து எம் தேசம் மீட்ட…

  14. உயிரில் உள்ள ஒவ்வோர் அணுவும் வலியால் துடிக்க வாடும் எனக்கு- உதவிட இந்த உலகினில் யாருளர்...? நெஞ்சம் முழுதும் நிறைந்த சோகம்... கொஞ்ச மேனும் கருணை கொண்டு- உதவிட இந்த உலகினில் யாருளர்...? பெற்றார் இன்றிப் பிள்ளைகள் இன்றி உற்றார் இன்றி உழலும் எனக்கு- உதவிட இந்த உலகினில் யாருளர்...? நாளும் பட்டினி.. நாளையும் பட்டினி.. வீழும் கண்துளி விரல்கொண்டு துடைத்தினி- உதவிட இந்த உலகினில் யாருளர்...? எண்ணற்ற துக்கம்... இடையற்ற துயரம்... கண்ணுற்றுக் கலங்கிக் கடுகியே வந்து- உதவிட இந்த உலகினில் யாருளர்...?

  15. தேநீர் கவிதை: எனக்குள் ஒலிக்கும்கொலுசு தூக்கி எறிந்துவிட்டுப் போ ஒரு புன்னகையை. தூர தேசங்களுக்குப் பயணிக்கிறேன் நான். உன் கூந்தல் இரவில்தான் தேடிக்கொண்டே இருக்கிறேன்... எனக்கான வெளிச்சத்தை. கடந்த காலத்தின் கண்ணீர்த் துளிகளில்தான் நிகழ்காலத்துக்குள் நீந்திக் கொண்டிருக்கிறேன். தனிமை வலைபின்னுகிறது. சிலந்திப் பூச்சியாய்ச் சிக்கித் தவிக்கிறேன். மணலற்ற ஆறாய் வறண்ட வாழ்க்கையில் வந்து வ…

  16. நான் குறும்பன் குரல் கொடுத்த பழைய கவிதைகளை கேட்க விரும்பி சொடுக்கிய போது Not Authorised என வருகிறது. என்ன செய்யலாம்.

    • 6 replies
    • 1.7k views
  17. Started by slgirl,

    பதில் சொல்... காரணம் சொல்ல முடியவில்லையா உன்னால் என்ன இது புது புதிர் போடுகின்றாய்... வேணும் என்று நினைத்த உன் மனம் வேணாம் என்று நினைத்த உன் மனம் நாம் இனி நண்பர்களாய் இருப்போம் என்று நினைத்த உன் மனம் இதேல்லாம் செய்ததும் உன் மனம் ஆனால் இப்போது எதோ சிறுபிள்ளை போல் உனக்கு காரணம் தெரியவில்லை என்று சொல்கிறாயே இது நியாயமா??? உன்னை சொல்லடா என்று அதட்டவில்லை சொல்லாட்டி கதைக்க மாட்டன் என்று சாவால் விடவும் இல்லை சந்திப்புகள் தற்செயலானவை பிரிவுகள் தவிர்க்க முடியாதவை இவை எல்லாம் என் வாழ்வில் நான் அனுபவிக்கும் துன்பங்கள் இதை நான் அனுபவிக்கும் முதல் கட்டதையும் நெருங்கிவிட்டேன் இருந்தும் உன்னிடம் பிரியும் முன் வேண்டுகோள் …

    • 6 replies
    • 1.4k views
  18. உனை வர்ணிக்க....... கண்மணி உனை வர்ணிக்க என்னிடம் வார்த்தைகள் போதவில்லை என்று வானவில்லை நாட்டினேன் வானவில்லின் நிறங்கள் கூட உனை வர்ணனை செய்ய மறுத்துவிட்டதால் தென்றலிடம் நாடினேன் தென்றல் கூட தான் அடிக்கடி சூறாவளியாக மாறுவதால் மறுத்துவிட கடலிடம் சரணடந்தேன் கடல் கூட தான் பல பேரின் உயிரைக் குடித்துவிட்டேன் என்று கவலையோடு உரைத்துவிட நிலவை நாட்டினேன் நிலவு கூட உன் அழகிய வதனம் கண்டு பொறாமையோடு மறைந்து சென்றுவிட அன்பே...அன்பே நான் எதைக்கொண்டு உன்னை வர்ணிக்க..???? ஒன்றே ஒன்று மட்டும் என் மனதில் பிரசவித்த வார்த்தை அம்மணி..... நீ.... என் உயிரினில் பூத்துவிட்ட அ…

  19. "ஊரிக் கிராமத்துக் குழந்தையே! - என்ற கட்டுரை ஏற்படுத்திய தாக்கத்தில் எழுதிய கவிதை இது" -மகாரதி:- பசிதின்னும் பெண்ணின் தேகத்தை கோட்டையில் இருக்கும் வேட்டை நாய்கள் தின்றுத்தீர்க்கின்றன உறங்கடி மகளே தாமரைப் பூவே எருமைகள் மிதித்த சாமந்திப்பூவே எங்கோ சென்று ஓரிடம் நின்று ஓவென்று அழ வேண்டும் எந்த இடம் நமக்கு உண்டு சொல்லடி என் கருகிப்போன தங்கமே "யுத்தகளத்தில் யுத்தகாலத்தில் எல்லாம் சகஜம் சித்தனைப் போல சும்மா இரு அதோ வெண்புறா'' என்பதுதான் இன்றைய ஆத்திச்சூடி கோயில்களில் எல்லாம் யாகம் நெருப்பு பற்ற வில்லை இதோ எங்கள் வயிற்றில் இருந்து எடுத்துக் கொள்ளுங்கள் வேட்டை நாய்களின் நாவுகள் தீண்டிப் பார்க்கும் தேகத்திலே நித்தம் நித்தம் சாவு வந்து முத்தம…

    • 0 replies
    • 650 views
  20. கைவிடப்பட்ட மந்தைகளும், கரணம் போடும் மேய்ப்பர்களும்.... -பிடுங்கி - கோடைஇடியிடித்து வானம் மின்னியது. பூமி நடுங்கியது. கரு நாகங்கள் மேலெழுந்து ஊரத்தொடங்கின!! நரிகள் பிலாக்கணமிட்டழுதன! மந்தைக் கூட்டம் சிதறியது....... எது திசை??? எது போகுமிடம்??? தெரியாது திகைத்தன மந்தைகள். மேய்ப்பர்களின் கையசைவிற்காய் ஏங்கித் தவித்தன அவை. மேய்ப்பர்களைக் காணவில்லை கைவிட மாட்டார்கள். நம்பிக்கையோடு, மேய்ப்பர்களைத்தேடத் தொடங்கின மந்தைகள்!!! வனாந்தரங்களில்..... கட்டாந்தரைகளில்.... முகாம்களில்.... காடுகளில்..... சுடலை வெளிகளில்..... தெருவோரங்களில்...... எங்கு மேய்ப்பர்கள்???,எங்கு மேய்ப்பர்கள்???…

  21. புது உலகம் படைத்திடப் பிறந்தான் -தமிழ் தவத்தால் தலைவன் கிடைத்தான் இவன் விழிகளில் தீப்பொறி பறக்கும்.. பார்க்கும் வழிகளில் தென்றல் நடக்கும் புது உலகம் படைத்திடப் பிறந்தான் -தமிழ் தவத்தால் தலைவன் கிடைத்தான் ஏறென நடக்கிறான் பாரு-பிரபாகரன் இறங்கிப்போவது ஏது இரக்கம் இவனிடமிருக்கும்..எமை ஏளனம் செய்தால் கொதிக்கும்.. ஒழுக்கம் சொல்லித் தந்தான்.. உலகே வியந்து பார்க்க படைகள் பலவும் செய்தான்.. பகைகள் தொடைகள் ஆட கடலில் காவியம் படைக்கும் கரிகாலன் படைதான் நிலைக்கும்.. எங்கள் நெஞ்சைக் கொள்ளை கொண்ட ஏக தலைவனம்மா..அவனாயுள் கூட எந்தனாயுள் இன்றே தருவோமம்மா.. புது உலகம் படைத்திடப் பிறந்தான் -தமிழ் தவத்தால் தலைவன் கிடைத்தான் வாழ்வைத் தமிழுக்குத்…

  22. ''கண்ணீர் துடை கலங்காதே.. வைகோ..."" அண்ணனே வைகோ நீ அழுவதா...??? உன் விழியில் நீர் வீழ்வதா...??? நீ சீறும் புலி உன் நெஞ்சில் என்ன வலி....??? உன் கோட்டைக்குள் உளவாழி உனக்கே இன்று வெடி குண்டா...??? ""மூக்கு கண்ணாடிக்கு"" முதுகு சொறிபவன் உன் கட்சிற்குள் ஏன் சவாரி செய்கின்றான்...??? துரத்தவனை தூக்கி எறி முடிந்தால் தூக்கில் மாட்டு.... லஞ்சம் அங்கு லட்சியம் மறக்கிறது வஞ்சம் உனக்கு வம்புக்கு வருகிறது.... துரோக சன்னங்கள் உனை துளையிட பார்கின்றது விடாதே நீ எழு வீழ்த்தவனை.... களம் கண்ட புலி நீ கண்ணீர் வடிப்பதா...??? சீறு சிறுத்தையாய் எழு... நீ மலை உனை என்ன ச…

  23. தமிழா! நீ பேசுவது தமிழா? அன்னையைத் தமிழ்வாயால் 'மம்மி' என்றழைத்தாய்... அழகுக் குழந்தையை 'பேபி' என்றழைத்தாய்... என்னடா, தந்தையை 'டாடி' என்றழைத்தாய்... இன்னுயிர்த் தமிழை கொன்று தொலைத்தாய்... தமிழா! நீ பேசுவது தமிழா? உறவை 'லவ்' என்றாய் உதவாத சேர்க்கை... 'ஒய்ப்' என்றாய் மனைவியை பார் உன்றன் போக்கை... இரவை 'நைட்' என்றாய் விடியாதுன் வாழ்க்கை இனிப்பை 'ஸ்வீட்' என்றாய் அறுத்தெறி நாக்கை... தமிழா! நீ பேசுவது தமிழா? வண்டிக்காரன் கேட்டான் 'லெப்ட்டா? ரைட்டா?' வழக்கறிஞன் கேட்டான் என்ன தம்பி 'பைட்டா?' துண்டுக்காரன் கேட்டான் கூட்டம் 'லேட்டா?' தொலையாதா தமிழ் இப்படிக் கேட்டா? தம…

  24. உட்புகுந்து உயிர் அரிக்கும் வித்தை கற்க வேண்டும் காக்க காக்க என்று கல் மண் புழுதியிலும், பனி உறையும் பாதையிலும் வீசு புயல் மழையினிலும், வேதனையைச் சொன்னபடி, குப்பைக் காடுகள்போல் அந்நியக் கண்கள் சீண்டும் அவமானம் தின்றபடி, வேர் கிழித்த வலி விளம்பி, விம்மி, வெந்துருகி அறியாத தெருவெல்லாம் அலைமோதிக் கிடந்தோமே எவர் வந்து கேட்டார்கள்? எவர் வந்து பார்த்தார்கள்? எவர்தான் எதிரியென்று எமக்குப் புரியவில்லை யார்தான் துரோகியென்று யதார்த்தம் விளங்கவில்லை சிதறுண்டு போனோம் சிதையுண்டும் போனோம் விதை அழுகிப் போனதெனும் இழிநிலை ஆனதைய்யோ... இனம் முடை நாத்தத்தில் உட்கார்ந்து கொண்டதையோ... தாங்க முட…

  25. கோடைத் தாக்குதலில் உதடுகள் உலர்ந்த இலைகளை வாரி யணைத்துக் கொண்டது ஒரு ஆலமரம். பீறிட்ட ஞாபங்கள் ஒன்று சேர மெல்ல கிளைமேல் படர்ந்தேன் ஒரு பாம்புபோல. ஒரு கிளையினுள் நுழைந்த அக்கணமே கண்டேன். அங்கே பல சிற்பங்கள் செதுக்கப் பட்டுக் கொண்டிருந்தன. சிறு வலியோடு தண்டனைகள் நிறைவேற்றப்படுகின்றன. முன்பொருநாள் எனக்கும்.. "நீ யார்? உனக்கு என்ன வேண்டும்?" அதே அதிகாரத் தோரணையில் கேள்வி கேட்கப்பட்டது. என் பதிலை எதிர்பாராது உளியை கையில் எடுத்துக்கொண்டான் என்னையும் செதுக்கிய சிற்பி. நான் ஞாபகங்களுடன் வெளியேறினேன். அன்று அழுத விழிகளுடன் அதே கிளையில் தண்டனை நிறைவேற்றப்பட்டதால்தான் இன்று அழகிய சிற்பமாய் ஆதவனாய் நான்....…

    • 3 replies
    • 1.2k views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.