கவிதைப் பூங்காடு
கவிதைகள் | பாடல் வரிகள்
கவிதைப் பூங்காடு பகுதியில் கள உறுப்பினரல்லாதோரின் கவிதைகள், கவிதை மொழியாக்கம், உலகக் கவிதை, பாடல் வரிகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள உறுப்பினர்கள் அல்லாதவர்களின் கவிதைகள், கவிதை மொழியாக்கங்கள், பாடல் வரிகள் போன்றன மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
ஈழத்தை சேர்ந்த, பூர்வீகமாகக் கொண்டவர்களின் படைப்புக்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படவேண்டும். ஏனைய கவிதைகள் தரமான கவிதைகளை அறிமுகம் செய்யும் நோக்கில் இலக்கிய மின் இதழ்களில் இருந்து மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
5128 topics in this forum
-
தோழனே....!!! நீ எனக்கு நண்பனாக கிடைக்க நான் ஏது தவம் செய்தேனோ? கலகலவென நகைக்கும் வயதில் சலனமில்லாமல் இவ்வளவு சோகமா? உனக்குள் இருக்கும் சோகத்தை எனக்குள் இன்றே புதைத்துவிட்டு கள்ளமின்றிச் சிரித்திட உல்லாச வானில் பறந்திடு உன் இலட்சியங்களை நிறைவேற்ற என்றும் உனக்கு துணையாவேன் இன்றே விரைந்து புறப்படு நன்றே நடக்கும் உன்வாழ்வில் பழையனவற்றை மறந்திடு புதியதை தேடி விரைந்திடு சோகத்தை தூக்கி எறிந்திடு தோழி என் தோளில் தலை சாய்த்திடு ஆயிரம் உறவுகள் தோன்றியும் அன்பில்லையே என சலிக்காதே நட்பைவிட வேறேது இன்பம் நானிருப்பேன் கலங்காதே
-
- 98 replies
- 15.6k views
-
-
மதமதை மதமதை நீயிழிப்பாய் மடமையில் இன்றதை நீ செய்வாய் ஒன்றதை ஒன்றதை நீ மறந்தாய் உன்னிலை மீதிலே நீ உமிழ்ந்தாய்... அறிவுரை அறிவுரையென விரித்தாய்- அந்த அறிவினையதிலே நீ வீழ்ந்தாய் ஊழ்வினை ஊழ்வினை உள்கணக்க வேறென்ன வேறென்ன நீயுரைப்பாய்... இரும்பது மீதிலே ரயிலோடும் இல்லென இல்லென நீயுரைத்தால் உன்னிலை உன்னிலை என்னவென்போம் ஊழ்வினையதுவே மேலே என்போம்... பார்வையிழந்தவர் குருடராவார்- நீ பார்வையுள்ள குருடனானாய் எத்திசை எத்திசை பார்த்திடினும் எல்லாம் உனக்கு இருளதுவே... மெய்யது பொருளது என்னதுவோ மெய்யென நீயானால் சொல்லிடுவாய் வேரது இல்லா மரமேயென்றால்- நீ வேறு கண்டத்து பிறவியாவாய்...
-
- 95 replies
- 10.5k views
-
-
-
- 89 replies
- 12.6k views
-
-
நிலவின் வருகை: ஒரு இரவின் இடையில் உயிரின் கலசம் உடைந்தது உணர்வுகளின் ஆர்ப்பரிப்பின் உச்சத்தில் அவளை இறுகத் தழுவினேன் இறுக்கி அணைத்தேன் முத்தமிடா இடங்களை காதலின் உச்ச வரிகள் நிரப்பிச் சென்றன யுகங்களுக்கு அப்பால் இருந்து கால பைரவன் உயிரின் துளிகளை சுமந்து என்னிடம் தந்தான் என் தேவதையின் காதல் இடைவெளியை அந்த உயிர் துளிகளால் நிரப்பினேன் ஒரு மொட்டின் அசைவை தன்னில் என் தேவதை எனக்குச் சொன்னாள் ஆயிரம் கலவிகள் கடந்த வீரத்தையும் தன் நீந்தலையும் என்னுள் என் ஆண்மை தன்னைப் பற்றி வாய் வலிக்கச் சொன்னது 2 அந்த அறை எனக்கு கருவறை அந்த அறையில் ஒரு உயிரின் வருகைக்காய் காத்திருந்தேன் என் தாய…
-
- 87 replies
- 11.8k views
-
-
அகர வரிசை அடுக்காக்கி அன்பே அமுதே அழகே என்று அடுக்கு மொழி பேசிலேன் அன்னைக்கு அடுத்ததாய் அகத்திலொரு அணியாய் கொண்டேன் அருகிருந்து நீ அன்பு வளர்க்க - இன்று அவதிப்படுகிறேன்..! அழகிய மலராய் அகிலம் வந்தாய் அகத்திலும் வந்தாய் அருகிருக்க மட்டும் அனுமதி மறுக்கிறாய் அன்பான உறவுக்கு அவசரம் ஏனோ அர்த்தமாய் கேள்வி கேட்கிறாய்...! அவலம் இவன் அன்பு தாழ் திறக்க அவதிப்படுவது அறியாயோ அருமலரே....! அன்புக்கும் உண்டோ அடைக்கும் தாழ் அன்று அரிவரியில் அவசரமாய் உச்சரித்தது அர்த்தமாய் இன்று அதிர்கிறது மனத்திடலெங்கும்..! அது கேட்டு அரங்கேறத் துடிக்கிறது அன்பான குருவியதன் அருங்கவி..! அது ஒரு ஜீவகவி …
-
- 87 replies
- 12.4k views
-
-
{சோழன் ஆண்ட தமிழன் வாழ்ந்த பூமியில் கப்பலேறி குடியேற வரும் அரபுத் திமிர்கள்.. பேரீச்சை மரங்கள். ஈழத்தின் கிழக்கின் காத்தான்குடி என்ற ஊர் இன்று முழு முஸ்லீம் கிராமமாகி அரபு வடிவம் எடுக்கிறது} அரபிய மணற்படுக்கையின் அற்புதங்களே ஈச்சை மரத்து வேர்களே.. கூலிகளாய் நாம் அங்கு சிந்திய வியர்வை சிதறிய நீரில் வளர்ந்து பெருத்த திமிர்களே..! எட்ட வளர்ந்து கனி தரும் போது ஒட்டகமாய் தாங்கி நின்று பறித்துப் பெட்டியில் அடைத்து ஏற்றி விட்டு நாம் கூனி விட்டோம்..! எஜமானர்களின் எண்ணெய் காசில் நீரோ நிமிர்ந்து நின்று மினுமினுக்கிறீர்..! விமானம் ஏறி ஆசை கொண்டு அரபுலோகம் வர தங்கை மீது பழிமுடித்து அவள் தலை கொய்தீர்..! நீரோ.. வேரூன்ற கப்பலேறி தமிழீழம் வருகிற…
-
- 82 replies
- 6.3k views
-
-
வாழ்க்கை அழகான வாழ்க்கையது கடவுளின் வரம் அழகுற மாற்றுவது மானிடத்திறம் துன்ப இன்பம் விதியின் திடம் நம்பிக்கைதான் வாழ்க்கையின் பலம் அன்பான மனைவி குழந்தை வாழ்க்கையில் சுகம் ஆனால் பணமே தேடுவது மானிட மனம் கடவுள்தான் வாழ்க்கையின் மூலம் இதை மறந்தால் நாமெல்லாம் மடம் காதல் பிரிவு காயானது கனியாகும் வேளைதனில் கருவண்டு துளைத்தால் போல் - என்மனது ஏங்குகிறேன் உன் நினைவால் ஒருமுறை தான் பேசிவிடு - - என்னோடு நண்பர்களே உங்களிடம் இருக்கும் இப்படியான குறுங்கவிதைகளை…
-
- 80 replies
- 8.8k views
-
-
தந்து விடு.....!!! (01) என்னவனே என்னவனே என்னருகில் வந்து விடு.... உன் உள்ளமதில் குந்திவிட எனக்கு இடம் தந்து விடு.... உந்தன் கொஞ்சு மொழி வார்த்தை எல்லாம் கொட்டி வந்து தந்து விடு.... நான் கண்ணு மூடி உறங்கி விட கண்ணாளனே தந்து விடு.....!!! விட்டு விடு.....!!! (02) மங்கையவள் கவிதைகளை மணமில்லை என்றவனே..... அவள் சொர்ப்பணத்து வரிகளையே சொர்கம் இல்லை என்றவனே.... கிணத்து தவளை என்றவரை கிண்டலடிக்க வந்தவரே.... உந்தனுக்கு கவி தெரிந்தால் வந்துயிங்கு பாடி விடு... பெண்ணவளை கிண்டலடிக்கும் வேலைதனை விட்டு விடு....!!! இறந்து விடுகிறேன்....!!! (03) உன் இ…
-
- 78 replies
- 7.3k views
-
-
இரண்டு ஈர உதடுகள் என்னை முத்தமிட்டு நீங்கின ஒன்றில் பொத்தி வைத்த காதலும் வெளிப்படுத்தி வெளிப்படுத்தி அடங்கா(த) காமமும் நிறைந்து இருந்தன இன்னொன்றில் வெள்ளை நிறத்தில் அன்பு இருந்தது "இவன் என் அப்பா" என கட்டிப் பிடித்து இறுக்கி சிரிக்கும் சின்னச் சிறுக்கியின் பாசம் இருந்தது இரண்டு முத்தங்களிலும் என் வாழ்வு தொங்கி நின்றது ******** அவர்களை அனுப்பிவிட்டு வீடு செல்கின்றேன் வாசல் திறக்கும் போது சூனியம் அப்பிக் கொள்கின்றது கட்டிலும், தொட்டிலும் சோபாவும், சட்டியும் முட்டியும், முட்டை பொரித்த பின் எஞ்சிப் போன தாச்சியும் சிந்தப் பட்ட ஒரு சொட்டு எண்ணெயும், என்னவள் கழட்டிப் போட்ட பனிச் சப்பாத்தும் என்…
-
- 77 replies
- 18.4k views
-
-
வணக்கம் சகோதரரே சிறிலங்காவிற்குச் சுதந்திரம் கிடைச்சதிலை இருந்து நாங்கள் படுற பாட்டை ஒரு கவிதையா எழுதுவம் எண்டு வெளிக்கிட்டனான். ஒரேயடியா எழுதினா நீங்களெல்லாம் கூடிப் போச்சுது எண்டு சண்டைக்கு வருவியள் எண்டபடியாலை கொஞ்சம் கொஞ்சமா எழுதுறன். நல்ல பிள்ளைகள் மாதிரி வாசிச்சுப் போட்டு உங்கடை கருத்துக்களைக் கட்டாயம் எழுதுங்கோ. அப்ப தானே எனக்கும் உசார் வரும். (அடுத்த பாகம் எழுதினதும் தலையங்கத்தை நான் இரண்டாம் பாகம் எண்டு மாத்திறன் . அப்ப உங்களுக்கு வாசிக்க லேசா இருக்கும். வரலாற்றை மறப்போமா? (முதலாம் பாகம்) போர் ஓய்ந்து விட்டதனால் போராட்டம் முடிந்ததென்று புளகாங்கிதம் கொண்ட புதல்வர்களே கேட்டிடுவீர் சாமான்கள் போவதனால் சமாதானம் வந்ததென்று சந்த…
-
- 74 replies
- 8.9k views
-
-
தயங்கு, இயங்கு, முயங்கு, மயங்கு, தழுவும் சேலை முகட்டில் விம்மி விழட்டும் அதுவரை தயங்கு. பருவச் சிலிர்ப்பில் கனியிதழ் கவ்வி உணர்வினைக் கிளறி இயங்கு. குறி நகம் பதித்து குவித்து அணைத்து கொஞ்சிக் கெஞ்சி முயங்கு. உருகிய பனித்துளி உயிருக்குள் இணைந்ததும் இணையின் அணைவில் மயங்கு.
-
- 72 replies
- 13.5k views
-
-
எல்லாமே ... கடந்துபோகும் .... நீ மட்டும் ... விதிவிலக்கா ....? ஆயிரம் காலத்து .... பயிர் -திருமணம் .... காதலின் ஆயிரம் .... நினைவுகளை .... கொன்று நிறைவேறும் ...!!! வாழ்க்கை ஒரு .... நாடக மேடை .... காதலர் .... விட்டில் பூச்சிகள் ....!!! ^ முள்ளில் மலர்ந்த பூக்கள் கஸல் கவிதை K இ K A 00 A
-
- 70 replies
- 10.9k views
-
-
இட்ட முட்டை சுடுகிறது எடுத்து சென்றாள் கருவுற்ற பெண் ஏக்கத்தோடு பார்த்தது கோழி @ கடத்தல்காரன் கையில் பணம் வன அதிகாரிகள் பாராமுகம் ஓடமுடியாமல் தவிர்க்கும் மரம் @ காடழிப்பு ஆற்று நீர் ஆவியானது புலம்பெயரும் அகதியானது கொக்கு @
-
- 70 replies
- 17.2k views
-
-
விழவிழ எழுதிய வீரவணக்கம் என்னவானது ? விழவிழ நீங்கள் வீரவணக்கம் எழுதினோம் நாங்கள். அழஅழக் கவிதையும் ஆறாத்துயர் நிறையக் கண்ணீருமாய் கடைசிச் சொட்டு வீழ்ந்து காயும் வரையுமாய் நினைவள்ளி நினைவள்ளி நீண்ட தூரமெங்கும் நெருப்பு மூட்டினோம். இழந்தவை யாவையும் எழுகையும் நிமிர்வும் என்றெம் எழுத்துகள் யாவிலும் எழுதியே அழிந்தோம். பரணி பாடினோம் பாவினால் உங்களைப் பரவசப்படுத்தியும் பாடையின் முன்னின்று போர் முரசு கொட்டியும் சோடித்து மறைத்துச் சுதந்திரம் பாடினோம். ஈரம் சொட்டச் சொட்ட நீங்கள் சிந்திய குருதியில் எழுதினோம் ஏராளம் ஏராளம்…… கட்டாயங்களை மறைத்து அவை கட்டாயமென்று எழுதினோம்…. காதல் வாழ்வு குழந்தைகள் உறவு முழுவதும் காப்பரண் தேட…
-
- 70 replies
- 9.3k views
-
-
வணக்கம் நண்பர்களே! இது ' வேங்கையன் பூங்கொடி" எனும் காவியம் பற்றிய உங்கள் கருத்துக்களைப் பதிவு செய்யும் பகுதி.
-
- 70 replies
- 11.5k views
-
-
-
நீ ... தந்த ... வலிகளை தாங்கும் .... சக்தி எனக்கில்லை .... நீ தந்த வலிகள் .... என்னவென்று என் .... கவிதைகள் சொல்லும் ....!!! ஒன்று .... மட்டும் செய்துவிடாதே .... நான் தனியே இருந்து .... அழுவதுபோல் நீயும் ... அழுதுவிடாதே - என்னை .... ஆறுதல் படுத்த கவிதை ... எப்போதும் இருக்கும் .... உன்னை ஆறுதல் படுத்த .... என்னை தவிர யாருமில்லை ....!!! ^^^ வலிக்கும் இதயத்தின் கவிதை கவிப்புயல் இனியவன்
-
- 67 replies
- 90.4k views
-
-
நான் கண்டது என்ன கனவா கனவா.. கன்னி அவள் கண்கள் எனைத் தீண்டியது என்ன நனவா நனவா..! பாதைகள் ஆயிரம் இருக்க பக்கம் வந்து முட்டிப் போனது என்ன முட்டுமுட்டு பாடலின் விளைவா விளைவா..! பார்வைகள் பரிமாறி மெளன மொழி பேசியது என்ன நாட்டியமா நாடகமா..! கருங் கூந்தல் பரப்பிய அவள் முதுகு என்ன சந்தனம் பரப்பிய அம்மிக் கல்லா கல்லா என் கண்கள் என்ன அதில் உருளும் அம்மிக் குழவியா குழவியா..! காற்றிலாடும் சுடிதார் என்ன சாமிக்கு வீசும் சாமரமா இந்த ஆசாமி அந்தப் புயலில் சிக்கிச் சிதைந்தது என்ன விதியா சதியா..!! முடிவாய் என்ன கண்களுக்குள் சிக்கி மூளையில் பதிவானது அவள் நினைவா நினைவா அதன் தவிப்பில் இவன் கமராவை நோண்டுவது என்ன தலை விதியா விதியா..! இதன் பெயர்தான் …
-
- 67 replies
- 7.5k views
-
-
ஒளிமிளிர்ந்து நடனமாடிய உன்கண்களை முதல் முதலில் சந்தித்தபோது என் இதயத்தில் வாள் உருவியது போல் ஒரு வலி உணர்ந்தேன்... பட்டாம் பூச்சியாகப் பறந்து திரியும் உன்னை காதல் என்ற குறுகிய வட்டத்தினுள் அடைக்க மனமில்லை அருகில் பறக்கும் உன்னை விட்டு வேறு திசை நோக்கிப் பறக்கும் மனநிலையும் எனக்கில்லை...! தொந்தரவு செய்வதையே உயிர் மூச்சாகக் கொண்ட இந்த உலகில் யாருக்கும் எந்த இடஞ்சலுமில்லாது தொடர்ந்தே நட்பென்னும் பரந்த வானில் சேர்ந்தே பறக்கலாம் வா...
-
- 64 replies
- 3.6k views
-
-
நீங்கள் இரசித்த பாடலை முழுமையாக எழுதி அந்த பாடலில் உங்களுக்கு பிடித்த வரிகளை அடையாளப்படுத்தி விடுங்கள் உங்களது இரசனைகள் எவ்வாறு இருக்கின்றன பார்க்கலாம் குறிப்பு :உங்கள் அபிப்பிராயங்களைத் தவிர்த்து பாடல் வரிகளை மட்டும் எழுதிவிடுங்கள் முடிந்தால் பாடல் விபரத்தையும் குறிப்பிடவும் இந்த முயற்சிக்கு தயவு செய்து இடையூறாக செயற்பட வேண்டாம் இது எல்லோருக்கும் பயனுள்ளதாக இருக்க வேண்டும் என நினைக்குறேன் . படம்:பூவே உனக்காக பாடியவர்:உன்னிகிருஷ்ணன் நடிகர்:விஜய் இசை: எஸ் எ ராஜ்குமார் வருடம் :1996 ஆனந்தம் ஆனத்தம் பாடும் -மனம் ஆசையில் ஊஞ்சலில் ஆடும் ஆனந்தம் ஆனத்தம் பாடும் -மனம் ஆசையில் ஊஞ்சலில் ஆடும் ஆயிரம் ஆயிரம் காலம் - இந்த ஜாபகப் பூ…
-
- 63 replies
- 112k views
-
-
இப்ப தான் ஏடு தொடங்குறேன்...பிழைகளை மன்னித்து பொருத்தருளவும். நன்றி இனிப்பும் கசப்புமாய் என் காதல் காதலுக்கு பல எதிரிகள் இங்குண்டு மற்றவர்களுக்கு? ஏனோ எனக்கு என் காதலே எதிரியாய் போனதேன்? அன்பாய் தான் இருக்கிறான் அழகாய் தான் எனை ரசிக்கிறான் நிறைவாய் தான் தருகிறான் நிறைமதியாய் எனை தாங்குறான் இருந்தும் எனக்கேனோ நிம்மதியாய் ஒருநாளும் உறங்கமுடியவில்லை.. என்னவனின் அன்பு முகம் இதுவெனில் அவன் அடுத்த முகம்... நண்பர்கள் உனக்கெதுக்கு வேண்டாம் என விட்டுவிட்டேன் நானிருக்க சுற்றம் ஏன் அதை கூட விட்டு விட்டேன் படிப்பெதற்கு, வேலை எதற்கு நான் உன்னை பார்த்துக்கொள்வேன் அவன் மேல் உள்ள அன்பில் அத்தனையும் துறந்துவிட்டேன் கடைசியில் வ…
-
- 60 replies
- 7.6k views
-
-
வவுனியா முகாமிலிருந்து ஒரு சனநாயக தமிழ்கட்சி ஒன்றிடம் பெருந்தொகை பணம் கொடுத்து வெளியே எடுத்து தற்சமயம் இந்தியவில் வந்து தங்கியிருக்கும் போராளியாகவிருந்த எனது சகோதரியிடம் தொலை பேசியில் கதைத்தபின்னர் எழுதியது.. வளைய முட்கம்பிகள் வற்றியொடுங்கிய உடலும் முகமும் வயதையும் வடிவையும் வைத்து விடிய விடிய நடக்கும் விசேட விசாரணைகள் நாளைய பொழுதாவது நன்றாய் விடியாதாவென நாட்களை எண்ணி புரளும் நள்ளிரவென்றில் மப்படித்த சிப்பாயின் கைகள் என்னை தட்டியிழத்துப்போகும் கைத்துவக்கின் அடி கவட்டுத்துவக்கின் இடி கசக்கப்படும் முலைகளில் கடி அடி...இடி...கடி.. அடுத்தடுத்து விசாரித்தில் அடிவயிற்றில்வலி மெல்லப்பெய்த மழையில் மகிழமரத்தில் …
-
- 60 replies
- 7.4k views
-
-
=====> என்னவள் <===== விண்வரை வியாபித்த அன்பில்ஈடு இணையில்லாதவள்... வசந்தங்களால் வசப்படுத்த முடியா தென்றலவள்... தூரிகைகளில் தீட்ட முடியா தீண்டலவள்... ஏழுஸ்வரங்களில் இயற்ற முடியா இசையானவள்... தமிழின் இனிமையை தன்னகத்தே கொண்டவள்... தன்வேர்களை பூமியில் ஆழமாய் பதிந்தவள்... மனச்சிறையின் எல்லைகளை உடைத்து சிறகடித்து பறப்பவள்... காதலிலும் காதலுக்குள்ளும் உள்ளதையெல்லாம் கற்பிப்பவள்... சிறு பொழுதுகளில் நீராய் நிறைந்திருப்பவள் பெரும் பொழுதுகளில் நினைவாய் மலர்ந்திருப்பவள்... விடைபெறாமல் விடைபெறும் கேள்விகளையே தொடுப்பவள்... பின்னிரவின் மென்தூக்கத்தில் மெல்ல என்பெயரை சொல்பவள்... தீ சூரியனிலும் நீர் சம…
-
- 60 replies
- 4.6k views
-
-
ஒட்டி விட்ட ஊரை விட்டு ஓடி வர மனசின்றி.. ஒட்டிய விசா ஸ்ராம் உந்தித் தள்ள பள்ளிப் படிப்பு இழுத்து வர ஓடி வந்த இடத்தில் ஒதுங்க ஓர் இடம்..! மோகன் - யாழ் என்ற உறவுகளின் சிந்தனையில் உதித்த ஓர் தளம். ஆங்கில மேடையில் விதம் விதமாய் அலங்கரிக்க அங்கீகாரம் இருந்தும் அங்கும் எழுந்தது தாய்த் தமிழ் தாகம்..! நட்புக்கள் தம் உறவாடலில் யாழெனும் இணையத் தொடர்பும் பிணைந்து கொள்ள "வைரஸாய் " முதல் நாமம் இட்டு தொற்றிக் கொண்டது இன்னும் பசுமையான நினைவுகளாய். கேடு இன்றி விளையாட்டா "ஹாக் "செய்து யாழின் "கோட்" எடுத்து தமிழ் போறம் செய்து நண்பர்கள் விளையாட.. கூடியிருந்து களித்தமை இன்றும் நினைவதில் ஊஞ்சலாடுது..! யாழின் நெருக்கம் எம் எஸ் என் வழி கை நீட…
-
- 60 replies
- 4.7k views
-
-
உன் ஆதரவாய் நான் இருந்தேன் நீ என் ஆதரவாய் இருந்தாயா?? நம் உறவுக்குள் பல வீழ்ச்சிகள் இருந்தாலும் அதை தாங்கி பிடித்தேன் இருந்தாலும் நமது காதலை தாக்கியது ஒரு சுனாமி அதையும் தாங்கியது என் காதல் ஏன்? நீ என் அருகில் இருந்ததால் வந்த நம்பிக்கை நம் காதலுக்காக எதையும் செய்ய துணிந்தேன் என் துணிவுக்கு தந்தாயடா தண்டனை என்னும் அழகிய பரிசு பாசம் வைப்பது பாவமா??? என் காதல் தப்பாகி போனதோ?? ஏன், இந்த வேசமடா?? உண்மைப் பாசத்துக்கு இந்த உலகில் கண்ணீர் தான் பரிசா????
-
- 59 replies
- 7.5k views
-