Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கவிதைப் பூங்காடு

கவிதைகள் | பாடல் வரிகள்

பதிவாளர் கவனத்திற்கு!

கவிதைப் பூங்காடு பகுதியில் கள உறுப்பினரல்லாதோரின் கவிதைகள், கவிதை மொழியாக்கம், உலகக் கவிதை, பாடல் வரிகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் யாழ் கள உறுப்பினர்கள் அல்லாதவர்களின் கவிதைகள், கவிதை மொழியாக்கங்கள், பாடல் வரிகள் போன்றன மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
ஈழத்தை சேர்ந்த, பூர்வீகமாகக் கொண்டவர்களின் படைப்புக்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படவேண்டும். ஏனைய கவிதைகள் தரமான கவிதைகளை அறிமுகம் செய்யும் நோக்கில் இலக்கிய மின் இதழ்களில் இருந்து மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. கண்ணிலே நீர் இல்லை துடைப்பதற்கு கவிதையிலே பஞ்சம் இல்லை உங்கள் சிற்பத்துக்கு கவிஞனாக உயிர் தந்த உங்கள் அன்புக்கு என்றும் அடிமையாகதான் இருப்பேன் இந்த உறவுக்கு

  2. வெள்ளைக்கொடியெடுத்து விலங்கிடு மறவர் படை வீரத்தை குலுக்க நீழும் கரங்களை குதறி எறி-உன் கொடூரத்தின் பாரம்பரியம் காத்து தமிழச்சி கர்ப்பம்கிழித்து சிசுவினை உருவு-அதன் செந்தளிர் மேனியெங்கும் வாலும் வரிகளும் தேடு-களைத்தபின் கொடுந்தீயின் வாயினில் போடு. வெள்ளைக்கொடி எடுத்து விரலிடுக்கின் குருதி துடை உன்.... விந்தொழுகும் வக்கிரக்கண்கொண்டு வேட்டையாடு குமரியென்ன கிழவியென்ன கிளித்துக்கிளித்து கிணறுகளில் வீசியெறி உலகின் ஊனச்செவிகளில் ஓலம் விழுந்தால் வெள்ளைக்கொடியெடுத்து-அதன் விழிகளில் விட்டு ஆட்டு-பின்னர் தம்மபதம் ஓதி பஞ்சசீலம் பழகு. உன்..... உறக்கம் பறித்தவர் உறங்கும் இடமெங்கும்-அவர் வீ…

  3. கனவும் நினைவும் உன்னால் கனத்து காலமும் நேரமும் போகிறதே உணவும் ஊனும் உந்தன் போக்கை தினமும் நினைத்து வேகிறதே! அடுத்து உன்னில் என்ன மாற்றம் என்ற எண்ணம் என்னுள்ளே தடுக்க முடியாப் பெரும் புயலாக இறுக்கி இழுக்குது தன்னுள்ளே! பொய்கையும் நீயாய் புழுக்கமும் நீயாய் வண்ணம் மாற்றி விரிந்தாயே - என் பொழுதும் நீயாய் கொள்கையும் நீயாய் எண்ணம் முழுதும் பரந்தாயே! செய்தியும் அறியேன் முயற்சியும் நாடேன் மெய்யாய் உன்னில் விழுந்தேனே கைதியும் ஆனேன்நீ சிறையும் ஆனாய் மெய்யும் உருக அமிழ்ந்தேனே! நாளை எப்படி நீவருவாய் என நினைத்து நினைத்து பதைத்தேனே காலை மாலை என வந்தாலும் காலம் நீயென துடித்தேனே! வாரா வாரம் தொடர்ந்து என்னை …

    • 16 replies
    • 2.4k views
  4. நெருப்பு நீ, நீர் நான். சூரியத் தகட்டில் வெப்பந் தணியா நெருப்பு நீ, வா! வந்தனை பூமியை உருட்டு; திரட்டு; என்னோடு இணைந்து பிரட்டு. என்னுள் ஊடுருவி உள் துளை கக்கிய தீயெடுத்து நாக்கிலே குழை. அணை என்னை; அல்லது அணைப்பேன் உன்னை. பிதுக்கி யெடுத்தவாறு பதுங்கி வா! தொடு முத்தமிடு தீ முழுவதுமாய் கக்கு, முடிந்தவரை போராடுகிறேன். சத்தமிடு, மொத்தமும் இடு. இன்னதென அறியாமல் தொடுகிறேன் உன்னை தாக்கு; தேக்கு காதல் ரசங்களை (உன்)ஜுவாலைகளின் வழியே போக்கு. சுவடெரித்து விட்டு திரும்பச் செல்; இல்லயெனில் எனை நீரென்றும் பாராமல் கொல். உடுத்து; படுத்து; உன் கோப வெறிக்கு ஆளாகாத என்னை உன் சாம்பலிலே கிடத்து. அகல விரி விழ…

  5. பாம்பு !! உடைப்பெடுத்த ஆற்றைப் போல் பீறிட்டு எழும் ஆர்பரிப்புடன் என் முன்னே ஆடியது வரிகள் எல்லாம் அதன் தோலாக தோலெல்லாம் அதன் வரிகளாக நெளிந்து நெளிந்து சீறிக் கொண்டே ஆர்ப்பரித்தது இதிகாசங்கள் தம்மை ஏமாற்றிய தவிப்பு ஒரு கண்ணில், ஆயிரம் ஆயிரம் ஆண்டு கடந்தும் மனிதன் மீது மாறா வெஞ்சினம் அதன் மறு கண்ணில் தனக்கும் மனிசனுக்குமான தீர்க்க முடியா கணக்கை பாம்பு சொல்லியது ஒவ்வொரு வரியிலும் மனிதன் பெயர் வரும்போது வெறுப்புடன் துப்பியது பாம்பின் கால்கள் எல்லாம் நியாயம் கேட்டு வரலாறு முழுதும் நடந்து நடந்தே அழிந்து போனதாம்... அதன் காதுகள் மனிதனின் பம்மாத்து வாக்குறுதிகளால் அறுந்து விழுந்ததாம் ஏவாளுக்…

  6. "என்றும் உன் நினைவில் வாழும்" "என்றும் உன் நினைவில் வாழும் ஒன்றும் அறியா குழந்தை இவன் இன்றும் உன் அணைப்பைத் தேடி நின்று கண்ணீர் சொட்டும் மகனிவன்!" "கன்றுகள் நாலா பக்கமும் பிரிந்தாலும் குன்றுகளில் பள்ளங்களில் பயணம் செய்தாலும் வென்று தோற்று வாழ்வைக் கடந்தாலும் ஈன்று எடுத்தவளை என்றும் மறந்ததில்லை!" "ஊன்று கோலாய் அவள் கட்டளைகள் சான்று பகிரும் அவள் வாழ்க்கைகள் மென்று தின்ற அவள் கொள்கைகள் இன்றும் என்றும் எம் இதயத்திலேயே!" [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]

  7. காலைச் சூரியனை கையெடுத்துக் கும்பிட்டு.. மாலைச் சந்திரனை வீழ்ந்து வணங்கி.. சுழன்றடிக்கும் சூறாவளிக்கு பயந்து நடுங்கி... மின்னலும் இடியும் மரணத்தின் தூதென்று ஓடி ஒளித்து.. தீயதும் சுடுவது முன்வினைப் பயனென்றும் பூமியது அதிர்ந்து பிளப்பது பாவிகள் அழிவென்றும் இயற்கைக்குள் உள்ளதை விளங்காமல் உளறிய கணங்களில்.. எதிர்வினை சொல்லி பகுத்தறிவென்று வாய் வீரம் பேசி வீண் பொழுது கழித்திடாமல் ஆயிரம் கதை கட்டி அலைந்து கொண்டிராமல்.. மூளையைக் கசக்கி விண்கலம் கட்டி விண்ணுக்கு அனுப்பி வீர சாதனை படைத்த திருநாள் இன்று..! "புட்னிக்" எனும் மனிதப்பட்சி ரஷ்சிய மண்ணிருந்து விண்ணேகி அரை நூற்றாண்டும் கடந்தாயிற்று. மனித வரலாற்றின் புது …

  8. வலிகளும் வேதனைகளும்... புணர்ந்து பெற்ற மழலை! சொல்லி விளங்காத வரிகளில்... தெரியுமா இவன் செயலை? தூக்கிய ஆயுதம் வைத்து... தூங்கிய பின்னரும் -இவன், கனவில் பேனாதான் வந்து நிற்கும்! ஒரு பேனா முனையின் உயர் அழுத்தம், முற்றுப்புள்ளிதான் வைக்க முடியும்! ஆனால் இவன் கனவுகளிலும்... அதன் முனை அசைவதையே ஆசைப்பட்டான்! இரவெல்லாம் அழுதுமுடித்த... பேனாக்களின் வண்ணக் கண்ணீரில், காகிதத் தலையணைகள்... ஈரமாகிப் பாரமாகின! முதற்பக்கம் இல்லாத புத்தகம் போல், முகமூடிகள் மட்டும் முகப்பானது! பொறுப்பாக பொறுப்பேற்க பொறுப்பற்ற வெறுப்போடு வெறுப்புற்று வெளியேற்ற... இன்னும் நீர் பேதம் பார்த்தால்.... வெறியான எண்ணங்கள் வெளியேற வெறுப்பற்ற வெளிப்படையாய், புரிதல் எ…

    • 9 replies
    • 1.5k views
  9. காலம் இன்னும் கொஞ்சக்காலம் ........ . கதை முடியும் ...ஒரு நாள் மதி கெட்ட கயவர் கூட்டம் ஒன்று புத்தி பேதலித்து கதை பல கூறும் விதி என்று ஓர் இனம் ,கேட்டு, கலங்கி கை கொட்டி சிரிக்கும் போது..... இடி ஒன்று முழங்கும் ,கதி கலங்கி விழி பிதுங்கி , சில பெரிய தலை நோக்கி ஓடும் தலை சொல்லும் வழி ,இனி பலிக்காது புலிபசித்தாலும் ,புல்லை நாடாது ,ஒரு வேளை..........

    • 3 replies
    • 1.5k views
  10. கார்த்திகை ஒளிர்கிறது மலரும் மலர்கிறது கண்ணீர் அரும்பிட கண்களில் படர்ந்தவர் நினைவுகள் மனதில் பெருகிட… மரணம் மண்டியிட மண்ணில் வீழ்ந்தோம் அன்னை மடிமீது அந்நிய ஆதிக்கம்… உயிர் மூச்சு நெருப்பாக்கி உற்ற கடமை செய்தோம்..! உறவுகள் எமக்கு உலகெங்கும்.. உணர்வுகள் எமக்குள்ளும் உயிர் வாழ… உங்கள் உரிமைக்காய் உயிர் கொடுத்தோம்…! உறங்கும் நாள் குறித்தோம் எங்கள் வாழ்வுக்காய் அல்ல… உங்கள் பிஞ்சுகள் உரிமை கொண்டாட தமிழன் நான் "தனித்துவமானவன்" எண்ணங்கள் காத்திடுங்கள்…! இன்னும்… உற்ற அன்னை உள்ளுக்குள் அழுகிறாள்... உருவில்லை என்றாலும் எங்கள் மூச்சுகள் உணருது..! உங்கள் மூச்சொடு இறுதி இலட்சியம் வென்றிடுங்கள் வீணடிக்காது விரைந்து வீர வரலாறு இறுதி அத்தியாயம் எழுத…

  11. ஆடி பாடி திரிந்த குழந்தைகளை நம் நாட்டின் வருங்கால முத்துக்குகளை கொலை வெறி கொண்ட சிங்கள அரசு கொன்று குவிக்குறது எத்தனை குழந்தைகள் ஆனதைகளாய்.. எத்தனை குழந்தைகள் ஊனமாய்.. அலயோசை அடித்து சத்தம் கேட்பது போல் நம் குழந்தைகளின் அலறல் ஓசை உங்கள் காதில் விழ வில்லயா உலக நாடுகளே?

  12. சுட்டெரிக்கும் சூரியனையும் சுட்டெரித்துவிடும் எம் அடிவயிற்றுத் தீ புயற்காற்றையும் விடப் பெரியது உஷ்ணமான எம் பெருமூச்சு சமுத்திரங்களையும் சிறிதாக்கும் எம் கண்ணீரும் செந்நீரும் எம் நெஞ்சின் கொதிப்பு பூகம்பத்தின் நெருப்புக்குழம்பு கடவுளே கடவுளே என்ற எம் கதறல் மரண ஓலங்கள் நாம் விடும் சாபங்கள் இத்தனையும் காத்திருக்கு இனவெறி பிடித்தாடும் இலங்கை கொடுங்கோல் ஆட்சியாளரை தண்டிக்க; ஆனால்.......... அதற்கு எத்தனை காலமெடுக்குமோ கடவுள் நின்று கொல்லட்டும் நான் காத்திருக்கின்றேன் என் தலைவனின் பதிலுக்காய் உயிர்போன குழந்தைக்கு பாலூட்டும் ஒரு அன்னை உயிரற்ற குழந்தையை உயிருள்ள பிள்ளை போல் தோலில்போடும் ஒரு தந்தை உணவின்றி தூக்கமின்றி பதுங்குகுழிய…

    • 1 reply
    • 1.4k views
  13. Started by வர்ணன்,

    எவர் கண்ணிலும் படாத ......... இறைவனுக்கு - இருப்பு.... உண்டென்றால்..... இருப்பவருக்காகவே .. எலாம் இழந்த இவருக்கு... என்ன பரிசு? வாழ்த்தா ? பாராட்டா? வசையா? எது வேண்டுமென்றாலும்.. எவரும் சொல்லட்டும்.. ஒன்று மட்டும்.. சொல்வேன்... இந்த ........ மானம் கெட்ட இனத்தில்... என்று நீ - பிறந்தாயோ..... அன்றே நீ ....... இறந்தாய் - போ ! இனி எதுக்கு வாழ்த்து?

  14. ஒரே வயிற்றில் பிறந்தோம் ஒரே உடுப்பை போட்டோம் ஒரே கோப்பையில் சாப்பிட்டோம் ஒரே படுக்கையில் படுத்தோம் ஒன்றாய் வளர்ந்தோம் ஒன்றாய் படித்தோம் எச்சில் கடி கடித்து ஏப்பம் விட்டு சாப்பிட்டோம் இவ்வளவும் எமக்கு அறியாப் பருவத்தில் வாழ்க்கையை புரியத்தொடங்கினோம் - தனி வழி போக தொடங்கினோம் காலிற்கு கட்டு போடும் வயதும் வந்தது தனி குடித்தனம் போனோம் அத்துடன் எல்லை சண்டையும் பக்கென்று வந்தது உன் மகளின் கலியாண கோலத்தை என் மகள் மதிலால் ஏட்டி பார்க்கும் அவலம் அக்கா என்று ஆசையுடன் அழைக்க வேண்டியவர்கள் கோபக்காரார் என்று எரிசலுடன் பார்க்கிறார்கள் இன்று நீ யாரோ நான் யாரோ வீதியில் போகும் போது முகம் பாராத நாங்கள் கோட்டில் ப…

  15. மறுக்கப்படுதல் நான் அழுவேன் உங்களுக்காக உங்களது துயரங்களை காயங்களை வலிகளை எனது மொழியால் சுமப்பேன் உங்கள் குருதி கண்டு எனக்கு உயிரலையும் எல்லாமே சிவந்த குருதி துயரப்பட்டவர்களின் குருதி கையாலாகதவர்களின் குருதி என்பார்கள் அவர்கள் நீங்கள் என்னை ஒதுக்குவீர்கள் உங்களுக்காய் ஒரு கண்ணீர் விழுவதை விரும்பமாட்டீர்கள் எங்களது பிரார்த்தனைகளை ஏற்றுக்கொள்ள தயங்குவீர்கள் ஏன் எப்படி எதற்கென்ற கேள்வியெழும் உங்களிடம் எப்படியும் இருந்து விட்டுப்போகலாம் உயிரில்லா பிணங்கள் முன் கூச்சலிடுவதை விரும்புகிறவள் நானில்லை உங்களை போல தான் எங்களுக்கும் அழுவதற்கு கூட சுதந்திரம் மறுக்கப்பட்டிருந்தது அந்நாட்களில் இருந்தும் நான் ஒரு உணர்வுள்ள மனுஷி என்பதாலே நான் அழுவேன் உங்களு…

    • 0 replies
    • 659 views
  16. Started by வர்ணன்,

    ஆவி ஈந்தவர் முகத்தில் ... ஈ மொய்க்கும்..! ஆசுவாசமாய்.... இருக்கையின் இருபுறம் இரு கை ..விரித்துக்கொண்டே சொல்கிறாய் - புலி முடிந்ததென்றே! தளங்களை வென்றவர்... வென்றதெல்லாம் தளங்களா? எமக்காய் தலங்கள்! நாவில் ஈரமென்று .. யாரோ சொன்னார்... மெய்யில்லை நண்பா நண்பா! உனக்கு................. அதன் சுவையரும்புகளில்.. நஞ்சின் கசிவு! சாணம் மேல் ஈயாய் கிட...! உரம் அது என்று தெரிந்தும்.. ஈரத்தை உறிஞ்சு.... மண்ணில் புதைக்கும் நாள் வந்தால்.... எழுந்து பறப்பாய்..!! இருப்பதை ஏளனம் செய்தாலும்... ஆலமரத்தை உன்னால் தனித்து.... ஆண்டியாக்க முடியுமா? வேர்களுக்கும் - விழுதுகளுக்கும் எதிரி ஆவாய்!

  17. முடிவின்றி தொடரும் இந்த அவல நிலை என்று மாறும் ??

  18. கத்திக் கதறுது மனது-நீ இன்னும் இருக்கிறாய் என்று புழுதி புரண்டழுது. தெருவெல்லாம் இழுத்து வந்தேன் - என் இதயத்தை தேம்பியழும் அதை எங்கு மறைக்க ? அண்ணா அவசரப்பட்டயோ - நாம் அங்கீகாரம் உலகில்லல்லவா கேட்டோம் - நீ விண்ணிற்கு சென்றதேன் ? இனி அந்தச்சிரிப்பை எங்கு நாம் தேட ? உன் விழியில்லாத் தேசம் இருண்டல்லவா கிடக்கு ! தலைவருக்கு தோள் கொடுக்க யாரைத் தேடுவோம் ? நீயில்லாத செய்தி - வந்திருக்கவே வேண்டாம் !

  19. முன்பெல்லாம் இருள்பூத்த நிசப்தத்தில் _அவை இயங்குதல் வழக்காதலால் ஆங்காங்கே எச்சங்களாய் ................! வேரோடுதல் போல ஓடிக்கொண்டிருக்கும்_ அப்பப்ப தன்னிலை மறந்து சிலகணம் வாய்கால் நீரோடுதல் போல வெளிவரும் ... பூசாப்பொருள் இதுவென்று பேசாதநாளில்லை உற்றவர் காசா பணமா தருமிதுவென்று ௬சாமல் முன்னின்று குறிவைத்தனர் . வளைதல் நெளிதல் வசப்படல் கொண்டதில்லை . உயர்ந்தவனை கொண்டாடியதுமில்லை கீழிருந்தவனை துண்டாடியதுமில்லை _ஆதலால் மாவிலை தோரணங்கண்டதுமில்லை. முகவரியில்லாத முகத்திற்கு சுகவரிகளை பரிசளித்த போதிலும் தகவிலா நிலைகளை வகைப்படுத்திய போதிலும் மிகைப்பட்டுக்கொண்டதுமில்லை இதமான இறந்தகால நினைவுடன் சூனியவாதமொன்றை கடக்க முனைகையில் , …

  20. Started by nochchi,

    https://www.facebook.com/photo.php?fbid=1125467864131887&set=rpd.100000060513138&type=3&theater

    • 0 replies
    • 1.3k views
  21. நலமறிய ஆவலுடன்....., "அன்புள்ள அக்கா, நலம் நலமறிய ஆவல்" அம்மாவுடன் கதைத்தேன் அக்காவுடன் சண்டை பிடித்தேன் பேச்சுவார்தைகள் நடக்கிறது புலிகளின் நிலவரம் போர்ப்பிள்ளைகளின் துணிகரம் என இணையஞ்சல் ஊடாய் நேசமொடு - என் நெஞ்சில் இடம் கொண்டான். "ஊருக்கு வா அக்கா உனைக்காண வேண்டும் போருக்குள் நின்று வன்னி பாருக்கு அறிமுகமாய் ஆனகதை சொல்ல ஊருக்கு வா அக்கா" அடிக்கடி அஞ்சல் எழுதிய புலி. பூவுக்கும் அவனுக்கும் பொருத்தம் நிறைய. அத்தனை மென்மையவன். போராளிப் பிள்ளையவன் போர்க்களம் புடமிட்ட புலியவன். புலம்பெயரா உறுதியுடன் பலம்பெற்ற தம்பியவன் ஞாபகத்தில் நிற்கின்றான் - என் நினைவகத்தில் பத்திரமாய். அம்மாவின் கதை அண்ணாவின்…

  22. என்னை மன்னித்து விடு குவேனி மேலுதட்டில் வியர்வைத் துளிகளரும்பிய கருத்து ஒல்லியான இளம்யுவதிகளைக் காண்கையில் இப்பொழுதும்… அதிர்ந்து போகிறதென் உள்மனது தவறொன்று நிகழ்ந்தது உண்மைதான் நினைவிருக்கிறதா அந் நாட்களில் தாங்கிக்கொள்ள முடியாத குளிர் விசாலமாக உதித்த நிலா பொன் நிற மேனியழகுடன் எனதே சாதியைச் சேர்ந்த எனது அரசி எமதிரட்டைப் படுக்கையில் ஆழ்ந்த உறக்கத்தில் தனியாக குழந்தையொன்றை அணைத்தபடி அரண்மனை மாடியில் நின்று கீழுள்ள காட்சிகளைப் பார்க்கின்ற கனவொன்றில் அவள் திளைத்திருக்கக்கூடும் இருந்திருந்து இப்பொழுதும் உதிக்கிறது அம் மோசமான நிலா மண்டபத்திலிருந்து மயானத்தின் பாழ்தனிமையை அறைக்குக் காவி வருகிறது - இஸுரு சாமர சோமவீர தமிழில் – எம்.ரிஷான் ஷெர…

  23. வலை வீசம்மா வலை வீசு வம்பு வளக்கலாம் வலை வீசு.. கை வீசம்மா கை வீசு கடைக்குப் போகலாம் கை வீசு காதல் செய்யலாம் கை வீசு கனடா போகலாம் கை வீசு கம்பியூட்டர் முன்னால் கையடிக்கலாம் வலை வீசு கத்தி வெட்டு குத்திப்போடலாம் கைவீசு கருத்துச் சொன்னால் பாவம் கைவீசு களம் என்ன குயவன் செய்யும் பொம்மையோ கை வீசு வெட்டில் வெட்டலாம் கைவீசு வீணில் வெட்டுவதைத் தள்ளிப்போட்டு கைவீசு காரணம் சொல்லலாம் கைவீசு களத்தில் இருப்பவர் புட்டிப்பால் குடிப்பதில்லை கைவீசு காத்திரமான பங்கு வேண்டுமா கைவீசு கோபம் ருத்திரம் மனிதம் உணர்த்துவது கைவீசு சண்டையும் சச்சரவும் இல்லையென்றால் கைவீசு சாதிப்பது என்பது பூச்சியமே கை வீசு ஆங்கிலம் பேசுவது கோமளித்தனமல்ல கைவீசு …

  24. Started by arjun,

    கனவுகளும் நிஜங்களும் புணர்ந்து கொள்கையில் நம்பிக்கைகளின் பிரசவம் கணக்கு வழக்கின்றி... முன்னொரு போதில் இவை தேர்தல் வாக்குறுதிகளாகவே அறியப்பட்டிருந்தது... ஜனநாயகியோடு படுக்கையை பகிராதவரில்லை! போனவன் வந்தவனெல்லாம் பெற்றுத்தள்ளிவிட்டு போனான்..... தலை ஒன்றுக்கு மூளை இன்னொன்றுக்கு வயிறு வேறொன்றுக்கு அதன்கீழ் ஏதோவொன்றுக்குமாக.... குழந்தைகளோ.... பல்வேறு தேசங்களில் பல்லின மக்களாயின.... நோய் முற்றித்தளர்ந்த விபசாரி வீதிக்கு வந்தாள் பிச்சைக்காரியானாள்.... ராஜ்ய பரிபாலினி ராப்பிச்சையானாள் புடவை கிழிசல்களுக்குள்ளால் தசைப்பகுதி தெரிந்தது..... எஞ்சிய அரசியல்வாதிகளும் இடியாப்பம் வாங்கிக் கொடுத்துவிட்டு இன்பம் அனுபவித்து போனார்கள்.... வயித்தெரிச்சலில் இப்போத…

  25. பேராற்றல் மிகு தீரங்கள் - தே. பிரியன் கவிதை வாழ்தலில் உயர்ந்து நிற்கின்றது பேராற்றல் மிகு தீரங்கள், வலித்த பொழுதுகளில் நெஞ்சத்தில் வலிமை கொடுக்க காலத்தின் கட்டளைகள் பிறப்பிக்கபடுகின்றன, ” யார் நாங்கள் “ ஏன்? எங்களை வேறாக்கிப்பார்க்கின்றீர்கள்…? அப்போது தான் மேலும் வலிக்கின்றது, உடைந்த மனச்சுவர்களை ஒருங்கிணைத்து எழும் போது உக்கிய வார்த்தைகளை எம்மீது தெளிக்காதீர்கள், உங்கள் இயலாமைகளை எம்மீது திணிக்காதீர்கள் உயிர் சிதைந்து வெளிப்புறப்பட்டு வாழ்வின் ஒவ்வோரு நிமிடங்களையும் வலிமையாக்கி உலகத்தை நேசிக்கின்றோம். “சற்று நிதானியுங்கள்” நாங்கள் சளைத்தவர்கள் அல்ல சாகா வரம் பெற்ற புனிதமும் விவேகமும் கொண்டவ…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.