கவிதைப் பூங்காடு
கவிதைகள் | பாடல் வரிகள்
கவிதைப் பூங்காடு பகுதியில் கள உறுப்பினரல்லாதோரின் கவிதைகள், கவிதை மொழியாக்கம், உலகக் கவிதை, பாடல் வரிகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள உறுப்பினர்கள் அல்லாதவர்களின் கவிதைகள், கவிதை மொழியாக்கங்கள், பாடல் வரிகள் போன்றன மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
ஈழத்தை சேர்ந்த, பூர்வீகமாகக் கொண்டவர்களின் படைப்புக்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படவேண்டும். ஏனைய கவிதைகள் தரமான கவிதைகளை அறிமுகம் செய்யும் நோக்கில் இலக்கிய மின் இதழ்களில் இருந்து மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
5128 topics in this forum
-
[size=4]இது வரை குளத்தில் மட்டுமே மீன்களைப் பார்த்திருக்கிறேன் முதன் முறையாக உன் முகத்தில் கண்கள் வலை வீசுவது யார்? கரையில் இத்தனை காவலர்கள் - இமை முழு நிலவு முகத்தில் இடது வலதாய் இரு மூன்றாம் பிறைகள் - புருவம் என்ன அதிசயம் தென்றலைத் தாலாட்டும் கூந்தல் அய்யயோ... வார்த்தைகள் வரவில்லை பார்த்து விட்டேன் இதழ்களை வரைந்தது யார்? ஏய் அழகுத்தீவே சிரிக்காதே நான் உயிர் வாழவேண்டும் - உனக்காக...[/size]
-
- 3 replies
- 648 views
-
-
-
- 30 replies
- 4.3k views
-
-
முத்தம்மா பெற்ற பிள்ளை மூன்று பேர் உயிரோடு இல்லை முத்தப்பன் வளர்த்த பிள்ளை உடம்பில கை கால் இல்லை பத்துமாத தமிழ்ப் பிள்ளை படுத்துறங்க மடியில்லை படைவேரியன் பிடியில அழக்கூட முடியல்ல நன்றி - முகநூல்
-
- 1 reply
- 816 views
-
-
அழிக்கப்பட முடியா தேசம் http://www.piraththiyaal.com/ சிறுவயதுக் கரையோரம் கட்டிய மணல் வீட்டை அலை வந்து வந்து அழித்துப் போனது. மீண்டும் மீண்டும் கட்டக் கட்ட அழித்தல் சாத்தியமாயிற்று அலைக்கு பின், என்சிறு கிராமக்கோடியில் வியர்வையாலுங் குருதியாலும் கட்டிய என்சிறு குடிலை சிதைக்க முடிந்தது உங்களால் மீண்டும் மீண்டும் கட்டக் கட்ட அழித்தல் சாத்தியமாயிற்று உங்களுக்கு இப்போ நகரங்களாலும், ஊர்களாலும், கிராமங்களாலும் கட்டியெழுப்பப்பட்ட எனது தேசத்தை எந்தப் பீரங்கி கொண்டும், யாராலும் அழித்துவிட முடியாது என்பதை அறுதிட்டுச் சொல்ல முடியுமென்னால். ஏனெனெல், ஓர் அகதியின் கனவுகளாலனவை எனது தேசம். -தமயந்தி - http://www.piraththiyaal.com/2012/12/blog-pos…
-
- 8 replies
- 1.2k views
-
-
குழந்தையாய் இருந்தபோது! கொப்பனை உரிச்சு வைச்சிருக்கிறான் என்றார்கள் சிரித்தேன்! கொம்மாவபோல் என்றார்கள் சினந்தேன்! சித்தப்பன் போல் என்றார்கள் நடந்தேன்! சுப்பர் ஸ்டார் என்றார்கள் ஏது செய்தபோதும் யாரோ போல் என்றார்கள். ஒரு போதும் என்னை அவர்களுக்கு நானாய் அடையாளம் தெரியவில்லை. வருடங்களின் பின் நாடு சென்றபோது விமான நிலையத்தில் காத்திருந்தார்கள் என் குழந்தையை ஓடிவந்து வாரி அணைத்தார்கள் - அட 'அப்படியே உன்ன மாரி இருக்கிறான்" என்றார்கள் ஆக அவன் "சுயமும்'' அழிந்து போயிற்று
-
- 9 replies
- 1.6k views
-
-
அழியதா சுவடு.....( லெப்கேணல் நீலன் ) புலன்களை நீ திரட்டி எடுத்த புலனாய்வால்; புறமுதுகிட்டோடிய படைகள் ஏராளம்... ''சாவுக்கே சவாலிட்டு சாவுக்குல் சாவாய் வாழ்ந்தவன் நீ...'' வேகமாய் நீயெடுத்த வேவினால் போனது எத்தனை உயிர் சாவு... விலை உயர்ந்த வீர தளபதி உன்னை விலை போனதொன்று வீழ்த்தியதோ....??? சதிகள் புரிய முனைந்தவனின் சதிகள் தறிக்க நினைத்தாயே... தமிழர் சேனை காக்க முனைந்தாயே... இரக்கம் கெட்ட இரணியன் உன்னை இழிவாய் கொன்றானே.. நினைக்கையிலே ஜயோகோ நெஞ்சு வலிக்குதய்யா... சாதனைகள் படைத்திட்ட சரித்திர புதல்வனே நீ இன்னும் சாகமால் எமக்குள்.... - வன்னி மைந்…
-
- 3 replies
- 1.2k views
-
-
அழியா என் இருப்பு அன்னையும் தந்தையும் அருந்திய உணவின் ஒரு துளி திரண்டென் உயிரைச் சூழ்ந்தது. அது வரை நானெனை அறியாச் சூனியம் அதன்பின் மெய்யுணுர்வென்று பல் பகுதியாய் சிந்தனை செயலென்றின்னும் மேலாய் தன்னுணர்வோடு தரணியில் விழுந்து நானெனவானேன் நானோர் வெற்றிடம். சூழ்ந்ததனைத்துமிச் சூத்திரப் பாவை வாழ்ந்து முடிக்கும் வரையிலிருக்கும் வீழ்ந்த பிறகு விண்ணிலும் மண்ணிலும் ஆழ்ந்து கரைந்து அனைத்தும் மறைய பாழ் வெளியதனில் பழைய நானாய் ஒன்றையுமுணராச் சூனியமதனில் என்றும் அழியா இருப்பில் கலந்து அன்றை இன்றை நாளையையுணரா அதிலும் இதிலும் எதிலும் சேரா அமைதி வெளியில் ஐக்கியமாகி நிரந்தரமாவேன் நிர்க்குணனாவேன் …
-
- 2 replies
- 615 views
-
-
அழியா வரம் பெற்ற ஆதவன்கள் எழுதியவர்: த.சரிஷ் விடுதலை நெருப்புக்கு நெய்சேர்த்து சென்றுவிட்டது ஒரு நெருப்புக்குழந்தை...! ஈழத்தின் ஒவ்வொரு ழூலை முடுக்கிலும் விடுதலை நெருப்பை விதைத்துவிட்டு மெல்ல அணைந்துவிட்டது அந்த நெருப்பு...! இந்த நெருப்புப்பந்தின் வெளிச்சம் மெல்ல அணைந்தாலும் வெப்பம் இன்னும் அடங்கவில்லை...! தமிழீழத்தில் புறப்பெடுக்கும் கடைசிக்குழந்தையின் காலம்வரை கட்டாயம் அடங்காமல் இருக்கும் இந்த வெப்பம்...! ஒரு வழிகாட்டி புறக்கப்போகும் பிஞ்சுக்கும் பாடமாகிவிடுகிறான்...! மானிடகுலத்தின் கடைசிக்காலம்வரை செல்லும் வாழ்க்கைப்பயணத்தில் எதிர்பாராமல் இடைக்கிடையே இனம்தெரியாத இடிமின்…
-
- 3 replies
- 1.1k views
-
-
[size=4]நீ பேசும் பேச்சு,நான் வாங்கும் மூச்சு.. நீ கொடுத்த முத்தம்,என் இதயத்தில் ரத்தம்.. உயிரில்லாத என் உடலுக்கு,உயிர் கொடுத்தவள் நீ.. துடிக்காத என் இதயத் துடிப்பை,துடிக்க வைத்தவள் நீ.. என் உயிரை நீ அழிக்கலாம், உன் மீது கொண்ட காதலை ஜென்மத்திற்கும் அழிக்க முடியாது...[/size]
-
- 3 replies
- 606 views
-
-
களத்திற்கு வரும் பொது கவிதையுடன் வருவதென முடிவெடுத்து மாவீரர் கனவுகளை நினைவாக்க கருத்தியலால் கவிதை வடிக்க நடுங்கியது இரு கரமும் சொல்லுண்டா மாவீரர் தியாகத்தை கவிதையாக்க நிகருண்டா அவர்கள் தியாகத்திற்கு வெதும்பியது மனம் கல்லாக்கி மனத்தைக் கருங்கல்லாக்கி வித்தாகிப்போன மாவீரர் கவிதை எழுத சொல்லுண்டா என் மனம் துடித்தது மல்லுக்குக் கவிதைஎழுதி மாவீரர் வில்லுக்கு வினை சேர்ப்பதா நான் எல்லைக்கும் செல்லாதவன் எல்லை கடந்தவரை எழுதிப் பழி சேர்ப்பதா சூரியதேவன் குழந்தைகளின் கூரிய இலக்கினை ஆரியன் அடக்கினான் எனப் பேருக்குப் பொய் எழுதுவதா பாரினிலே ஈழம் பிறந்திட மாரினிலே தழும்புடன் பகைவன் பாசறை புக…
-
- 0 replies
- 910 views
-
-
அழிவின் உச்சத்தில் வன்னிமண்.... கவிதை.... அழிவின் உச்சத்தில்; இன்று நம் அழகான வன்னிமண் ஆனந்தத்தின் உச்சியிலோ நமை அழிக்கும் தென்னிலங்கை..... ஆறாய் ஓடிடுதே; நம் அரும்புகளின் இரத்தங்கள்.... அதைக் கண்டு ரசித்திடுவான் அதிகாரச் சிங்களவன்.... உயிர்காக்க ஓடும் வழி உயிர்களின் மரணப் பாதையாகி நம் மழலையெல்லாம் வீதிகளில் மண்ணாகிக் கிடக்கிறதே.... இக்கொடுமை பார்க்காமல் ஒருகணம் கண்மூடி திறப்பதற்குள் அடுத்தகுண்டு எடுத்திடுமே மழலைகளின் தாயின் உயிர்.... ஐயையோ பரிதாபம் இதைக் கேட்டாலே நம் உயிர்போகும்..... அதைக் காணொளியில் கண்டதுமே நம் கண்களிலே நீர்த்தேக்கம்.... நம் வன்னியிலே இன்று ஜனனத்துக்கு விடுமுறையா…
-
- 0 replies
- 1k views
-
-
[color=green]அழுகிறாள்.... தலையை முட்டி கண்ணீர் கொட்டி கதறியழுகிறாள்... அந்த கயவர் செய்த செயலால் ஜய்யோ பதறி துடிக்கிறாள்.... பட்ட மரமாய் விழுந்த பிள்ளை கட்டி அழுகிறாள்.... பிய்ந்த பிள்ளை உடலை பார்த்து வெம்பி அழுகிறாள்.... ஆறாத்துயரில் ஜய்யோ பாவம் அலறி அடிக்கிறாள்..... அந்த கோர பகையை இன்றே அவளும் திட்டி தீர்க்கிறாள்... சுத்தி வந்த பிள்ளையின்று சுடலை போகிறாள்.... பெத்தமன வயிறை இன்று தட்டி அழுகிறாள்.... செஞ்சோலை மீதான தாக்குதலின் போது தாயொருத்தி தலையில கைiயை வைத்து கதறும் காட்சிக்கு எழுதப்பட்டது யாராவது முடிந்தால் அந்த படத்தை இதில் இணைத்து விடவும…
-
- 3 replies
- 1.3k views
-
-
அழுகை நிறுத்தியெழு.... ஈழத் தமிழா ஈழத் தமிழா- நீ இன்னும் அழுவதா...? இந்த இன்னல் தாங்கி தாங்கி இதயமமுடைவதா....?? அன்னை மண்ணை இழந்து நீயும் அகதியாவதா..?- அந்த அன்னியத்து சிங்களங்கள் ஆட்டம் இடுவதா...? இத்தனை நாள் நீயிருந்தா அடிமை உடையடா- அந்த சிங்களத்து கொட்டமதை நீயும் அடையடா... அழுதழுது நீயலைந்த வாழ்வை அழியடா- அந்த அன்னியத்து சிங்களத்தை ஓட கலையடா... பொங்கி நீயம் புலியணியில் புலியாய் இணையடா- அந்த போர்களமே ஏறி நீயும் பகையை விரட்டடா... அழுதழுது நீயலைந்த வாழ்வை தொலையடா அன்னை தமிழ் வீரமதை உலகில் காட்டடா....!
-
- 6 replies
- 1.3k views
-
-
அங்கோர் கூட்டம் தன்னில் அன்றொருநாள் பேசுகையில் ‘ஹல்துமுல்லை’ என்றாலும் ‘அழுத மலை’ இது என்றேன்.. ‘’கூனியடிச்ச மலை கோப்பிக் கன்னு போட்ட மலை அண்ணனை தோத்த மலை அந்தா தெரியுது பார்…’’ என்று அழுதமலை இதுவென்றேன். இன்று அழுதழுதே எழுதுகின்றேன்…. இன்னல் செய்ய பலருண்டு இன்செய்ய யாருமில்லை வன் செயல்கள் பல கண்டு நாம் வாடிய நாள் பலவுண்டு செயற் கைதானே எங்களை சீண்டி வந்தது இயற்கையே நீயுமா இன்று ஏம்மீது விழுந்தது.. வன்முறைகளலால் தானே பன்முறைகள் காவுகொண்டோம் இம்முறை இயற்கையும் கூட எங்களை விட்டுவைக்கவில்லையே.. ஏனிந்த விந்தை எதனால் இந்த சோதனை மலையே…! உன்னை உரமாக்கி, உரமாக்கி உயர்த்திய அண்ணனை.. உன்மீது வலம் வந்தே நிறம் மாறிய எங்கள் அன்னையை.. அள்ளிக் கொண்டு போக அத்தனை …
-
- 0 replies
- 1.2k views
-
-
அழுவதற்காகவா தமிழினம் பிறந்தோம்....??? இமயங்கள் இமயங்கள் இடிந்தே வீழ்குது இன்றேன் தமிழுக்கு இத்தனை துயரம்...??? கண்ணீர் ஆறுகள் கடலென ஓடுது நெஞ்சத்தில் ரணங்கள் ஏனின்று கூடுது....??? விடுதலை ஊற்றுக்கள் விரைவாய் அடையுது காலனுக்கேன் இத்தனை கடுகதி அவசரம்...??? ஒளியென உதித்த உதயங்கள் எல்லாம் இருளதை அளித்து இறப்பதால் சோகம்.... புயலென எழுந்த விடுதலை வீரர்கள் பகையதை சருகாக்கி அழித்ததால் மகிழ்ந்தோம்... அருகில் இருந்ததால் அடைந்தோம் ஆனந்தம் அவரை இழந்ததால் அடைகிறோம் சோகம்... தீயென எழுந்த தீர வீரர்கள் தீயினில் எரிந்ததால் தேம்பியே அழுதோம்... மார்கழி வந்தாலே மரணத்தின் ஓலம் அழு…
-
- 4 replies
- 1.2k views
-
-
வணக்கம் உறவுகளே ! ஆள் ஆளாய் எழுந்து அலையெனவே திரண்டு ஐ.நா சபைக்கு அணிவகுத்துள்ளோம். எத்தனை முறையெனினும் அயர்ச்சி எமக்கில்லை போராடும் இனமே விடுதலைக்கென்றாகும் இதுவும் போராட்டப் பணியே அழைக்கும் போதெல்லாம் எழுந்து வாரீர் பயணம் நீண்டதெனினும் பாதங்கள் ஓயாது களத்தில் முதற்பணி புலத்தில் கிளைப்பணியென விரிந்து கிடந்த தெம் போராட்டம் இப்போது புலத்தில் தான் முதற்பணியே நீங்களும் நாங்களும் தான் போராளிகள் எங்கள் உறவுகளின் மரணஓலம் மனுக்குலத்தின் செவிகளுக்கு எட்டும்வரை எங்கள் கண்ணீரின் ஈரத்தை உலகசபை உணரும் வரை எங்கள் விடுதலையுணர்வின் வீரியத்தை ஐ.நா சபை அறியும் வரை அழைக்கும் போதெல்லாம் …
-
- 0 replies
- 538 views
-
-
எல்லோரையும் போல அவனுக்கும் வாழ்வு மீதான பிரியங்களும் தனக்கான வாழ்க்கை மீதான பிடிமானங்களும் இருந்தன….. பருவவயதின் காதலும் பள்ளிக்கூடக் கனவுகளும் அவனையும் ஒரு சினிமாக் கதாநாயகனாக்கியது ஒருகாலம்…… கால இடைவெளி நதியாய் ஓடிய குடும்ப நிம்மதியைப் பேரலையொன்று விழுங்குமாப்போல குடும்பத்தின் நம்பிக்கையொன்று இடையில் தொலைந்து போக அம்மாவுக்கும் அப்பாவுக்கும் எல்லாமுமாகியிருந்தான்…… ஒற்றைப்பிள்ளையாய் ஒருகோடி நம்பிக்கையாய் ஒளி நிறைந்த சூரியனாய் அவனே அனைத்துமாய்….. காதலும் கல்வியும் நிறைந்த நாட்களுக்குள் போரும் அவலமும் புகுந்து கொண்ட போது போராளியாதலே யாவற்றுக்குமான முடிவென்றவன் சொல்லாமல் கொள்ளாமல் காடேகிக் கையில் இயந்திரத்தோடு வீட்டுப் ப…
-
- 7 replies
- 1.2k views
-
-
அவனும் இவனும்.. அவனும் கொலை செய்தான்.. இவனும் கொலை செய்தான்.. முன்னவனை தியாகி என்றனர்.. பின்னவனை துரோகி என்றனர்..
-
- 1 reply
- 802 views
-
-
வெளி நாட்டு காற்றிலே கவிதைகள் அணல் பறக்கும் ஏராளாமாய்! ஆனாலும் ஏளனமாய் இன்றும் விடுதலை வெற்றி நமதென்று கூவியழைத்தார்! தோல்வி கண்டு துவண்டு அழுதார்! வெல்லும் போது; மட்டும் வாழ்த்து பாடினார் தோற்க்கும் போது மட்டும் சிலர் சோக கீதமிசைத்தார்!. அனுப்பிய பணங்கள் ஆயுதம் அணிந்ததாய் மட்டுமே இதுவரை இல்லை செய்தி! இதுவும் வரலாம் காலகிரமத்தில்! ஏனெனில் கவிதைகள் மட்டுமல்ல செய்திகளும் இங்கே கற்பனையில்! துன்பத்தின் மீதிலேறி பாடுவார்! துன்பத்தை வெல்ல துயர்துடைப்பு என்பர்! வெட்கத்தை விட்டு சொன்னால் வேற்று வேட்டுக்கள் தான் நாம்! வேற்றுவன் கேட்கிறான் எம்மை! வேதாந்தம் பேசவா முடியும் அவருடன்? கேட்கிறார் அறிவார்ந்த கேள்வியாய் சிலர்! வேதாந்தம் சித்தாந்த…
-
- 13 replies
- 1.7k views
-
-
முகம் தெரியாத தியாகங்களின் முகவரிகளை, முகமூடிகள் மட்டுமே தேடும் நிர்ப்பந்தம்! காலத்தின் கண்ணாடிகளில் விம்பங்களாய் விழுந்த கோலங்கள் .... எம் காலடிகளில் மிதிபடும் பரிதாபம்!! மாறுவேடம் பூண்டுதான்... மாவீரரையும் பூசிப்போமா? - இல்லை மாறிமாறி நின்றுதான்... அவர்களை நிந்திப்போமா? காறியுமிழ்ந்த எச்சங்களில்... அந்தக் கல்லறைகளின் மிச்சங்கள்! தேறிநிற்கும் தமிழர்க்கு... அவர்கள் தேவையில்லைப் போல?? நெஞ்சு நிமிர்த்தி நடக்கும் தமிழர்களே!? பிச்சைக்காரர்கள்தான் நாங்கள்.... புரிகின்றதா? பித்துப் பிடித்தா.... தம்மேனி பிய்த்தெறிந்தார்கள்?? யாருக்காக? எதற்காக? .... தெரியாதா உங்களுக்கு??? இரவல் வீரத்தில்... இழக்காரம் கதைக்கும் உங்கள் நாவில், அவர்கள் கழுத்து …
-
- 9 replies
- 1.5k views
-
-
அவனில்லை இன்று எம்மோடு அவன் நினைவுகள் நீர்சூடி வழிகிறது விழியிரண்டும். அவனில்லா வனம் ஆளில்லா நிலம். அவனின்றி அனைத்துமே அனாதைப் பிணம். ஆனைகள் மிதித்து அடங்காத் துயர் மூடி அ (உ)லையும் காற்றும் ஊழித்தீயூறி அடைகாக்கும் தாயாகிறது. அவன் போலொருவன் பிறப்பான். பிரபாகரன் என்ற பெருந்தீயாய் இருப்பான். அவன் வருவான் ஆன்மபலம் தருவான். அனைத்துமே அவனாகி எமையுருக்கி ஒளிர வைப்பான். காலக் கணக்கிருப்பை கார்த்திகை ஈரம் காலவிதி கடத்திக் கரையேற்றும். கனவுகள் விதைத்துக் காத்திருக்கிறோம். சாந்தி நேசக்கரம் …
-
- 0 replies
- 1k views
-
-
அவன் மனிதன் அல்ல மகான் தனிமனித விடுதலைக்காக(ஆத்மீகவிடுதலைக
-
- 18 replies
- 2k views
-
-
அவன் வருவான் அதுவரை காத்திரு…. அழுதபடி உனக்காய் இல்லாத கடவுளையெல்லாம் இறைஞ்சியதன் பலன் இன்று நீ அறுக்கப்பட்ட செட்டைகள் முளைத்துப் பறக்கும் பறவைபோல் இருள் மதில்கள் தாண்டி வெளியில் வந்திருக்கிறாய்…. *குறுந்தகவல் மூலம் உன் விடுதலைச் செய்தி* மனம் முட்டின மகிழ்ச்சி நிலத்தில் நிற்காது கால்கள் பறக்கின்றன….. மூன்றாண்டு அஞ்ஞாத வாசம் முடித்து – உன் வரவை எதிர்பார்த்திருந்த குழந்தையின் முகத்தில் மீளவும் சிரிப்பை பூக்க வைத்துள்ளாய்…… அவன் பிஞ்சுக் கைகளைப் பிடித்தபடி இனி நீ கனவு காணலாம் கவிதைகள் படிக்கலாம் அச்சம் தரும் கனவுப்பாளங்களை உடைத்துக் கொண்டு இரவுகளில் இனி நீ உறங்கலாம் இது நிரந்தரமாகட்டும். கனவுகளுக்காய்ப் போன உனது கண்ணாளனின்…
-
- 4 replies
- 1.6k views
-
-
ஓராயிரம் ஆண்டுகள் ஓய்ந்து கிட்டந்தது தமிழ் வீரம்! இராசராசனும் ராசேந்திரனும் கங்கை கொண்டதும் கடாரம் வென்றதும் கீழ் ஆசியம் முற்றும் நல் தமிழ் பேரரசு கோலோச்சியதும் இன்நாளில்தான் ஈராயிரம் ஆண்டுகள் இழந்து கிடந்தோம் இனமானம்! எள்ளி நகையாடினர் வடவர் என்று தமிழ்ச்சேரன் செங்குடுவன் படை எடுத்து இமயம் வென்றதும் இன்நாளில் மூவாயிரம் ஆண்டுகள் மூச்சிழந்தது எம் பகுத்தறிவு நம் மண்ணை ஆரியர் அபகரித்ததும் பணி செய்ய வந்த பார்பனீயம் எம் அறிவுக்கே விலங்கு இட்டதும் எல்லைகளை நாம் சுருக்கிக்கொண்டதும் இன்நாளில்தான் ஓராயிரம் ஆண்டுகள் ஓய்ந்து கிடந்த தமிழ் வீரமும் ஈராயிரம் ஆண்டுகள் இழந்து கிடந்த இனமானமும் மூவாயிரம் ஆண்டுக…
-
- 1 reply
- 916 views
-
-
எனக்கு உன்னைப் பிடிக்கவில்லை உன் மீது எனக்குப் பொறாமை உன் பதவி மீதும் எனக்கு ஆசை நீ வாழும் மாளிகை எனக்கு வேண்டும் என உரைத்தான் ஒரு மானிடன் காது கொடுத்துக் கேட்டேன் கதைத்தது தமிழன்தான்.... எனக்குச் சுதந்திரம் வேண்டும் நீ அழிந்தால்தான் எனக்குக் கிடைக்கும் என்னுடைய உரிமை வெல்லுவேன் உன்னுடைய உரிமையைப் பறித்து இங்கும் ஒரு குரல், இவன் உரைப்பதெல்லாம் தன்னைக் கொன்றுவிட்டு, ஏனெனில் எமக்கென்று நினைக்க மாட்டா அவனும் தமிழனே.... தமிழனுடன் சேர்ந்திடின் சோர்வு எனக்கு ஒன்று சேர நினைப்பதெல்லாம் சிங்கம் ஈன்ற பரம்பரையுடனே செத்திடினும் சோறு போடுவர் அவர்கள் இந்தக் குரலுக்குரித்தவன் வ…
-
- 0 replies
- 705 views
-