கவிதைப் பூங்காடு
கவிதைகள் | பாடல் வரிகள்
கவிதைப் பூங்காடு பகுதியில் கள உறுப்பினரல்லாதோரின் கவிதைகள், கவிதை மொழியாக்கம், உலகக் கவிதை, பாடல் வரிகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள உறுப்பினர்கள் அல்லாதவர்களின் கவிதைகள், கவிதை மொழியாக்கங்கள், பாடல் வரிகள் போன்றன மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
ஈழத்தை சேர்ந்த, பூர்வீகமாகக் கொண்டவர்களின் படைப்புக்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படவேண்டும். ஏனைய கவிதைகள் தரமான கவிதைகளை அறிமுகம் செய்யும் நோக்கில் இலக்கிய மின் இதழ்களில் இருந்து மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
5128 topics in this forum
-
சாள்ஸ் என்ற பெறுமதி….! (எழுதியவர் - நிக்சன்) சாள்ஸ் என்ற பெறுமதி….! சாள்ஸ் என்ற சரித்திர மனிதன் சாவின் விளிம்பிலும் சாதனை படைத்த சத்தியன்…. சிங்களத்தின் அழிவில் தான் ஆக்கமுண்டென்ற அறத்தை நம்பிய தோழன்….! ஓயாமல் உழைத்த ஒற்றைச்செடி நூறாய் ஆயிரமாய் சூரியன்களைச் செதுக்கிய சிற்பி….! தலைவர் தளபதிகள் எவருமவன் முன்னால் பொதுவேதான் பேதமில்லை…! நேருக்குநேர் விவாதம் செய்திடும் ஒரேயொரு வீரதளபதி அவன் என் தோழன்; சாள்ஸ்….! கோபத்திலும் சிரித்திடும் இனியன் கொடிய பகைமுன் வீரத்திலும் அவனை வென்ற பேரொன்றில்லை…! தலைவன் வழி அது எங்கள் சாள்ஸ்சின் விழி வரலாறு படைத்த சாதனைப்புலி….! கோபத்திலும் சிரித்திடும் இனியன் கொழும்பின் அழிவை இவனே கொள்கையாய் மாற்…
-
- 17 replies
- 870 views
-
-
இரத்தக்களரியில் அழிவுகாவியம் படைத்த எழுதுகோல்கள் ஈழப் போர் எழுமென முரசறைகின்றன காசியண்ணரின் உணர்ச்சிப்பெருக்கு ஈழமண் எரிய எரிய தீப் பிளம்பாய் தீட்டிய வரிகள் நாற்பதாயிரம் இளையதலைமுறையை கருக்கிப்போட்டது கையறு நிலையில் கடல் நீர் ஏரியில் குண்டு பட்டுச் சிதைந்து மிச்சமும் வீழ்ந்ததே காசியண்ண நீங்கள் குந்தியிருக்கும் தேசத்து கோமகன்கள் தடாகத்தில் எங்கள் குருதிதிதான் ஈழப்போர் வெடிக்குமென தொட்டெழுதுக எஞ்சிய தலைமுறையின் மூளைக்குள் ஏன் வீழ்ந்தோமென சிந்திக்காதிருக்க காசியண்ணைக்குப் போர் வேண்டும் ஏய்த்துப் பிழைத்த அரசியல் கண்ணீரில் தள்ளிய சதிமறைக்கப் காசியண்ணைக்குப் போர் வேண்டும் ஆம் போரிடுவர் எம் தேசமக்களெலாம் சேர்ந்தெழும் உரிமைக்காய்…
-
- 17 replies
- 2.7k views
-
-
முள்ளிவாய்க்காலும், கொல்லிஅலைக் காலரும் ... அள்ளிய உயிர்கள் கொஞ்ச நஞ்சமல்ல!!! கடவுளரும் கண்மூடிப் பார்த்திருக்க ... கடலன்னைகூட இரக்கமற்றுப் போனாளே!!! போற்றித் துதித்த மரியன்னை கூட ... வேடிக்கைதான் பார்த்திருந்தாராம்! கடவுளர் மேல் நம்பிக்கை போய்.... ஏழு வயசாச்சு எனக்கு! - ஆனாலும், மீண்டும் சோதிச்சு ... மூன்று வருசமாகுது! ! முள் முடி தரித்த யேசு கூட.... செல்லடிக்கு பயந்து ஒளிந்து போனாரோ?! - இல்லை, புத்தரிடம் சரணடைந்து.... முள்வேலிக்குள்.... சிலுவை சுமந்தாரோ?! வைக்கோற் போருக்குள் பாலகன் பிறந்து மகிழ்ந்திருக்க... நம் பாலகர்களை ...பனை வட்டுக்குள்ளும் முள்வேலிக்குள்ளும் அல்லோ, பொறுக்கியெடுத்து... பொங்கியழுது ...பின் பொறுத்துக்கொண்டோம்!!! …
-
- 16 replies
- 1.8k views
-
-
இக்கவிதையின் நாயகியான் என் மனைவி வாசுகிக்கு சமர்ப்பணம் என் கதை வ.ஐ.ச.ஜெயபாலன் * அவள் தனி வனமான ஆலமரம். நான் சிறகுகளால் உலகளக்கிற பறவை. என்னை முதன் முதற் கண்டபோது நீலவானின் கீழே அலையும் கட்டற்ற முகிலென்றே நினைத்தாளாம். நானோ அவளை கீழே நகரும் பாலையில் தேங்கிய பாசி படர்ந்த குளமென்றிருந்தேன். * ஒருநாள் காதலில் கிளைகளை அகட்டி ஜாடை காட்டினாள். மறுநாள் அங்கிருந்தது என் கூடு. இப்படித்தான் தோழதோழியரே எல்லாம் ஆரம்பமானது. தண்ணீரை மட்டுமே மறந்துபோய் ஏனைய அனைத்துச் செல்வங்களோடும் பாலை வழி நடந்த காதலர் நாம். * அவளோ வேரில் நிமிர்ந்த தேவதை. நிலைப்பதே அவளது தர்மமாயிருந்தது. சிறகுகளில் மிதக்கும் எனக…
-
- 16 replies
- 4.6k views
-
-
கூடாரத்திலும் மலர்கின்ற மலர்கள் இளங்கவி - கவிதை வதைமுகாம் கூடாரங்களில் அடைபட்டுக்கிடக்கும் குடும்பத்தின் குரலொன்றாய் இந்தக் கவிதை அந்த இருண்ட இரவின் இருளடைந்த கூடாரத்தில்.... சிறிதாக முனகிடும் சிறுமியின் குரலொன்று.... ''அம்மா வியர்க்கிறது வெளியில் நிற்போம் வா....'' சும்மா கிடவடி சிங்காரி சிலிர்த்துக்கிட்டு போறாவாம் சிங்களவன் காத்திருக்கான் உன்னை தூக்கிகிட்டே போவானாம்..... நான் சின்னப்பொண்ணு தானே எனக்கேது பயமம்மா.... உள்ளே கிடப்பதனால் என் சட்டை நனையுதம்மா... அடியேய்.. சொல்லுக் கேள் உன் சட்டை வியர்வைக்காய் சட்டென்று நீ வெளியே போனால்..... சிறு பெட்டையென்றும் பார்க்காமல் பிச்சிடுவான் ரொட்டியை போல்.... …
-
- 16 replies
- 1.9k views
-
-
உன்னை பிரிய மனமின்றி பிரிந்து தனிமையில் திரிகிறேன் உன்னை பிடிக்காமல் அல்ல உன்னை காயப்படுத்தாமல் இருக்க...
-
- 16 replies
- 1.6k views
-
-
இன்னொரு பிரிவு வேண்டாமடா.... கிருஸ்ணமூர்த்திக்கு அஞ்சலிக் கவிதை...... நீ உன்னையே எரிக்கும் உரிமையை உனக்கு யார் தந்தது......... நம் தமிழ் தலைவனா.... இருக்கவே இருக்காது..... அவன் அக்கினிக் குஞ்சுவளர்த்து எதிரியையல்லவா எரிக்கச் சொன்னவன்...... ஆறுகோடி தமிழினம் தமிழ் நாட்டில் நீ தமிழுக்காக எரிந்து போ என்று அரசியல் வாதியா சொன்னான்..... ஆம் சொன்னாலும் சொல்லுவான்.... தான் வாழ எவனையும் எரிக்கத் தயங்காதவன்.... உன் தமிழ் பற்றா உன்னை நீயே எரிக்கத் தூண்டியது..... பற்றுள்ளவன் எரிந்து போனால் பற்றியெரியும் தமிழை யார் காப்பாற்றுவது? பற்றைக் காடெல்லாம் போட்டு உன் தொப்புள் கொடியுறவை பாழாய்ப் போனவன் எரிக்க நீயோ பற்றவைககும்…
-
- 16 replies
- 3.4k views
- 1 follower
-
-
புல தமிழா!!!! உன் இருப்புக்கு ,இயங்கிகளுக்கும் உனக்கு தேவை சிங்க கொடி துடுபாட்டமும் சிவஜியின் நாயகன் ரஜனியும் சின்ன திரை மெகாசீரியலும் சிங்க கொடி பகிஷ்கரிக்க கோரின் சீ-விளையாட்டு வேறு அரசியல் வேறு என சிந்தாந்தம் பேசுகிறாய் சிவாஜி பகிஷ்கரிக்க கோரின் சினிமா வேறு அரசியல் வேறு என சீற்றம் கொள்கிறாய்....... சின்ன திரை வேண்டாம் எனின் சீரியல் இல்லை எனின் சீவியம் என்கிறாய் முடியவில்லை உன்னால் உறவுகளின் இருப்புக்கும் இயங்கிகளுக்கும் உன் பொழுதுபோக்கை இழக்க தயார் இல்லை.................
-
- 16 replies
- 2.2k views
-
-
ஊரோடு என் உடல் கரையும்! உன்னோடு நானிருந்து உறங்காமல் விழித்திருந்து கண்ணால் தழுவுவதும், - உன் கவின் பூத்த புன்னகையில் நான் காணாமல் போவதுவும், என்னிரு கை விரித்து உன்னை நான் அணைப்பதுவும், உரிமையோடு ஆண்டு நீயென்னை அடக்குவதும் எப்போது நிகழுமென்று என் நெஞ்சம் ஏங்குதிங்கு! உள்ளங் காலடியில் உன்மேனி உரசும் சுகம் என் காயச் சிலிர்ப்பினிலே கவி எழுதத் தூண்டிலிடும். கள்ளமின்றிக் கொள்ளை கொண்ட கனித்தமிழ் காவிரியே! தள்ளாடும் இதயமடி தவிப்பணைக்க ஏது வழி? உன்னடியில் தளமிட்டு உலக உலா செல்வதற்கு கண்ணடியில் கனவு சேர்த்துக் காத்திருக்கேன் கண்ணாட்டி வேளை வரும் என்று நீயும் வெகுநாளாய் இயம்புகிறாய் காலம் வரும் என்று நானும் காதல் கள்ள…
-
- 16 replies
- 2.7k views
-
-
"""" தூக்கத்தை கலையுங்கள் புலிகளே..."""" உறங்கி கிடந்த புலிகளே நீங்கள் உறுமி இன்று எழுகவே.. கயவன் வந்து ஆடுறான்- எங்கள் தலையில் குண்டை போடுறான் களத்தில் உயிரை பறிக்கிறான் கதறி தமிழன் அழுகின்றான்... கண்ணீர் ஆறாய் ஓடுதே கடலெனவே பாயுதே குருதியிலே புலவுகளே குளியல் தினம் செய்யுதே... எங்கள் மனம் பதைக்கிறதே ஏக்கத்திலே தவிக்கிறதே சொந்த புமி அழிகையிலே எங்கள் வேங்கை தூங்குவதோ....??? காத்திருந்த போதும் இனி களத்தில் வித்தை காட்டுங்களேன் அன்னை மண்ணில் வாழும் - அந்த அந்நியரை கலையுங்களேன்..... தூங்கியது போதும் இனி - உங்கள் தூக்கங்களை கலையுங்களேன் துட்டமுனு படைவிரட்டி - எங்கள் ஈழமதை காணுங்களேன்....!!![/color] …
-
- 16 replies
- 2.7k views
-
-
வாழ்க்கையின் வெறுமை என் இளமைப்புத்தகத்தின் இரவுப்பக்கங்கள் வெறுமையாய் கிடக்கின்றன இன்னும் எழுதப்படாத ஓர் கவிதையை எண்ணி.... எனது வானம்... இருள் மூடிக்கிடக்கிறது இதுவரை காணாத அந்தப் பௌர்ணமிக்காக... மெல்ல மெல்ல காலத்திருடனிடம் களவு போகின்றன-என் நந்தவனப் பூக்களின் நறுமணமும்-நான் சேர்த்துவைத்த கனவுகளின் ஒளிநிறமும்.... நிசப்தம் விழுங்கிய நீண்ட இரவொன்றில்... நிமிர்ந்து பார்க்கிறேன் மழை இருள்மூடிய காரிருள் வானில் பளிச்செனத் தெரிந்தது தனிமை மூடிய-எனது வாழ்க்கையின் வெறுமை. -ஈழநேசன்- கள உறவான ஈழநேசனின் கவிதையை களைகள் களைந்து அவர் கேட்டுக்கொண்டதன்படி இங்கே களமேற்றியிருக்கிறேன்.
-
- 16 replies
- 6.1k views
-
-
என்னைப் பாட விடு ----------------- வானம் பாடியைப் போல் என்னைப் பாட விடு மண்ணையும் மக்களையும் முல்லையையும் முகில்களையும் என்னைப் பாட விடு இதயக் கோப்பை நிரம்பித் தழும்புகின்றது பச்சை போர்த்திய வயல்களையும் அதைத் தழுவி இச்சை தீர்க்கும் தென்றலையும் என்னைப் பாட விடு அந்திக் கருக்கலின் செம்மைச் சிவப்பை அழகுப் பெண்ணின் கன்னக் கதுப்பை என்னைப் பாட விடு பரந்து விரியும் கடலை பதுங்கிப் பாயும் நதியை என்னைப் பாட விடு கண்களில் நிரம்பி வழிகின்றது கருணை என்..... பாதையை மறிக்காதே வாழ்வினை பறிக்காதே என்னைப் பாட விடு சர சரக்கும் சப்பாத்துக்கும் சட சடக்கும் துப்பாக்கிக்கும் என்ன வேலை இங்கு என…
-
- 16 replies
- 2.6k views
-
-
பத்து வயதில் பார்த்தேன் நண்பனின் பார்வை என்றால் தந்தையிடம்......... பதினாறில் பார்த்தேன் காதல் பார்வை என்றால் சிநேகிதியிடம்........ நாற்பதில் பார்த்தேன் காம பார்வை என்றால் கணவனிடம்........ அறுவதில் பார்த்தேன் கிழவனுக்கு பார்வை தெரியாது என்றால் பேரனிடம்.... அதே கண்கள் பார்வை வேறு அர்த்தம் வேறு பருவம் வேறு........
-
- 16 replies
- 2.8k views
-
-
தமிழுக்காய், தமிழ்மண்ணுக்காய் தற்கொடை தந்த தமிழ் சகோதரியின் தியாகத்தைக் கொச்சைப்படுத்திய குட்டிரேவதியின் கவிதைக்கான பதில் அம்மணமாய் நிற்பவர்களே! சினிமாக் குப்பைகளிலும் சின்னத்திரை குழறல்களிலும் சிந்தனையைத் தொலைத்துவிட்டு குழாயடிகளிலேயே வீரங்காட்டும் விவஸ்தையில்லா வீணர்களுக்கு தாய்மண் காத்தலையே விரதமாக்கி வித்தைகள் புரிவது வீணானதாய்ப் படலாம் கட்டிளம் காளைகளின் கடைக்கண் பார்வைக்காய் காலமெல்லாம் காத்திருப்பதும் களியாட்டங்களில் கரைவதுமே கன்னியர்க்கு விமோசனம் என்றெண்ணும் சிங்காரிகளுக்கு களத்துத் தியாகங்களும் தீரங்களும் ஏளனங்களாகலாம். அந்நிய மொழியும் அடுத்தவன் கலாச்சாரமுமே கண்ணில் தெரிய அடுத்தவனின் அழுக்குகளையே அரவணைத்து ஆராதித்து அடுக்களைய…
-
- 16 replies
- 5.2k views
- 1 follower
-
-
கவிதையால் காதல் செய்கிறேன் இந்த கவிதை பகுதி ஒரு தொடர் கவிதை போல் எழுதுகிறேன் ஆனால் தொடர் கவிதை அல்ல .ஒவ்வொரு கவிதையும் தனி தனி அர்த்தமும் கருத்தும் கொண்டது . ஒரே திரியில் பலமுறை எழுதபோகிறேன் நன்றி கே இனியவன் ஏய் வான தேவதைகளே .... மறைந்து விடுங்கள் .... என் தேவதை வருகிறாள் .....!!! ஏய் விண் மீன்களே ..... நீங்கள் கண்சிமிட்டுவதை .... நிறுத்தி விடுங்கள் .... என் கண் அழகி வருகிறாள் ....!!! ஏய் வண்ணாத்தி பூச்சிகளே .... வர்ண ஜாலம் காட்டுவதை .... நிறுத்திவிடுங்கள் ..... என் வண்ண சுவர்னகை வருகிறாள் ....!!! + கவிதையால் காதல் செய்கிறேன்
-
- 16 replies
- 2.2k views
-
-
காதல் கவிதைகள் செய்யத் தேவையான பொருட்கள்: ஒன்றிரண்டு இதயம் மூன்று நான்கு வேதனை ஒரு சிட்டிகை விழிகள் ஒரு தேக்கரண்டி அழகு ஒரு தேக்கரண்டி உயிர் உளறல் - தேவைக்கதிகமான அளவு இது இருந்தால் போதும். சுவையான காதல் கவிதைகள் தயார் எனது பெப்ரவரி 14 - காதலர் தின காதல் கவிதைகள் எழுத எனக்கு 5 நிமிடங்கள் கூட ஆகவில்லை. அவ்வளவு எளிது இந்தக் காதல் கவிதைக்ள். நீங்களும் ஒருமுறை முயற்சி செஞ்சு பாருங்க..
-
- 16 replies
- 2.8k views
-
-
கிறுக்கு கிழவி! சென்ற ஆண்டு வந்த ஆண்டுடன்........ அஞ்சலோட்டம் புரிந்தது........ கூடி ஓடின காலம்....... பார்த்துப்பார்த்து எனை வளர்த்தவள்....... இப்போ படமாய் என்னெதிரே! முட்டிய வயிறுடன் நானிருந்த போதும்.. இன்னும் ஒருவாய் ஊட்டிவிட ஏங்கியிருந்தவள்....... அம்மா அடியிலிருந்து என்னை ..... காத்த காவலரண்! அடி வயிற்றில் சுமக்காவிடிலும்... பிரசவிக்காமாலே ...... பிரசவ வேதனை கொண்ட கடவுள் அவள்! தடக்கி தடக்கி நான் நடந்த நாளில் இன்னுமொரு தாயானவள்...... தடியூன்றி அவள் நடந்த நாளில் ...... என் சேயானவள்......... சொல்லாமல் ஓடிட்டாள் சுயநலகாரி! அழுக்கு படிந்த தாவணி ..... முடிச்சு அவிழ்ப்பாள்- ரகசியமாய் தெருவோரம் - மணி சத்தம் கே…
-
- 16 replies
- 3k views
-
-
-
- 16 replies
- 3.3k views
-
-
வெள்ளை மனம் பத்துத் தடவைகள் பட்டுச்சேலையுடுத்தி பத்தரை மாற்றுத்தங்கப் பதுமையாய் பலர் முன்னிலையில் கொழு பொம்மையாய் பார்வையிட்ட பெண்ணிடம் பக்குவமாய் பாடத் தெரியுமா சமையல் தெரியுமா என்றே பலரும் தங்கள் சந்தேகம் தீர்ந்திட பத்துக்கு பலநூறு கேள்விகள் கேட்டுவிட்டே பட்சணங்கள் பல வகை வகையாயிருந்ததை பண்போடு வயிறார உண்டு விட்டு களித்துவிட்டே பாலின் நிறம் பால் வெள்ளை பெண்ணின் நிறமதில் வெள்ளையில்லையென்றே வெளிநடப்பு செய்த மாப்பிள்ளை வீட்டார்கள் வெள்ளைமனம் கொண்ட என் புண்பட்ட நெஞ்சமும் பாறையாய் போனதை அறிவீரோ பண்பட்ட மனதுடன் சின்னஞ்சிறு ஆசைதனை வெண்தூரிகை கொண்டே என் புகைப்படத்தை வெள்ளை நிற மை கொண்டே மையிட்டு வெள்ளை மனதுடன் மகிழ்கிறேனே
-
- 16 replies
- 4.1k views
-
-
வன்னி ஒரு வரலாறு படைக்கும் ............ எதிரி எக்காளமிடுகிறான் கிளி நொச்சி விழுந்து விட்டது , முல்லை விழுந்தது ஆனையிறவு விழுந்தது ,என்று அவனுக்கு சொல்லுங்கள் தலைவன் வழியில் தமிழன் விழ விழ எழுவான் என்று கடந்த காலத்தை ,சற்று புரட்டி பார் , நம் வீரர் பதுங்கி தான் பாய்ந்தார்கள் ,புலத்து உறவுகளுக்கு ஒரு சஞ்சலம் "என்றும் நாம் வீழ மாடோமேன்று " உரத்து சொல்லுங்கள். அது காலத்தின் தேவை என்று ". ஏன் கலக்கம் சுனாமியும் உள் இழுத்து தான் வாரிக்கொண்டு போனது , ஏன் இது நம் தலைவனின் உள்நோக்கிய இழுப்பாக இருக்க கூடாது ? பிடிப்பார் பிடிப்பார் எப்படி? மக்கள் இல்லாமல் தக்க வைப்பார். இருந்து பாருங்கள்" பெரும் அதிரடி" ஒன்று கருக்கொள்ளும் பின் மழையாக பொழ…
-
- 16 replies
- 4.1k views
-
-
மழை வரும்போதுதான் குடையை தேடுவான்! மூச்சு முட்டும்போதுதான் யன்னல் இருப்பதை நினைப்பான்! நாளை எப்பிடி- சிரிக்க வழியென்று எண்ணி இன்றைய பொழுதை அழுதே- தொலைப்பான்! உழைக்கும் காலத்தில் சேமிக்க நினையான்! உதிரம் செத்து போனதொரு காலத்தில்- காசை எண்ணி தேம்பி தேம்பி அழுவான்! படிக்கும் காலத்தில் சீ என்ன வாழ்க்கை என்று சினப்பான்! காலம் முடிந்தால் ஐயோ இனி என்னாகுமோ என் வாழ்க்கை என்று அழுவான்! அடை மழை பெய்யும் நாளில் - நீரை சேர்த்து வைக்க நினைக்கான்! அனல் வீசும் கோடை வந்தால் குடத்தை தூக்கி கொண்டு ஊர் ஊராய் திரிவான்! போர் செய்யும் வீரருக்கு ஐந்து சதம் கொடுக்கான்! ஊரெலாம் - குண்டுவீச்சில் ஒருமூலை சென்றொதுங்கினால் தமி…
-
- 16 replies
- 2.8k views
-
-
நீ திருந்தவே மாட்டாயா.....??? ஏய் சமுதாயமே பெண்ணுக்கு மட்டும் இங்கு பெரும் தடைகள் ஏன்....??? காலச்சாரம் என்றிங்கு கால் கட்டு ஏன்...??? இரக்கம் இன்றி அவள் மீது அடக்குமுறை ஏன்.....??? மண் பார்த்து மங்கையவள் நடக்கவேனும் என்கிறியே.... பண்பாடு என்றுயதை வந்து வேறு முழங்கிறியே.... காளையோடு பெண்ணவளை கதைக்கலாகா என்கிறியே.... அது மீறி பேசி வந்தால் அபச்சாரம் என்கிறியே... கட்டியவன் தனை இழந்தால் விதவை என்று உரை(த)க்கிறியே... இவள் முன்னாடி வந்தாளே முழிவியழம் என்கிறியே.... சந்தி சபைகளிலே பின்னாடி வைக்கிறியே... இன்நாளு வரைக்கும் இதை இழிவாக செய்யிறியே...…
-
- 16 replies
- 2.2k views
-
-
<span style='font-size:30pt;line-height:100%'><span style='color:green'>நடந்து போவதென்ன...</span> நடந்து போவதென்ன... நந்தவனமா-நீ நதிகள் நீந்தி வந்த தங்கரதமா.. விழிகள் இரண்டுமே.... வேலினமா-இடை தேடிப்பார்த்தேன் நான் நூலினமா... இடியோடு சுூறாவளி.. இதயத்திலே உன்னாலடி... புூங்கொடியோடு பொன்மாங்கனி(கள்) கொண்டாட வருவாயோ... நீ கூந்தல் கருமேகம்.. நீண்டு அலை பாயும் நிம்மதி பறிபோகும் கால்கள் மடல் வாழை மூடும் வண்ணச்சேலை.. காதல் கவி பாடும்.. இரண்டு விழிகள் கொண்ட பளிங்கு ரதமொன்று நடந்து வருகின்றது... இந்தப் பாலைவனம் தாண்டி ஈரப்புூங்பாற்று எங்கு போகின்றது.. தேகம் செவ்வானம் வதனம் மதி போலும்.…
-
- 16 replies
- 2.1k views
-
-
கலிகாலம் பிறக்கக், காத்திருக்கும் கபோதிகள்! கண்ணீர்க் குமுறலுடன் , கண்ணில் விரிந்தது அவலம்! காற்றையும் நஞ்சாக்கிய, கனரக ஆயுதங்களின் குமுறல்! கார்வண்ணன் தேரோட்டாத, குருசேத்திரப் போர்க்களம்! கருகி எரிந்த பிஞ்சுகள் நடுவில், குருதியில் குளித்தன சருகுகள்! கூட்டாக நடத்திய கொலைக்களம்.. கூட்டங்கள் நடத்தம். கொலைகாரர்! கொஞ்சிக் குலாவுகின்றன, காந்தீயக் கோழைகள் ! கலிங்கத்து மன்னனின், கால் பட்ட தூசியும், காந்தீய தேசத்தின்.,, கதை கேட்டு விலகியோடும்! கலிங்கத்துப் பரணியில், கூழுண்ட பேய்களும், கொடுப்புக்குள் சிரிப்புதிர்க்கும்! போதிமரம் காணும் புதிய குருத்துக்கள், பாவத்தின் சின்னமாகும்! பூவேந்தி நீ செல்லும், புத்தனின் தூபிகள், போர்க…
-
- 16 replies
- 2.4k views
-
-
ஈழத்து எழுத்தாளர்களில் கைக்கூ ரகக் கவிதைகள் அதிகம் எழுதுபவர்கள் இல்லையென்ற ஓர் கருத்தை ஓர் இணையத்தளத்தில் பார்த்தேன், ஏன் அதை முயற்சித்துப்பார்க்கக்கூடாது என்ற ஓர் முயற்சி இது.... எனது முதன் முதல் கைக்கூ கவிதைகள் சில... துரோகிகள் உரமிட்டு நெல் விதையிட்டு பார்த்திருந்த ஓர் விளை நிலத்தில் விளைச்சலைப் பாழ்படுத்த முளைத்த சில முட் செடிகள்....! --------------- பெண்புலிகள் அவலம் துப்பாக்கி காட்டி துரத்திய மிருகத்தின் வாயில் துர்ப்பாக்கியமாய் இன்று அவளின் முலைக்காம்புகள்... ------------- பெண்ணின் விழிகள் உடல்காயம் தராமல் உள்ளிருக்கும் இதயத்தை குளிர்விக்கும் அல்லது கூறுபோடும் இரு மந்திர வாள்கள்....
-
- 16 replies
- 161.2k views
-