கவிதைப் பூங்காடு
கவிதைகள் | பாடல் வரிகள்
கவிதைப் பூங்காடு பகுதியில் கள உறுப்பினரல்லாதோரின் கவிதைகள், கவிதை மொழியாக்கம், உலகக் கவிதை, பாடல் வரிகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள உறுப்பினர்கள் அல்லாதவர்களின் கவிதைகள், கவிதை மொழியாக்கங்கள், பாடல் வரிகள் போன்றன மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
ஈழத்தை சேர்ந்த, பூர்வீகமாகக் கொண்டவர்களின் படைப்புக்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படவேண்டும். ஏனைய கவிதைகள் தரமான கவிதைகளை அறிமுகம் செய்யும் நோக்கில் இலக்கிய மின் இதழ்களில் இருந்து மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
5128 topics in this forum
-
கண்ணெதிரே கலையுமா கனவு? மண்ணெனவே உதிருமா மனது? நெஞ்சுக்குள்ளே கோடிட்ட உருவம் ஒப்பேற முன்னரே உருகியா போகும்? இருள் விலகமுன்னமே உருகி அழிந்திட மெழுகுவர்த்தியா எங்கள் சுதந்திர வேட்கை? இது காலச்சுழி சுழற்சியில் சிக்குறுதல் இயல்பு. எனினும் சோரக்கூடாது. சுழலின் வேகம் நீளாது திடீரென்று அடங்கும். தட்டாமாலை சுற்றிவிட்டு தொப்பென்று போட்டுவிடும். நம்பிக்கை இருந்தால் மட்டுமே நாம் பிழைக்க முடியும். மயக்கமின்றி கால்கள் நிலை கொள்ள வேண்டும். மனம் சோர்ந்தால் மயக்கம் மடியேறி மகுடியூதும். உறக்கம் உச்சந்தலையில் உட்கார்ந்து கொள்ளும். இன்றைய பொழுதுகள் எமக்கானவை. ஊர்கூடி இழுத்த விடுதலைத்தேர் முக்காற்சுற்று முடித்துவிட்டது. சில அதிவிவேகிகள் ஆரம்பப் புள்ள…
-
- 36 replies
- 3.3k views
-
-
1987 செப்ரம்பர் 15 அன்று நல்லூர் வீதியில் தியாக தீபம் திலீபனின் நீரேந்தும் அருந்தாத உண்ணாவிரதம், இந்திய வல்லாதிக்கத்திடம் ஈழத் தமிழ் மக்களின் 5 அம்சக் கோரிக்களை நிறைவேற்றக் கோரி ஆரம்பமானது. (திலீபன் தமிழீழ விடுதலைப்புலிகளின் யாழ் மாவட்ட அரசியற்துறைப் பொறுப்பாளராக இருந்தவர். யாழ் இந்துக்கல்லூரி பழைய மாணவன். யாழ் பல்கலைக்கழக மருத்துவ பீடத்திற்கு தெரிவாகி இருந்த மாணவன்.) ----- நினைவுப் பதிவு----- தியாக தீபமே விடுதலைத் தீயே.... அன்னை மடியில் நீ கிடந்த நினைவுகள் அழியவில்லை..! தமிழீழ மண்ணில் நீ பதித்த பாதச் சுவடுகள் கருவறைகளாய் சாதனைகளைப் பிரசவிக்கின்றன...! அண்ணா.. உன் உயிர் தந்து தமிழீழ விடுதலைக்கு நீ.. உயிர் கொடுத்தாய்..! உன் தியாகம…
-
- 6 replies
- 3.3k views
-
-
பணம் மனிதனின் உடலை வருத்தி மனதை திடப்படுத்தி சேகரிக்கத் தூண்டுவது பணம்.... தம் அன்றைய தேவைகளிற்காக எதிர்காலக் கனவுகளின் தேடல்களிற்காக சிறுகச் சிறுக சேர்த்துவைக்க தூண்டுவது பணம்... மனிதர்களின் நல்வழியையும் தீயவழியையும் சந்தோஷத்தையும் துக்கத்தையும் உருவாக்குவது பணம்.... மொத்தத்தில் பணம் தான் வாழ்க்கை என்று வாழ்பவர்களின் நிலை கடலினுள் இறங்கி உப்புத் தண்ணீரை பருகுவது போன்றது.... அடிப்படை வாழ்க்கைக்கு பணம் அளவுடன் தேவை என்று வாழ்பவர்களின் நிலை தெளிந்த நீரோடையில் மீன்கள் வசிப்பது போன்றது....
-
- 24 replies
- 3.3k views
-
-
கள உறுப்பினர்கள் அனைவருக்கும் வணக்கம். இந்தத் திரியில் நான் என்னுடைய சில குறுங்கவிதைகளை( அது கவிதையா இல்லை மொக்கையா என்று நாங்கள்தானே சொல்லணும் என்று நீங்கள் நினைப்பது புரிகிறது. என்ன செய்யுறது எல்லாம் நானும் ஒரு கவிதை எழுதிடவேணும் என்ற ஆர்வக்கோளாறுதான். ) பதியலாம் என்றிருக்கிறேன். நீங்களும் உங்களுடைய குறுங்கவிதைகளைப் பதியுங்கள் (பார்ரா..சேர்ந்து அடிவாங்குறதுக்கு ஆட்கள் சேர்க்கிறான் என்று இன்னும் சிலர் முறைப்பது இப்பவே மனக்கண்ணில் தெரியுது.) எதுநடந்தாலும் நான் பின்வாங்கிறதா இல்லை.(அப்ப என்ன ஆணிவாங்கப்போறியா என்று யாரும் கடந்தநூற்றாண்டில் காலவதியான மொக்கையை போடாதீங்க.) இந்த திரியை நானே தைரியமாக தொடக்கி வைக்கிறேன்.(பயப்படுறது எழுத்தில தெரியலைதானே) அடைத்துச் சா…
-
- 25 replies
- 3.3k views
-
-
இந்தப்பாடல் கடந்த வருடம் முள்ளிவாய்க்காலில் இன அழிப்பில் கொல்லப்பட்ட எமது மக்களுக்கும் சண்டையிட்டு மடிந்துபோன எமது மாவீரச் செல்வங்களுக்குமாக அஞ்ச்சலி செலுததுவதற்காக உருவாக்கியிருந்தேன்.... என்னிடமிருக்கும் மிகச்சிறிய வளங்களை வைத்தே உருவாக்கியிருக்கிறேன். அதனால் sound quality யில் சரியான தரம் கிடைக்கவில்லை. ஆனாலும் இசையமைப்பு, பாடல் வரிகள் பாடலைப்பாடியது அனைத்தும் நான்தான். எனது குரலில் நிறையக்குறைகள் இருக்கும், குரலைப் பார்க்காதீர்கள், பாடலில் நான் சொல்லிய வலிகளும் வைராய்க்கியமும் தான் உங்களுக்கும் இருக்குமென்று நம்பி இதை இணைக்கிறேன். மிக முக்கியமாக இதை இணைப்பதில் ஏற்பட்ட சிரமதில் எனக்கு உதவிசெய்து இதை இணைக்க உதவிய மச்சானுக்கு மிக்க நன்றிகள்... http://k…
-
- 20 replies
- 3.3k views
-
-
எனது ஆன்மா காணாமல் போய்விட்டது... நேற்றுவரை என்னுடன்... இருந்த ஆன்மா.. இன்று தூக்கத்தால் எழுந்து பார்த்தபோது காணாமல் போய்விட்டது... இரவில் உறங்கும்போது தொலையக்கூடிய என் ஆன்மா பார்ப்பதற்கு பின்வருமாறு இருக்கும்... அன்பானது... அறிவானது... அமைதியானது... இனிமையானது... இரக்கம் மிக்கது... குழந்தை போன்றது.. குழப்பம் விளைவிக்காதது... விளக்கங்கள் கேட்காதது... ஆன்மா கடைசியாக உடுத்தியிருந்த உடை பேரன்பில் நெய்த நிறமற்ற ஆடை... அன்பனின் ஆன்மாவை ஒன்லைனில் கண்டவர்கள் ஒப்படைக்கவேண்டிய முகவரி... கலைஞன், ஆண்டவன் சந்நிதி.... தேடிக் கண்டுபிடித்து தருபவரிற்கு குடியிருக்க இதயம் ஒன்று பரிசாகத் தரப்படும்... ஓடிவிட…
-
- 13 replies
- 3.3k views
-
-
தமிழீழம் என்னும் விருச்சம் வளர்ப்போம் மாவீரர் ஈழத்துக்காக மாவீரர் தம் உயிர் தந்தார் மாவீரர் தமிழீழம் வாழ தம் இனம் வாழ பினமாகினர் அவர் நினைவு அது நம் இன நிமிர்வு களம் கண்ட அவர் சிரம் சாயவில்லை அவர் உடல் மட்டும் மண்ணுக்கு தமிழீழ உரமானது அவர் தந்த கொடி இது அவர் உயிர் தந்து பறந்த கொடி இது தமிழ் மானம் காத்த கொடி அவர் நினைவு உரமாக்கி புலிக்கொடி நாட்டி தமிழீழம் என்னும் விருச்சம் வளர்ப்போம் சரவணை மைந்தன் http://www.eelampoem.tk/2014/11/tamileelam.html
-
- 0 replies
- 3.3k views
-
-
தலைவன் வழியிலே.. தலைவன் வழியிலே.. புலிகள் பாய்ந்திடும் வேளை வந்ததே தோழா... தரணியாண்டிட தமிழைக் காத்திட நேரம் வந்ததே தோழா.. நான் சொல்வதெல்லாம் நடக்கும்.. ஈழமெலாம் புலிக்கொடிகள் பறக்கும்... வெற்றிச்சேதி வீடு தேடி வருதே.. கவலை ஏனடா கைகள் இணைய வா தோழா.. அடிக்குமேல் அடி அடித்தால் அம்மியும் நகருமடா.. அம்மனை நகர்த்திவிட்டார்... அங்கு புத்தர்சிலை பூக்குதடா.. திருவிழாத்தேர்கள் இழுத்திட்ட வீதியில் எதிரிக் கவசங்கள் உறுமுதடா குழந்தையும் தாயும் கொஞ்சிய முற்றத்தில் முட்களின் சோலையடா..அதற்கு தமிழ்ப்பிணங்களே உரங்களடா.. ஐயனைத்தெருவில் இராணுவம் மிதித்தால் ஐரோப்பாவில் பிள்ளை ஐயையோ என்பார்.. துடிப்பவர் தலைவரடா.. துண்டிப்பார் அரக்கரின்…
-
- 21 replies
- 3.3k views
-
-
சீனியம்மா என்னைப்பெற்றது என் அம்மாவானாலும் சிறுவயதில் உன்மடிதானே என் இடம் என் சீனியம்மா... நான் சிரிக்கப் பேசி சின்னக் கதை சொல்லி சித்திரமாய் என்னை வளர்த்தாய் ... உன்கை பிடித்தே நான் பள்ளிக்கூடம் செல்லும்பொழுது உலகமே என்கால் அடியில் ........ காலம் என்ற நதியில் கரைபுரண்ட வெள்ளத்தில் நீயும் நானும் மல்லுக்கட்டினோம்......... ஒவ்வரு வருடமும் இங்கு தோல் உரிந்து முடி உதிர்ந்து குளிர் வேளையில் உறையும் ஃபைன் மரங்கூட வெய்யில்பட புதுப்பெண் போல் பொலிவு பெறும்........ குருவிகளும் தேன் வண்டுகளும் ஃபைன் மரத்தை சுத்திவர , உனக்கும் எனக்கும் மட்டும் ஏன் சீனியம்மா கலண்டரில் கிழிஞ்ச கடதாசி போல் பொலிவு இழக்கின்றோம் ?????????? காலம் கிழித…
-
- 17 replies
- 3.2k views
-
-
காதல் நினைவினிலே காதலி உன்னை பிரிகையிலே கவிதை ஒன்று எழுதிவிட்டு கன்னி உன் கண்படவே காகிதத்தில் மறைத்துவிட்டு காத்திருந்தேன் உன் பதில்க்காய் :? கண்டு விட்ட கவிதையினை கடைசிவரை படிக்கு முன்னே கன்னியவள் என்னிடத்தில் கேள்வி ஒன்றை கேட்டு விட்டாள் "கவி படைத்தாய் நம் காதலுக்கா?? - ஏன் காட்டவில்லை என்னிடத்தில்??" :oops: உயிர் கலந்த காதலியே உண்மையினை உரைத்திடுவேன் உனக்காய் இக்கவி படைத்தேன் - நம் உறவில் உறுதி ஊட்டுதற்காய் படித்து அவள் முடிக்கும்வரை பார்த்திருந்தேன் பாவி இவன் :? பாவை என்ன பறைவாளென்று ! ! ! பார்வை ஒன்று பார்த்துவிட்டு பிடித்திருக்கு என்று சொன்னாள் பாதியிலே முடித்துவிட்டாள் பகல் பொழு…
-
- 18 replies
- 3.2k views
-
-
எனக்குள் ஒரு பட்டாம் பூச்சி இருந்தது குளக்கரைகளில் மிதக்கும் தாழம் பூவிலும் குதித்து விளையாடும் குளப்படி வாண்டுகளிலும் லயித்து மகிழும் பட்டாம் பூச்சி அது கடந்து போகும் ஒரு துளி இசையை நூல் பிடிச்சு அதில் தொங்கி கூத்தாடும் பின் தூரத்தே கேட்கும் பறையொலியிலும் தன் சிறகுகளை விரித்து நடனமாடும் செங்கறுப்பு பெண்களின் கருத்த முலைக் காம்புகளின் மீது தீராக் காதல் கொண்டு கவி பாடும் சிலவேளைகளில் சரசமாடும் பெரும் வனம் புகும் இருள் விரும்பும் சிறுகாடு ஒன்றில் தனித்து இருக்கும் மழை நாளில் மழை நீரில் தன் குஞ்சுகளுடன் நடனமாடும் இலக்கியம் அருந்தும் மதுக் கோப்பைகளின் மிதக்கும் நுரையில் தாளம் போடும் யாருமற்ற கடற்கரை ஒன்றில் துணைவியுடன் க…
-
- 10 replies
- 3.2k views
-
-
ஜம்முபேபி நிலாக்காவின் பிறந்ததினத்தை மறந்து நின்ற பொழுது எதிர்பாராத நாளில் யாழில் வெண்ணிலாவின் பிறந்ததினம் என்பதை அறிந்து மறாந்துபோயிட்டேன் என ரொம்ப ரொம்ப கவலைப்பட்டு நின்ற ஜம்முபேபியை ஆறுதல் படுத்த நான் அடைந்த கஸ்டத்தை என்னவென சொல்ல முடியும்? ஜம்முபேபிக்காக என் அன்பளிப்பு கவிதை
-
- 21 replies
- 3.2k views
-
-
அன்பால் உறவுகள் அதிகாரம் பண்ண அரசியல்வாதி பதவியால் அதிகாரம் பண்ண அகிம்சையால் அகிம்சாவாதி அதிகாரம் பண்ண ஆயுதத்தால் ஆயுததாரி அதிகாரம் பண்ண ஆலயத்தில் பக்தியால் பூசாரி அதிகாரகம் பண்ண ஆத்மீகத்தால் மகான்கள் அதிகாரம் பண்ண ஆசிரியர் அறிவால் அதிகாரம் பண்ண ஆண்டியானேன் அதிகாரமற்ற வாழ்வுக்காக அங்கும் பசி என்னை அதிகாரம் பண்ணிட்டே அடியே பசி என்னை அதிகாரம் பண்ணிட்டே அதிகாரம்
-
- 8 replies
- 3.2k views
-
-
அல்லி மலரோடு நான் தினம் என் கனவில் வருவாள் புஷ்பாஞ்சலி அழகில் அவள் முகமோ மலர்ந்திட்ட முல்லை மையிட்ட கண்களாலேயே கொள்ளையிட்டாள் கள்ளி கன்னத்தில் கருமையாய் வைத்திருப்பாள் புள்ளி என் மனதிலும் வைத்தாளே ஒரு புள்ளி அவள் பெயரோ லவ் ல் தொடங்கும் லல்லி தருவாள் தரிசனம் தவறாமல் வருவாள் பள்ளி கூடவே ஒட்டிக் கொண்டு வருவான் அவளின் மல்லி அவள் வீட்டிலும் மம்மி கூட எனக்கு பெரும் வில்லி தினமும் வாய்க்கு ருசியாய் வயிறார உண்பாள் உள்ளி மறவாமல் தண்ணீருடன் விழுங்கிடுவாள் வில்லை வங்கியிலே வைத்திருக்கிறேன் நிறைய சல்லி பரிசாய் நானும் தந்திடுவேன் தங்கச் சங்கிலி அவள் நினைப்புடனே அடித்துடுவேன் மில்லி போதையில் உளறிடுவேனே லில்லி லில்லி விளையாட்டிலே…
-
- 22 replies
- 3.2k views
-
-
யார் அந்தக் கள்ளி?? வானத்தில் தூங்கும் கள்ளி உனக்கு அங்கு வாழ்வு தந்தது யாரடி? தாரகைகளிடையினுள் ஒரு தாஜ்மகால் உறக்கம் தங்கத்தட்டாய் பூமிக்கு மேலே ஒரு புதையலை தூங்க விட்டது யாரடி? கறுத்து போனது வானம் இறுக மூடிய விழிகளுக்குள் இருட்டின் பேரால் ஊரடங்கு சட்டம் ! விழித்தெழுந்து பார்த்தேன்! காணவில்லை! விண்வெளியில் வெள்ளை நிறம் அடித்தது யாரோ?? கும்மியடித்த இருளை ..... கொன்று போனது யாரோ? எங்கு போனாள் அவள்? அள்ள அள்ள குறையாத அழகுக் கள்ளியா நீ? யாரிடம் வாங்கினாய் யாருக்கும் சொல்லாமல் இந்த அழகை...! மெல்ல வானம் விடிகையில் சொல்லாமல் மறைகிறாய் மெல்ல வானம் சிவக்கையில் கேட்காமலே வந்து அணைக்கி…
-
- 30 replies
- 3.2k views
-
-
காதலியே .... நீ ..... விட்டு போனபின்னும் .... காதல் ...... என்னோடு இருக்கிறது ...!!! எல்லாவற்றையும்.... இழந்துவிடேன் .... என்று சொல்லமாட்டேன் .... உன் நினைவுகள் .... என்றும் இழக்கமாட்டேன் ...!!! & காதல் சோகக்கவிதைகள் கவிப்புயல் இனியவன்
-
- 17 replies
- 3.2k views
-
-
காதல் ஒன்றும் பரீட்சையல்ல காகிதத்தில் எழுதிச் சொல்ல கண்களின் உரையாடல் மொழியொன்றும் தேவையில்ல இமைகளின் அசைவில் புகுந்திடும் காதல் இடைவெளியின்றி தொடர்ந்திடும் மோதல் ஆயிரம் கோடி ஆசைகள் ஆன்மாவில் ஊறும் அன்பின் பெருக்கம் அருவியாய்ப் பாயும் இதயத்தின் துள்ளல் இணைவினைச் சொல்லும் விநாடிகள் வந்து உணர்வுகள் ஊறும் விளக்கமின்றி உதடுகள் விரியும் விடிவினைக் கண்கள் விரைவாய் அழைக்கும் காதலன் முகம் காண ஆசைகள் பறக்கும் விழித்துக் கொண்டே கனவுகள் மிதற்கும் காதல் உள்ளம் அத்தனையையும் வெல்லும் ஆழ்கடல் தொலைவில் ஆன்மாக்கள் உலாவும் அன்றும் இன்றும் என்றும் இனிக்கும் காதல் உணர்ந்தவர்களுக்கு மட்ட…
-
- 15 replies
- 3.2k views
-
-
மே மே மே... என்ன சத்தம் அங்க.. போதும் போதும் முயலு கதை.. கேளுங்க என் சோகக் கதை..! எனக்கு மொத்தம் நாலு காலு.. மகிந்த சொன்னா மூனு காலு நானு சொன்னே நா நா நா.. அடிச்சுப்புட்டா ஆட்லறி ஆக்கிப்புட்டா மூனு காலா..! மனிசப்பயலா மகிந்த நீ.. ஆட்டுக்குட்டிக்கு அடைக்கலந் தந்தா புத்தனு.. வெள்ளை வேட்டிக் கள்ளனு நீயோ சொல்லுறா புத்தன் வழின்னு புத்தி கெட்டு..! பாரு மகிந்த பாரு காலு கூட இல்ல நானு நிக்கிற மண்ணில..! இது புலி பிறந்த மண்ணு.. சோரத்தான் முடியுமா சோகம் தான் கூடுமா எழுந்து நிக்கிற பாரு.. படையெடுத்து வரும் சிங்கத்துக்கும் வைப்ப ஒரு நாள் ஆப்பு..! மனிசப் பயலா மகிந்த நீ..! போடாத கூத்து ஆடாதே ஆட்டம்.. வைப்ப …
-
- 21 replies
- 3.2k views
-
-
ஐரோப்பியத் தடை தூக்கம் கலைக்க கூவிய சேவல் தடை ஹைக்கூ ஒன்று முயன்றிருக்கிறேன். கன்னி முயற்சியென்பதால் கட்டாயம் உங்கள் விமர்சனங்கள் தேவை. (இல்லாட்டிக் கோவம் போட்டிடுவன்) அன்புடன் மணிவாசகன்
-
- 10 replies
- 3.2k views
-
-
கவிதை எனும் பெயரில்.... நண்பர்களே, கவிதையெனும் பெயரிலிங்கு கண்டபடி கருத்துக்கள் எழுதுகின்றார் சிலபேர்கள்; கவிதை என்றால் என்னவென்று அறிந்திடாத கடைகெட்ட மூடர் அதை ரசிக்கின்றார்கள்! பெண் என்ற பெயராலே எழுதிவிட்டால் பேயாக ரசிப்பது போல் கருத்துச் சொல்லி கண் என்றும் உயிர் என்றும் கசிந்துருகி கருத்துக்கள் சொல்லி,அதை ருசிக்கின்றார்கள். மூடர்கள், முட்டாள்கள், தமிழ் மொழியின் முடவர்கள், குருடர்கள், செவிடு கொண்ட கேடர்கள் அவரைநாம் என்ன சொல்ல? கிறுக்கர்கள்தாம் அவரை மன்னிப்போமா? நல்ல தமிழ் எதுவென்று அறிந்ததில்லை; நயமான கற்பனைகள் கொண்டதில்லை; சொல்ல வரும் கருத்தில் ஓர் புதுமையில்ல; சுவையாக எழுதிடவும் பழக்கமில்லை! ஆனாலும் முகநூலில் எழுது…
-
- 27 replies
- 3.2k views
-
-
பருத்தித்துறை யூராம் பவளக்கொடி பேராம் பாவைதனை யொப்பாள் பாலெடுத்து விற்பாள் அங்கவட்கோர் நாளில் அடுத்ததுயர் கேளிர்! பாற்குடஞ் சுமந்து பையப்பைய நடந்து சந்தைக்குப் போம்போது தான்நினைந்தாள் மாது: "பாலையின்று விற்பேன் காசைப்பையில் வைப்பேன்" முருகரப்பா வீட்டில் முட்டைவிற்பாள் பாட்டி கோழிமுட்டை வாங்கிக் குஞ்சுக்குவைப் பேனே புள்ளிக்கோழிக் குஞ்சு பொரிக்குமிரண் டைஞ்சு குஞ்சுகள் வளர்ந்து கோழியாகும் விரைந்து விரந்துவளர்ந் திடுமே வெள்ளைமுட்டை யிடுமே முட்டைவிற்ற காசை முழுதுமெடுத் தாசை வண்ணச்சேலை சட்டை மாதுளம்பூத் தொப்பி வாசனை செருப்பு வாங்குவேன் விருப்பு வெள்ளைப்பட் டுடுத்து மினுங்குதொப்பி தொடுத்துக் கையிரண்டும் வீசிக் கதைகள்பல பேசிச் சுந்தரிபோல் நானே கடைக்குப்போ வேனே …
-
- 6 replies
- 3.2k views
-
-
அப்பா ஒரு அழகிய சிற்பி.. என்னை செதுக்கிய போது வலித்தது .. செதுக்கிய பின் என்னை பார்த்தா .. எனக்கே ஆச்சரியம் அவ்வளவு அழகு .. பல முரணுக்கு செந்தக்காரர் அப்பா .. என் பார்வையில் அப்படியே ஆனால் .. உள்ளாத்தம் என்னை சீர்படுத்தல் என்று .. எனக்கு அப்பொழுது தெரிய வாய்ப்பில்லை .. இளமையும் வேகமும் கேட்கும் நிலையில் .. எனக்கு இருக்கவில்லை அறிவுரை வதையே .. பொய்சொல்லி பணம் கேட்கும் போதும் .. சொல்வது பொய் என தெரிந்தும் கண்டுக்காமல் .. மேலதிகமா தந்துவிட்டு வேளைக்கு வா என .. சொல்லிவிடும் அற்புத ஜீவன் அப்பா .. என்ன செய்கிறாய் என்று இன்றுவரை என்னை .. கேட்டது இல்லை என்னுள் தான் இருப்பதா .. பலமுறை அம்மாவிடம் சொல்லி இருந்தார் .. அவன் என்னைபோல எங்கு போனாலும் .. தன்னை காத்து கொள…
-
- 18 replies
- 3.2k views
-
-
தெந்தமிழீழத் தாயவள் செருக்களம் போயினள் உடலினில் குண்டு சுமந்தல்ல.. வயிற்றினில் பசி சுமந்து.. நெஞ்சினில் புதல்வர் தம் உணர்வோடு..! தமிழீழ விடுதலைக்காய் மாமாங்கம் தனில் மங்கை அவள் தனித்து நின்று துணிந்து திறந்தாள் சாத்வீகப் போர்க்களம். காந்திய தேசத்தின் ஆக்கிரமிப்பு இராணுவம் தமிழீழ மகளிர் தம் மானம் குதறுகையில் பொங்கினள் பூபதி அம்மா நேருவின் பேரனிடம் நீதி கேட்டு..! தாயவள் பசியினில் துடிக்கையில் நேருவின் பேரன் நெஞ்சினில் களிப்புடன் தமிழின அழிப்பினில் கழித்தனன் காலத்தை டில்லியில்..! நாட்கள் கழிகையில் பொங்கிய பூவவள் பூகம்பமாய் சிதறினள் சாவினில் சரித்திரம் படைத்திட்ட தமிழீழத் தாயவளாய் மின்னினள் தமிழீழ வானில்.…
-
- 15 replies
- 3.2k views
-
-
நட்புக்கு இலக்கணம் நான் கண்டு கொண்டேன்.. பொல்லாதார்..யார் பொய்யரையார் யார்-இனம் கண்டு கொண்டேன்.. சிலர் மாசற்ற நட்பென்பார் காசென்றால் விற்றிடுவார் சிலர் காசுக்காய் நட்புறுவார் செல்வம் போக சென்றிடுவார் உள்ளத்தூய்மையில்லா மனதறிந்த ஊமையாய் இருக்கிறேன்.. பொய் பொய்யாய் உரைப்பார்..மற்றவரின் புத்திஎடை குறைப்பார்.. சிரிப்பாய் இருந்தாலும்.. சிந்திக்க வைத்துவிடுவார்.. நட்பாய் பழகு நம்பிப் பழகாதே.. அன்பாய் பழகு ஆதரவாய் நினைக்காதே.. தோள் கொடுக்கும் தோழமை தொலைந்த தேசத்தில்..முதுகில் வாள் ஏறும்வரை கைகட்டி நிற்காதே..
-
- 20 replies
- 3.2k views
-
-
இந்த அமாவாசை உன் பௌர்ணமிக்காக ஏங்குகிறது - உன் இரத்தத்தினால் நெய்யப்பட்ட என் இதயம் உன் பெயர் சொல்லித்தான் துடிக்கின்றது - நான் சுவாசிப்பதே நீ விட்டுச் சென்ற மூச்சுக் காற்றினால் தான்... என் கண்கள் உன்னைக் காண்பதற்காக தான் இரவில் விழி மூடுகின்றது... உன் விரல்கள் பிடித்து நடக்காததால் - என் கை விரல்கள் நடக்கும் போது விரிய மறுக்கின்றன... நீ இல்லாது - நான் தனித்துப் போவேனென்று தெரிந்திருந்தால் உன் கருவிலேயே உன்னுடன் கலந்திருப்பேன்..!! நீ எனக்கு காட்ட வேண்டிய நம் உறவுகள் எல்லாம் உன்னை எனக்குக் காட்டுகின்றார்கள் - என் தவிப்புக்கள் உனக்குத் தெரியவில்லையா....? என் முதன் முதற் காதலியே......…
-
- 20 replies
- 3.2k views
-