கவிதைப் பூங்காடு
கவிதைகள் | பாடல் வரிகள்
கவிதைப் பூங்காடு பகுதியில் கள உறுப்பினரல்லாதோரின் கவிதைகள், கவிதை மொழியாக்கம், உலகக் கவிதை, பாடல் வரிகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள உறுப்பினர்கள் அல்லாதவர்களின் கவிதைகள், கவிதை மொழியாக்கங்கள், பாடல் வரிகள் போன்றன மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
ஈழத்தை சேர்ந்த, பூர்வீகமாகக் கொண்டவர்களின் படைப்புக்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படவேண்டும். ஏனைய கவிதைகள் தரமான கவிதைகளை அறிமுகம் செய்யும் நோக்கில் இலக்கிய மின் இதழ்களில் இருந்து மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
5128 topics in this forum
-
இல்லை நான் உன்னை நேசிக்கின்றேன் இல்லை நான் அவனை நேசிக்கின்றேன் இல்லை எனக்கு வேண்டும் நீ என் உயிர் இல்லை என் உயிர் என்னிடம் இல்லை நீ என்றால் நானும் இப்பூமியில் இல்லை எனக்காக உன் வாழ்வை ஏன் இல்லை இது நம் வாழ்க்கை இல்லை முடிவாக என்னை விட்டு விடு இல்லை உன்னை மட்டுமல்ல என் உயிரையும் இல்லை சற்றுப் பொறு நான் யோசிக்க இல்லை நான் அவனை நேசிக்க இல்லை என் மனதில் உன் முகம் மட்டுமே இல்லை நீ வாழ வேண்டும் உனக்காக இல்லை உன் காதலுக்காக என்னுடன் இல்லை என் உணர்வுகளுடன் இல்லை உனக்காக நான் காத்திருக்க இல்லை சில நாள்கள் சில மாதங்கள் இல்லை பல வருடங்கள் தேவை இல்லை என் வாழ்க்கை நிச்சயம் இல்லை நான் இன்று சொல்கிறேன் நீ இல்லை எ…
-
- 17 replies
- 3.2k views
-
-
பெருநிலம் : உன்னைத் தின்று போட்டிருக்கிறார்கள் o தீபச்செல்வன் ------------------------------------------------------------------ (இன்னுமின்னும் அறியாத சேதிகள் அந்தப் பெருநிலத்தில் புதைக்கப்பட்டிருக்கின்றன) நேற்று உனது புகைப்படம் புதர் ஒன்றிற்குளிலிருந்து எடுக்கப்பட்டு காட்சிப்படுத்தப்பட்டிருக்கிறது. சகோதரியே! உன்னை உரித்து சிதைத்தவர்களின் கைளிலிருந்து எங்கள் காலம் நீண்டுகொண்டிருக்கிறது. கண்டெடுக்கப்படாவர்களின் சடலங்களுக்கு என்ன நேர்ந்திருக்குமென்று தலைகளை இடித்தழும் தாய்மார்களுக்கு இரத்தத்தால் முடிவுறுத்தப்பட்ட சகோதரிகளுக்கு உன்னை சிதைத்திருக்கிற புகைப்படம் எண்ணிக்கையற்ற முனைகளில் நடந்த கதைகளை சொல்லிக்கொண்டேயிருக்கிறது. …
-
- 12 replies
- 3.2k views
-
-
அம்மா நீ வேண்டும் கூட்டுக்குள் புறா போல் நானும் வாழ்கின்றேன் போகும் இடம் தெரியவில்லை போகவும் யாரும் விடவும் இல்லை அம்மா என்றழைக்க அம்மா இங்கில்லை உறவு என்று எனை அணைக்க எனக்கு யாருமில்லை அரிச்சுவடி படிக்கவில்லை அம்மா நடை பழக்கவில்லை அம்மா முகம் பார்த்து தூங்க ஒரு புகைப்படம் கூட எனக்கில்லை என்னை ஏனம்மா தனியாக விட்டுசென்றாய் நான் உன்னை அம்மா என்று அழைக்கமுன்பே அதை கேளாமல் சென்றாயே உன்னைத்தான் நான் நம்பிவந்தேன் அம்மாவே என்னை எங்கே விட்டுசென்றாய் அம்மாவே அன்னம் உண்ண பழக முன் கஞ்சி குடிக்கின்றேன் அம்மா எனக்கு ஒரு வாய் சோறூட்ட நீ எப்பொழுது வருவாய் அம்மா தரையில் உறங்குகிறேன் அம்மா உன்மடி உறங்க நீ வருவாயா அப்பா எங்கே அம்மா உன்னோடு கூட்டி ச…
-
- 14 replies
- 3.2k views
-
-
மழை சோ...... என்று பெய்த மழை சொல்லாமல் வந்த மழை சோம்பி இருந்த என் மனசு சோம்பலை ஓரத்தில் தள்ளி வைக்க..... சொட்டுச் சொட்டாய் வந்த மழை முற்றத்தில் முத்தமிட , வந்த புழுதி வாசம் மூக்கையடைக்க..... வண்டுவுக்கும் சிண்டுவுக்கும் கொண்டாட்டம் அவர் கொண்டாடம் காகிதகப்பலில் தெரியவர..... நானும் குழந்தையாகிப் போனாலும் , பெய்த மழையின் வேகத்தில் வீட்டுக்கூரை முகடு பிரிக்க !!!! என் வீட்டினுள் எட்டிப் பார்த்தது அழையாத விருந்தாளியாய் , நான் பானைகளால் கவசம் போட்டாலும் அங்கு என் ஏழ்மை சிரித்தது எக்காளமாய்..... மைத்திரேயி 05/02/2013
-
- 26 replies
- 3.2k views
-
-
நீங்கள் விரும்பி வாசிக்கும் கவிதை எது ? ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு இரசனை இருக்கும் அவ்வாறு இருக்கும் போது சிலருக்கு ஒன்றுமே பிடிப்பதில்லை ஆனால் யாழ் இணையத்தினை பொறுத்த வரை இங்கு ஏராளமான கவிதைகள் கருத்தாடுபவர்களால் எழுதப்பட்டுள்ளது. இதில் எந்த கவிதைகள் உங்களை கவர்கின்றன என அறிய ஒரு ஆவல் அந்த நோகில் தான் இதனை உங்கள் முன் வைக்கின்றேன்.
-
- 13 replies
- 3.2k views
-
-
பூவனமே பொன்மலரே மறந்தாயா என்னை? புருவமதில் என் உருவமதில் இருக்கின்றாய் பெண்ணே! சிறு கவியாய் பெரும் கனவாய் சிதைக்கின்றாய் என்னை -போ வழி விடவா வரம் தரவா? வாடுதடி நெஞ்சு! காதலனாய் உன் கால் கொலுசாய் இருந்தேனே ஒரு பொழுது காலமெலாம் போனதடி என் கண்களை இனி சுட்டு தள்ளு! இருப்பேன் டா உனக்காய் இருப்பேன் டா என்றாயப்பொழுது இருக்கேன்மா இருக்கேன்மா நீதான் எங்கே இப்பொழுது? சிறுமலரே -பனிமழையே செண்பகமே - நான் பாவமா இல்லையா சொல்லு? உன் பார்வையதால் இந்த பாவியெனை- அன்று ஏன் கொன்றாய் சொல்லு! கேளடியோ-மயிலழகே என் வாசலதை மண்மூடி போனாச்சு -ஏனடியோ வண்ண கோலம் இனி அது எதுக்கு சொல்லு! :wink:
-
- 19 replies
- 3.2k views
-
-
காதலை தேடினேன் காத்திருப்பு தந்த வலியினால் காணாமல் போனது கற்பனைகள் மட்டுமல்ல மகிழ்ச்சிகளும் தான்... அன்புள்ளங்களை தேடினேன் அத்தனையும் தந்த வலியினால் அறுபட்டு போனது ஆனந்தம் மட்டுமல்ல அரவணைப்புக்களும் தான் அன்பைத் தேடினேன் பாச உறவுகள் தந்த வலியினால் பறந்தே போனது பந்தங்கள் மட்டுமல்ல பாசங்களும் தான் அகிம்சையை தேடினேன் பொறுமை தந்த வலியினால் வற்றிப்போனது பொதுநலம் மட்டுமல்ல மனத நேயங்களும் தான் கனவுகளை தேடினேன் காலம் தந்த வலியினால் காணாமல் போனது நிஐங்கள் மட்டுமல்ல நிழல்களும் தான் :?
-
- 15 replies
- 3.2k views
-
-
ஏ.ஆர்.ரகுமானுக்கு ஒரு ஈழத்தமிழனின் வாழ்த்து ரோஜாவில் பூத்த ராஜாவே உங்கள் இசையோடு புலம்பெயாந்த ஈழத் தமிழனின் வாழ்த்துக்கள். நூறு கோடி இசைத் தொகுப்புகளால் உங்கள் முகம் உலகமெங்கும் விரிகிறது. இசைக்கு மொழியில்லை என்று உங்கள் இசையே உலகுக்கு புரிய வைத்தது இசைக்கு ஏது எல்லையென்று உலக விருதுகளே உங்களைத் தேடி வருகிறது. ராஜாவின் இசைத் தாலாட்டில் நாங்கள் நனைந்தாலும் உங்கள் இசைகேட்டபோது தான் துள்ளிக் குதித்து எழுந்தோம். தாயகத்தைப் பிரிந்து நாங்கள் குளிர்க்கூடுகளில் வாழ்ந்தாலும் உங்கள் இசையே எங்கள் வீடுகளில் ஊர்வலம் போகிறது. நீங்கள் மீட்டுகிற கறுப்பு வெள்ளைக் கட்டைகள் அது ஏழு கட்டையோ அல்லது எட்டுக்கட்டையோ …
-
- 14 replies
- 3.2k views
-
-
தோற்றவன் நான் (ஒருபேப்பருக்காக கோமகன் ) சோகங்கள் ஆயிரம் மனதில் இருந்தாலும் சோம்பியே இருக்க விடவில்லை புலத்து வாழ்க்கை......... எல்லோரையும் போல விசைப்பலகையில் தேசியம் பேச எனக்கு தெரியவில்லை. தோற்றுப் போனோம் என்ற வரியில் நானும் பங்காளிதானே........ உண்மை இதை மறந்து விசைப்பலகையை உடைப்பதில் யாருக்கு என்னபயன் ???????? ஆனாலும், புலத்தில் உண்மையை மறைத்தால் தான் கதாநாயக வேடம்.... நன்றாகத்தான் கட்டுகின்றார்கள் புலத்தில் ஒருசிலர் கதாநாயக வேடங்களை......... வந்தாச்சு வந்தாச்சு கோடைகாலமும் வந்தாச்சு இடத்துக்கு இடம் உல்லாசப் பயணமும் வந்தாச்சு பண்ணை வீடுகளில் பார்பர்கியூ பார்ட்டியும் வந்தாச்சு வாட்டிய இறைச்சில் என் தேசியமும் அரைபடும் ......... தோற்ற …
-
- 38 replies
- 3.2k views
-
-
'வேப்பம் பூ மிதக்கும் எங்கள் வீட்டு கிணற்றில் தூர் வாரும் உற்சவம் வருடத்துக்கு ஒருமுறை விசேஷமாக நடக்கும் ஆழ நீரினுள் அப்பா மூழ்க மூழ்க அதிசியங்கள் மேலே வரும் கொட்டாங்குச்சி,கோலி, கரண்டி துருபிடித்த கட்டையோடு உள்விழுந்த ராட்டினம், வேலைக்காரி திருடியதாய் சந்தேகப்பட்ட வெள்ளி டம்ளர்' சேற்றுக்குள் கிளறி எடுப்போம் நிறையவே, 'சேறுடா சேறுடா' வென அம்மா அதட்டுவாள் என்றாலும் சந்தோசம் கலைக்க யாருக்கு மனம் வரும்? "படை வென்ற வீரனாய் தலைநீர் சொட்டச் சொட்ட அப்பா மேலே வருவார். இன்று வரை அம்மாவும் கதவுக்கு பின்னாலிருந்துதான் அப்பாவோடு பேசுகிறாள். கடைசி வரை அப்பாவும் மறந்தேபோனார் மனசுக்குள் தூர் எடுக்க"... #விகடனில் ப…
-
- 9 replies
- 3.2k views
-
-
பூங்கா மிருகங்களின் அன்புமொழி ஒருபக்கம் பறைவகளின் சங்கீதம் ஒருபக்கம் சின்னஞ் சிறுவர்களின் மழலை மொழியோ மறுபக்கம் காதலர்களின் காதல் மொழியோ இன்னொருபக்கம் இவை மட்டுமா? மரம், செடி, கொடிகள் அசையும் இனிய கீதங்கள் அத்துடன் கூடியே அழகிய பூக்களின் நறுமணங்கள் இவற்றையெல்லாம் உள்ளடக்கிய –ஓர் அழகிய இடம் பூங்கா!
-
- 16 replies
- 3.1k views
-
-
-
யார் சொன்னது ...? கூப்பிட்ட குரலுக்கு ... கடவுள் வராது என்று ...? கூப்பிட்டு பார் உன் அம்மாவை ......!!! அம்மா கடுகு கவிதை எவராலும் முடியாது .. நொடிக்கு நொடி என்ன ... தேவை என்பதை... உணரும் மனோ தத்துவ .. ஞானதன்மை ...!!! அம்மா கடுகு கவிதை பிறந்தபோது... ஈரத்துடன் பார்த்த ... முகத்தையே - இறந்து ... கிடக்கும் போது இதே ... முகமாக பார்க்கும் ... ஒரே -ஜீவன் - அம்மா ....!!! அம்மா கடுகு கவிதை உயிருடன் ... இருக்கின்ற போது மட்டும் ... அழைப்பதில்லை ... அம்மா ....!!! மறைந்து பல ஆண்டுகள் ஆனாலும் இன்பத்துக்கும் துன்பத்துக்கும் அழைக்கும் உடன் சொல் .... ஒரே உலக சொல் -அம்மா ....!!! அம்மா கடுகு கவிதை இந்த உலகு புவி சுற்றால்... இயங்க வில்லை -தாயின் .. தூய அன்பால் சுற்றுகி…
-
- 5 replies
- 3.1k views
-
-
பேனாவோடு நான்... என்னவளே... என்ன யோசிக்கிறாய்.. உனக்காய் நான் எழுதுவதை இன்னும் என் பேனா நிறுத்தவில்லையென்றா..? ஆமாம்.. அதைத்தான் நானும் யோசிக்கிறேன் உனக்கு தெரியுமோ தெரியாது ஏன் என் கவிதைகளில் எழுத்து பிழைகள் அதிகமென்று ஏன் தெரியுமா... என் கவிதைகளை நான் வாசிப்பதில்லை வாசித்தால் ஏன் எழுதக் கற்றுக்கொண்டேன் என்பதை படித்துக் கவலைப்படுவேன் என்பதால்தான். பேனா எடுத்தவர் யாரும் பேனாவால் இறந்ததில்லை நான் மட்டும்தான் உனக்காய் எழுதி எழுதி இறந்து கொண்டிருக்கிறேன் இந்த உலகம் கவலைப்படுகிறது உனக்காக மட்டும்தான் எழுதுகிறேன் என்று உண்மைதான் அதற்காக நான் அதிகம் வருத்தப்படுவதுண்டு ஆனால் அவர்களுக்கு எப்ப…
-
- 20 replies
- 3.1k views
-
-
யாராவது கவிஞருக்கு சிலேடையாக கவிதை எழுதமுடியும் என்றால் தயவு செய்து பதில் அனுப்பவும். எனக்கு ஓரளவுக்கு Rap பாடல்கள் பாடத்தெரியும் ஆனால் கவிதை வருது இல்லை ஆகவே உங்களால் முடிந்தால் எனக்கு உதவவும் ஒரு விடயம் எனக்கு புலிகளின் வான்படை தொடர்பாக கவிதை வேண்டும்
-
- 18 replies
- 3.1k views
-
-
வரிப்புலி ஊர்வலம்! ----------------- ஆடிவரும் கடலையே - சொல்லு எங்கள் தேச ஆளூமை கொண்டவனை -எங்கே ஒளித்து வைத்தாய்? காற்றே வா மெல்ல எம் கதவு திற- பனியிலும் மழையிலும் - சுட்டெரிக்கும் வெய்யிலிலும் சுதந்திரமே பெரிசென்று சுழன்று திரிந்த சுந்தரனை- எங்காவது பார்த்தீயா? சொல்லி போ! சிங்களத்தின் மடியில் ஒரு இடியாய் வெடித்தவன் - சிறுத்தை இனத்தின் தலையில் மணிமுடியாய் உயிர்த்தவன் படை நடத்தும் வீரர்கெல்லாம் ஒரு பாடமாய் இருந்தவன் அவனை வெல்வதற்கு யார்க்கும் ஒரு வழியுமில்லை- விடை சொல்லாமல் போனானே அதுதான் - ஏனென்று இன்னும் தெரியவில்லை! எம்மை அடித்தவனை அடியோடு எரித்த பெரு நெருப்பு- எங்கள் அண்ணன் அணைத்து வளர்த்த அக்கினி குஞ்சு- கிட்டண்ணா - தமிழன்…
-
- 14 replies
- 3.1k views
-
-
தமிழ் எழுத்தாளர் இணைய அகம் எமது வேணடுகோளை ஏற்று கவிதைத் தொடரில் பங்குபற்ற ஆதரவு தந்த தங்கள் அனைவருக்கும் தமிழ் எழுத்தாளர் இணைய அகத்தின் சார்பாக பணிவன்பான நன்றிகளை வணக்கத்துடன் தெரிவித்து இத்திட்டத்தில் இணைந்துள்ள படைப்பாளிகளின் பெயளர்களை இங்கே மகிழ்வோடு பதிவு செய்கின்றோம். திரு.பொலிகை ஜெயா - சுவிஸ் திருமதி. கோசல்யா சொர்ணலிங்கம் - ஜேர்மனி திருமதி.சுமதி பாலசசந்தர் - பிஜித்தீவு திருமதி. சுபாஜினி சிறீரஞ்சன் - டென்மார்க் திருமதி. ரஜனி அன்ரன் - ஜேர்மனி திரு. ஆதவன் கதிரேசர்பிள்ளை – டென்மார்க் திருமதி. பாமா இதயகுமார் - வன்கூவர், கனடா திருமதி.வேதா இலங்காதிலகம் - டென்மார்க் திருமதி. மாலினி மாலா – ஜேர்மனி செல்வி. சறீகா சிவநாதன் - ஜேர்மனி திரு. நோர்வே நக்கீரா – நோர்வே திரும…
-
- 25 replies
- 3.1k views
-
-
மொட்டென முகம் மூடியிருந்தேன்............. கிளி - கொத்தாதவொரு கொவ்வை பழமாய்......... என் பாட்டில் நானிருந்தேன்! சட்டென்று கடந்தது ஒரு -மைனா..... பட்டென்று முழைத்தது - காதல்! எழுத்துகூட்டி தமிழ் படித்தவன் ஒரே இரவில் கவிஞன் என்றானேன்! இதயத்தின் அடியிலொரு நீர் வீழ்ச்சி..... இனி என் இயங்கு திசை எங்கும் .......... அவள் ஆட்சி! ஆயுள் ரேகை உண்டென்று.......... உலகம் ஆயிரம் சொல்லும்...... ஆளவந்தாள் என்னை - இனி அவளே என் ஆயுளுக்கு நீதிபதி! பாடல் கேட்க பிடிக்குது...... சித்ரா பாடியது அதுவென்று தெரிந்தும்........ என் சித்திரம் பாடுதென்று ........ திருட்டு கனவு வருது! போச்சு போச்சு................ இனி என்ன செய்ய நான்? ஊர் உறங்கும…
-
- 17 replies
- 3.1k views
-
-
நண்பனின் நட்பு போலி முகம் காட்டி புன்னகைத்ததும் இல்லை.... இவள் மனதினை என்றும் நோகடித்ததும் இல்லை... நண்பனைப் போல் நடித்ததும் இல்லை... நட்பினுள் புகுந்து சுத்து மாத்து செய்ததும் இல்லை... வாழ்க்கையில் தடம் மாறி போக சொன்னதும் இல்லை.... வீணான கதைகள் என்றும் கதைத்ததும் இல்லை... உன் நட்பெனும் உறவில் நான் பிரிய நினைத்ததும் இல்லை... உன்னை என்றும் நான் நினைத்துப் பார்க்க மறந்ததும் இல்லை... இல்லை இல்லை என்று சொல்ல நல்லவைகள் குறுகியனவும் இல்லை.... நம் நட்பெனும் வட்டம் போலியானதும் இல்லை....!
-
- 14 replies
- 3.1k views
-
-
அடங்காமல் பாய்ந்து நின்ற ஆறடிப் புலியடா...! இளங்கவி - கவிதை பூக்களும் பூக்காத கந்தக பூமியாய்.... பிணங்களின் குவியலில் நிரம்பிட்ட பூமியாய்..... கரும்புலி வேட்டைகள் பல நடத்திட்ட பூமியாய்.... பாய்ந்த இரத்தத்தின் ஈரம் காயாத பூமியாய்..... நாம் வாழ்ந்த பூமியின்று நடுத்தெருவில் தத்தழிக்க நாய்களும் நரிகளும் நக்குத் தீனிக்கு அலைகிறது..... புத்தரின் சரித்திரம் புதைந்து கிடக்குதாம்..... அதை புனரமைத்துக் கட்டிவிட புத்த பிக்குகள் அலையுதாம்.... போய்விடுங்கள் இங்கிருந்து எங்கள் பிணங்கள் தான் கிடக்கிறது..... நீர் விதைத்துவிட்ட விதைகளின்று முளைப்பதற்காய் தவிக்கிறது..... அநியாயத்தின் வெற்றி அதிக நாள் நிலைக்காது…
-
- 18 replies
- 3.1k views
-
-
மாரீசன் என்ற மாயமானில், மதியிழந்த சீதா தேவியின், மயக்கம் போல, இரவு பகலாகத், தினமும் பூக்கின்ற,, இணையத் தளங்களின் பூக்களால், பாலும், நீரும் கலந்த கிண்ணத்திளிருந்து, பாலை மட்டும் பிரித்தெடுக்கும், வல்லமையில்லாத, பாவப் பட்ட அன்னப் பறவையாய், உண்மையும் பொய்யும், ஒன்றுடன் ஒன்று, குலவிக் கலவும் , உலகத்தில், உண்மையைத் தேடுகின்றேன்! பொன்னும், மணியும், புன்னகைகளும் அணிந்து, பொய்மை வலம் வருகின்றது. மண்ணின் மைந்தர்கள், என்ற கவசம் பூட்டித், தென்றல் காற்றின் மென்மையோடு, பொய்மை உலா வருகின்றது. புனிதமேனும் பேழையில். பத்திரமாகப் பூட்டிவைத்துப், பீடத்தில் அமர்த்தித், தூவிய அர்ச்சனைப் பூக்களிலும், துளித் துளியாய்ச் சிந்திய, துவர்ப்பு…
-
- 23 replies
- 3.1k views
-
-
வாசித்ததில் பிடித்தது.... I Love You! I யப்படாதே கண்ணே! L லோர்க்கும் கிடைக்காது நம்மைப் போல O ருங்கிணைந்த இதயம் இருந்தும் V தியால் பிரிந்தோம், கவலைப்படாதே! E திகாசத்தில் அம்பிகாபதி அமராவதி போல இடம்பெறும் நம்காதல் Y யாரக் கன்னியே O ருநாள் இந்த U கத்தின் சரித்திரத்தில் நம்காதல் இடம்பெறும்!
-
- 23 replies
- 3.1k views
-
-
என்- இடத்தில் என்னை இழந்தேன் வாழ்வது நானல்ல என்னினைவில் நீ தான் இங்கு....! களங்கமற்ற உன் நினைவில்- கனவில் நிழல்களுடன்....நிதமும்.. நிஜமாகுமா...........?? "அம்மா.......'' அலறிடத் துடித்தேன் அழுதால் வாய் விட்டு..... அயலில் இருந்து அன்னியமாவேன்...! மனதுள் விக்கி...முனகி... முடியாமல் கதவினை மூடி... தாப்பாள் போட்டு கட்டிலில் சாய்ந்து.. கண்களை மூடினால்...... ''அம்மா.......'' அலறிடத்துடித்தேன் அழுதால் வாய்விட்டு.......? களங்க மற்ற-உன் நினைவில்....கனவில்.... நிழல்களுடன்....நிதமும்.... நிஜமாகுமா...... :?: :?: :?:
-
- 17 replies
- 3.1k views
-
-
முல்லைப் பாட்டு - வ.ஐ.ச.ஜெயபாலன் ஆயிரம் காலங்களைக் கடந்த கடல் ஒரு முதுகவிஞன் காதலைப் பாடுவதுபோல இன்றும் புது அலைகளை எழுப்புகிறது. அந்த அலைகளின் எல்லைக்குமேலே யுகம்யுகமாய் மோர் வார்த்துக் கைசிவந்த இடைச்சிகளின் மேச்சல் நிலம். அந்தக் கானல் பொட்டலின் கந்தல் குடையான சிறு மரம் நோக்கி கத்திக் கம்போடும் செல்பேசியோடும் பெயர்கிறாள் ஒரு புல்வெளியின் இளவரசி. நூல் பாவையாய் அவள் அசைவின் ஏவலுக்கெல்லாம் ஆடித் தொடர்கிறது நாய். அந்த நான்கு கண்களின் பார்வையில் கட்டுண்டு மேய்கிற ஆட்டுக்கிடைகள் செம்புழுதி போர்த்த பற்றைகளிடை காடைகள் மிரளாமல் ஊரும். ஆயிரம் காலத்து வளமையாய் நிழல் தேடிவரும் ஆயர்குலத் தேவதைக்கு பழமும் வைத்திருக்கிறது இலந்த…
-
- 14 replies
- 3.1k views
-
-
குதிரைக்கு கொம்பு முளைத்த காலமிருந்து கற்பனைக் குதிரைகளின் இனப்பெருக்கத்திற்கும் குறைவில்லை..! களத்தில் அன்று ஒரு லங்காபுவத்..! கடல் கடந்த தேசங்களில் இன்று எல்லாமே அதுவாய்…! இல்லாத… பிரபா அணி கிட்டு அணி சண்டை..! இருந்த… கிட்டு மீது பொட்டு தாக்கு பொட்டு மீது மாத்தையா தாக்கு மாத்தையா மீது யோகி தாக்கு யோகி மீது கரடி தாக்கு….. இப்படியே திண்ணைப் பேச்சில் பொழுது கழித்த கூட்டம் புலம்பெயர்ந்து மட்டும் திருந்தவா போகுது..??! இறுதியில்… சூசை மகன் மீது பிரபா தாக்கு பிரபா மீது சூசை கடுப்பு… அன்ரன் மீது பிரபா விசனம் விசனம் மீது பிரபா கொலைவெறி… போராட்டம் நெடுகிலும் எம்மவரின் கற்பனைக் குதிரைகளின் தடாலடி ஓட்டப் போட்டிகளுக்கும் குறைச்சலில்ல…
-
- 40 replies
- 3.1k views
-