கவிதைப் பூங்காடு
கவிதைகள் | பாடல் வரிகள்
கவிதைப் பூங்காடு பகுதியில் கள உறுப்பினரல்லாதோரின் கவிதைகள், கவிதை மொழியாக்கம், உலகக் கவிதை, பாடல் வரிகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள உறுப்பினர்கள் அல்லாதவர்களின் கவிதைகள், கவிதை மொழியாக்கங்கள், பாடல் வரிகள் போன்றன மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
ஈழத்தை சேர்ந்த, பூர்வீகமாகக் கொண்டவர்களின் படைப்புக்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படவேண்டும். ஏனைய கவிதைகள் தரமான கவிதைகளை அறிமுகம் செய்யும் நோக்கில் இலக்கிய மின் இதழ்களில் இருந்து மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
5128 topics in this forum
-
பட்டாம் பூச்சியின் கனவு மனம் வலிக்கிறது. சம்பிரதாயச் சடங்கின் வடிவில் கழுத்தை சுற்றிப் பொன்நாகம் பளபளக்கிறது. அவளுக்கு கட்டாயக் கைதும், விலங்கு மாட்டலும்.. உடல் அவளுக்கானதாக இல்லை. முதல் முத்தம், முதல் தழுவல் வலியாக.. ஒரு படர்கையின் கனத்தில் பெண்மை நொறுங்கிப் போனது. அவள் சுயம் மறுக்கப்பட்டது. குரல் ஒடுக்கப்பட்டது. இன்னொரு வடிவம் அவளுள் சங்கமிக்க அவள் அனுமதியின்றி எல்லாம் ஆகிவிட்டது. நீளும் ஒவ்வொரு இரவிலும் சுயம் ஏளனப்படுத்தப்படுகிறது இரவுகள் விடியும் ஒவ்வொருகணமும் படர்ந்த இன்னொரு வடிவம் வெற்றிக் களிப்பில் நெஞ்சு நிமிர்த்துகையில் அவள் மனதில் படிந்தவலி விசுவரூபம் எடுக்கிறது. உள்ளக்கிடக்கையில் கிடந்துழலும் சுயம் அடிக்கடி பீற…
-
- 10 replies
- 2.6k views
-
-
எனக்கும் கவிதை எழுத ஆசை இலக்கியம் எதுவும் கற்கவில்லை இலக்கணம் எதுவும் அறிந்ததில்லை மொழியின் வகைகள் புரிந்ததில்லை ஆனாலும் எனக்கு கவிதை எழுத ஆசை மரபுக் கவியின் இலக்கணமோ புதுக்கவியின் வரையறையோ எதுவும் அறியா பாமரன் நான் ஆனாலும் எனக்கு கவிதை எழுத ஆசை தமிழ் மொழியில் உள்ள அணி அறியேன் தொல்காப்பியம் குறும் கூறும் யாப்பறியேன் பழம் கவிநூல் எதுவும் கற்றறியேன் ஆனாலும் எனக்கு கவிதை எழுத ஆசை காப்பிய நூல்களை கண்டதில்லை பாரதி பாடல் கேட்டதில்லை உருத்திரமூர்த்தியின் கவி ஒன்றும் படித்ததில்லை ஆனாலும் எனக்கு கவிதை எழுத ஆசை
-
- 11 replies
- 2.6k views
-
-
பொறுமைகாத்த தமிழன் படை பொங்கி எழுந்தது தலைநகரில் வெறியர்படை தலைகள் தெறிக்குது மகிந்தாவின் சிந்தனையாம் மதிகெட்டு ஓடுது தலைவரின் சிந்தனையில் தமிழர்படை முன்னேறுது போர்என்று வந்தபடை போராயுதம் போட்டு ஓடுது கடலிலே கடற்புலிகள் கடல்வீரம் காட்டுது கடற்படை வெறியான் கடற்கலங்கள் வெடித்துசிதறுது தற்காப்புப் போரில் தமிழன்படை வென்றுகுவிக்குது ஓயாதலைகள்5 இல் வெறியர்படை ஓடுதுஅங்கே ஓடுதுவிரைந்து இந்தமீட்புப்போரில் தம் உயிர் ஈந்த இம் மாவிரருக்கு வீரவணக்கம்
-
- 14 replies
- 2.6k views
-
-
அன்பென்றால் அம்மா அறிவென்றால் அம்மா அவனியில் அவள் அன்றி அரவணைப்பார் யாரம்மா துணையென்றால் தூண் அம்மா துணிவோடு தானம்மா தூரதேசம் ஏனம்மா துரத்தினதயே பாரம்மா செல்ல மகன் நானம்மா சென்றதனால் தானம்மா சொந்தமென வந்த செல்வம் செய்த வேலை சோகம்மா
-
- 14 replies
- 2.6k views
-
-
முள்ளிவாய்க்கால் 7ஆம் ஆண்டு: ஆற்ற ஒண்ணா அஞர் சேரன் சில வாரங்களுக்கு முன்பு தொறொன்ரோ நகரின் மத்தியில், குளிரில் மெல்ல நடுங்கியவாறு, குளிராடையுமின்றிக் கோப்பிக் கடையொன்றின் வாசலருகே கோப்பியொன்று வாங்கித் தருமாறு போவோர் வருவோர் எல்லோரையும் இரந்த ஒரு தமிழரைக் கண்டேன். எனது வீட்டுக்கு அருகில் ஸ்கொட் மிஷன் நூறு ஆண்டுகளாக நடத்திவரும் வீடற்றவர்களுக்கான இரவுநேரத் தங்குமிட வாயிலில் அவரை அடிக்கடி கண்டிருந்தாலும் பேச வாய்ப்புக் கிடைத்ததில்லை. (ஒருமுறை இந்த மிஷனுக்குச் சாப்பாடு வழங்க என இடியப்பம் எடுத்துச் சென்றபோது, அங்கிருந்த அம்மணி, “இங்கு வருபவர்கள் இத்தகைய அந்நியச் சாப்பாடுகள் சாப்பிட மாட்டார்கள். வேறு ஏதாவது கொண்டு வாருங்கள் என்று சொன்னது நினைவு வந்தது”) …
-
- 6 replies
- 2.6k views
-
-
இவள் முகம் பார்த்தால் இவனுக்குள் காதல் இல்லையேன்று மறுத்திட இதயமில்லை என்னிடம் இனியவளின் வார்த்தை இதமாய் தானிருக்கும் இடிகள் விழும் காலமும் இனியாய் தானிக்கும் இது என் காதலின் ஆரம்பம் இவள் முடிவின் இறுதியாகுமோ? இமை மூடி திறந்தால் -என் இமைகளை தாண்டி நீர் சொறியும் இசையதை கேட்டால்- அதில் இனிமையின்றி இருக்கும் இப்படியேன் ஆகிவிட்டேன் இறைவனிடம் கேட்டேன் இன்று வரை பதில்லை -அருகில் இருப்பவரிடம் கேட்டேன் இது என்ன கேள்வி என்றார் இப்படியேன்னை சாகவிட இனியவளே நான் என் செய்தேன் இதயமதை கேட்டதற்க்கு இறக்கும் வரம் தருவதா? இதிலுனக்கென்ன ஆனந்தம் இன்றும் நம்புகின்றேன் இறுதிவரை பார்க்கமாட்டேன் இன்னோருவள் முகமதை இருக்கிறேன் உனக்காக இவ்வ…
-
- 12 replies
- 2.6k views
-
-
புலி மௌனம் கலைத்த பூகம்பச் செய்தி காலப் பெரு வெளியில் - ஈழக் கதை எழுதும் இளைய தேவரீரே! தமிழர் வாழ்வெடுக்கத் திறனாயும் பணியதனை தரணிக்கு விட்டுச் சென்ற தமிழ்மானப் புதல்வர்களே! வரலாறு எழுதும் வண்டமிழ்க் கோல்களுக்கு உரமூறும் கரு தந்த காலக் கருவூலங்களே! கருவூறும் உயிரணுவும், காடேகும் திருவுருவும், இருப்புக்கு மத்தியிலே இயங்கும் எவ்வுயிரும் சிரம் தாழ்த்தி உமைத் தொழுதெழும். நீங்கள் இலக்கெடுத்துப் போனகதை இதயத்தில் வலித்திடினும், இனவாத இதயத்தில் அறைந்த சேதி இனிக்கிறது. வெள்ளரசின் அடியினிலே வேதாளக் கழுத்தறுத்து, விம்மியழும் அன்னையவள் விழிநீரைத் துடைத்து விட்டீர். இது இனங்காக்கும் போர், ஈழ நிலங்காக்கும், மனித வளங்காக்குமெனச் சிங…
-
- 9 replies
- 2.6k views
-
-
தமிழினி என்னும் வலைப் பதிவாளரின் கவிதை, இது யாழ்க் களத் தமிழினியா என்று தெரியாது? :roll: http://eelavali.blogspot.com/2006/07/blog-post_20.html கனத்த மனதுடன் உங்களைக் கேட்கிறேன் கனிந்த மனதுள்ள உங்களைக் கேட்கிறேன் படித்த மனிதரே உங்களைக் கேட்கிறேன் பாரினில் புகழ்பெற்ற உங்களைக் கேட்கிறேன் இளகிய மனதது உங்களுக்குள்ளது இயற்கையின் அழிவையே தாங்கிடவற்றது பச்சை இலையதன் காடுகள் காப்பவர் பாசத்துடனே விலங்கினை பார்ப்பவர் விலங்கை விடவும் கேவலமாகிய விசயங்கள் ஈழத்தில் விஞ்சிக் கிடக்குது பச்சைக் குழந்தை செத்துக் கிடக்குது பாகம் பாகமாய் வெட்டிக் குவிக்குது நித்தம் நித்தமிங்கு சாவுகள் நடக்குது நினைத்திடாத பல கேவலம் நடக்குது உங்கள்…
-
- 15 replies
- 2.6k views
-
-
நீ இல்லாத ... பொழுதில் ... நான் ....!!! நீர் இல்லாத இடத்தில் மீன் ....!!! ^^^ ஒரு வார்த்தை கவிதைகள் கவிப்புயல் இனியவன் உன் எண்ணங்களை... சுமந்து ... தவிர்க்கும் .... நான் .....!!! வலையில் சிக்கி தவிக்கும் மீன் .....!!! ^^^ ஒரு வார்த்தை கவிதைகள் கவிப்புயல் இனியவன்
-
- 2 replies
- 2.6k views
-
-
எனது கற்பனை மலர்ந்தது மலர்ந்தது தமிழ் ஈழம் தமிழ் மக்களின் மனதில் தனி ஈழம் முத்தென முத்தெனப் பிறந்தது அலை கத்திடும் கடலில் பிறக்கவில்லை செத்திடச் செத்திடப் பல உயிர்கள் அங்கே சினமாய்ப் பிறந்தது தமிழ் ஈழம் கொடியினில் கொடியினில் புூக்கவில்லை கொடுந்தீ என்னும் போரில் பிறந்தது தமிழ் ஈழம் துணையெனத் துணையென நாம் கண்ட பல சொந்தங்கள் எமைப் பிரிந்திடவே பலமாய்ப் பிறந்தது தமிழ் ஈழம் அரிதென அரிதெனப் பலர் சொன்னார் அதுவும் இன்று உருவாச்சு அரியணை அரியணை ஏறியது ஐ. நா சபையில் அமர்ந்திடவே துணையெனத் துணையென நாம் கண்ட துணைகள் மீண்டும் திரும்பாது துணையெனத் துணையெனத் தானிருப்பாள் என்றும் என்றும் எம் தமிழ் அன்னை. உற்சாகமும் விருப்பமும் தான் சராசரியானவரை…
-
- 12 replies
- 2.6k views
-
-
சுற்றி சுற்றி வட்டமிட்டாய் உள்ளம் எங்கும் முத்தமிட்டாய் தேன் குழைய பேசி என்னை தேனி போல மொய்கவைத்தாய் காத்திருந்து கதைகள் பேசி காதல் வலை வீசிச் சென்றாய் கள்ளமில்லா எந்தன் நெஞ்சில் காதல் விதை தூவிச் சென்றாய் எட்டி நின்றேன் ஏணிப்படியில் கிட்டவந்து இறக்கி விட்டாய் என் உள்ளம் எல்லாம் உன் சிந்தை என்றாய் சிக்கித் தவித்து தேடிவந்தேன் தேடாமல் நீயும் போனது ஏனோ
-
- 17 replies
- 2.6k views
-
-
வைரமுத்துவின் உதவியாளர் ஆர். அபிலாஷ் - எனக்கு பன்னிரெண்டு வயதிருக்கும் போது நான் கவிதை வெறியனாக இருந்தேன். அக்கட்டத்தில் நான் கல்கி, அகிலன் போன்றோரின் தலையணை நாவல்கள் வாசித்திருந்தாலும் கவிதை மட்டுமே என்னை உன்மத்தம் கொள்ள செய்தது. துரதிஷ்டவசமாய் என் வீட்டில் அவ்வளவாய் கவிதை நூல்கள் இல்லை. ஊரில் நல்ல நூலகங்கள் இல்லை. ஒரே புத்தகக் கடை நாகர்கோயிலில் இருந்தது. என்னால் அவ்வளவு தூரம் பயணிக்க முடியாது. பள்ளி முடிந்த வந்த பின் கணிசமான நேரம் இருக்கும். தனியாக கையில் கிடைத்த ஏதாவது காகிதங்களை திரும்ப திரும்ப வாசித்தபடி இருப்பேன். என் பிறந்த நாள் ஒன்றுக்கு அக்கா எனக்கு பாரதியார் கவிதைகள் தொகுப்பு வாங்கித் தந்தார். அதை நான் விவிலியம் போல மனனம் செய்தே…
-
- 0 replies
- 2.6k views
-
-
தேம்பியழுகிறது தேசம்...! ஐயகோ....! எம் ஜீவனழுகிறதே மீள ஓர் முறை.... என்ன கொடுமையிது... நோயுன்டதே - எம் பேறறிவை....! ஏன் இந்த துயர் மீண்டும் _ எம் நெஞ்சேற விம்மிப் புடைக்கிறோம்..? தூண் சரிந்ததோ..? மீண்டும் எம் நூலகம் எரிந்ததோ...? தலைவனை தம்பியென்றழைத்து தத்துவம் சொன்னவரே எரிமலையில் குடிகொன்ட எம்மினிய அறிவூற்றே......! கரைந்து போனதே - மதிக் கடலொன்றிங்கே....! பகையோடு பேச இனியேதுமில்லை என்றெண்ணிப்போனீரோ...? உம் பணி முடிந்ததென்று உரைத்தவர் யார்....? இடை நடுவில் வழி தேடியன்றோ நிற்கின்றோம்....! தேசத்தின் குரலே......! தேம்பி அழும் எமை தேற்றி அறிவுரைக்க வருவீரோ...?…
-
- 6 replies
- 2.6k views
-
-
பூட்டிய வீட்டுக்குள் புளுங்கிக் கொண்டிருந்தேன்..... காற்றினைத்தேடி கதவினைத் திறந்தேன்...... வந்தது காற்று ! ஒரு முறை..... பூஞ் சோலையில்- புகுந்து பூக்களில் புரண்டு புதுத் தென்றலாய்- மிதந்து (பூ) வாசனையோடு... வாசலில்- வந்தது ! மறுமுறை....... சாக்கடையில்- புகுந்து சகதிகளில் நனைந்து நாற்றத்தைச் சுமந்தபடி.... வாசலில்- வந்தது ! மறுமுறை...... கோவிலில்- புகுந்து தீபத்தில் எரிந்து தூபத்துள் புகைந்து தெய்வீக வாசனையாய்..... வாசலில்- வந்தது ! ஒவ்வொரு முறையும் ஒவ்வொரு விதமாய் ஒவ்வொரு காற்று...... ஒவ்வொரு காற்றைப் போல் ஒவ்வொரு விதமாய் ஒவ்வொரு மனிதர்..! ம்..... ஒவ்வொரு காற்றையும் சுவாசிக்கப் ப…
-
- 14 replies
- 2.6k views
-
-
கறுப்பு யூலை மறக்கடிக்கப்படாத மறக்கப்படாத அழியாத அத்துயர் நினைவுகள் எல்லோர் தமிழர் நெஞ்சங்களிலும் தடம் பதித்திருக்கும் மாதம் யூலை கறுப்பு யூலை.... அப்பாவித் தமிழர்களின் உடல்கள் சிதைக்கப்பட்டு அதில் இருந்து வெளியேறிய இரத்தம் அன்று இரத்த ஆறாக ஓடிய காலம்...! இலங்கை அரசாங்கத்தின் அத்துமீறிய கட்டவிழ்ப்புகளால் திட்டமிட்டே நம் இனங்களின் வாழ்விடங்களை எரித்தும் சொத்துக்களை அபகரித்தும் பலரை உயிரோடு எரித்தும் வெட்டியும், கொத்தியும் நம் இனங்களை நாட்டை விட்டு விரட்டிய காலம்... சிங்கள வெறியர்கள் ஆடிய ஆட்டத்தில் நம் இன உயிர்களை வதைத்து, கதிகலங்க வைத்து அதில் அவர்கள் குளிர் …
-
- 17 replies
- 2.6k views
-
-
தேநீர் கவிதைகள்: தொலைந்து போன நாட்கள் எப்படி இழந்தோம் என்பது தெரியாமலேயே தொலைந்து போய்விட்டன அந்த இனிய நாட்கள். கணக்கன் தோட்டத்து உப்புநீரில் குளித்தால் மேனி கருக்குமென்ற அம்மாவின் அதட்டலுக்கு அஞ்சி வியாபாரி தோட்டத்து நன்னீர் கிணறு அதிர குதித்தாடிய ஈர நாட்கள்... ஓடைநீர் ஊற்றில் சிக்கிய உறுமீனுக்காய்த் துள்ளி விலாங்கு மீன் வேட்டைக்காரனாய்ப் பீற்றிக்கொண்ட நாட்கள்... கவட்டைக் கொம்பொடிய …
-
- 0 replies
- 2.6k views
-
-
-
- 18 replies
- 2.6k views
-
-
என் செல்லத்துக்கு ஒரு மடல் ......ஒரு தாயின் கண்ணீர் ... காலங்களுக்கு தான் எத்தனை வேகம் . மழலையாய் , தவழ்ந்து ,எழுந்து ,நடந்து , நின்று , ஓடி , துள்ளி விளையாடி ,என் செல்ல மகளாகி (மகனாகி ) படித்து ,பல்கலை புகுந்து ,பட்டம் பெற்று.... இன்று மேற் படிப்புக்காய் ,வெளி நாடு செல்கிறான் (செல்கிறாள் ).பிரிவு என்றும் துன்பம் தான் நீ மேலே வர வேண்டும் என்று நான்,,,,, கீழே ......,பழைய நினைவுகளில் ஆழ்ந்து விட்டேன் .நானும் ஒரு மகளாய் ,மேல் படிக்க சென்றபோது , என் தாய் என kகு சொன்னதை நான் இன்று....... தாயaக உனக்கு சொன்ன போது... நெகிழ்ந்து தான் போனேன் . கண்மணி கவனமடி , கல்லூரி வாழ்க்கை , மலர்கள் உள்ள தோட்டம் மணம் உண்டு ,அழகு உண்டு ,முள…
-
- 3 replies
- 2.6k views
-
-
மலரின் சிதைவொன்று காணொலியில்.......... கவிதை...... விடுதலைக்காய் விதையான எங்கள் வீரச் சின்னமொன்றை சிதைத்த காட்சி கன்டதுமே கண்களிலே இரத்தத் துளி...... கருகிய மலரைக்கூட கசக்கிய காட்சிகண்டால் புத்தரும் நடுங்கிடுவார்.. கிட்லரும் ஓடிடுவான்.... ஜேசு நாதர்கூட; மறுபடியும் சிலுவையிலே ஏறிடுவார்..... தன் தாயும் சகோதரியும் பெண்ணென்று நினைக்கவில்லை... அவள் போராளியென்றாலும் பெண்ணென்று நினைக்கவில்லை... கருகிய மலரையும் கற்பழித்த பயங்கரம்..... அதைக் கனவில் கண்டாலும் மனதில் மாறா வடுவாகும் மனதில் அது நிரந்தரம்...... நாயென்றும் சொல்லமாட்டேன் அது நன்றிக்கு வாலாட்டும்.... பேயென்றும் சொல்லமாட்டேன் பெண்ணென…
-
- 6 replies
- 2.6k views
-
-
தீ... கவிதை - இளங்கவி உனக்கு தமிழனில் என்ன பகை சொல்.... பலகாலமாய் எங்களை ஓட ஓட விரட்டுகிறாயே...... சிங்களனைப் போல உனக்கும் எங்கள் இரத்தம் தான் பிடிக்குமா... அன்றி அவனுக்கு நீ அடிமையா..... தொட்டந் தொட்டமாய் கட்டங் கட்டமாய் எங்களைக் காவுகொண்டும் அடங்கலையா உன் பசி...... கருஞ்சாம்பல் புகையாகி காவியம் படைத்தவர் உன்னை வென்றவர்..... அவர் கதையை உன்னில் அட க்க எனக்கு விருப்பில்லை...... காரணம் அவர்கள் உனக்கு அஞ்சாதவர்..... ஆனால் நீ எரித்த அப்பாவி உயிர்களுக்கு நீ தானே பொறுப்பு..... முள்ளிவாய்க்கால் வரை விரட்டி விரட்டி நீ எரித்த எம் மூச்சுக்களுக்கு நீ தானே பொறுப்பு.... அழக்கூட நேரமின்றி அந்த இடத்…
-
- 5 replies
- 2.6k views
-
-
கவி எழுதும் ஆசை பட்டப்பகல் அன்று மணியோ பன்னிரண்டு கொட்டும் மழையில்லை கீழ்வானம் சிவக்கவில்லை நட்டுவைத்த நடுவளவு உயர்வேம்பின் கீழ்நிழலில் நாற்காலி ஒன்றுபோட்டு நானும் அமர்ந்திருந்தேன் பொட்டுவைத்த பெண் பிரம்மாவின் நாயகியை தொட்டு மனத்திலே தேவாரம் ஒன்றுசொல்லி சொட்டச் சொட்டத்தமிழ் சுவையான கவிபடைக்க எட்டாத கற்பனையை எட்டிவிட முயன்றிருந்தேன் கட்டான என்மனையாள் கடைத்தெரு சென்றுவந்து சுட்டிப்பயல் தன்னைத் து}க்கத்திற் கனுப்பிவிட்டு வெட்டிக் கறிவைத்த விளைமீனின் வாசனையை எட்டநின்றே நாமீது நீரூற நனைந்திருந்தேன் கட்டிப்பிடித்து ஒரு முத்தம் கொடுத்திடவா? பட்டப்பகலில் அது பலிக்காது என்றெண்ணி கொட்டாவியோடு கொடும் பசியும் குரல்வளையை எட்டிப் பிடித்திடவே மொய்த்…
-
- 15 replies
- 2.6k views
-
-
புலிகளுக்கு ஓய்வு கொடு, உன் கையை நீ உயர்த்து இளங்கவி- கவிதை கவலைகளை நீ நீக்கு உன் கடமைகளை நீ நோக்கு தமிழினத்தை கரை சேர்க்க துடுப்புகளை நீ தூக்கு... தோல்விகளா நீ பெற்றாய் நம் தலைவனிடம் எதை கற்றாய்..? தணலிலே எரிந்தால் தான் ஜொலிக்கும் தங்கமாய் உருப்பெறுவாய்... துவண்டுவிட நீ வாழை மரமா...? இல்லை.! இரும்பு தெறிக்கும் வீர மரம்..! உன் நிலத்தில் வாழ்வில்லையென்றால் என் நிலத்தில் உன் வாழ்விருக்கும்.... கலங்கரை விளக்கத்தால் உனக்கு வழிகாட்டத்தான் முடியும்... அந்தவழி தொடராவிட்டால் இருள்தானே உன் வாழ்வில் மிஞ்சும்... எடுத்த உன் ஆயுதத்தால் உன் வீரம் சொல்லி நின்றாய்... இப்போது உன் கடமை அகிம்சையில் உரிமை வென்றிடுவாய்.... இதை விட…
-
- 12 replies
- 2.6k views
-
-
இந்த வார ஆனந்த விகடன் (18.1.17) இதழில் தனிப்பக்கத்தில் வெளியாகியுள்ள எனது இரண்டு கவிதைகளை யாழ் களத் தோழர்களுடன் பகிர்ந்துகொள்வதில் மகிழ்ச்சி.... யாழ் களத்தோழர்கள் எனக்குத் தரும் உற்சாகத்துக்கு நன்றி! நள்ளிரவில் சூரியன் உதிக்கும் வீடு இரண்டு ஷிப்ட் வேலைக்குப் பின் நள்ளிரவில் வீடு சேர்பவன் சூரியனை குண்டு பல்புக்குள் உதிக்கவிடுகிறான். தன்னை மலடாக்கிய உணவை இல்லாளுடன் கதை பேசியபடி உண்கிறான். ஆடு மாடுகளின் மேவு ஆத்தா அப்பனின் அன்றைய பிரச்சனைகளை அலைக்கற்றைவழி விசாரித்து அறிகிறான். டிஜிட்டல் இந்தியாவின் வல்லசுரக் கனவோடு போட்டியிட முடியாமல் பின்தங்கும் கனவோடு உறங்கப் போகிறான் சூரியனை அணைத்துவிட்டு…
-
- 6 replies
- 2.6k views
-
-
அழகே என்றேன்.. அருகே வந்தாள் கண்களால் பேசினாள் கருத்தைக் கவர்ந்தாள் கதைகள் பேச முதலே.. கன்னத்தில் தந்தாள்..! டேய் நாயே.. வெளவாலா தேடுறாய் போர்த்திக் கொண்டே ஓடினாள்..! என் கண்களின் வாக்கு அவள் அறியாள்..!
-
- 19 replies
- 2.6k views
-
-
எத்தனை ஆயிரம் கனவுகளைச் சுமந்து எந்தவித எதிர்பார்ப்புக்களுமே இன்றி... எமக்காக வீரகாவியமான வேங்கைகளே_உங்களுக்காய் என்னால் எதையுமே செய்யமுடியவில்லை_அதனால்... என்னை மன்னித்து விடுங்கள் மாவீரர்களே! மரணத்திற்கு நாள்க் குறித்து மரணத்தையே முத்தமிட்ட... மாவீரர் பிறந்த மண்ணில் பிறந்தேன் என்று பெருமை கொள்ளும் என் மனது.. மாண்ட உங்களின் கனவான_தாய் மண் விடுதலைக்காய் உழைக்காது... வெற்றுவீரம் பேசும் சுயநலவாதிநான்_அதனால் என்னை மன்னித்து விடுங்கள் மாவீரர்களே! ஆயிரமாயிரம் ஆசைகள் கொண்ட சராசரி மனிதர்கள் தான் நீர் ஆயினும் அன்னை மண் தனைக் காத்திட ... அத்தனை ஆசைகளையும் துறந்த அதிசய பிறவிகள் நீர் தாயகக் கனவுக்காய் ஆயிரமாயிரம் உயிர்களை... …
-
- 12 replies
- 2.6k views
-