கவிதைப் பூங்காடு
கவிதைகள் | பாடல் வரிகள்
கவிதைப் பூங்காடு பகுதியில் கள உறுப்பினரல்லாதோரின் கவிதைகள், கவிதை மொழியாக்கம், உலகக் கவிதை, பாடல் வரிகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள உறுப்பினர்கள் அல்லாதவர்களின் கவிதைகள், கவிதை மொழியாக்கங்கள், பாடல் வரிகள் போன்றன மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
ஈழத்தை சேர்ந்த, பூர்வீகமாகக் கொண்டவர்களின் படைப்புக்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படவேண்டும். ஏனைய கவிதைகள் தரமான கவிதைகளை அறிமுகம் செய்யும் நோக்கில் இலக்கிய மின் இதழ்களில் இருந்து மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
5128 topics in this forum
-
குருதிப்பெருவழியே வந்த என்னின் பெருகும் உதிரத்திரை விலக்கி - எனக்கு உவந்த முதல் முத்தம் என் கூடல்களின் உச்சங்களை விட இனிது. என் சிரிப்பில்,முறைப்பில்,களிப்ப
-
- 7 replies
- 2.6k views
-
-
கரும்புலிகள் தினத்தையொட்டி 1998 ஆம் ஆண்டு இலண்டன் ருட்டிங் முத்துமாரி அம்மன் கோவிலுக்காக எழுதிய பஜனைப் பாடலை கள உறவுகளுக்காக இங்கே இணைக்கிறேன். முத்துமாரி அம்மன் பாடல் கரும்புலிகள் - பஜனை அம்மா தாயே முத்துமாரி இம்மா நிலத்தின் சொத்துக்காரி சிம்மாசனத்தில் இருப்பவளே எம்மா நிலத்தைக் காப்பாயே! (அம்மா தாயே...) (1) சங்கு சக்கரம் கொண்டவளே சிங்கத்தின் மேலே இருப்பவளே தங்கத் தமிழைக் காப்பாயே எங்கும் சுகத்தைத் தருவாயே (அம்மா தாயே...) (2) கற்புூரதீபம் நாம் வளர்த்தோம் வெற்றிலை பாக்குடன் பழம்படைத்தோம் நெற்றிக் கண்ணார் நாயகியே உற்றார் உறவைக் காப்பாயே (அம்மா தாயே...) (3) சங்கத் தமிழாய் வளர்ந்தாளே வங்கம் போலே பரந்தாளே பங்கம் செ…
-
- 11 replies
- 2.6k views
-
-
என்னைப் பாட விடு ----------------- வானம் பாடியைப் போல் என்னைப் பாட விடு மண்ணையும் மக்களையும் முல்லையையும் முகில்களையும் என்னைப் பாட விடு இதயக் கோப்பை நிரம்பித் தழும்புகின்றது பச்சை போர்த்திய வயல்களையும் அதைத் தழுவி இச்சை தீர்க்கும் தென்றலையும் என்னைப் பாட விடு அந்திக் கருக்கலின் செம்மைச் சிவப்பை அழகுப் பெண்ணின் கன்னக் கதுப்பை என்னைப் பாட விடு பரந்து விரியும் கடலை பதுங்கிப் பாயும் நதியை என்னைப் பாட விடு கண்களில் நிரம்பி வழிகின்றது கருணை என்..... பாதையை மறிக்காதே வாழ்வினை பறிக்காதே என்னைப் பாட விடு சர சரக்கும் சப்பாத்துக்கும் சட சடக்கும் துப்பாக்கிக்கும் என்ன வேலை இங்கு என…
-
- 16 replies
- 2.6k views
-
-
அன்னைமண் காக்க ஆசைகள் துறந்து ஆயுதம் ஏந்திய போராளிகளை.... சதிவலையால் சிதைக்கப் பட்ட போது சரணடைந்த போராளிகளையே.. துரோகிகளாக்கும் சமூகத்தில் நானும் ஒரு துரோகிதான்.... மூன்றுலட்சம் மக்களையும்,போராளிகளையும் முட்கம்பி வேலிக்குள்ளிருந்து... மீட்க பேய்களின் கால்களில் விழுந்தேனும் காக்கத் துடிக்கும் இதயங்களும்... அவர்களுக்காக ஒலிக்கும் ஓரிரு குரல்களும் துரோகியானால் நானும் ஒரு துரோகிதான்... சோற்றுப்பாசலும் காசும் கொடுத்துவிட்டு சொல்லித்திரியும் உள்ளங்களின் மத்தியில்.. சொந்தங்களையும் சொத்துக்களையும் இழந்து அநாதையாக நிற்கும் மக்களும்.. சொந்த சகோதரனைப்போல் ஒவ்வொரு புலிவீரனையும் நெஞ்சில் சுமந்ததால் சொல்லாமல் கொள்ளாமல்... ச…
-
- 15 replies
- 2.6k views
-
-
வான்படை வாளுருவியது... சிங்கள இராணுவம் சித்தம் கலங்கிட தமிழரின் வான்படை கொடுத்த அடியில் எங்கட மக்களை ஏதிலி ஆக்கிய சிங்கள படைகள் விழந்தது காண்.. தேன்மொழித் தமிழின் மானங்காத்த வீரர்கள் வான்படை கொண்டு வாளுருவியது காண்... எட்டி உதைத்து இறுமாப்பு கொண்ட சிங்கள வெறியரின் சீற்றத்தை தாங்கி உலக சமூகத்தின் பார்வைக்கு ஏங்கி எத்தனை வருடங்கள் கைக்கட்டி நிற்க ? சிங்களன் செய்தால் உள்நாட்டு போராம் சீற்றத்துடன் தமிழன் செய்தால் தீவிரவாதமா ? பாகிஸ்தான் தருகிறான் அமெரிக்கா தருகிறான் பார்க்காமல் விட்டால் இந்தியனும் தருகிறான்.. தமிழர் படைகண்டு தானாய் நடுங்கிஓடும் சிங்களன் ஆயுதமே போதுமடா தமிழ…
-
- 5 replies
- 2.6k views
-
-
தனிமையும் பிரிவும் தனிமைத் துயரில் வாடிய போது தனிமை மரணத்திலும் கொடியது என உணர்ந்தேன் தன்னிச்சையாய் நீ பேசிய சொற்கள் தண்ணிலவாய் என் நெஞ்சைத் தணித்தன அரசியல், வரலாறு, இலக்கியம், அறிவியல் அனைத்தையும் பகிர்ந்தேன் ஆசையாய் நீ கேட்கிறாய் என்பதை அபிநயம் காட்டும் உன் முகம் கூறிற்று பருகப் பருக பாலும் புளிக்குமாம் பழகப் பழக நட்பும் புளித்தது உனக்கு படிக்கப் படிக்கக் கருத்துக்கள் ஊறுமாம் பழகப் பழக நட்பும் ஊறிற்று எனக்கு சிறு புன்னகைக்கும் மறுக்கிறது உன் உதடு - என் சிற்றறிவுக்குத் தெரியவில்லை மறுப்பின் காரணம் சிறுபிள்ளைத்தனமாய் செய்யாத தப்புக்கு சிந்தை கலங்கி மன்னிப்பும் கேட்டேன் காயத்தை மாற்றும் சக்தி காலத்திற்கு உண்டெனில் காலங்க…
-
- 19 replies
- 2.6k views
-
-
கபாலிக்காக மண் சோறுண்ணும் மடையர்களை நினைந்து தமிழன்னை புலம்புகிறாள். புளிய மிலாறு வெட்டி புறமுதுகில் சாத்தியிந்தக் கழிசடைகள் ஓடுதற்கு மக்காள் - நல்ல காரியங்கள் செய்யீரோ மக்காள். குண்டாந்தடியெடுத்துக் குண்டியிலே போட்டு நன்றாய் பென்ட நிமிர்த்த வேணும் மக்காள் - இந்த பேயர் திருந்துதற்கு மக்காள் ஆத்திர மெல்லாம் சேர்த்து அழகான கேட்டி வெட்டி சூ—தில் கொடுத்தாற்தான் மக்காள் – இந்த சோமாறிகள் விழிப்பார் மக்காள் கொட்டன் எடுத்ததிலே குத்தும் சிராய் செதுக்கி விட்டால் முதுகினிலே மக்காள் – இந்த வீணர் திருந்திடுவார் மக்காள் தக்கார் இலாதென்றன் தாழ்வுகளைப் போக்குதற்கு மிக்க மனங்கவன்றேன் மக்காள் – நான் மீள்வதினியெக்காலம் மக்காள்.
-
- 1 reply
- 2.6k views
-
-
அந்தி சாயும் அந்த வேளை.. அருவி கீதம் இசைக்க அணில்கள் குத்தாட்டம் போட அண்டங் காக்கைகள் ஆர்ப்பரிக்க அழகிய தோப்பதில் அன்புடன் நான்..! ஆதவனின் மறைவோடு ஆதாம் ஏவாள் நினைவோடு - நிலவை ஆரத்தழுவும் ஆதங்கத்துடன் ஆகி நின்றது செக்கச் சிவந்து வானம்..! இலைகளின் நடுவே இளகிய இதழ் விரித்து இனிமையாய் தேன் சொரிந்து இளமையின் இறுதி நேர உச்சம் கண்டு.. இன்புற்றுக் கொண்டிருந்தன பூக்கள்..! ஈக்களின் கூட்டம் ஈரம் கண்டு மொய்க்க ஈகமே கொள்கை என்று ஈடுகொடுத்து நின்றது காளான்..! உற்றுப் பார்க்கிறேன்... உறவுகள் யாரும் இல்லை உதவிகள் எதுவுமில்லை.. உணவின்றி ஒட்டிய வயிறு உயிரின் இறுதி முனகல்.. உணர்வுகள் மட்டும் எஞ்சிய நிலையில்.... உயிர்ப்புக…
-
- 24 replies
- 2.6k views
-
-
வதை முகாமில் ஓர் ஆச்சியின் ஒப்பாரி கவிதை - இளங்கவி ஐந்து சந்தி வீதியிலே ஆளுயரப் பனையின் கீழ் பனம்பழம் எடுத்து வந்து பாதி தந்த மகராசா...! என்னை பாதியாய் தவிக்கவிட்டு பாடையிலே சென்றீரோ.... பச்சைப் புல்வெலியில் பாதணியும் போடாமல் உன் பங்குக்கும் புல்லுவெட்டி என் பசுவின் பசிதீர்த்த மகராசா...! பட்டினியால் உன் உயிரை பறித்து தான் சென்றனரோ...! புலியின் ஆட்சியிலே நாம் பசியை கண்டதில்லை... கிளி நொச்சி விட்டோடி; கடைசியிலே வதை முகாமுக்குள் வந்திருந்தோம்.... இங்க என் ராசா நீ பசிதாங்க மாட்டயென்று என் பாதிக்கஞ்சி தந்திருந்தேன் இங்கே பிணிதாங்க முடியாமல் என்னை பிரிந்துதான் சென்றீரோ...! பாவியவன் குண்டு போட்ட; நாமும் படுகைய…
-
- 18 replies
- 2.6k views
-
-
''துப்பாக்கி தூக்கிடு....'' ' ஜயொரு ஆண்டுகள் ஜம்பம் அடித்தவர் அந்தோ பாரது அச்சத்தில் ஓடுறார்.... கட்டிய கோவணம் களட்டியே ஓடுறார் பாதையை திறந்திட பறந்தடித்தோடுறார்... வருமது புலியென வாடியே இருக்கிறார் அலரி மாளிகை அரக்கர்கள் கலங்கிறார்... இத்தனை காலமும் இகழ்ந்தே உரைத்தவர் இன்றேன் வந்திங்கு இரங்கலுரை நடத்துறார்....? ''கடலிலும் தரையிலும் இடியென அதிருமே இதுவரை காத்த பொறுமையை உணர்த்துமே...'' இழந்தது புலி பலமென்று இகழ்ந்தே உரைத்தவர் அழுதிடும் பகை அடைக்கிட அகிலமே திரளுமே... குருதியில் தேசம் எங்கினும் நனையுமே இந்த இறுதி யுத்தத்தில் ஈழம் மலருமே.... அழுதது போதும் அழுகையை நிறுத்திடு உன் கையினில் இப்…
-
- 29 replies
- 2.6k views
-
-
சும்மா கிடந்த நாம்.. தமிழீழ விடுதலை என்றோம்.. ஆயுதம் எடுத்து ஆலயத்தில் கொள்ளையடித்தோம்..! தமிழ் மக்களின் தலையினில் நன்றே.. மிளகாய் அரைக்க கற்றுக் கொண்டோம்..! ஆட்காட்டி வயிறு வளர்த்தோம்..! போகும் வழி இடையில் மறந்தோம்.. சிங்களச் சீமையில் சீமைப் பசுக்களிடையில் சரணடைந்தோம்..! தாடி வளர்த்து கம்னீசியம் காட்டினோம் வெள்ளை ஜிப்பாவில் ஜனநாயகம் பேசினோம் புலி எதிர்ப்பும் தமிழீழ அழிப்புமே எங்கள் அரசியலாக்கினோம். இன்று... ஆக்கிரமிப்பு படைகளோடு தும்பினியின் இடுப்பாட்டத்தில் சதியோடு குதி போடுறோம்.. தெரியுது தமிழீழம்.. சிங்களச் சீமைப்பசுவின் சிற்றிடையில் என்று வாக்குக் கேட்கிறோம். மத்தியில் கூட்டாட்சி மாநிலத்தில் சுயா…
-
- 17 replies
- 2.6k views
-
-
வந்தோரை வாழவைத்து வீட்டிலே தூங்கவைத்து வாசலில் படுத்தறங்கும் இனம் எம்மினம் சண்டை என்று வந்தாலும் சமாதானம் என்று சொன்னாலும் சமனாக மதிப்பளித்து இன்று போய் நாளை வா என இன மானம் காத்த இனம் உலக வரைபடத்தில் யேசு கேட்டதை காந்தி கனாக்கண்டதை வள்ளுவன் சொன்னதை அரங்கேற்றி அரசமைத்த இனம் நரிக்குண நாட்டவனின் நடிப்பில் மயங்கி சுற்றி வந்த வர்த்தகஅரக்கர்களின் பிடிக்குள் சிக்காது செய் அல்லது செத்துமடியென செய்து காட்டிய இனம் முள்ளிவாய்க்காலில் தன்னை தானே பெட்டியடித்து சர்வதேசத்துக்கு குறிவைத்த தலைவன் சொல்லிய செய்தி கொன்றால் விடுதலை விட்டாலும் அது தான்.. தீர்க்க தரிசனம் அவனது ஆயுதம் இனி போராட்டம் உங்கள் கையில் அவன் கை காட்டியது வெளியில் எல்லாம…
-
- 26 replies
- 2.6k views
-
-
பனிக்குளிரில் இதம் சேர்க்க ஓர் இழுத்தணைப்பு..! மெல்லத் தொட்டு மேனி தடவி இதழோடு இதழ் வைத்து வெப்பமூட்டி அவள் மூச்சில்.. என் சுகம்..! சுவாசம் எங்கும் அவள் வாசனை தரிக்க உடலோடு ஐக்கியமாகி சொர்க்கத்தின் வாசல் திறந்தாள் எனக்காய் மட்டும்..! நான் தொட்டுத் சுகித்து இன்புற்று பின்.. தூக்கி எறிந்தேன் அடுத்தவன் உறவானாலும் எனக்கென்ன என்ற நினைவில்..! பார்த்திருக்க வீதியால் சென்றவன் எடுத்தணைத்தான் அவளும் ஒட்டி உரசி அவனோடும்.. சீ சீ.. என்ன அசிங்கம் இதுவும் ஒரு வாழ்வா..??! விபச்சாரி.. பட்டம் வழங்கி நான் புனிதனானேன்..! கண்டவன் போனவன் சிரித்தவன் எடுத்தவன் அடுத்தவன் எல்லாம் சுகித்த பின் தூக்கி எ…
-
- 21 replies
- 2.6k views
-
-
பிறந்ததற்காய்... வாழச் சபிக்கப்பட்டிருக்கிறது அடிமைகளின் வாழ்வு. முடிக்க முடியாத கவிதையாக இன்னும் மன அடுக்குகளில் இறைத்துக் கிடக்கிறது மானுடத்தேடல். பிறந்ததற்காய்... வாழச் சபிக்கப்பட்டிருக்கிறது அடிமைகளின் வாழ்வு. முடிவுகள் அற்ற தேடல் தீராக்கடனாளி ஆக்குவதில் தீர்க்கமாய் இருக்கிறது. வகைப்படுத்த முடியா வலிகளை எடுத்தெழுதுவதில் எவ்விதப் பயனுமில்லை நித்திய நோயாளியாக விரும்பின் கூறுக கொத்தணிக் குண்டுகள்போல் தமிழினத்தின் வாழ்வு சிதறிச்சிதறி சின்னாபின்னமான கதைகள் கோடியுண்டு முற்காலம், பிற்காலம் இடைப்பட்ட இக்காலம் தெளிவற்ற கலங்கலுக்கு உரித்துடையதாக காட்சியாகவும், சாட்சியாகவும்.... மாயமானாகப் புலப்படு…
-
- 14 replies
- 2.6k views
- 1 follower
-
-
-
என் தாயே ...உன் பாத திருவடியே ...உலகில் அத்தனை ஆலயங்களின் ...திறவு கதவு ....!!!என் தாயே ....உன் கருணை கொண்ட பார்வையே ....நான் வணங்கும் இறைவனின் ...கருணை பார்வை ....!!!என் தாயே ....என்னை விட்டு நீங்கள் இறை ...பயணம் சென்றாலும் ....உன் திருப்பாதத்தின் நினைவுகள் ...தான் நான் வணங்கும் இறைவன் ...!!!+கவிப்புயல் இனியவன் குடும்ப கவிதைகள் (அம்மா கவிதை )
-
- 2 replies
- 2.6k views
-
-
உலக மென்னும் அற்புத படைப்பின் அழகிய பொய்கள் நாங்கள் அறிவு கொண்டு அழிவையே நேசித்து போலி கொண்டு நிம்மதியழித்து இன்பம் தேடி துன்பம் நேசித்து காலம் தனை காகிதக் குப்பையாக்கி மரணம் கொண்ட மாய வாழ்வின் உதிர்ந்த இதழின் கற்பனை கொண்டு வாழ்வின் சரித்திரத்தை இறந்த உயிரின் இரத்தத்தில் எழுதுகின்றோம்
-
- 18 replies
- 2.6k views
-
-
காசு இல்லாத உலகம் வேண்டும் மாசு இல்லாத சூழல் வேண்டும் எல்லை இல்லாத தேசம் வேண்டும் கோசம் இல்லாத அரசியல் வேண்டும் ஊழல் இல்லாத அரசாங்கம் வேண்டும் நடுநிலையான நீதி வேண்டும் வேஷம் இல்லாத மேடை வேண்டும் தேசம் மதிக்கும் ஆடை வேண்டும் யுத்தம் இல்லாத மண்ணிலம் வேண்டும் இரத்தம் தோயாத செந்நிலம் வேண்டும் தமிழில் பேசும் தமிழர்கள் வேண்டும் தமிழருக்கென்று ஒரு நாடும் வேண்டும் மானம் காத்த பெண்ணினம் வேண்டும் பெண்மையைப் போற்றும் ஆணினம் வேண்டும் தன்னினம் காத்த மறவர் வேண்டும் மண்ணில் அறம்காத்த மாவீரர் வேண்டும் விலைபோகாத தலைவன் வேண்டும் தலைவணங்காத தன்மானம் வேண்டும் மறைந்தவை மீண்டும் தோன்ற வேண்டும் நல்லதைச் சொல்லும் நண்பர் வேண்டும் நல்லதை அறிந்திடும் நன்ம…
-
- 25 replies
- 2.6k views
-
-
அரோகரா! அரோகரா! அரோகரா அரோகரா நல்லூர்க் கந்தனுக்கு அரோகரா வண்ணமயில் ஏறிவரும் வடிவேலனுக்கு அரோகரா முருகா! என்னப்பா இது? இனம் மொழி தாண்டி உன்ர வாசலிலை நிறையுது பக்தர்கள் வெள்ளம் கடையில விக்கிற பிள்ளையார் சிலையில மேடின் சைனா இருக்கு கடைக்குட்டிக்கு வாங்கிற அம்மம்மா குழலை வடக்கத்தையான் விற்கிறான் ஐப்பான் காரன் வந்து “சோ” றூம் போடுறான் பாகிஸ்தான் காரன் வந்து பாய் வி(ரி)க்கிறான் கண்ணுக்கு தெரியிற இடமெல்லாம் துரோகிகள் கூட்டம் கண்கட்டி வித்தை காட்டுது சிங்கள தேசம் வெள்ளை வேட்டி கட்டி சுது மாத்தையாக்கள் வெறும் மேலோட களு பண்டாக்கள் போதாக்குறைக்கு விமானச் சீட்டுக்கு…
-
- 8 replies
- 2.6k views
-
-
என் அழகான ராட்சஷி கவிதை ஆசை காட்டி மோசம் செய்த அழகான ராட்சஷி ! அவள் அழகின் சிலையல்ல அனாலும் என் மனதின் மொழியானாள் ! அவள் சொல் கேட்டு நான் மகிழ்ந்திருந்தேன் ! அவள் நடை பார்த்து நான் நெகிழ்ந்திருந்தேன் ! அவள் புன்னகை பார்த்து நான் மலர்ந்திருந்தேன் ! இருந்தும் அவள் குணம் பார்க்க நான் மறந்து விட்டேன் பின்னால் அவள் மனம் பார்த்து நான் உடைந்து விட்டேன் ! நீதான் தன் மனம் என்றாள் நீயில்லா வாழ்வு தனக்கு மரணமென்றாள் அவள் சொல் கேட்டு மகிழ்ந்திருந்தேன் என் கண்களை மழையாக்கி காணாமல் சென்றுவிட்டாள் ! சென்ற பின்னர் ஓர் தடவை என் கண்ணில் தரிசனம் தரவந்தாள் ! அவளை கண்டதுமே என்னை பிரிந்ததற்க்கு காரணம் கே…
-
- 19 replies
- 2.6k views
-
-
"நாளை உலகம் இல்லை என்றானால் அழகே என்ன செய்வாய்?" கண்களை திறந்து காலங்கள் மறந்து கடைசியில் வானத்தை பார்த்துக் கொள்வேன். மண்டியிட்டு அமர்ந்து மண்ணகம் குனிந்து கடைசியில் பூமிக்கு முத்தம் வைப்பேன். உன் மார்பினில் விழுந்து மை விழி கசிந்து நீ மட்டும் வாழ தொழுகை செய்வேன்! நாளை உலகம் இல்லை என்றானால் அன்பே என்ன செய்வாய்? ஒரு நூறாண்டு வாழ்ந்திடும் வாழ்வை ஒரு நாளில் வாழ்ந்துக் கொள்வேன். உன் இதழ்களின் மேலே இதழ்களை சேர்த்து இரு விழி மூடிக் கொள்வேன். மரணத்தை மறக்கும் மகிழ்ச்சியை தந்து மரணத்தை மரிக்க வைப்பேன். நாளை உலகம் இல்லை என்றானால் அழகே என்ன செய்வாய்? காதலின் தேவை இருக்கின்ற வரைக்கும் பூலோகம் அழிவதில்லை. ஆயிரம் மின்னல் பிரிக்கின்றபோதும் வ…
-
- 6 replies
- 2.6k views
-
-
கொரோனா வைரஸ் தொற்று காரணமாக மக்கள் மத்தியில் பீதி ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் கொரோனா வைரசை எதிர்கொள்வது பற்றி கவிஞர் வைரமுத்து கவிதை ஒன்றை தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அந்த கவிதை இதோ! "உணவை மருந்தாக்கு உடம்பை இரும்பாக்கு மூச்சுப் பைகளில் நம்பிக்கை நிரப்பு நோய்த் தடுப்பாற்றல் பெருக்குதல் சிறப்பு கோவிட் - 19 கொல்லுயிரியை எழுந்து எதிர்கொள் இந்திய நாடே!" உணவை மருந்தாக்கு உடம்பை இரும்பாக்கு மூச்சுப் பைகளில் நம்பிக்கை நிரப்பு நோய்த் தடுப்பாற்றல் பெருக்குதல் சிறப்பு கோவிட் - 19 கொல்லுயிரியை எழுந்து எதிர்கொள் இந்திய நாடே! #coronavirusindia #CoronaVirusUpdate — வைரமுத்து (…
-
- 16 replies
- 2.5k views
-
-
இழப்போமா இல்லைப் பலி கொடுப்போமா....? (11.02.09 அன்று வன்னியில் எறிகணைக்குப் பலியான உறவின் நினைவில் ஒரு கவிதை) பாயுமில்லைப் படுத்துறங்க வீடுமின்றிப் பதுங்குளி வாசலிலும் பாதையோரச் சகதியிலும் உழன்ற பொழுதுகளில் உனக்கும் சாவுவரும் என்றெண்ணியிருப்பாயா ? நம்பிக்கையறுந்த வாழ்வு நாளையுனக்கு இல்லையென்று எப்போதாவது எண்ணியிருந்தாயா ? எங்களைப்போல உனது மகளும் மனைவியும் அம்மாவும் அக்காவும் மருமக்களும் பற்றித்தானே மனசுக்குள் அழுதிருப்பாய் ? சாவரும் நாளின் முன்னிரவு உனக்குச் சாவு நாளையென்று சகுனம் ஏதும் அறிந்திருந்தாயா ? போரின் கொடிய வாய்க்குள் போய்விடும் சலனம் ஏதும் தெரிந்ததா ? பாழும் பொஸ்பரஸ் குண்டுகள் உன்மேல் …
-
- 12 replies
- 2.5k views
-
-
'பூக்களைப் பறிக்காதே' என்கிறது எச்சரிக்கைப் பலகை! ஆனாலும் புற்றரை யெங்கிலும் பூக்களின் சிதறல்! காற்றைக் கோபித்துக் கொள்ளாதீர் பாவம் அதற்குப் படிக்கத் தெரியாது! ----இது ஒரு ஜப்பானியக் கவிதை...... எப்போதோ படித்தது....
-
- 10 replies
- 2.5k views
-
-
இது எதோ ஒரு காதலர் தினத்தில் எழுதிய கவிதை .... பெண்ணென்று பிறந்து கண் முன்னே அங்கம் அங்காங்கே காட்டி நடந்து கொல்லாமல் கொல்கின்றார் அம்மா கொழும்பில் எம் குலத் தமிழ்க் கிளிகள்! பிரான்ஸ், ஜேர்மன், சுவிஸ் என்று பறந்து கொட்டும் பனியில் கொட்டாவி விடக்கூட மறந்து அண்ணனுடன் அப்பா சேர்த்து அனுப்பும் பணம் கையில்லாச் சட்டை வாங்கவும் அங்கம் கொப்பளிக்கும் ஆடை வாங்கவும் உதட்டுக்குச் சாயம் அடிக்கவும் இன்னும் பலப்... பல... செய்யவும் வீணாகக் கரைகின்றது. இந்த 'மேக்கப்' பின் பின்னால் உள்ள உண்மை உருவம் அறியாது நீண்ட 'கியூ' வில் நிற்கின்றாரம்மா பாவம் எம் இளைஞர்! சி…
-
- 18 replies
- 2.5k views
-