கவிதைப் பூங்காடு
கவிதைகள் | பாடல் வரிகள்
கவிதைப் பூங்காடு பகுதியில் கள உறுப்பினரல்லாதோரின் கவிதைகள், கவிதை மொழியாக்கம், உலகக் கவிதை, பாடல் வரிகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள உறுப்பினர்கள் அல்லாதவர்களின் கவிதைகள், கவிதை மொழியாக்கங்கள், பாடல் வரிகள் போன்றன மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
ஈழத்தை சேர்ந்த, பூர்வீகமாகக் கொண்டவர்களின் படைப்புக்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படவேண்டும். ஏனைய கவிதைகள் தரமான கவிதைகளை அறிமுகம் செய்யும் நோக்கில் இலக்கிய மின் இதழ்களில் இருந்து மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
5128 topics in this forum
-
எனது ஆன்மா காணாமல் போய்விட்டது... நேற்றுவரை என்னுடன்... இருந்த ஆன்மா.. இன்று தூக்கத்தால் எழுந்து பார்த்தபோது காணாமல் போய்விட்டது... இரவில் உறங்கும்போது தொலையக்கூடிய என் ஆன்மா பார்ப்பதற்கு பின்வருமாறு இருக்கும்... அன்பானது... அறிவானது... அமைதியானது... இனிமையானது... இரக்கம் மிக்கது... குழந்தை போன்றது.. குழப்பம் விளைவிக்காதது... விளக்கங்கள் கேட்காதது... ஆன்மா கடைசியாக உடுத்தியிருந்த உடை பேரன்பில் நெய்த நிறமற்ற ஆடை... அன்பனின் ஆன்மாவை ஒன்லைனில் கண்டவர்கள் ஒப்படைக்கவேண்டிய முகவரி... கலைஞன், ஆண்டவன் சந்நிதி.... தேடிக் கண்டுபிடித்து தருபவரிற்கு குடியிருக்க இதயம் ஒன்று பரிசாகத் தரப்படும்... ஓடிவிட…
-
- 13 replies
- 3.3k views
-
-
நீங்கள் விரும்பி வாசிக்கும் கவிதை எது ? ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு இரசனை இருக்கும் அவ்வாறு இருக்கும் போது சிலருக்கு ஒன்றுமே பிடிப்பதில்லை ஆனால் யாழ் இணையத்தினை பொறுத்த வரை இங்கு ஏராளமான கவிதைகள் கருத்தாடுபவர்களால் எழுதப்பட்டுள்ளது. இதில் எந்த கவிதைகள் உங்களை கவர்கின்றன என அறிய ஒரு ஆவல் அந்த நோகில் தான் இதனை உங்கள் முன் வைக்கின்றேன்.
-
- 13 replies
- 3.2k views
-
-
ஈழத்தின் போர்க் கோலத்தால் உலகெங்கும் சிதறி வாழும் நாம் நாளும் பல கருத்துக்களை - யாழ் தளத்திலே பரிமாறி உறவுகளானோம். பிழைகள் செய்தோமென தாழ்வுணர்ச்சி கொண்டு விலகி யாவரும் ஓடினால், எஞ்சுபவர் யாரிங்கே? யாழ் கொண்ட களை அது போய்விடாதோ? களை அல்ல நீர். யாழ் என்னும் பயிர் செழிக்க பொழிவீர் உம் நற் கருத்தை மழை நீராய். குற்றங்கள் களைந்து, நற் சிந்தனை புகுத்தி மாற்றங்கள் செய்து ஊற்றுவோம் தமிழ் நீர். சளைக்காதீர் தோழர்களே மீள வாரீர் யாழுடன் தமிழ் மொழியும், தேசியமும் தளைத்து ஓங்க வாரீர்! வாரீர்!! (அண்மையில் யாழின் உறவுகள் இருவர் (கு.சா அண்ணை, முனிவர்) யாழில் கருத்துகள் எழுதாமல், பார்வையாளராக மட்டும் இருப்போமென வேதனையுடன் சொல்லிச் சென்றார்கள். இன்னும்,…
-
- 13 replies
- 1.8k views
- 1 follower
-
-
ஒவ்வொரு இலைகளாய் உதிர்த்த பின்னும் ஒரு துளி இசையில் தன்னுள் தளும்பியபடி நிறைந்திருக்கும் மனதிற்கு வாழ்வின் அடர் வனத்துள் தனித்து நின்று கதறியழும் தருணமென்று ஒன்று கிடையாது.. எங்கோ தூரத்தில் வானவில்களோடு பேசுகிறோம் சொந்தமாயிருந்த வண்ணங்களை தொலைத்துவிட்டு...
-
- 13 replies
- 1.3k views
-
-
''இது இறுதிப் போர்....'' எந்தன் வீட்டில் மஞ்சள் அட்டை ஏறி வந்து விழுகுதப்பா கண் விழித்து பார்க்கையிலே சிவப்பு அட்டை நிக்குதப்பா... எங்கு போய் ஒளிவதப்பா...? எனக்கு வழி தெரியவில்லை எறி வள்ளம் ஓடிவிட எல்லைக்கது போனேனப்பா... அங்க வைத்து என்னை ஜயா பிடிச்சிழுத்து வந்தாங்கப்பா... எங்கள் மண்ணை காத்து விட எம் படையில் இணைந்து விடு... காலமதின் கட்டளையை கண்ணா நீயும் ஏற்றுவிடு தோளின் மேலே சுடுகளனை சுமந்து நீயும் நடந்து விடு... எல்லைக்கின்று போய் நீயும் எங்கள் நாட்டை காத்துவிடு எத்தனை காலம் எம் மண்ணில் அடிமையாக நீ இருப்பாய்...??? உன் உரிமை காத்து விட உன் உயிரை விட்டு விடு எங்கள் ஈழம் மலர்ந்து விட எங்கள் களம் வந்து விடு..…
-
- 13 replies
- 2k views
-
-
நன்பர்களே..................... காதல் இல்லாத உலகம் -அது உலகமே இல்லை... காதல் என்றும் தப்பல்ல -அது காதலாக இருக்கும் வரை நீங்கள் யாரையாவது காதலியுங்கள் ஆனால் உங்கள் காதலை காதலியிடம் சொல்லுங்கள்... காதலை அவள் மறுத்தால் ஒன்று அல்லது இரண்டு நாட்கள் அல்லது இரண்டு வாரங்களில் மறந்து விடுவீர்கள்.. ஆனால் அதை சொல்லாமல் உங்களுக்குள்ளயே வைத்து புதைத்து விடாதீர்கள்.. காதலை சொல்லி காதலியின் முடிவை தெரிந்து கொள்ளுங்கள்-அது இல்லாமல் உங்களுக்குள் உங்கள் காதலை வைத்து நீங்களே கொல்லாதீர்கள்...- அது கருவை வயிற்றிலேயே அளிப்பது போண்றது. அதனால் நன்பர்களே...... உங்கள் காதலை தைரியமாக சொல்லுங்கள் காதலை சொல்லாமல் முட்டாளாக இர…
-
- 13 replies
- 2.5k views
-
-
வாளெடுத்தவன் எலாம் வீரனென்றாவானா? தூரிகை தூக்கியவர் அனைவரும் -ஓவியர் ஆவாரா? பாரடா நண்பா - பகை -மெல்ல வெல்கிறது-! நீ இரு - நானும் இருக்கிறேன் என்பதா வேண்டுமிப்போ? நாம் இருக்கணும்- இதை நாவரழ சொல்லியும் - கேட்பார் யாருமிலை - நீயாவது - கேளடா! பச்சைக்கிளியின் சொண்டில் -பற்றி எரியும் அமிலம்-ஊற்றுவார்- பாவமிது என்று நீ சொன்னால் அந்த பகுதியையே இழுத்து மூடுவார்! ஏனடா இப்பிடி-? எலும்பும் தசையும் மட்டுமா- மனிதன் என்றாகும்-? உணர்வென்ற ஒன்று வேண்டும்-! நீ - உறைக்க சொல்லேண்டா - அவருக்கு! பார் பார்- கருத்து விடுதலை என்று பேசாதிருந்து கழுகுகள் - உன் தலையில் கூடு கட்டும் காலம் வந்தாச்சு - சீ போடா- அப்போ- எமக்காய் சிரித்துக்கொண்டே செத்தவர் கனவ…
-
- 13 replies
- 2.4k views
-
-
கடலோடு பிறக்கும் அலைக்கு கரையோடு மரணம்.. காற்றோடு பிறக்கும் தென்றலுக்கு தோப்போடு மரணம்.. பூவோடு பிறக்கும் வாசத்திற்கு அந்தியோடு மரணம்.. வானோடு பிறக்கும் நிலவுக்கு நிழலோடு மரணம்.. மலையோடு பிறக்கும் நதிக்கு கடலோடு மரணம்.. மனதோடு பிறக்கும் ஆசைக்கு நிராசையோடு மரணம்.. கருவோடு பிறக்கும் குழந்தைக்கு மூப்போடு மரணம்.. காசோடு பிறக்கும் மனிதனுக்கு நோயோடு மரணம்.. புத்தியோடு பிறக்கும் கல்விக்கு ஆயுளோடு மரணம்.. ஆணாகிப் பிறக்கும் எனக்கு பெண் காதலோடு மரணம்.. பெண்ணாகிப் பிறக்கும் அவளுக்கு கனவோடு மரணம்..!
-
- 13 replies
- 2.1k views
-
-
கருமங்கள் கை கூடாமல். சறுக்குகிற நேரமெல்லாம். சனியன் நினைவுக்கு வருகிறான்! ஆச்சியும், அப்புவும், அன்போடு சேர்த்து, ஊட்டி வளர்த்த நம்பிக்கைகள்! சனிபகவானுக்குச் சால்வையோடு, சந்தனமும் பூசியுள்ளார்கள்! பிரபலங்கள் எல்லாம், வரிசையில் நிற்கின்றன! எல்லோரும் படித்தவர்கள்! எனக்கும் பெருமையாக இருக்கிறது! முதல் முறையாக, அப்புவிலும் ஆச்சியிலும், அளவில்லாத மரியாதை, அணையுடைத்துப் பாய்கிறது! எண்ணைச் சட்டிகளும், பெரிதாகி இருந்தன! புலத்தில் பெரிய பிரச்சனைகள், பெரிய சட்டிகளும் தேவை தான்! வரிசை முடிவில், பெரியவர் சிரித்தார்! ஓய்வு பெற்றவராம்! முகத்தில் அமைதியின், முத்திரை தெரிந்தது! சனியன் விலகியதால், சாந்தமாகியது போலும்! …
-
- 13 replies
- 769 views
-
-
வாடி வதங்கி நின்றாலும் - எமக்கு வல்லரசுகள் எதிராகும். நலமா?....... என்றும்மை நான் கேட்கப் போவதில்லை, நாடு விட்டுப் போனவர்கள்... அனைவரும் நலமென்று.. நானறிவேன் கண்ணாளா! - இதை கேடு கெட்ட பிழைப்பென்று பழித்தவரும் நீங்கள்தான்! கொண்ட கொள்கை மாறி - மனம் களிப்பவரும் நீங்கள்தான்! அன்று... இலட்சியங்கள் பேசி - எனை இலாவகமாகக் காதலித்து - இன்று அந்நிய புலத்தில்.... ஏன் அவலட்சணம் ஆகிவிட்டீர்? சாகச வீரனென்று - உம் சந்ததியே உமைச் சொல்லும்! ஆதலால்தானே - உம்மில் ஆசைகள் கோடி வைத்தேன் - இன்று சாகரம் கடந்து சென்று சா...தப்பும் கோழைத்தனம்!?....... நான்... ஆதி நாளில் பார்த்ததில்லை அது எப்படி வந்ததும்மில்? அன்பே! வாகை …
-
- 13 replies
- 3k views
-
-
ஒரே ஒருமுறை சிந்திப்போம் ஓரணியில் சந்திப்போம். பேதங்கள் தொலைப்போம் - எங்களுக்காக தம்மை தந்தவர்கள் பாதங்கள் தொழுது வேண்டுகிறோம் எங்களுக்குள் இருக்கும் பேதங்கள் தொலைப்போம். தாயகம் மலரவும் தமிழ்க்கொடி பறக்கவும் தம்மையே தந்து தரணிக்கு எம்மை இனம் காட்டிய தவப் புதல்வர்களின் இலட்சியம் நிறைவேற பேதங்கள் தொலைப்போம். ஒன்று பட்ட ஓர் இனமாய் ஒருங்கிணைந்து செயற்படுவோம் உத்தமர் தம் உயிராலே நெய் ஊற்றி ஒளி ஏத்தி வைத்த தீபமதை சத்தியம் செய்து காத்து வைப்போம். அண்ணன் அடிக்கடி சொல்லிடுவான் அடுத்த சந்ததிக்கு வேண்டாம் நாம் பட்ட துன்பம் என்று அவன் வழித்தடத்தில் தடம் பதித்து வரும் நாம் அடுத்த சந்ததிக்காய் எதை விட்டுச் செல்லப் போகிறோம…
-
- 13 replies
- 974 views
-
-
விடியலோட வந்தவள் வியக்கும் பல வினாக்கள்... விடைகள் தந்தவள் விடைபெறும் தருணமிது..! விடலை இவன் விடயத்திலும் விதைத்து விட்ட தடயங்கள் பல. விரியும் அந்த வாழ்வெனும் வான்வெளியில் விரித்து விட்டால் வயதொன்றை கூட்டியே அதிகம்..! விந்தை இவள் வரவோடு வியந்து பல விடயங்கள் நடக்கும் என்றார் விபரம் இன்றியோர் - அவளோ விளையாடிச் செல்கிறாள் விலை கூட்டிய பொருண்மிய விடயங்கள் தந்துமே..! விடியலுக்காய் விழித்திருக்கும் தாய் மண்ணில்.. விழுமியங்கள் தொலைந்து விழும் பிணங்களே விடையாய் இம்முறையும்.! விடுதலைக்கும் விரியுது தூரம் இன்னும் நீண்டே..! விண்வெளியில் வியத்தகு மாற்றம் விரித்த மாயனின் கூற்றை விழுங்கி விட்டுச் செல்பவளே - நீ விட்டுச் செல்லும் தங்கையவள் பின் வர…
-
- 13 replies
- 741 views
-
-
மாவீரர் வாரம் – “காவல்தெய்வங்களின் கார்த்திகைத்திருவிழா” -றோய் 90 Views ‘எமது மாவீரர்கள் மகத்தான இலட்சியவாதிகள். தேசிய விடுதலை என்கின்ற உயரிய இலட்சியத்திற்காக வாழ்ந்து அந்த இலட்சியத்திற்காகத் தமது வாழ்வைத் தியாகம் செய்தவர்கள். இதனால்தான் இவர்கள் சாதாரண மனிதர்களிலிருந்து வேறுபட்டுநிற்கிறார்கள், உயர்ந்துநிற்கிறார்கள். எமது தேசத்தின் வரலாற்றில் சங்கமமாகி நிற்கிறார்கள்’ என்கிறார் தமிழீழ தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்கள். தமிழீழ மண் மீட்பு போரில் தங்களின் உயிர்களை ஈகம் செய்த மாவீரர்களை தன்னகத்தே சுமந்து நிற்கும் இந்த கார்த்திகை மாதத்தில், அவர்கள் விட்டுச் சென்ற கனவுகளைத் தாங்கி, உரிமைக்கான குரலை உலக…
-
- 13 replies
- 2.2k views
-
-
காவல் தேவதை மாலதி. வீரம் தந்தவள் விடுதலைப் பயணத்தின் வீரியம் சொன்னவள் எங்களில் ஓர்மத்தை விதைத்த எழுச்சியின் குறியீடு எழுதிய வரலாறு மாலதி. சுதந்திரப் பொருளுரைத்துப் பெண்ணின் பெருமையை பேறாக்கிய பெருமை பெரும் பேறாய் எம்மினத்தில் பிறந்த பெருந்தீ. கோப்பாய் வெளிக்காற்று ஈரம் சுமக்கும் இன்றுமுன் வீரம் கண்ணகை தெய்வமாய் அங்கெல்லாம் மாலதி காவல் தேவதையாய்....! காலநதி உன் கலையா நினைவோடு கரைகிறது தோழி மாலதியென்றெம் மனங்களில் மூட்டிய தீயின் அடையாளம் மாலதி படையணியாய்....! 10.10.2002 (11வருடங்கள் முதல் எழுதிய கவிதை அல்லது அந்த நேரத்து உணர்வு. மீளும் நினைவாய் ) http://mullaimann.blogspot.de/2013/10/blog-post_10.html
-
- 13 replies
- 3.8k views
-
-
ஒய்யாரத் தமிழில் செட்டாகப் பாடறியேன் தமிழன் நாளாம் தைத்திருநாளில் பொங்கலோ பொங்கலென்று கவிபாட வந்தேன்........ எட்டுத் திக்கும் ஓங்கியே பாடடி ,பெண் என்றால் யாரென்று ? சிறுமை கண்டு பொங்கி எழுவோம் சிற்றெறும்பாய் நசுங்கியே போகோம் அகப்பை பிடித்த கை அடங்கியே போகுமென்ற , அடம்பிடித்த எண்ணத்தை அடக்கியே வைப்போம் ......... அண்ணை என்று அன்பாக அழைத்தால் , எம்மை ஆள நினைக்கும் கூட்டத்தை கூட்டில் ஏற்றுவோம் . பெட்டிப் பாம்பாய் இருக்மாட்டோம் பொட்டிலே, கொட்டியே தீருவோம் என்று, தமிழர் திருநாளாம் தைத்திருநாளில் மனதில் இருத்துவோம் மைத்திரேயி
-
- 13 replies
- 749 views
-
-
அவர் அப்படி ஒன்றும் திறமில்லை அவருக்கு யாரும் இணையில்லை அவருக்கு இளமையில்லை ஆனால் அது ஒரு குறையில்லை அவர் பெரிதாக சட்டம் படிக்கவில்லை அவரை நாம் படிக்கவில்லை அவர் பிடித்த சிங்க கொடி பிடிக்கவில்லை இருந்தும் கவனிக்க மறுக்கவில்லை அவருக்கு ஈழம் பிடிக்கவில்லை அவருக்கு தேசியம் பிடிக்கவில்லை அவருக்கு மாகாணசபை பிடித்திருக்கு அது ஒரு குறையில்லை புலம்பெயர் தமிழனை பிடிக்கவில்லை அவனின் துட்டு பிடித்திருக்கு அது ஒரு குறையில்லை வாக்குகளை கூட்டமைப்புக்கு போடுவதில் தப்பில்லை
-
- 13 replies
- 1k views
-
-
கவிதையின் கவிதைகள் http://crisedangoiss...eux-300x200.jpg [size=4]என் வாழ்வின் அன்றாட நிகழ்வுகள், அதியுச்ச நம்பிக்கைகள் கூட... என் மிச்சம் மீதிகளையும் மிதித்துக்கொண்டு எனைக் கடந்து தொலைந்து போயின...! இனியொன்றும் இல்லை...! எதுவுமே தேவையில்லை...! என்ற மனநிலைகள் நிலைமாறும் காலவோட்டத்தில் தடுமாறலாம் - ஆனால், என் நினைவுகளில் பதிந்துபோன வலிகளின் தடங்களென்றும் மாறாது... மறையாது! தொடரும் என் பயணங்களும்... என் எதிர்பார்ப்புக்களோடு, தொலைந்துபோன நம்பிக்கைகளை தேடியலைந்துகொண்டிருக்கும்... இறுதிவரை![/size]
-
- 13 replies
- 1.3k views
-
-
±ô§À¡Ðõ ±ý ¸Å¢¨¾¸¨Ç - ¦ÁîÍõ ¬Éó¾¢ ¿¡ý Åó¾ §ÀÕóÐ ¿¢ü¸¡¾ ¿¢Úò¾ò¾¢ø ¿¢ü¸¢È¡û - ¨¸Â¢ø ÌÆó¨¾Ô¼ý þô§À¡Ðõ «ýÚ «ÅÙì¦¸É ±Ø¾¢Â ¸Å¢¨¾¸û -¯Â¢÷òÐ ¸¡üÈ¢ø À¼À¼ì¸¢ýÈÉ ±ý Å£ðÊø ±ýɧ𠏢Ú츢¢ÚìÌÐ ±É- §¾¡Æ¢Â¢¼õ ¦º¡øÄ¢ º¢Ã¢ò¾ Ãò¾¢É¡ - ¨¸Â¢ø ̨¼Ô¼ý ¿¢¾Óõ §Å¨ÄìÌ §À¡¸¢È¡û ±ý Å¡ºø ¸¼óÐ Å¡úÅ¢ý ¿¨¸ÓÃñ- «Åû þô§À¡ ¾Á¢ú ËîºÃ¡õ,Å¡ú¸ ¾Á¢ú ¿¡ý ¸øÅ¢ ¸üÚ ÓÊò¾¨¾§Â þýÛõ- ¿õÀ ÁÚìÌõ…
-
- 13 replies
- 2.6k views
-
-
அணிலே அணிலே கொய்யாப்பழத்தை தூக்கி வீசிட்டு சொக்கிலேட் கிரீம் பிஸ்கட் சாப்பிடும் குண்டு அணிலே கிட்டவா.. நீ ஒரு obesity தெரிந்தும் உன்னை ஓடிவரக் கேட்கமாட்டேன் பயந்திடாமல் பைய நடந்தே வா..! களவெடுத்து நீ தின்னும் பிஸ்கட்டில் பாதி பறக்க திணறும் குண்டுப் புறாவுக்கும் கொடுக்கலாம் கொண்டு வா..! கமராவால் அதைக் கண்ணடித்தே இணையத்தில் போட ஆசை மெல்ல பத்திரமாய் ஊர்ந்து வா. ஊரில் என்றால் மிளகாய்த் தூள் தூவிய நல்ல பொரியலாய் சட்டிக்குள் நீ ஆகி இருப்பாய் தெரிந்து வா..!
-
- 13 replies
- 1.5k views
-
-
-
காதல் தோல்வி காதலித்தோம் நானும் எனது பக்கது வீட்டுகாறியும் உங்கள் வீட்டு எங்கள் வீட்டு காதல் இல்லை இது ஒரு மணிதியாலம் தான் எனது எஜமானும் பக்கது வீட்டு எஜமானும் பேசிகொள்ளும் நேரம் மட்டும் தான் அவர்கள் புரிந்து கொள்ள இது மனிதக் காதலும் அல்ல அதையும் தாண்டி இரு பக்கது வீட்டு நாய்களுக்கான புனித காதல் யாரும் தப்பாக நினைக்க கூடாது இது நாய்களுக்கு என்று மட்டும் எழுதப்பட்ட கவிதை பாவம் தானே அவர்களும்
-
- 13 replies
- 2.2k views
-
-
காதலை பூ என்று நினைத்தேன் பெண்ணே நீ தொட்டவுடன் வெடித்துவிட மிதிவெடியா அல்லது சீறிவந்து உயிர் குடிக்கும் ஆட்லறியா கண்ணிமைக்கும் நொடிப்பொழுதில் கதையை முடித்துவிடும் கண்ணி வெடியா சன்னமாய் போகின்றாய் மின்னலாய் ஒளி வீசுகின்றாய் பல்குழல் பீரங்கி போல படபடென்று பேசுகின்றாய் உன்னைப் பக்கத்தில் வந்து பார்க்க மனம் ஏவுதடி கால்கள்தான் ஏனோ தடை சொல்லுதடி
-
- 13 replies
- 2.4k views
-
-
என் மனநிலைக்குள் எனைத் தொலைக்க யார் காரணம் ? என் (தலை) எழுத்தின் தடைகளுக்கு... எவை காரணம் ? வெற்றுத் தாள்களில் எழுதிக் கசக்கியெறிந்தாலும், நிம்மதியாய் இருந்திருக்குமோ ??? விளங்கவில்லை...! புரியவில்லை...!! தெரியவில்லை...!!! கண்றாவிக் க(வி)தைகளை... கோவேறு கழுதைகளில் சுமந்த, பாவியாகிப் போனேனோ...... இன்று ? மற்றவரின் கேலித்தனமான அடைமொழிக்குள்... அடைக்கப்பட்ட கோழிக்குஞ்சா நான்? என்ற கேள்விகள் எனக்குள்! கேலிக்கூத்தாட,கேளிக்கை களியாட வென்றுகொண்டே இருப்பவர்களா நாம்?? விழுந்த வேகத்தில் எழும் என் வார்த்தைகளை... "அடக்குதல்" என்பதுதான் என் 'நாகரீகம்' என்பதுவும் வீண்தானோ??? கேள்விகள் கேட்கப்போனால்... நக்கீரன்களையும், நிறையக் கேட்கலாமோ? உண்மையான பதிலி…
-
- 13 replies
- 1.9k views
-
-
மடியொன்று கண்டேன்! ஆழமறியா அண்ணன் அணியை-என்றும் பலம் சேர்த்துப் பகை முறிக்க- அண்ணன் திசை நோக்கித் திளைக்காமல் நடந்தனரே-எம் மாவீரச் செல்வங்கள், இவர்கள்பணி நீயேற்று-மக்கள் துயர்துடைக்க விரைந்து சென்று, அவர்களுள் ஒருவனாய்- இன்று மீளாத்துயில் கொள்வோனே! உன் திறனை நானறியேன்- அதை உன் நண்பர் சொல்லிடவே செவிமடுப்பேன்- ஆனால் உன்சுமையை நானறிவேன் எட்ட நின்று. ஊரவரில் முன்நின்று உறுதியுடன் பேசிடுவாய்- இருந்தும் வேதனைகள் உள்ளவரை வெறுமனவே விடமாட்டாய்- உன்னுடன் நெருங்கிப் பழகினதோ மூன்றே மூன்று மாதங்கள்தான்- அதனுள் புரிந்தவைகளோ ஏராளம் ஏராளம்!- ஒருபுறம் சிறியவர் கருத்தை ஆர்வமுடன் நீயேற்றுப் பணிவுடனே நடந்திடுவாய்- மறுபுறம் மூத்தோர்கள் வியந்திடவே நேர்மை…
-
- 13 replies
- 1.7k views
-
-
16 வயசில் பல ஆசை வருமே- இனம்மேலொரு ஆசை எவருக்கும் வருமா? திசைக்கொன்றாய் பறக்கும் சிட்டு குருவி வெடிகுண்டை தன் மடியில் - காவி வீணே தன்னை கொல்ல நினைக்குமா? எப்படி ஆச்சு? ஆலயத்தில் போய் அழுவதில் - பயனில்லை ஆட்லறிதான் - இனி எங்கள் பேச்சு- ! இப்படி நினைத்தாரே ஒருவர் -! உன்னால்-என்னால்-எவரால் எண்ணி பார்த்திருக்க முடியுமா? -ஆகியிருந்ததே! இப்படி இப்படி -பாருங்களேன்! எவர் நினைத்திருப்பார் - இந்த இரும்பு மகன் எங்களை ஆள்வான் என்று? ஒவ்வொரு வயதிலும் - ஒவ்வொரு ஆசை வரும்- மனிதன்-மாறுவான் - அப்பிடிதான் என்கிறார்-! பத்துகளிலிருந்து - ஐம்பதுகள்வரை - நீர் அசைந்ததே இல்லையே- எப்படி எப்படி ? எப்படி எப்படி - உம் பாட்டன் வயசுள்…
-
- 13 replies
- 2.3k views
-