கவிதைப் பூங்காடு
கவிதைகள் | பாடல் வரிகள்
கவிதைப் பூங்காடு பகுதியில் கள உறுப்பினரல்லாதோரின் கவிதைகள், கவிதை மொழியாக்கம், உலகக் கவிதை, பாடல் வரிகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள உறுப்பினர்கள் அல்லாதவர்களின் கவிதைகள், கவிதை மொழியாக்கங்கள், பாடல் வரிகள் போன்றன மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
ஈழத்தை சேர்ந்த, பூர்வீகமாகக் கொண்டவர்களின் படைப்புக்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படவேண்டும். ஏனைய கவிதைகள் தரமான கவிதைகளை அறிமுகம் செய்யும் நோக்கில் இலக்கிய மின் இதழ்களில் இருந்து மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
5128 topics in this forum
-
என் .... கண்களில் உன்னை.... ஓவியமாய் சுமந்து செல்கிறேன் .... உதடுகளில் உன்னை ... மந்திரமாய் உச்சரிக்கிறேன்.... இதயத்தில் உன்னை .... தேவதையாய் வணங்குகிறேன் ....!!! என் ... ஆத்மாவில் மூலாதாரம் - நீ உயிரோட்டத்தின் மூச்சும் -நீ குருதி ஓட்டத்தின் குருதியும் -நீ சிந்தனைகளின் வடிவம் -நீ என் உடலும் நீயே..... என் உயிரும் நீயே அன்பே ....!!! ^^^ கவிப்புயல் இனியவன் உடலும் நீயே உயிரும் நீயே கவிதை தொடர் 01
-
- 4 replies
- 4.2k views
-
-
காந்தக் கலர் அழகி கர்வமின்றி கருவண்டுக் காளை இவனை கவர்ந்திழுத்து கவ்விக் கொண்டாய்.. உன்னை அணுகி உளறி அணைத்தேன் உன்னதம் காண.. உன்னமுதம் சுரக்க உண்டேன்.! உடலெங்கும் பொடிகள் காவி உதிர்த்து உண்டாக்கினேன் உன்னை. காய்ந்து விழும் கன்னிக் காவியமே.. கருக்கொண்ட காதலுக்கு அடையாளமாய் - நாளை காய்த்துக் கனி தரும் நீ புதிதாய் பூமியில் உதிப்பாய்..! விவாகமும் இல்லை விவாகரத்தும் இல்லை விவகாரம் முடிக்கிறோம் வில்லங்கமே இல்லாமல்..! விதியது இயற்கை வழி விதவையாய் நீயும் இல்லை விதுசனாய் நானும் இல்லை விரைந்தே போகிறோம் கால வெளியைக் கடந்து..! அடுத்த வசந்தத்துக்குள் இன்னொரு சந்ததிக்காய் ஆயுளும் முடிக்கிறோம். பூமியை புதிய உயிர்களால் அழகும் செய்கி…
-
- 7 replies
- 14.2k views
-
-
அண்ணன் புலம்பெயர்ந்த நாட்டில் சட்டி பானையோடு சண்டை பிடிக்கிறான் தம்பி உள்ளான் சண்டைக்குள் என்பதால் * எல்லாம் இருக்கிறது புலத்தில் எனக்கு எல்லாமுமான என் குடும்பத்தை தவிர * ஊரில் இருந்துவரும் கடிதம் பிணப்பாரமாகவே வருகிறது இறந்தவர்களின் செய்தியோடு வருவதால் * புலத்தில் பட்டினி கிடந்து உழைத்தும் என் குடும்பத்தின் பசியைத்தான் போக்கமுடிந்தது தூங்கவைக்க முடியவில்லை * புலத்தில் வயிறு முட்ட உண்டாலும் வீசவில்லை அம்மாவின் கைவாசம் * நேத்தி வைத்த கோயிலிலும் செல் விழுகிறது யாரிடம் போவேன் என் வீட்டை காப்பாற்ற * அங்கு விழுந்தால்தான் வெடிக்கும் செல் இங்கு விழுகிறதா என்றாலே இறக்…
-
- 5 replies
- 1.2k views
-
-
உடல்கள் புதைந்தாலும் உணர்வு புதையவில்லை.... இளங்கவியின் - கவிதை..... முற்றத்தில் வேப்பம் பூ கோலமிட... வாசலுக்கு வெற்றிலைகள் மாலையிட... செம்பருத்தி பூ வருவொரை வரவேற்க ஆச்சியின் எடுப்பான வெளிப்பல்லு சொந்தங்களை அன்பாக வரவேற்ற.... எங்கள் அன்பான தமிழீழம் அழிந்து அடிமண்ணில் புதைந்ததுவே..... இடப்பெயர்வில் தொடங்கி பட்டினியில் தொடர்ந்து பயத்திலே வாழ்ந்து பாதியாய் செத்து; பின்னர் மீதியும் செத்த; மானமுள்ள தமிழினமாம்..! ;இன்று மண்ணோடு மண்ணாக மரணப் புதைகுழியில்.... கடைசிக் கதறலும் கயவனுக்கு கேட்கவில்லை கண்ணீரில் பல குழந்தை அவர்கட்கு காயமும் வலிக்கவில்லை ஆனாலும் தன் மரணம் ஏனென்றுதான் புரியவில்லை உயிருடன் உள் …
-
- 4 replies
- 1.2k views
-
-
உடைந்த நிலாக்கள் பாகம் 3 - பா. விஜய் எழுதிய கவிதை தொகுப்பை தொடராய் தருகின்றேன் படித்து மகிழுங்கள்) ரோமா புரியின் காதல் தேவதை....தொடர் 1 இந்த புமியின் வரலாற்றில் இருக்கும் நெருப்பும். முதுகில் இருக்கும் நிலச்சரிவுகளும் தோளில் இருக்கும் மலைகளும்... கைய்யில் இருக்கும் மலர்களும்... யாருடைய வாழ்க்கையாவது கதையாய் - பாடலாய்க் காற்றிடம் சொல்லி கொண்டேதான் இருக்கும். ஓர் இலையின் நுனியில் பனி சருக்கி விழும் நேரத்திற்க்குள் முடிந்து போன சரித்திரங்களும் உண்டு. விண்கற்களின் வயதை போலக் காலம் கடந்து வாழும் வாழ்விலும் உண்டு ! ஓர் உலக பேரழகியின் உயிரோட்டமான உணர்சி குவியல் இது ! ""கிளியோ பாட்ரா "" சொன்னால் உதடுகளை …
-
- 39 replies
- 15.3k views
-
-
உடைந்த மாதாவும் உடையாத மாடுகளும் கொம்பு முளைத்த எங்கள் மாடுகளோடு கொம்பில்லாத மாடுகள் வந்து மோதிப் பார்க்கின்றன. கொழும்பில் இருந்து தடித்த கொழுப்போடு பறந்து வரும் எருமைகளால் மாதாவின் தலையைத்தான் உடைக்க முடிகிறது. வானத்தில் புல் முளைத்தால் எங்கள் மாடுகளுக்கு சிறகுகள் முளைக்கும் என்பதை மறந்துவிட்டன பறந்து வருகிற எருமைகள். உடையாத மனதோடு உயிர் காக்கும்படி அடைக்கலம் தேடும் கோவில் வாசலில் மாதாவின் தலை தலைகிழாய் கிடக்கிறது. எண்பத்தைந்து மாக்கள் செத்தால் என்ன? எண்பதினாயிரம் மக்கள் செத்தால் என்ன? எந்த நாடும் கேட்காது. மதம் பிடித்த யானைகள் மதம் பிடிக்காத பூனைகளோடு கைகுலுக்கி மகிழ்ந்து மௌனமாகிப் போனது. …
-
- 7 replies
- 1.8k views
-
-
உடைந்த மூங்கிலானேன்: ஒரு உடைந்த மூங்கில் பற்றி யாரும் கவலைப் பட வேண்டாம் உடைந்த மூங்கிலால் புல்லாங்குழல் ஆக முடியவில்லை அது முகாரி பாடியதா இல்லை புரட்சி பாடியதா இல்லை தன்னையே உடைத்து அழுகுரலை இசைத்ததா யாரும் கவலைப் படவேண்டாம் மூங்கிலின் மேலிருந்த குருவி தன் காதலனின் வீரச் சாவு கேட்டு அழுது குளறியது மூங்கிலை கடந்த காற்று தன் தலைவனின் வீர மரணம் பற்றி ஓங்கி அறைந்து ஒப்பாரி வைத்தது மூங்கில் அழவில்லை மூங்கில் ஒப்பாரி வைக்கவில்லை தன்னை கடக்கும் காற்றனைத்தும் அழுகை அல்ல இசை என்றது அதன் உடைவு ஆரம்பித்து இருந்ததை அது அறியவில்லை இன்னும் புல்லாங்குழல் ஆகலாம் எனும் கனவில் அது மிதந…
-
- 15 replies
- 1.9k views
-
-
பனி இதல்களின் உட்புறத்தின் புதர்களில் பாய்வதற்குப் பதுங்கியிருக்கின்றன முத்தங்கள்.... கனவுகளின் புூட்டை உடைத்து என் பிரதேசத்துக்கு இரவு வேளைகளில் உன்னை கடத்தி வருகிறேன்.... மூடிய இமையின் இருட்டடியில் நீ ஒரு ஒளி உருவமாய் மிதக்கின்றாய்..... தூங்கும் உடலுக்குள் ஒரு புூவாய் யாத்திரை செய்கின்றாய்..... அதன் அறைகளில் உன் அரிய பயணங்களை நிச்சயித்துக் கொண்டருக்கிறேன்.... காதலின் தோட்டத்தில நான் ஒரு புூவாக புூக்கத்தொடங்கி விட்டேன்.. பறித்துக் கொள்ள உன் விரல்கள் நடுங்குகிறதா? அசைகிறதா?............
-
- 11 replies
- 1.9k views
-
-
உனக்கென்று - ஒரு கொள்கை உள்ளவரை உன்னை யாரும் கொல்ல முடியாது! தரிசாய் கிடந்தாலும் எரிந்து போக துணியும் ! அடுத்தவன் வந்து........ எம் நிலத்தில் ஆர்பாட்டமாய் ......... ஏதும் செய்ய நினைத்தால் ....... மொத்தமாய் வெறுக்கும்! முடியாமல் போனாலும்.. மோதி முக்கி தன்னை அழிக்கும்....... தாயை விற்று பிழைக்க நினைக்காது! கோவம் கொள்வாய் நீ முடக்கிய விரல்களில் கோவம் - நீளம்.. கொன்றுதான் ஆகணும்......... யாரை -? தெளிவில்லை! அது இருக்கட்டும்- அண்ணாக்கு திவசம் கொடுக்கணுமே இன்று- முடிந்ததா? கவனம் - சடங்கு என்று ஏதோ செய்கிறாய் உன் சமையல் அறையில் சிங்களன் ஏவிய செல்- விழகூடும்! மொத்தமாய் - உன் சந்தத…
-
- 1 reply
- 955 views
-
-
உணர்ச்சிக்கவிஞர் காசி ஆனந்தன் கவிதைகள். http://www.kaasi.info/pages/kavithai.htm
-
- 11 replies
- 13.7k views
-
-
கோபம்கொண்டு குமைந்தபோதும் துரோகம்கண்டு துவண்டபோதும் வறுமைகொண்டு வாடியபோதும் வெறுமைகொண்டு ஓடியபோதும் நறவுண்டு களித்தபோதும் உறவுகண்டு புளித்தபோதும் வாடைதழுவி உறைந்தபோதும் பேடைதழுவி கறைந்தபோதும் புலவிநீண்டு தீய்ந்தபோதும் கலவிநீண்டு ஓய்ந்தபோதும் - இன்பதுன்பங்களில் இருப்பை உணர்த்திய நிழலே மெல்ல உயிர்கொல்வதுதான் உன் செயலோ !! இரத்தம்கெட்டு சத்தம்கெட்டு எயிறுகெட்டு வயிறுகெட்டு வாசம்கெட்டு சுவாசம்கெட்டு இதயம்கெட்டு இதழ்கெட்டு ஊன்கெட்டு உறக்கம்கெட்டு உருவம்கெட்டு பருவம்கெட்டு அலம்பலில் ஆரம்பித்து புலம்பலில் நிறுத்துமிந்த உணர்ச்சிப்போலியை உணரும் காலம் எதுவோ ?
-
- 8 replies
- 1.4k views
-
-
வானுயர் ராட்டினம், ஆளில்லா தார்ச்சாலை நுரையோடு கரைதொடும் அலைகள் பஞ்சு மிட்டாய் - இளநீர் சின்னஞ்சிறு மீன்கள் - வெயில் என் மோதிரம் - என பார்க்கும் பொருளில் எல்லாம் உன்னைப்பார்க்கிறேன் இவை போல் எதுவும் இல்லையா - என் இருப்பினை உனக்குணர்த்த - செந்தில்
-
- 7 replies
- 1.4k views
-
-
ஆழிப்பேரலையே – எங்கள் ஆன்மாக்களை புரட்டிப்போட்ட சுனாமியே ஆசியாவையே அழித்தொழித்து அகிலத்தையே அதிரவைத்த ஊளித்தாண்டவமே ஆண்டுகள் ஆயிரமானாலும் ஆறுதல் கோடிகள் சொன்னாலும் அடங்குமோ எங்கள் மனத்துயர்? அணையுமோ எங்கள் துயர் நெருப்பு? நினைவுகளை அழிக்கமுடியாமல் நித்தமும் கலங்கி நிற்கிறோமே…. மரங்களை அடுக்குவது போல் பிணங்களை அடுக்கிவைத்த காட்சிகள் மனக்கண்களில் விரிகிறதே – உடல் அணுக்கள் அனைத்தையும் உலுப்புகிறதே இறுதிக்கடன் செய்வதற்குகூட இனசனத்தை விட்டுவைக்காமல் குடும்பத்தோடும் குடியிருப்புக்களோடும் கூடிவாழ்ந்த ஊரோடும் உற்றார் உறவினரோடும் கொத்தொடும் குலையோடும் மொத்தமாகக்கொன்றொழித்த உன் கொடுமைதனை கோரத்தாண்டவத்தை எண்ணுகையில் உள்ளம் வெடித்த…
-
- 0 replies
- 994 views
-
-
உணர்வாய் என் தமிழா! இடர்கள் இடர வைக்கும் தடைகள் தளர வைக்கும் நம்பிக்கை ஒன்றே கொண்டால் நல்ல வழி பிறக்கும்! 'வெற்றி" ஒன்றே என்றும் சொந்தம் என்ற திமிர் கூடாது! தோல்விகளே பாடம் சொல்லும் அதனால் உடையக் கூடாது! "நேற்று" நடந்த கசப்புநிகழ்வு இறந்த காலம் ஆயாச்சு இந்த நொடி உந்தன் கையில்! எழுந்து நின்று போராடு! வாழ்க்கைச் சுழலில் இன்பதுன்பம் எல்லாம் உந்தன் கையோடு! மனதில் தளரா உறுதி கொண்டால்! என்றும் வெற்றி உன்னோடு!!
-
- 0 replies
- 621 views
-
-
நீயிருந்த கருவறையில் நானும் இருந்தேன் பெருமை அண்ணா.... கல்லறையில் நீ உறங்க கண்ணீரில் நானும் இங்கே தாய் மண் காத்திடவே தலைவரின் வழியில் நின்றாய் தாய் தந்தை வாழ்வுக்காய் அகதியாக நானும் இங்கே கல்லறையில் நீயும் அன்பே நிம்மதி உறக்கமா அண்ணா??? நாலுசுவர் வீட்டினிலே இங்கே நரகப்பட்ட வாழ்க்கையடா நானும் வந்து இணைந்திடவே நாளங்கள் துடிக்குதடா நான் வந்து உனைக்கான காத்திருந்த வேளை அண்ணா..... வீரச்சாவு செய்தி கேட்டு என்னை நான் இழந்தேன என் குரல் கேட்காமல் எப்படி நீயும் உறங்குகின்றாய்? உன் இனிய குரல் ஓலி இன்னும் என் காதில் ஒலித்து ..... என் கண்களில் நீராய் கரையுது அண்ணா........ என்…
-
- 20 replies
- 2.8k views
-
-
புதை குழிகளுக்குள் அவர்கள் அண்ணாந்து பார்க்க உறவுகள் அவர்களை தலை கவிழ்ந்து பார்க்க கண்ணுக்கு புலப்படாத உருவங்கள் உணர்வுகளில் முழுமையாக நிரம்பியிருக தேற்றுவராரற்ற கணங்களில் நாங்கள் இருக்கின்றோம்…. நாடு இருக்கின்றது…… மீழுவோம் ஒரு நாள் ஆழுவோம் ஒருநாள்… நம்பி உயிர்கொடுத்தவர்களுக்கு கொடுத்த வாக்கு தவறும் போதெல்லாம் மனசாட்சி உள்ளவர்களுக்கு துரோகம் முக மூடியை கிழித்து எட்டிப்பார்க்கின்றது அதற்கும் அப்பால்.. நினைக்க நினைவு கூர நேரமில்லை.. நேரமிருந்தாலும் ஒன்றுபட முடியவில்லை மிஞ்சியது எதுவும் இல்லை ஆகவே உங்களை தோண்டி எடுத்து எதாவது தேறுமா என்றும் பாரக்கின்றார்கள்… உங்கள் தியாகமே எம்மினத்த…
-
- 0 replies
- 995 views
-
-
மரண அடி விழுந்தவுடன் ஒழிந்தானே பகைவன்-அங்கு கரணம் இட்டு புகை எழவே புலம்பி நின்றான் மகிந்தன் இரணை மடுவில் குண்டெறிந்து தேடுகிறார் எலிகள்-இனி சரணம் சொல்லி கதை முடிப்பார் சீறிவரும் புலிகள் விடுதலைக்கு வானோடும் அது தாயகத்தின் அடிப்படை-அதை தடுப்பார் எவருண்டு அது தலைவனுக்கே வெளிப்படை கொடுப்பார் பல வெற்றிகளை தமிழீழ வான்படை-அவர் விடுப்பாரே போர்முரசம் எதிரியின் உயிர்பறித்து ஒப்படை உலகமெல்லாம் போற்றிடவே புவியாளும் புலிப்படை-நாம் கலக்கமின்றி வாழ்ந்திடலாம் தலைவன் மனம் தங்கம் எடை மறத்தமிழா நுகர்ந்திடுவாய் தாய்மண்ணின் நல் வாடை-அதை மறந்தால் நீ பிணந்தானே உன் மேனிக்கு ஏன் ஆடை ஆண்டாண்டு காலமதாய் நாம் ஆண்டுவந்த திருநாடு-இது வேண்டாத பேருக்கும் வாழ்வளித்த சி…
-
- 2 replies
- 1.1k views
-
-
கற்பு அது எனக்கும் இல்லை என்னவளுக்குமில்லை கடிதம் அதை அனுப்பமட்டுமே தெரியும் வஞ்சனை அது தான் மூலதனம் குழிபறிப்பு பிறந்ததிலிருந்து தமிழ் பற்று அது தமிழனை முட்டாளாக்க சினிமா பணம் மற்றும் பறவை சுட பத்திரிகை பந்தி பந்தியாக எழுதி உடன்பிறப்பை முடக்க தொலைக்காட்சி இனாம் என்று தொடங்கி இருட்டடி அடிக்க கட்சி அது குடும்பச்சொத்து பிள்ளைகள் உலகவரிசை பணக்காறராக உண்ணாவிரதம் அது உண்மையைப்புதைக்க.........
-
- 0 replies
- 731 views
-
-
-
-
வலைப்பூவில் எழுதும் தீபிகாவின் கவிதையில் பிடித்த கவிதையொன்று. உண்மை அறியும் பொய்கள் சமாதானம் தருவிக்கப்பட்டதாய் சொல்லப்படுகிற எனது நிலத்தில் வீதிகளை விழுங்கிக்கொண்டு வளர்ந்திருக்கிற விளம்பர மரங்களின் நிழலில் நாய்களுடன் சேர்ந்து வீடுகள் பறிக்கப்பட்ட உடல்களும் படுத்துக் கிடக்கின்றன. திரும்பிப் பெறமுடியா இழப்புக்களோடு திரிகிற சனங்களின் முகங்களில் படரமுடியாத மகிழ்ச்சியின் ரேகைகள் மிச்சமிருக்கும் வாழ்க்கையை எதிர்பார்ப்புகளற்று செலவு செய்கின்றன. சிறைப்பிடித்து காட்சிக்கு வைத்திருக்கும் மிருகக்காட்சிச் சாலை விலங்குகளை பார்க்கும் ஆவல் நிறைந்த அதே கண்கள் குளிர்சாதனப் பேரூந்துகளில் வந்திறங்கி கும்மாளமிட்டபடி ஊரெங்க…
-
- 1 reply
- 750 views
-
-
உண்மை ஒளி குன்றா உறவின் பெருங்கொடியே! கருணைப் பெருங்கடலே! கன்னல் சுவையூறும் தமிழ் பூத்த திருநாடே! உண்மை ஒளி குன்றா உறவின் பெருங்கொடியே! திண்மை கொண்டெழுந்த உங்கள் திடல் தோளில் சிறிது சாய்ந்து இளைப்பாறிக் கொள்கிறோம். தாயின் மடியில் தமிழ்ப் பாலுண்ட கோடி நெருப்பொன்றாய் தகிக்கக் கண்டோம். வீசும் தமிழ் காற்றும், உணர்வின் அலையும் தீய்ந்து கருகும் எங்கள் வாழ்வை ஆற்றும். உக்கித் தனிமரமாய் துயர் சுமந்த எங்களுக்கு உயிர்ப்பின் கொடி பிடித்து அரவணைக்கும் உறவுகளே! தெக்கும் உணர்விடையே உயிர்ப்பூ கசிகிறது. தேம்பும் விம்மலொலி சிறிதடங்கிக் கிடக்கிறது. பால் வாசம் வீசும் மார்பிடையே அணைத்தவளே! பனித்த விழிகளால் பாசத்தைப் பொழிபவளே! மனித்த…
-
- 5 replies
- 1.3k views
-
-
உன்னோடு ஓடிக்கொண்டிருந்த நதியாக நான் இருந்த போது ஒவ்வொன்றும் புதிதாய் இருந்தது ஏனோ குளமாக தேங்கிவிட்டேன் ஆனாலும் என்னைச் சுற்றி உன் நினைவென்னும் குளக்கட்டுகளே உன்னோடு ஓடியதும் நானே உன்னோடு உருண்டதும் நானே உன்னோடு விழுந்ததும் நானே உன்னோடு கலந்ததும் நானே ஆனாலும் நீ நானில்லாமலே சேர்ந்துவிட்டாய் வாழ்க்கை எனும் கடலில் நான்தான் உன்னை நினைத்தே தேங்விட்டேன் குளமாய் இருந்தாலும் யார் வீட்டு குழம்பிலாவது நீயும் ஒரு நாள் உப்பாகலாம் நானும் ஒரு நாள் நீராகலாம் அப்போதாவது உண்மை சொல்வாயா..? ஏன் என்னை விட்டு சென்றாயென்று -யாழ்_அகத்தியன்
-
- 2 replies
- 1k views
-
-
-