கவிதைப் பூங்காடு
கவிதைகள் | பாடல் வரிகள்
கவிதைப் பூங்காடு பகுதியில் கள உறுப்பினரல்லாதோரின் கவிதைகள், கவிதை மொழியாக்கம், உலகக் கவிதை, பாடல் வரிகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள உறுப்பினர்கள் அல்லாதவர்களின் கவிதைகள், கவிதை மொழியாக்கங்கள், பாடல் வரிகள் போன்றன மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
ஈழத்தை சேர்ந்த, பூர்வீகமாகக் கொண்டவர்களின் படைப்புக்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படவேண்டும். ஏனைய கவிதைகள் தரமான கவிதைகளை அறிமுகம் செய்யும் நோக்கில் இலக்கிய மின் இதழ்களில் இருந்து மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
5128 topics in this forum
-
"காதல் கனியும் நேரம் கவிதைகளோடு உன்வாசலில்..". எரிமலையின் உச்சியிலும் ஏற்றிடும் எந்தச்சிகரத்திலும் கொண்டு சேர்த்திடும் பாராமுகம் காட்டியபோதிலும்-அந்தப் பார்வைகள் உனைச் சுட்டெறிந்திடும் முன்னெவரும் கண்டிராதது போலவே முதல் உன்னை சிந்திக்க வைத்திடும் நித்திரையின் போதும் உன் நினைவுகளை நிலைகுலைத்து உன் மனதில் அலை மோதும் சத்தமில்லாத ஒரு தனி உலகில்-உன்னை சந்திக்க விரும்பும் ஒரு சுதந்திரப்பறவை போலும் எண்ணங்கள் திரைபுரண்டு ஓடும் மனதில் எள்ளழவும் உதடில் வருமுன் அழிந்து போகும் இன்னுமதைச்சொல்லப் போனால்-உன் இரவுகளை சுட்டெரித்துவிடும் பக்கத்தில் இருப்பவரை பார்த்திராது-மனம் பட்டப்பகலிலும் வான்வெள…
-
- 7 replies
- 1.7k views
-
-
உண்மையிடம் கேட்டேன் ஒரு கேள்வி ...? நல்லது எது கெட்டது எது ...? உண்மை சொன்னது ..... வீட்டுக்குள்ளே செல்லும் போது செருப்பை .... கழற்றி வைக்கிறோம் .... செருப்பு ஒதுக்கப்படுகிறது .... கொழுத்தும் வெய்யிலில் .... பதைத்து துடிக்கும் போது .... செருப்பு சொர்கமாகிறது ....!!! நறுமணம் வீசும் போது ... மனம் சுவைக்கிறது ... துர்நாற்றம் வீசும்போது ... மனம் சுழிக்கிறது ...... காற்றே இல்லாத அறைக்குள் ..... அடைக்கப்பட்டு அடுத்து மூச்சு .... விட்டால் உயிர்பிழைக்கும் ... நிலையில் துர்நாற்ற காற்று .... சொர்க்கமாக மாறுகிறது ....!!! நாக்கு வறண்டு உடல் சோர்ந்து .... ஒரு துளி தண்ணீருக்கு மனம் ... ஏங்கி கொண்டிருக்கும்போது .... த…
-
- 3 replies
- 725 views
-
-
உயிரில் உள்ள ஒவ்வோர் அணுவும் வலியால் துடிக்க வாடும் எனக்கு- உதவிட இந்த உலகினில் யாருளர்...? நெஞ்சம் முழுதும் நிறைந்த சோகம்... கொஞ்ச மேனும் கருணை கொண்டு- உதவிட இந்த உலகினில் யாருளர்...? பெற்றார் இன்றிப் பிள்ளைகள் இன்றி உற்றார் இன்றி உழலும் எனக்கு- உதவிட இந்த உலகினில் யாருளர்...? நாளும் பட்டினி.. நாளையும் பட்டினி.. வீழும் கண்துளி விரல்கொண்டு துடைத்தினி- உதவிட இந்த உலகினில் யாருளர்...? எண்ணற்ற துக்கம்... இடையற்ற துயரம்... கண்ணுற்றுக் கலங்கிக் கடுகியே வந்து- உதவிட இந்த உலகினில் யாருளர்...?
-
- 9 replies
- 839 views
-
-
ஆரியச் சக்கரவர்த்தி ஆசோகனின் காடைக் கடையன் விஜயன் பரம்பரையில் உதித்த சிங்கள தேசத்தில் 50 களில் தமிழ் பெண்கள் மார்பறுத்து கொதி தார் ஊற்றி... அனல் தணல் மீது விட்டெறிந்து கொடுமை செய்து.. கூடி நின்று கேலி செய்து வெற்றிக் கோசம் போட்டு மகிழ்ந்த கூட்டம்... 83 இல் அதையே அகலப்படுத்தி தமிழச்சிகள் சேலை களைந்து மானபங்கப்படுத்தி தமிழர் குடியையே ஆடை இன்றி விரட்டி அடித்து மகிழ்ந்து நின்று.. மகாவம்சம் வழி வீரம் பேசிக் கொண்டது. அந்தக் காடைக் கழுதைகளை காட்டேரிகளை.. இராணுவம் என்ற பெயரில் உலக நாடுகள் அள்ளி வழங்கிய கொலைக்கருவி கொடுத்து தமிழர் பகுதிக்கு அனுப்பி வைத்தான் ஜே ஆர்..! ஒப்பரேசன் லிபரேசன் முன்னாடி தொடங்கி ஒப்பரேசன் லிபரேசனில் தமிழ் பெண்கள் …
-
- 9 replies
- 1.9k views
-
-
ஏகலைவன் வித்தை கற்க எந்த சாத்திரமும் அனுமதிக்கவில்லை அவன் வில்லில் விஜயனையும் வெல்வான் என்று கட்டைவிரலைக் காணிக்கையாய் பெற்றதென்ன நியாயம்? தவம் செய்தான் சம்பூகச் சூத்திரன் தகுதி அவனுக்கேது என்று சீறி அவன் தலை வெட்டிச் சாய்த்த கதை இராமபிரான் வரலாரன்றோ? கட்டை விரலையோ, தலையையோ காணிக்கையாக இந்நாளில் எவனும் கேட்டால் பட்டை உரியும் சுடுகாட்டில் அவன் கட்டை வேகும். பிறகென்ன? முதலுக்கே மோசம் வந்தபின்னர் முயலாக ஆமையாக கிடத்தல் நன்றோ? ஆயிரம் அடி பள்ளத்தில் வீழ்ந்தவனை கைதூக்கிக் கரையேற்றும் நேரத்தில் கனமான பாறையொன்றை அவன் தலையில் உருட்டி விட எத்தனிக்கும் உளுத்தர்களை கண்டால் உதைக்கத் தான் வேண்டும் ஓட ஓட விரட்டத்தான் வேண்டும் ஆற…
-
- 1 reply
- 852 views
-
-
இன்று உதைபந்தாட்ட உலகக்கிண்ணப் போட்டிகள் விறுவிறுப்பாக நடைபெற்றுக்கொண்டிருக்கும் இதேவேளையில் உதைபந்தாட்டம் பற்றிய எனது கவிதையொன்றை இணைப்பதில் மகிழ்கிறேன். பாடசாலை நாட்களின் நினைவுகளோடு மற்றவைகளையும் சேர்த்து சில வருடங்களுக்கு முன்னர் எழுதிய கவிதையினை கள உறவுகளுக்காக இணைக்கின்றேன். உதைபந்தாட்டம் பசும்புற்றரை செய்து பக்குவமாய் அதைவெட்டி கசங்காத கம்பளமாய் ஆக்கிடுவார் - அதனிடையே நெடுவெண் கோடுகளும் நீள்சதுரம் வட்டமும் நடுவினிலும் இடுவார் பொட்டு. உருண்டையான ஒருபந்தை ஓடிஓடிப் பதினொருவர் உருட்டி இருபுறமும் அடித்திடுவார் - இருதடிக்குள் வைத்த இடத்திருந்தும் விளையாட்டின் திறன்கொண்டும் புகுத்திவிட்டால் பெறுவார் புகழ். கூச்சலிடுவார் கூத்துமிடுவார்…
-
- 20 replies
- 4.1k views
-
-
மனமேடை ஊஞ்சலிலே நடனமிடும் இசையசுரா உனதோடு சொன்னதையே உதையாக ஏன் நினைத்தாய்? நினைவிடையே தினவெடுக்கும் நீஎந்தன் நட்பென்று எனையா நீஎண்ணிவிட்டாய் உனையிகழும் பிறப்பென்று? பணமேதும் பகைக்கவில்லை பிணமாக மணக்கவில்லை குணமாக்கும் சிறுவார்த்தை பாசாணம் ஆனதுவோ எழுத்தின் எதிர்வீச்சால் என்னெண்ணம் கன்றியதோ வழுக்கிய வார்த்தையில் அழுக்கும்வந்து அணைத்ததுவோ?! துரும்பும் தூணாகும் காற்று கனத்திடுமா புகையும் நெருப்பாகும் படத்தில் எரிந்திடுமா திசைகள் மாறிடுமா பசைகள் விலத்திடுமா விதிகள் இதுவென்றால் விலத்தல் எவ்வாறு?!
-
- 1 reply
- 834 views
-
-
உத்தரிக்கும் இரவு அசமந்தமாக நகரும் சரக்கு ரயிலாக எரிச்சலுாட்டியபடி நீளுகின்றது இரவு. கடைசிக் கையிருப்பும் முடிந்து போன அந்தரிப்பில் முட மறுதலிக்கின்றன உறக்கமற்ற விழிகள். தீர்ந்து போன சக்கரை டப்பாவைச் சுரண்டுவது போல மீதமிருக்கும் கனவுகளை பிறாண்டுகிறது தவித்துப் போன மனது. இன்னமும் மக்கிப் போகாத இறந்த காலத்தின் நினைவுப் புழுக்கள் நெளிந்து நெளிந்து மூளையை தின்னுகின்றன. அப்போதுதான் வீதியோரத்தில் அயரத் தொடங்கிய இராப் பிச்சைக்காரனை அப்புறப்படுத்தும் - மாடி வீட்டுக் காவலாளியின் தீவிரத்துடன் கண்களில் குத்துகிறது காலைச் சூரியன். ஓ.... ஒரு இரவைக் கடப்பதற்குள் ஒரு மாமாங்கத்தின் உத்தரிப்பு. 2.ஒரு தேவதையின் கனவு. எண்ண இழ…
-
- 0 replies
- 507 views
-
-
உன்னை போல் ஒரு ஆணின் அருகிலே மௌனம் கொள்வது கடினம் தான்... பேசிக் கொள்ளாத எல்லா நிமிடமும் நஷ்டம் தான்... எனை விட இங்கு யாரும் இல்லை என்ற எண்ணத்தில் நான் இருந்தேன்... உன்னை பார்த்தவுடன் எனை தொட்டுவிட்ட வெட்கத்தில் தலை குனிந்தேன்... அன்பே...உன்னை ஒரு நிமிடம் மறந்திருக்க என்னால் முடியவில்லை... இன்று இந்த நாள் முழுக்க உன்னை நினைத்திருக்க ஒரு போதும் அலுக்க வில்லை... உன் வெள்ளை உள்ளம் கண்டு விழுந்து விட்டேன்... விழுந்த இடம் உந்தன் நெஞ்சம் என்று புன்னகைத்தேன்...!!!! அன்பே... உன்னை நான் மறக்க்க எடுக்கும் ஒவ்வொரு முயற்சியும் தொல்வியிலேயே முடிகின்றன... ஏனெனில்... நான் மறப்பதற்கு உன்னை தானே நினைக்கிறேன்...!!!! நான் சிந்தும் புன்னகை கூட உன்னை …
-
- 9 replies
- 1.6k views
-
-
வரிசை வரிசையாக நெல் மணிகள் விதைத்து அழகான அகண்ட வாய்க்கால் கட்டி தேவையான குளத்து நீரை மண் குளிர ஓட விட்டு வளர்த்த நெல் மணிகள் பொன் நிறமாகி நாணத்தால் அவை மண் பார்த்து தலை வணங்கி நிற்கையிலே மண்ணுக்கு சொந்தக்காரன் அறுவடை நேரம் என சரியாக குறிப்பறிந்து அதை வெட்டி அரிசி ஆக்கி தானும் உண்டு தன் அயலானுக்கும் உண்ணக் கொடுத்த வன்னி மண்ணின் சொந்தக்காரன் ஒரு நேர கஞ்சிக்காய் கால் கடுக்க காத்திருக்கிறான் றோட்டோரமாய் கொதிக்கும் வெய்யிலிலே........ வலிக்கும் மனசுடன் உங்கள் தமிழ்மாறன்
-
- 0 replies
- 631 views
-
-
உனக்காக காத்திருப்பேன்.... முதற் சந்திப்பில் என் மனதைக் கவர்ந்தாயடி ஒவ்வரு நாளும் உன் பேச்சால் -என்னை சாகடித்தாயடி ஒரு நாள் என் கூட பேசாமல் - என் மரண வலியை எனக்கு உணர்த்தினாய் பெண்ணே...... தெண்றல் காற்றாய் என் மனதுக்குள் நுழைந்து விட்டாய்... நீ என் மேல் காட்டும் அன்பும் ஆதரவும் என்னை மெய் சிலிர்க்க வைக்கிறது. ஆனால் நானோ உன்னை விட பலமடங்கு உன்னை நேசிக்கின்றேன். அது உனக்கும் தெரியும் ஆனால் நீயோ என்னை விட பல மடங்கு இன்னொருவணை நேசிக்கின்றாய் அதுவும் எனக்கு தெரியும்..... அன்பே... அன்பே உன் சந்தோசம் தான் என் சந்தோசம் உனக்காக என் உயிரையும் கொடுப்பேன்... உன் சந்தோசத்துக்காக அவனிடம் உன்னை விட்டுக் கொடுத்துத்தான் ஆக வேண்டும். ஆனாலும் உன்…
-
- 6 replies
- 7k views
-
-
நேற்றெமது ஊரை அழிக்கவும் இன்று உமது ஊருக்கு தீ வைக்கவும் எங்கிருந்து புறப்பட்டனர்? விமானங்கள் அன்றெம் நிலத்தில் கொட்டிய அதே பதற்றம் இன்று உம் ஊர்களில் நண்பனே உனக்காய் நான் குரல் கொடுப்பேன் ஏனெனில் நான் அறிவேன் இழப்புகளின் வலியை ரிஷான், நேற்றெம் வீடுகளை சிதைத்து இன்று உம் வீடுகளை எரிப்பது ஏன்? நண்பனே உனக்காய் நான் அவதியுறுவேன் ஏனெனில் நான் அறிவேன் வீடற்ற பொழுதுகளை நேற்றெம்மீது குண்டுகளை எறிந்து இன்று உம்மீது வாள்களை வீசுகின்றவர் யார்? நேற்றெமை கொன்ற குண்டுகளில் படிந்திருந்த அதே வெறியே இன்று உமை வெட்டும் வாள்களில் நண்பனே உனக்காய் நான் துடிப்பேன் ஏனெனில் நான் அறிவேன் காயங்களின் நிணத்தை ரிஷான், எம் கோவில்களை உடைத்து உம் பள்ளிவாசல்களையும் இடிப்பது ஏன்? நண்பனே உன…
-
- 5 replies
- 873 views
-
-
எதற்காகப் பிறந்தேன் என்று தெரியவில்லை அன்பு செலுத்த மறுக்கும் உனக்கு அன்பு செலுத்தவா? நம்பிக்கையில்லாத உன் வாழ்வில் நம்பிக்கை தான் வாழ்க்கை என்று வாழ்ந்து காட்டவா? யாருக்காகவும் இதுவரை கண்ணீர் வடித்ததில்லை கல்மனம் கொண்ட உனக்காக கண்ணீர் வடிக்கவா? என் எதிர்காலத்திற்காக கடவுளை வணங்கியதில்லை உன் எதிர்காலம் நன்றாக அமைய கடவுளை வணங்கவா? ஏனடா நான் இப்படி? இது என் காதலின் ஆரம்பமா? இல்லை என் அன்பின் இறுதியா? ஒலிவடிவில்..
-
- 19 replies
- 3.8k views
-
-
-
அன்பே.... உனது வாழ்க்கை இடிந்து போகாமல் இருப்பதற்காகவே உனக்காக கட்டிய தாஜ்மஹாலை இடிக்கிறேன்... ஏனெனில் நீ இப்பொழுது இன்னொருவனின் மனைவி அல்லவா...?
-
- 3 replies
- 1k views
-
-
சுடும் மழைக் காலம்... குளிர் வெயிலாய் நீ வந்தாய் ! இலையுதிர்கால.... வெளிர்ப் பூவை நீ தந்தாய் !! மனதிழை ஓடும்.... மெல்லிசையாய் உன் பெயரை, இதழிடை பாடும்.... இன்னிசையாய் நீ அமைந்தாய் !!! கனதரம் நினைத்திடும்... கணங்களும் இனித்திடும்...! நிரந்தர வதிவிடம்... மனங்களும் கொடுத்திடும்...!! சிலதரம் பார்த்திடும்... நால்-விழிகளும் கலந்திடும்...! வெண்ணிலா வெட்கத்தில்... மெல்லமாய்ச் சிவந்திடும்...!! எங்கே நீ சென்றாலும்... என் நினைவும் பின்னால் அலையுமடி..! அங்கே வானவில் வீடு கட்டி... உனக்காய் வாசல் வரையுமடி... !! உந்தன் குரலைக் கேட்டு... மெல்லப் பூக்கள் பூக்காதா... ? பூமொட்டு விரியும் தாளம் எந்தன்..... காதில் கேக்காதா... ?? என் கைகள் தொட்டுச் செல்லும் மேகம்…
-
- 6 replies
- 1.9k views
-
-
தலைப்பைப்பாத்திட்டு சண்டைக்கு றெடியா யாரும் வரவேண்டாம். கீழேயுள்ள கவிதையை மின்னஞ்சலில் நண்பர் ஒருவர் அனுப்பியிருந்தார். அததனை இங்கு பதிவிடுகிறேன். இழு தேரை ! இறுகப்பிடி வடக்கயிற்றை…! சமீபத்தில் இங்கிலாந்து நடந்த ஒரு தேர் உற்சவத்தில் 20.000 பேர் கலந்துகொண்டதாக வந்த செய்திக்கு, அங்கு வாழும் கவிஞர் இளம்பறவை எழுதி அனுப்பியுள்ள கவிதை. இழு தேரை.. இறுகப்பிடி வடக்கயிற்றை. பக்கத்துச் சுரிதார் பார்வைபட இன்னும் செய்! பார்த்து இளி!! முள்ளிவாய்க்காலில் அந்த இறுதிநாட்களில் உன் உறவுகள் விட்டகண்ணீரும் குருதியும் இன்னும் காயவில்லை…பரவாயில்லை..புலத்த ு தெருக்களில் தேர் இழு! உன் தா…
-
- 13 replies
- 2.3k views
-
-
விதைகளை தின்னும் தேசத்தில் முகிழ்த்தவளே, கனவுகளை கருவறுக்கும் கொலைவாள்களிடையே எழுந்தவளே.. இழப்பின் வலிகளை மொழிகளால் இறக்க முனைந்தவளே இழிகாலதில் இறங்கிய ஊழியின் மகளே.. குருதி குடிக்கும் பேரினத்தின் குரல்வளையில் விலங்கு பூட்டவா நீ எழுந்தாய் ... இல்லையே.. அண்ணன்களோடு ஆனந்தவாழ்வு கேட்டுதானே நீ அமர்ந்தாய் வீதியில்... விபூசிகா... வலி முடிவொன்றின் வழக்குரைத்தவளே உன் குரலணுக்களின் தீண்டலால் தீப்பற்றியெரிந்த வெளிகளிலும் கருகி நைந்துபோன திடல்களிலும் ஆயிரமாயிரம் விழிகள் திறந்து கண்ணீர் வடிகின்றன.. வேரீரமிழந்து இலையுருத்திக் கிளைசிதைந்து போன பெருமரத்தில் கூடுகள் அழுகின்றன. உடல்சுமந்த குற்றவுணர்வோடு குனித்து நிற்கின்றோம்.. எட்டப்பர்கள் நாங்க…
-
- 6 replies
- 694 views
-
-
என்னுடன் பேச .... துடிக்கும் இதயங்கள் .... ஆயிரம் ஆயிரம் .....!!! உன்னோடு மட்டும்... பேசத்துடிக்கும் என் .... மனசை ஒருமுறை .... நேசித்துப்பார் ....!!! என்னை விட உன்னை ... அப்படி நேசிக்க யாரும் .... இருக்கமாட்டார்கள் .... உனக்காக பலர் வாழலாம் .... நானோ ..... உனக்காகவே உயிர்..... வாழ்கிறேன் ....!!! + கவிப்புயல் இனியவன்
-
- 2 replies
- 970 views
-
-
முன்பை விட அதிகமாக கோபம் வருகிறது உன் கவிதைக்கு இன்னும் அது திருந்தவில்லையென பேசிக்கொள்கிறார்கள் அநீதிகள் இழுத்துச் செல்வதை அது விட்டு விடவில்லை உரத்து குரல் கொடுப்பதை அது நிறுத்திக்கொள்ளவில்லை துரத்தப்பட்டவனோடு கைகோர்த்து நிற்கிறது வெளியே நிறுத்தப்பட்டவனோடு வெயிலில் கிடக்கிறது பள்ளியில் கழிப்பறைகளை சுத்தம் செய்யும் குழந்தைகளோடு ஏன் பேசிக்கொண்டிருக்கிறது அவர்களின் கைகளைத் தடவிக் கொடுப்பதும் இனி சுத்தம் செய்யாதீர்கள் எனச் சொல்வதும் கவிதையின் வேலையில்லை மனு இன்னும் சாகவில்லை என்று குற்றம் சாட்டும் உன் கவிதை என்ன வக்கீலுக்கா படித்திருக்கிறது சாதியத்தை வளர்க்கும் ஆசிரியர்கள் பங்கி குழந்தைகளை வண்டியில் ஏற்ற மறுப்பவர்கள் வால்மீகி பெண்களுக்கு கட்டளையிடுபவர…
-
- 1 reply
- 476 views
-
-
தொண்டர்களாள் வளர்ந்த தலைவனுக்கு சரித்திரம் உண்டு தொண்டர்களாள் வளர்ந்த எதிர்கட்சி தலைவனுக்கும் சரித்திரம் உண்டு தொண்டா உனக்கு உண்டோ ஓர் சரித்திரம். ரசிகர்களாள் வளர்ந்த கதாநாயகனுக்கு சரித்திரம் உண்டு. ரசிகர்களாள் வளர்ந்த வில்லனுக்கும் சரித்திரம் உண்டு. ரசிகா உணக்குண்டோ சரித்திரம். பக்தரால் வளர்ந்த சாமிகளிற்கு சரித்திரம் உண்டு பக்தரால் வளர்ந்த ஆசாமிகளிற்கும் சரித்திரம் உண்டு. பக்தா உனகுண்டோ சரித்திரம். வாசகர்களாள் வளர்ந்த எழுத்தாளரிற்கு சரித்திரம் உண்டு வாசகா உனகுண்டோ சரித்திரம். போராட்ட குழு தலைவனுக்கு சரித்திரம் உண்டு ஒட்டுகுழு தலைவனுக்கும் சரித்திரம் உண்டு. போராளி உனகுண்டோ சரித்திரம். உனக்கு நீயே நாயகனாக,தலைவன…
-
- 4 replies
- 753 views
-
-
உனக்கு ஒரு மடல் - என்னை மறந்து விட்டாய் என்பதற்கு அல்ல உன்னை உள் அன்போடு நேசித்தேன் என்பதற்காக! என் காதலுக்கு கருவாகி கவிதைக்கு பொருளாகி எனை காதலித்து கவி தந்த காதலி - நீ ஆதலால் என் காதலை இப்போது ஏற்க மறுத்தாலும் - என் இதய வானிலே எப்போதும் - நீ இளைய நிலா என்பதால்! நாலாறு மாதங்கள் உன் மீது நான் கொண்ட காதல் ஏழு ஜென்மத்திலும் மறவா உன் நினைவுகள் என்பதால்! காதல் என்பது மாயை - என்ற புரியாத புதிரை - எனக்கு புரிய வைத்தாய் என்பதற்கு அல்ல! பாசங்கள் எல்லாம் வேசங்கள் என்ற நிஜத்தை எனக்கு சொல்லாமல் சொன்னவள் - நீ என்பதால் இறுதியாக உனக்கு ஒரு மடல்..!
-
- 0 replies
- 752 views
-
-
தமிழ் மோகத்திலே செயல் வேகத்திலே கொண்ட நேசத்திலே நல்ல பாசத்திலே நெஞ்சின் ஈரத்திலே அன்பின் சாரத்திலே அகத்தின் இளமையிலே அறிவின் முதுமையிலே உள்ளத் தண்மையிலே பேசும் உண்மையிலே நாவின் வன்மையிலே செய்யும் நன்மையிலே உனக்கு நிகர் உலகில் உண்டோ ஈடு செய்ய ஏதும்வழி உண்டோ http://gkanthan.wordpress.com/index/nikar/
-
- 2 replies
- 806 views
-
-
அடியே, உன்னத்தானடி ஒருக்கா பாரடி ஒரு பதிலாச்சும் சொல்லடி ஒன்பது மாசமா துரத்திரனடி உன் தோழியவாச்சும் கண்ணுல காட்டேன்டி வயசு போன வாலிப பசங்களோட சேர்ந்து குறும்பு காட்டி உசுப்பேத்துறேயடி பேசாப் பொருள பேசி வெக்கப்பட வைக்கிறயடி வெள்ளிக் கிழமை விரதத்தை முடிச்சு வைக்காதேயடி ஊருக்கு முன்னே ஊர் கதை சொல்லி வரும் கிழவியடி நீ வெட்டுற எடத்துல வெட்டி, குட்டுற எடத்துல குட்டி, தட்டுற எடத்துல தட்டிக் கொடுக்குற தங்கமே இணையக் கடலில மூழ்கவிடாம நல்ல கரை சேர்க்க வந்த நாவாய் பெண்ணே பல்பொடி தேடும் முன்னே பாய்ந்து வருவேன் உனை பார்த்து சிரிக்கத்தானே நாடு கடந்தவரை நாட்டிலினைக்கும் நறுமுகை நீயே காலத்தின் கருவூலம் கட்டாயம் விதைக்க வேண்டும் வரலா…
-
- 18 replies
- 2.2k views
-
-
உனக்கெதற்கு கட்சி....???? ( ரவுகக்கீம் ) கதிரைகளை காத்து விட கழுதையாகி போவதுவோ....??? பண மூட்டைகளை வேண்டி பிட்டு பகை மூட்டைகளை சுமப்பதுவோ....??? பன்னிருவர் பலியெடுத்தான் பார்த்து நீயும்; நிற்பதுவோ....?? ஏறியவன் பகை உதைக்க இயலாமால் போனதுவோ...??? கை நீட்டி பணம் வேண்டி கை கட்டி நிற்பதுவோ....??? மக்களவர் மைந்தர் என்று மார் தட்டி உரைத்தவரே.... உன் இனத்தை அவன் அழிக்க பார்த்து இன்று நிற்பதுவோ....??? ஒன்றினைந்து அவன் உதைக்க உன்னால் இன்று முடியலயே.... ஓட்டு கேட்டு வீதியிலே ஓடி...ஓடி.... வந்தாயே.... ஓலத்தில் உன் மக்கள் அவர் ஓலத்தை துடைக்கலயே.... தனி தரப்பு …
-
- 1 reply
- 851 views
-