கவிதைப் பூங்காடு
கவிதைகள் | பாடல் வரிகள்
கவிதைப் பூங்காடு பகுதியில் கள உறுப்பினரல்லாதோரின் கவிதைகள், கவிதை மொழியாக்கம், உலகக் கவிதை, பாடல் வரிகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள உறுப்பினர்கள் அல்லாதவர்களின் கவிதைகள், கவிதை மொழியாக்கங்கள், பாடல் வரிகள் போன்றன மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
ஈழத்தை சேர்ந்த, பூர்வீகமாகக் கொண்டவர்களின் படைப்புக்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படவேண்டும். ஏனைய கவிதைகள் தரமான கவிதைகளை அறிமுகம் செய்யும் நோக்கில் இலக்கிய மின் இதழ்களில் இருந்து மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
5128 topics in this forum
-
நானாக வரப்போவதில்லை... எல்லோரையும்விட உன்னையதிகம் நேசித்திருப்பினும், என்கைப்பிடித்தபடி கூடவே வரும் உரிமையை உனக்கு கொடுத்தபின்னும் மனமுறித்துப் போதலேன்பது நீ நிகழ்த்தியது. எனவே, நானாக வரப்போவதில்லை. உன் பிரிவையிட்டு நான் வருந்தியதைவிட, நம் பிரிவையிட்டு அதிகம் வருந்தியிருக்கும் காதல். உன்னோடினிப் பேசுவதில்லை என்கிற பொல்லாவிரதம் முறிக்க இந்த பின்னிரவுகள் பிரயத்தனப்படுவதை நீ அறியமாட்டாய். பரவாயில்லை.... வழமைபோல இப்போதும் நீ என்னை திமிர் பிடித்தவன் என்றே கடந்துபோகலாம். எனினும், நானாக வரப்போவதில்லை.
-
- 11 replies
- 976 views
-
-
பால்குடியாக ஒருதலை - குழந்தை பருவமடைய ரெண்டுதலைகள் - வாலிபன் கல்விகற்க மூண்டுதலைகள் - மாணவன் காதல்கொள்ள நாலுதலைகள் - காதலன் கலியாணம் செய்ய அஞ்சுதலைகள் - கணவன் பிள்ளைபெற ஆறுதலைகள் - அப்பா பிள்ளைவளர்க்க ஏழுதலைகள் - அப்பப்பா.. வேலை செய்ய எட்டுதலைகள் - உழைப்பாளி வியாதிக்காரனாக ஒன்பதுதலைகள் - வயோதிபன் விடைபெற்றுக்கொள்ள பத்துதலைகள் - அப்புச்சாமி அன்புடன், தறுதலை :wub:
-
- 11 replies
- 2k views
-
-
விரிந்த எனது தேசத்தின், பரந்து படர்ந்த வெளியெங்கும், அறைந்து நிற்கிறது வெறுமை! நான்கு வருடங்கள் நகர்ந்து போனதை, நம்பக்கூட முடியவில்லை! உங்கள் நினைவுகள் சுமந்த, உயிர்க்கூடுகள் மீது. கோரை படர்ந்திருக்க, எருக்கிலை சிந்தும் கள்ளிப்பால், உங்களுக்கு நிவேதனமாகின்றது! அரவங கேட்டுச் சத்தமிடும், ஆட்காட்டிக் குருவிகள், உங்களுக்காகக் கீதமிசைக்கின்றன ! எங்களுக்கெல்லாம் இப்போது, இரண்டு விலாசங்கள்! பிறந்த இடமொன்று, மறையும் இடம் இன்னொன்று! கிழக்கே உதித்து, மேற்கில் மறைகின்ற, சூரியன்களாக, எங்களை நாங்களே, உருவகித்துக் கொள்கிறோம்! அரேபியப் பாலைவனங்களிலும், உருகும் பனிப் டலங்களிலும், எங்களால் வாழமுடிகின்றது! நகருகின்ற ஒவ்வொரு வினாடியும், எங்கள் தேசம்…
-
- 11 replies
- 1.2k views
-
-
அம்மா. உன்னை நினைக்கும் போது எனக்குள் எல்லா நரம்பும் இரத்தத்தை கடத்தவில்லை – உன் உருவத்தையே இரத்தமாய் கடத்துகிறது ….!!! பிள்ளை பருவத்தில் செல்ல காயம் வந்தால் கூட விளையாட்டுக் காயங்கலாக எடுக்காமல் -உன் கண்ணுக்கு திரியை வைத்து விடிய விடிய விளக்காய் எரிவாயே தாயே ….!!! சிறு வயதில் எல்லோருக்கும் பசியதிகம் -பள்ளி விட்டு வந்து படாத பாடு படுத்திவிடுவேன் உன் காலை உணவை எனக்காக வைத்திடுந்து நீ பட்டினீயிருப்பாய் தாயே ……!!! என் புத்தகச் சுமை உன் வலது தோலில் சுமப்பாய் … செருப்பில்லாத பாதங்களேடு…. இடுப்பில் என்னைசுமந்திருக்கிறாய். வீடு வந்தவுடம் களைத்து விட்டாய் மகனே என்று -உன் களைப்பை பொருட்படுத்தாத அதிசயப்பிறப்பு தாயே …..!!! …
-
- 11 replies
- 2.3k views
-
-
தேரை இழு.! இறுகப்பிடி வடக்கயிற்றை..!!! ___________________________________________________ -வல்வைக்கடல்- இழு தேரை.. இறுகப்பிடி வடக்கயிற்றை. பக்கத்துச் சுரிதார் பார்வைபட இன்னும் செய்! பார்த்து இளி!! முள்ளிவாய்க்காலில் அந்த இறுதிநாட்களில் உன் உறவுகள் விட்டகண்ணீரும் குருதியும் இன்னும் காயவில்லை...பரவாயில்லை..புலத்த ு தெருக்களில் தேர் இழு! உன் தாயை தந்தையை உறவுகளை காப்பாற்றாமல் கைவிட்டது சர்வதேசத்து குரங்குகள் மட்டுமல்ல..- உன் அப்பனும் ஆத்தையும் அழுதுகும்பிட்ட சாமிகளும்தான்... ஆற்றாது அழுதுதொழுத கண்ணீரை தேற்றாமல்விட்ட தெய்வங்ளை தேரில் வைத்திழுத்து களிப்படை.! இழடா தேரை..இறுக்கிக்கட்டு கச்சையை-கவனம் அவிழ்ந்து வ…
-
- 11 replies
- 1.9k views
-
-
-
இன்று என் பெயரைத் தமிழில் Google பண்ணிப் பார்த்த போது கிடைத்த என் பழைய கவிதை இது. 23 ஆம் வயதில் 1998 January இல் எழுதி பிரசுரமான கவிதை. விசுவாசமற்ற காதலன்:
-
- 11 replies
- 1.5k views
-
-
உறுமும் அந்தப் புலிக்கொடி தாங்கி வந்த எங்கள் அண்ணாக்கள் எங்கே.. அக்காக்கள் எங்கே..??! களப்பலியாய் போனவர் போகட்டும் அவர்களெம் மாவீரச் செல்வங்களாய் எம்மோடு வாழ்வது உறுதி..! ஆனால்.. சுதந்திர தேச வேட்கை கொண்டு வேங்கைகளாய் உலா வந்த இந்த மானத் தமிழர்கள் தான் எங்கே..???! கவிபாடும் தமிழ் சொல்லாலே புலியெனப் பாய்ந்த புதுக்கவிஞன் புதுவை அண்ணன் எங்கே..??! "ஆழ்ந்து யோசி ஆராய்ந்து பேசு" என்ற சொல்லை வகுத்து ஈரோஸின் பிறப்போடு உறவெடுத்து புலிப் பாசறை புகுந்த அந்த அரசியல் வித்தகன் பாலகுமாரன் அண்ணன் எங்கே..??! திருநெல்வேலி முதற் தாக்குதலின் களப்பலி அவன் பொன்னமான் தம்பி தமிழீழ அரசியல் தத்துவஞானி எங்கள் யாழ் இந்துவின் மைந்தன் யோகி அண்ணன் எங…
-
- 11 replies
- 1.9k views
-
-
குறுக்குக் கட்டி நீ குளிக்கையிலே குறுக்கு மறுக்காய் அலையுதடி மனசு! குறும்புக்காரன் மனசுக்குள்ளே குறுகுறுக்குதடி வயசு! தலைக்கு சீயாக்காய் தேய்ச்சு சிகைக்கு சாம்பிராணி காட்டி நீ குளிச்சு முடிந்தபின்னும், எனக்கு முடியவில்லை! என் இதயம் படியவில்லை!! புது உடையுடுத்தி வந்த பின்னும் என் படையெடுப்பு அடங்கவில்லை! மடையுடைத்த எண்ணத்தில்... தடையுடைக்கும் திட்டத்தில் என் கவனமெல்லாம் உன்னிடத்தில் உன் கவளம் போன்ற கன்னத்தில்! சமயலறைக் கட்டில் நீ சமைக்கையிலே, சமைந்தவள் உனைப் பார்க்கையிலே... என் சிந்தனையும் சமையுதடி! எண்ணெய் ஊற்றாதே...! என் எண்ணமெல்லாம் வழுக்குதடி!! சாமி சிலை முன்னாடி சாந்தமாய்த்தான் தெரிகிறாய்! திரைச்சீலை பின்னாடி காந்தமாய் ஏன் இழுக்கிறாய்…
-
- 11 replies
- 1.8k views
-
-
சமூகச் சிந்தனையாளர் பெரியார் பற்றிப் பிரலாபம் செய்பவர்கள் யாராகினும், அவரின் வழியொற்றி நீங்கள் வாழாதிருப்பின் உங்களுக்கு ஒன்று சொல்வேன் உங்களது வேலிக்குள் உங்களது ஆட்டைக் கட்டிவைத்துவிட்டு எல்லா ஆடுகளுக்கும் சுதந்திரம் வேண்டி நீங்கள் ஆர்ப்பரிப்பதன் வஞ்சகம் எதுவென்பதை நானறிவேன். அவிழ்த்து விட்டேன் என் ஆட்டை அதுதான் அடைந்து கிடக்கிறது நான் என் செய்வேன் என்பவர்க்கு நானின்றொன்று சொல்வேன் உன் சொந்தப்பட்டியில் அடைபட்டுக் கிடக்கும் உன் ஆட்டுக்கு விடுதலை பற்றிய உபதேசம் நீ செய்யவில்லையெனில் வேறெந்த ஆட்டுக்கும் நீ விடுதலை உபதேசம் செய்யாதே. விடுதலை பெற எண்ணும் ஆடுகளை வேட்டையாடும் நோக்கம் மட்டுமே உன்னுடையது என்பதை எவரும் கண்டு கொள்வார்கள். . முதலில் உன்பட்டியின் ஆட்டை, ஆட…
-
-
- 11 replies
- 528 views
- 1 follower
-
-
மச்சி நீ கேளு கதையை ... நேற்று இதால போனவா .. இன்னைக்கு என்னை கடக்கையில் .. சைக்கிள் வேல் அடித்து போறா.. நான் பார்க்கவில்லை அவாவை .. நினைப்படி உனக்கு என நண்பிக்கு சொன்னா .. சிங்கிசா பாவடை ...லுமாலா சைக்கிள் ... முன்னுக்கு சின்ன கறுத்தக்கூடை .... பச்சை தொப்பி போட்டு நெற்றியில் ... கோபுரம் போல ஒட்டு பொட்டு .. ஒற்றை பின்னல் கட்டி அழகான சிலேட்டு ... செம அழகடா திரும்பி பார்க்கும்போது ... எங்க படிக்கிறாள் என்ன செய்கிறாள் ... யாருடைய மகள் ..யாருடைய பேத்தி ... அண்ணன் தம்பி இருப்பாங்களா .. ஒருவளை அவங்கள் எனக்கு பழக்கமா .. நேற்றுவரை இருந்த புத்தன் மனம் ... எப்படி மாறியது இன்று கண்ணனா .. நாளைக்கு வா மச்சி ஒரு ரவுண்டு போவம் .. ஆளின் வீடு பார்ப்பம் எந்த தெருவென .. பொறு பொறு வைக்காத போன…
-
- 11 replies
- 1.7k views
-
-
என் உயிரே அன்பே உன் Üட பழகிய நாட்களை வைத்து -எனை மறந்து ஊமை போல் மனசுக்குள் பேசினேன் உன்னிடம் சொல்ல காத்திருந்த -பல வாத்தைகளை சொல்லாமல் என் மனசுக்குள் புூட்டி வைத்து உள்ளே அழுதேன்- என் உயிரே ஆனால் நீ என்னிடம் பழகிய நாட்கள் சில எனக்குத் தெரியும் -நீ விரும்புவது என்னை அல்ல என் இசைகளைத்தான் என்று ஆக்கம் ...... கீதா :P
-
- 11 replies
- 2.5k views
-
-
தூங்காதே கண்மணியே-நீயும் தூங்காதே..... தூக்கம் வந்தாலும்-நீயும் தூங்காதே..... தமிழுக்கு நாடுவரும்-வரை தூங்காதே..... பகைவனும் வந்திடுவான்-அன்பே தூங்காதே..... பச்சைப்பிள்ளை என்றும்-பாரான் தூங்காதே..... உறவுகள் இழப்புக் கண்டும்-நீயும் வெதும்பாதே..... அவர்கள் உதிரம் எழுதும்-எம் தாய் நாடே..... பெற்ற அன்னை அவளும்-அன்பே நான்தானே..... என்காயங்கள் மாறுது-கண்ணே உன்வரவாலே..... களம் சென்ற தந்தைவரும்-வரை தூங்காதே..... வீரனின் புதல்வனும்-அன்பே நீதானே..... விரைவில் வளர்ந்துவா-காப்போம் நம்நாடே.....
-
- 11 replies
- 1.7k views
-
-
நினைவுகள் சுமந்த வாழ்க்கை -------------------------- தென்னங் கீத்தின் ராகம் கேட்டு பன்னைப் பாயில் படுத்துக் கிடந்து முத்தத்து மணலில் கைகள் அளைந்து முழுவதும் முழுவதும் மூழ்கிக் கிடந்தோம் வேலிக் கிளுவை பூக்கள் பார்த்து வெய்யில் அடிக்கும் வானம் தொட்டு செக்கச் சிவந்த பூக்கள் இரசித்து சொக்கிச் சொக்கி நாங்கள் இருந்தோம் வண்டில் வகிரும் பாதை பார்த்து மாடுகள் இசைக்கும் சலங்கை கேட்டு ஓரமாய் ஒதுங்கும் ஒத்தைக் காகம் ஒவ்வொரு பொழுதும் பார்த்துக் கிடந்தோம் மாமரக் குயிலின் மதுரம் கேட்டு மணக்கும் மண்ணின் வாசம் நுகர்ந்து மனிதர் முகங்கள் பார்த்துச் சிரித்து மனதில் நிறைவை சுமந்து இருந்தோம் குட்டிக் குட்டிப் பழனி ஆண்டிகள் கோயில் கட்டித் தேர…
-
- 11 replies
- 5.1k views
-
-
கறுப்பி உனக்கு வெள்ளை மாளிகை எதுக்கு...??( கொ. ரைசு) அடி... கொண்டலிசா ரைசு உன் மண்டை என்னடி லூசா...?? உன் உதட்டில் என்ன சாயம்....??? அது யாரு கடிச்ச காயம்...??? நீ இங்கு வருவதென்ன மாயம்....??? நீ சண்டை காற கோழி இன்று சொல்ல வந்ததென்னடி ஞாயம்....??? காலு மேல காலு போடுற நீ அலு.... நீ புஸ்சுடய வாலு திரும்பி பாரடி - நீ உன் தோலு.... நீ நாட்டிடையே கோலு மூட்டுற நீ ஆலு.... நீ புஸ்சுக்கு முளைச்ச வாலு உன் வார்த்தை எல்லாம் சீலு.... வெள்ளை மாளிகை உனக்கு கறுப்பி உனக்கு எதுக்கு....??? நன்றி - வன்னி மைந்தன் - :roll: :roll: :roll: :r…
-
- 11 replies
- 2.2k views
-
-
எப்படி நான் தாங்கிடுவேன்... அப்பன் அடித்தாலே ஆவென்று அலறுபவன் எப்பன் நோவெனிலும் ஏலாமல் கிடந்தமவன் முற்றம் முழுதும்-பிணமாகிச் சுற்றங்கள் செத்த கதை எப்படி நான் தாங்கிடுவேன் ஏப்பிரலும் முடிஞ்சிடுச்சே... கோழி அடைகிடக்க குஞ்சுக்காய் தவித்தமகன் கேவி அழமுதலே ஊரை கூவி அழைத்த மகன் கத்தி அழ யாருமற்று-சொந்தங்கள் கொத்துக்கொத்தாய் செத்தகதை எப்படி நான் தாங்கிடுவேன் ஏப்பிரலும் முடிஞ்சிடுச்சே.... விக்கல் எடுத்தாலே கெக்கலித்து நின்றமவன் முள்ளுத் தைத்தாலே பாயில் மூன்று நாள் படுத்த மவன் செல்லுக்குத் துண்டுகளாய்-என்னினம் சிதறிப் பிளந்த கதை எப்படி நான் தாங்கிடுவேன் ஏப்பிரலும் முடிஞ்சிடுச்சே.... நெருப்புச் சுட்டாலே நேர்த்திக்கடன் …
-
- 11 replies
- 1.7k views
-
-
நிலம்கீறி வெளிவரும் முளையங்களாய் புலன்கீறி விழுமென் வார்த்தைகள் _என்றுமே யாதொன்றினதும் கைதிகள் அல்ல, ஒப்புக்காகவும் ஒப்பனைக்காகவும் அலங்கரித்துக்கொண்டவை என்றோ, கற்பனைகள், சுமந்த கனவுகள் என்றோ, தேவதைகளின் ஆசீர்வாதங்கள் என்றோ, சட்டமிடவும் இயலவில்லை. சில இரவுகளில் நிகழுமிந்த ஒளிப்பகுப்பில்_என் அந்தரங்க நிர்வாணத்தை ரசிக்கமுடிகிறது. அந்த கணங்களில், அம்மணமாய் கிடக்குமென் மனவெளியில் தேவதைகளின் கொலுசுகள் ஒசைலயமிடுகின்றன. ஆழ்ந்த பெருமூச்சுக்களை வெளியேற்றும்_இந்த பிரசவிப்பின் பின்னான வெற்றிடத்தில் குடியேறும் ஆத்மதிருப்தியின் வாசம் அலாதியானது. அமைதியானது. இதுவெல்லாம் எனக்கானது. நீ என் இடத்தில் இருந்தால் உனக்கானது. இப்படி…
-
- 11 replies
- 896 views
-
-
<iframe src="https://www.facebook.coவெலிm/plugins/post.php?href=https%3A%2F%2Fwww.facebook.com%2Fthamilarivu%2Fposts%2F4136726713041863&show_text=true&width=500" width="500" height="414" style="border:none;overflow:hidden" scrolling="no" frameborder="0" allowfullscreen="true" allow="autoplay; clipboard-write; encrypted-media; picture-in-picture; web-share"></iframe> https://www.facebook.com/sithiravelu.karunanandarajah/videos/10153465194516950
-
- 11 replies
- 1.9k views
-
-
"சங்கமாடிய தமிழ் என பேசிய தம்பிமாரெல்லாம் கடல் கடந்தனர் துப்பு கெட்டவர் நாயிலும் கீழவர் அகதி லேபலில் தூசி தட்டட்டும் கப்பலேறி கனடாவில் நக்கட்டும்" - -புதுவை இரத்தினதுரை நன்றி. உண்மையிலும் உண்மை.
-
- 11 replies
- 2.2k views
-
-
கூட்டினோம் பெருக்கினோம் கழித்தலையும் துடைத்திட்டோம் எட்டு மணி வேலை என்பதை எழுத்திலும் நாம் அறியோம் இரவு பகல் வந்ததாக சொல்கிறர்கள் அதை நாம் என்றுமே பார்த்ததில்லை சுமந்தோம் பெற்றோரை உடன் பிறந்தோரை அவரது பிள்ளைகளை உற்றார் உறவினரை தாயகத்தை......... வீட்டுக்கு கலோ என்றால் கிலோ எவரானாலும் அய்யோ என்றால் அஞ்சோ பத்தோ வயிற்றைக்கட்டினாலும் வட்டிக்கெடுத்தாலும் எம் நிலையை வாய்திறந்து சொல்லோம் களவெடுக்கவில்லை கையேந்தி வீதியிலும் நிற்கவில்லை சொல்லொணா துயரங்கள் துரத்தியபோதும் வாய்ச்சொல் தவறியதில்லை எவன் வயிற்றிலும் என்றுமே அடித்ததில்லை மூழ்கும் நிலைவந்தால் அடுத்தவேலை எடுப்பதுண்டு அதற்கு அடுத்தவேலையும் பார…
-
- 11 replies
- 1.2k views
-
-
வெண்புறா பனியும் என்னிடம் கடன்கேட்கும். - பஞ்சு முகிலும் என்னிடம் கடன்வாங்கும். கனிவும் என்னிடம் மண்டியிடும். - எக் கருமமும் என்னிடம் சிரம் தாழ்த்தும். உயர்திணை, அஃறிணை பிரித்தெடுத்தால் அஃறிணை எந்தன் ஆதாரம். உயிரே இல்லாச் சடமல்ல - நான் உரைக்கும் கதையைக் கேள் மெல்ல! காவியத்தூது போனதுண்டு. கலங்கரை விளக்கு ஆனதுண்டு. சோவியத் வானில் பறந்ததுண்டு. சொர்க்க வாசலைத் திறந்ததுண்டு. வானிடை உலவும் மதியழைத்து - மந்த மாருத இழையில் ஏணை கட்டி மானுடப் பிறப்பைத் தாலாட்டி மகிழ்ச்சி தந்திடக் காத்திருந்தேன். இன்று..... அமைதிக்கு என்னைத் தேர்ந்தெடுத்தார். அன்புச் சின்னமாய் ஆக்கி வைத்தார். அகிம்சை காக்கும் அரியணையில் அடிமைப்படுத்திப் …
-
- 11 replies
- 2.2k views
-
-
ஆயிரம் கனவுகளுடனும் விழிமூடா தூக்கத்துடனும் உன்னோடு தினமும் வாழவிடும் இரவுகளும், அற்புத சுகமடி அர்த்த ஜாமத்தில் உன்னருகில் வந்து முத்தமிடும் சத்தங்களும், கட்டி அணைத்தபடியே யுத்தம் கொள்ளும் ஈருடலும் ஒவ்வோர் நாழிகையாய் வேரூன்றி கொள்வதுவாய், காலை எழுந்தவுடன் கண்ணை கசக்கிகொண்டும் உன்னை நினைத்துக்கொண்டும் மீண்டும் அந்த இரவுகளை தேடி..
-
- 11 replies
- 1.2k views
-
-
கருவிசெய்வாய் விஞ்ஞானமே தலைதூக்கிப் பார்த்துநின்ற வெண்மேகக் கூட்டத்தைக் காலடியில் தவழவைக்க வானூர்தி கண்டுதந்த விஞ்ஞானமே அந்நியத்தில் வாழுகின்ற அன்பான உறவின்குரல் அடிக்கடியே கேட்பதற்காய் தொலைபேசி கண்டுதந்த விஞ்ஞானமே அடித்தடித்துத் துணிதுவைத்து அலுப்படைந்த காலம்போய் கணப்பொழுதில் சலவைசெய்ய கருவியினைக் கண்டுதந்த விஞ்ஞானமே ஆண்மகனோ பெண்மகளோ ஆரூடம் பார்க்காமல் அச்சொட்டாய் கண்டுவிட மருத்துவத்தில் விந்தைசெய்த விஞ்ஞானமே நாளாந்தக் காரியத்தை நலிவின்றிச் செய்யவைத்ததாய் நான்சொல்லும் தேவைகட்கும் நலமுடனே கருவிசெய்வாய் விஞஞானமே வஞ்சகத்தை மனத்திருத்தி வக்கிரத்தைப் புதைத்துவைத்து வார்த்தைகளில் போலிசெய்வார் வதைபடவே கருவிசெய்வா…
-
- 11 replies
- 1.8k views
-
-
காலக்கரைபற்றி நீள நடக்க முயல்கிறேன் உன்னையும் என்னையும் அறிந்த ஒற்றைத்திங்கள் மட்டும் உடன் வருகிறது. வெட்கமற்று என்னைத் தழுவிய உப்புக் காற்றை உள்ளம் தேடுகிறது. உனக்குமெனக்குமான மோனப் பொழுதுகளில் முகையவிழ்த்த முல்லைகளின் சிரிப்பொலி சில சமயங்களில் இரைச்சலாகவும், சில சமயங்களில் இன்னிசையாகவும்....... காலநதிக்கரையில் பதித்த தடங்கள் இன்னும் சிதையாமல்.... காத தூரம் கடந்தும், கருகியும் பாதைவெளிகள் பிரிந்தும் ..... தொடர்ந்தும்,...... ஒற்றைத்திங்கள் மட்டுமே உடன்வருகிறது சாட்சி சொல்ல.
-
- 11 replies
- 2.3k views
- 1 follower
-
-
கடற்கரைச் சாலையோரம் அந்தி சாயும் மாலை நேரம் கடல் மகள் கலைந்த கோலம் கண்களில் காதல் ஜாலம் அலைகளின் ஆட்டம் எல்லாம் கரைகளை கரைத்து சீண்டும் கடலிடை நாரைக்கூட்டம் காத்திடும் இரைகள் தேட மணலிலே நண்டுக்குடைகள் கடலுடன் தூது பேசும் தவழ்ந்திடும் தென்றல் காற்று உடலதை வருடிச்செல்லும் கரைந்திடும் காக்கை உறைவிடம் நாடிச்செல்லும் இயல் இசைக்கவிதையாக இயற்கையைப் போற்றிப்பாடும்
-
- 11 replies
- 1.8k views
-