கவிதைப் பூங்காடு
கவிதைகள் | பாடல் வரிகள்
கவிதைப் பூங்காடு பகுதியில் கள உறுப்பினரல்லாதோரின் கவிதைகள், கவிதை மொழியாக்கம், உலகக் கவிதை, பாடல் வரிகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள உறுப்பினர்கள் அல்லாதவர்களின் கவிதைகள், கவிதை மொழியாக்கங்கள், பாடல் வரிகள் போன்றன மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
ஈழத்தை சேர்ந்த, பூர்வீகமாகக் கொண்டவர்களின் படைப்புக்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படவேண்டும். ஏனைய கவிதைகள் தரமான கவிதைகளை அறிமுகம் செய்யும் நோக்கில் இலக்கிய மின் இதழ்களில் இருந்து மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
5128 topics in this forum
-
-
பறவைகள் குறித்த கவிதை உவமையை யாரும் புரிந்து கொள்ளவில்லை தச்சனே! - கவிதை வெய்யில் கவிதை: வெய்யில், ஓவியம்: ரமணன் “உழைப்பாளர்கள் சிலையிலிருப்பவர்கள் உழைப்பாளர்களே அல்ல ஒரு சிற்பியின் விருப்பத்திற்காக வெறுமனே அவர்கள் பாறையைப் புரட்டுகிறார்கள்” -கலைவிமர்சகருக்கு வணக்கம் சொல்லிவிட்டு நகர்ந்தேன். “பொன்னுலகுக்குச் செல்லும் வாயிலின் அடைப்பைத் திறக்கிறார்கள் வெகுகாலமாய்” -சரிதான். அவருக்கும் வணக்கம் தெரிவித்தேன். “புரட்சி என்பது காலாவதியாகிப்போன இருமல் மருந்து” -ஓ...உங்களுக்கும் நன்றி. கீழே இறங்குங்கள் இதற்காகவா நண்பர்களே நாம் மெரினாவுக்கு வந்தோம் போதும் அந்த நீள மரத்துண்டங்களைக் கைவிடுங்கள் உங்கள் தசை முறுக்…
-
- 0 replies
- 2k views
-
-
பால்குடியாக ஒருதலை - குழந்தை பருவமடைய ரெண்டுதலைகள் - வாலிபன் கல்விகற்க மூண்டுதலைகள் - மாணவன் காதல்கொள்ள நாலுதலைகள் - காதலன் கலியாணம் செய்ய அஞ்சுதலைகள் - கணவன் பிள்ளைபெற ஆறுதலைகள் - அப்பா பிள்ளைவளர்க்க ஏழுதலைகள் - அப்பப்பா.. வேலை செய்ய எட்டுதலைகள் - உழைப்பாளி வியாதிக்காரனாக ஒன்பதுதலைகள் - வயோதிபன் விடைபெற்றுக்கொள்ள பத்துதலைகள் - அப்புச்சாமி அன்புடன், தறுதலை :wub:
-
- 11 replies
- 2k views
-
-
வெந்நிப் பழசு கவிதை: தமிழச்சி தங்கபாண்டியன் - ஓவியம்: ஸ்யாம் அப்பாவிற்கு வெந்நிப் பழசு பிடிக்கும். அம்மா அருகிருக்க முன்னிரவுகளில் வெந்நிப் பழசும் சின்ன வெங்காயமும் நிலவும் நட்சத்திரங்களுமாய் எங்களுக்குக் கதை சொல்லும். கண்ணோரங்கள் சுருங்கி விரிய ருசிப்பின் சுவையை உதடு கடத்தும் அப்பொழுதில், ஒதப்பழம்போல் அப்பா கனிந்திருப்பார். எச்சிலூறப் பார்க்கும் என்னோடு கட்டெறும்புகளும் காத்துக்கிடக்கும் முழு நிலவொன்றில் சிந்திவிட்ட ஒரு சுடு பருக்கை நினைவின் குளிரிடுக்கில் உறைந்து போனது சுருங்கி விரியும் ஓதப்பழக் கண்களாய் இந்த இரவில் உணவு மேசையில் தனியொருத்தியாய்த் தட்டெடுக்கிறேன். மதியத்தின் எச்சமாய்ச் சுருங்கியதொரு பரு…
-
- 1 reply
- 2k views
-
-
ஏங்கிய காலங்கள் போதும் கன்னம் சிவந்ததோர் காலம் - எழில் கவிகள் படித்ததோர் காலம். சின்ன வரையரைக்குள்ளே - உன் சிந்தை இழந்ததோர் காலம். வண்ணமயில் என்றும் கூறி.. வஞ்சிக் கொடியென்றும் கூறி... எண்ணம் எங்கும் மென்மை தூவி... -உந்தன் வன்மை அடக்குவர் தோழி! அங்கங்கள் அழகுதானடி -அதை அங்கங்கே போற்றுவர் தேடி.. உங்கருத்தைக் கேட்க யாரடி? - அடி உன்னதப்பெண்ணே! நீ கூறடி!! நுண்ணிடை என்றொரு கூட்டம் - உன்னைப் பண்ணிடை கற்பனை பாடும். மண்ணிடம் காட்டு உன் தாகம் - அதுவுன் பெண்ணுடல் நீத்தாலும் வாழும். கங்கை உனக்கென்ன தங்கையா? மங்கை உdக்கின்னும் மருட்சியா? உன்கையை வான் வரை உயர்த்தி -அதில் உலகை ஈர்க்கலாம் முயற்சி! மையல் காட்டும் கண்ணில் மயங்காத் தையலர் மேன்மையை உணர் நீ! உய்யல் வ…
-
- 13 replies
- 2k views
-
-
எதைக் கேட்டாலும் வெட்கத்தை தருகிறாய் வெட்கத்தை கேட்டால் விட்டத்தை நோக்குகிறாய் விட்டத்திலா இருக்கிறது என் காதல்? * - * - * - * - * மார்கழி மாசம் வாசலில் கோலம்! நடுவிலே சாணம் சாணத்திலே பூசணிப்பூ! அது பூவல்ல என் இதயம்! உன் இதயத்தை சாணத்தில் தான் வைத்தாளா என்று கேட்காதீர்! சாணம் கூட சந்தனமானது சந்தியாவின் விரல்பட்டு! * - * - * - * - * 'லவ்'டப், ‘லவ்'டப் சிலகாலமாக இதுதான் என் இதயத்தின் ஒலி! சண்டாளி தயவுசெய்து என்னை சாகடிச்சிட்டு போடி!! * - * - * - * - * நீ நெருப்பு நான் பஞ்சு காதல் ஊழிப்பெருந்தீயாய் பற்றியெரிவோம் வாடி! * - * - * - * - * எனக்கு கொடுக்க உன்னிடம் …
-
- 8 replies
- 2k views
-
-
இழந்தேன் என்னவனை என் நெஞ்சில் நிறைந்தவனே என்றோ ஒரு நாள் எனைத் தேடி வருவாயென ஏங்கியே காத்திருந்தேன் கண்ணில் நீருடன் கவிகள் பல வரைந்தேனடா உனக்காக. என் மனதை உன்னிடத்தில் பறி கொடுத்தேன் இரவு பகல் கண் விழித்துத் தவித்திருந்தேன் என்னவனே நீ வருவாயென ஆனால் காதில் வந்து கேட்டதடா ஒரு செய்தி உனக்கு கல்யாணம் என்று உடைந்ததடா என் இதயம் இருண்டதடா என் வாழ்வும் என் வாழ்வின் வெளிச்ச விளக்காய் உனை நினைத்தேன் இருண்ட வாழ்வை ஏனடா எனக்களித்தாய் என் இனியவனே ஏனோ உனக்கிந்த இரக்கமற்ற இதயமடா இனியவனே உனை இழக்க என் மனதில் சக்தியில்லை இருப்பாய் நீ என்றைக்குமே என் இதயமெனும் கோயிலிலே!!!
-
- 13 replies
- 2k views
-
-
முதன்முதலாய் உன்னருகே நான். உன் போதை விழிகள் என் உடலில் எழுதின எனக்கான தலைவிதி. உன் மனமெப்படியோ அப்படியே செல்ல என் வாழ்க்கை பயணிக்கும் போது இடையிடையே இரவுத் தீண்டல்களில் பாதை தடுமாறும். உனக்காக பட்டினி கிடந்தேன் பல நாட்கள் மனநிறைவாய் வருவாய். எனக்கென இருநாட்கள்கூட உன் மனம் தாங்காது சலித்துப் போய் நடுநிசியில் யாருமில்லாத வானத்தை வெறுப்பாக பார்ப்பதும் கொண்டாட்டமில்லா இரவுகளை அடியோடு தொலைப்பதும் இன்றைய சூழ்நிலையாக்கினாய். உன் விஷமம் அறிந்தும் உன்னுயிரோடு ஒட்டுகிறேன் பிளாஸ்டிக் பை நீராக... நீ என்னோடு எழுதிய கவிதைகள் என் அருகே உறங்குகின்றனவே!
-
- 12 replies
- 2k views
-
-
பதக்கடச் சாக்கு... பட்டுச் சேல பள பளக்க.. பொட்டிக்குள்ள கம கமக்க - புள்ள புரிசனுக்கு - நீயும் சோறு கறியா கொண்டு போறாய்...? வெயில்ல ஒம்புரிசன் புழுங்கிப் புழுங்கி நிப்பாருண்டு குலுங்கிக் குலுங்கி நீயும் ஓடோடிப் போறாய் போல... சும்மாடு பிரியிற அளவுக்கு - நீயென்ன கோழிக் கறியா கொண்டு போவாய்...? ஆசக்கி அறுத்தாப்புக் கெழங்கும் பொட்டியான் பொரியலுந்தானே..! பொச்சாப்பொல - நீயும் பொரிச்சிக் கொண்டு போவாய்... மாட்டின் சேட்டையிம் மருதமுனச் சாறனையிம் மடிச்சி மச்சான் பொரயில போட்டுப்பொட்டு வீடியும் வாயுமா மம்பட்டியும் கையுமா வெம்பி வெம்பி நிப்பாருண்டு தேம்பித் தேம்பிப் போறாய் போல... புது மாப்புள புறு புறுப்பாருண்டு புசு புசுன சமச்செடுத்து ச…
-
- 6 replies
- 2k views
-
-
எங்கே என் உயிரே..... உயிரே ஏன் என்னை வெறுக்கின்றாய் நான் கேட்டது என்ன... நான் உன்மேல் வைத்திருக்கும் அன்பு.பாசம்.காதல் பொய்யா என்று கேட்டேன் ஆணால் நீ என் மேல் காட்டும் வெறுப்பு நீ ஆம் எண்று சொல்லுவதைப் போல் உள்ளது. தயவு செய்து எனக்கு ஒரு மெயில் அனுப்பு நீ என்னை வெறுக்கவில்லை எண்றும் மறக்க வில்லை எண்றும் ஏன் எண்றால் என் பதிலுக்காக காத்திருக்கிறாள் இன்னொருத்தி உன் பதிலைக்கேட்டுத்தான் நான் அவளுக்கு பதில் சொல்ல வேண்டும். என்ன பார்க்கின்றாய் யார் அவள் என்றா? அவள் பெயர் மரணம் அவள் என் பதிலை எதிர் பார்த்து என் தலைமேல் தவமிருக்கின்றாள். என் உயிரே நீ எங்கே எனக்கொரு மெயில் அனுப்பு..... (இவை நேற்று நடந்த உண்மை சம்பவத்தை தழுவியது)
-
- 6 replies
- 2k views
-
-
-
பூட்டி வைத்த பைங்கிளிக்கும் பறந்து பார்க்க ஆசை வரும் பருவம் கண்ட பாவைக்கும் வாழ்ந்து பார்க்க ஆசை வரும்..! ஆசைகள் கோடி இதய அறைகள் எங்கும் பறந்தடிக்க.. சமுதாயக் கேடிகள் பூட்டிவிடுவர் அவளை கோட்பாட்டுக் கோட்டைக்குள்..! நாளும் அவள் அடக்கி வைத்த ஆசைகள் வேட்கைகளாகி வெறுமையில் கழிய ஆசைகள் அலுத்து மனதும் பாளடைந்து ஆகிறாள் பைத்தியம்..! இறுதியில் அருவமும் உருவரும் அற்ற பேய்களாய் அவள் ஆசைகள் ஆடுகின்றன. கூடி இருக்கும் மனிதரோ வேப்பிலையால் போக்குகின்றனராம் பேய்களை..!! யார் தான் புரிந்திடுவர் சமுதாயக் கோட்டைக்குள் சிறகடிக்க நினைக்கும் பேதையவள்.. உள்ளுணர்வை..??!
-
- 21 replies
- 2k views
-
-
2.11.16 ஆனந்த விகடன் தீபாவளிச் சிறப்பிதழில் தனிப்பக்கத்தில் வெளியாகியுள்ள எனது கவிதையை யாழ் களத் தோழர்களுடன் பகிர்ந்துகொள்வதில் மகிழ்ச்சி.... யாழ் களத் தோழர்கள் எனக்குத் தரும் உற்சாகத்துக்கு நன்றி! நானிலம் போற்றும் நீதி காடு இருந்த இடத்தில் அமைந்திருக்கும் முல்லை நகரில் கழனி இருந்த இடத்தில் வீடுகட்டிக் கொண்டவர்கள் கால்வாய் இருந்த இடத்தில் சாலை அமைப்பதை எதிர்த்து வழக்குத் தொடுத்திருக்கிறார்கள். குளம் இருந்த இடத்தில் அமைந்திருக்கும் உயர்மன்றத்தில் நீதி இன்னும் நிலுவையில் இருக்கிறது! -சேயோன் யாழ்வேந்தன் (ஆனந்த விகடன் 2.11.16) (எனது பதிவுகளி…
-
- 15 replies
- 2k views
-
-
இது எங்கள் கவிகளுக்கன திரி, 1995 இடப்பெயர்விற்க்கு நாங்கள் யாழ்ப்பாணம் திரும்பிபோய், எங்களுடைய வாழ்வை மெல்ல மெல்ல தொடங்கிய காலம், எல்லாம் இழந்து உயிரை மட்டும் கொண்டு போய் வாழ்வை தொடங்கிய காலம், எங்கட பீடத்தில் நடத்த கவிதைப் போட்டிக்கு கொடுத்த தலைப்பு "இந்தளவும் போதும் எனக்கு" உண்மையில் இது ஒரு " எதிர் மறையான" தலையங்கம்.. எங்களது இழப்பை எல்லாம் சொல்லிவிட்டு, ஆறுதலுக்காய், "இந்தளவும் போதும் எனக்கு" என்று முடிப்பது.. அப்பா சொல்லுவார், முஸ்லீம் சாகோதரர்க்கள் சொல்லுவார்களாம், " வீடு எரிந்தாலும் அல்லா சுவரைக் காத்தார்" என்று.....யாரும் குறையாக எடுக்க வேண்டாம். புலத்தில் உள்ள கவலைகளையும் சொல்லலாம்.. நான் நல்ல ரசிகன்...ஆனால் எழுத தெரியாது.. உங்கள் ஆக்கங்களை …
-
- 15 replies
- 2k views
-
-
அந்த நாள் வராதோ?? உற்சாகமூட்டும் காலைப் பொழுதினிலே வீசும் தென்றல் காற்றினிலே பச்சைப் பசுமையான வயலினிலே, ஆடி அசையும் நெற் கதிர்களையும், பெண்கள் வைக்கோல் சுமப்பதையும் ஆண்கள் மூட்டை தூக்குவதையும் விவசாயி ஆவைச் செல்லமாக தட்டுகையில் அவற்றின் கால்கள் சேற்றிலே[/ப்] பதிவதையும் மெய் மறந்து கண் குளிரப் பார்த்த அந்த நாள் இனி எப்போது வருமோ?
-
- 10 replies
- 2k views
-
-
மனிதனாய் வாழ பழகு.....!!! சொல் கொண்டு பிழைகளை நீ பிடிக்கிறாய்....?? சொந்தமாக நீ படைக்க ஏன் மறுக்கிறாய்...??? வேதனையால் எம் தமிழர் அங்கு தவிக்கிறார்... அட.. வேற்று மண்ணில் இருந்து கொண்டு என்ன அளக்கிறாய்...??? கண்ணீரின் கடலிலே அவர் தவிக்கிறார்..... அவர் இன்னல் காண ஏன்டா நீயும் இன்று மறக்கிறாய்...??? சொந்த மண்ணை மறந்து நீயும் இங்கு வாழ்கிறாய்... அதற்குள் சொறி கதைகள் வேறு இன்று நீயும் விடுகிறாய்... எங்கள் மண்ணில் குந்தி நின்று ஏற்றம் உரையடா... உந்தன் ஏற்ற மொழி வார்த்தகைளிற்கு தலை வணங்கி போவேண்டா... திட்டமிட்டு பிழைகளை நானும் விடுவதில்…
-
- 11 replies
- 2k views
-
-
காதல் முதல் காதல் வரை.......... கவிதை பஞ்சு மிட்டாய் வாங்கி பகிர்ந்து அதை உண்டோம்... பட்டாசு கொளுத்தி பயந்து ஓடினோம்...... பம்பரம் விட்டும் பார்த்து ரசித்தோம்..... பக்கத்துவீட்டு மாங்காயும் பிடுங்கினோம்.... நாவற்பழம் தின்று நம் உதடுகள் சிவக்கும்... ஒருவரை ஒருவர் பாசத்துடன் அணைப்போம்.... எமக்கு உள்ளத்து உணர்ச்சிகள் ஒன்றும் தோன்றவில்லை..... சில வருடங்கள் செல்ல எம்மில் சில மாற்றங்கள்.... நீயோ இன்று பருவம் அடைந்து பழிங்குச் சிலையாய் நானோ இன்று பாய்ந்திடும் காளையாய்.... உன் இளமை மாற்றம் என் மனதைக் கவர்ந்திட... என் உடல் தோற்றமோ உன் மனதினை மயக்கிட... அன்று சிறுவயதில் சிரித்திடும் …
-
- 11 replies
- 2k views
-
-
வீரக்காய் ஆயயிலே வீழாத வீரம் பேசி என்னையும் ஆய்ந்தவனே நாவல் காய் ஆயயிலே நல்ல நண்பி நீ எனக்கு என நா பிறழாது உரைத்தவனே! காரை முள் குத்தி கடுப்பில் நான் அழுது துடிக்கையிலே உன் நெஞ்ஞ்சு தச்சதைபோல் உருகி அழுதவனே! கார்த்த்ட்கை பூ பறிக்கையிலே காதோரம் வந்து சொன்னேன், பேதை என் மனதில் காதல் பூத்ததென்று. பூ போன்ற மென்மையான உன் மனதோ பூகம்பம் நிகழ்ததை போல ஈச்சம் பழம் ஆயயிலே இரும்பைப்போல் உரத்துச் சொன்னது. ஈழத்தை காதலிக்கும் காளை உன் மனதில் ஒருத்திக்கும் இடமில்லை என்று. இயம்பிய வார்த்தைக்கு ஒப்ப களமாடி நின்றாய். ஆனால் இன்று வீரம்பழம் பழுத்திருக்கு நாவல் பழம் நிறைந்திருக்கு கார்திகையும் படர்ந்திருக்கு. நீ மட்டு…
-
- 7 replies
- 2k views
-
-
மேய்ப்பனின் ஆடுகள் கொல்லப்படுகின்றன மேய்பனை தேடி வல்லூறுகள் அலைகின்றன மேய்பனுக்காக ஆடுகள் கொல்லப் படுகின்றன ஆடுகள் கன்றுக் குட்டிகள் பாலருந்துகையில் கொல்லப் பட்டன கன்றுக் குட்டிகள் துள்ளி விளையாடுகையில் கால்கள் துண்டிக்கப் பட்டு தெருவில் அலைந்தன மேய்பனி்ன் நிழலில் பதுங்க முற்பட்ட ஆடுகள் அறுக்கப் பட்டு கடைகளில் விற்கப் பட்டன தாய் ஆடு சாக மிச்சம் இருந்த குழந்தை குட்டிகளும் வாயில் பாலின் சுவடுகள் படிய விற்கப் பட்டன மேப்பனின் கூடாரத்திற்குள்ளும் ஆடுகள் ஒதுங்க முடியவில்லை வாங்குவோர் கூட்டம் அலை மோதின சட்டி எரிக்க ஒரு துளி நெருப்பற்றவர்களும் தம் இளம் சந்ததியின் உடல்களை தின்றும் பசி தீராது புத்தனின் …
-
- 7 replies
- 2k views
-
-
கண்ணின் மணியாய் கனிந்தவளே கனக்குதடி இதயம் காணத்துடிக்குதடி உன்னை.. கண்ணோடு கண் கொண்டு கதைகள் பேசி கணங்கள் மறந்து களித்திருந்த நினைவுகள்..! கனவுகள் கூட கணமும் காட்டுதடி உன்னை கனக்கும் பிரிவுக்குள் கண்கள் சிவக்குதடி தினமும். கண்ணீரின் நிறையது கடல் தாண்டிப் போனதடி கனக்கும் சோகம் கட்டிலில் நோயோடு கட்டியதடி என்னை. கனவாகிப் போனதுவே காளையிவன் களிப்பு..! கணமும் ஏங்குதடி கண்ணில் உன் விம்பம் நாடி. கதறுகிறேன் இன்று தனிமையில்.. கனிந்த உன் நினைவுகள் கனக்குதடி மனசெங்கும்.. கழுத்தில் ஒரு சுருக்கு களிப்புடன் தா கனவில் உன்னைக் கண்டபடி கழற்றி விட என் உயிரை கழன்று விடுகிறேன் உலகை விட்டே கண்களால் நீ என்றும் என்னைக் காணாதிருக்க…
-
- 10 replies
- 2k views
-
-
அன்பே விழியாக நான் இருக்க இமைகளாக நீ வர வேண்டும் மலராக நான் இருக்க மணமாக நீ வர வேண்டும் கடலாக நான் இருக்க புயலாக நீ வர வேண்டும் ஒவியமா நான் இருக்க ஒவியனாய் நீ வர வேண்டும் மேகம்களாய் நன் இருக்க மழயாக நீ வர வேண்டும் வானவில்லாய் நான் இருக்க நிறங்களாய் நீ வர வேண்டும் உன் நினைவகா நான் இருக்க உயிராக நீ வர வேண்டும் சுஜி நண்பி எழுதினது
-
- 12 replies
- 2k views
-
-
பனி இதல்களின் உட்புறத்தின் புதர்களில் பாய்வதற்குப் பதுங்கியிருக்கின்றன முத்தங்கள்.... கனவுகளின் புூட்டை உடைத்து என் பிரதேசத்துக்கு இரவு வேளைகளில் உன்னை கடத்தி வருகிறேன்.... மூடிய இமையின் இருட்டடியில் நீ ஒரு ஒளி உருவமாய் மிதக்கின்றாய்..... தூங்கும் உடலுக்குள் ஒரு புூவாய் யாத்திரை செய்கின்றாய்..... அதன் அறைகளில் உன் அரிய பயணங்களை நிச்சயித்துக் கொண்டருக்கிறேன்.... காதலின் தோட்டத்தில நான் ஒரு புூவாக புூக்கத்தொடங்கி விட்டேன்.. பறித்துக் கொள்ள உன் விரல்கள் நடுங்குகிறதா? அசைகிறதா?............
-
- 11 replies
- 1.9k views
-
-
-
தாயக கனவுடன் சாவினை தழுவிய ..... .. கார்த்திகை இருபத்தியேழு மாவீரர் தினம். மெளனமாய் அஞ்சலிப்போம்..... முப்பது வருடங்களுக்கு மேலாக எம்மை நாமே ஆளவேண்டும் சகல உரிமையுடன் வாழ் வேண்டும் என்னும் உன்னத நோக்கதுகாய் "தமிழர் தாயகம் தமிழ் ஈழம்" என்னும் தாரக மந்திரத தோடு சாவினை தழுவிய மா வீரர்களே இறுதி போரிலே , கந்தக குண்டுகளின் குண்டு மழையிலே சிதறுண்ட மக்களே குற்றுயிரும் ..குறை உயிருமாய் புதைக்க பட்டவ ர்களே ...நீங்கள் மண்ணுக்காய் விதைக்க பட்டவார்கள் விழி நீர் மழை சொரிய ,நினைக்கின்றேன் எத்தனை கனவுகள் ஆசைகள் விருப்பங்கள் என்பவற்றை மண்ணுக்காய் துறந்த மாவீரர்களே. தாயாய் தந்தையாய் சகோதரியாய் மனைவியாய் மகளாய் மகனாய் விதைப…
-
- 6 replies
- 1.9k views
-
-
அம்மா - நீ பெத்த கடனுக்கு நடையாய் நடக்கிறாய் கிடையாய் கிடக்கிறாய் ஆனாலும் அம்மா - நான் இந்தக் course படிக்கமாட்டன். மண்றாடிப் பயனில்லை மண்டியிட்டும் பயனில்லை நான் தெளிவோடு சொல்கிறேன் அம்மா - நான் இந்தக் course படிக்கமாட்டன். வரலாற்றைப் புரட்டிப் பார் சிக்கென்று இருந்த நீயே சிதைந்து போனது எதனால்..??! சில்லறை கூட வேண்டாம் சிலிர்த்து வந்த சிங்கத்தை கட்டி - நீ ஆண்டும் கண்டதென்ன..?! அம்மா - நான் இந்தக் course படிக்கமாட்டன். அம்மா - நீ ஒரு காலத்தில் சிங்கக் குட்டிகளை பெற்றதாய் பெருமை கொண்டாய் அந்தக் குட்டிகள் - இன்று எலிக் குஞ்சுகளாய் பதுங்கும் நிலை பார்த்தாய் தானே அம்மா - நான் இந்தக் course படிக்கமாட்டன். அம்மா - நீ கெஞ்சிக் கூத்…
-
- 25 replies
- 1.9k views
-