கவிதைப் பூங்காடு
கவிதைகள் | பாடல் வரிகள்
கவிதைப் பூங்காடு பகுதியில் கள உறுப்பினரல்லாதோரின் கவிதைகள், கவிதை மொழியாக்கம், உலகக் கவிதை, பாடல் வரிகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள உறுப்பினர்கள் அல்லாதவர்களின் கவிதைகள், கவிதை மொழியாக்கங்கள், பாடல் வரிகள் போன்றன மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
ஈழத்தை சேர்ந்த, பூர்வீகமாகக் கொண்டவர்களின் படைப்புக்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படவேண்டும். ஏனைய கவிதைகள் தரமான கவிதைகளை அறிமுகம் செய்யும் நோக்கில் இலக்கிய மின் இதழ்களில் இருந்து மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
5128 topics in this forum
-
என்னைப் பிரிந்து நீ எங்கோ வாழ்கிறாய் இருந்தும் நீ பிரிந்ததை ஞாபகப்படுத்த மறுக்கிறது என் காதலின் நினைவு* உன்னோடு வாழ்ந்த காலத்தைவிட உன் நினைவுகளோடு வாழும் காலம்தான் அதிகம் என்றபோதும் என்னைக் கவலைப்பட விட்டதில்லை உன் ஞாபகங்கள் * எரிக்க மனமின்றித்தான் எரித்தேன் உன் கடிதங்களை அதன் எழுத்துக்களாவது என்னோடு எரிந்துவிட வேண்டும் என்பதற்க்காக * என் கவிதைகள் எல்லாமே சோகத்தோடு பிறப்பதால்த்தான் உன் கண்ணில் படமாலிருக்க என் கையாலே கொள்ளிவைத்து விடுகிறேன். * உன்னைச் சந்திக்கும் வரை உன் முகத்தை யார் யாரோ முகத்தில் தேடிப்பார்த்தேன் உன்னைப் பிரிந்த பின் என் முகத்தை யார் யாரிலோ தேடிப் பார்க்கிறேன் * தயவு செய்து என் பெயர…
-
- 8 replies
- 1.8k views
-
-
எங்கோ மின்சார முள்வேலிக்குள் யாரோ முகமற்றவர்கள் வதைபடட்டும். அதி புத்திசாலிகளின் முன்னெடுப்பில் ஆடல், பாடல், கொண்டாட்டங்களை, மண்ணுக்காய் மடிந்தவர்களின் வணக்க அரங்கின் பெயரால் வகைப்படுத்திக் கொள்வோம். தெருவெளிகளில் நின்று சிறுகச் சிறுகச் சொல்லிக் கதறிய இனத்தின் வேதனையை ஆழக்குழி தோண்டிப் புதைப்போம். மீள மீள வசதிக்கேற்ப வரலாற்றுப் பிழைகளை நியாயப்படுத்திக் கொள்வோம். வாதையில் உறவுகள் வருந்திக் கிடந்தாலும் வரும் வசந்த விழாக்களுக்கு நாமே வழிகாட்டிகள் ஆவோம். நாங்கள் புலம்பெயரிகள். புண்ணாக்குத் தின்றாலும் விண்ணாணம் பார்ப்போம். விளக்கங்கள் கொடுப்போம்.
-
- 12 replies
- 1.8k views
-
-
கவிதை! ஊரறியாமல் நீயழுத கண்ணீர்........ பாயின் துவாரமூடு ...... பாய்ந்து செல்ல பார்த்திருக்கிறியா? அது கவிதை! ஊரழுத கண்ணீரை - உணர்வின் ........ முதுகில் தாங்கி ........ சோர்ந்து போனாயா? துவண்டு போனாலும் ....... நீ வாழ்ந்தாய் மனிதனாய் அது கவிதை! எது கவிதை? சொல் என்ற மானும் அல்ல.......... மொழி என்ற காடும் அல்ல........ மொழி காட்டில் சலங்கை எடுத்து ...... சொல் மானுக்கு கட்டி விடு..... பின் ..கற்பனைகாட்டில் கலைத்துவிடு... அது கவிதை! நேற்றைய பொழுதில் மை எடு.. இன்றைய பொழுதின் எழுதுகோலில் நிரப்பு....... நாளைய பக்கங்களை ..... வீச்சோடு .... எழுதி நிரப்பு...... புலர்கின்ற பொழுதில்......... நீ இல்லாமல் போனாலும்....... பொய் …
-
- 5 replies
- 1.8k views
-
-
விடிந்தும் விடியாததொரு காலை அம்மணமாய் கிடக்கும் என் சோதரி உடலை என் மேலங்கி கொண்டு போர்த்தி தரையில் அடித்து அழுதாலும்... உமது இறப்புக்காகவும் இரங்குகிறேன்! கல்லாகி போகாத மனிதனென்று நாம்...............ஆனதால்........... கல்லீரல் புற்று கணக்கு முடித்ததால் உம்...அற்ப ஆயுள் சோகம் எண்ணி மனசு - கனக்கிறோம்- ஆயினும் எலும்பெங்கும் வலிக்கிறது! அடி காயங்கள் ஆறுவதாய் இல்லை! இன்றும் உம் தோழர் - எம் அடிமடியில் தீ மூட்டுவதை எப்பிடி மன்னிக்க? மறக்க? வலிக்குது! தேரோடும் வீதியில் சேறள்ளி கொட்டிவிட்டு கோயில் வாசல் அது வருகையில் விடைபெறுகிறேன் ... புலிதான் எல்லாமென்றொரு புராணமா? கேவலம்... நீரல்ல...போய்விட்டீர் இன்னும் உம் காலடி தொழுப…
-
- 7 replies
- 1.8k views
-
-
கருவிசெய்வாய் விஞ்ஞானமே தலைதூக்கிப் பார்த்துநின்ற வெண்மேகக் கூட்டத்தைக் காலடியில் தவழவைக்க வானூர்தி கண்டுதந்த விஞ்ஞானமே அந்நியத்தில் வாழுகின்ற அன்பான உறவின்குரல் அடிக்கடியே கேட்பதற்காய் தொலைபேசி கண்டுதந்த விஞ்ஞானமே அடித்தடித்துத் துணிதுவைத்து அலுப்படைந்த காலம்போய் கணப்பொழுதில் சலவைசெய்ய கருவியினைக் கண்டுதந்த விஞ்ஞானமே ஆண்மகனோ பெண்மகளோ ஆரூடம் பார்க்காமல் அச்சொட்டாய் கண்டுவிட மருத்துவத்தில் விந்தைசெய்த விஞ்ஞானமே நாளாந்தக் காரியத்தை நலிவின்றிச் செய்யவைத்ததாய் நான்சொல்லும் தேவைகட்கும் நலமுடனே கருவிசெய்வாய் விஞஞானமே வஞ்சகத்தை மனத்திருத்தி வக்கிரத்தைப் புதைத்துவைத்து வார்த்தைகளில் போலிசெய்வார் வதைபடவே கருவிசெய்வா…
-
- 11 replies
- 1.8k views
-
-
ஞாபகங்களுடன் இன்றும்.... மீண்டும் சந்திப்பதாய் ஒரு மாலைநேர ஈரக்காற்றின் உவர்ப்போடு அழுததாய் ஞாபகம். தாஜ்மகால் பற்றியும் தலைசிறந்த காதல் இலக்கியம் தந்த ஜிப்ரான் பற்றியும் நிறையவே பகிர்தல்கள். ஒரு தாஜ்மகால் ஒரு முறிந்த சிறகு எங்களுக்காயும் எழுதப்படுமெனும் எண்ணமேயில்லை கௌரவப் பிரிதலாய் அது நீண்டதொரு தசாப்தம் நிறைவாகிறது. என்றாவது நினைவு வரும் சிறுவயது ஞாபகம் போல் எப்போதாவது வந்துபோகும் ஞாபகங்களுடன் இன்றும்.... காதலென்ற சொல்லுக்காய் செய்து கொண்ட சத்தியங்கள் நினைவு இடுக்குகளிலிருந்து கழன்று விழுகிறது. சத்தியம் ää சபதம் சாத்தியமில்லாக் கனவுகள் எல்லா மனசிலும் காதலின் வலி உணர்வாயும் நினைவாயும் நிசம் உணர …
-
- 5 replies
- 1.8k views
-
-
வன்னி வெடிகளுக்காய் உனக்கு இடிகள் காத்திருக்கு..... கவிதை.... சுனாமியில் அன்று வெள்ளத்தில் மிதந்தோம்..... சுட்டெரித்த பிணங்களாய்;வன்னியிலே இரத்தத்தில் மிதக்கின்றோம்.... பிணக்கும்பலின் மத்தியிலே மழலையொன்று தன் தாய் தேட சிதறிவிட்ட சதைக் கும்பலிலே தாயும் தன் பிள்ளை தேடும் ; இந்த அழிவை எங்கும் கண்டதில்லை எதிலும் பார்த்ததில்லை திரைப்படத்தில் பார்தால் கூட தேம்பி அழுததுண்டு... வீதியிலே பதுங்கு குழி; அதில் உயிருக்காய் பதுங்கிவிட்டு ஓட்டத்தை தொடரவென்றால்; வீதியிலே உறவுகளின் சிதறல்கள்.... எந்தப் பிள்ளை இறந்ததென்று பார்ப்பதற்கும் நேரமில்லை..... எந்த உடை உடுத்ததென்று கண்டுவிட முடியவில்லை; காரணம் எங்குமே சிவப்பு நிறம் எல்லாமே ச…
-
- 0 replies
- 1.8k views
-
-
இன்று கருணாகரனின் புல்வெளி இணையத்தில் உள்ள கவிதைகளைப் படித்தேன்...நினைவுகளை துளைத்தெடுக்கும் வார்த்தைகளை கொண்டு வடித்தெடுத்த கவிதைகளை ஒரே தடவையில் நீண்ட பெருமூச்சுடன் வாசித்து முடித்தேன்...அதில் உள்ள "காதலும் கனவும் நிரம்பிய நகரம்" என்ற கவிதையின் தாக்கத்தில் என்னை நானே குற்றவாளியாக்கி கேள்வி கேட்டபோது பிறந்தது இது.... சபிக்கப்பட்ட சந்ததி... தன்னைக் கடந்து போன தலைமுறைகளின் இளமைகள் தொலைந்து போன கதைகளை சுமந்தபடி தொடர்ந்தும் இருக்கிறது அந்த நகரம்... என் பாட்டி தன் பருவ காலங்களை என் பாட்டன் தன் இளமைகளை என் தந்தை தன் பால்யகாலங்களை தொலைத்துக் கொண்டது அந்த நகரத்தின் நிழலில்தான்.. நாங்கள் சிறுவர்களாக இருந்தபோது அது சிறுவயதுகளில் …
-
- 20 replies
- 1.8k views
-
-
காரணம் என்ன? அசட்டுத்தனமான பேச்சுக்கும் அசட்டுத்தனமான வாழ்க்கைக்கும் என்ன காரணம் ? புரியாத சில பாசங்களுக்கும் அறியாத சில கேள்விகளுக்கும் என்ன காரணம் ? முடியும் என்றொரு துணிவிற்கும் வானைத்தொடும் ஓர் உணர்விற்கும் என்ன காரணம் ? இதை அறிந்தவர்க்கு நரகம் அறியாதவர்க்கு சொர்க்கம் மனித வாழ்விற்கு இது ஓர் மகுடம் இது இல்லை எனில் பார் கூட வெறும் மாயை இதை அறிந்தும் அறியாமையில் செல்வர். புத்தி கூறியும் வருடாமல் போனவர் பல பேர் பருவத்தின் தேடல் இதை அறியத்துடித்தவர்கள் பண்டைய காலத்தில் நாகரிகமாக தேடியவர்கள் நட்பு என்ற ரீதியில் வரும் போது நடுக்காட்டில் விட்டுச் சென்றவர் ஆயிரம் அனுபவித்துச் சொல்லியும் ஆயிரம் இருந்தும் அனுபவிக்காது மாற்றம் கொண்டவர் எவரும…
-
- 12 replies
- 1.8k views
-
-
கடற் குழந்தை - தீபச்செல்வன்:- பேரலையை தின்று பெருங்கரையில் துயில்கிறது உறங்க ஓரிடமற்ற கடற் குழந்தை செய்வதறியாது திகைத்துப்போயின பொம்மைகள் பறந்தலைந்தன அவன் ஊதிய பலூன்கள் கண்ணுக்கு எட்டாத தூரத்தில் கவிழ்ந்து மிதக்கிறது அவன் செய்த காகிதப் படகு அவனருகில் வாடிக்கிடந்தன மீன்களும் கணவாய்களும் யாருமற்று அநாதரவாக கிடப்பனுக்காய் தலை குனிந்தன இறால்களும் நண்டுகளும் பெருங்காற்றே நீயா அவனின் படகை கவிழ்த்தாய்? …
-
- 0 replies
- 1.8k views
-
-
காதல் காதலே உனக்கு கண்கள் இல்லை உண்மைதான் நீ பாதை மாறி முறை கெட்டு வாழ்கின்றாய் காதலே காதலுக்காய் காதலர்களை சிதைத்து சேகத்தின் கடலில் முழ்கடித்து கரையில் நின்று சிரிக்கின்றாய் காதலே உன்னால் குடும்பம் பகையாகி உறவு தூரமாகி தனிமை கொடுமையாகி வாழ்க்கை சுமையாகி வாழ வைக்கின்றாய் காதலே காதலை வாழவைக்க காதலை சாகடித்து கண்ணீரில் முழ்கடித்து எதிர்காலம் வீணாவதேன் காதலே கணவனுக்கோர் காதல் மனைவி க்கோர் காதல் குழந்தை அநாதையாய் வாழ்விழந்து நிற்பதேன் காதலே நீ யே வாழ்க்கையல்ல வாழ்க்கையே போராட்டம் போராட்டமே நீயானால் வாழ்க்கை வெறுமையாய் வெறுத்து போவதேன் காதலே உண்மையே நீயானால் வந்துவிடு பொல…
-
- 10 replies
- 1.8k views
-
-
பெற்ற தாயும் பிறந்த பொன் நாடும் நான் பிறந்த நாடு ,......இன்று நாதியற்ற நிலையில் பாலும் தேனும் பொழிந்து பார் புகழ்ந்த நாடு ஆண் பெண் பேதமின்றி குஞ்சு என்றும் குழந்தை என்றும் முதியவர் ,உடல் வலு இழந்தோர் என்றும் கிஞ்சித்தும் பாராமல் கொத்துக்கொத்தாய் கொன்று ஒழிக்கையில் தாய்க்கு நிகராம் என் தாய் நாடு தமிழ் ஈழத்திரு நாடு சிக்கி சின்னா பின்ன பட்டு கொடியவன் கோத்தபாயா கூட்டத்துடன் ராஜ பட்சே கூடுச்சேர்ந்து ,பிச்சையெடுத்த உதவிபணம் பீரங்கியாய் மாற , ஆட்லரியாய் மாற எக்காளமிட்டு ,தன் இளைய,சந்ததியை பலி கொடுத்து பலிகடாவாக்கி சீரழியும் தேசம் என்று தான் மாறும் ஆறாது மாறாது அழுதாலும் தீராது ஓயாத துயர் படும் என இனம் …
-
- 0 replies
- 1.8k views
-
-
.......'கலையாத கனவுகள்' கண்ணீரில் பிறந்தேனோ? மின்னல் போல் உதித்தாய் பின்...... திரைகள் போட்டு சூரியனை மறைத்தாய் காலம் கடந்தும் ......... --மீண்டும் மேகம் வடிவாய் பூத்தாய்....... உன்னை வாசலில் வந்து பார்த்தேன்....... ஆனால் மூச்சு காத்து தான் ....... அடித்தது ஏன் பனி வீசி பாளத்தை உடைத்து தேடும் விழியே வைத்து விட்டு சென்றாய்.......? விழிகளில் கரைந்து மடலில் வரைந்தது _சுவிற்மிச்சி(MCgaL)
-
- 4 replies
- 1.8k views
-
-
நொண்டிச் சிந்து வ.ஐ.ச.ஜெயபாலன் ஒரு திருநங்கையின் காதல் கவிதைபோல என் மரபணுக்களில் இருந்து எழுகிறது ஒரு பாடல் பாணனாய்த் திரிகிறபோதெல்லாம் என் பாதங்களின் அசைவுக்குச் சுழல்கிறதே உலகம் என்னதாய். கிடைத்த கள்ளும் கூழும் சந்தித்த தோழ தோழியருமாய் குந்திய மர நிழல்களில் எல்லாம் சூழுதே சுவர்க்கம் காதலும் வீரமுமாய். வாழ்வு தருணங்களின் விலையல்ல தருணங்கள்தான் என்பதை மறக்கிற பொழுதுகளில் புயலில் அறுந்த பட்டமாகிறேன். காலமும் இடமும் மயங்க. தருணங்களின் சந்தையான உலகிலோ தங்க வில்லை சுமக்கிறவர்களுக்கே வாழ்வு இங்கு பல மரவில் வித்தைக்காரருக்கு கட்டைவிரல் இல்லை. எனினும் சிட்டுக் குருவிகளையே தொலைத்துவிட்ட இந்த சென்னைச் சுவர்க்காட்டில் சு…
-
- 12 replies
- 1.8k views
-
-
லண்டனில் ஒரு மாமி மாமியைப் போல புருஷன் பாவம் இவோ புருஷன் பயந்த சுபாபக்காரன் மாமி ஒருக்கா பார்த்தால் மனுஷன் பயந்து போவேர் இரண்டு பேரும் சேர்ந்து காசு காசாய் உழைத்து இன்னும் போதாது என்று இரவு பகல் வேலை வட்டிக்கு எல்லாம் கொடுத்து குட்டி போடுது காசு காசு மட்டும் மாமிக்கு கடவுள் போல காணும் சீட்டு கீட்டு என்று சேர்த்து வைச்சு காசை போட்டு போட்டு பாங்கிலா காட்ட மாட்டா வெளியில மாளிகை போல் வீடு மனது மட்டும் சிறிது யாரும் உதவி கேட்டால் வாரும் பிறகு பார்ப்பம் என்று நைசா மாமி நழுவிப் போடுவா வெறும் கசவார மாமி கை இறுக்கம் பாரும் காசை வச்சு மாமி என்ன செய்யப் போறா கட்டிக் கொண்டா போவா. பா .உதயன்
-
- 7 replies
- 1.8k views
-
-
நினைவழியா பயணம் நீண்ட நெடிய பயணங்களின் பின்பு அங்கே தரித்து நின்றோம் செம்மண்ணின் வாசனையும் வேலி கதியால்களில் பூத்திருந்த முள் முருக்குகளின் பூக்களும் தொலைந்து போயிருந்த நினைவுகளில் உயிர் தடவிற்று கரிய நிற மாடு பூட்டி வண்டில் ஒன்று கடந்து போனது இருளும் நினைவும் நிலவின் ஒளியுடன் கலந்த இருந்த பொழுதில் தான் நாம் அந்த வீதியில் அமர்ந்து கொண்டோம் நேற்றும், முந்த நாளும் அதற்கும் முன்பாகவும் என் தோழர்கள் உயிர் சரிந்து வீழ்ந்த வீதி அது ஒவ்வொரு அங்குல நிலத்திற்காகவும் ஓர்மம் கொண்டு போராடி களம் வென்ற என் தோழர்களை தாங்கி நின்ற வீதி அது என் பாட்டனின், அவனதும் பாட்டனின் காலடிகளின் தடம் காக்க, அவ…
-
- 11 replies
- 1.8k views
-
-
என் இனிய தேசமே என்று உன்னை காண்பேனோ தெரியவில்லை எனக்கு உன்னைப் பிரிவதென்றால் உயிர்விட்டுப் போவதுபோல் வலியொன்று உணர்கின்றேன் என் செய்வேன் நான் ஏனிந்த நிலையெனக்கு என் வீட்டு முற்றத்தில் தினந்தோறும் எழுந்து வந்து ஆனந்தமாய் அனுபவிக்கும் இளங்காலை இனிமை மஞ்சள் இளவெயிலின் தகதகக்கும் மோகனத்தில் உணர்வழிந்து உறைந்துவிடும் மாலை மயக்கங்கள் என்று வரும் தெரியவில்லை என் வாழ்வில் மீண்டும் அழகான காலையிலே அவசரமாய் உணவு தேடி பரபரப்பாய் பறந்து வந்து பாட்டிசைக்கும் புள்ளினங்கள் பச்சை இலைகளிலே பதுங்கி ஒழிந்திருந்து கதிரவன் வெளிப்படவே ஒளிவீசும் பனித்துளிகள் என்று வரும் தெரியவில்லை என் வாழ்வில் மீண்டும் கொத்து கொத்தாய் காய்காய்க்கும் முற்றத்து மாமரங்கள் பழு…
-
- 10 replies
- 1.8k views
-
-
பாசறையில் பூத்து கல்லறைகளில் உறங்கும் மாவீரர்களே............ நீங்கள் ஒடுக்கப்பட்ட நம் தமிழினத்திற்காக மண்ணிற்க்குள் புதைக்கப் பட்டு, விதைக்கப் பட்டவர்கள். நீங்கள் மண்ணிற்க்குள் புதைக்கப் படவில்லை நமது தாயகமெனும் கட்டிடத்திற்க்கு உறுதியான அத்திவாரமாக்கப் பட்டவர்கள். மண்ணிற்க்குள் விதைக்கப்பட்ட உங்களின் கனவுகள் எரிமலைகளாக குமுறிக்கொண்டிருக்கின்றன நாளை நிச்சயம் எரிமலைகள் வெடித்துச் சித்றும் அப்போது உங்கள் ஆசைகள் நிறைவேறும் உறங்குங்கள் அமைதியாக அதன்பின்பு
-
- 7 replies
- 1.8k views
-
-
அன்னை தேசம் சிந்தும் குருதி அகிலம் எங்கும் உறைய வைத்தும் ஈழத் தமிழன் ஈந்திடும் கண்ணீர் ஈரம் கண்டும் இரங்காத உலகம் சிங்கள வெறியன் சீண்டிடும் கைகள் சீறும் படையால் சிதைந்திடும் காணீர் எம் நிலம் வந்து எம்மையே கொல்லும் துரோகிகள் துரோகம் தூர்ந்திடும் விரைவில் தீந்தமிழ் வீரர் தியாகம் வேள்வி தன்னிலை மாறி தமிழீழம் பிறக்கும்...
-
- 8 replies
- 1.8k views
-
-
நீ ஒரு துரோகி!! சிங்களத்தின் வாழை பிடித்துகொண்டு போகும் கருணா ..!! அப்பாவி தமிழர்களை கொன்று குவிக்கிறார்கள் ..அவனின் அரசவையில் உனக்கொரு பதவி!! வீரத்திற்கு பேர் போன தமிழச்சியும் ஒரு வேங்கை! துரோகியாக ஓடி ஓளிந்த நீ ..அவர்களின் சேலையை வாங்கி கட்டிக்கொள்! உன் பெயரை சொன்னாலே கன்னத்தில் அறைகிறதாய் படுகிறது! எதிரியின் கோட்டையில் உனக்கொரு புகலிடம்.. ச்சீ!! ஈழ தமிழரிடத்தில் இப்படியொரு கேவல மனிதனா?! தமிழர்களை அழிப்பதற்கு நீ ஒரு கேடயம்.. உன் பெயரை சொன்னாலே உலகமே காரி துப்பும் அளவிற்கு நீ ஓர் அசிங்கம்!! இனபடுகொலைக்கு வழிகாட்டும் நீயொரு துரோகி!! இலங்கை தமிழனிடத்தில் அழிக்க வேண்டிய பேர் நீ!! ஆக்கம் : - மீனலோஷினி
-
- 0 replies
- 1.8k views
-
-
எங்கள் முகாரிகளே.. முரசுகளாக மாறும். மௌனித்துக் கொண்டவர்களே! இனிமேல் மனிதத்தைப்பற்றிப் பேசாதீர்கள். பேசினால் உங்கள் கருத்தைக் காவிவரும் மொழி களங்கப்பட்டுவிடும். எட்ட நின்று வேடிக்கை பார்த்துவிட்டு, ஆதாயம் உண்டென்றால் இனவாத அரசின் செயலை ஆதரித்து, இந்த இனஅழிப்பிற்கு, “பயங்கரவாதத்திற்கு எதிரான போர்” என்று முத்திரை குத்திவிட்டு முறுவலித்துக் கொள்ளுங்கள். இப்போது முகாரிகள் எங்கள் தேசியமொழியாகிக் கிடக்கிறது. வலியனை வாழ்த்துவது வழமையானதுதான்… நாங்கள்தான் முட்டாள்கள் போலும். எங்கள் ஒப்பாரிகள்…. உங்கள் செவிப்பறையில் மோத மானிடத் துடிப்புக் கொள்வீர்கள் என்று நம்பி, ஏமாந்து கொண்டிருக்கிறோம். எங்கள் பிள்ளையர்தான் எங்கள் வல்லமைகள்…
-
- 6 replies
- 1.8k views
-
-
எப்படிச் சொல்ல கரும்புலிகள் வீரத்தை..? தரைமீது மலைபோல பகை நின்ற போதும் தளராத துணிவோடு களமாடி வென்று தரைக் கரும்புலியானீர்.. கடல்மீது படை கொண்டு நிலம் விழுங்க வந்த... பகை முடித்து முடிசூடி கடற்கரும்புலியானீர்... வானத்தின் மீதேறி வண்டு போலச் சுற்றி வந்து வானதிரும் சாகசம் செய்து வான் கரும்புலியானீர்... விண்ணுக்கும் மண்ணுக்கும் விஸ்வரூபமாய் நிற்கும்.. கரும்புலிகள் வீரத்தைச் சொல எந்த இலக்கணத்தில் சொல்லெடுக்க.. அம்மாவின் அன்பைச் சொல்ல வார்த்தையுண்டோ? அப்பாவின் அரவணைப்புக்கு நிகருண்டோ...? அகிலத்தின் அதிசயத்திற்கு குறைவுண்டோ? அலைகடலின் ஆர்ப்பரிப்புக்கு அர்த்தமுண்டோ...? காற்றுக்கும் வேலியுண்டோ? கரும்புலிகள் வீ…
-
- 9 replies
- 1.8k views
-
-
பூங்குயில்களே-உங்கள் முகாரியைக்கொஞ்சம் முடக்கிப்போடுங்கள் காற்றில்கலந்த கந்தகநெடியிலே -என் வெற்றிச்சேதியை விட்டுச்செல்கிறேன் அப்போதுபாடுங்கள்-புதிய பூபாள ராகங்கள். எனை வளர்த்தபாசறையில் நான்வளர்த்த பூஞ்செடியே நாளைய சேதிகேட்டு புதிதாய் மொட்டுவிடுவாயா-இலயேல் உயிர்பட்டு விடுவாயா? நாணல்களே....ஏன்.. கோணல்களானீர்கள் பனித்துளி என்ன உங்களுக்குப்பெருஞ்சுமையோ தலைநிமிர்ந்துநில்லுங்கள் ஆதவனின் அனல்க்கரங்கள் அள்ளிச்செல்கயிலே அறிவீர்கள் நீங்கள் சுமந்தது வைரக்கிரீடமெண்று. வீரதேசத்தின் விடுதலைக்காற்றே-என் மண்ணின் மணம்சுமந்து உயிர்க்கூண்டில் நிறைந்து …
-
- 10 replies
- 1.8k views
-
-
-
- 10 replies
- 1.8k views
-
-
தமிழர் சொரணை மீட்பு பொங்கல்.. வெற்று சவடால் அரசியல் மேடை பேச்சில் எச்சில் தெறிக்க.. ஆட்டு மைந்தைகள் கர்சீப் கொண்டு அதை துடைக்க.. மைக்கும் அதிர்ந்து தன்னை நிறுத்தி கொண்டது நம் வேலைக்கு இவர்கள் வேட்டுவைப்பார்கள் என்று.. ஈழத்தில் உன்உறவுகள் செத்து கிடக்க.. இவனோ தேரதல் பிரியாணியை தின்று நடக்க.. சொறிநாய் ஒன்று காலை தூக்கியது இது கல்லோ என்று.. தலைவனின் சுவரொட்டியை ஒட்டிவிட்டு அசையாமல் நின்றான் வேறுயாரும் கிழித்துவிடக்கூடாது என்று.. தின்ன அசைந்து வந்த எருமை மாடு அவனை கண்டு ஒதுங்கிபோனது இவனை விட நாம் மேல் என்று.. ஈழத்தில் உன் உறவுகள் சாகிறார்கள்-என்னால் என்ன செய்யமுடியும்? காவிரி பறிபோகிறது என்னால் என்ன செய்யமுடியும்? முல்லை பெரியாற்றை உட…
-
- 7 replies
- 1.8k views
-