கவிதைப் பூங்காடு
கவிதைகள் | பாடல் வரிகள்
கவிதைப் பூங்காடு பகுதியில் கள உறுப்பினரல்லாதோரின் கவிதைகள், கவிதை மொழியாக்கம், உலகக் கவிதை, பாடல் வரிகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள உறுப்பினர்கள் அல்லாதவர்களின் கவிதைகள், கவிதை மொழியாக்கங்கள், பாடல் வரிகள் போன்றன மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
ஈழத்தை சேர்ந்த, பூர்வீகமாகக் கொண்டவர்களின் படைப்புக்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படவேண்டும். ஏனைய கவிதைகள் தரமான கவிதைகளை அறிமுகம் செய்யும் நோக்கில் இலக்கிய மின் இதழ்களில் இருந்து மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
5128 topics in this forum
-
தோழி!!! கருச் சுமந்த அன்னை கண்ணாய் காத்த தந்தை கணம் பிரியா அண்ணன் தங்கை அத்தனையும் நீயாய் _ நான்!! வேதனையில்.. விழுந்தபோதும்.. சோதனைகள்.. சுட்ட போதும்.. மென்மையான.. புன்னகையுடன்.. மெதுவாய் தாங்கிய.. சுமைதாங்கி நீ!! அன்னையிடம் சில.. தந்தையிடமும் சில.. அடுத்த உறவுகளிடம் பல.. அறியப் படாததையெல்லாமே.. அத்தனையும் மொத்தமாய்.. அறிந்தவள் நீ!! இத்தனைக்கும்! ஊராலும் அருகில்லை.. உறவாலும் அருகில்லை.. உணர்வால் அருகானோம்.. உயிரானோம்!!!
-
- 8 replies
- 2.1k views
-
-
தேசத்தின் குரல் ஓய்ந்ததால் நாமிங்கு தீய்ந்த குரலால் பேசவில்லை கரம் ஓடிந்து வீழ்ந்தாலும் - எம் கனவொடிந்து போகவில்லை அடுக்கடுக்காய் பொய் சொல்லி அன்னியனை அரவணைத்து தமிழினம் ஒடுக்கவென புறப்பட்ட சிங்களத்தை மடித்தெடுத்த புகையிலையாய் வாயில் மென்று தின்று துப்பும் காலம் வெகுதொலைவில் இல்லை அண்ணன் தம்பி அக்கா தங்கையென ஆயிரம் வீரர்களை இழந்தாலும் - நாம் இன்னும் ஆட்டம் காணவில்லை தமிழர் நாம் வீழ்ந்த வீரனின் மேலேறி போரிடும் வஞ்சுரம் கொண்டவர்கள் பன்னெடுங்காலமாய் பகைதொடர்ந்த சிங்களத்தை கண்ணிமை திறப்பதற்குள் கொன்று தின்னத்துடிப்பவர் நாம் அஞ்சியஞ்சி வாழ நாம் எலிக்கு பிறந்தவர்களா ? புலிக்கு பிறந்தவர்கள் போரிடத் துணிந்தவர்கள் வி…
-
- 8 replies
- 1.5k views
-
-
கொதிக்கும் பாலைத்திங்கள் சொல்ல முடியாத சொல்லுக்குள் அடங்காத வில்லங்க வேதனைகள் வீதியுலா வந்ததெல்லாம் 83 இன் யுூலைக்கே தெரியும்! தென்னிலங்கையில் தமிழன் தோலை உரித்துத் தொங்க விட்ட வேளைகளைச் சுமந்த பாலைத் திங்களிது! கோர நினைவுகள், கொடுமைச் சாவுகள், அப்பப்பா!.......... . ஈர மனங்களைத் தீப்பிழம்பாய் ஆக்கிய அன்றைய நாட்கள்! தமிழச்சி என்பதனால் கொங்கைகள் அறுத்தும், கொப்பழிக்கும் தாரினுள் எம் பிஞ்சுகளை முக்கி எடுத்தும், செங்களங்கள் ஆடாத சிறுமைக் காடையர்கள் செந்தமிழர் உயிர்க்குலையில் வெந்தணலை இட்டதெல்லாம் நேற்றைய நாட்கனவாக நினைவுக்கிப் போய் விடுமா? அழியாத வடுக்கள், ஆறாத ரணங்கள், இழிவான நிலைகள், இதயத்துச் சு…
-
- 8 replies
- 1.3k views
-
-
கோபம்கொண்டு குமைந்தபோதும் துரோகம்கண்டு துவண்டபோதும் வறுமைகொண்டு வாடியபோதும் வெறுமைகொண்டு ஓடியபோதும் நறவுண்டு களித்தபோதும் உறவுகண்டு புளித்தபோதும் வாடைதழுவி உறைந்தபோதும் பேடைதழுவி கறைந்தபோதும் புலவிநீண்டு தீய்ந்தபோதும் கலவிநீண்டு ஓய்ந்தபோதும் - இன்பதுன்பங்களில் இருப்பை உணர்த்திய நிழலே மெல்ல உயிர்கொல்வதுதான் உன் செயலோ !! இரத்தம்கெட்டு சத்தம்கெட்டு எயிறுகெட்டு வயிறுகெட்டு வாசம்கெட்டு சுவாசம்கெட்டு இதயம்கெட்டு இதழ்கெட்டு ஊன்கெட்டு உறக்கம்கெட்டு உருவம்கெட்டு பருவம்கெட்டு அலம்பலில் ஆரம்பித்து புலம்பலில் நிறுத்துமிந்த உணர்ச்சிப்போலியை உணரும் காலம் எதுவோ ?
-
- 8 replies
- 1.4k views
-
-
அகதியாக வந்த பறவை ஏன்அங்கு துடிதுடித்தது கடல் கடந்து வந்த உள்ளம் ஏன் பதைபதைத்தது சிங்களத்து படைகளினால் அகதியாகி புலம்பெயர்ந்தது அமைதியாக வாழ என உங்கு வந்தது அகதியாக வந்தவனை தமிழகம் ஏன் மிதித்தது விழுந்தவனைத் தான் அங்கு மாடும் முட்டுது பச்சைபாலன் என்பது அறியாமலா நாய் கடிதது செய்தி படித்த என் மனமோ பதைபதைக்குது ஈனமான தமிழனாக இவனும் தன்னைக்காட்டுது
-
- 8 replies
- 1.7k views
-
-
ஆரிடம் சொல்லியழ? தொலைபேசி வைத்திருப்போரே! தொலைந்து போங்கள்…. தாயகம்பற்றிப் பேசவா? யார் முந்தி நானா?...... நீயா? உணர்வெடுத்து, உரிமைக் குரலெடுத்து ஆகாய வெளிகளை அதிர வைப்போம்..!!!!! திட்டங்களும், கருத்தாடல்களும் கேட்கக் கேட்க உற்சாகம் பிறக்கும். ஆகா இனிக் கவலையில்லை எவ்வளவு குரல்கள்…! உலக அங்கிகாரம் எதற்கு? நாங்களே இராசாங்கம் இதோ தாயகம் எங்கள் கைகளில் இதனைச் சீராட்டுவோம் பாராட்டுவோம். சிரசின்மேல் சுமப்போம். வானலைகள் கதவுதட்டி வார்த்தைகளை குவித்தெறியும்! நம்பி நம்பிக்கை கொண்டேன் வானலை வந்த என்னருந் தோழருடன் பேச தொலைபேசி எடுத்தேன்.. ஆகா நான் கதைத்தது கேட்டீரா? எப்படி இருந்தது? உணர்வாய் இருந்ததா? என ஆயிரம்…
-
- 8 replies
- 1.7k views
-
-
முன்னை அண்ணன் கொடுத்த இடி கட்டுநாயகாவில் பின்னை கொடுத்த இடி பலாலியிலே இன்று கொடுத்த இடி அடிவயிற்றிலே இன்னும் இறங்கும் இடி எங்கெங்கோ? வானோடிகளின் வல்லமை பாராமல் வாயார வாழ்த்தாமல் வாய்மூடி இன்னும் உறங்குவது ஏன் தமிழா? அன்று நின்று கடலாண்ட இராஜராஜனும் அவன் மகன் இராஜேந்திரனும் மீண்டும் பிறந்திருந்தால் இப்படித்தான் இருப்பாறோ? இணைந்து படைநடத்த இயன்றதெல்லாம் செய்யாறோ? என்னடா கொடுமை இது எங்கள் சகோதரனுக்கு எம் மன்னில் இடமில்லையாம் சொல்வது யார்? கன்னடத்து விஷநாகம் கடும் விஷத்தை கக்குவதும்! கலைஞ்சரின் கட்டுக்கதை கண்ணீர் நாடகமும்? என்னடா கொடுமை இது? - சிவராஜா
-
- 8 replies
- 1.4k views
-
-
பொய்கையில் பூத்த பொற்தாமரை என்று பொழிவாய் கூறியவன் பொருள் தேடி வந்தவுடன் பொதியில் புதைந்தானே பொறுத்தது போதுமென்று பொம்மையாய் வாடி நிற்க பொன்னி அல்லவே நான் பொங்கல் வந்தால் பொற்காலம் பிறக்கும் என்று பொது அறிவு கொண்டவள் பொருட்படுத்தவும் தயங்க மாட்டேன் பொருத்தமான தருணம் வரும் பொறுத்தது போதுமென்று பொங்கி எழ நேரம் வரும் பொருளாதாரத்தில் நானும் உயர்ந்து பொறுப்பதிகாரியாய் இருப்பேன் உனக்கு - மீரா குகன்
-
- 8 replies
- 761 views
-
-
வலிநிறைந்த நாட்களின் வரிசையில்....! ----------------------------------------------------------- வலிநிறைந்த நாட்களின் வரிசையில் உனக்குமொரு இடம் ஒதுக்கினர்! உலகப்பொது மன்றின் ஊழியகாரரரும் சாட்சியாய் நின்றனர் சாவுகள் கண்டு சளைக்காதவரல்லவோ! கணக்கெடுத்தனர் காகிதம் நிரப்பினர் கண்டணம் தெரிவித்துக் கையைப் பிசைந்தனர்! செஞ்சோலை வளாகம் செங்குருதிச் சகதியாய் சோலைமலர்கள் சோபையிழந்தன வான்வழி வந்த சிங்களன் வல்லூறு பேயாட்டம் போட்டதை யார் கேட்டார்கள்! பயங்கரவாதிகள் ஒன்றாய்க் கூடி உலகை ஆளும் கொடிய காலத்தில் கொடுமை சூழ்ந்த உலகினில் நீதியை கொடுத்திடமாட்டார் எடுப்பதே எம் கடன் எம் கடன் முடித்து மண்ணுள் புதைந்தோர் பாதம் படைத்தலே மனிதராய் வாழும் மாந்தரின் பணியா…
-
- 8 replies
- 1k views
-
-
வணக்கம் என் அன்புறவுகளே! "ஊருக்குப் போக விருப்பமில்லை" என்ற இந்தக் கவிதை ஒரு .....தொடர் கவிதை! இதை தொடராக வாசிக்கும் பொறுமையும் பக்குவமும், யாழ் உறவுகளிடம் இருக்கும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கின்றது. கதையாக எழுதலாம் என்றிருந்தேன். ஆனால் கவிவரிகளில் பல விடயங்களை கதைபோலன்றி ஒரு சில வரிகளுக்குள் அடக்கிச் சொல்வது பொருத்தமானதாக அமையும் என்ற நம்பிக்கையில் இந்த கவித்தொடரை ஆரம்பிக்கின்றேன்! (இந்தக் கவிதைத் தொடரை முடிக்கும் முன்னரே "ஊருக்குப் போகப் போறன்" என்ற நிலை வர வேண்டும் என்று ஆசைப்படுகின்றேன்!) என் சின்ன வயதின் நினைவுகள்,நிகழ்வுகளிலிருந்து ஆரம்பிக்கப்போகும் இந்தக் கவித்தொடர் என் நினைவறிந்த 1987 காலப்பகுதியில் இருந்து ஆரம்பிக்கிறது. என்னையும், என் மண்ணையும்...…
-
- 8 replies
- 1.8k views
-
-
கீழேயுள்ளது தூயாவின் கற்பனை காதலிக்கு ஒரு மன்மதராசா இருந்தா எப்பிடியிருக்கும் என்று ஒரு கற்பனை உலா... ---------------------------------------------- ¿ýÈ¡¸ ±ý ¸ñ¨½ À¡÷òÐ ¦º¡ø... ------------------------------------------- ¸ñ§½.. §À¨¾ô ¦Àñ§½... §¸û! ¯ý ¿ñÀ÷¸û §Åñ¼¡õ ±ý§Èý ±¾ü¸¡¸? ¯É째 ¦¾Ã¢Ôõ «Å÷¸û ÀüÈ¢ þý¦È¡ÕÅý ¿¡¨Ç¦Â¡ÕÅý ±É, º£÷¦¸ðÎ ¾¢ÕÔõ ¿ñÀ÷¸û ÜðÎ ¯ÉìÌ §Åñ¼¡õ ±ý§Èý. ÍüÈõ ÀüÈ¢ ¦º¡ýÉ¡ö... «ó¾ ÍüÈõ ¿õ ¸¡¾¨Ä ¦¸¡î¨º ¦ºö¾¨¾ «È¢Â¡§Â¡? ¿õ¨Á À¢Ã¢ì¸ «Å÷ §À¡ð¼ ¾¢ð¼§ÁÛõ «È¢Â¡§Â¡? ÀÊô¦À¾üÌ §Å¨Ä ±¾ü¦¸É §¸ð¼¾¡ö ¦º¡ýÉ¡ö ¯É째 ¦¾Ã¢Ôõ ¿£ ÀÊôÀ¢ø 'நெஅக்' ±ýÚõ, ÀÊôÀ¢ø «ì¸¨È¢ø¨Ä ±ýÚõ «Ð¾¡ý §¸¡Àò¾¢ø …
-
- 8 replies
- 2.5k views
-
-
எங்கள் எல்லைக்குள் வரும் எதிரிகளுக்கு ஏணையில் உறங்கும் பச்சிளம் குழந்தையைக்கூட ஏவுகணை வீசி கொல்லும் எதிரிகளே உங்கள் உலக சாதனையை அம்மணமாய் நின்று கொண்டு உலகம் வாழ்த்தட்டும் எங்கள் வலிகள் உங்களுக்கும் புரியவில்லை இன்னும் இந்த உலகத்திற்கும் புரியவில்லை மனிதம் தொலைத்து வெறிபிடித்த மிருகங்களாய் கொடிய முகம் கிழித்து வாருங்கள் எங்கள் எல்லைகள் எங்கும் உங்களுக்காய் மரணக்குழிகள் காத்திருக்கிறது எங்கள் குருதி உறைந்த செம்மண் பூமி எழுந்து உங்களைத் திண்டு விழங்கும் வெறும் எலும்புக் கூடுகளாய் உக்கிப்போன எச்சங்களை பொறுக்கி உங்கள் வீட்டின் முற்றத்திலே கொண்டுபோய் கொட்டுவோம் கனரக வண்டிகள் சுவர்களை உடைக்க பறந்திடும் விமா…
-
- 8 replies
- 2k views
-
-
இந்தப் படைப்பு, ஏறத்தாள இரண்டாயிரத்து ஐநூறு ஆண்டு காலத்தில் மனிதகுணமும் அதனது இயல்புகளும் எந்த விதத்திலும் மாறிவிடவில்லை என்பதை எடுத்துக்காட்டுகின்றது. அசோகச்சக்கரவர்த்தி காலத்தில் இருந்து இன்றுவரை எதுவுமே பெரிதாக மாறி விடாதது மட்டுமல்ல, மனித குணம் மேலும் மேலும் வக்கிரமடைந்து செல்வதைக் காட்டுகின்றது. 'தர்மச்சக்கரம்' கலிங்கம் வீழ்ந்தது! குருதி கொப்பழித்த 'தாயா' நதிக்கரையின் ஓரங்களில், கரையொதுங்கிய பிணங்களின் இரத்த வாடை கலந்த காற்று வெற்றிச்செய்தியை, நெற்றியில் சுமந்து வீசியது, அன்னப் பறவைகள் நடை பயின்ற ஆற்றங்கரையில், ஆந்தைகளும் கழுகுகளும் குந்தியிருந்தன.. கலிங்கம் வீழ்ந்தது!. வீதியெங்கும் வெற்றியின் பூரிப்பு. வீழ்ந்து கிடக…
-
- 8 replies
- 2k views
- 1 follower
-
-
காற்று அலையில் நெருப்பான இரும்பு மனிதர்கள் தாய் மண் மீது மிகுந்த தாகம் கொண்ட தன் நலம் அற்றவர்கள் தமது சுக துக்கங்களை தமிழனுக்காக இழந்தவர்கள் தானைத்தலைவரின் சிந்தனையின் தலையாய உயிர் ஊற்றுக்கள் முகம் அறியாத உன்னத உயிர் சிற்பங்கள் தமிழனின் வாழ்வுக்காக தம் உயிரையே தந்த மாபெரும் முத்துக்கள் உரிய இலக்கினை உடைத்து எறியும் உயிர் ஆயுதங்கள் பகைவனின் மன பலத்தை உடைத்து எறியும் எரிமலைகள் தமிழனின் முதுகு எலும்பை நிமிரவைத்த சிற்பிகள் நாலடி மண் கூட தமக்காக வேண்டாத சுயநலம் அற்றவர்கள்
-
- 8 replies
- 1.4k views
-
-
வெட்டி கதை பேசி வெண்ணிலா ஒளியில் என் வீட்டு முற்றத்தில் அக்கம் பக்கம் உள்ளவர் எல்லாம் சேர்ந்து இருந்து பக்கத்துவீட்டு நிலவும் நானும் ஓரமாய் விடுப்பு கேட்டு தெரித்த சினிமா தெரியாத அரசியல் போன கோயில் என வண்ண வண்ண கலர் பூசி கதை பேசி இருந்த காலம் விஜயகந்தும் அர்ஜுனும் இந்தியாவை காப்பது போல் எமக்கு ஒரு ராம்போ இருந்தா நாடு விரைவா கிடைக்கும் என எமக்குள் ஓடும் என்ன ஓட்டம் தலைகால் புரியா சந்தோஷம் பக்கத்து வீட்டு பெடியள் எல்லாம் நல்லவங்கள் இல்லை நிலா நானே உனக்கு எல்லாம் செய்யும் யோக்கியன் என பொய்பேசி அறியாத வயது அதில் ஆயிரம் கதைசொல்லி மனதுக்குள் பூரித்து நமக்குள் ஒரு உலகம் ஏற்படுத்தி வண்ணத்து பூச்சி போல இறக்கை விரித்து திரிந்த காலம் அது வெட்டை வெளியும் பூவரசம் மரநிழ…
-
- 8 replies
- 1.1k views
-
-
என் காதலுக்கு, காலை வணக்கம் சொல்லித் தொடங்கும் என் வேலை இன்று போட்டாலும் பதில் இல்லை எனும் போது தளர்கிறதே என்நிலை! வண்ண வண்ண எழுத்தால் என் எண்ணம் நிறைப்பாயே அள்ளிக் கொஞ்சும் அன்பால் வளைத்து அணைப்பாயே கரும்பினிக்கும் கருத்தால் கவிதை வடிப்பாயே ஓடிவந்துனை கட்டிக்கொள்ளத் தோன்றும் என் உயிரின் பெரும்பேறே! நீ இன்றி ஓடவில்லை வேலை இங்கு இப்படியோர் நிலைகொடுத்தாய் சரியோ சொல்லு!? பாதி வழி வந்த போது தாயைத் தொலைத்த குழந்தை போல் தவிக்கிறதே என் மனது! நிழலாகித் தொடர்கிறது உன் நினைவு உயிருக்குள் வழிகிறது உன் உறவு அன்பு தந்து என்னை சொந்தம் கொண்டாய் அன்பே! நீ இன்றி நகரவில்லை என் பொழுது! உன் குறும்புத்தமிழ் கேட்கும் போது மனம் குளிரும் செந்தமிழின் செழிப்பினிலே த…
-
- 8 replies
- 1.9k views
-
-
ஈழம் என்னும் இன்பபுரி சாம்பலுக்குள் பூத்து வந்த சந்தனத்து மேனி - இவள் சங்கம் பல நாட்டி வைக்கும் சரித்திரத்து இராணி! வேங்கையரின் ஆகுதியில் விளங்கும் இளவேணி - தமிழ் வேதனைகள் தீர்த்து வைக்க விளைந்த இவள் ஞானி! தேங்கு வளம் சேர்த்து வைத்த தெள்ளமுதத் தேனீ - இவள் கஞ்சமலர் கொஞ்ச வரும் கதிரவனின் காணி! இன்னலுறும் இனங்களுக்கு இன்பந்தரும் கேணி - இவள் திண்மையுறும் விடுதலைக்கு வன்மை தரும் ஏணி! ஓங்கு புகழ் தாங்கி நிற்கும் தமிழினத்து ஆணி - இவள் ஒய்யாரப் பாட்டெழுதும் பாவலர்க்கு வாணி! முத்தெடுக்கும் கடல் நடுவே மிளிர்வது இவள் பாணி முத்தமிழும் செப்பிடவே முழக்கம் தரும் தீனி! மாங்கிளியும், மரகதமும் மண்டியிட்ட பூமி - …
-
- 8 replies
- 1.4k views
-
-
அகதி முகாம் கோடைக் கொதிப்பையும் மாரித் தூறலையும் மாறி மாறி வடி கட்டுதே - இந்த அரிதட்டுக் கூரைகள் சூரிய விளக்கையும் பனிமழைத் தென்றலையும் அணைகட்ட முடியாமல் இலவசமாகக் கொடுக்கும் கிடுகுச் செத்தைகள் மீன் பிடி வலைகளாக! பௌர்ணமி வெளிச்சத்தில் எங்கள் சிறுவர்கள், அ....ஆ எழுதிப் பழகும் பால் நிறச் சிலேட்டுக்கள் எங்கள் முற்றங்கள்! குப்பி விளக்கு திரியிற்க்கு வக்கில்லை எண்ணை வார்க்க எதுவுமில்லை நுளம்புக்கு எங்கே கொயில் வாங்குவது....? மனித உரிமை மங்கினாலும் நுளம்பின் உயிருக்கு உரிமையுண்டு அதுதான் அகதி முகாம்கள்...! இருபத்தோரம் நூற்றாண்டிண் எங்கள் யாவருக்கும் புகலிடம் இதுதானா.........?
-
- 8 replies
- 1.3k views
-
-
வர்ணத்தின் நிறம் -சேயோன் யாழ்வேந்தன் முதலில் நிறத்தில் வர்ணம் தெரிகிறதாவெனத் தேடுகிறோம் நெற்றியில் தெரியவில்லையெனில் சட்டைக்குள் தெரியலாம் சில பெயர்களிலும் வர்ணம் பூசியிருக்கலாம் வார்த்தையிலும் சில நேரம் வர்ணத்தைத் தெரிந்துகொள்கிறோம் நான்கு மூலைகளில் மஞ்சள் தடவிய திருமண அழைப்பிதழ்களில் முந்தைய தலைமுறையின் வால்களில் வர்ணங்கள் தெரிகின்றன சிவப்பு பச்சை நீலம் அடிப்படை வர்ணங்கள் மூன்றென்கிறது அறிவியல் நான்காவது கறுப்பாக இருக்கலாம்.
-
- 8 replies
- 897 views
-
-
அனுமதி யாழ்கவிகளே இந்தவெள்ளைரோஜாவின் சின்னமொட்டுக்கள் உங்கள்கவிதைப்பூக்களுடன் அனுமதியின்றி பூக்கலானது உலகெங்கும் மனித நேயங்கள் அழிந்து போனதால் பறிபோன உணர்வால் வலிகொண்ட இதயங்களின் கவிதைத் தோட்டத்தை நான் ரசித்திட்டதால் இங்கே அனுமதியின்றி பூவானேன் யுத்தத்தின் கொடுமைகள் தென்றலெங்கும் இரத்ததை வீசியதால் அதை சுவாசித்த இதயங்கள் கல்லாய் மாறியதால் பாசங்கள் எங்கே காணமல் போனதால் வலிகொண்டு இங்கே அனுமதியின்றி பூவானேன் அழிவுகளை ரசித்திடும் மனிதன் என் க ண்களில் அரக்கனாய் தோன்றியதால் வெறுந்திடும் உலகை மறந்திடும் நிமிடங்கள் இந்தகவிதைத் தோட்டத்தில் அனுமதியின்றி பூவானேன்
-
- 8 replies
- 1.4k views
-
-
இமைகள் இரண்டின் இரக்கமற்ற பிரிதலில் முட்டாள் விழிகள் முரணாய் ரசித்தன கணநேரம் கூட கதறி அழவில்லை கனத்துப் போன கண்ணிமை இரண்டும் மெதுவாய் வீசிய மெல்லிய தென்றலில் வளியில் மிதந்து விழியில் விழுந்தன தூசித் துகள்கள் விழுந்து உருண்ட தூசித் துகள்களில் கலங்கித் துடித்தன கரிய விழிகள் கலங்கித் துடித்த கரிய விழிகளை இதமாய் வருடி இழுத்து அணைத்தன இமைகளிரண்டும் இமைகள் இரண்டின் இதமான தழுவலில் கடைவிழியோரம் கண்ணீர் துளிகள் புரிதலற்ற நேசத்தின் எரிந்துப…
-
- 8 replies
- 1.7k views
-
-
மறந்து விட்டாயா.........? கண்களால் கைது செய்து காதல் விதை விதைத்தவளே... ஏழேழு ஜென்மமும் உன்னோடுதான் என்றாயே.... இன்பத்திலும் துன்பத்திலும் என்னோடு உறவாடியவளே.... காலம் மாறினாலும் - என்றும் மாறாதது நம் - காதல் என்றாயே......! மொத்தத்தில் நீ இன்றி நான் இல்லை என்றாயே இது அத்தனையும் பொய்யாக்கிவிட்டு - நீ மட்டும் ஏன் என்னை மறந்து பிரிந்து சென்றாய் - இதுதான் உன் முதல் ஜென்ம பந்தமா.........! முகவரி தெரியாத காதலனாய் உன் முகம் காணாத ஏக்கத்தில் - ஊன் இன்றி உறக்கம் இன்றி - உயிரற்ற நிலையில் உருகிப் போய் கிடக்கின்றேன்......! கடைசியாக என்றாவது -என் மரணச் செய்தியை கேட்டால் ஒரு துளி கண்ணீராவது விடு - அதுவே நம் காதலுக்கு -…
-
- 8 replies
- 1.7k views
-
-
அணு அணுவாய் காதல் கவிதை காதல் என்பது இருபால் ... கவர்ச்சியல்ல - உயிரின் உன்னத உணர்வு ....!!! @@@ காதல் இல்லாத இதயம் ... துடித்தால் என்ன ...? துடிக்காமல் விட்டால் என்ன ..? @@@ திருமணமாகாமல் இறந்து விடலாம் ... காதல் செய்யாமல் இறந்து விடாதீர்கள் .....!!! @@@ எனக்கு காதலே பிடிக்காது என்பவர்கள் ... காதலை பயத்தோடு பார்ப்பவர்கள் ....!!! @@@ எந்த நேரமும் இன்பமாய் ஆசைப்பட்டால் எந்த நேரமும் காதல் செய் ...!!!
-
- 8 replies
- 4.1k views
-
-
''தூக்கு தமிழா துவக்கு...'' தூக்கடா தமிழா துவக்கு.... துட்டர் படையதை தாக்கு.... எம் மண்ணில் நாங்கள் ஆழனும்.... தமிழீழம் அதிலே காணணும்... சுதந்திரம் எமக்காய் வாழனும்... நாம் சுததந்திர நாட்டில வாழனும்... அடிமைகள் வறுமைகள் ஒழியனும்.... அவலங்கள் அதனூடே களையனும்... எம் தமிPழ் ஈழத்தை பார்கனும்... உலகே எம்மை கண்டு வியக்கனும்.... அவை யாவும் இன்றது நடக்கனும்.... அதற்காய் நீயது தூக்கு... தமிழா நீ தான் துவக்கு.... வன்னி மைந்தன்- வன்னி மைந்தன்-
-
- 8 replies
- 1.4k views
-
-
அம்மா முகம் தெரியாது அகரவரியும் தெரியாது ஆண்டவனும் கைவிட்ட அநாதைகளாய் தமிழர் நாம் அகதிமுகாம்களிலே வாடுகிறோம்.. குளிப்பதற்குக் கூட கும்பலாய் தான் போகவேணும் குடிதண்ணீர் பெறுவதற்கும் குழந்தை முதல் குமரி வரை குத்துக்கல்லாய் நிக்கவேணும் கட்டிக்கொள்ள மாற்றுச்சேலையில்லை காலுக்கொரு செருப்புமில்லை கழிவறைக்குப் போவதற்கும் காவலுக்குச் சிங்கள நாய்கள் ரண்டு கன்னியரின் கற்பு எல்லாம் காடையரால் சூறையாட காட்டிக்கொடுக்கும் நாய்களும் கண்டபடி குதறிவிட கண்ணிரண்டால் பார்த்தும் கூட காதிரண்டால் கேட்டும் கூட கன்னியவள் கற்பை காப்பாற்ற முடியவில்லை எம்மால் நாலுசுவருக்குள் நடப்பதெல்லாம் நடுவெளியில் நடக்குதைய்யா தட்டிக்கேட்க யாருமில்லை …
-
- 8 replies
- 1.5k views
-