கவிதைப் பூங்காடு
கவிதைகள் | பாடல் வரிகள்
கவிதைப் பூங்காடு பகுதியில் கள உறுப்பினரல்லாதோரின் கவிதைகள், கவிதை மொழியாக்கம், உலகக் கவிதை, பாடல் வரிகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள உறுப்பினர்கள் அல்லாதவர்களின் கவிதைகள், கவிதை மொழியாக்கங்கள், பாடல் வரிகள் போன்றன மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
ஈழத்தை சேர்ந்த, பூர்வீகமாகக் கொண்டவர்களின் படைப்புக்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படவேண்டும். ஏனைய கவிதைகள் தரமான கவிதைகளை அறிமுகம் செய்யும் நோக்கில் இலக்கிய மின் இதழ்களில் இருந்து மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
5134 topics in this forum
-
கொற்றவைத்தமிழே! நற்றுணை பொங்கு! என்னரும் மொழியே! எழில் நிறை கிளியே! புன்னகை அழகே! பொதிகையின் அரசே! விண்ணவர் தேவன் விரும்பும் தமிழே! நின்னடி பணிந்தேன்... தாயே!... என்னுளம் நுழைக! கங்குல் கரைய, அதிகாலை வெளிக்க, செங்கதிர் வீசும் சூரியன் சிரிக்க, தங்களர் வலுவில் தமிழ்மண் துளிர்க்க தாம் தீம் தோமென தமிழே பொங்கு! எங்கனும் தமிழின் ஓசை சிறக்க, ஏதிலி எனும் பேர் காற்றினில் பறக்க, வங்கப் பரப்பதில் வரிப்புலி சிரிக்க வண்தமிழ்கொடியே! வனப்புடன் பொங்கு! மங்கல ஒலியில் மண்மகள் குளிர, சிங்களச் சேனைகள் செருக்களம் சரிய, அங்கையற்கண்ணிகள் அரியணை செய்ய அன்னைத் தமிழே! அமிழ்தெனப் பொங்கு! வான் புலிச் சிறகுகள் வல்லமை வகுக்க, தேன்கவிராயர்கள் தீந…
-
- 10 replies
- 1.3k views
-
-
வாரா வாரம்... திரை கூர்ந்து விழிப்புலன் கூர்மையாக்கி செவிப்புலன் நேர்மையாக்கி தெளிவாய் பார்க்கிறேன் கேட்கிறேன்.... ராசி பலனில் பகவான்கள் பலர். என்னோட அதிபதி.. குருபகவான் கூட கன்னிப் பெண்கள் மேல தான் கண்ணோட... கருசணையாய் இருக்கிறார். காளை எனக்கு மாதம்.. வருடம் பல... காத்திருந்தும் பலனில்லை. பகவான்... கிருபையும் எனக்கில்லை..! சாத்திரியின் கடைக்கண் பார்வையிலும் நானில்லை..! காளை என்னை விளித்து.. பலன் சொல்லவும் யாருமில்லை..! இருந்தும்.. பூமிப்பந்தில் நாம் நிமிர்ந்து நிற்கிறேன்.. சுய தேடலும் சுய உழைப்புமே என் வாழ்க்கை என்பதால்..! எல்லாம் நான்.. நெஞ்சில் இரண்டு சிரட்டை இன்றி பிறந்ததன் பலன்..!
-
- 6 replies
- 946 views
-
-
நள்ளிரவு கடக்கும் நேரம் "உறங்கப் போகிறேன்" என்கிறாய் குறுந்தகவல் வழியாக..! "கனவில் ஒரு நடை வந்து விட்டுப் போ..!" என்கிறேன். நிஜத்திற்கு ஆசைப்படும் நீயோ கனவில் வர மறுத்து சிணுங்குகிறாய்..! மயிலிறகால் வருடும் உன் நினைவுகளின் கூட்டம் மலையாய் கனக்கிறது..! நீ வந்து சேரும் வேளை மலைக்கும் நினைவுகள் மேகக்கூட்டமாய் மிதக்கிறது..! புயல் கடக்கும் போது பெய்யும் பெருமழையைப் போல தென்றல் தீண்டும் வேளை பொழிகிறது காதல் மழை..! ஆண் பெண் என்னும் வண்ணங்கள் கரைகிறது. அன்பை உடுத்திக் கொள்கின்றன நிர்வாணங்கள்..! ஆதாமுக்கும் ஏவாளுக்கும் மறுக்கப்பட்ட கனியை மன்மதன் திருடிச் செல்கின்றான்..! காதலிக்கப் படாமல் தவறிழைத்தவர்கள் தண்டிக்கப்படுகிறார்கள்…
-
- 0 replies
- 412 views
-
-
கடலின் கரையில் மணிலில் மாளிகை கட்டிட விரும்புகின்றேன் கதிரின் பிழம்பைக் கையால் தழுவிடக் காதல் கொள்ளுகின்றேன் உடலின் கூடுவிட்டு உயிரால் ஓடி உலவிட விழைகின்றேன் ஊருணி நீர்மேல் ஓவியம் தீட்டும் உரத்தை வேண்டுகின்றேன். வெண்முகிலுக்குள் படுத்துக் கிடக்க, வேட்கை கொள்ளுகிறேன். நன்றி கவிஞர் மீரா
-
- 1 reply
- 603 views
-
-
நீ என்னை நேசித்த போது நான் அறிந்து கொள்ளாதது ஒன்று இன்று நீ என் கூட இல்லாத போது புரிகின்றது ...நீ என்னக்குள் உயிராய் இருந்தது !!!! பார்த்த முகம் தனில் உன் கண் என்னை விட்டு பிரிந்தாலும் பழகிய என் இதய நெஞ்சை விட்டு நீ பிரிய வில்லை !!!! உன் அன்புக்கு நான் அடிமை ஆனேன் ..உன் சின்ன சின்ன கோபம் என்னை எளிமை ஆக்கின என் வாழ்வில் சிறு அர்த்தமுடன் .. இன்று நான் அதே நிழல்களுடன் !!!! உலகத்தின் கண்களில் உன் உருவங்கள் மறைந்தாலும் எனில் ஒன்றான உன் உருவம் மறையாது..!!!! …
-
- 1 reply
- 515 views
-
-
அழக்கூட முடியவில்லை அடைத்துப் போகிறது நெஞ்சு! உள்ளத்தில் உறைந்தவளே றிசானா..! உன் மரணச் செய்தி இன்னும் மரணித்துப் போகவில்லை எங்களை விட்டும்! சுவனத்துக் குயிலே! உன் விடுதலைக்காய் எத்தனை உள்ளங்கள் இரவு பகல் அழுதன தெரியுமா..? எல்லாம் முடிந்து விட்டது. இறைவன் அழைத்துக் கொண்டான் உன்னை! என்று நம்புகிறோம் ஏற்பாட்டை ஏற்றுக் கொள்கிறோம். றிசானா! செல்லமாய் விளையாடும் சின்ன வயதில் சிறை சென்ற வண்ண மொட்டு நீ.. அதைக்கூடத் தாங்காமல் உன்பெற்றோர் தீயில் விழுந்த புளுவாய் தீய்ந்து போனதை நாம் அறிவோம். இப்போது இறந்துபோனதை எப்படி ஏற்றுக் கொள்ளப் போகிறார்கள்..! உன் மரணச் செய்தி கேட்டவுடன் தாய் மொழிந்த வார்த்தைகள் 'எண்ட மகள மௌத்தாக்கிட்டாங்களா..?' இன்னும் …
-
- 3 replies
- 605 views
-
-
அடி முடி தேடினாலும் அகராதியை புரட்டினாலும் முழுமையான அர்த்தம் அறிய முடியாத உயிர்ச் சித்திரம். அம்மா!!! 2008ம் ஆண்டு அன்னையர்நாளின் போது தமிழ்க் காற்று வானொலியூடாக ஒலிபரப்பப்பட்டது. 2010 அன்னையர் நாளின்போது லங்காசிறீ இணையத்தளமூடாகப் பிரசுரிக்கப்பட்ட கவிதை. http://inuvaijurmayu...rch/label/கவிதை http://www.poems.lan...567&pidp=202577
-
- 22 replies
- 1.5k views
-
-
பெண்ணிற்கு இலக்கணம் வகுத்தவன் அழுது கொண்டிருக்கிறான் ! பெண்ணையே தெய்வமென போற்றியவன் துடித்துக் கொண்டிருக்கிறான் ! பெண்ணையும் அவளின் அங்கங்களையும் விழி தராசுகளில் எடைபோட்டு களவாடப் பார்க்கும் கள்வர்களின் கைகளில் எப்போது தீப்பிடிக்கும்? நடந்தால் சிரித்தால் குனிந்து எதையாவது எடுத்தால் கூட போக உணவு கிட்டிய மகிழ்ச்சியில் ஓர் ஆணினம். இந்தியப் பெண்கள் அறிவில் - அழகில் வல்லவர்கள் தாம்! ஆனால்... நெறிதவறா சிற்பங்கள்! ஒவ்வொரு பெற்றோரும் பெண்ணைப் பிரசவித்து கூடவே ஒரு நெருப்பு வளையத்தையும் இட்டே வளர்க்கின்றனர்... பெண்ணினம் அடிமை என்பது பழையது ! பெண்ணினம் போர் வாள் என்பது புதியது ! ஓர் ஆணின் வாழ்வை விடவும் பெண்…
-
- 0 replies
- 343 views
-
-
மழை பெய்தது வயல் நிறைந்தது உயர்த்தி கட்டிய வரப்பில் நிறைந்து வந்தது வெள்ளம் நிறைந்ததால் நிமிர்ந்தது நிறை குலை தள்ளிய நிறைந்த நெற்கதிர் விளைந்தது விண்ணுயர்ந்து விளைவித்தவன் விவசாயி உழுது மறுத்துளுது உயர் விதை தேடி உண்மை உழைப்பை குருதியை உருக்கி வியர்வையாய் கொட்டி வான் பார்த்த பூமியில் தான் பார்த்து ஆய்ந்து நாற்று நடவு நட்டு அங்கெ இங்கே கடன வாங்கி அதிகமும் இல்லாமல் குறைச்சலும் இல்லாமல் அளவாய் வரப்பு வெட்டி அன்பான குழந்தைக்கு பால் புகட்டுவது போல் நன்றாய் நீர் விட்டு அந்த மருந்து இந்த உரம் என்று இன்னும் கடன் வாங்கி உழைப்பை போட…
-
- 2 replies
- 4.8k views
-
-
Up.. Down குவாக்சுகளின் கலவையில் குவா குவா என்றே பிறந்திட்ட இரட்டைப் பிறவிகள் புரோத்தனும்.. நியூற்றனும்..! அண்டை அயலில் அலைந்து திரிந்த... லெப்ரோன்கள் மீது கொண்ட காதலில் கலவி கொண்டே தந்தன.. அணுக் குழந்தைகள். காபனின் கறுப்பில் கவர்ந்திட்ட ஐதரசனும் காந்தர்வமாய் கலந்திட்ட ஒக்சிசனும்.. இடையில்.. நைசா நுழைந்திட்ட நைதரசனின் நாட்டமும் கூடவே.. பொஸ்பரஸின் கூட்டும் கூடிக் கண்ட விளைவே டீ என் ஏ...! டீ என் ஏ சுருளிச் சுற்றில் சிக்கிக் கொண்ட காதல் எஸ் எம் எஸ் ஸுக்கள் அமினோ அமிலங்களாய் வாசிக்கப்பட அங்கு பிறந்த கவர்ச்சிச் சண்டையில் நடந்த கலவியில்.. புரதங்கள் பிறப்பெடுக்க கருக்கொண்டது உயிரின் உருவம்..! அழகும் வர்ணமும் அறிவும் திறனும் கூட…
-
- 29 replies
- 2.5k views
-
-
-
- 0 replies
- 1.3k views
-
-
விடை ஒன்று கொடுத்து புதியதை வரவேற்று விண்ணுக்கும் மண்ணுக்கும் துள்ளினர் ஒருபால் வித விதமாக, விழிகளை உயத்த வைத்த விலை கொண்ட ஆடையர் ஒருபால் கடிகார முள்ளை கன நேரமுற்று காத்திருந்து கையிலிருந்த வெடிதனை வெடித்தோர் ஒருபால் பெடிகளாய் நின்று கும்மி குத்தி பெண்கள் பக்கம் திரும்பி இளித்தவர் ஒருபால் கைகள் வலிக்க வலிக்க கஷ்டம் பார்க்காமல் கனகதியில் SMS அனுப்பினர் ஒருபால் லட்டு ஜிலேபி என்றி பட்சணங்கள் உண்டு பக்கத்துக்கு வீட்டுக்கு தந்து பறை சாற்றியோர் ஒருபால் பீர் ஒரு கையில் பிகர் ஒரு கையில் என்று பின்விளைவுகள் அறியாது சுத்தினர் ஒருபால். தேரடி வீதியிலும் திரும்பிய திசைகளிலும் சந்தோசம் கொப்பளிக்க இருந்தனர் இவர்கள் ஊரது…
-
- 4 replies
- 707 views
-
-
பாய் விரித்து படகெடுத்து பாய்ந்து கடல் ஆண்டவர் பார் முழுதும் தமிழர் என்று போய்த் திரும்பி மீண்டவர் தாய் மடியில் மீண்டெழுந்து நாங்கள் அன்று ஆளுவோம் தாவும் கடல் புலிகளினால் நாளை கடல் ஆளுவோம் ஏறி வரும் பகை யாவும் இனி இல்லை எனும் நிலை ஆகும் மாறி அடித்திடும் காற்று கடல் மீதினில் புலிக்கொடி ஏற்று - நன்றி முகநூல்
-
- 0 replies
- 1.2k views
-
-
அழகாகச் செதுக்கிய சிற்பங்களை உடைத்தெறிந்து ஆனந்தங்கொள்ளும் அணங்குகளிற்கு... தெறித்துக் கிடக்கும் சிற்பப் பிணங்களின் ஊமை அழுகுரல்கள் கேட்பதில்லை! சிற்பத்தை சீரெடுத்த உளிகளின் வலிகளும்... கலைஞனின் கதறல்களும்... எப்பொழுதும் புரிவதில்லை! உடைந்துபோன சிற்பச் சிதறல்களை ஒவ்வொன்றாய்ப் பொறுக்கியெடுத்து, ஒட்டவைத்து மீண்டும் உயிர்கொடுக்கும் ஆசையுடன், காணாமற்போன ஒருதுண்டை... இன்னும் தேடிக்கொண்டிருக்கின்றான் குருட்டுச் சிற்பி! கூர்மையான விழிகளுடன் காத்துக்கிடக்கின்றன உளிகள்... புதிதாய் ஒரு சிற்பம் வடிக்க...!
-
- 3 replies
- 534 views
-
-
நான் புல்லாங்குழலில் இருந்து கசியும் ஒரு மெல்லிய இசையாக உன்னை ரசிக்கிறேன் நீ புல்லாங்குழலுள் அடைபட்டு துளைகளூடு வேளியேறும் காற்றாக்கி என்னை வதைக்கிறாய் நான் பூவிலிருந்து ஒழுகும் பரவச வாசனையாக உன்னை நுகர்கிறேன் நீ பூக்களை தாங்கி நிற்கும் ஊமைக் காம்புகளாக்கி என்னை மறந்துபோகிறாய் நான் புத்தகங்களுக்கு நடுவே பொத்திவைத்த மயிலிறகாக உன்னை சேகரிக்கிறேன்.... நீ புத்தகங்களுக்கு உள்ளே கிழிந்துபோன பக்கங்களாக்கி என்னை புரட்டிப்போகிறாய்... நான் எல்லாவற்றிலும் உன்னை அழகாக ரசித்துக்கொள்கிறேன் நீ அனைத்திலும் என்னை அடிமையாக நினைத்துக்கொள்கிறாய்.. நான் ஓயாத உன் கவனிப்பின்மைகளுக்கு நடுவே கொடுக்க நிறைய அன்புடன் காத்திருக்கிறேன் நீ பேசாது உன் வனமங்களுடன் எடுக்க ஒரு புன்னகையைகூடதர நேர…
-
- 13 replies
- 1.2k views
-
-
ஆழிக் கடலடி ஆட்டம் கண்டதால் ஆழப் பெருங்கடல் மேலெழுந்தது அதிர்வின்றி அமைதியாக ஆழ்கடல் அசைந்து வந்து ஓசையற்று ஒட்டுமொத்தமாய் ஒன்றுமிலாது கொண்டு போனது அன்னை மடியென ஆடிக் கழித்தவர் அலைகடலோடு கூடிக் கழித்தவர் ஆவலோடு உனைப் பார்த்திருந்தவர் அத்தனை போரையும் அரை நொடியுள் அள்ளிக் கொண்டு சென்று விட்டாய் அந்த நொடிவரை ஆயிரமாய் அகம் முழுதும் ஆசைகளோடு அடுத்தநாளின் கனவுகளோடு ஆடிப் பாடிக் களித்திருந்தார் அனைவர் மீதும் கோபமென்ன அடித்துக்கொண்டு சென்றுவிட்டாய் பத்து மாதம் சுமந்த பிள்ளையை பள்ளிக்கனுப்பிய பாலகனை கட்டிய கணவனை காதலனை அத்தனை உறவையும் அக்கணமே அகதியாக்கிச் சென்றுவிட்டாய் எத்தனை ஆண்டுகள் வாழ்ந்த வீடுகள் ஏகாந்தமாய்த் திரிந்த வீதிகள் எழில் பொங்கும் எங்களின் ஊர்கள் …
-
- 14 replies
- 803 views
-
-
புத்தாண்டே நீ புதிதாய் வருகின்றாய் அத்தனை பேரும் ஆவலுடன் உனக்காய் அகமகிழ்ந்து எங்கும் காத்திருக்க எத்துனையும் அலுக்காது எப்படி நீயும் எழில் பொங்க வருகின்றாய் சாதிமத பேதமின்றி சண்டைகள் ஏதுமின்றி சமத்துவத்தோடு நீயும் சரிநிகராக சகலருக்குமாக எப்படி வருகின்றாய் புத்தாண்டிலாவது புதுவழி பிறக்குமென நம்பிக்கை கொண்டோரின் கனவை நனவாக்க நாடுகள் தோறும் நீ நளினத்துடன் வருகின்றாய் எத்துன்பம் வந்தாலும் அத்தனையும் களைய ஆவலுடன் உன்னை அத்தனை பேர் பார்த்திருக்க ஏற்றமுடன் நீயும் எப்படியோ வருகின்றாய் ஆனாலும் நாமும்தான் ஆசையுடன் உன்னை ஆண்டாண்டாய்ப் பார்த்திருந்தோம் ஆறுதல் தேடி ஊரூராய் அலைந்திட்டோம் ஆழக்கடல் கடந்து அகதியாய் அலைந்திட்டோம் ஊரெல்லாம் கூடி ஒப்பாரி வைத்த…
-
- 10 replies
- 750 views
-
-
சாள்ஸ் என்ற பெறுமதி….! (எழுதியவர் - நிக்சன்) சாள்ஸ் என்ற பெறுமதி….! சாள்ஸ் என்ற சரித்திர மனிதன் சாவின் விளிம்பிலும் சாதனை படைத்த சத்தியன்…. சிங்களத்தின் அழிவில் தான் ஆக்கமுண்டென்ற அறத்தை நம்பிய தோழன்….! ஓயாமல் உழைத்த ஒற்றைச்செடி நூறாய் ஆயிரமாய் சூரியன்களைச் செதுக்கிய சிற்பி….! தலைவர் தளபதிகள் எவருமவன் முன்னால் பொதுவேதான் பேதமில்லை…! நேருக்குநேர் விவாதம் செய்திடும் ஒரேயொரு வீரதளபதி அவன் என் தோழன்; சாள்ஸ்….! கோபத்திலும் சிரித்திடும் இனியன் கொடிய பகைமுன் வீரத்திலும் அவனை வென்ற பேரொன்றில்லை…! தலைவன் வழி அது எங்கள் சாள்ஸ்சின் விழி வரலாறு படைத்த சாதனைப்புலி….! கோபத்திலும் சிரித்திடும் இனியன் கொழும்பின் அழிவை இவனே கொள்கையாய் மாற்…
-
- 17 replies
- 881 views
-
-
முட்டுவதற்கு வளர்க்கப்பட்ட ஆடு வெட்டுண்டு கிடக்கிறது மற்றைய ஆடுகள் கதறுகின்றன கத்திக்கு சொந்தக்காரன் யார் என்று பதறுகின்றன முன்பு ஒரு நாள்.. ஆடு கட்டுக்குள் அடங்க மறுத்தது யாருக்கும் சொல்லாமல் கயிறு அறுத்தது ஆயினும் பின்பு ஆடு திருந்தியது தானாகவே வீடு திரும்பியது காலங்கள் ஓடியது.. ஓநாய்களை முட்டப் பழகிய ஆடு புதிய களத்திற்கு ஒரு நாள் வந்தது அங்கே ஓநாய்கள் நிற்கவில்லை உடன்பிறந்த ஆடுகள்தான் நின்றிருந்தன முட்டுவதில் பழைய வேகம் இல்லை முட்டுகிறதா? ஒட்டுகிறதா? எசமானர்களுக்கு சந்தேகம் வந்தது உண்மைதான். இன்றைக்கு ஆடு வெட்டப்பட்டுக் கிடக்கிறது மற்றைய ஆடுகள் எசமானர்கள் பின்னே நடக்கின்றன ஓநாய்களின் பற்தடம் தேடித் திரிகின்றன ஓநாய்க…
-
- 8 replies
- 949 views
-
-
கடப்பு வைச்சு காத்திருந்த வேளை - மர்மமாய் கழுத்திறுகி இறந்தது ஓர் ஆடு. கள்வரும் அது கண்டு.. கட்டியே இழுத்துச் சென்றார். கண்ணியமாய் நீதி உண்மை விளம்ப முன்..! கள்ளுக் கடையருகில் கள்ளக் கடை விரிச்சு கள்ளாடும் ஆனது பங்கிறைச்சி. கள்ளின் வெறியதில் கழிவு விலை கேட்ட இடத்தில் கன்னம் பறக்க கதறி அழ கட்டிப்புரண்டு.. கண்டபடி நடந்தது அடிபாடு. களத்திலும் அது கதை.. கட்டுரை என்றாக கடைசியில் கன்னம் பழுத்த கூட்டம் கழுதைக் கத்தல் கத்துது கதைகள் பல விடுகுது... கள்ளாட்டுக்கும்... யாரும் உரிமை கோரவில்லை.. கறுத்தாடு அதுவும் கோரை தின்றே.. "கேர்ணல்" ஆனது என்று. களவெடுத்தது நாமும் அல்ல கள்வரும் அல்ல - நாம் கண்ணியமானவரே என்று. கடைக்கண் விழி திறந்து கவனமாய் சிரிக்…
-
- 17 replies
- 1.1k views
-
-
கனவினைக் கொடுத்து தூக்கத்தைக் கெடுத்து பாதியில் செல்வாள் பாவை! பாதையைத் தொலைத்து பேதையை நினைத்து வீதியில் விழுவான் கோழை! சேலைகள் நினைத்தால்... சோலைகள் காய்ந்து பாலைகள் தோன்றும் வேலைகள் செய்திடும்! காலைகள் இருண்டு காரிருள் படிந்து வாழ்க்கையும் உருண்டிடும் கவனம்!!! ***எழுத்துப்பிழை திருத்தப்பட்டுள்ளது***
-
- 20 replies
- 1.7k views
-
-
காற்றில் விதை தூவி வெந்நீர் தனை ஊற்றி பஞ்சு வேலியிட்டு நெஞ்சில் உரமிட்டு பார்த்து வளர்க்காது உயிர் சேர்த்து வளர்த்த பயிராம் - காதல் இதில் மன்னவரும் மகுடமிழக்க விண்ணவரும் வீண் பகை சுமக்க பின்னவராய் நாம் மட்டும் என்ன விதி விலக்கோ ? மனக்காதல் மணக்காததால் மணக்காது போகும் பெண்ணை கண்கள் இமைக்காமல் கண்ட நிலைக்காதல் நினைக்காது நீக்கிடுமோ ? நெஞ்சு பொறுக்குதில்லையே நம் உயிரென நினைந்தவள் உதறிடும்போது.... புற்றரவு தீண்டிடினும் கொடும் நஞ்சு சுவைத்திடினும் மனம் பெற்றிடுமோ உற்ற உன்னை இழந்த வலி ? இறக்கும் வரை இவ்வலியை இழி மரணமும் கொணர்வதுண்டோ? இறந்தாயினும் ஓர் வழியில் இரு மனமும் புணர்வதுண்டோ? என்னை இறத்து உன்னை மறக்க உன் நினைவை மண் புதைக்க கோழை போல் இறக்கமாட்டேன்... …
-
- 0 replies
- 537 views
-
-
ஆண்டில நாளு 365 அதில நாங்க வைக்கிற பார்ட்டி 265 அதில "பாட்டிகளுக்கு".. "பார்டிகளுக்கு" வைக்கிற பார்ட்டி 165 அதில பேர்த்டே பார்ட்டி 125 அதில வெல்கம் பார்ட்டி 85 அதில உடான்சு பார்ட்டி 65 அதில வெடிங் பார்ட்டி 55 அதில சாமத்தியவீட்டுப் பார்ட்டி 35 அதில எக்ஸாம் பார்ட்டி 25 அதில ரிஸல்ட் டே பார்ட்டி 15 அப்புறம்.. கிரயுவேஷன் பார்ட்டி ஒரு மூணு.. அவவுக்கு மூட் அவுட்டானா அதுக்கும் ஒரு பார்ட்டி.. அட அழுகிற குழந்தையை அரவணைக்க அதுக்கும் ஒரு நாலு பார்ட்டி - அப்படியே ஆண்டு முழுக்க பார்ட்டி அதில கோலில வைக்கிற பார்ட்டி முக்கால்வாசி அருகில கோயில்ல வைக்கிற பார்ட்டி அரைவாசி அப்புறம் வீட்டில வைக்கிற பார்ட்டி கால்வாசி.. அங்கின ரெஸ்ரோரண்டு வழிய வைக்கிற பார்ட்டி அரைக்கால்வாசி…
-
- 8 replies
- 882 views
-
-
இறைவன் எங்குள்ளான் ? சுதியுடன் சுலோகங்கள் உச்சரித்து, துதி பாடி, தோத்திரம் பாடி, கையால் ஜெபமாலை உருட்டி உத்திராட்சக் கொட்டை எண்ணுவதை நிறுத்தி விடு! கோயில் தனி மூலையில், கதவுகளை மூடி, கண்களை மூடிக் கொண்டு காரிருளில் நீ யாரைப் பூஜிக்கின்றாய்? கண்களைத் திறந்துபார், உன் இறைவன் முன்னில்லை என்பதை! மெய்வருந்தி இறுகிப் போன வயலை உழவன் எங்கே உழுது கொண்டு இருக்கிறானோ, வேர்வை சிந்தி நடைபாதை போடுபவன் எங்கே கல்லுடைத்து வருகிறானோ அங்கே உள்ளான் இறைவன்! வெட்ட வெயிலிலும் கொட்டும் மழையிலும் தூசி படிந்த ஆடையுடன், உழைப்பாளி உடன் குடியுள்ளான் இறைவன்! புனிதமான உன் காவி மேலங்கி உடையை எறிந்து விட்டு புழுதி நிரம்பிய பூமிக்கு இறங்…
-
- 1 reply
- 539 views
-
-
மயங்கொலிச் சொற்கள் என்பன தமிழில் கிட்டத்தட்ட ஒரே வடிவிலான எழுத்துருக்களை கொண்டவைகளாகவும், முற்றிலும் வேறுபட்ட பொருள் கொண்டவைகளாகவும் காணப்படும். இவ்வாறான சொற்கள் ஒலிப்பின் போது நுண்ணிய வேறுபாடுகளை மட்டுமே கொண்டிருப்பதால் எது சரி, எது தவறு என மயங்க வைப்பவைகளாக இருக்கும். அதனாலேயே இவற்றை மயங்கொலிச் சொற்கள் என்றழைக்கப்படுகின்றன. நாம் அதிகமாக இந்த எழுத்துக்களில் தவறு செய்கிறோம். அவற்றை பற்றி ஒரு அறிதலை ஏற்படுத்தவே இந்தப் பதிவு. கவிதை எழுதுபவர்கள் இதனை கவனத்தில் கொண்டால் கவிதை இன்னும் சிறப்பாக இருக்கும். என்னுடைய ஒரு சிறிய முயற்சி தான் இந்தக் மயங்கோகொலி சொல் விளையாட்டு. கவிதை எனக் கொண்டாலும் சிறப்புதான் குழவியுடன் குலவியிருக்கும்போது குளவியோன்று கடியிலிருந்து கடிதாக வ…
-
- 11 replies
- 7.3k views
-