கவிதைப் பூங்காடு
கவிதைகள் | பாடல் வரிகள்
கவிதைப் பூங்காடு பகுதியில் கள உறுப்பினரல்லாதோரின் கவிதைகள், கவிதை மொழியாக்கம், உலகக் கவிதை, பாடல் வரிகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள உறுப்பினர்கள் அல்லாதவர்களின் கவிதைகள், கவிதை மொழியாக்கங்கள், பாடல் வரிகள் போன்றன மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
ஈழத்தை சேர்ந்த, பூர்வீகமாகக் கொண்டவர்களின் படைப்புக்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படவேண்டும். ஏனைய கவிதைகள் தரமான கவிதைகளை அறிமுகம் செய்யும் நோக்கில் இலக்கிய மின் இதழ்களில் இருந்து மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
5130 topics in this forum
-
என் இருப்பும், உன் இருப்பும் அவசியம் பருத்த கலசங்களும், பெருத்த தம்புராவுமே நட்பை நிலைப்படுத்தும் நிர்வாண நிலையென்றால் கரிக்கிறது கண்மணிகள். உறுத்தலின்றி தரித்த விசம்போல் ஒரு பேராற்றில் கலக்கும் துளிகளில் மாள்வது நட்பாகில்.... மானுடம் சிகிலமாகி, நாகரீக வெளிகளெல்லாம் நரகல் புவியாகி சீழ் பிடித்து மணக்கும். என்னிருப்பும், உன்னிருப்பும் அவசியம். நட்பென்ற உன்னதத்தின் மேன்மையைப் புரிய வைக்க நண்பா! என்னிருப்பும், உன்னிருப்பும் அவசியம்.
-
- 6 replies
- 1.9k views
-
-
டோங்குவும்... டெங்குவும்..! [size=1] அதென்ன டோங்கு [/size][size=1] அதென்ன டெங்கு [/size] [size=1] எல்லாம் அப்படித்தான் [/size][size=1] போக போக [/size][size=1] சரியாகி விடும்[/size] [size=1] வசன கவிதைகள் [/size][size=1] கவிதைகளாக [/size][size=1] மாற வில்லையா.? [/size] [size=1] அதைப் போன்றது [/size][size=1] தான் இதுவும். [/size] [size=1] ரூ நாற்பது [/size][size=1] ஆயிரம் அல்ல[/size] [size=1] அதற்கு மேல் [/size][size=1] இருந்தால் [/size][size=1] உனக்கு டெங்கு [/size] [size=1] ரூ நூறோ [/size][size=1] வெறும் ஆயிரமோ இருந்தால் [/size][size=1] உனக்கு டோங்கு தான் [/size] [size=1] என்று சொல்கிறார்கள் [/size][size=1] அரசு ஆய்வ…
-
- 0 replies
- 519 views
-
-
அப்பா எப்படி எப்படி எல்லாமோ தன் பாசம் உணர்த்துவாள் அம்மா ஒரேயொரு கைஅழுத்தத்தில் எல்லாமே உணர்த்துவார் அப்பா… முன்னால் சொன்னதில்லை பிறர் சொல்லித்தான் கேட்டிருக்கிறேன் என்னைப் பற்றி பெருமையாக அப்பா பேசிக்கொண்டிருந்ததை… அம்மா எத்தனையோ முறை திட்டினாலும் உறைத்ததில்லை உடனே உறைத்திருக்கிறது என்றேனும் அப்பா முகம் வாடும் போது உன் அப்பா எவ்வளவு உற்சாகமாக இருக்கிறார் தெரியுமா என என் நண்பர்கள் என்னிடமே சொல்லும் போதுதான் எனக்குத் தெரிந்தது எத்தனை பேருக்குக் கிடைக்காத தந்தை எனக்கு மட்டும் என… கேட்ட உடனே கொடுப்பதற்கு முடியாததால் தான் அப்பாவை அனுப்பி இருக்கிறாரோ கடவுள்..? சிறுவயதில் என் கை…
-
- 14 replies
- 6.3k views
-
-
1993 தைத்திங்கள் 16ம் நாள் இந்திய மத்திய அரசின் நயவஞ்சகச் சதிக்கு வங்கக்கடல் நடுவே தன்னை அர்ப்பணித்த கிட்டு மாமா உள்ளிட்ட வேங்கைகள் நினைவாக..! வெடியோசை எழுந்தது எங்கள் நெஞ்சோசை அழிந்தது களத்தோடு களமாடி கோட்டைக்குள் அடித்தெழுந்த அந்தப் புயலும் ஓய்ந்தது...! தங்க தமிழீழ வேங்கையது வங்கக் கடல் நடுவே சரிந்தது...! அசோகச் சக்கரத்தின் அகோரத் தாண்டவம் - எங்கள் மாமாவின் உடல் கிழித்தது...! ஆதிக்க வெறி பிடித்த அகிம்சா தேசமது அவன் ஆன்மா குடித்துக் குதூகலித்தது...! தமிழீழ அன்னையவள் கொடிதனைச் சுமந்தவன் ஆழி தன் அலையோடு மீண்டிட்டான் தமிழ் மண்ணை...! குரலோசை எழுந்தது - அது அவன் புகழோசை சொன்னது விடியலின் தாய் மகன் விடிவெள்ளியான கதை மு…
-
- 3 replies
- 2.5k views
-
-
கோத்தருக்கு ஒரு விருந்து ............. ஈனப்பிறவியே கோத்தபாய ....... தமிழ் ஈழ பெண்கள் உன் கூலிகளுக்கு விருந்தா .. நாக் கூசவில்லை உனக்கு ..... .சூடு சுரணை இருக்க உனக்கு ..... .மானமுள்ள தமிழ் பெண் கடலில் விழுந்து சாவளே தவிற உன் கூலிகளுக்கு முந்தானை விரிக்க மாடாள் .இருந்து பார் அண்ணர் பிரபா ,ஒரு பாடம்புகடுவார் அப்போது உன் வாய் கொழுப்பு அடங்கும் . .உலகெலாம் பறை சாற்றும் உன் ஈனத்தனத்தை உலகம் பார்த்து சிரிக்கிறது உன் வாயும் உன் நினைப்பும் ........ என் செய்வது உங்கள் ஆணவம் உலக நாடுகளின் ஆதரவு உங்களை இப்படி பேசவைக்கிறது தர்மம் ஒன்று இருந்தால் அது வாய் திறக்கும் அப்போது உன்னயும் உன் கூலிபடையையும் உன் ஜால்ராக்களையும் விழுங்…
-
- 2 replies
- 1.3k views
-
-
கருகும் பிணங்களிலே புத்தக் கடவுளே உந்தன் கரிய நிறம் தோன்றுதையே யுத்தக் கடவுளே பட்ட மரங்களிலே புத்தக் கடவுளே உந்தன் பச்சை நிறம் தோன்றுதையே யுத்தக் கடவுளே விதவையின் புடவையிலே புத்தக் கடவுளே உந்தன் வெள்ளை நிறம் தோன்றுதையே யுத்தக் கடவுளே சிந்தும் குருதியிலே புத்தக் கடவுளே உந்தன் சிவப்பு நிறம் தோன்றுதையே யுத்தக் கடவுளே குண்டின் வலியினிலே புத்தக் கடவுளே உன்னைத் தீண்டும் இன்பம் தோன்றுதையே யுத்தக் கடவுளே கதறும் ஒலியினிலே புத்தக் கடவுளே உந்தன் கீதம் இசைக்குதையே யுத்தக் கடவுளே அலறும் ஒலியினிலே புத்தக் கடவுளே உந்தன் அகிம்சை வழி தெரியுதையே யுத்தக் கடவுளே http://gkanthan.wordpress.com/index/budha
-
- 0 replies
- 893 views
-
-
-
முகம் தெரியாத நண்பனும் நாங்களும் “வணக்கம்” அங்கிருந்தொருவன் அருகிருப்பதுபோல் பேசுவான் தொலை தூர வாழ்வில் அதிகாலைப்பொழுதில் தினந்தோறும் வருவான். தாய்நாட்டு வாசனை தன் குரலாலே தெளிப்பான். முன்னைய நாட்களில்.. தனித்தேசக் கனவை தன்மான உணர்வை செயல் திறன் ஆற்றலை எங்களுக்குள் இன்னும் அதிகமாக்கியவன் இறுதி நாட்களில்.. முள்ளி வாய்க்கால் இப்போது என்ன சொல்லுதென்று வரி விடாமல் சொல்லுவான் நீர்க்குமிழி வாழ்வுக்குள்ளிருந்தபடி நிமிர்ந்து வந்து குரல் தருவான். எங்களைப்போல் முகம் தெரியா நண்பர்கள் அவனுக்கு அதிகம். அத்தனை பேரும் தேடுகின்றோம் அவனை. இப்போது நீண்ட நாட்களாய் காணவில்லை. அவனை? அவன் குரலை? இ…
-
- 8 replies
- 2.2k views
-
-
ஆகுதிகளுக்கு விளக்கெரிக்க... ஆலயங்களில் மணியொலிக்க ஆகுதிகளுக்கு விளக்கெரிக்க தாமாகவே கண்பனிக்க தரணியில் மீண்டுமோர் கார்த்திகை கார்த்திகை செல்வங்களான கண்மணிகளே மாவீரர்களே பார்தனில் தேடுகின்றோம் பாசங்களே உங்கள் கோவில் கோவிலதை உடைத்துப்பகை கோலவிழாக்கள் கொண்டாடினர் பாவியர்க்கு சந்தோசமாம் பாழாக்கி விட்டனராம் துயிலுமில்லங்களை துயிலுமில்லங்களைத் துடைத்தாலும் துடைபடுமோ உங்கள்நினைவு விழிகளில் வழிகின்றநீர் விபரத்தை விளம்பித்தான் நிற்காதோ நிற்கின்றவிக் கார்த்திகையில்நினைவெல்லாம் நீங்கள்தானே காற்றென வந்தவரே கனலென நின்ற கற்பூரங்களே கற்பூரங்களுக்கு விளக்குவைப்போம் கார்த்திகையில் விழாஎடுப்போம் தமிழராய் ஒன்றுபடுவோம் தரணியில் தமிழரசு அமைப்போம…
-
- 1 reply
- 676 views
-
-
என்றும் அவளை நினைத்திருந்தேன் அவள் வரா நாட்களில் படித்ததையே மறந்தேன் நான் அவளுடன் தான் படித்தேன்-ஆனால் நான் அவளைத்தான் படித்தேன். நான் அவளுடன் தான் சுற்றினன் -ஆனால் நான் அவளைத்தான் சுற்றினேன். அவளைக் கண்டதும் காதல் கொண்டேன் பதிலுக்கு அவள் காதலை அறிய காத்திருந்தேன் எல்லோருக்கும் காதலர் தினம் மகிழச்சியாக இருந்தது எனக்கோ சொல்ல முடியாத ஒரு நிலமை அது நடந்து இவ்வருட காதலர் தினத்துடன் நான்கு ஆண்டுகள் ஆகிண்றன ஆனாலும் நேற்று நடந்தவை போன்று ஒரு இனம் புரியாத உணர்வு வாழ்க காதல் வாழ்த்துக்கள் காதலர்களுக்கு......
-
- 9 replies
- 2.6k views
-
-
சிரி இனி நீ! ஒன்றல்ல..... இரண்டல்ல..... ஓராயிரமும் அல்ல.... இருபது ஆயிரங்களை நெருங்கும் வீரர்கள் இழப்பு! அத்தனையும் மொத்தமாய் வெறும் அறிக்கையில் எச்சரிக்கை - என்றாகுமோ..... தவித்தது நீயும் -நானும் தான்! தவறு தவறு! பெரும் நெருப்பின் முகம் எங்கள் பிதா மகன் பிரபா! அவர்-எப்போ என்ன நினைப்பார் என்று யாரறிவார்! அலை மூசி வீசினால் கரையில் நிற்கவே பயப்பிடுவான் - தமிழன் ஆழ்கடலில் போர் செய்யும் வீரம் கூட - எப்பிடி ஒரு தமிழிச்சி பெற்றாள்? தலைவா-எல்லாம் உன்னால்! அமைதி என்று பேசி நின்று அடிப்பவனுக்கு ஆயுதம் கையில் தந்து -அடிமையாய் கிடப்பவனில் பிழை பிடிக்கும் உலகம் ! திரும்பும் திசை எங்க…
-
- 4 replies
- 1.7k views
-
-
-
உன்னை நினைக்க மறந்த இரவொன்றில் நிலவின் துணை கொண்டு எழுதிய கவிதை இது தயவு செய்து வாசித்துவிடாதே உன் கண்ணீரை ஏந்தினால் என் கவிதை இறந்துவிடும் காலங்கள் கரைந்தாலும் கரை சேராத நதியாய் தேங்கியபடியே கிடக்கிறது என் காதல் உன்னால் காதல் எனும் வானத்தில் நாமிருவரும் பறந்து திரிந்த காலங்களை எண்ணியபடியே சிறகுகள் இன்றி தனிமரமாய் இன்று நான் என் காதல் உன்னை மட்டும் காதலிக்க கற்றுத்தரவில்லை உன்னைத் தவிர யாரையும் காதலிக்க கூடாது என்பதையும்தான் கற்றுத்தந்தது உன் இரவுகளின் தாலாட்டு எது என்பதை நானறியேன் ஆனால் என் ஒவ்வொரு விடியலின் ஓசையும் என் கவிக்குழந்தையின் அழுகுரல்தான் உனக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை நீ என்னோடு இருந்தபோது ஒவ்வொர…
-
- 6 replies
- 3.8k views
-
-
குறிப்பு இப்பாடலின் முதல் நான்கு வரிகளும் ஓர் கிறீஸ்தவ துதிப் பாடலிலிருந்து எடுக்கப்பட்டவை. உன் நாமம் சொல்லச் சொல்ல என்னுள்ளம் மகிழுமையா என் வாழ்வில் மெல்ல மெல்ல பேரின்பம் பெருகுமையா - உன் மாணிக்கத் தேரோடு காணிக்கை தந்தாலும் உனக்கது ஈடாகுமா? உலகமே வந்தாலும் உணர்வுகள் நின்றாலும் உனக்கது ஈடாகுமா (2) -உன் நாாம்.. தமிழ் மானம் தமிழ் வீரம் தமிழனுக்குத் தமிழீழம் என்றது நீதானையா தரணியிலே தமிழீழம் தலை நிமிர்ந்த வரலாறும் படைத்தது நீதானையா (2) தரை வழியாய் க்டல் வழியாய் வான் வழியாய் படை நடத்தி சரித் திரம் படைத்தாயையா தாரணியின் வரை படத்தில் தமிழீழ வரை படைத்தை நிலைக்க நீ வைத்தாயையா -உன் நாமம்... நீ கொண்ட மெளனத்தால் நித்திலமே இன்றெம்மை எள்ளி நகை யாடு தையா …
-
- 0 replies
- 676 views
-
-
அழகு ரோஜாவே!! ரோஜாச்செடி போலவேதான் உறவுகள் என்றெண்ணி உறவுகளை விலத்தியிருந்த என் வாழ்வில் நுழைந்தாய் முட்களற்று வாசனை நிரம்பிய அழகு ரோஜாவாக... உனை கண்டநாள்முதல் நான் ஆனந்தம்கொண்டு தினமும் அலங்கரித்து மனம் மிகமலர்ந்தேன் அன்பே ரோஜா உன்னை கையில்பற்றி துடியிடை தொட பலர் ஆசைபட சிலர் சொந்தமாக்கி முத்தமிட துடித்திட நான் மட்டும் உனை என் கண்களுக்குள் பொத்தி வைத்து அந்த முட்கள் நிரம்பிய ரோஜாப்பூவாகவே பார்த்தேன் ஏனெனில் நீயும் ஒருநாளில் உதிர்ந்துவிடுவாயோ என்று ஆனால்.. நீயோ உதிர்ந்திடாத ரோஜா என் வாழ்வின் ஆயுள்ரோஜா நிம்மதியை தந்திடும் ரோஜா அன்பான அழகான ரோஜா என்று நன்குணர்ந்தேன் நான் போலியான உறவு…
-
- 10 replies
- 3.6k views
-
-
கனவின் பொருளுரையீர். களிகொண்ட மனமொன்றுகூடும் அதிகாலையொன்றில் காட்டினிடையேகித் தனியனாய் நடைபயின்றேன். மனிதருடன் உரையாடல் சலித்து மரங்களுடன் உரையாடும் அவாவெழுந்து ஊர்தாண்டி உவகையுடன் தொலைந்தேன். பசுமைக்கும் பழுப்புக்கும் இடைப்பட்ட பருவமது பார்வைக்கு இதமழித்ததெனினும் காட்டினிலும் பதுங்கிக் கிடந்ததோர் ஊமைச்சோகம். எதிர்காலமெண்ணித் துயருற்றாற் போலான ஏக்கமெங்கும் மரங்களிலும் கிளைகளிலும் பற்றிப் படர்ந்தது போல் ஒரு தோற்றம். "ஆரூடக்காரனே, எம்மொழியைப் புரிந்தாய் நன்று. எம்முடனே நட்பிழைந்தாய் நன்று. வானமொழியிழக்கும் பருவமிது நம் வாழ்வும் என்னாகுமென்றெண்ணித் துயிலிழக்கும் காலமிது. தன்னந்தனியர்களாய் நின்றிருந்தோம் நாமிங்கு வந…
-
- 5 replies
- 1.7k views
-
-
[size=4]கடவுளுக்கு தான் என்னை பிடிக்கவில்லையென தினமும் கண்ணீர் துளிகளை தருகிறார் அந்த மரணத்திற்கு கூட என்னை பிடிக்காமல் போய் விட்டது இன்றுவரை என்னை தேடி வரவில்லை...[/size]
-
- 0 replies
- 504 views
-
-
[size=4]செங்கொடி சுமந்த செல்வங்கள் _இவர்கள் [/size] சங்கத்தமிழ் காத்த செம்மல்கள் [size=1][size=4]வெங்களம் புகுந்த வேங்கைகள் _இவர்கள் வீரத்தமிழின் மங்கள கீதங்கள்[/size][/size] தேகம் கரைத்த தெய்வங்கள் _எங்கள் [size=1][size=4]தேசம் சுமந்த விழுதுகள் யாகம் நடத்திய அக்கினிபிஞ்சுகள் _எங்கும் யாதுமாகி நிறைந்த தென்றல்கள்[/size][/size] முத்தமிழ் காத்த மூலவர்கள்_எம் [size=1][size=4]மூச்சாகி நிலைத்த காவலர்கள் [/size] [size=4]நித்திலம் எங்கும்ஒளிரும் தாரகைகள்_எம் [/size] [size=4]நினைவுகளில் வாழும் ஓவியங்கள். [/size][/size] மலர்சொரிந்து மணியோலித்து விழிகலங்கி [size=1][size=4]முகம்துடைத்து அகல் ஏற்றுவோம்[/size] [size=4]தளர்வகற்றி தடையுடைக்குமொர…
-
- 0 replies
- 430 views
-
-
பாலை நிலமாகி வரண்டுபோன என் வாழ்வில் ஒற்றைப் பூவாய் வந்து சோலையாகிப் போனவள் நீ விடியாத அந்த இரவுகளில் என் விசும்பல்களின் வலிகேட்டு உயிர்ப் பூவெடுத்து மலர்மாலை தொடுத்தவள் நீ
-
- 20 replies
- 1.7k views
-
-
நினைவுகள் வலியிருக்கும்-உன் நினைவுகள் என்னவோ.... அப்படியில்லை இதுதான்..... உண்மை காதலின் ...... அடையாளம்....!!! வாழ்க்கையில் .... எல்லாம் இழந்துவிட்டேன்..... உன் நினைவையும் இழந்தால்...... அனாதையாகி விடுவேன்...... ^^^ நினைவுகள் இல்லாத காதலே தோற்கும் ^^^ கவி நாட்டியரசர் இனியவன்
-
- 3 replies
- 967 views
-
-
1996 இல் சந்திரிக்காவின் வெற்றிக்கு பள்ளி சிறுமியவள் கிருசாந்தி என்ற பிள்ளையை சிங்கள நாய்களுக்கு பரிசளித்துக் கொன்றாயேடா செம்மணியில் அதைப் புதைத்தும் நின்றாயேடா அன்றும் சாட்சியாய் நீயே..!! வேலணையில் வைத்திய சேவகியை தாதியை புங்குடுதீவில் சாரதாம்பாள்,தர்மினியை உன் காலடியில் தின்று கொன்று புதைக்க கூட்டாகி நின்றாயேடா அங்கும் சாட்சியாய் நீயே..! நெடுந்தீவுப் பூமகள் லக்சினியை இளஞ்சிட்டை உன் சொந்தக் கூலியை ஏவித் தின்று கொன்றாயேடா நேற்றும் சாட்சியாய் நீயே..! இப்படி.. ஆயிரம் ஆயிரம் எம் தங்கைகளை அக்காக்களை கண்முன்னே சீரழிதவன் நீ.. அங்கெல்லாம்.. மெளனம் காத்து கொடூரருக்கு உதவி நின்றவன் நீ.. இசைப்பிரியா என்ற மகள் அழிவதை சிதைவதை வேடிக்கை பா…
-
- 2 replies
- 904 views
-
-
கடமையைச் செய்ய.... மேனி ஒடுங்கி மெல்லிய நடையொடு ஒரு கையிலே துணிப் பையொன்று மறு கையிலே நெய்ப் பந்தமொன்று திருநகரிலிருந்து கனகபுரம் நோக்கி அன்னையவர்கள் நடந்துகொண்டிருந்தாள்! இது அவனுக்காய் விளக்கேற்றும் பன்னிரெண்டாவது ஆண்டு விடுமுறை கிடைத்தால் ஓடி வருவான் அவனுக்காகவே சமைக்கத் தோன்றும் சேர்ந்து உண்டு மகிழ்வான் அவன் வெளிநாட்டில் இருந்து பணம் தருவார்கள் மனம் தருவது அவன் மட்டுமே குடிசையைக் கூட கோவிலாக்குவான்! இரு குழைந்தைகளுக்கு அப்பா அவன் தாய்வீடு வந்தால் அவனே குழந்தை விடைபெறும் நேரம் விழிகொண்டு பாரான் தொடர்ந்து சென்று வாசலில் நின்றால் திரும்பிப் பார்த்து கவனம் என்பான்! அவன் உடலை தொட்டு அழவும் கொடுப…
-
- 2 replies
- 816 views
-
-
வெண்ணிற பனி படலம் போர்த்தியஆடையுடனும், தலையில் மல்லிகை பூ வைத்து அலங்காரத்துடன் பவனி வரும் எங்களை தத்தெடுத்த இங்கிலாந்து தாய் கன மழை என்னும் கண்ணீரால் நனைவதேன். இயற்கை தனது பாதையில் சீராக நடக்கிறது நாம் மனிதர்கள் தான் சீரற்ற நடவடிக்கைகளால் இந்த பூமியை அழித்து கொண்டு இருக்கின்றோம் மனிதர்களே சிந்தியுங்கள் இந்த பூமி தாயை காப்போம்
-
- 4 replies
- 713 views
-
-
இன்று காதலர் தினம் இன்றும் எனது காத்திருப்பு.....அவனுக்காகவே.. எனக்கொன்றும் சலிப்பில்லை ஐந்து வருடங்கள் அனுபவத்தாலோ...என்னவோ.. கொட்டும் பனிக்குள் என்ன... கோடை வெயிலில் என்ன..... வீசும் காற்றில் என்ன.... மேனி நடுங்கும் சினோவில் என்ன.... அவனுக்காகவே எனது காத்திருப்பு.. தொடர்ந்திருக்கின்றது.. வருவான்....அவன்... ம்ம்.....வருவான்... இன்றும்... நம்பிக்கை கையோடு இருக்கின்றதே... .. இன்றும் பற்கள் ஒன்றோடு ஒன்று அடித்துக்கொள்ளும் குளிர்.. கைகளை ஜக்கெற் பொக்கெற்றுக்குள்ளும்.. கண்களை பனி படர்ந்திருக்கும் வீதியிலும்.. விட்டுக்கொண்டு..வழமை போலவே.. காத்திருக்கிறேன்... நேரம் ஆக..நினைவுகள்...பறந்தன பறவையிடம் கடன் வாங்கியதோ...சிறக…
-
- 28 replies
- 4.7k views
-
-
ஈழத்து அன்னை மடியில் அழகழாய் பூத்த பூக்கள் தேசத்து மண்ணைக் காக்க செங்குருதி குளித்த பூக்கள் கார்த்திகைப் பூக்களே -எங்கள் மா வீரர்களே! கல்லறையில் உறங்கும் எங்கள் கார்த்திகைத் தீபங்களே! கையில் பூக்கள் கொண்டு வந்து கல்லறையில் பணிகின்றோம் கண்ணீரில் கவிவடித்து காவியங்கள் பாடுகின்றோம் கல்லறையில் முகம் புதைத்து கதறிக் கதறி அழுகின்றோம் கரிகாலன் பிள்ளைகளே கண்திறந்து பாருங்களேன்! உங்களுக்கு மட்டும் தானா இப்படியோர் மனத்துணிவு மரணத்தைக் கூட இங்கு மண்டியிட்டு அழைப்பதற்கு! உம்மைப் பெற்ற அன்னை முகமோ இறுதிவரை பார்க்கவும் இல்லை உம்மைப் பெற்ற அன்னை மடியில் இறுதி மூச்சும் போனதில்லை அண்ணன் வழி சென்றவரே அடிமை விலங்கை அறுத்தவரே…
-
- 3 replies
- 1.3k views
-