கவிதைப் பூங்காடு
கவிதைகள் | பாடல் வரிகள்
கவிதைப் பூங்காடு பகுதியில் கள உறுப்பினரல்லாதோரின் கவிதைகள், கவிதை மொழியாக்கம், உலகக் கவிதை, பாடல் வரிகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள உறுப்பினர்கள் அல்லாதவர்களின் கவிதைகள், கவிதை மொழியாக்கங்கள், பாடல் வரிகள் போன்றன மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
ஈழத்தை சேர்ந்த, பூர்வீகமாகக் கொண்டவர்களின் படைப்புக்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படவேண்டும். ஏனைய கவிதைகள் தரமான கவிதைகளை அறிமுகம் செய்யும் நோக்கில் இலக்கிய மின் இதழ்களில் இருந்து மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
5130 topics in this forum
-
எனக்கொரு மகன் பிறப்பான்..... ------------------------- எனக்கொரு மகன் பிறப்பான் -அவன் என்னைப்போல இருக்கான்.. ஆமிக்கும் சாமிக்கும் பயந்து ஊரை விட்டுப்போகான் அடுத்தவர் காணியில் கதியால் தள்ளி நடவான்... பூனைக்கும் நாய்க்கும் சகுனம் வைத்து தொடங்கும் முயற்சியை விடமாட்டான் காதல் அறியாவிட்டாலும் காமம் எண்ணி அலையான் வீணுக்குப்போகும் பயல்களுக்காக வேலியை உயர்த்தி அடையான் சோத்துக்கு அலையும் பயல்கள் போல் சோம்பேறி மடத்தில் தங்கான் நாட்டுக்குப் பாரமாக நடு வீட்டில் அலையான் மதிப்பற்ற பயலாக மதில் மேல் குந்தான் படத்தைப் பார்த்துப் படிப்பான் பவுடர்ப் பொடிக்கு மயங்கான் உலகம் போற்றும் சயன்ஸு தெரியாவிட்டாலும் உயிர்கள் கொல்லும் …
-
- 6 replies
- 1.6k views
-
-
போய்வா காதலா போய்வா !!! என்னை பிடித்த என் காதலா..... என்னை சீண்டுவதிலே என்ன இன்பம் உனக்கு?? உள்ளம் குமுறியே ஊமையான நான் , பாடுவேன் என்று ஏன் நினைக்கின்றாய்?? உன் பார்வையில் நான் ஒரு கொடுமைக்காரி.... அப்படியே இருப்பேன் நான் உனக்கு. வார்த்தை ஊசியால் என் மனதை குத்துவதை விட்டுவிடு... என் மனம் பாறையாகி நாளாச்சு என்காதலா . எங்கள் காதல் வளரும் என்று எனக்குத் தெரியவில்லை ... என் கை பிடிக்க முதலே என் கண்ணீல் நீர் வருவது உனக்கு இன்பம்....... உன் நினைவை மறக்க நான் நினைக்கின்றேன் போய்வா காதலா போய்வா... நாம் நடந்த கடற்கரையில் என்கால் ஒற்றைத்தடம் பதிக்கும் ........ போய்வா காதலா போய்வா!!!! மைத்திரேயி 23 02 2013
-
- 22 replies
- 1.6k views
-
-
பூ விழுந்த மனசு கவிதைத்தொகுப்பிலிருந்து......... - காலையில் நான் காணும் வாசல் கோலம் நீயே ! காரிருளில் துணையாகும் ஓளி தீபமும் நீயே ! கண் திரைக்குள் தினம் தோன்றும் கனாவும் நீயே ! என் வாழ்விற்கு வாசம் தரும் பூ வனமும் நீயே ! - உறவெனும் பந்தத்தில் உயிராய் இணைந்தவளே வாழ்க்கை என்னும் கணக்கில் வரவாய் வந்தவளே கானல் நீராய் தோன்றி மறைந்து போகாமல் - என் தாகம் தீர்த்தவளே ! - பனித்துளி தொட்டு சிலிர்க்கும் புல்நுனிபோல் - உன் பார்வையால் தவிக்கின்Nறுன் பாலைவன ஓட்டகம்போல் உன் காதல் தேக்கி வாழ்கின்றேன் மழைமேகமாய் வருவாயா ? என் மனத்தோப்பினுள் சிறு தூறல் வீசிப்போவாயா ? என்.பரணீதரன்
-
- 6 replies
- 1.6k views
-
-
சூரனை வதம் செய்தான் அந்த முத்துகுமரன் அதுவும் திருச்செந்தூரன் தன்னையே வதம் செய்தான் இந்த முத்துகுமரன் இதுவும் திருச்செந்தூரன் போன பொழுது உனக்குத் தெரிந்திருக்கும் எம் மாவீரர்களும் மக்களும் உனக்களித்த வரவேற்பு சாவின் நிமிடம் தெரிந்த சத்தியவான்களில் கரும்புலிகளுக்கு அடுத்து நீதானையா! மக்கள் எழுச்சியின் சிகரம் நீ ஈழ மக்களின் மகரம் நீ உனக்காக வருந்தாது மத்திய அரசு உனக்காக அழுகிறது தமிழ் ஈழ அரசு பிரபாவுக்கு சொல்லென்றாய் சொல்லிவிட்டோம் திருமாவுக்கு சொல்லென்றாய் சொல்லிவிட்டோம் பிரமாவுக்கு ஒரு முறை சொல்லிவிடு - உன்னை படைத்ததற்கு கோடி நன்றி என்று தமிழ் ஈழ புல்லும் தமிழ் உயிர்கள் அத்தனையும் உனக்காக அழுவதனை ஒருதரம் கேளாயோ? போய்வா எம…
-
- 5 replies
- 1.6k views
-
-
என்ன அநியாயம் நான் பிறக்குபுன்பே யாழ் மண்ணின் இதயம் அழிந்துவிட்டதாம் ஓ நான் கண்ணாலே கண்டதும் அந்த அழிந்த இதயத்தை தானே என்ன தான் எம் யாழ் இதயத்தை மீண்டும் கட்டி எழுப்பினாலும் இதயமது இழந்தவை மீளப்பெறமுடியாது கயவர்கள் யாழ் மக்களின் உயிரை உணர்வை...பண்பாட்டை எரித்துவிட்டார்கள் காடையர்கள் எதிரியின் இந்த கொடூரம் தான் தூங்கிகிடந்த தமிழனை விழிக்க வைத்தது... கயவர்கள் தீயிட்டதால் தீயாகவே எழுந்தார்கள் தமிழர்கள்...தீயவனை அழிப்பதென முடிவோடு அன்று வைத்த தீ தான் இன்று தமிழன் நெஞ்சில் சுடர்விட்டு எரிகிறது ஈடுகொடுக்க முடியாத இழப்பல்லவா எம் இதயத்தின் இழப்பு....... இறைவனே கயவர்களை கண்கொண்டு பாத…
-
- 8 replies
- 1.6k views
-
-
வாருங்கள் பக்த கோடிகளே உங்கள் வேண்டுதல்களை என் மேல் உடைத்து எனக்கும் சேர்த்து வேண்டிக் கொள்ளுங்கள். என்றாவது நான் இதே கோயிலில் சிலையாக வேண்டும் என்று நீங்களே கூறுங்கள் எத்தனை நாள் மட்டும்தான் நான் வாசல் கல்லாய் இருப்பது. எதிலும் இறைவன் இருப்பான் என்பதை நம்பும் நீங்கள் ஏன்? என்னை மட்டும் கல்லாய் எண்ணி எண்ணுக்கணக்கின்றி உங்கள் நேத்திக்காய்.... என் மேல் தேங்காய்களால் எறிந்து என்னைக் காயப்படுதுகிறீர்கள். உண்மையைச் சொல்லப் போனால் இதே கோயிலுக்கு நானும் சிலையாக வேண்டும் என்றுதான் வந்தேன். நான் சிற்பியின் உளிக்கு பயந்ததால் என்னை வாசலிலே விட்டுவிட்டார்கள் தேங்காய்களால் சிலையானால் வ…
-
- 7 replies
- 1.6k views
-
-
மலருடன் காத்திருந்தான்.... மருத்துவப் பயிற்சியென்றால்... மாலையில் காண்போமென்றாள்.... மலருடன் காத்திருந்தான்.... அவன் கனவுக்காக கண்மூடினான்.. அவள் காடையரால் கண் மூடினாள்... இவர்கள் காதல் காலத்தால்.... விழித்திருக்கும்... காலமெல்லாம் விழித்திருக்கும்....
-
- 5 replies
- 1.6k views
-
-
வானும் கனல் சொரியும்-தரை மண்ணும் கனல் எழுப்பும் அலையடிக்கும் கடலும் அதில் தாவும் எம் கரும்புலியும் வானில் பறக்கும் வான்புலியும் மதிமயக்கும் உயிர்குடிக்கும் சிங்களச்சேனை கதிகலங்கும் அவர்தம் அங்கம் சிதறும் தறுதலையாய் தரணியிலே அவமான சின்னமாய் சிங்களவனுக்கு குடைபிடிக்கும் ஓநாய்க்கூட்டம் அதன் கதிகலங்க என்சேனை அசையா எம் தலைவன் தலைமையில் அணிவகுக்கும் ஆயிரம் ஆயிரம் விடுதலை வேங்கைகள் எமக்காய் உருகும் செங்களமாடும் புலிச்சேனை காற்றில் கந்தகம் கலக்கும் இடம் எல்லாம் கரும்புலியின் தியாகவேள்வியின் உயிர் உருகும் உருகும் அந்த மானிடத் தெய்வங்கள் திவ்வியமாய் எம் இதயத்தில் நிறுத்தியே அலையும் சிங்களப் பேய்களுக்கும் தாயை விட உயர்ந்த எம் தரணிக்காய் போராடும் என்…
-
- 2 replies
- 1.6k views
-
-
தெரியாம போச்சுதே...( திபாவளி) ஜயோகோ அரியரோ வந்தனரோ...??? எம் தமிழை அன்று வந்து ஆண்டனரோ....??? தீபாவளியை கொண்டு வந்து தினித்தனரோ....??? எம் தமிழர் அன்று என்ன பல் இழித்தனரோ....??? ஆண்டாண்டாய் ஆடி படி கழித்தனரே.... அந்த காலமிதை சொல்ல ஏனோ மறந்தனரோ....??? இன்று மட்டும் எப்படியோ கண்டனரோ....??? ஒடி வந்து எங்களிற்கு சொல்லினரோ....??? ஒப்பாரி வைத்து இங்கு காத்துறாரே..... எம்மை மாறும்படி வந்துயிங்கு கெஞ்சிராரே.... ஆதியந்தம் கேட்டுப்பிட்டா முழிசிறாரே.... அந்த ஆய்வுகளை சொல்ல ஏனோ மறுக்கிறாரே....??? ஆண்ட எங்கள் மன்னனையோ அழித்தனரோ....??? அட…
-
- 0 replies
- 1.6k views
-
-
கருணாநிதியே கவிதை நதியே உலகம் தூற்றும் உயர்ந்த பதியே தமிழன் தலையைக் கவிழ்த்த உன் கடிதப் பொதிகள் டெல்லியின்வீதிகளில் கடலை சுத்துவதும் விதியே நீவிர் செய்தது உமக்கே சரியா ஒன்றல்ல மூன்றாமே உமக்கு நாம் ஒன்றுமே இல்லாமல் இருக்கும் போது நாளை உமது காற்றடைத்த உடல் நாறும் போது இத்தாலி திரவியம் உம் உறவுகளையும் நாற வைக்கும் வாழ்க உம் கடிதக் கவிகள் வாத்தியார் *********
-
- 17 replies
- 1.6k views
-
-
பங்குனி விடியலின் அதிகாலைத் தக்பீர் முழக்கம் அவள்! சித்திரை வசந்தத்தின் முக்காடு போட்ட முதலாம்பிறை அவள்! கார்த்திகை நிலவின் காயம்படாத உமர்கயாமின் கவிதை அவள்! மார்கழித் திங்களின் சல்வார் போட்ட ரம்சான் அவள்!
-
- 17 replies
- 1.6k views
-
-
மானிடனே உனக்காக அழகான இவ்வுலகை அன்புடனே படைத்தவன்நான் படைப்பிற்கு மகுடமென மனிதனுன்னை வடித்தவன்நான் வழிதவறிப் போகாமல் வாழ்வதற்காய் உங்களுக்கு சைவமதம் என்கின்ற சர்வமதம் தந்தவன்நான் மகத்தான இவ்வுலகை மகிழ்வுடனே படைத்துவிட்டு நிகழ்வதனை மட்டும்நான் நிம்மதியாய் பார்த்திருந்தேன் கனிவான உந்தன்மனம் கல்லாகிப் போனதனால் கல்லாக இருந்தவன்நான் கடிந்திதனை எழுதுகின்றேன் மனிதாபி மானமிங்கே மதிப்பிழந்து போனதனால் மனிதத்தை உயிர்ப்பிக்க மனந்திறந்து பேசுகிறேன் சிறப்பான படைப்பென்று சிந்தித்த மனிதரின்று செய்கின்ற செயலாலே செவ்வாயைத் திறக்கின்றேன் எளிமையின் வடிவமாகி எல்லார்க்கும் அருளுமெந்தன் சந்நிதியில் பணக்காரச் சடங்குகள…
-
- 5 replies
- 1.6k views
-
-
எனக்குமொரு ஆசை --------------------------- தீப்பற்றி உரசிப் போகும் - உன் ஞாபகத் தீண்டல்கள் தீப்பிழம்பாய் எரியும் என் இதயத்தில் - சிறு ஆறுதல் நீரை ஊற்றும் அடிவானத்துக்கும் அப்பாலும் காணவில்லை -உன் இதயத்தின் ஆழம் அருகினில் இருக்கின்றாய் என்பதன்றி -வேறு புரிதல் எதுவும் இல்லை கண்களின் சிமிட்டலில் - என்ன மர்மத்தை வைத்திருக்கிறாய் -என் காதல் அங்கு ஒட்டிக்கொண்டிருக்கிறதே அங்கத்தின் அசைவுகளில் அடைகாத்திருப்பதைப்போல ஒவ்வொரு முறையும் முயற்சிக்கிறேன் உனை விட்டு வெகுதூரம் விலகிப்போக தளும்பி வழியும் மதுக்குவளைபோல -என் இதயமும் உனை இறுக்கிக்கொள்கிறதே சொல்லிவிடு -உன்னைக் காதலிகிறேன் என்று சொல்லிவிடு அறுத்துப் போட்…
-
- 8 replies
- 1.6k views
-
-
பெருமூச்சு வலிபடைத்து முறமெடுத்துப் புலியடித்த தமிழகம் கிலிபிடித்த நிலைபடைத்து வெலவெலத்து வாழ்வதோ? பகையொதுங்கப் பறைமுழங்கிப் புகழடைந்த தமிழகம் கதிகலங்கி விழிபிதுங்கி நடுநடுங்கி வாழ்வதோ? படைநடத்தி மலைமுகத்தில் கொடிபொறித்த தமிழகம் துடிதுடித்து அடிபிடித்துத் குடிகெடுத்து வாழ்வதோ? கடல் கடந்த நிலமடைந்து கதையளந்த தமிழகம் உடல் வளைந்து நிலை தளர்ந்து ஒளியிழந்து வாழ்வதோ? மகனிறக்க முலையறுக்க முடிவெடுத்த தமிழகம் புகழிறக்க மொழியிறக்க வெளிநகைக்க வாழ்வதோ? கவிஞர் காசியானந்தனின் கவிதை தொகுப்பிலிருந்து
-
- 3 replies
- 1.6k views
-
-
கடைசிப் பாலகனின் இரத்தம் - குளோபல் தமிழ்ச் செய்திகளிற்காக - தீபச்செல்வன் மூட மறுக்கும் பாலகர்களின் கண்களில் குற்றங்களின் முடிவற்ற காட்சிகள் அசைகின்றன இறுதியில் எதையோ சொல்ல முயன்றபடியிருக்கும் மூடாத வாய்களில் மறைக்கப்பட்ட வாக்குமூலங்கள் ஒலிக்கின்றன இரத்தத்தில் பிறந்து இறுதிவரையில் இரத்தம் காயாமல் பிசுபித்தபடி உடல் எங்கும் வழிய குண்டுகளால்சிதைக்கப்பட்ட பாகங்கள் உதிர எனது நிலத்து பாலகர்கள் திரிகையில் இலையான்கள் காயங்களை அரித்து அவர்களைத் தின்று முடித்தன எல்லோருடைய கண்களின் முன்பாகவும் எனது தேசத்திற்கெதிரான போரில் பாலகர்களை பலியிடும் பொழுது தாய்மார்களை நோக்கி அவர்கள் அழுகையில் தாய்மடிகளில் இரத்தம் பெருகியிருந்தது பெண்…
-
- 6 replies
- 1.6k views
-
-
(ஆறுவருடங்கள் முதல் எழுதிய கவிதையிது. இன்று பழைய தூசுதட்டியதில் கண்ணில் எட்டியதை இணைக்கிறேன்) ஞாபகங்களுடன் இன்றும்.... மீண்டும் சந்திப்பதாய் ஒரு மாலைநேர ஈரக்காற்றின் உவர்ப்போடு அழுததாய் ஞாபகம். தாஜ்மகால் பற்றியும் தலைசிறந்த காதல் இலக்கியம் தந்த ஜிப்ரான் பற்றியும் நிறையவே பகிர்தல்கள். ஒரு தாஜ்மகால் ஒரு முறிந்த சிறகு எங்களுக்காயும் எழுதப்படுமெனும் எண்ணமேயில்லை கௌரவப் பிரிதலாய் அது நீண்டதொரு தசாப்தம் நிறைவாகிறது. என்றாவது நினைவு வரும் சிறுவயது ஞாபகம் போல் எப்போதாவது வந்துபோகும் ஞாபகங்களுடன் இன்றும்.... காதலென்ற …
-
- 11 replies
- 1.6k views
-
-
கண் மூடி உள் நினைக்க படம் போல உன் நினைவு விரியும்! தடம் மாறி பல மனம் மாறி அலைந்த என்னை உன்னோடு அணைத்துக் கொண்டாய் உள்ளத்தில் அமிர்தத்தை தெளித்துச் சென்றாய் வனம் போல் இந்த மனம் பல மிருகங்கள் அதில் நடமாடும் உன்னிரு கரம் பட்டதாலே அவை சாந்தமாகிச் சாதுக்களான விந்தையென்ன? உருவத்து அழகில் மயங்குவது சில மாதத்தில் முடியும் உள்ளத்து அழகில் வாழ்நாள் உள்ளளவும் மயங்கலாம் என்று உன்னாலே அறிந்தேன்! நில்லாத உயிர் நிலைக்காத வாழ்க்கை எல்லாமே புரிகிறது நீயில்லாத வாழ்வை நினைக்க நினைவெல்லாம் சுடுகிறது! திட்டுவது போல் பாசாங்கு செய்வதும் சற்றே என் முகம் வாடினால் 'என்னடா' என்றென்னைத் தழுவி அணைப்…
-
- 9 replies
- 1.6k views
-
-
அனார் கவிதைகள் 1 கருமை முற்று முழுதாய் இருட்டி கறுத்துப்போன அமாவாசையின் ஏணியில் உன் உயரங்களுக்கு ஏறிவருகின்றன என் கால்கள் இருட்டிய மழைக் காற்று தூசிகளாலும் காய்ந்த இலைகளாலும் ஆகாயத்தை நிரப்புகிறது கருமுகில் மூட்டங்கள் மூடிய வானத்தின் கீழ் காகங்கள் மாத்திரமே பறவைகள் வீசிக்கொண்டிருக்கும் புயலுக்குள் ஒரு ஜன்னல் என என் கண்கள் திறந்துகிடக்கின்றன முதலும் முடிவுமற்ற உன் உச்சரிப்புகள் இடத்தைப் பாழ்படியவைத்து வவ்வால்களாகத் தலைகீழாய்த் தொங்குகின்றன என் உதடுகளை விரல்களைச் சுழலும் காற்றில் உதிர்த்…
-
- 2 replies
- 1.6k views
-
-
கார்த்திகைப் பேரொளியில், விழியோரக் கசிவோடு மீட்பர்களே!..... நீங்கள் விதையான தாய்மடிநோக்கி உமைநாடி அணி வகுத்தோம். பார்த்தொருக்கால் விழிதிறந்து உம் பூத்தமலர் முகங்காட்டி புன்னகைத்துக் கதைபேசி கண்மணிகாள் உறங்குங்கள். நெஞ்சப் பெருவெளியில் நினைவெல்லாம் விக்கிநிற்க அஞ்சாத் தேவர்காள் அகமெல்லாம் நிறைகின்றீர்! வெஞ்சமர்க் களமாடி வேர்மடிக்குக் காப்புடுத்தி காயத்தை மறைத்து கண்மறைத்து கரைந்தோரே! காற்றின் வழி எங்கள் மூச்சின் சுழல்களுக்குள் வீச்செடுத்து உலவுகின்றீர்! உணர்கின்றோம்..... உவக்கின்றோம். கண்ணுணராப் பொருளாக எம்கடிமனதில் உறையும் காவல் தெய்வங்களே! கடுங்கோபங் கொள்ளாதீர்! கண்மீறி வழிகின்ற ஈரத்தின் உப்பினை வடிகட்டி நிறுத்த கண்ணிமைக்குத்…
-
- 4 replies
- 1.6k views
-
-
வணக்கம் யாழ் கள நண்பர்களே, இந்தக் கவிதையை குரல் வடிவில் தர வேண்டி முயற்சி செய்ததன் பலன் இது... பரீட்சார்த்த முயற்சி இது.... நிறை குறைகளை சுட்டிக் காட்டுங்கள்.... அன்புடன் கவி ரூபன்
-
- 5 replies
- 1.6k views
-
-
9 நீ செய்யும் குழப்படி பார்த்து .... அப்படியே பேரனை போல என ... அப்பத்தா சொல்கையில் எனக்குள் ... ஓடும் ஒரு இனம் புரியா உணர்வு .. மகனே . 10 எனது சாப்பாட்டு தட்டில் .. இருக்கும் அப்பளத்தை எடுக்க .. நீ அம்மாவிடம் அனுமதி கேட்பது .. பயமா ...மரியாதையா என தெரியாமல் .. நான் மகனே . 11 நீ கேட்டு அம்மா கொடுக்காவிட்டால் ... நீ நின்று பார்க்கும் முறைப்பு பார்வை ... அதைகானும் அம்மா அப்படியே நீ .... உன் அப்பா போல கோவத்தில் என .. சொல்லும்போது நமக்குள் ஒரு ... திமிர் வந்துதான் போகுது மகனே .. 12 அம்மா அடிச்சுட்டா என முறைப்பாடு ... கேட்டுட்டு நான் அம்மாவை ஒரு தட்டு ... அதை பார்த்து நீ சிரிக்கும் சிரிப்பில் .. தொலைந்து போகிறது எனது துன்பம் ... மகனே . 1…
-
- 8 replies
- 1.6k views
-
-
சுதந்திரம் நோக்கிப் பயணித்து சூனியத்தை அடைந்த சூட்சுமத்தில் தான் இன்னும் எமது வெட்கம்கெட்ட இறுமாப்பு உயிர்வாழ்கின்றது முகங்கள் தொலைந்த உருவங்களில் என்னும் அழுகை சிரிப்பு சத்தங்கள் அதைவிட மேலான கோபங்கள் ஆவேசங்கள் வெறியோடு நெஞ்சு மயிரைப் புடுங்கி அண்ணாந்து ஊதியபோதும் முகத்தை உணரமுடியவில்லை நாம் தொலைந்து போனோம் எம்முடன் எடுத்துவந்த சாப மூட்டைகளில் தலையை சாய்த்து புலம்பிக்கொண்டிருக்கின்றோம் சாப மூட்டையுடன் தலைமுறை தலைமுறையாக நடந்து ஒருவழியாக மயானத்தை அடைந்துவிட்டோம் சுடலைஞானம் தனக்கு தனக்குதான் பிறந்துவிட்டது என்று அங்கேயும் குத்துப்பாடு நடக்கின்றது விசும்பலும் வெளிப்படும் கண்ணீரும் பிரசவ வலிகளும் நாதியற்றுப்போனது …
-
- 12 replies
- 1.6k views
-
-
எமக்கொரு நாடு கேடா.... வெறுப்பு உமிழும் காலம் மீது வாழ்வு சூழ் கொள்கின்றது ஒரு கண்ணை மறு கண் பிடுங்குது தான் பார்க்கா காட்சிதனை நீ பார்த்தல் ஆகாது என ஆவேசம் கொள்ளுது எதிரியின் தணல் எடுத்து மறுகண்ணை சுடுது இது எம் சாபம் யுகங்கள் தோறும் நாம் இப்படி தான் இருந்தோம் ஒரே காட்சியை ஒவ்வொருவரும் வர்ணம் பூசி பார்த்தோம் என் வர்ணம் பார்க்காத கண்னை வீதியின் முடிவில் குச்சொழுங்கையில் குடி வைத்தோம் எம் கண்ணை நாமே குருடாக்குவோம் எம் கைகளில் நாமே விலங்கிடுவோம் வரலாற்றின் நீண்ட பக்கம் எங்கும் எம் தோல்வியை நாமே எழுதிக் கொள்வோம் எம் முதுகெலும்பில் எதிரியின் மாட்டுச் சாணத்தை அப்பியது நாம் எம் குடிசைகளி…
-
- 9 replies
- 1.6k views
-
-
கைவிடப்பட்ட மந்தைகளும், கரணம் போடும் மேய்ப்பர்களும்.... -பிடுங்கி - கோடைஇடியிடித்து வானம் மின்னியது. பூமி நடுங்கியது. கரு நாகங்கள் மேலெழுந்து ஊரத்தொடங்கின!! நரிகள் பிலாக்கணமிட்டழுதன! மந்தைக் கூட்டம் சிதறியது....... எது திசை??? எது போகுமிடம்??? தெரியாது திகைத்தன மந்தைகள். மேய்ப்பர்களின் கையசைவிற்காய் ஏங்கித் தவித்தன அவை. மேய்ப்பர்களைக் காணவில்லை கைவிட மாட்டார்கள். நம்பிக்கையோடு, மேய்ப்பர்களைத்தேடத் தொடங்கின மந்தைகள்!!! வனாந்தரங்களில்..... கட்டாந்தரைகளில்.... முகாம்களில்.... காடுகளில்..... சுடலை வெளிகளில்..... தெருவோரங்களில்...... எங்கு மேய்ப்பர்கள்???,எங்கு மேய்ப்பர்கள்???…
-
- 6 replies
- 1.6k views
-
-
கவலை எதற்கு இவர்களுக்கு? என்றோ ஒரு நாள் கீறிவிட்ட உடலாலும் அன்றே திணிக்கப்பட்ட ஒரு விதையாலும் மனம் கோளாறுகள் நோண்ட வீதியில் திரிகிறேன் என் கண்களுக்குத் தெரிவது ஒரு குழந்தையின் ஐஸ் குச்சியும் அவள் கையிலிருக்கும் பலூனும் என்னைச் சுற்றி மடையர்களாய் நிற்கும் இந்தக் கூட்டங்களைக் கேவலமாக மதிக்கிறேன் இந்த தெருவே என் வீடு சாக்கடைகள் என் குளியலறை குப்பைத் தொட்டி என் சாதஅறை நினைவுகளின் பிணைப்புகளினால் என் மேனியில் படர்ந்து கொண்டிருக்கும் செயற்கைத் தோல்களை அங்கங்கே கிழிக்கிறேன். என் வீட்டில் குழந்தையைத் தவிர கூட்டத்திற்கு குறைவில்லை பெளர்ணமியின் வேதனையை முழுமையாக ரசிக்கிறார்கள் பூலோகக் காவியர்கள் கலைந்து ப…
-
- 11 replies
- 1.6k views
-