கவிதைப் பூங்காடு
கவிதைகள் | பாடல் வரிகள்
கவிதைப் பூங்காடு பகுதியில் கள உறுப்பினரல்லாதோரின் கவிதைகள், கவிதை மொழியாக்கம், உலகக் கவிதை, பாடல் வரிகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள உறுப்பினர்கள் அல்லாதவர்களின் கவிதைகள், கவிதை மொழியாக்கங்கள், பாடல் வரிகள் போன்றன மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
ஈழத்தை சேர்ந்த, பூர்வீகமாகக் கொண்டவர்களின் படைப்புக்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படவேண்டும். ஏனைய கவிதைகள் தரமான கவிதைகளை அறிமுகம் செய்யும் நோக்கில் இலக்கிய மின் இதழ்களில் இருந்து மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
5128 topics in this forum
-
பிரசவ அறை வாசலில் "பெண் குழந்தை" என்றதும் அதுவரை என் கண்ணில் இருந்த ஈரம் ஏனோ மெதுவாய் இதயத்தில் இறங்கியது... அவள் கொலுசொலியிலும் புன்னகையிலும் வரும் இசை போல இதுவரை எந்த இசையமைப்பாளரும் இசை அமைத்ததில்லை... வீட்டில் அதுவரை இருந்த என் அதிகாரம் குறைந்து போனது அவள் பேச ஆரம்பித்த பிறகு... "அப்பாவுக்கு முத்தம்" என நான் கெஞ்சும் தோரணையில் கேட்டால் ஒரு முத்தம் கொடுத்துவிட்டு ஏதோ எனக்கு சொத்தெழுதி வைத்த புன்னகை வீசி செல்வாள்... என்னுடன் தினமும் விளையாடிய என் ரோஜாப்பூ, பூப்பெய்த நாளில் கதவோரம் நின்று என்னை பார்த்த பார்வைய…
-
- 7 replies
- 1.4k views
-
-
நந்தவன நாட்கள் தந்தையுடன் வாழ்ந்த அந்த நந்தவன நாட்களின் சிந்தையுடன் என் பாசமுள்ள தந்தைக்கும் அனைத்து தந்தையர்க்கும் நன்றியுடன் வாழ்த்துக்கள் அன்னையெனும் ஆலயத்தின் அழகான கோபுரமாய் தன்னையே உருக்கி எமைத் தரணியிலே உருவாக்கி கண்ணிலே கனவு பொங்க காலமெல்லாம் எமைச் சுமந்து பண்புடன் பாசமதும் பரிவுடன் எமக்கூட்டி அன்புடன் அறிவூட்டி ஆசையாய்க் கதைபேசி உறுதியாய் நாம் நிற்க உறுதுணையாய்க் கல்வி அறிவுடன் அமுதூட்டி அறநெறிதனைக் காட்டி பிறர் நலம் பேணுவதைப் பெருமையாய் எடுத்தோதி வறுமையிலும் எம்மை வளமையாய்த் தினம் பேணி குடும்பமே கோவிலெனும் கொள்கையுடன் போராடி அடுத்தவர் நலம் பேணி அயலவர் துயர் போக்கி அறிவூட்டும் ஆசானாய் அகிலத்தில் தொழிலாற்றி மௌனமே வேதமதாய் மனது…
-
- 7 replies
- 1.5k views
-
-
அன்பே அவசரமாய் உனக்கோர் கடிதம்.... இது காதலர் தினத்துக்கானதல்ல உன்னவள் உயிரோடு இருப்பதை உனக்கு தெரியப்படுத்துவதற்காக... உயிர் குடிக்கும் வெடிகுண்டுக்கும் ஓயாது ஒலிக்கும் மரண ஓலங்களுக்கும் இடையில் நடைப்பிணமாய் நான்... எனக்காக நீ தந்த காதல் சின்னங்களும் தினமும் முகம் பார்க்க நீ தந்த புகைப்படமும் இடம் விட்டு இடம் ஓடியதில் தொலைந்து போயின... இன்று உன்னைப்பற்றிய கனவுகளும் உன்மேல் நான் கொண்ட ஆழமான காதலும் மட்டுமே என் உடைமைகளாக என்னுடன்... நான் இங்கு உயிர் சுமந்தலையும் வெறுங் கூடாய் என்றும் உன் நினைவுகளுடன்...
-
- 7 replies
- 1.4k views
-
-
1983ம் ஆண்டு கலவரம் தொடங்குவதற்கு ஒரு சில நாட்களின் முன்னம்தான் எனது யப்பானியத் தோழி ஆரி யுடன் தமிழகத்தில் இருந்து கொழும்பு திரும்பியிருந்தேன். கொழும்பில் சி.ஐ.டி தொல்லை இருந்தது. அதிஸ்டவசமாக கலவரத்துக்கு முதன்நாள் முஸ்லிம் கிராமமான மல்வானைக்குப் போயிருந்ததால் உயிர் தப்பியது. 1983ம் ஆண்டுக் கலவரத்தைப் பதிவுபண்ணிய இக் கவிதை வெளிவந்த நாட்களில் பேராசிரியர் பெரியார்தாசன் 100க்கும் அதிகமாக பிரதி பண்ணி தமிழகத்தில் பலருக்கு கிடைக்கச் செய்திருக்கிறார். இது அதிகமாக வாசிக்கப் பட்ட எனது கவிதைகளில் ஒன்று. உங்கள் கருத்துக்களை வரவேற்க்கிறேன். ஜெயபாலன் உயிர்த்தெழுந்த நாட்கள் -வ.ஐ.ச.ஜெயபாலன் அமைதிபோல் தோற்றம் காட்டின எல்லாம் துயின்று கொண்டிருக்கும் எரிமலை போல. மீண்டும…
-
- 7 replies
- 1.7k views
-
-
நெருப்பு நதிகள் நிலம் தடவி நடக்கின்றன. பொறுத்திருப்பீர். பொறுப்பற்ற நா நுனியில் ஏளனத்தைப் பூட்டாதீர். இருப்பிற்கான எல்லாம் இனிவரும் காலத்தில் தெளிவுறும். உரம் அள்ளிச் செறிவோம். உற்சாக வார்த்தை தன்னும் உடன் அள்ளித் தருவோம் கரத்திற்கும், நாவிற்கும் பணியுள்ள காலமிது. இயங்காப் புலனிருப்பின்... எம் இன்னுயிர்க்கு மதிப்பில்லை. அது.... இருந்தென்ன ? செத்தென்ன? என்றைக்கோ ஒரு நாள்... சாவெமைத் தின்னும். எதற்குமே பயனற்றா... எம்கட்டை வேகும்?
-
- 7 replies
- 1.4k views
-
-
இது......... இந்தப் பாலகனது இரண்டாவது பா . எனது சகபடைப்பாளிக்குப் பதிவாகப் போட்டாலும் , பாணர்கள் வரிசையில் இடம்பிடிக்க ஓர் உந்தல் . பாலகனைத் தூக்குவீர்களா உறவுகளே??????????? நிறுத்திடுவோம் இன்னுமோர் நினைவை எம்மனதில் ஊடறுத்து ஆழமாகவே பார் எங்கும் பாங்காகக் களிப்புற்றார் பாலகனின் வருகையை வந்தான் பாலகன் எல்லோருக்கும் மகிழ்சியாக!!!!! எமக்கு மட்டும் ஆழிப் பேரலையாக ஏனேனில் நாம் சபிக்கப்பட்ட ஈனப்பிறவிகளாம்!!!!!!!!!!!
-
- 7 replies
- 1.2k views
-
-
வானுயர் ராட்டினம், ஆளில்லா தார்ச்சாலை நுரையோடு கரைதொடும் அலைகள் பஞ்சு மிட்டாய் - இளநீர் சின்னஞ்சிறு மீன்கள் - வெயில் என் மோதிரம் - என பார்க்கும் பொருளில் எல்லாம் உன்னைப்பார்க்கிறேன் இவை போல் எதுவும் இல்லையா - என் இருப்பினை உனக்குணர்த்த - செந்தில்
-
- 7 replies
- 1.4k views
-
-
ஒலி வடிவம் ------------------------------------- நெஞ்சில் ஓர் மூலையில் ஏதோவொரு சோகம் எனை அணைக்கும் உடம்பு சோர்வின் கைப் பிள்ளையாகும்! மனசு விரக்தியின் விளிம்பில் தற்கொலை செய்யும் எதிர்காலம் கண்முன் விஷ்வரூபமெடுக்கும் தனிமையில் தத்தளித்து தாய் மடி தேடும் மனம் பொல்லாத கற்பனைகளால் இதயம் வெடிக்கும் தலை கோதி நெஞ்சில் முகம் சேர்த்து அணைக்க ஓருயிர் வாராதா என விழிகள் தேடும்! "எனக்கு மட்டும் ஏன் இப்படி" கண்முன் தெரியா கடவுளிடம் விசாரணை நடக்கும் கால் போனால் ஊன்றுகோல் மனசு உடைந்தால் என்ன உதவும் ? "நம்பிக்கை" என்ற பழகிப்போன பதிலில் சமாதானம் …
-
- 7 replies
- 1.7k views
-
-
சீ.. தனம் என்னும் அறையில் பூட்டப்படும் கன்னிகள் பல ஆயிரம் ஓதிடும் மந்திரம் பொய்யாகி போகும் தர்மத்தை மறந்து நீ வாழ்வே .. . புரட்சி செய்பவர் நாங்களே ஆதாரம் பல உண்டு பூமியில் வேதனைப் பிடியில் வாழ்க்கை ஏன் ? நீ பூட்டினை உடைத்திட வேண்டும் .. ஜாதிகள் சொல்லி தரம் பார்த்து ஊரினில் அவர்கள் உயர்ந்து நின்றனர் சமத்துவம் சொல்லி இவர்கள் இருக்க சத்தம் இல்லாமல் மனங்களை கொன்றனர் ... புரட்சி குணம் கொண்டு ஒரு மாற்றம் சீ....தனம் கொடுப்பதில் கொண்டுவா ஈழ விழுமியம் காத்திட பேணிட நீ . ஆங்காரம் கொண்டு உன்னை மாற்றிக்கொள் .. பென்னும் பெருளும் வாழ்க்கை என்றால் ஆண் அவைகளை கட்டிட்டு அலையட்டும் நான் முதிர்கன்னியா வாழ்ந்திட்டு போகிறேன் என்னில் தொடங்கட்டும் முதல் பு…
-
- 7 replies
- 1k views
-
-
-
- 7 replies
- 1.9k views
-
-
கருணாநிதியின் 'அவாள்' கவிதையால் சலசலப்பு புதன்கிழமை, ஆகஸ்ட் 20, 2008 சென்னை: முதல்வர் கருணாநிதி பிராமண சமுதாயத்தைச் சேர்ந்த ஒருவர் குறித்து பூடகமாக எழுதியுள்ள கவிதை பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. கருணாநிதி தனது கவிதையில் சாடியிருப்பது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி செயலாளர் வரதராஜனைத்தான் என்ற கருத்தும் எழுந்துள்ளது. முதல்வர் கருணாநிதியின் கவிதைகள் அவ்வப்போது சலசலப்பை ஏற்படுத்துவதுண்டு. ஆனால் நேற்று அவர் வெளியிட்டுள்ள கவிதை ஒன்று பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. காரணம், அந்தக் கவிதையில் பிராமண சமுதாயத்தைச் சேர்ந்த ஒரு தலைவர் குறித்து கருணாநிதி பூடகமாக சாடியுள்ளார். யார் அந்தத் தலைவர் என்பது யாருக்குமே புரியவில்லை. இதனால் இந்தக் கவிதை பரபரப்பை ஏற்…
-
- 7 replies
- 2.8k views
-
-
மேய்ப்பனின் ஆடுகள் கொல்லப்படுகின்றன மேய்பனை தேடி வல்லூறுகள் அலைகின்றன மேய்பனுக்காக ஆடுகள் கொல்லப் படுகின்றன ஆடுகள் கன்றுக் குட்டிகள் பாலருந்துகையில் கொல்லப் பட்டன கன்றுக் குட்டிகள் துள்ளி விளையாடுகையில் கால்கள் துண்டிக்கப் பட்டு தெருவில் அலைந்தன மேய்பனி்ன் நிழலில் பதுங்க முற்பட்ட ஆடுகள் அறுக்கப் பட்டு கடைகளில் விற்கப் பட்டன தாய் ஆடு சாக மிச்சம் இருந்த குழந்தை குட்டிகளும் வாயில் பாலின் சுவடுகள் படிய விற்கப் பட்டன மேப்பனின் கூடாரத்திற்குள்ளும் ஆடுகள் ஒதுங்க முடியவில்லை வாங்குவோர் கூட்டம் அலை மோதின சட்டி எரிக்க ஒரு துளி நெருப்பற்றவர்களும் தம் இளம் சந்ததியின் உடல்களை தின்றும் பசி தீராது புத்தனின் …
-
- 7 replies
- 2k views
-
-
அறிவு தந்த அன்புள்ள அப்பா நீங்கள் ஆற்றல் ஈந்த அன்புள்ள அப்பா நீங்கள் உருகும் உன்னத மெழுகு நீங்கள் தேயும் ஒப்பற்ற சந்தனம் நீங்கள் தன்னலமற்ற தியாகத்தின் சின்னம் நீங்கள் திறமைகளை பயிற்று வித்த ஆசான் நீங்கள் சான்றோனாக்கி மனம் மகிழ்ந்தவர் நீங்கள் சந்தோசங்களை வழங்கிய வள்ளல் நீங்கள் ஒய்வறியாது உழைக்கும் செம்மல் நீங்கள் ஒரு நாளும் கவலை கொள்ளாதவர் நீங்கள் கடமையைக் கச்சிதமாய் முடித்தவர் நீங்கள் மடமையை முழுமூச்சாய் எதிர்த்தவர் நீங்கள் பகுத்தறிவை எனக்கு கற்பித்தவர் நீங்கள் மூடநம்பிக்கை அகற்றி தன்னம்பிக்கை தந்தவர் நீங்கள் எதையும் ஏன்? ஏதற்கு? எப்படி? என்றவர் நீங்கள் எவருக்கும் அஞ்சாமல் வாழ்பவர் நீங்கள் வாழ்வியல் கருத்துக்களை வழங்…
-
- 7 replies
- 1.4k views
-
-
எழுபதில் கட்டிய வீடு, முற்றத்தில் மல்லிகை பூக்களாய் சொரிய வீடே மல்லிகை வாசம் கிணற்றடியில் செவ்வந்திபூக்கள் விரிந்திருக்க நிலமெல்லாம் பாக்குகள் தேசிமரத்தில் மஞ்சள் பல்ப்புகள் மூடிக்கட்டியிருக்கும் மாதாளம் பழங்கள் பழைய பூவரசிலிலும் பூக்கள் வளவில் ஆங்காங்கே செத்தல்கள் அண்ணாந்து பார்த்தால் தேங்காய்க்குலைகள் ஊஞ்சல் கட்டியிருக்கும் வேம்பு அணில் ஓடிவிளையாடும் கொய்யா திடுக்கிட நொங்கு விழும் சத்தம் நாய் கூடபுகமுடியா வேலி அம்மா,அம்மாவின் அம்மா,அம்மம்மாவின் அம்மா அவர்களின் ஆத்மா உலாவும் காணி கோடி ஆசையோடு வீடு பார்க்க போனோம் வாசலில் பூட்டு முற்றத்தில் குறியீட்டுப்பலகை " இராணுவத்திற்கு ஒதுக்கப்பட்டுள்ளது"
-
- 7 replies
- 703 views
-
-
இதுவா உங்கள் நியாயம்? ------------------------- உண்மையற்ற பொய்மையுலகே உன்னிடம் நேர்மையிருந்தால் எங்கள் உறவுகள் அழிந்திருப்பார்களா? அழிக்கப்படுமிந்த நிலையிது சரியா? எண்ணெயிருப்பதால் போராளிகள் எதுவுமற்றதால் பயங்கரவாதிகள் என்னதானோ உங்கள் நியாயம்! திரிப்பொலி வீழ்ந்தது போராட்டமாம் ஈழம் மீட்பது பயங்கரவாதமாம் நியாயமற்ற உலகிடமல்லவா துடியாய் துடித்து நீதியைக் கோரி எங்கள் தமிழினம் உலகிலலைந்தது எங்கள் அலைவுகள் என்றோ ஒருநாள் உங்களைக்கூடச் சுட்டெரிக்கலாம் அப்போதுகூடச் சுரண்டலைப் பற்றியே உங்கள் சிந்தனை அளக்க முனையலாம் ஆதிக்க சக்திகள் நிலைப்பதுமில்லை அன்னியராதிக்கம் நிற்பதுமில்லை அதுவரை நாங்கள் ஓய்வதுமில்லை. ஓய்வொன்றுவரலாம் உலகமழிந்திடில் …
-
- 7 replies
- 1.2k views
-
-
அழவில்லை உடைகிறது மனது விவாகரத்து உயிர் அறுபட்ட கணம் மரணம் இறப்பை நினையாது பிறப்பில் சிரிக்கும் மனிதன் கூர்ப்பு மற்றையவர் தோல்வியை நினையாது தன்வெற்றியை கொண்டாடல் தற்புகழ்ச்சி நாய் கிழித்த உடுப்பு புது டிசைன்னாகிறது நாகரீகம் உடைத்த அரிசி அரைக்கப்படுகிறது போருக்குப் பிந்திய போர் வன்னி (2010) உலக முதல் இராஜதந்திரி நரியாரா?நாரதரா? மனக்குழப்பம் மிதந்தவன் தப்பினான் தாண்டவன் கூழ்முட்டை இனத்தின் துகிலுரிந்து தனக்கு சுருக்கிட்டான் அடிவருடி ஏழைக்குழந்தைகளின் எதிர்காலத்திற்காய் எரிகிறது குப்பிவிளக்கு தண்ணியிலிருந்து தங்கம் வரை தங்கியிருக்கிறது விளம்பரத்தில் …
-
- 7 replies
- 1.1k views
-
-
"நியாயம்" என்பது இன்னும்... கேள்விக்குறியாகவே... தொடர்கின்றது! தவறினை சுட்டிக்காட்டுவது கூட, தவறாக பார்க்கப்படுகின்றனவோ??? அணைக்கப்பட்ட திரிகளில்... சுடர்விட்டெரிந்து கரியாகி...சாம்பலாவது, "நியாயம்" என்பதும்தான்!!!!! மனச்சாட்சி உள்ளவர்கள் மட்டும்.... புரிந்து கொள்ளட்டும்!
-
- 7 replies
- 1.6k views
-
-
என் கதை வ.ஐ.ச.ஜெயபாலன் அவள் தனி வனமான ஆலமரம். நான் சிறகுகளால் உலகளக்கிற பறவை. என்னை முதன் முதற் கண்டபோது நீலவானின் கீழே அலையும் கட்டற்ற முகிலென்றே நினைத்தாளாம். நானோ அவளை கீழே நகரும் பாலையில் தேங்கிய பாசி படர்ந்த குளமென்றிருந்தேன். ஒருநாள் காதலில் கிளைகளை அகட்டி ஜாடை காட்டினாள். மறுநாள் அங்கிருந்தது என் கூடு. இப்படித்தான் தோழதோழியரே எல்லாம் ஆரம்பமானது. தண்ணீரை மட்டுமே மறந்துபோய் ஏனைய அனைத்துச் செல்வங்களோடும் பாலை வழி நடந்த காதலர் நாம். அவளோ வேரில் நிமிர்ந்த தேவதை. நிலைப்பதே அவளது தர்மமாயிருந்தது. சிறகுகளில் மிதக்கும் எனக்கோ நிலைத்தல் இறப்பு. மண்ணுடன…
-
- 7 replies
- 1.3k views
-
-
''அந்த செய்திக்காக காத்திருக்கின்றேன்'' ~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~ அந்த செய்திக்காக, நாளை எமக்கு ஏதாவது நல்ல செய்தி வரும் என்று அந்த செய்தி என்னுடைய காதுக்கு கிட்டுமோ ? என மனம் தினமும் ஏக்கத்தில் காத்திருக்கின்றது ....... ஆனால் வரவேண்டிய அந்த செய்தி வரவில்லை ! அந்த செய்திக்காக மீண்டும் காத்திருக்கின்றேன் ...... வந்தன பல செய்திகள் வந்தன அவை எவையும் நான் எதிர்பார்த்திருக்கும் செய்தியாக வரவில்ல்லை ! மாறாக செய்திகள் பல வருகின்றன ....... நான் விரும்பாத செய்திகளே தொடர்ந்து வருகின்றது ! நான் எதிர்பார்க்கும் செய்திக்காக தினமும் காலையில் ஆவலாக எதிர்பார்த்து ....... அந்த செய்தி வரும் என்ற அசைக்க முடியாத நம்பிக்கையுடன் காத்திருக்கின்…
-
- 7 replies
- 1.5k views
-
-
பசியும் கற்பும் பசிக் கொடுமையால் விலைமகளாக மாறிய பரிதாபத்துக்குரிய ஏழைப் பெண்ணைப் பார்த்து கற்பிழந்த காரிகை எனக் காறித் துப்பினாள் மூன்று வேளையும் தின்று கொழுக்கும் பணக்கார வீட்டுப் பத்தினிப் பெண்.
-
- 7 replies
- 2.2k views
-
-
செத்துவிட்டாள் அம்மா பேப்பரில் போடுங்கள் முடிந்தால் கொழும்பு பேப்பரிலும் போடுங்கள் தப்பாமல் வீடியோவும் எடுத்திடுங்கள் இயலுமாயின் வானொலிக்கும் குடுத்திடுங்கள் இணையதில் போட்டால் இன்னமும் நல்லம் கொள்ளி வைக்க யாரும் இல்லை எனின் எங்கள் வள்ளி மகன் வைப்பான் கொள்ளி.... இக் கவியில் தாய் இறந்த செய்தி கேட்ட மகன் அல்லது மகள் ஊரில் உள்ளவருக்கு தொலைபேசியில் கொடுக்கப்பட்ட கோரிக்கை...ம்ம்ம் இதிலே வள்ளி மகன் என்பது வேலைக்காரியுன் மகன்...இப்படி தான் இன்றைய காலத்தில் தாய் இறந்தால்...சில பிள்ளைகளால் கடமை செய்யபடுகின்றது...என்ன உலகமோ
-
- 7 replies
- 1.8k views
-
-
துணிந்து எழு!துடுப்பு எடு! என் இளைய தோழா! இரு கைகளிலும் இருப்பது உளியென விரல் கொண்ட தோழா! நீ எழுந்து வாடா! "எட்டாத பழம் புளிக்கும்" என்பதும் கிட்டாதாயின் வெட்டென மற"ப்பதும் உன் முயற்சிக்கு முட்டாள்கள் போட்ட முட்டுக்கட்டைகள்! எங்கே தவறை நீ தட்டிக்கேட்க துணிந்து விடுவாயோ என தம்மட்டம் அடித்து தற்பெருமைபேசும் வெட்டி மனிதர்கள் போட்ட சட்டங்கள் 'அடிபடு! வாழ்க்கையில் அனுபவத்தால் அடிபடு! சுடச்சுட பொன் மிளிரும் புண்படப்படத்தான் பண் பட்டு மனம் உறுதியில் திகழும்! வெட்டுப்பட்டாலும் மரம் தளிர்கிறதே முட்டிமுட்டி மோதி போட்ட வித்தும் விண்ணை எட்டி விடத்துடிக்கிறதே! என் தோழா! ஒரு தோல்வியில் நீ கலங்கலாமா? விழும் ஒவ்வொரு …
-
- 7 replies
- 1.8k views
-
-
அன்பிற்கும் உண்டோ..... பத்து வருடங்கள் முன் அப்பொழுது என் மகளுக்கு வயது பதினைந்து அழகான வா்ணக் காகிதத்தில் அன்பான வாிகளிட்டு அளித்தாள் தந்தையா் தின வாழ்த்து அத்தனையும் நனவாகி அதுவே இறுதி என்று தொியாத இறுமாப்பில் முத்தமொன்று கூட முழுதாய்க் கொடுக்காமல் முறுவலித்தேன் இப்பொழுதும் ஆண்டு தோறும் வருகிறது தந்தையா் தினம் எனக்காக மலா் வைத்து அஞ்சலிக்க மகளும் வருகின்றாள் காற்றில் முத்தமிட்டு கண்ணீருடன் விடை பெறுகின்றாள் எனக்காக என் அன்பிற்காக ஏங்கும் மகளுக்காகவேனும் நான் மறந்திருக்க வேணும் புகையெனும் மாயப் பேயை எண்ணுகின்றேன் ஆனாலும் எடுத்தியம்ப முடியவில்லை மனைவியின் வேண்டுக…
-
- 7 replies
- 1.3k views
- 1 follower
-
-
காந்தக் கலர் அழகி கர்வமின்றி கருவண்டுக் காளை இவனை கவர்ந்திழுத்து கவ்விக் கொண்டாய்.. உன்னை அணுகி உளறி அணைத்தேன் உன்னதம் காண.. உன்னமுதம் சுரக்க உண்டேன்.! உடலெங்கும் பொடிகள் காவி உதிர்த்து உண்டாக்கினேன் உன்னை. காய்ந்து விழும் கன்னிக் காவியமே.. கருக்கொண்ட காதலுக்கு அடையாளமாய் - நாளை காய்த்துக் கனி தரும் நீ புதிதாய் பூமியில் உதிப்பாய்..! விவாகமும் இல்லை விவாகரத்தும் இல்லை விவகாரம் முடிக்கிறோம் வில்லங்கமே இல்லாமல்..! விதியது இயற்கை வழி விதவையாய் நீயும் இல்லை விதுசனாய் நானும் இல்லை விரைந்தே போகிறோம் கால வெளியைக் கடந்து..! அடுத்த வசந்தத்துக்குள் இன்னொரு சந்ததிக்காய் ஆயுளும் முடிக்கிறோம். பூமியை புதிய உயிர்களால் அழகும் செய்கி…
-
- 7 replies
- 14.2k views
-
-
மாசி 22ம் எங்கட மண்ணும் தை பிறந்தால் வழி பிறக்கும் என்று என்ர அம்மா அடிக்கடி சொல்லுறவ தையும் கடந்தது! மண்ணாய் போன மாசி 22 கடக்கப் போகுது! ஏ ஒன்பது திறக்குமா? ஏ பதினைந்து திறக்குமா? குடைக்குள் நெருப்பாக குழந்தை குமரி முதல் கிழடு கெட்டைகள் வரை கனவிலே தீப்பந்தம் எரியுது! ஆறுமாதங்கள் கடந்தும் ஆறுதல் வார்த்தைகள் மட்டும் அடிக்கடி தொன்கணக்காய்... கப்பலில் வருகிறது! அரிசி மாவு சீனி பருப்பு உள்ளி தேயிலை முட்டை எள்ளு உச்சவிலைப் பட்டியலை பார்க்க உயிர்க்குலை நடுங்குது! கொழும்பு வியாபாரியளுக்கு கொழுக்கட்டை தின்னுற கொழுத்த மகிழ்ச்சி பாhருங்கோ! நாலு கோடிக்க கிடந்ததுகள் பத்துக் கோடிக்கணக்காய்; சுருட்டிக் கொண்டு போக …
-
- 7 replies
- 1.4k views
-