Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கவிதைப் பூங்காடு

கவிதைகள் | பாடல் வரிகள்

பதிவாளர் கவனத்திற்கு!

கவிதைப் பூங்காடு பகுதியில் கள உறுப்பினரல்லாதோரின் கவிதைகள், கவிதை மொழியாக்கம், உலகக் கவிதை, பாடல் வரிகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் யாழ் கள உறுப்பினர்கள் அல்லாதவர்களின் கவிதைகள், கவிதை மொழியாக்கங்கள், பாடல் வரிகள் போன்றன மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
ஈழத்தை சேர்ந்த, பூர்வீகமாகக் கொண்டவர்களின் படைப்புக்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படவேண்டும். ஏனைய கவிதைகள் தரமான கவிதைகளை அறிமுகம் செய்யும் நோக்கில் இலக்கிய மின் இதழ்களில் இருந்து மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. வெற்றியின் சரித்திரம் முழங்குது பார் தேன் சுவை ஊறும் செந்தமிழ் ஈழம் வான் புகழ் கொண்டு வளருது பார் எழிலது பொங்கிடும் எம்முயிர்த் தமிழால் எங்கணும் மங்களம் பொங்குது பார் ஈழமண் மீட்பில் எரிகின்ற தீபம் எட்டுத்திக்கும் சுடர் வீசுது பார் மங்களமாய் மஞ்சள் சிவப்பு வண்ணத்தில் மாண்புறு ஈழமண் மகிழுது பார் செங்களம் ஆடிடும் செங்குருதிப் புனல் எங்கள் உணர்வினில் தெறிக்குது பார் எத்தனை எத்தனை வேங்கைகள் மண்ணில் ஈகம் செய்த உயிர் எழுகுது பார் விதைகளாய் விழுந்த உயிர்களின் தாகம் விருட்சமாய் இங்கு வளருது பார் தேசத்தின் நேசம் நெஞ்சில் நிறுத்திய புhசத்தில் தமிழினம் பொங்குது பார் வடக்கிலும் கிழக்கிலும் வளமது பெருகி வறுமைகள் இன்றுடன் ஒழியுது பார் கனவுகள் மெய்…

  2. என் விரக்தியின் அத்திவாரம் கொத்துக் கொத்தாய் வீழும் குண்டுகளுமல்ல கும்பல் கும்பலாய் சாகும் குடும்பங்களுமல்ல இன அழிப்புக்காய் நடக்கும் யுத்தமுமல்ல ஆறாய்ப் பெருகி ஓடும் இரத்தமுமல்ல வெறிச்சோடிக் கிடக்கும் வயல் வெளிகளுமல்ல நிரம்பி வழியும் புதை குழிகளுமல்ல சோற்றுக்காய் ஏங்கும் தமிழ் மழலைகளுமல்ல தொற்றுநோய் பரவும் அகதி முகாம்களுமல்ல போரை வாழ்த்தும் சில நாடுகளுமல்ல மௌனம் காக்கும் பிற நாடுகளுமல்ல இத்தனை நடந்தும் மனம் கலங்காமல் இன்னமும் பிறர் துயர் விளங்காமல் கண்மூடி இருக்கும் சிலதமிழரின் குணம்தான் என்அடிமன விரக்தியின் அடிப்படைக் காரணம் http://gkanthan.wordpress.com/

  3. வானத்தில் வெள்ளிகள் சிதறிக்கிடக்கின்றது அண்ணாந்து பார்தபடி மரத்தடியில் அவள் இருபக்கமும் சின்னன் இரண்டும் நித்திரையாக கண்கள் நனைய கண்ணீரில் நிலவெளி தெறித்தது வீடிளந்து வீதியோர வாழ்வில் மழைக்கு முன் கூடாரம் அமைக்க கடவுள் வழிவிடவேண்டும் மனதுக்குள் பிரார்தனை விடியாத வாழ்வில் விடிந்தது காலை அருகில் மூன்று கல்லு வைத்து அடுப்பு ஊத ஊத புகையை காற்று சுழற்றி முகத்தில் அடித்தது நாசிக்குள் போக பிரக்கடித்தது கண்ணெரிந்து கண்ணீர் வந்தது ஏனிந்த கண்ணீர் நிற்காமல் வருகிறது விறகு புகைக்கும் வருகிறது வீட்டுக்காரனை ஆமி சுட்ட போதும் மானாவாரியாய் வந்தது நினைக்கும் போதும் நிற்காமல் வருகின்றது தோட்டம் துரவை விட்ட…

    • 7 replies
    • 1.4k views
  4. *** பாலுக்கு பாலகன் வேண்டி அழுதிட பாற்கடல் ஈந்த பிரான் - அந்தக் காலம் பாலுக்காய் பாலகனே கால் கடுக்க பாதையில் நிற்பது - இந்தக் காலம் *** மங்கைக்கு மாலையிட சுயம்வரம் நடப்பது - அந்தக் காலம் மங்கைக்கு மாலையிட பணவரம் கொடுப்பது - இந்தக் காலம்

    • 4 replies
    • 1.4k views
  5. வெற்றிடத்தில் ஒரு குறிப்பு அந்தக் கதையில் நிறைய அறைகள் இருந்தன ஒவ்வொருவராகப் புகுந்து வெளியேறிக் கொண்டிருந்தனர் அந்தக் கதையில் நிறைய ஜன்னல்கள் இருந்தன காற்றும் இசையும் உள் நிறைந்து வெளி வந்தது அந்தக் கதையில் நிறைய மரங்கள் இருந்தன அணிலும் பறவைகளும் விளையாடின அந்தக் கதையில் விதைகள் நடப்பட்டிருந்தது படிக்கப் படிக்க பூத்துக் குலுங்கியது அந்தக் கதையில் மழை பெய்தது வானவில் தென்பட்டது கடவுள் குழந்தைகளோடு பேசிக்கொண்டிருந்தார் அந்தக் கதையில் வாசிப்புத் தன்மை கடைசி பக்கத்திலிருந்தும் படிப்பதுபோல் அமைந்திருந்தது முன்னிருந்தும் பின்னிருந்தும் படித்துக் கொண்டே வந்தவர்கள் சந்தித்துக் கொண்டார்கள் வெற்றி…

  6. தினமும் என் இராப்பொழுதுகள் விட்டுச்செல்லும் கனவுகளில், ஒரு காலைப்பொழுதும் மாலைப்பொழுதும் அடிக்கடி கனவில் வரும்! நிஜமாய் இருந்த பொழுதுகளைவிட சுகமாய் இருந்தது... கனாக்காட்சிகள்! சில்லென உணர்ந்த குளிரும் காலையிலும் சுடுதேநீரின் இனிப்பான மாலையிலும் என்னருகில் ஒட்டிக்கொண்டிருந்தவளின் இதமான தேகச்சூடும், என் தோளில் பரவிநின்ற அழகான அவள் கூந்தலும், அதனினிய வாசமும், எம் புன்சிரிப்பும்... எம்முன்னே பூத்துச் சிரித்த பூக்களை பொறாமைப்பட வைத்திருக்கும்! உதட்டோடு சிரித்துக்கொண்டிருந்தவளை மனதோடு ரசித்துக்கொண்டிருந்த... என் இராப்பொழுதுகள் களித்த கனவுகள், கழிந்துபோன நாளிகைகளில்... விடிகின்ற அதிகாலைகள் ஏமாற்றாமல் உணர்த்துகின்றன... அனைத்தும் கனவ…

    • 20 replies
    • 1.4k views
  7. கங்காருவின் மைந்தர்களே களிப்பெமக்குத் தாருங்கள் சிங்கத்தின் குழந்தைகளை சிதறடிக்க விரட்டுங்கள் தடுப்பரண் போட்டெம்மை படுத்துகின்ற சிங்களத்தை துடுப்பாட்டக் களத்தினிலே கடுப்பாக்கி அனுப்புங்கள் மைதானம் வந்திருக்கும் மனிதக் கொலைகாரன் மகிந்த முகத்தினிலே மண்கவ்வ வையுங்கள் சிங்கக் கொடிதாங்கி சிரித்துக் கூத்தாட சீமைக்கு வந்தவனைப் - பார்த்துச் சிரித்துநிற்க உதவுங்கள்

    • 5 replies
    • 1.4k views
  8. கடவுளுக்கு ....கேட்குமா ?.... என் குஞ்சுகளும் நானும் பசியால் துஞ்சுகின்றோம் பாவி படுபாதகன் ,குண்டு மழையாக பொழிகின்றான் இரவினில் ,காடுகளில் ,பாம்பு பூச்சிகள் நடு , நடுவே உறக்கமோ , கோழியுரக்கம் ,குடிநீருக்கும் தொலை தூரம் என்னவனை கொன்றது உன் கொடிய செல்வீச்சு ஊர்விட்டு ,ஊர் மாறி , நடந்த காலும் சோர்ந்து போச்சு அக்கினி பிழம்பாக ,கொட்டும் வான வேடிக்கை கண்டு குஞ்சுகள் கலங்கி அழ ,என் நெஞ்சம் படும் பாடு உண்ணவும் முடியவில்லை ,உறங்கவும் முடியவில்லை இன்னும் தான் விடிவுமில்லை ,கொஞ்சமும் இரக்கமில்லை ஏனிந்த வேதனையோ ? எவ்வளவு காலத்துக்கோ இந்த நெஞ்சு கூடு வேகமுன் ,கொஞ்சமேனும் இரக்கம் உண்டா தாய் இழந்தேன் தந்தை இழந்தேன் ஊர் இழந்தேன் உற்றார் …

  9. "லிபரேசன் ஒப்பரேசன்"..... வடமராட்சி மக்களால் எனதூர் நிறைந்தது இளவட்டம் நிறையவே வந்தது பு+சாவைத் தப்பிய பெருமூச்சு எங்கும். எங்கள் வளவிற்கும் வந்தார்கள். காய்த்துக் குலுங்கிய மரமுந்திரிகை, அது முற்றத்தில் முன்னிற்கு நின்றது. கனியாதனவும் உண்டார்கள்! ஐயோ தம்பி பழமே கடினம் காயாய் வேணாம் சமைக்கிறோம் பொறுங்கள் முடியாது போனால் கொல்லையில் மாமரம்..… "முந்திரி தானே உடனே எட்டுது" பசியில் தோய்ந்த பதிலே கேட்டோம். ரூபவாஹினிச் செய்தியின் நேரம் வீட்டிற்குள் குறைந்தது நூறு பேர் இருக்கும் பு+சாக்குப் போகும் கப்பலைப் பார்த்து அடையாள அணிவகுப்பு அன்றங்கு நடந்தது! புங்கடிக் குளமும், ஈட்டி எறிஞ்சானும் கொட்டிகை வெளியும், கட்டுவரம்பும் காட்டினேன், …

    • 6 replies
    • 1.4k views
  10. தமிழினத்தை உலகறிய ..... உச்சத்துக்கு கொண்டுசென்ற ..... உத்தம மனிதர்களில் ஒருவர் ..... மேன்மை தங்கிய தமிழ் .... விஞ்ஞான தந்தையே கலாமே ...! உங்கள் பங்கும் வற்றாத நதி அய்யனே .....!!! அடுத்த வேளை உணவுக்கு .... அல்லல் பட்டாலும் நம்பிக்கையை .... தளராமல் விடாமல் முன் செல் ... வெற்றி நிச்சயம் சாதனை நிச்சயம் .... வாழ்துகாட்டிய எம் தந்தையே ... அய்யனே .....!!! எப்போது எதிர்காலம் உங்கள் ... கையில் இளைஞர்களே மாணவர்களே .....! உச்சாகம் ஊட்டுவதில் உம்மை தாண்டிய .... எவரையும் நாம் பார்தத்தில்லை -சான்று ..!!! உயிர் பிரியும் வேளையிலும் மாணவர்களின் .... அருகிலேயே உயிரையும் விட்டீர்களே ....!!! அய்யனே ..... நீங்ககள் விதையை ஊன்றிவிட்டு .... சென்றுள்ளீர்கள் - நிச்சயம் ... மரமாகும்... தோப்பாகும் …

  11. வட்ட நிலவே முகமெனச் சொல்மின் மதி மாதம் தேய்ந்திங்கு வளரும் பிறை காண் அதுபோலவள் வதனம் ஆவது நிதம் கண் கொள்வதற்கு நானிலனே ஒடியுமிடை தனைக்கொடி யென்று கூறிடினும் மழைகாணாப் பயிரினம் கருகி நிலம் வீழும் அதனால் அதுவுமவளிடைக்கு உவமையிங்கிலையே செவ்விதழ்ழிரண்டிற்கும் ரோஜா மலரதனைச் சொல்லொப்பி நிற்கேன் அது சூறாவளிக் காற்றில் சிக்கும் உயிரிழந்துதிர்ந்தும் போகும் அவள் வெண் பல்லுக்குவமை சொல்ல முத்துக்குமிங்கே திருடர் பயம் அவளருகில் நானிக்கும் ஆயுள் நிறைந்து வர தினந் துதிப்பேன் கருங்கூந்தல் கண்ட மனம் கார்முகிலை நினைப்பதுண்டால் கதிரொளியில் வெந்ததுவிண்ணேறும் கலைந்ததுபார் காற்றுடனே கோதையவள் கருவிழிக்கிங்கே கயல்மீன் கண்டுவமை சொல்ல கறி…

  12. Started by nunavilan,

    தமிழா வெளிநாட்டில் தமிழனுக்கு தமிழில் பேச வெக்கம் நாகரீகம் முத்திப்போய் நடை உடையிலை மாற்றம் பிள்ளைகளின் பெயரைக்கேட்டால் தமிழனோ எனத் தடுமாற்றம் தமிழ் இனத்தின் தலை எழுத்தில் இப்படி ஏன் மாற்றம் இன்னும் இரண்டு தலைமுறையில் இவனின் நிலை இங்கு சோகம் அரசாங்க இலவசப்பணத்தில் ஆடம்பர ஆட்டம் அதை எடுத்து சிலதுகள் இங்கு சூது ஆட்டம் அகதியாகி வந்தும் இங்கே சண்டியர் கூட்டம் கோவில்களில் சிலதுகள் நர பலியாட்டம் காசுக்காக குடும்பம் பிரிந்து இருப்பது இது என்ன கோலம் பிள்ளைகள் வாழ்க்கை பாழகப் போவதுதான் மிச்சம் ஊரில சுவாமிக்கு ப…

    • 4 replies
    • 1.4k views
  13. நீ நினைத்திருக்கலாம் நான் அதுபற்றி கதைக்காமலே இருந்திருக்கலாம் என்று...! ஒரு வகையில் நீ நினைப்பது சரியாகப் பட்டாலும்...! ஒருவகையில் நான் பேசியதும் சரியாகத்தான் படுகின்றது....! ஒருவகையில் அது விழிச் சந்திப்புகளில் வெளிப்பட்டிருக்கலாம்...! அது புனிதமானது புனிதத்தின் நிழலைக்கூட தீண்டும் தகுதி எனக்கில்லை நீ.... இத்துணை ஆண்டுகளில் நான் கண்டெடுத்த அழகு பொக்கிசம்...! நானாக நினைத்தாலும் உன்னை இழக்கும் சக்தி... எனக்கில்லை...! இருந்தாலும்... விளக்கைக் காதலித்து அதன்நூடே மரணிக்கும் ஈசல் வாழ்க்கை என்னுடையது....! கடலைப் பார்த்திருப்பாய்...! எத்துணை முயன்றாலும் கரைகடக்க முடிவதில்லை அதனால் அலை கரை…

  14. ராஜபக்க்ஷே..! நம் சாம்பல் மேட்டில் உன் கருகிய பிணம் விழும்.... கவிதை - இளங்கவி துட்ட கைமுணுவின் அடுத்த அவதாரம்..... சிங்களர் புகழ்வார் உன் புகழ் எந்நாளும்...... சிங்களர் வாழ்வில் நீயோர் சரித்திரம் தமிழர் வாழ்வுக்கொ நீயோர் தரித்திரம்..... பூக்காத மொட்டையும் கருவிலே கசக்கினாய்.... பூத்த மலரெல்லாம் தீயிலே பொசுக்கினாய்.... தமிழர் பிணங்களின் நடுவில் உன் இராச்சியம் நடத்துவாய்.... பொய்கள் உரைத்து உன் தேசியம் விளக்குவாய்..... தமிழரின் அழுகுரல் உனக்கு உன் தேசிய கீதமா...? எங்களின் பிணங்கள் உன் புல் தரை புற்களா...? ஆடுகள் நனைவதில் நீ ஓநாய் கவலையாம் உன் அழிவுத்திட்டத்துக்கு; தமிழரை அழைப்பதே உன் வேலையாம்.... தம் உ…

  15. உங்கள் கனவில் மீனா வந்தால் நீங்கள் வாழ்வில் வீணா போவீர்கள்.., சிம்ரன் வந்தால் சீரழிந்து போவீர்கள்.., சினேகா வந்தால் செத்து போவீர்கள்.., அசின் வந்தால் அழிந்து போவீர்கள்.., ஆகையால், கனவு காணுங்கள் காதலில் தவிக்கும் சந்தியாவைப் பற்றி அல்ல... கஷ்டத்தில் தவிக்கும் ஈழத்தைப் பற்றி...

  16. [size=5]விழியோரங்களில் மலரும் துளிப்பூக்களின் வாசங்களை நுகர்ந்துமகிழ்ந்த யந்தொன்றின், தேடிக்களைத்த கேவலச்சிறகுகளை, மொய்த்துரீங்காரமிட்ட நோக்கல்களை, கணநேர ஈனப்பிதற்றல்களை, பொய்நாக்குகளின் வீணிகளை, விலக்கி சீராக்கமுடிகிறது படுக்கையொன்றை இலகுவாக அவளால். இது திணிக்கப்பட்டதா என்றாலும் தவிர்க்கமுடியாதா என்றாலும் தெரியாதென்பதே பதிலாகுகிறது. வகையறியும் பார்வைகளை தகையுரியும் நாவுரைகளை முகைகருக்கும் வசவுகளை பகைபெருக்குமோர் பல்லவிகளை நகைத்தேவிலக்கி யுள்யெரிதலவள் வழக்காயிற்று. தினவெடுத்த மிருகங்களின் நாவுகளில் படிந்திருக்கும் அழுக்குவேர்களின் அடிநுனியறிந்தவள், தினப்பொழுதுகளின் பின்னான ஒதுங்குதலில் இழிந்த கௌரவவிம்பம் உடைத்தவள்…

  17. சில நிகழ்வுகளும்! நிஜங்களும் எப்படித்தான் பார்த்து பார்த்து எடுத்துவைத்தாலும் மறந்து போய் விடுகின்றது பயணத்தின் போது ஏதோ ஒன்று! அள்ளி அள்ளிக் குளித்தாலும் சில நேரங்களில் நனைவதேயில்லை புறங்கால்கள்!. எப்படித் தேடியும் அகப்படுவதில்லை பிச்சை போடும்போது மட்டும் சில்லறைகள்! மிகக் கவனத்தோடு கையாண்டாலும்!. சதையோடு சேர்த்தே வெட்டுப்படுகின்றது விரல் நகங்கள்!. எழுந்து போய் நிறுத்த வேண்டும் தொலைக்காட்சியை நினைத்தும் தேடுகின்றது மனது ரிமோல்ட்டை! இப்படியே நகர்கின்றது! என் வாழ்வில்! சில நிஜங்களும் நிகழ்வுகளும்!.

  18. பரமேஷ்வரா எங்கேயடா உன் அந்த அழகிய புன்னகை!!!!! ஆகாரம் தண்ணி இன்றி இருந்த போதும் முகம் நிறைய புன்னகையை அள்ளி தந்தாய் உன் உடல் சோர்ந்து போய்க் கொண்டிருக்கையிலும் உன் புன்னகையை அள்ளி தந்தாய் மக்கள் வெள்ளம் உனை சூழ்ந்து கொண்டிருந்த போதும் உன் புன்னகையை அள்ளி தந்தாய் உன் முடிவில் மாற்ரம் இல்லை என மன உறுதியுடன் நீ உரைத்த போதும் உன் புன்னகையை அள்ளி தந்தாய் உன் அருகில் வந்தவர்க் கெல்லாம் உன் புன்னகையை அள்ளி தந்தாய் தற்போது மட்டும் உன் புன்னகையை எங்கே புதைத்து விட்டாய் ஒரு முறையேனும் உன் புன்னகையை எமக்காக தருவாயா உன் வலி தெரிகிறது இருந்தும் உன் புன்னகைக்காக எம் மனங்கள் ஏங்குகின்றன......... காத்துக் கிடக்கின்றன........... எங்கள் உடன் பிறவா உறவே ஒரு …

    • 0 replies
    • 1.4k views
  19. தனியாக நானும் அலைகின்றேன் துணையாக நீயும் வருவாயா தூக்கங்கள் இன்றி தவிக்கின்றேன் கனவாக மட்டும் வருவாயா அன்பே ஆருயிரே அன்பே என்னுயிரே (2) தவமாக நானும் இருகின்றேன் வரமாக நீயும் வருவாயா சுகமாக நானும் தொலைந்துவிட இதமாக உன்னை தருவாயா அன்பே ஆருயிரே அன்பே என்னுயிரே (2) காதல் ஒன்றின் அர்த்தம் கண்டுகொண்டேன் பெண்ணே நெஞ்சுக்குள்ள உன்ன பூட்டி வைத்த பின்னே சாயங்கால பூவாய் நீயும் பூத்திருந்தாய் சாலை தோறும் பெண்ணே உன்னை பார்த்திருந்தேன் (2) மலரே நான் மயங்கிவிட்டேன் மனதில் உன்னை சுமந்துவிட்டேன் (2) உயிரே என்னை வாழவிடு உயிரை கொஞ்சம் வாழவிடு (2) அங்கும் இங்கும் சுற்றும் வாலிபத்தில் பெண்ணே உன் காலுக்குள்ள நானும் சுற்றுகின்றேன் கண்ணே இரவினை பகைத்தேன் விழிகளினால் இதயமும் த…

  20. இனி எம் காலம்!. தெறிக்கும் பொறி பறக்கும் புலி படை கண்டு பகை கலங்கும்! வெளிக்கும்! இனிச் சிரிக்கும்-கதிர் தமிழர் கிழக்கில் உதிக்கும்! எதற்கும் இல்லை கலக்கம்!எட்டு திசையும் இங்கே வெளிக்கும் பதுங்கும் புலி பாயும் இனி பொறுப்பதில்லை!. விலங்கு உடைக்கும்! வெடிக்கும் சிங்களக் கூடம்! வேங்கை அடக்கும்! பேரினத்தீயை! எடுக்கும் ஓட்டம் மகிந்த கூட்டம்! பறக்கும் எம் கொடி தலை நகரில்!

  21. நடந்து சென்ற 2007 நன்மை பயக்கவில்லை நாடி வந்த 2008 ஏ நன்மை பல கொண்டு வா! அழுகையும் அவலமும் அனுதினம் கேட்ட செவிகளுக்கு சிரிப்பும் மகிழ்ச்சியும் தினம் தினம் கொண்டு வா... நடந்த போர்களில் போன உயிர்கள் உடைந்த மனங்களுடன் ஓடிய மக்கள் கிடைத்ததை உண்டு ஏப்பம் விட்ட பரிதாபங்கள் அனைத்தும் அலையில் அகப்பட்ட துரும்பாய் ஓடி மறைந்திட ஓர் புது வழி சமைத்து வா! தாய் ஓர் இடம் தனயன் ஓர் இடம் வாழ்ந்திடல் தகுமா? ஊர் ஓர் இடம் உற்றார் உறவினர் ஓர் இடம் - நான் மட்டும் இங்கு வாழ்தல் முறையோ? பெற்றமும் கன்றும் பிரிந்து வாழ்ந்தால் பாசமும் அன்பும் தான் விளைவதெங்கே? சொல் வீரராய் இருப்பார் செயல் வீர…

  22. நான் இரசித்த கவிதை இது. உங்களுக்காக இங்கு இணைக்கிறேன். எழுதியவரின் பெயர் சிந்து. அடிமைச்சிறை தகர்... பிறப்பிலிருந்து மரணம் வரை அறியாமை உனது வாழ்வானதோ? மழைக்குத் தோன்றி மாண்டு போகும் மண்புழுவா நீ? மலர்களும் காயப்படுத்தாத தென்றல் தான் பெண்கள் புயலாய் மாற்றம் கொண்டால் மலைகளையும் சாய்த்திடுவர் இடுப்பொடிந்து நீயும் தலைவணங்கியது போதும் கொஞ்சம் நிமிர்ந்து நீயும் வாழும் உலகைப் பார் எல்லாமே உனக்குள் அடங்குமடி பெண்ணே பெண்கள் மீது திணிக்கப்படும் பாலியல் வன்முறை ஆண்கள் இச்சை தீர்ந்தபின் சுருக்குக் கயிற்றில் இறுகிச் சாகும் விலங்கினமா பெண்கள்? அடிமை சிறை தகர்த்து சிறகுகள் முளைத்து சுதந்திர வானில் நீயும் பறந்திட வேண்டா…

  23. Started by slgirl,

    பதில் சொல்... காரணம் சொல்ல முடியவில்லையா உன்னால் என்ன இது புது புதிர் போடுகின்றாய்... வேணும் என்று நினைத்த உன் மனம் வேணாம் என்று நினைத்த உன் மனம் நாம் இனி நண்பர்களாய் இருப்போம் என்று நினைத்த உன் மனம் இதேல்லாம் செய்ததும் உன் மனம் ஆனால் இப்போது எதோ சிறுபிள்ளை போல் உனக்கு காரணம் தெரியவில்லை என்று சொல்கிறாயே இது நியாயமா??? உன்னை சொல்லடா என்று அதட்டவில்லை சொல்லாட்டி கதைக்க மாட்டன் என்று சாவால் விடவும் இல்லை சந்திப்புகள் தற்செயலானவை பிரிவுகள் தவிர்க்க முடியாதவை இவை எல்லாம் என் வாழ்வில் நான் அனுபவிக்கும் துன்பங்கள் இதை நான் அனுபவிக்கும் முதல் கட்டதையும் நெருங்கிவிட்டேன் இருந்தும் உன்னிடம் பிரியும் முன் வேண்டுகோள் …

    • 6 replies
    • 1.4k views
  24. ஆதி மனிதன் தொட்டு அண்மைக்காலம்வரை அன்பெனும் பிணைப்பால் பின்னிப்பிணைந்து வாழ்ந்;த நம் உறவுகள் ஏன்தான் இன்று இப்படி? ஓலை வீட்டிலும் ஒட்டிய வயிற்றுடனும் வாழ்தபோது ஒற்றுமையாய் வாழ்ந்த நம் உறவுகள் காசைப்பார்த்ததும் மாறியதோ? கடல் தாண்டி வந்தபின் மாறியதோ? கருணை மனம் எங்கு ஓடியதோ? தன்வயிற்றை ஒட்டவைத்து தன்னுள் கருவாக்கி உன்னை ஊர் போற்ற உருவாக்கிய அன்னைக்கு உதவாமல்? உலகத்தில் நீ எங்கு வாழ்ந்;தாலும் உன்னால் யாருக்கென்ன நன்மை? கண்ணை மறைத்ததோ காசு வந்து உன்னை? பின்னால் ஒருகாலம் உன்னிலை உணரும்போது மண்ணில் இருக்காளே அன்னை? அப்போது நீ எண்ணித் தவித்தென்ன நன்மை? ஆக்கம் இசைக்…

  25. Started by இலக்கியன்,

    விடைபெறும் நேரம் ஏன் உங்கள் விழிகளில் ஈரம் விடை கொடுத்தேன் நானும் விடை பெறும் நீரும் உயிர் விட்ட பின்பும் மறப்பேனா நானும் என் இதயத்தில் நீயும் துடிப்புத்தான் பாரும் என் கவிதைகள் எல்லாம் உன் பெயர்தான் சொல்லும் பட்ட மரத்து இந்தக்குயிலும் உன் வரவை இங்கே நாடும் நீயும் திரும்பி வரும் வரை எசப்பாட்டு இல்லாமல் இங்கு ஏங்கும்

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.