Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கவிதைப் பூங்காடு

கவிதைகள் | பாடல் வரிகள்

பதிவாளர் கவனத்திற்கு!

கவிதைப் பூங்காடு பகுதியில் கள உறுப்பினரல்லாதோரின் கவிதைகள், கவிதை மொழியாக்கம், உலகக் கவிதை, பாடல் வரிகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் யாழ் கள உறுப்பினர்கள் அல்லாதவர்களின் கவிதைகள், கவிதை மொழியாக்கங்கள், பாடல் வரிகள் போன்றன மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
ஈழத்தை சேர்ந்த, பூர்வீகமாகக் கொண்டவர்களின் படைப்புக்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படவேண்டும். ஏனைய கவிதைகள் தரமான கவிதைகளை அறிமுகம் செய்யும் நோக்கில் இலக்கிய மின் இதழ்களில் இருந்து மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. புத்த மைந்தர்களின் புனித்தக் கொள்கைகள்........ கவிதை...... புத்தனிடமும் கேட்கவில்லை புத்த மதத்திடமும் கேட்கவில்லை இறையாண்மை கொண்ட இலங்கைத் திரு நாட்டின் புத்த மதத்தை பின்பற்றும் புத்த மைந்தர்களிடம் கேட்கின்றோம்.... போரை முன்னெடுக்க எந்தப் புனித மதமும் சொல்லுமா...? அந்த மதத்தை பின்பற்றும் அதன் மைந்தர்கள் தான் சொல்வாரா...? ஆம்..! இலங்கையில் சொல்வார்கள் இலங்கையில் மட்டும்தான் சொல்வார்கள்.....! தமிழ் இனத்தை கொல்லுங்கள்....! அவர் இரத்தத்தில் குளியுங்கள்.....! தமிழர் கண்களைப் பிடுங்கி கொத்தும் காக்காய்க்கு போடுங்கள்......! இத்தனையும் சொல்வார்கள் இலங்கையில் மட்டும்தான் சொல்வார்கள்....! எங்கள் உரிமைப் போரை …

  2. நீ நாட்டை ஆழலாமோ...??? குருதி நீரினிலே குளியல் செய்கின்ற மடையன் மகிந்தாவிற்க்கு மக்களாட்சியேன்...??? சினை கொண்ட சமரசத்தை சிதைக்க நினைக்கின்ற வெறி பிடித்த மடையனுக்கு வெள்ளை மாளிகையேன்...??? பிண பூவால் மாலைகட்டி தினம்தோறும் போடுமவன் நாட்டதிபனாகி நாடதனை ஆழலாமோ....??? சுதந்திரத்தை பறித்தின்று சுடுகாட்டில் புதை;துவிட்டு மக்களை பிடித்தின்று மயாணத்திற்கனுப்புகின்ற மாபாவியிவன் நாடதனை ஆழலாமோ...?? ஒளி கொடுத்த உதயத்தை சிறையிலே அடைத்து விட்டு விடியலை பேசுகின்ற வீணாண மனிதனிவன் நாட்டதிபரென்று நாடேறியாழலாமோ...??? - வன்னி மைந்தன் -

  3. மகிந்தவுக்கு ஏழரை ஆரம்பம். புலிகளினி அழிந்தாரென்ற கிழவன் செத்தும் புலிதன் வீரம் மாறாமல் வீச்சோடு மீண்டு எழ மீளவும் புலிகளொடு போராட புத்த புதல்வர்கள். போராடிப் போராடி புலிகளிடம் தோற்றவர்கள் ஈடாடி இயங்க முடியாமல் ஊரெல்லாம் ஒப்பாரி வைச்சு பாரெல்லாம் பழுதென்று பதுக்கின ஆயுதங்கள் தாவென்று வாங்கி தம் பலம் இழந்தவர்கள். கிளிநொச்சி வீழ்ந்திடுமாம் கொடியேற்றிக் குத்தியனை முதலமைச்சராக்கும் கனவோடு மகிந்த மாத்தையா உதயநாணயக்கார கனவுகளில் மண். மாவீரர் மாதம் நெருங்கும் ஐப்பசியில் மகிந்தவுக்கு அட்டமத்தில சனி. சனி பிடிச்சா ஏழாண்டு உலைச்சல் இது சாத்திரம் சொல்லும் விதி. மகிந்தவுக்கும் ஏழரை மாத்த முடியா விதி. ம…

  4. இது எனக்கான பாடல். எனக்கான இந்த பாடல் உங்களுக்கான அடையாளங்களை சுமந்திருக்கலாம் ......... ஆனாலும் -இது எனக்கான பாடலேதான். தரவையிலும் தரிசுநிலத்திலும் பாடிக்கொண்டிருக்கும் ஒற்றைப்பறவையின் பாடலொன்றை ஆழ்ந்து கேட்டிருந்தால், ஆளரவமற்று வெறுமையோடு அடங்கிக்கிடக்கும் பெருவீட்டில் அமைதியோடு முடங்கிக்கிடக்கும் நாயொன்றின் விழிகளை கூர்ந்து பார்த்திருந்தால், கனிநிறை மரத்தில் கிளைதாவி குரலெடுக்கும் அணிலொன்றின் தவிப்பின் காரணத்தை ஒருநாளாவது தேடியிருப்பின், எனக்கான இந்தபாடலின் நியமம் புரிபடக்கூடும். இல்லையேல், ஓசைப்பிணைப்புக்களாலும் வார்த்தைச்சிக்கல்களாலும் உணர்த்தப்படப்போவது எதுவென்று புரியப்போவதில்லை உங்களுக்கு எனது ப…

  5. Started by அஞ்சரன்,

    கையில் நெருப்பிருக்கு என்னிடம் .. பற்றவைக்க தான் திரி இல்லை .. ஆடைக்கடை முன் நின்று பார்த்தால் .. ஆடை யாரு கொடுப்பார் இலவசம் .. ஆயிரம் கேள்வி எழும் மனதில் .. ஏதாவது ஒரு கேள்விக்கு பதில் வேணும் .. என்னை துறந்து பார்க்க விரும்பி .. அதுக்கான படிப்பை ஏன் நான் படிக்கவில்லை .. வீழ்த்தவர் எல்லோரும் அரக்கராம் பூவியில் .. அதுவும் தமிழாரம் வரலாற்றில் எப்ப மாறும் .. ஆரியன் கொன்றது தமிழனை என்றால் .. முருகன் வதைத்தது யாரை என்னும் கேள்வி .. தமிழ் மொழியா அல்லது தனி இனமா .. யாரு பிரித்தார் ஏற்ற தாழ்வை .. ஆண்டாண்டு காலம் கடைபிடித்த எல்லாம் .. நவீன யுகத்தில் மட்டும் எப்படி பிழையானது .. என் பாட்டன் சிந்திக்கவே இல்லையா .. எனக்கு மட்டும் எப்படி வந்தது …

  6. கருகாத பூக்கள் .....!!!-------எம் .....மண்ணில் தான் ....கறுப்பு பூக்கள் அழகழகாய் ....பூத்தது - பூத்த பூக்கள் ....வாடிவிட்டதே - நினைக்காதீர் ....எம் மனதில் என்றும் வாடாமலர் ....உலகில் என்றும் வாடாமலர்கள் ....!!!எம் மண்ணில்தான் கடலில் ....நீலபூக்கள் பூத்தன ....பூத்த பூக்களை அலை ....அடிதுவிட்டதே - நினைக்காதீர் ....கடல் நீரில் பூத்த செந்தாமரைகள் ....காலத்தால் அழியாத தாமரைகள் ...!!!கறுப்பு எண்ணங்களாலும் ....கருப்பு ஜூலையாலும் ....கருத்தரித்ததே எம் கருப்பு பூ ....கறுப்பு சிந்தனைகளால் ....கருக்கபட்டபூக்கள் காலத்தால் ....கருகாத பூக்கள் .....!!!

  7. எனக்குள் நானே சிரித்துக்கொண்டேன் என்னை அவர்கள் பைத்தியம் என்றார்கள் இப்போது அவர்களைப் பார்த்து நான் சிரித்துக்கொண்டேன் பாவம் அவர்கள் பைத்தியம் என்று! :D

    • 6 replies
    • 956 views
  8. http://www.youtube.com/watch?v=29KnF92oRog&feature=player_embedded பார்த்ததில் விரும்பி ரசித்தது.உங்களுக்காக இங்கே இணைகிறேன். நன்றி : முகநூல்

  9. ஈழத்தமிழனின் குரல்: "என்று திரும்பும் எம் வாழ்வில் விடியல்?" எதிர்பார்த்து இருந்தோம்! சிங்களம்- கொன்று குவித்த பின்னர் தானோ உலகம் பார்வை திருப்பும் என்று குமைந்தோம்!???? வண்ண வான வேடிக்கை கண்டு நாளாச்சு தினம் வான் பொழியும் குண்டுமழை காணும் நிலையாச்சு! உரிமை கேட்டு குரல் கொடுத்தோம்! உயிர் நசுக்குகின்றான் எங்கள் சந்ததிகள் அனைவரையும் சாகடிக்கின்றான்! மரத்தினடி ஒதுங்குகின்றோம் நிழலுக்காக அல்ல மரணம் ஓட்டிக்கொண்டு வந்து விட்டதென்ன சொல்ல?!"மருந்துக்காகவேனும் இங்கு உணவைக் காணவில்லை வற்றிப்போயாச்சு வடிக்க கண்ணீரும் இல்லை! புலம் பெயர்ந்த உறவுகளே 'வேரின் நிலை கண்டீர்! வேற்று நாட்டில் இருந்தாலும் எம் வேதனைகள் அறிவீர்! ஈழத்தமிழர் வேதனையை எங்கும் சென்று உரைப…

  10. இதோ இன்றைய பொழுதுடன்.......... ஒரு அரசியல் வேட்டைக்காரன் -எம்மிடமிருந்து ....... விடைபெறுகிறான்!! அலைகடல் கடந்தும் - நிலை தளராது.... வேரினை மட்டும் -கடலடி துழைத்து..... மண்ணில் - படரவிட்டு.......... ஒரு விருட்சம்....... எமை விட்டு விட்டு விலகி ........ தன் முகம் சாம்பலாக்கி ..... சரித்திரம் முடிக்கிறது! பாவபட்ட இனத்துக்காய் ... பகலையும் இரவையும்... சமமாய் மதித்து உழைத்த சரித்திர புருசனே........ போய் வா இந்த பொய் உடம்பு தொலைத்தாய்! நீ போட்ட அத்திவாரம் ஆட்டம் காணாது அதுவரை - உம் தூக்கம் கலைக்க மனசு வராது........... வென்றோம் என்றொரு சேதி மெல்ல வந்து காதில் உரைக்கும்........ காலம். வரும்...! அப்போ …

    • 6 replies
    • 1.3k views
  11. நான் ஸ்ரீலங்கன் இல்லை ஒரு பறவையையும் விட்டுவைக்காத படுகொலையாளிகள் எமை பயங்கரவாதிகளென அழைக்கின்றனர் ஆஷா,ஒடுக்குமுறைக்கு எதிராக போராடுபவர்களை பயங்கரவாதிகள் என்றுதான் அழைப்பார்களா? வேற்றினம் என்பதனால்தானே நமது சந்ததிகள் அழிக்கப்படுகின்றனர் ஒரு கல்லறையையும் விட்டு வைக்காத அபகரிப்பாளர்கள் எமை பிரிவினைவாதிகளென அழைக்கின்றனர் ஆஷா,அபகரிக்கப்பட்ட நாட்டிற்காய் போராடுபவர்களை பிரிவினைவாதிகள் என்றுதான்அழைப்பார்களா? வேற்று நாட்டவர்கள் என்பதினால்தானே நமது நாடு ஆக்கிரமிக்கப்பட்டிருக்கிறது நாமொரு இனம் எமக்கொரு மொழி எமக்கென நிலம் அதிலொரு வாழ்வு வீர நிலத்தில் புதையுண்டிருக்கும் என் தோழியே! உறிஞ்சப்பட்ட குருதியும் மனிதப்படுகொலைகளும் அழித்துவிடுமா ஓரினத்தின் சரித்திரத்தை…

  12. முன்பெல்லாம் இருள்பூத்த நிசப்தத்தில் _அவை இயங்குதல் வழக்காதலால் ஆங்காங்கே எச்சங்களாய் ................! வேரோடுதல் போல ஓடிக்கொண்டிருக்கும்_ அப்பப்ப தன்னிலை மறந்து சிலகணம் வாய்கால் நீரோடுதல் போல வெளிவரும் ... பூசாப்பொருள் இதுவென்று பேசாதநாளில்லை உற்றவர் காசா பணமா தருமிதுவென்று ௬சாமல் முன்னின்று குறிவைத்தனர் . வளைதல் நெளிதல் வசப்படல் கொண்டதில்லை . உயர்ந்தவனை கொண்டாடியதுமில்லை கீழிருந்தவனை துண்டாடியதுமில்லை _ஆதலால் மாவிலை தோரணங்கண்டதுமில்லை. முகவரியில்லாத முகத்திற்கு சுகவரிகளை பரிசளித்த போதிலும் தகவிலா நிலைகளை வகைப்படுத்திய போதிலும் மிகைப்பட்டுக்கொண்டதுமில்லை இதமான இறந்தகால நினைவுடன் சூனியவாதமொன்றை கடக்க முனைகையில் , …

  13. இந்த வார ஆனந்த விகடன் (18.1.17) இதழில் தனிப்பக்கத்தில் வெளியாகியுள்ள எனது இரண்டு கவிதைகளை யாழ் களத் தோழர்களுடன் பகிர்ந்துகொள்வதில் மகிழ்ச்சி.... யாழ் களத்தோழர்கள் எனக்குத் தரும் உற்சாகத்துக்கு நன்றி! நள்ளிரவில் சூரியன் உதிக்கும் வீடு இரண்டு ஷிப்ட் வேலைக்குப் பின் நள்ளிரவில் வீடு சேர்பவன் சூரியனை குண்டு பல்புக்குள் உதிக்கவிடுகிறான். தன்னை மலடாக்கிய உணவை இல்லாளுடன் கதை பேசியபடி உண்கிறான். ஆடு மாடுகளின் மேவு ஆத்தா அப்பனின் அன்றைய பிரச்சனைகளை அலைக்கற்றைவழி விசாரித்து அறிகிறான். டிஜிட்டல் இந்தியாவின் வல்லசுரக் கனவோடு போட்டியிட முடியாமல் பின்தங்கும் கனவோடு உறங்கப் போகிறான் சூரியனை அணைத்துவிட்டு…

  14. நான் தேடும் ........... போதும் நான் வெச்ச பாசம் இரு கண்கள் போதாது… சோகம் கரைக்க கண்ணீர் கரக்கிறது காதல் பயணத்தில் நானே ஒரு பாவம் இதயத்தின் நிம்மதியைத் தேடி துறந்த ஜன்மம் போல் கனத்தபடி நித்திரை அடைத்து இன்று வாழ்கிறேன்........ விழிகளில் கரைந்து மடலில் வரைந்தது _சுவிற்மிச்சி(MCgaL

    • 5 replies
    • 1.6k views
  15. பதின்மூன்று கிடந்து படும் பாடு போதும் -பா.உதயன் இந்த முறையும் இந்தியா சொல்லலாம் 13 ஐ பார்த்து கொடுக்கச் சொல்லி செய்கிறோம் என்று இலங்கை சொல்லும் பின் தெரியாதது போல் மறந்து போய் இருக்கும் கொடுங்கள் என்றும் கொடுக்கிறோம் என்றும் சும்மா சொல்லிச் சொல்லியே காலம் போச்சு அவர் அவர் நலனில் அக்கறையே தவிர அது பற்றி அவர்களுக்கு கவலையும் இல்லை ஏமாத்துக் காரன் இலங்கை என்று இன்னும் இந்தியாவுக்கு தெரியாமல் இல்லை இந்தியாவுக்கு தலையும் சீனாவுக்கு வாலும் காட்டும் இந்து சமுத்திரத்தில் கிடக்கும் நழுவல் மீன் இது என்று இந்தியாவுக் இன்னும் புரியாமல் இல்லை இருவரும் சேர்ந்து இன்றும் ஏமாத்துவது ஈழத் …

    • 5 replies
    • 850 views
  16. Started by nunavilan,

    ஊர் நேற்றெம் ஊரிருந்த காற்றில் இதமான குளிரும் நேர்த்தியான சுகமுமிருந்தது சாணிமெழுகிய தலை வாசலில் சந்தனக் காப்பென்னும் புனிதமிருந்தது. வாசலிறங்கக் கோலமிருந்தது. வயலில் நம்பிக்கை விளைந்தது. வெளியே அறியப்படாத எத்தனையோ உள்ளே வெளிச்சம் நல்கின. அரைஞாண் கயிற்றுக் கோவணத்திலும் குறுக்காகக் கட்டிய மாராப்பிலும் நிறையும் மனமிருந்தது. மின்சாரம் மினுங்காத ஒழுங்கைகளில் இருளெனும் எழிலிருந்தது. அள்ளிய ஒரு மிடறு நீரிறக்க சுவாசம் சீராகும் சுகம் தெரிந்தது. ஆலமரம் விசிறிய காற்றின் தாலாட்டில் தேவ நிலை சித்தித்தது. ஊர் நிறைந்த கோயில்மணி நாதமும், கூத்துப் பாட்டும், நாதஸ்வர மங்கலமும் தூக்கித் தட்டாமாலை சுற்றிவிட்டு எங்கே துரத்திப் பிடியென்பதாய் ப…

    • 5 replies
    • 653 views
  17. காதலுக்கு இரண்டு கண்கள் ------------------------- நம் காதலுக்கு இரண்டு கண்கள் ஆசை, பயம் ஆசை பார்க்கின்றது பயம் மூடிக்கொள்கின்றது சூரியன் இல்லாமலேயே வெப்பம் மூட்டுகின்றது ஒன்று சந்திரன் இல்லாமலே குளிரைத் தூவுகின்றது மற்றொன்று பொங்கித் தணியும் கடலைப் போல ஒன்றை யொன்று இழுக்கின்றது உச்சத்தில் நிற்கும்போது உயிரைக் கீழிழுக்கின்றது ஒன்று உயிரே போனதாய் உணரும் போது உயர்த்தி விடுகின்றது மற்றொன்று காதல் கத்தியைப் போல காயப் படுத்தி விடும் காதலிப்பவரை காதல் மட்டும் காயமில்லாமல் தப்பி விடும் கத்தியைப் போல அதனால் தான் இன்னும் காதலும் காதலுக்காக கட்டப்படும் சமாதிகளும்....

  18. நேற்றெமது ஊரை அழிக்கவும் இன்று உமது ஊருக்கு தீ வைக்கவும் எங்கிருந்து புறப்பட்டனர்? விமானங்கள் அன்றெம் நிலத்தில் கொட்டிய அதே பதற்றம் இன்று உம் ஊர்களில் நண்பனே உனக்காய் நான் குரல் கொடுப்பேன் ஏனெனில் நான் அறிவேன் இழப்புகளின் வலியை ரிஷான், நேற்றெம் வீடுகளை சிதைத்து இன்று உம் வீடுகளை எரிப்பது ஏன்? நண்பனே உனக்காய் நான் அவதியுறுவேன் ஏனெனில் நான் அறிவேன் வீடற்ற பொழுதுகளை நேற்றெம்மீது குண்டுகளை எறிந்து இன்று உம்மீது வாள்களை வீசுகின்றவர் யார்? நேற்றெமை கொன்ற குண்டுகளில் படிந்திருந்த அதே வெறியே இன்று உமை வெட்டும் வாள்களில் நண்பனே உனக்காய் நான் துடிப்பேன் ஏனெனில் நான் அறிவேன் காயங்களின் நிணத்தை ரிஷான், எம் கோவில்களை உடைத்து உம் பள்ளிவாசல்களையும் இடிப்பது ஏன்? நண்பனே உன…

    • 5 replies
    • 874 views
  19. காலத்தின் தேவை கருதி கணப்பொழுதில் வரைந்த கிறுக்கல் . . ஈழப்புதையல் தேடி உழுது தேய்ந்த சந்தணக்கலப்பைகளை மனதில் இருத்தி கிறுக்கியுள்ளேன் . . . காலம் கண்மூடி திறப்பதற்குள் கரைந்து போய்விடுகின்றது. எம் உறவுகளே கரங்கள் எம்முடன்தானே பலமாக இருக்கின்றுது. உழைக்கின்றோம் ஒரு சிறு தொகை மனமுவந்து உதவுவோம். ஈழப்போர் இறுதிக்கு வந்து நிற்கின்றது. எதிரியின் எறிகணை எல்லைக்குள் எம்மக்கள் தவிக்கின்றார்கள். இந்தக்கணத்தில் நாம் செய்யவேண்டியது அவர்கள் கேட்டுக்கொள்வதும் ஓன்றே ஒன்றுதான். அன்பின் புலம்பெயர் உறவுகளே உதவிக்கொள்ளுங்கள். இது ஒரு கடன் நாம் கட்டாயம் திருப்பித்தருன்றார்கள் ஒருவர் கேட்கும்போது கைவிரிக்கும் பழக்கமற்றவர்கள் நாம். கொடுத்துச்சிவந்த கரங்கள் எமது கரங்கள் இன்னும் கொடுப்போம் கொட…

    • 5 replies
    • 1.3k views
  20. பெண் என்னும் பூகம்பம் துணிவிருந்தால் துயர் அகலும். எழுச்சியுற்றால் மீட்சி கிடைக்கும். ஆதிக்கக் கோலோச்சும் அநீதிக்கு எதிராக பெண் என்னும் பூகம்பம் புரட்சியோடெழுந்தால் சாதிக்கமுடியாதென்று சரித்திரம் எதுவுமில்லை. போராளியான பெண் ஆணுக்கு நிகராக அனைத்திலும் மிளிர்கிறாள்;. அல்லாதவள்... அன்றாட அல்லல் மீள அல்லும்,பகலும் அவதியுறுகிறாள். புலம் மாறி வந்து புதிய கல்வி கற்றவர்கள் பொல்லா விலங்குடைத்து புதிய பலம் பெற்றவர் நாம் சேலைக் கடைக்குள்ளும் , சின்னத்திரைக்குள்ளும் புதையுண்டு கிடக்கிறோமே..... வேண்டாமென்று சொல்லவில்லை வீறு கொண்டெழுந்து..... வேகும் விதியோடு வாழ்விற்கேங்கும் எங்கள் சோதரிகள் கண்ணீரை சிறிதேனும் துடைக்கலாமே. அன்னையமும் அதை மே…

  21. தமிழர்நாம் உரிமை பெற்று தரணியில் நிமிர்ந்தே வாழ தனியொரு நாடு வேண்டும் - ஆனால் தடைபல உண்டு உண்மை தடைகளைத் தகர்த்து வீச தாயக மண்ணில் வீரர் தமதுயிர் துச்சம் என்றே தளர்வின்றிப் பணியில் உள்ளார் களத்திலே நிற்கும் அந்தக் காளையர் உடன் பொருதக் கடினமே அதை அறிந்த கயவரின் கொடுமை கேளும் மனிதரின் உரிமை என்று மற்றவர் போற்றும் சட்டம் மஹிந்தவின் ஆட்சி தன்னில் மரணமாய்ப் போன தன்றோ? கடத்தலும் பணப் பறிப்பும் கைதியாய் அடைத்து வைப்பும் கொலைகளும் செய்து நிற்கும்; கொடியவர் செயல் உரைப்போம் மனிதனை மிதிக்கும் அந்த மந்திகள் செயலை இந்த மாநிலம் அறியும் வண்ணம் மன்றிலே உரைத்து நிற்போம் பொங்கிடும் தமிழர் நாளில் பொலிவுடன் நாமும் கூடி …

    • 5 replies
    • 1.1k views
  22. துப்பாக்கி எப்போது பூப்பூப்பது -- அன்பனே உன் தோழியைவிட துப்பாக்கியை நேசிக்கும் தோழனே என்னோடு மெழுகுவத்திகளும் அழுதுகொண்டிருக்கும் இந்த மெல்லிய இரவில் கடிதத்தில் விழும் என் கண்ணீர்ச் சொட்டு கடிதத்தில் அழிவது மெல்லினமும் வல்லினமும்தான் கண்ணீரில் அழிவது தமிழினமே அல்லவா? நாங்கள் நட்சத்திரங்களைப் பார்த்து நாளாயிற்று எங்கள் வானத்தைப் புகைமண்டலம் போர்த்திருக்கிறது மனிதன் மட்டும்தான் சிரிக்கும் ஜீவராசியாம் அப்படிப் பார்த்தால் இப்போது இங்கு யாரும் மனிதராசி இல்லை. காதலா நீயும் நானும் ரகசியமாய் நடந்து போகும் ராத்திரிச் சாலை இப்போது - வெடிகுண்டுகளின் விதைப் பண்ணையாகிவிட்டது …

    • 5 replies
    • 1.2k views
  23. பல்லவி தமிழ் மண்ணை முத்தமிடு தமிழா உன் தாய் மண்ணை முத்தமிடு தமிழா ஈழ மண்ணை வட்டமிடு தமிழா - உன் ஈர மண்ணை அள்ளியெடு தமிழா எம் மண்ணை அள்ளித் தின்றேனும் நாம் ஈழத் தமிழனாய் வாழ்வோம் குருதியில் தோய்ந்த பிஞ்சுகளை எதிரியின் குண்டுகள் தின்கிறதே போரிலே பாயும் பிள்ளைகளை பதுங்கிடும் குழிகள் காக்கிறதே சரணம்-1 வீட்டினை இழந்து நாட்டினை இழந்து காட்டிலே நாங்கள் வாழ்ந்திடலாமா உணர்வினை இழந்து உறவினை இழந்து சோற்றிலே கைளைப் புதைத்திடலாமா போரை நிறுத்தென தமிழரின் குரல்கள் உலகத்தின் செவிகளில் ஒலிக்கிறதே செவிகளை விழிகளை மூடிய உலகம் செக்கு மாட்டினைப் போல நகர்கிறதே எதிரிகள் வருகிற திசைகள் பார்த்து ஈழத் தமிழரின் படைகள் பாய்ந்திடுமே சரணம்-2 …

  24. பிரிதலின் நினைவுகள் உயிர் பிரியும் வரை பிரிவதில்லை அதன் நினைவுகள் காதல் காதலானது கண்களில் தினமும் ஈரமானது காலமும் என்னோடு பாரமானது கடந்திடாத நினைவுகளும் என்னுள் உயிரானது காதலே நீ என்னை தீண்டியதேன் காதலே இன்றும் என்னுள் நீ வாழ்வதேன் காதல் கொண்டவள் என்னை விட்டு பிரிந்ததேன் காதலி தந்த காதல் இன்றும் என்னுள் வாழ்வதேன் உண்மையான காதல் என்னுள் வந்ததாலா அல்லது உண்மையாகவே அவளை நான் காதல் கொண்டதாலா நேசம் அது உன் வாழ்வில் வேஷம் என் வாழ்வின் நேசம் உண்மையான பாசம் என்னில் நீ தந்த நேசம் என் வாழ்வின் சோகம் உன்னில் நான் தந்த பாசம் என் உயிர் பாசம் பிரிதலோடு நீ பிரிந்தாலும் என் உயிர் துடிப்போடு தொடர்ந்திடும் என் நேசம் என்னுள் இருக்கும் இதயம…

    • 5 replies
    • 5.1k views
  25. நாம் செய்த தியாகமெல்லாம் ஓட்டைக் குடத்தில் பால் தானா நாம் சிந்திய ரத்தமெல்லாம் கடலில் பெய்த மழை தானா நாம் பட்ட பாடெல்லாம் காற்றில் செதுக்கிய சிலை தானா நாம் கொண்ட நினைவெல்லாம் ஊமை கண்ட கனவு தானா நாம் எழுதிய மடலெல்லாம் தண்ணீரில் இட்ட கோலம் தானா நாம் போட்ட கூச்சலெல்லாம் செவிடன் காதில் ராகம் தானா நாம் அழுத அழுகையெல்லாம் தண்ணீரில் மீன்விட்ட கண்ணீர் தானா நாம் எல்லோரும் மொத்தத்தில் கவனிப்பார் அற்ற இனம் தானா http://gkanthan.wordpress.com/index/eelam/inam/

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.