கவிதைப் பூங்காடு
கவிதைகள் | பாடல் வரிகள்
கவிதைப் பூங்காடு பகுதியில் கள உறுப்பினரல்லாதோரின் கவிதைகள், கவிதை மொழியாக்கம், உலகக் கவிதை, பாடல் வரிகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள உறுப்பினர்கள் அல்லாதவர்களின் கவிதைகள், கவிதை மொழியாக்கங்கள், பாடல் வரிகள் போன்றன மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
ஈழத்தை சேர்ந்த, பூர்வீகமாகக் கொண்டவர்களின் படைப்புக்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படவேண்டும். ஏனைய கவிதைகள் தரமான கவிதைகளை அறிமுகம் செய்யும் நோக்கில் இலக்கிய மின் இதழ்களில் இருந்து மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
5128 topics in this forum
-
காதலிக்கிறேன் என்றாய்... பல பல பொய்கள் புனைந்து புகழின் விளிம்பில் இட்டு சென்றாய்... காதலில் இது சகஜம் என நினைத்தேன்... இன்று நீ... அதையே வேறோருவளிடம் சொல்லிக்கொண்டிருக்கிறாய்.... சற்றும் மாறாமல்.....
-
- 22 replies
- 1.7k views
-
-
இன்னும் கொஞ்சம் பசியுள்ளபோதே நிறுத்திவிட வேண்டும் உணவை;உணவே மருந்து இன்னும் கொஞ்சம் சக்தியுள்ளபோதே அடக்கிவிட வேண்டும் கலவியை; நிறைந்த இல்லற வாழ்வினை அனுபவித்த பின்னர் ஆன்மீக நாட்டம் கொண்டு இல்லற சுகத்தை விட வேண்டும் இன்னும் கொஞ்சம் ஈட்ட முடியும் போதே துரத்திவிட வேண்டும் பணத்தை. பணத்துக்கு நீ அடிமையாகி விடுவாய் இன்னும் கொஞ்சம் வாழமுடியும் போதே விட்டுவிட வேண்டும் மூச்சை. கிடந்து அழுந்தாமல் இந்த முயற்சிகளுக்கும் - முடியாமைகளுக்கும் இடைவெளியில் பாசியாய் மிதந்து கொண்டிருக்கிறது பாவப்பட்ட மனித வாழ்க்கை. படித்து சுவைத்தவை . _________________
-
- 4 replies
- 894 views
-
-
இப்ப போகலாமென மனம் அடித்துக் கொள்கிறது. 83இன் பின்னர் மறந்து போயிருந்தவையெல்லாம் நினைவிற்குள் மீண்டன. கறுப்பு வெள்ளைப் போட்டோ ஆல்பம், புத்தகக் கவருக்குள் ஒளித்து வைத்த காதல் கடிதங்கள், திண்ணைச் சுவரில் எண்ணெய் பிசுக்காய் அப்பியிருக்கும் ஆச்சியின் அடையாளம். பின்முற்றம் கக்கூஸ் கிணற்றடி இத்தனை காலமாய் மறந்து போயிருந்த அனைத்தையும் கூட்டி நினைவிற்குள் மீட்க புகாராய் எதுவும் ஒட்டமாட்டேன் என்கிறது. என் மண் என் நாடு என் மக்கள் படபடக்கின்றது மனம் தங்குவதற்கு வசதியான இடம் சப்ப “சுவிங்கம்” சாப்பாட்டு ஒழுங்கும் போக முன்பே செய்ய வேண்டும். இல்லாதவர்களுக்குக் குடுக்க கொஞ்ச பழைய உடுப்பு சொக்லேட்டுப் பெட்டிகள், …
-
- 4 replies
- 1.5k views
-
-
-
எங்கள் விடுதலையின் பொருளறியும் கண்முன் விரிந்து கனவுவெளியெங்கும் விதைந்து கிடக்கிற எங்கள் மீதான வன்மங்கள் ஒருநாள் ஓர்மமாய் எழும். அன்று எங்கள் தீ விரல்கள் இப்பூமியெங்கும் தணலேற்றும்….. தமிழச்சிகளின் மார்பையறுத்தவனும் பிறப்புறுப்பை மிதித்தவனும் மரணத்தின் வலியறியும் விதியெழுதும் நாளின் பொழுதறியும் - எங்கள் விடுதலையின் பொருளறியும்.... 12.03.2012 (நிர்வாணமாக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட பெண்போராளிகளின் ஒளிப்படங்கள் பார்த்த வலியின் வெளிப்பாடாய் இக்கவிதை)
-
- 3 replies
- 978 views
-
-
கருவினில் அவள் வயிற்றினில் உதைந்தோம்..! வளர்கையில் அவள் மார்பினில் உதைந்தோம்..! பள்ளிப் பருவத்தில் அவள் ஆசைகளையே உதைந்தோம்..! வளர்ந்த பின் அவளையே உதைகிறோம் இறுதியில்.. தனிமையில் தள்ளுகிறோம்..! இருந்தும் அவள்.. இன்னும் எங்களையே நினைக்கிறாள்.. உருகிறாள் அழுகிறாள் அன்பைப் பொழிகிறாள்.. அவள் தான் அம்மா...! அன்பு மக்களாய் அவளுக்கு நாம் என்ன அளித்தோம்..???! வெறும்..ஏமாற்றங்களே...! பதிலுக்கு அவளோ இன்னும்.. அளிப்பது அனுதினம் அன்பும்.. ஊக்கமும்..! அன்னையை கடவுளாய் தொழ வேண்டாம் பூக்களால் பூஜிக்க வேண்டாம் பொன்னால் அலங்கரிக்க வேண்டாம் பட்டால் போர்க்க வேண்டாம் பரிசால் குவிக்க வேண்டாம்.. அவள் பேசும் ஒரு வார்த்தை…
-
- 8 replies
- 2.1k views
-
-
நெருப்பாற்றில் நெகிழ்ந்துருகி நெட்டுயிர்க்கும் கணமதில் கறுப்பாடாய் கலந்துகலக்கிய பொறுப்பானவரே.......................... நிறுத்திய ஒரு பயணத்தால்_ எம் குருதிகுடித்தவன் கோரப்பற்களை மறைத்தீரே ............. காத்திருந்து கருவறுக்கவா தேர்ந்தெடுத்து அனுப்பினோம் , கொன்றொழித்து , எம்மண்தின்றழித்து, நின்றபகை நிறம்பிரிகையில் உரமாய் கரங்கொடுக்க உணர்வெழுந்தால் உன் குருதியும் தகுதியற்றதே ,! அவலகுரல்களின் எதிரொலிகளிலும் , அங்கமிழந்தலையும்_ ஒரு தலைமுறையின் கண்ணீரிலும் , எங்கென்றே தெரியாதுபோன உறவுகளின் உணர்வுகளிலும் , எஞ்சிப்போன எம் எலும்புகளின் வீச்சத்திலும் , இருந்தெழுந்த வாக்கேயிந்த வாழ்வுதந்தது இருப்பிற்காய…
-
- 3 replies
- 1.1k views
-
-
பொய்மையும் கயமையும் கொட்டமடிக்கும் வேளையில் வாய்மையும் நீதியும் நடைபயிலவேண்டும் நாணிக் குறுகி நிற்கும் என் இனம் வீறு நடைபோடவேண்டும் அடிமைச் சங்கிலியை உடைத்த தமிழச்சிகள் தரணியில் வாழவேண்டும் கறையான் புற்றில் குடியிருக்கும் பாம்புகள் குளறியோடவேண்டும் தகரக் கொட்டகை வாழ்வு உக்கியே போகவேண்டும் உழுத்த எம்வாழ்வு உயரவே வேண்டும் எங்கள் நண்டுக்குணம் மாறி திமிறித் திரண்டால் நடக்கும் இவை நடக்குமா ??????????
-
- 25 replies
- 2.5k views
-
-
முன்பெல்லாம் இருள்பூத்த நிசப்தத்தில் _அவை இயங்குதல் வழக்காதலால் ஆங்காங்கே எச்சங்களாய் ................! வேரோடுதல் போல ஓடிக்கொண்டிருக்கும்_ அப்பப்ப தன்னிலை மறந்து சிலகணம் வாய்கால் நீரோடுதல் போல வெளிவரும் ... பூசாப்பொருள் இதுவென்று பேசாதநாளில்லை உற்றவர் காசா பணமா தருமிதுவென்று ௬சாமல் முன்னின்று குறிவைத்தனர் . வளைதல் நெளிதல் வசப்படல் கொண்டதில்லை . உயர்ந்தவனை கொண்டாடியதுமில்லை கீழிருந்தவனை துண்டாடியதுமில்லை _ஆதலால் மாவிலை தோரணங்கண்டதுமில்லை. முகவரியில்லாத முகத்திற்கு சுகவரிகளை பரிசளித்த போதிலும் தகவிலா நிலைகளை வகைப்படுத்திய போதிலும் மிகைப்பட்டுக்கொண்டதுமில்லை இதமான இறந்தகால நினைவுடன் சூனியவாதமொன்றை கடக்க முனைகையில் , …
-
- 6 replies
- 993 views
-
-
ஒரு மீனவ நண்பனின் ஆட்டோக்கிராவ்(f) நடு இரவின் முழு நிலவை முகில் மறைத்து, விடிகாலைத் தோற்றங் காட்டும். கடுகளவு பயமின்றி நடுக்கடலில் வலை பரப்பி விழித்திருந்து கதை பகிர்வோம். 'சிவசோதி'யில் 'படகோட்டி' 'ஜெய்ஸி'யில் 'பச்சை விளக்கு' எம்.ஜி.ஆர் - சிவாஜிக்காய் பட்டிமன்றம் தூள்பறக்கும். புறோக்கர் புலோமினா புதுவரவு மணியக்கா இவர்களுக்காய் பட்டிமன்றம் திசைமாறும். கடல் மீனின் வரவுக்காய் விண்மீன்கள் செலவாகும். செட்டியைக் கொண்டான் உச்சி வர விடிவெள்ளி முளைத்தெழும். வலை நிறைந்த மீனுக்காய் மனம் நிறைந்து எதிர்பார்க்கும். வலை வளைத்து... வலித்து கரை நோக்கி படகேகும். வெள்ளை மணற் பரப்பில் வெளிச்சவீடு எழுந்து நின்று ஒ…
-
- 10 replies
- 2.2k views
-
-
எனக்கொரு தேசம் எடுத்திட வேண்டும். முடியாட்சி அதிகாரதில் முடங்கிய நான் குடியாட்சிக் காலத்தில் குதூகலமடைந்தேன் ஆதிக்க வெறியர் அதிகாரம் ஓங்க ஆளுமையிழந்து அவதிப்பட்டேன். நாடுகள் தோறும் புரட்சிகள் ஓங்க நானும் அங்கே மறுபிறவி எடுத்தேன் விடுதலை என்று நாமம் சூட்டி விருப்புடன் என்னை வளர்த்தனர் மக்கள். இலங்கைக்கு வந்த அன்னியர் பிடிக்க இழுபட்டுத் தவித்தேன் பல காலம் இனத்துவேசிகளிடம் அவர் விட்டுச் செல்ல இன்னல்கள் பட்டேன் சில காலம் சுயநலம் காத்து அரசியல் பேசியோர் சுதந்திரமென்று கோசமிட்டார்கள் தமிழீழம் என்று பெயரை வைத்து தரணியிலே அவர்தம் புகழ் சேர்த்தார். உணர்வுள்ள தொண்டர்கள் ஒருசிலர் சேர்ந்து உணர்ச்சியுடன் என்னைத் தத்தெடுத்தார்கள் த…
-
- 0 replies
- 717 views
-
-
பசியின் வலி பார்வையில் தெறிப்பு முல்லையின் மைந்தர்கள் மற்றவர்களுக்கு பசி போக்கிய காலம் போய் ஒரு பிடி சோறுக்காய் நாலுகால் பிராணிபோல் ஆணவத்தின் பின்னால் ஆரோகணிக்கும் அவலம்தான் என்ன ? புலத்திலே புறணி படிக்காமல் பேச்சைக் குறைத்து செயலை கூட்டினால் நாலுகால் இருகாலாக வருமே!! ஒருநாளிற்கு ஒரு யூறோ போக்கிடுமே என் இனத்தின் இழிநிலையை ஒருவேளை சிங்கவம்சங்களுக்கும் நாளை இதே நிலை வரலாமோ ?? இப்பொழுது சிங்கங்கள் சிங்காரமாய் எம் நிலைகண்டு சிரிக்கலாம் அவர்களுக்கும் பசி ஆழிப்பேரலையாய் வந்தபொழுது கைகொடுத்தோமே ஏனெனில் நாங்கள் தமிழர் !!!!!
-
- 6 replies
- 996 views
-
-
வலைப்பூவில் எழுதும் தீபிகாவின் கவிதையில் பிடித்த கவிதையொன்று. உண்மை அறியும் பொய்கள் சமாதானம் தருவிக்கப்பட்டதாய் சொல்லப்படுகிற எனது நிலத்தில் வீதிகளை விழுங்கிக்கொண்டு வளர்ந்திருக்கிற விளம்பர மரங்களின் நிழலில் நாய்களுடன் சேர்ந்து வீடுகள் பறிக்கப்பட்ட உடல்களும் படுத்துக் கிடக்கின்றன. திரும்பிப் பெறமுடியா இழப்புக்களோடு திரிகிற சனங்களின் முகங்களில் படரமுடியாத மகிழ்ச்சியின் ரேகைகள் மிச்சமிருக்கும் வாழ்க்கையை எதிர்பார்ப்புகளற்று செலவு செய்கின்றன. சிறைப்பிடித்து காட்சிக்கு வைத்திருக்கும் மிருகக்காட்சிச் சாலை விலங்குகளை பார்க்கும் ஆவல் நிறைந்த அதே கண்கள் குளிர்சாதனப் பேரூந்துகளில் வந்திறங்கி கும்மாளமிட்டபடி ஊரெங்க…
-
- 1 reply
- 751 views
-
-
''அந்த செய்திக்காக காத்திருக்கின்றேன்'' ~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~ அந்த செய்திக்காக, நாளை எமக்கு ஏதாவது நல்ல செய்தி வரும் என்று அந்த செய்தி என்னுடைய காதுக்கு கிட்டுமோ ? என மனம் தினமும் ஏக்கத்தில் காத்திருக்கின்றது ....... ஆனால் வரவேண்டிய அந்த செய்தி வரவில்லை ! அந்த செய்திக்காக மீண்டும் காத்திருக்கின்றேன் ...... வந்தன பல செய்திகள் வந்தன அவை எவையும் நான் எதிர்பார்த்திருக்கும் செய்தியாக வரவில்ல்லை ! மாறாக செய்திகள் பல வருகின்றன ....... நான் விரும்பாத செய்திகளே தொடர்ந்து வருகின்றது ! நான் எதிர்பார்க்கும் செய்திக்காக தினமும் காலையில் ஆவலாக எதிர்பார்த்து ....... அந்த செய்தி வரும் என்ற அசைக்க முடியாத நம்பிக்கையுடன் காத்திருக்கின்…
-
- 7 replies
- 1.5k views
-
-
என்னை நம்பவைத்து என் கழுத்து நரம்புகளை நறநற வென அறுக்கும் உன்னை எனக்கு பிடிக்கும். எதிர்பார்த்து காத்திருந்த என் கண்களை கூரிய முனையால் குத்தியிழுத்தெடுக்கும் உன்னை எனக்கு பிடிக்கும். நா நுனியில் நட்பென்று பேசி நீ நிலைநாட்டும் நயவஞ்சகம் எனக்கு பிடிக்கும். கனிவாய் நீ பேசி கன்னத்தில் தடவி கண்களால் சைகை செய்து என் கணங்களை நீ எண்ணிக் கொண்டிருப்து பிடிக்கும் உன் வலையில் நான் வீழ்ந்து விட்டதை உணர்ந்தும் உண்ணாமல் உறங்குவது போல் இரசிப்பது பிடிக்கும் உன்குலமே அழிந்தாலும் உன் காலம் கனிந்து வரும்வரை உள்ளுக்குள் நகைத்தபடி என்னை போட எத்தனிக்கும் உன் குணம் பிடிக்கும் என் முதுகை தடவியபடியே எந்த இடத்தில் குத்தலாமென சர…
-
- 9 replies
- 1.1k views
-
-
மனிதம் மறந்த தேசத்தில் மன வக்கிரம் கொண்டவனின் கண்களில் பட்ட குழந்தைகள் குதறி சாகடிக்க படுகின்றன மனிதம் மறந்த தேசத்தில் அவன் வீட்டு ஜன்னலுக்கு அழகான திரைச்சீலை அகதியின் குழந்தை அம்மணமாய் புழுதியில்
-
- 10 replies
- 1.3k views
-
-
நள்ளிரவின் பொழுதினிலே உளத்தில் எழும் எண்ணங்கள், பள்ளி கொள்ள மனமின்றி எழுத்தில் எழுதத் தூண்டுகோல் பிறந்த ஊரும் சிறந்த வாழ்வும் மறந்த மனம் மீண்டும், பிரிந்த உறவுகளை பறந்து சென்று கண்ட பின் மாறும் மாந்தோப்பாய் வாழ்ந்த வாழ்வு தனி மரமாப்போச்சு ... பிரிந்து சிதறி வாழும் எங்கள் மனமும் மரத்துப்போச்சு... ஓலைப்பாய் தூக்கம் தந்த சுகம் பஞ்சு மெத்தையில் இல்லை... கலகலப்பாய் இருந்த மனம் தொடும் வேதனையின் எல்லை... அல்லும் பொழுதும் சொந்தம் பிரிந்து அல்லலுறும் நிலை - அதனில் கல்லும் முள்ளும் காலில் உறுத்தி தந்த வலி வலியில்லை இசை விளங்கும் தேசமது இசைக்கு இசைந்து வாழ்ந்தோம்... இச்சையின்றி புலம் பெயர்ந்து தேனிசையின் சுகம் இழந்தோம் தாய் மண்ணின் எண்ணங…
-
- 7 replies
- 1.1k views
-
-
வடக்கால உள்ள காணியை அடகுக்கு விட்டு ஊர் சாகட்டும் நீ பத்திரமா.. வடக்கை விட்டு ஓடு என்று ஆத்தா விரட்டி அடிக்க.. ஓடி வந்து.. சிங்களக் குகையினில் சிங்கிள் றூமில.. பதுங்கிக் கிடந்து.. எனக்கு முதலாவே செல்லடிக்க முதலே 83 யூலையோட.. வசதியா தாம் வாழ என்று இருந்த இரண்டு மாடி வீட்டை வித்துப் போட்டு.. மேற்கால ஓடி வந்த குடும்பத்தில வந்த ஒருத்தனை செற்றப் பண்ணி.. நானும் மங்கை என்று வந்து செற்றிலாகி இப்ப நாலு குழந்தை பெத்து அதுகளும் குழந்தை பெறும் நிலைக்கு வந்திட்டுதுகள்..! ஒரு நாள் தற்செயலா.. கண்ணாடி முன்னாடி நிதானமா நிற்க.. தலைமுடி ஓரமா டை பூசாமல் விட்டதால தெரிஞ்ச அந்த நரைக்கும் வெள்ளை முடிகள்... ஊரில.. வெத்தில…
-
- 48 replies
- 6.6k views
-
-
[யாழ் உறவுகளின் உள்ள உணர்வுகளுக்கு அதி கூடிய மதிப்பளிக்கும் வகையிலும் மனச் சங்கடங்கள் ஏற்படுவதை தவிர்க்கும் வகையிலும் படம் நீக்கப்பட்டுள்ளது.] பாலன் பிறக்கிறான் சேதி கேட்டு.. வேட்டை ஆரம்பம் கொலைகளின் நடுவே இரத்த ஆற்றில்.. அவன் வாழ்வு..! அற்புதங்கள் செய்கிறான் ஏழை மக்களை கவர்கிறான் சண்டாளர்களின் சாவில் இருந்து.. மக்களை காக்க சொற் கருவி ஏந்துகிறான்..! ஆட்சியாளர்களின் கர்வமும் கோபமும் பொங்க.. முட்கிரீடம் தரித்து சிலுவையில் உலோகங்களால் குத்தப்பட்டு மரிக்கிறான். அங்கும் மனித உரிமை மீறல்கள் நீதி விசாரணை இன்றி.. 2012 ஆண்டுகள்..! இவன் 1950 களில் பிறக்கிறான் காலத்தின் கோலமாய் சாதாரணமாய் வளர்கிறான். சிங்களப் பேரின அரக்கர்…
-
- 8 replies
- 887 views
-
-
-
அம்மா ஆயிரம் உறவு எம்மைத் தேடியே வந்தாலும் அம்மா உன்போல் அன்பான உறவெமக்கு அகிலத்தில் இனி வருமா? எதற்கென்று நன்றி சொல்வேன் அம்மா - உன் பரிவிற்கா? பாசத்திற்கா? நட்பிற்கா? எதற்கென்று நன்றி சொல்வேன் அம்மா. நல்லதொரு மனையாளாய் நானிலத்தில் வாழ்ந்ததற்கா? பெற்றவர்கள்தான் உவக்க பெருமையுடன் வாழ்ந்ததற்கா? உற்ற உம் உறவுகளை உயர்வுடனே சுமந்ததற்கா? எதற்கென்று நன்றி சொல்வேன் அம்மா எம் உயர்வுக்காய் உனை உருக்கி ஓடியோடி உழைத்ததற்கா? - நாம் உடைந்துபோன நேரங்களில் உறுதுணையாய் நின்றதற்கா? எம் திறமைகள் அனைத்திற்கும் திறவு கோலாய் இருந்ததற்கா? எதற்கென்று நன்றி சொல்வேன் அம்மா. கருத்தாய் கல்விக்கண் ஊட்டியே வளர்த்ததற்கா? கடமையே உயர்வென்று கண்ணியத்தை போதி…
-
- 9 replies
- 1.9k views
-
-
இச்சைகளின் அரசி சர்ப்பங்களை வசியம்செய்து ஏவல் வாங்கினாள்: சமிக்ஞைகளைச் சிரமேற்கொள்ளவாய்க் கட்டுண்ட சர்ப்பங்களுக்கு ஏக்கங்களை ஏற்றி உரு மறைந்து திரிய அவள் கற்பித்தாள், போகங்களின் நெருப்பைத் தீனியிட்டாள் அஞ்சனமிட்ட நீள் விழிகளுக்கு -அவை மத்தியில் கூறாய்ப் பிரியா இணைந்த கட்புருவமுடையன- சைகைகளினால் போர்களை ஆணையிடும் வலுவிருந்தது. களங்களின் சூட்சுமங்கள் தேறிக் கொய்த குறிகளை மாலை அணிந்தவளின் ஆழ் புலங்களில் அவளை மாசு அற விசுவாசித்தவர்கள் சேவகம் பணிக்கப்பட்டிருந்தார்கள். ஆசைகளால் உருவேற்றி மந்திரித்த பாம்பின் முட்டைகளை காற்றில் தூவி ஆண்களில் தீரா வியாதிகளை ஏற்றடுத்தியவள் நேரங்களைக் குறுக்கீடுசெய்து அவர்களைப் பித்து நிலையி…
-
- 2 replies
- 692 views
-
-
கல்பனா.. விண்வெளிக்கு போனாளாம் சில்பா... லண்டனில பரிசு வாங்கினாளாம் குஸ்பு.. தாலியை கேலி செய்தாளாம் "கற்பு என்றால் என்ன " துணிந்து கேட்டாளாம்..! இன்னொருத்தி இமயத்தில் கொடியை நட்டாளாம்.. இதெல்லாம் பெண் விடுதலையின் விளைவுகளாம்..! பெண் மேலாளர் ஆனாளாம் பெண் புத்தகம் தூக்கினாளாம் பெண் வாகனம் ஓட்டினாளாம் பெண் விமானம் செலுத்தினாளாம் பெண் வீட்டை என்ன நாட்டையே ஆள்கிறாளாம்..! வையகத்துள்.. பெண்ணில்லா துறைகள் இல்லை எனும் நிலையும் படைத்திட்டாளாம் இவை எல்லாம் சாதனைகளாம்..! பேதையரே எப்போ உம் நிஜக் கண் திறப்பீர்.. ஈழத்தில் சிங்கள இன வெறிக்கு தீனியாகும் தமிழச்சிகள் பெண்ணில்லையோ..???! அவள் ஆடை களைந்து மானம் விற்கும் சிங்…
-
- 17 replies
- 1.4k views
-
-
அலங்கரித்த தலைமுடியலில் ஆயிரம் கவிதைகள் நெகிழ்கிறது கண்டேன் அந்த கருவிழிகள் இடது பக்கமாக திரும்பி ... என் இதயத்தை குத்திய பொழுது.... கமல மேனியில் கள்ளச் சரிரிப்பு கொண்ட அதன் இதழ்கள் சுவைக்க அழைக்குது உன் இமைகள் என்னை தண்டிக்க காத்திருக்கிறது அம்பு போல் (எதிர்ப்பு) சிவந்த மேனியில் பொண்ணும் மங்கிப்போகிறது... கைவிரல்கள் நளினமாக பற்றிய இடம் யாவும் சிலையாய் போகிறது மெய்சிலிர்த்து கல்லும் சிதறுகிறது குமுதச் சிரிப்பில் கவர்ந்த கள்ளி குங்குமமும் நிறம் குறைவோ உன் இதழ் அழகிற்கு... பஞ்சு மேனி பவளப்பாறை என் இதயத்தை உடைத்து உன் அழகை சேகரிக்கிறது.... விலை மதிப்பில்லாமல் உயர்கிறது உன் அழகு என் இதயத்தில்... …
-
- 2 replies
- 712 views
-
-
வழக்கமாக எழும் நேரத்திலேயே இன்றும் எழுந்து விட்டேன்...! விழிக்கும் போதே கடவுளிடம் பிராத்தனை செய்து கொண்டேன் நேற்று நடந்த நிகழ்வுகள் மீண்டும் நிகழாதிருக்க... இன்னும் கொஞ்சம்நேரம் தூங்கி இருக்கலாம் என கெஞ்சுகிறது அந்த கீழிமைகள்... நேற்றைய தினங்களின் பிடிக்காமல் போன முன் அனுபவங்களால் மனதுக்குள் சொல்லிக் கொண்டேன் இன்றாவது ஒழுங்காக இரு என்று... இருந்தும்., தேவதை ஒருத்தியின் உதாசீனப் பார்வையிலும், கசக்கி, பிழிந்து வெளியேத் தள்ளி பின்பு வழக்கம் போல புறப்பட்ட பேருந்து பயணத்திலும் .. டேய்.. வீட்ல, சொல்லிட்டு வந்துட்டியா என சபித்துவிட்டுப் போன ஆட்டோக்காரனிடமும்... அலுவலகம் சென்று மறதியால் செய்த பிழை…
-
- 2 replies
- 1.3k views
-