Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கவிதைப் பூங்காடு

கவிதைகள் | பாடல் வரிகள்

பதிவாளர் கவனத்திற்கு!

கவிதைப் பூங்காடு பகுதியில் கள உறுப்பினரல்லாதோரின் கவிதைகள், கவிதை மொழியாக்கம், உலகக் கவிதை, பாடல் வரிகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் யாழ் கள உறுப்பினர்கள் அல்லாதவர்களின் கவிதைகள், கவிதை மொழியாக்கங்கள், பாடல் வரிகள் போன்றன மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
ஈழத்தை சேர்ந்த, பூர்வீகமாகக் கொண்டவர்களின் படைப்புக்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படவேண்டும். ஏனைய கவிதைகள் தரமான கவிதைகளை அறிமுகம் செய்யும் நோக்கில் இலக்கிய மின் இதழ்களில் இருந்து மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. என் அக்காச்சி அன்பான பெற்றோருக்கு நிலவொத்த அழகாய் பிறந்தவள் என் அக்காச்சி . அவளின் வேண்டுதலால் ஈரைந்து வருடங்களின் பின் வந்திதுத்த் செல்லப் பயல் நான் ஈரைந்து மாதங்களில் இருந்தே என்னை சீராட்டி பால் புகட்டி தூக்கி திரிந்தவள். துள்ளித்திரியும் பருவத்தே துடுக்கடக்கி தலைசீவி பள்ளிக்கு அனுப்பி வைத்தவள். சக நட்புடன் சண்டை என்றால் கோவித்து நான் முடங்க நீதி கேட்கும் தேவதை அவள். சின்ன சின்ன தவறு செய்தால் திருத்தி விடும் தாயவள். அம்மாவும் அப்பாவும் காய் கறி தோட்டத்தில் பணி செய்ய வேளைக்கு சோறு தந்து வேண்டிய உதவி செய்து சமயத்தில் என் சல்வை தொழிலாளியும் கூட . உயர்கல்வி கற்க வேற்றிடம் செல்ல நேர்கையில் விழி நிறைந்த கண்களுடன் வழிய…

  2. என் தங்கை இசைப்பிரியா கண்ணுக்கு எதிரிலேயே கற்பழித்துக் கொல்லப்பட்ட அன்புத் தங்கை இசைப்பிரியாவிற்கு ஒரு கையாலாகாத அண்ணனின் கண்ணீர் அஞ்சலி. என்ன அழகடி உன் தமிழும் தைரியமும்! சின்னஞ்சிறு இதழ் விரித்து சிங்கார உச்சரிப்பில் செய்திகள் வாசிப்பாயே! இப்போது நீயுமொரு செய்தியாகிப் போவாய் என்று கனவிலேனும் யோசித்தாயா? இப்போதுதான் பூத்த பனித்துளிகூட விலகாத ஒரு காலைரோஜாவின் அழகைக் கொண்டவளே! எப்படியடி சிக்கிக் கொண்டாய் திமிர் பிடித்த சிங்களனின் திணவெடுத்த கரங்களுக்குள்? ஆடையின்றி பிணமாக ஒரு சிங்கள காட்டுக்குள் நீ படுத்திருந்த காட்சி...! நீ துடிதுடிக்க கொல்லப்பட்ட போதும், உன் துணிமணிகள் அவிழ்க்கப்…

    • 13 replies
    • 2.3k views
  3. வணக்கம், இது கவிதைப் பகுதியில் நான் பதிந்தாலும் இது நிச்சயம் கவிதை அல்ல. பொங்கல் எனக்கு பல வழிகளில் முக்கிய தினம் ஆகின்றது. பொங்கலுடனான என் நினைவுகளை ஒரு கட்டுரையில் சொல்வதை விட கவிதை போன்ற ஒரு மொழியில் உடைத்து சொன்னால் சரியாக இருக்கும் என்று இதை எழுதுகின்றேன்.... எனக்கு இன்னும் என் நினைவுகளில் ஊரில் பொங்கிய பொங்கலின் வாசம் மிச்சம் இருக்கின்றது நாக்கின் ஓரத்தில் இனிப்பின் இறுதி சொட்டுகளை கவனமாக காக்கின்றேன் இன்னும் முன்னொரு காலத்தில் பொங்கல் பொங்கிய என் பாட்டியின் தொலைந்து போன வடையின் ருசியும், அதைக் காவு கொண்ட காக்காவின் பசியும், அதையும் (கூட) சூறையாடிய நரியின் தந்திரமும் இன்னும் என்னுடனே வருகின்றன *************** …

  4. நான் எப்பவுமே கோவிலுக்கு வந்த உன்னை திட்டுறதுக்கு தான் வருவேன் ஆனா இப்ப உனக்கு நன்றி சொல்ல வந்து இருக்கேன் அந்த பொண்ணு சொன்ன வார்த்தை மட்டும் முதல் சொல்லி இருந்தால் நான் இந் நேரத்துக்கு உயிரோட இருந்திருக்க மாட்டேன் நான் யாரு எப்பல்லாம் மறக்கிறானோ? அப்ப எல்லாம் நீ சரியாய் ஞாபகபடுத்திர எல்லாருக்கும் தெரியுர மாதிரி முகத்தை படைக்கிற நீ ஏன் யாருக்கும் தெரியாத மாதிரி "மனசை" படைக்கிற...

    • 2 replies
    • 909 views
  5. என் கனவில் வந்த பூதம் ஒன்று விடிந்த பின் நான் பேருந்துக்காக காத்திருக்கையில் அருகில் வந்து bus stand இல் நின்றது நானும் பூதமும் பேசிக்கொள்ளவில்லை பூதம் தன்னைக் கண்டவுடன் நான் அதிர்வேன் என்று நினைத்து ஏமாந்து கொண்டது என்னை நேரில் கண்டவுடன் பூதம் தலை தெறிக்க ஓடும் என்று நானும் ஏமாந்து கொண்டேன் பேருந்தில் பக்கத்தில் அமர்ந்து கொண்டாலும் தன் கண்களை மூடியே பயணித்தது அது அலுவலகத்திலும் என் பக்கமே நின்று கொண்டிருந்தாலும் ஒன்றும் பேசவில்லை அது நானும் ஒன்றும் கேட்கவில்லை இடையிடையே நக்கல் சிரிப்பும் நளினமும் செய்து கொண்டுதான் இருந்தது பூதம் அதன் குளப்படி பழக்கங்களை மாற்ற முடியுமா என்னால்? **…

  6. விண்தொடும் கனவுகள் வீணாகிப்போய் மிதியடி மண்ணாய் தட்டப்படுகையில், அடையாளம் பறிக்கப்பட்டு அடையாளம் குத்தப்படுகிறது அறிந்தவர்களின் அறியாமையால் , பிறிதொரு இருப்பிடம் தேடி அலைகிறது அவர்களின் அவதானம் ......................... உள்ளொருபுள்ளியில் இருக்கிறது இன்னும் அவர்களின் எச்சவடு! எனை கடந்து அவனை கடந்து _பின் மற்றொருவனை அனைத்து செல்கிறது அவதானம் ஆங்காங்கே எச்சவிளைவுகள் பயங்கரமாய் எதிரொலிக்க எதையும் கண்டுகொள்ளாத _அதன் பயணம் தொடர்ந்து கொண்டு ............... இருளாய் வியாபிக்கிறது என்னுள் ஒரு கேள்வி ! இன்னவாகி வருவான் _என்ற எதிர்பார்ப்புகளை எங்கு,எப்படி புதைப்பேன் இனி ................!

  7. Started by nedukkalapoovan,

    (விடுதலைப்புலிகளின் யாழ் மாவட்ட முன்னாள் தளபதி கேணல் கிட்டு மாமா நினைவாக...) வெடியோசை எழுந்தது எங்கள் நெஞ்சோசை அழிந்தது களத்தோடு களமாடி கோட்டைக்குள் அடித்தெழுந்த அந்தப் புயலும் ஓய்ந்தது...! தங்க தமிழீழ வேங்கையது வங்கக் கடல் நடுவே சரிந்தது...! அசோகச் சக்கரத்தின் அகோரத் தாண்டவம் - எங்கள் மாமாவின் உடல் கிழித்தது...! ஆதிக்க வெறி பிடித்த அகிம்சா தேசமது அவன் ஆன்மா குடித்துக் குதூகலித்தது...! தமிழீழ அன்னையவள் கொடிதனைச் சுமந்தவன் ஆழி தன் அலையோடு மீண்டிட்டான் தமிழ் மண்ணை...! குரலோசை எழுந்தது - அது அவன் புகழோசை சொன்னது விடியலின் தாய் மகன் விடிவெள்ளியான கதை முடிவின்றிச் சொன்னது....! தர்மம் வெல்லும் என்பது காலத்தின் கோலம் என்றத…

  8. என் விம்பத்தை கண்ணாடியில் பார்க்கின்றேன் உடைந்து போன ஒரு கண்ணாடியில் தெரியும் சிதறிய முகமாய் எனக்கு என் முகம் தெரிந்தது சிதறல்களில் தெரிந்த என் முகம்கள் ஒவ்வொரு முகமூடி அணிந்து இருந்தது இப்படி முன்னம் என் முகம் இருக்கவில்லை அதற்கே அதற்கு என இரு கண்கள் இருந்தன இரு செவிகள் இருந்தன ஒரே ஒரு நாக்கும் ஒரு சோடி உதடுகள் மட்டுமே இருந்தன எப்ப பார்த்தாலும் இது என் முகம் என்று உரிமை கோரியிருந்தேன் ஆனால் கண்ணாடியில் இப்ப தெரியும் என் முகம் எனதில்லை என் முகத்தை என்னிடம் இருந்து திருடியது யார்? என் கண்களை அகற்றி தம் கண்களை செருகியது எவர்? எனக்கே எனக்காக இருந்த குரலையும் திருடி அதில் தம் குரலையும் பத…

  9. Started by அபராஜிதன்,

    முதல் விசா முடியும் பொழுது முதல் தங்கையின் திருமணம் முடிந்திருந்தது இரண்டாம் விசா முடியும் பொழுது இளைய தங்கைக்கு இருபது பவுன் சேர்க்க முடிந்திருந்தது மூன்றாம் விசா முடியும் பொழுது மூனு சென்ட் நிலத்தில் வீடு வாங்க முடிந்திருந்தது நான்காம் விசா எடுக்க தயாரான போது நரைத்திருந்தது திருமணமாகமலே எனக்கு “தலைமுடி” படித்ததில் பிடித்தது (முக நூல் )

  10. Started by pakee,

    அறிவு தந்த அன்புள்ள அப்பா நீங்கள் ஆற்றல் ஈந்த அன்புள்ள அப்பா நீங்கள் உருகும் உன்னத மெழுகு நீங்கள் தேயும் ஒப்பற்ற சந்தனம் நீங்கள் தன்னலமற்ற தியாகத்தின் சின்னம் நீங்கள் திறமைகளை பயிற்று வித்த ஆசான் நீங்கள் சான்றோனாக்கி மனம் மகிழ்ந்தவர் நீங்கள் சந்தோசங்களை வழங்கிய வள்ளல் நீங்கள் ஒய்வறியாது உழைக்கும் செம்மல் நீங்கள் ஒரு நாளும் கவலை கொள்ளாதவர் நீங்கள் கடமையைக் கச்சிதமாய் முடித்தவர் நீங்கள் மடமையை முழுமூச்சாய் எதிர்த்தவர் நீங்கள் பகுத்தறிவை எனக்கு கற்பித்தவர் நீங்கள் மூடநம்பிக்கை அகற்றி தன்னம்பிக்கை தந்தவர் நீங்கள் எதையும் ஏன்? ஏதற்கு? எப்படி? என்றவர் நீங்கள் எவருக்கும் அஞ்சாமல் வாழ்பவர் நீங்கள் வாழ்வியல் கருத்துக்களை வழங்…

    • 7 replies
    • 1.5k views
  11. நீ எனக்கு வேண்டாமடி சைனாவுக்கு போகவேண்டுமானாலும் சைக்கிளிலேயே செல்லும் என் தந்தை என்னைப் பக்கத்து தெருவிற்குக் கூட பைக்கில் போக சொல்லுகிறார் இவரை விட்டுவிட்டா உன்னோடு ஓடிவருவது? *** தேர்வு சமயங்களில் இரவு முழுவதும் படித்துக்கொண்டிருப்பதோ நான் விழித்துக் கொண்டிருப்பதோ என் தாய்! அவளை விட்டுவிட்டா உன்னோடு ஓடிவருவது? *** அலுவலகம் செல்லும் அண்ணன் மடித்து வைத்த சட்டையை வெட்டியாய் ஊர்சுற்ற போகும் நான் அணிந்துகொண்டாலும் ஆனந்தப்படுவானே? அவனை விட்டுவிட்டா உன்னோடு ஓடிவருவது? *** நான் செலவுக்கு பணம் கேட்கும்பொழுது – தான் நகை வாங்க வைத்திருக்கும் பணத்தை கூட புன்னகையோடு தருவாளே என் தங்கை! அவளை விட்ட…

    • 5 replies
    • 1.2k views
  12. விண்ணை தாண்டி விழிக்க வைக்கிறாய் உன் விழிகளாலே அன்பை காட்டி அரவணைக்கிறாய் உன் அழகாலே காதல் என்று சொன்ன போது மட்டும் ஏனடி அண்ணா என்று சொல்லி என்னை புதைத்து விட்டாய் மண்ணுக்குள்ளே...

    • 2 replies
    • 957 views
  13. Started by pakee,

    தேவதையாய் நீ வந்த போதே நான் தெரிந்திருக்க வேண்டும் எனக்கு தெரியாமலே போய்விடுவாயென்று...♥

    • 0 replies
    • 626 views
  14. Started by pakee,

    ஆண்களின் நட்பு உதை பந்து போல எவ்வளவு உதைத்தாலும் உடையாது பெண்களின் நட்பு கண்ணாடி போல அவர்களை போலவே நொறுங்கி விடுகிறது...♥♥

    • 0 replies
    • 865 views
  15. இரண்டு ஈர உதடுகள் என்னை முத்தமிட்டு நீங்கின ஒன்றில் பொத்தி வைத்த காதலும் வெளிப்படுத்தி வெளிப்படுத்தி அடங்கா(த) காமமும் நிறைந்து இருந்தன இன்னொன்றில் வெள்ளை நிறத்தில் அன்பு இருந்தது "இவன் என் அப்பா" என கட்டிப் பிடித்து இறுக்கி சிரிக்கும் சின்னச் சிறுக்கியின் பாசம் இருந்தது இரண்டு முத்தங்களிலும் என் வாழ்வு தொங்கி நின்றது ******** அவர்களை அனுப்பிவிட்டு வீடு செல்கின்றேன் வாசல் திறக்கும் போது சூனியம் அப்பிக் கொள்கின்றது கட்டிலும், தொட்டிலும் சோபாவும், சட்டியும் முட்டியும், முட்டை பொரித்த பின் எஞ்சிப் போன தாச்சியும் சிந்தப் பட்ட ஒரு சொட்டு எண்ணெயும், என்னவள் கழட்டிப் போட்ட பனிச் சப்பாத்தும் என்…

  16. மஞ்சளும் மண்ணும் கலந்த நிறத்தில் பொன்வண்ண அச்சுடன் என்றோஎடுத்த இன்சுரன்சிற்கு இன்றும் அனுப்புகின்றான் டயரி எழுதாத சில பக்கங்களுடன் கிறுக்கிய பல குறிப்புகளுடன் பழையதை தூக்கி அட பதினொன்றாவதா என அடுக்குகின்றேன். சிரிக்கும் புதுப்பக்கதில் படுக்கும் நேரத்தில் சிவப்பு பேனாவால் வைய படபோகும் மாந்தர் அல்லது மானிடம் எதுவுமாகலாம். அன்றைய நாள் தலைப்பில் எனக்கு எதிரியாக எவன் பட்டாலும் அன்று அவனுக்கு தான் அத்தனை பூசைகளும் அபிசேகமும் போனவருட டயரியின் பக்கங்கள் சில இப்பவும் மணக்குது செம்புதூக்கி சோபா, விட்டுவாங்கி யோ.கா, நாய்வைத்தியன் நடேசன் இலக்கிய கள்ளன் பூபதி என்று மூத்திரம் தொட்டு எழுதியதால், நேரில்காண்கையில் நடுமூஞ்சையில் பிசகாமல் அடிப்பேன் து…

  17. யாழில் செய்தி பார்த்தேன் பியர் உடலுக்கு நல்லது பெண் கொடுமையில் இந்தியாவுக்கு இடம் 4 தற்பால்சேர்க்கை சாத்திரியின் கொலைவெறி அடுத்த பிறவியில் பூனையாகப்பிறப்போம் காணாமல் போகின்றோம் 2012 இல் காணாமல்தான் போவோம்.

    • 5 replies
    • 1.4k views
  18. தாயின் மடி போல் தலையணை வேண்டும் தூங்கும் நிலையில் மனநிலை இல்லை வந்து போகுது வரவும் செலவும் நொந்து போகுது மானிட இதயம் உழைத்து உழைத்து உருக்குலைந்த பின் எஞ்சி இருப்பது நோயும் நொடியும் குருவித் தலையில் பனம் பழம் போலே ஏழை உழைப்பில் எத்தனை செலவு காற்றும் கூட காசாய் போனதால் வாழ்வில் எப்படி வசந்தம் வீசும் சுரண்டிய மீதியே ஊதியம் ஆகையில் உயர்வது எப்படி? வாழ்வு மலர்வதெப்போ? மனசு நிறைந்து கனவுத் தூக்கம் கண்டு மகிழ்வதெப்போ? தாயின் மடி போல் தலையணை வேண்டும் நோயில் படுக்கினும் தாயின் மடியே தலையணையாய் வேண்டும்.

    • 6 replies
    • 3k views
  19. Started by தப்பிலி,

    கடவுளே அங்கே இருந்து இங்கே ஓட்டுபவர்களையும் தெரியவில்லை. இங்கேயிருந்து அங்கே ஓட்டுபவர்களையும் புரியவில்லை அடுத்த பிறப்பிலாவது ஆறறிவைக் கொடு

  20. 2012 டே எப்படி உனை நான்... ---------------------------------------- மகிழ்ச்சி வெள்ளத்தில் அகதியாய் நான் வாழும் நாடு யுத்தச் சூறாவளியுள் தொலைந்த எம் தேசமே எப்போது எம் வாழ்வில் புத்தாண்டு மலருமென ஏக்கமுடன் பார்த்திருக்கும் குழி விழுந்த கண்களுடன் கூன் விழுந்த தோற்றமுடன் தேற்றுவாரற்ற இனமாக என் இனமே துவண்டு துரும்பாகிக் கிடக்கையிலே எப்படி உனை நான் மகிழ்வோடு... 2012 டே எம்மினத்தின் ஒற்றுமை கொணரும் ஆண்டாக வேற்றுமை களையும் ஆண்டாக எம் தலைநிமிரும் ஆண்டாக மலராதோ மலராதோ...... மலர்விக்கும் கடனெமதானால் வரும் ஆண்டுகள் யாவும் எமதே!

  21. எங்களுக்கும் புத்தாண்டு இப்படியாய் விடியாதா? (இக்கவிதை 01.01.2009 புத்தாண்டு அன்று எழுதியது. அப்போதிருந்த மனநிலை இதனை தரவேற்றவில்லை. 2ஆண்டு கழித்து 2012புத்தாண்டு பிறக்கவிருக்கிற இந்தச் சில நிமிடங்களின் முன் இதனை பதிவிடுகிறேன்.) பன்னிரண்டு மணி பட்டாடை கட்டி வானம் விழித்துக் கொள்கிறது. கருவானக் கதவுடைத்து கனவு கலைந்து வான வெளி கண்விழித்துக் கொள்கிறது. வண்ண வண்ண ஒளிக்கலவை... அழகின் இருப்பிடமெல்லாம் அகன்ற வானில் அள்ளிக் கொட்டியிருக்க வீதிகளில் புகைமூடி வர்ண ஒளிக்கீற்று வடிவுதான்.... பனித்துளி சொட்டப் பகலைத் தெளித்தது போல் பொழுது பட்டாசுகளால் பல்வர்ணம்.... புத்தாண்டுப் பிறப்பு பகற் சேமிப்பெல்லாவற்றையும் பட்டாசாய் வெ…

  22. பசுமை தளிர்த்து கனியும் கிடைத்து நிலைக்கும் என நினைக்கையில் இலைகள் உதிர்ந்து காம்பும் கறுத்துப் பட்டதாய் நின்றது பின் பனியுந்தூற, பட்டை பிளந்து பஞ்சாய்ப்போனதுபோல் பழ மரம் பருத்திச் செடியாய்க் காட்சியளித்தது. புதிதாய்த் தூவிக்கிடந்தது பனி அதில் புதிதாய் ஏதோ பிராணியின் தடம் இதுவரை எதுவும் நடக்காத கிரகத்தின் முதற்சுவடுகள்... மனதுள் பிரமை நிஜமாய்த் தெரிந்தது. ஜக்கட்டுக்குள் நுளைந்து குளிரோடு பொருதும் பிறவும் பூண்டு பின்வளவுக் காட்சி மனதில் இருக்க முன்கதவால் இறங்கித் தெருவில் நடந்தேன். கோடையில் எனது போதியாய் விளங்கும் காட்டுக்குள் புகுந்தேன் பட்டனவாய் நின்ற நெடிதுயர்ந்த விருட்சங்கள் மூச்சின்றி நிமிர்ந்து நின்றன. கிளையாய்ப் பிரிந்தது பாதை இரண…

  23. புதுமைகள் ஏந்திய, புதிய ஆண்டொன்று பிறக்கட்டும்! பூக்கள் மலர்வது போல! புதுமையாக! பூக்கள் மரங்களில் இருக்கட்டும், பிடுங்கி எடுத்து மாலைகளாக்க வேண்டாம்! சர வெடிகள் இல்லாமல், சாதாரணமாக மலரட்டும்! வெடிச்சத்தம் கேட்டாலே, வேதனை கலந்த நினைவுகளே, வெடித்துக் கிளம்புகின்றன! புத்தம் புதுச் சேலைகளும், பட்டு வேட்டி சால்வைகளும், தொட்டுப் பார்க்க நேரமின்றித், தம் பாட்டில் தூங்குகின்றன! சீர் கொடுத்த நகைகள் கூடச், சேரிடம் தெரியாது, வருடக் கணக்காக, வங்கிப் பெட்டிகளில், வருகின்ற தலைமுறை பார்த்து, ஆறுதலாகத் தூங்குகையில், இன்னும் நகை எதற்கு? கஷ்டமென்று வரும்போது, கை கொடுக்க என்கிறோம்! இதுவரை, இல்லாத கஷ்டமா, இனிவரப் போகின்றது? …

    • 9 replies
    • 1.3k views
  24. கண்ணாடி அறைக்குள்ளே காற்றாட‌ கணிப்பொறிமுன் கண்கள் தேட‌ கழுத்திலேயே சுருக்கு கயிறை கடிக்கொண்டு திரியும் வாழ்க்கை காதலை கூட கருமியைபோல‌ குறுஞ்செய்திக்குள் குறுக்கிவிட்ட‌ கூரமான வாழ்க்கை போக்குவரத்து நிறுத்தங்களில் நிராகரிக்கப் பட்ட நிமிடங்களை நிம்மதிக்காய் தேடும் நிஜமில்லா வாழ்க்கை கட்டியவளை அணைப்பதை கூட‌ கடிகாரத்துக்குள் ஒதுக்கி வைத்த கயமைதனமான வாழ்க்கை மினுமினுக்கும் விளக்குகொளியில் மிடுக்கான உடையில் போதையில் மிதக்கும் வாழ்க்கை இதுமட்டுமா வாழ்க்கை இலைமீது மழைத்துளி அதை கொட்டி விளையாட காதலி; இமை இடையில் வரும் இன்ப கண்ணீர்துளி அதற்காகவே பிறந்த அம்மா கிள்ளி விளையாடி கிள்ளையோடு சண்டைகள் …

    • 2 replies
    • 1k views
  25. கவிதை எனும் பெயரில்.... நண்பர்களே, கவிதையெனும் பெயரிலிங்கு கண்டபடி கருத்துக்கள் எழுதுகின்றார் சிலபேர்கள்; கவிதை என்றால் என்னவென்று அறிந்திடாத கடைகெட்ட மூடர் அதை ரசிக்கின்றார்கள்! பெண் என்ற பெயராலே எழுதிவிட்டால் பேயாக ரசிப்பது போல் கருத்துச் சொல்லி கண் என்றும் உயிர் என்றும் கசிந்துருகி கருத்துக்கள் சொல்லி,அதை ருசிக்கின்றார்கள். மூடர்கள், முட்டாள்கள், தமிழ் மொழியின் முடவர்கள், குருடர்கள், செவிடு கொண்ட கேடர்கள் அவரைநாம் என்ன சொல்ல? கிறுக்கர்கள்தாம் அவரை மன்னிப்போமா? நல்ல தமிழ் எதுவென்று அறிந்ததில்லை; நயமான கற்பனைகள் கொண்டதில்லை; சொல்ல வரும் கருத்தில் ஓர் புதுமையில்ல; சுவையாக எழுதிடவும் பழக்கமில்லை! ஆனாலும் முகநூலில் எழுது…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.