Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வண்ணத் திரை

சினிமா விமர்சனம் | சினிமாச் செய்திகள் | கருத்துகள்

பதிவாளர் கவனத்திற்கு!

வண்ணத் திரை பகுதியில் சினிமா விமர்சனம், சினிமாச் செய்திகள், உலக சினிமா சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் சினிமா விமர்சனங்களுக்கும் தரமான சினிமா சம்பந்தமான கட்டுரைகளுக்கும் முன்னுரிமை கொடுத்தல் வேண்டும். அளவுக்கதிகமான சினிமாச் செய்திகளையும், கிசுகிசு செய்திகளையும் தவிர்க்கவேண்டும்.

  1. ஆட்டம் போடும் அமலா பால்... அதிர்ந்து நிற்கும் தயாரிப்பாளர்கள்! தமிழ் சினிமா எத்தனையோ சாதனையாளர்களை தடவிக் கொடுத்து மகிழ்ந்திருக்கிறது... தீராத தலைவலியாய் திகழ்ந்தவர்களை சுளுக்கெடுத்தும் அனுப்பியுள்ளது. தமிழ் சினிமாவின் இப்போதைய பெரும் தலைவலியாக உருவெடுத்துள்ளவர் அமலா பால். அம்மணி அலட்டும் அலட்டல் இருக்கிறதே.... இவரை நம்பி ஒப்பந்தம் செய்து படமெடுத்து வரும் தயாரிப்பாளர்களை அதிர வைத்திருக்கிறது. வீரசேகரன் என்ற படத்தின் மூலம் நடிக்க வந்தவர் அமலா பால். இப்போது கேட்டால் 'ஆங்... அப்டி ஒரு படம் வந்ததா' என்பார். இந்தப் படத்துக்குப் பிறகு அம்மணி நடித்த படம் மாமனாரின் இன்பவெறி..சாரி.. சிந்து சமவெளி! அதன் பிறகு சீந்துவாரின்றி கிடந்த …

  2. திடீர் என்று நிகழும் சில அற்புதமான சந்திப்புகள். வடிவேலுவை நீண்ட காலத்துக்குப் பின் சந்தித்தது அந்த ரகம்! ‘‘நலமா?’’ ‘‘நல்லா இருக்கேண்ணே... நல்லா இருக்கேன். நல்லா ஆரோக்கியமா இருக்கேன். பார்த்தீங்களா... ஒடம்பைக் கட்டுக்குள்ள கொண்டுவந்திருக்கேன் (புஜத்தைக் காட்டுகிறார்).’’ ‘‘ரஜினியே படம் செய்தால்கூட, ‘வடிவேலுவிடம் முதலில் தேதி வாங்குங்கள்’ என்று சொல்லும் நிலை இருந்தது. ஆனால், இப்போது நீங்கள் படம் நடித்து ஒன்றரை வருடங்கள் ஆகின்றன. என்ன நடக்கிறது?’’ ‘‘ஒரு உண்மையைச் சொல்லட்டுங்களா? யாருமே என்கிட்ட பேசுறதே இல்லண்ணே. யாரும் போன்கூடப் பண்றது இல்லை. ஆனா, அதைப் பத்தி நான் கவலைப்படலை. மௌனமா கவனிச்சுக்கிட்டு இரு…

  3. இரவுக்கு ஆயிரம் கண்கள் திரை விமர்சனம் இரவுக்கு ஆயிரம் கண்கள் திரை விமர்சனம் போட்டிக்கு நடுவிலும் குற்றங்களை மையப்படுத்தி வெளியாகும் சில படங்கள் ஈர்ப்பை பெறுகின்றன. சமூக வலைதள குற்றங்கள், இணையதள மோசடிகள் என எத்தனையோ நடப்பதை அணுதினமும் நாம் காண்கிறோம். அந்த வகையில் பல இடங்களில் நடந்த சம்பவத்தை அடிப்படையாக வைத்து வந்துள்ளது இரவுக்கு ஆயிரம் கண்கள். இந்த கண்களில் இருக்கும் கதை என்ன என பார்போம்... கதைக்களம் படத்தின் ஹீரோ அருள்நிதி ஒரு கால் டாக்சி டிரைவர். அன்றாடம் அவரின் பயணத்தில் பலரை சந்திப்பார். வழக்கம் போல ஒருநாள் சவாரியில் அவர் எதிர்பாராமல் ஹீரோயினை சந்திக்கிறார். …

  4. ராவணன் படத்தின் மூலம் பத்து தலைகளில் வலி ஏற்பட்ட மாதிரி மணிரத்னம் முடங்கி விடுவார் என்றுதான் எல்லோரும் எதிர்பார்த்தார்கள். ஆனால் அசராத மனிதர் அடுத்து கல்கியின் பொன்னியின் செல்வன் கதையை படமாக்கும் என்னத்தோடு நவீன எழுத்தாளர் ஜெயமோகனிடம் இந்தக்கதைக்கு மூன்று மணிநேரத்தில் முடிக்கிறமாதிரி திரைக்கதை எழுதித்தர முடியுமா என்று ஆலோசித்திருக்கிறார். அவரோ நிச்சய்மாக முடியும் என்று கூறி, திரைக்கதை வடிவத்துக்கான சுருக்கத்தை எழுதிக்கொடுத்து விட்டாராம். ஆனால் பொன்னியின் செல்வன் நாவலை தற்போது மக்கள் தொலைகாட்சிக்காக ஒரு தரப்பினர் சீரியாலாக எடுக்க முயன்று கொண்டிருக்க, ஏற்கனவே பலர் இதை சினிமாவாக எடுக்க நினைத்து தோற்றுப் போய் இருக்கிறார்கள் என்பதையும், இந்தநாவலை நவின நாடகமாக போட்ட வ…

    • 0 replies
    • 953 views
  5. சைக்கோ...சபலிஸ்ட்...கேவலமான பிறவி... -எஸ்.ஜே.சூர்யா மீது மாளவிகா பாய்ச்சல் நியூ, அன்பே ஆருயிரே போன்ற படங்களில் நடித்து பெண்கள் அமைப்பிடம் ஏகப்பட்ட Ôஅர்ச்சனைÕகளை வாங்கி கட்டிக் கொண்டவர் எஸ்.ஜே.சூர்யா. சினிமாவுக்கு வெளியே இருப்பவர்கள் இவருக்கு செய்த அர்ச்சனைகள் போதாது என்று சினிமாவுக்குள்ளேயிருந்தும் Ôஅர்ச்சனைÕ வர ஆரம்பித்திருக்கிறது இப்போது! வியாபாரி என்ற படத்தில் நடித்து வருகிறார் சூர்யா. படத்தில் இரண்டு நாயகிகள். ஒருவர் நமீதா. மற்றவர் மாளவிகா. இந்த அழைப்பிதழிலேயே தன் சில்மிஷத்தை காட்டியிருந்தார் சூர்யா. குளித்துவிட்டு டவலோடு வருகிற நமீதாவின் பின்புறத்தை டேப் உதவியால் அளவெடுப்பது போல இருந்தன அந்த படங்கள். இந்த காட்சிக்கான டயலாக் என்ன தெரியுமா? முன் புறத்தையும…

  6. உத்தம வில்லரான' கமலுக்கு பத்திரிகையாளர்கள் மீது எப்போதும் அதீத பாசம். அதனால் மக்களுக்கு 2.30 மணிநேரம் போதும் என்று முடிவு செய்த படத்தை எங்களுக்கு மட்டும் 3 மணி நேரப்படமாக காண்பித்தார். அது கமல் கணக்கு. ‘என் சொந்த அந்தரங்கங்களை கிசுகிசுக்களாக எழுதிப் பொழைத்த புண்ணியவான்களே, உங்களுக்காக இந்தப் படம் சமர்ப்பணம்' என்று ஒரு நக்கல் கார்டு படத்தின் துவக்கத்தில் போடத் திட்டமிடப்பட்டு கடைசி நிமிடங்களில் அத்திட்டம் கைவிடப்பட்டதாக கமலுக்கு நெருக்கமான வட்டாரங்களிலிருந்து கேள்விப்பட்டேன். அப்படி செய்திருந்தாலும் தப்பில்லை என்றுதான் படம் பார்க்கும்போது தோணியது. ஏனெனில் இனி பத்திரிகையாளர்கள் தனது காதல் கதைகளை கிசுகிசுக்களாக எழுத முடியாதபடிக்கு மொத்தத்தையும் அவரே எழுதிக்கொண்ட படமே ‘உத…

    • 0 replies
    • 952 views
  7. நடிப்பு பட்டறையில் மூன்று வருட பயிற்சி…, முறைப்படி நடனம்…! இவற்றின் விளைவாய்.. ஷங்காய் ஃபிலிம் பெஸ்டிவலில் சிவப்புக்கம்பள வரவேற்பு…. அதனால் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறார் நடிகை தேனுகா. ஈழத்தமிழர்களின் சாதனை திரைப்படமாகிய எ கன் அண்ட் எ ரிங் படத்தின் நாயகி..! 'எ கன் அண்ட் எ ரிங்' திரைப்படம் தான் தேனுகாவின் முதல் படம். இதற்கு முன் இவர் வேறு எந்த திரைப்படத்திலும் நடித்ததில்லை. இப்போது ஒரு ஜெர்மேனிய படத்தில் நடித்துக்கொண்டிருந்தவரை இலங்கை கலைஞன் இணையத்தளத்திற்காக தொலைபேசியில் பிடித்தோம். பேச்சில் அத்தனை அமைதி.. மிக எளிமையாக, மிக சாதாரணமான ஒரு பெண்ணாக எங்களுடன் தன் அனுபவங்களை அழகு தமிழிலில் பகிர்ந்துகொண்டார். உங்களைப் பற்றிச் சொல்லுங்கள்? …

    • 7 replies
    • 952 views
  8. பாலு மகேந்திரா: என்றும் அழியாத கோலம் சமஸ் திடீரென்று அழைக்கிறார்: “இன்னைக்கு அலுவலகம் வர முடியுமா?” பொதுவாக, சரியான நேரத்தைப் பின்பற்றுவார் என்பதால், அவர் குறிப்பிட்டபடி சரியான நேரத்தில் அங்கிருந்தேன். வழக்கத்துக்கு மாறாக அவருடைய நாற்காலியில் அமராமல், சோபாவில் அமர்ந்திருக்கிறார். நாற்காலியை இழுத்துப்போட்டு அருகில் அமருமாறு சைகைசெய்கிறார்: “உடம்பு சரியில்லை, டாக்டரைப் போய்ப் பார்த்தேன். என்ன மருந்து எழுதினார்னு தெரியலை. மாத்திரை முழுங்கினதிலேர்ந்து மயக்கமாவே இருக்கு'' என்றவர், சத்யாவை அழைக்கிறார். சத்யா வந்ததும் அவரிடம் சாப்பிட எடுத்துவரச் சொல்லி சைகை காட்டுகிறார். சத்யா அகன்றதும், “சத்யா என்னோட மகன் மாதிரி. தப்பு. அவன் என்னோட வளர்ப்பு மகன்'' என்கிற…

  9. மேஜையில் தாளம்போட்டு வாய்ப்புகள் கேட்டேன்: இளையராஜா உருக்கம் சஞ்சய், நந்தினி ஜோடியாக சுப்புசுஜாதா இயக்கிய “தாண்டவக் கோனே படத்தின் பாடல் சி.டி. வெளியீட்டு விழா வடபழனியில் நடந்தது. நடிகர்கள் சம்பத், சுப்பு, தயாரிப்பாளர் பிரபாகர் சீனிவாசகம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இப்படத்துக்கு இளையராஜா இசை அமைத்துள்ளார். பாடல் சி.டி.யை வெளியிட்டு அவர் பேசியதாவது: புதுசா வருபவர்களை ஊக்குவிப்பது என் சுபாவம். ஆரம்ப காலங்களில் நானும் சிரமப்பட்டேன். எனக்காக என் அண்ணன் ஆர்.டி.பாஸ்கர் சினிமா கம்பெனிகள் படியேறி வாய்ப்பு கேட்டு அலைவார். எங்கேயாவது சிறிய சினிமா கம்பெனி போர்டு தொங்கினால் கூட அங்குபோய் என்தம்பி நல்ல மியூசிக் போடுவான். கேட்டுப் பாருங்க என்பார். பிறகு எஸ்.பி.பாலசுப…

  10. நயன்தாரா படத்தில் ஸ்ரேயா முன்னணி நடிகைகளின் நட்புக்கும், இந்தியா - பாகிஸ்தான் உறவுக்கும் அதிக வித்தியாசமில்லை. அவ்வப்போது பேச்சுவார்த்தை நடந்தாலும், அண்டர்கிரவுண்டில் போர் நடந்து கொண்டேயிருக்கும். இவர்களை ஒரே படத்தில் நடிக்க வைப்பதென்பது யானையை கட்டி மாரடிப்பது போல. ஆனாலும், இந்திய கிரிக்கெட் அணியின் உலககோப்பை வெற்றி மாதிரி அவ்வப்போது அதிசயங்கள் நிகழும். 'துளசி' என்றொரு படம். வெங்கடேஷ் ஹீரோ. ஹீரோயின் நயன்தாரா. இதே பெயரை வேறொருவர் ஏற்கனவே பதிவு செய்திருந்தது தெரியவர, 'துளசிராம்' என பெயரை மாற்றினர். பிறகு பேச்சுவார்த்தை நடத்தி ராமை எடுத்துவிட்டு மீண்டும் 'துளசி'யாக்கியிருக்கிறார்கள். பெயரிலேயே பெரும் குழப்பத்தை ஏற்படுத்திய இந்தப் படத்தில் குத்து பாட…

  11. அடிக்கடி இப்பவும் அன்பேசிவம் கமல் என்னை பயமுறு த்துகின்றார், ஒரு விசரன் போல் கமல் ஒரு சோல்னா பையுடன் மக்கள் சேவை என்று அலைவதும் மாதவன் மல்ரி பிஸ்னஸ் என்ற பந்தாவுடன் கமல் காதலியையே கல்யாணம் செய்து கொள்வதும் இதுதான் உண்மை உலகமா என்று பயமுறுத்துக்கின்றது. மறக்கமுடியாத என்னை மிகவும் பாதித்த படம் .

  12. சிம்பு படத்தலைப்பும் இலங்கையில் எழுந்த மனக்குமுறலும்! மின்னம்பலம்2021-08-07 ஐசரி கணேஷின் வேல்ஸ் ஃபிலிம்ஸ் தயாரிப்பில் கெளதம் மேனன் இயக்கத்தில் சிம்பு நடிக்கும் புதிய படத்தின் பெயர், பிப்ரவரி 25,2021 அன்று 'நதிகளிலே நீராடும் சூரியன்' என்று அதிகாரப்பூவமாக அறிவிக்கப்பட்டது. இது சிம்புவின் 47 ஆவது படம் என்றும் சொல்லப்பட்டிருந்தது. இந்தப்படத்தின் இசையமைப்பாளராக ஏ.ஆர்.ரகுமான் ஒப்பந்தம் செய்யப்பட்டிருக்கின்றார் நேற்று பூஜையுடன் இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கப்பட்டுள்ளது. இயக்குனர் கௌதம்மேனன் நடிகர் சிம்பு கூட்டணி முதன்முதலில் விண்ணைத்தாண்டி வருவாயா படத்தில் இணைந்தனர். அந்தப் படம் வெற்றிபெற்றதால் தொடர்ந்து அச்சம் என்பது மடமையடா படத்தில் மீண்…

  13. பூவாக இருந்த ஐஸ்வர்யாவை புயலாக்கி பார்த்துள்ளனர் ராஜஸ்தான் நிருபர்கள் ஐஸ் - அபிஷேக்பச்சன் ஜாதகத்தில் தடைகள் இருப்பதாகவும் அதற்கு பரிகாரம் செய்ய ஐஸ்வர்யா கோயில் கோயிலாக சுற்றுவதாகவும் சமீபகாலமாக பத்திரிகை செய்திகள் பரபரப்பை ஏற்படுத்துகின்றன. இந்நிலையில் ராஜஸ்தானில் உள்ள புகழ்பெற்ற அஜ்மீர் தர்காவுக்கு நேற்று காலை ஐஸ்வர்யா வந்தார். அப்போது அவரை சூழ்ந்துகொண்ட நிருபர்கள் ஜாதகம் விஷயம் பற்றி கிளற, திடீரென ஆவேசமடைந்துள்ளார் ஐஸ். "நான் வெளியிடங்களுக்கு செல்லும்போது அந்த பகுதிகளில் உள்ள புகழ்பெற்ற கோவில்களுக்கு செல்வது எனது வழக்கம். இதனை எனது திருமணம் தொடர்பான வதந்திகளுடன் தொடர்புபடுத்தி பேசுவதும் எழுதுவதும் சரியல்ல. நீங்களாக கற்பனை செய்துகொண்டு தப்பு தப்பாக யோசிப…

  14. சென்னை:ஆர்யா படத்துக்கு கால்ஷீட் மறுத்த ஸ்ருதிஹாசன், விஷாலுடன் நடிக்கவும் மறுத்துள்ளார்.மகிழ்திருமேனி இயக்கத்தில் ஆர்யா நடிக்கும் படம் மீகாமன். இதில் ஆர்யாவுக்கு ஜோடியாக நடிக்க ஸ்ருதிஹாசனிடம் பேசப்பட்டது. இந்தியில் 2, தெலுங்கில் 2 படங்களில் நடித்து வருகிறார் ஸ்ருதி. ஆர்யாவுடன் நடிக்க கேட்டதும் யோசித்து சொல்வதாக சொன்னவர், பதிலே சொல்லவில்லையாம். பிறகு மீண்டும் தயாரிப்பாளர் தரப்பில் கேட்டபோது கால்ஷீட் இல்லை என மறுத்துள்ளார். ஆர்யாவின் நெருங்கிய நண்பர் விஷால். அவன் இவன் படத்தில் நடிப்பதற்கு முன்பே இருவரும் தோழர்கள் ஆகிவிட்டனர். இந்நிலையில் ஹரி இயக்கும் படத்தில் விஷால் நடிக்கிறார். ஸ்ருதியை மீகாமன் படத்தில் நடிக்க வைக்கலாம் என ஐடியா கொடுத்தவர் ஆர்யா. அதேபோல் தனது படத்திலும் …

  15. தமிழ் சினிமாவில் இப்போதுள்ள டைரக்டர்கள் அனைவரும் தமிழ் பெயர்களையும் தாண்டி சங்கத் தமிழ் வரைக்கும் சென்று பட தலைப்பை வைக்க சென்றுள்ளார்கள்.தமிழ் பட டைரக்டர்களுக்கு தமிழ் பற்று பொங்கி வழிகிறது. சங்க இலக்கியத்திருந்தெல்லாம் சொற்களை கண்டுபிடித்து படத்துக்கு டைட்டிலாக வைக்க ஆரம்பித்திருக்கிறார்கள். இதற்கு முன் வாரணம் ஆயிரம், பொன்மாலை பொழுது, விண்ணைத்தாண்டி வருவாயா என கவுதம் மேனன்தான் அழகு தமிழில் பெயர் வைப்பார். லிங்குசாமி இயக்கத்தில் சூர்யா நடிக்கும் படத்திற்கு அஞ்சான் என்று பெயர் வைத்திருக்கிறார்கள். அஞ்சான் என்றால் எதற்கும் அஞ்சாதவன், பயப்படாதவன் என்ற பொருள். கே.வி.ஆனந்த் டைரக்ஷனில் தனுஷ் நடிக்கும் படத்திற்கு அனேகன் என்று டைட்டில் வைத்திருக்கிறார். அனேகன் என்றால் அனைத்த…

  16. விமர்சனம் : இட்லி கடை! 2 Oct 2025, 1:18 PM இது ‘பீல்குட் மூவி’யா?! தமிழில் பாக்யராஜ், பாண்டியராஜன், டி.ராஜேந்தர், பார்த்திபன் என்று வெகு சிலரே தாம் இயக்கிய படங்களில் நாயகனாக நடித்து வெற்றிகளைச் சுவைத்திருக்கின்றனர். எஸ்.ஜே.சூர்யா, சமுத்திரக்கனி போன்றவர்கள் அம்முயற்சிகளில் ஓரளவுக்கு வெற்றி பெற்றிருக்கின்றனர். இன்னொருபுறம் நாயகர்களாக விளங்கிய சிலர் நடிப்பைத் தாண்டி தமது திறமைகளை வெளிக்காட்ட அல்லது இதர சில காரணங்களுக்காக இயக்குனர்களாகக் களமிறங்கியிருக்கின்றனர். எம்ஜிஆர், ஜெமினி கணேசன், ரவிச்சந்திரன், அர்ஜுன், கமல்ஹாசன், சத்யராஜ், விஜயகாந்த் என்று அந்தப் பட்டியலும் கொஞ்சம் பெரியதுதான். அந்த வரிசையில் இடம்பெறுகிற இளைய நட்சத்திரங்களில் ஒருவர் தனுஷ். பவர் பாண்டி, ராயன், நிலவுக்…

  17. 'இமைப்பொழுதும் சேராதிருத்தல்...' பாரதியின் இந்த வரிகளுக்கேற்ப தனது நடவடிக்கையை மாற்றிக்கொண்டுள்ளார் ஆர்யா. 'நான் கடவுள்' படத்தில் நடித்துவரும் ஆர்யா ஒவ்வொரு நொடிப்பொழுதும் அந்த கதாபாத்திரத்தின் மேனரிஸத்தையே அசைப் போட்டுக் கொண்டிருக்கிறாராம். அந்த அளவுக்கு நான் கடவுள் கேரக்டரோடு ஒன்றிவிட்ட ஆர்யா, இன்னொரு ப்ராஜக்டிலும் ஒப்பந்தமாகியுள்ளார். படத்தின் பெயர் 'ஜெராக்ஸ்.' 'கலாபக் காதலன்' படத்தை இயக்கிய இகோர் இயக்கும் இந்த படத்தில் முதன்முறையாக இரண்டு வேடங்களில் நடிக்கிறாராம் ஆர்யா. இரட்டை வேடமென்றாலே அண்ணன் - தம்பியோ, அப்பா - மகனோ இல்லையாம். அது என்ன என்பதை சஸ்பென்சாக வைத்துள்ளனராம். ஆர்யாவுக்கு ஜோடியாக பூஜாவும், இன்னொரு புதுமுகமும் நடிக்கலாம் என்…

  18. பிரகாஷ்ராஜ் முதன்முதல் இயக்குநர் பொறுப்பேற்றுத் தாயரித்து வழங்கியிருக்கும் திரைப்படம் தோனி. இன்றைய கல்வி முறையின் தொடர் பாதிப்புகளைக் காட்டமான விசாரணைக்கு உட்படுத்தும் அந்தப் படம் பார்ப்பவர்களை மேலும் உணர்ச்சிமயமான சிந்தனைக்குள் சுழல வைத்துவிட்டது. இன்றைய கல்வி முறையின் அபத்தங்கள் குறித்து நையாண்டி செய்திருக்கிறது தோனி. சமகாலத்தில் பெற்றோரையும், சமூகத்தையும் குழந்தைக்கு நேர் எதிராக நிற்க வைக்கும் கல்வி அணுகுமுறை குறித்துச் சாட்டையடியாக விவாதங்களை முன்வைக்கிறது. அவனால் ஏன் இந்தக் கல்வித் திட்டத்தின் படிக்கட்டுகளை ஏறமுடியாது என்றால், படத்தின் தலைப்பிலேயே சொல்லி இருப்பது மாதிரி அவன் தோனியின் தீவிர பக்தன். கிரிக்கெட் அவனது உயிர். அவனது விளையாட்டுத் திறமை பற்றி கிரிக…

  19. ‘ஆறு மனமே ஆறு’ -இதுதான் ஷாமும் முகவரி துரையும் சொல்ல வந்த 6 ஆக இருக்க வேண்டும். திருக்குறள் சைசுக்கு கதை இருந்தாலும், அதில் முதல் வரி முழுவதையும் ஓ.பி அடிக்க பழகியிருக்கிறார்கள் இப்போதிருக்கும் பல இயக்குனர்கள். மீதி ரெண்டாவது வரியில்தான் கதையும் விறுவிறுப்பும் அடங்கியிருக்கும். (சில படங்களில் அந்த உப்பு சப்பும் இல்லை) ஆனால் 6 அப்படியல்ல, படம் தொடங்கி பத்தாவது நொடியில் கதை தொடங்கிவிடுகிறது. கதை தொடங்கிய பத்தாவது நொடியில் நமக்கும் பதற்றம் தொடங்கிவிடுகிறது. அடுத்த காட்சி அடுத்த காட்சி என்று குரங்கை போல நம்மை தாவி இழுத்துக் கொண்டு ஓடுகிறது படம். முடியும்போது நம்மையறியாமல் சிந்துகிற ரெண்டு சொட்டு கண்ணீருக்குள்தான் இந்த படத்தின் ஹிட்டும் அடங்கியிருக்கிறது. இன்டர்வெல் நேரத்தில்…

  20. அலெக்ஸ் பாண்டியன் தோல்விக்குப் பிறகு கார்த்திக்கு படங்கள் ஏதும் வெளியாகவில்லை! ஆனால் தற்போது கார்த்தி நடிப்பில் ‘பிரியாணி’, ‘ஆல் இன் ஆல் அழகு ராஜா’ ஆகிய இரண்டு படங்களையும் ஒரே நேரத்தில் தயாரித்து வருகிறது ஸ்டுடியோ கிரீன் நிறுவனம். இதில் ‘பிரியாணி’ படத்தை வருகிற செப்டம்பர் 30-ஆம் தேதி ரிலீஸ் செய்யத் திட்டமிட்டிருந்தனர். ஆனால், தற்போது ‘பிரியாணி’ ரிலீஸ் தள்ளிபோகும் நிலையில் இருப்பதால், தீபாவளி வெளியீடாக முதலில் ‘ஆல் இன் ஆல் அழகுராஜா’வை வெளியிட ஏற்பாடுகள் நடந்து வருகிறதாம். கார்த்தி, காஜல் அகர்வால், பிரபு, சந்தானம் ஆகியோர் நடிப்பில் எம்.ராஜேஷ் இயக்கியிருக்கும் இந்தப்படம் காமெடி கலந்த குடும்பப்படமாக இருப்பதால் தீபாவளி வெளியீடாக வந்தால் குடும்ப ரசிகர்களை சென்றடையும் என்பதால் இ…

  21. தங்கள் காதலை வளர்க்க சென்னையை விரும்பும் ஐஸ்வர்யாராய்-அபிஷேக்பச்சான் ஜோடி! சென்னையில்., ஒரே திரையரங்கில் அடுத்தடுத்து இரண்டு படம் பார்த்து ரசித்துள்ளது!! முன்னாள் உலக அழகி ஐஸ்வர்யாராயும், இந்தி திரையுலகின் சூப்பர் ஸ்டார் அமிதாப்பச்சனின் மகனும் இந்தி நடிகருமான அபிஷேக்பச்சனும் ஒருவரையருவர் தீவிரமாக காதலித்து வருகின்றனர். மும்பை நகரில் ஏதாவது ஒரு விழாவில் ஐஸ்வர்யாராய் கலந்து கொ£ள்கிறார் என்றால் அங்கே அபிஷேக்பச்சனும் தவறாமல் ஆஜராகி விடுவார். "ஐஸ்-அபிஷேக் ஜோடி, நாகரீக ரசிகர்கள்(!) நிரம்பிய சென்னையை இடையூறு இல்லாமல் தங்கள் காதலை வளர்க்கவே தேர்ந்தெடுத்துள்ளதாக மும்பை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன..." இதே போன்று அமிதாப் வீட்டு விசேஷங்களிலும் ஐஸ்வர்யாராய்…

  22. சென்னை கம்பன் விழாவில், ஈழத் தமிழர் நிலை பற்றிய பேச்சை கேட்டு நடிகர் ரஜினிகாந்த் கண்கலங்கினார். கம்பன் கழகம் சார்பில், 36-வது ஆண்டு கம்பன் விழா சென்னை மைலாப்பூரில் உள்ள ஏ.வி.எம்.ராஜேஸ்வரி திருமண மண்டபத்தில் 3 நாட்கள் நடைபெற்றது. இறுதி நாளன்று, “கம்பன் புலமை, திருவள்ளுவர் வழியில் பெரிதும் வெளிப்படுவது அறத்திலா, பொருளிலா, இன்பத்திலா” என்ற தலைப்பில் பட்டிமன்றம் நடைபெற்றது. விழாவில், கம்பன் கழக தலைவர் ஆர்.எம்.வீரப்பன், மத்திய இணை அமைச்சர் ஜெகத்ரட்சகன், கவிஞர் காசிமுத்து மாணிக்கம், புதுவை தர்மராஜன், இயக்குநர் எஸ்.பி.முத்துராமன், ஏ.வி.எம்.சரவணன், சுப்ரீம் கோர்ட்டு ஓய்வுபெற்ற நீதிபதி மோகன், மூத்த வக்கீல் காந்தி உள்பட பலர் கலந்துகொண்டனர். பட்டிமன்றத்தில் இலங்கையைச…

  23. இவ்வருட ஆஸ்கார் ரஹ்மான் கைக்கு எட்டவில்லை 127 hours படத்துக்கான பின்னணி இசைக்கும் அதே திரைப்படத்தில் இடம்பெற்ற பாடலுக்குமாக A.R. ரஹ்மான் இரண்டு விருதுகளுக்கான பரிந்துரை பட்டியலில் இருந்தார் . தான் நிகழ்ச்சியில் பங்குபற்ற மட்டுமே போகிறேன் பரிசை வெல்லும் எதிர்பார்ப்பு தன்னிடம் இல்லை என ரஹ்மான் கூறியிருந்தார் . இரண்டு விருதுகளுக்கான பரிந்துரை பட்டியலில் குறைந்த பட்சம் ஒன்றாவது பெற்று ஏற்கனவே ஒரே வருடத்தில் இரண்டு விருது பெற்ற தமிழன் என்ற அவரது சாதனையை இரண்டு முறை வெவ்வேறு வருடங்களில் பெற்றவர் என்று உயர்த்திக்கொள்வாரா என்ற கோடிகணக்கான ரஹ்மான் ரசிகர்களின் ஆசைக்கு இன்றிரவு விடை கிடைத்துள்ளது . ஆயினும் அது முழு மகிச்சிக்குரியதாக அமையவில்லை . இரண்டு பரிசுகளையு…

    • 4 replies
    • 947 views
  24. Started by அறிவிலி,

    மிக புகழ் உச்சியில இருக்குறவங்க ...............ரொம்ப சாதாரணமா நடந்துக்கும்போது இவங்கதான் மலைடான்னு எனக்கு தோணும்! ஷாருக்கான்: http://www.youtube.com/watch?v=ClnoXEax11E ஏ.ஆர்.ரஹ்மான்:

  25. Started by arjun,

    “கயலை” பார்க்க போனோம்: நேற்றையதினம் பொழுதை போக்கவேண்டி என்ன செய்யலாம்... (வீட்டில் பிள்ளைகளும் டிவி பார்க்கவிடாமல் basket ball game பார்த்துகொண்டிருந்தார்கள்) என்று நினைத்தபோது “கயல், மீகாமன், வெள்ளைத்துரை” ஆகிய படங்களில் ஒன்றை பாரக்கலமே என நினைவுக்கு வந்தது. கயல் என்ற பெயர் இனிமையாக இருந்தது அத்துடன் சாலமன் எடுத்த படம் கட்டாயம் இயற்கை காட்சிகள் இருக்கும் என நினைத்து...கயலை போய் பார்த்தோம். முன்பாதி அருமையான இயற்கை காட்சிகளும் யாதர்த்தமான சிந்திக்கவேண்டிய நகைச்சுவைகாட்சிகளும் நிறைந்ததாக இருந்தது...பின்பாதி அத்தனை சந்தோஷங்களையும் சுனாமி மாதிரி வாரிக்கொண்டு உள்ளே போய்விட்டது கதை.... ஆனாலும் சுனாமிக்கு முன் கட்டாயம் பார்க்கலாம். “கயல்”.. பெயருக்கேற்ப அழகானவள்.. (எனக்…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.