வண்ணத் திரை
சினிமா விமர்சனம் | சினிமாச் செய்திகள் | கருத்துகள்
வண்ணத் திரை பகுதியில் சினிமா விமர்சனம், சினிமாச் செய்திகள், உலக சினிமா சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் சினிமா விமர்சனங்களுக்கும் தரமான சினிமா சம்பந்தமான கட்டுரைகளுக்கும் முன்னுரிமை கொடுத்தல் வேண்டும். அளவுக்கதிகமான சினிமாச் செய்திகளையும், கிசுகிசு செய்திகளையும் தவிர்க்கவேண்டும்.
5549 topics in this forum
-
கத்தி இல்லை... இரத்தம் இல்லை... அவனைப் போட்டுர்றேன்... அவன் கையை வெட்டு, காலை வெட்டு.... ஏய்ய்ய்ய்ய்ய்ய்ய்...... டாய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்.. .. இரைச்சல் இல்லை..... முதலில் பாக்யராஜுக்கு கை கொடுக்க வேண்டும்.... ரவுடிக்களும், தாதாக்களும் ஆக்கிரமித்திருக்கும் தமிழ்த் திரையுலகை அழகான தனது ஸ்கிரிப்ட் கொண்டு மீட்டிருக்கிறார்.... ரொம்ப ரொம்ப சுமாரான ஒரு கதையை எப்படி சுவாரஸ்யமாக்குவது என்ற வித்தை பாக்யராஜுக்கு இன்னமும் கை கொடுக்கிறது.... சீதா வீட்டில் வேலைக்காரியாக இருக்கும் கதாநாயகியைத் அவர் மகனுக்கே திருமணம் செய்துவைக்க நினைக்கிறார் சீதா.... இதை கதாநாயகியிடம் மட்டுமே சொல்லுகிறார்.... தன் பையனுக்கும், கணவனுக்கும் சொல்லாமல் சஸ்பென்ஸ் மெயிண்டெயின் செய்கிறார்..... சொல்லுவதற…
-
- 16 replies
- 5.6k views
-
-
பாரில் திரிஷாவுக்கு விழுந்த 'பளார்'!! பார்ட்டிக்குப் போய், பெரிய இடத்துப் பெண்ணுடன் மோதி, பளார் பளார் என அறை வாங்கித் திரும்பியுள்ளார் திரிஷா. பார்ட்டிகளும் (தண்ணி பிளஸ் டான்ஸ்), திரிஷாவையும் எப்போதும் பிரித்துப் பார்க்கவே முடியாது. ஏற்கனவே மூன்று முறை மப்பில், தள்ளாடி போலீஸிடம் பிடிபட்டு திரும்பியவர் (திருந்தாமல்) திரிஷா. சில மாதங்களுக்கு முன்பு கிழக்குக் கடற்கரை சாலையில் விஜய் வீட்டுக்கு இரண்டு தெரு முன்பாக, நடுத் தெருவில் தோழியர்களுடன் மப்பும், மந்தாரமுமாக ஆட்டம் போட்டு போலீஸிடம் திரிஷா மாட்டி மீண்டது நினைவிருக்கலாம். இதேபோல அடிக்கடி பார்ட்டிகளில் ஆட்டம் போட்டு ஏதாவது ஒரு சர்ச்சையில் சிக்கிக் கொள்வது திரிஷாவுக்கு வழக்கமாகி விட்டது…
-
- 3 replies
- 2k views
-
-
சாதனை படைத்த தமிழ்த் திரைப்பட கலைஞர் பாரதிதாசனார் பற்றி பார்ப்போம். பார் போற்றும் பாவேந்தர் "மகாகவி பாரதி நமக்களித்த ஒப்பற்ற உயர்ந்த முதல் பாடலே பாரதிதாசன்" என்கிறார் நீதியரசர் மகாராசன். தமது ஆசான் பாரதியாரை அடியொற்றியே பாவேந்தரும்,"எளிய சொற்கள், எளிய சொற்றொடரழகு, எளிய சந்தம்,மக்கள் மனதில் பதியும்படியான இசை" என்றவாறாக பாடல்களை உருவாக்கினார். அவர் காலத்தின் திரைப்படங்களின் பிற்போக்கினை கண்டித்து ,கவிதையிலேயே ஒரு விமர்சனம் எழுதியுள்ளார் புரட்சிக்கவிஞர். சினிமா பாடல்கள் எழுதுவதில் இவருக்கு ஆர்வமிருந்ததில்லை. சினிமா பாடல்கள் எழுதும்படி வேண்டுபபவரிடம் "சினிமாப் பாட்டுத்தானே,அது கிடக்கட்டும்,எழுதினாப்போச்சு " என்று கூறிவிட்டு, இலக்கியம் சம்பந்தமா…
-
- 4 replies
- 3.1k views
-
-
நெதர்லாந்து நாட்டிலிருந்து ஐஸ்வர்யா ராய்க்கு ரூ. 14 லட்சம் பணம் தபால் மூலம் வந்தது குறித்து அவருக்கு சுங்கத்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது. வெளிநாட்டிலிருந்து வரும் பார்சல்களை ஸ்கேன் செய்து பார்ப்பது தபால் துறையின் வாடிக்கையான விஷயம். பாதுகாப்பு கருதி இந்த நிநவடிக்கை எடுக்கப்படுகிறது. அந்த வகையில் ஐஸ்வர்யா ராய்க்கு நெதர்லாந்து நாட்டிலிருந்து வந்த ஒரு பார்சலையும் அதிகாரிகள் ஸ்கேன் செய்து பார்த்தபோது அதில் ஐரோப்பிய நாணயமான யூரோ பணக் கட்டுக்கள் இருந்தன. பார்சலில் பணம் அனுப்பக் கூடாது என்பது விதியாகும். எனவே ஐஸ்வர்யாவுக்கு வந்திருந்த அந்த பார்சலைப் பிரித்து பணத்தை எண்ணிப் பார்த்தபோது ரூ. 14 லட்சம் மதிப்புள்ள யூரோ கரன்சி இருந்தது. இதுகுறித்து ஐஸ்வர்யா…
-
- 10 replies
- 2.2k views
-
-
துலாபாரம் படம் முதலில் மலையாளத்திலும் பின்னர் தமிழிலும் 1969ம் ஆண்டு எ வி எம் ராஜன் சாரதாவின் நடிப்பில் வெளிவந்த படம்.இப்படத்தில் நடித்ததற்காக நடிகை சாரதாவிற்கு ஊர்வசி வருது மலையாளத்திலும் தமிழிலும் கிடைத்திருந்தது. அந்த நேரத்தில் இரத்தம் ஓடஓட அடி அடியென்று அடித்தாலும் கண்ணீரே வராது.அப்படிபட்ட வயதில் இந்த படம் பார்த்த போது அழுகையே வந்துவிட்டது.அந்த இருட்டுக்குள்ளும் சுற்றுமுற்றும் பார்த்தால் தெரிந்த வரை அழாத ஆட்களே இல்லைப் போல் இருந்தது. இங்கு பலர் அந்த நேரம் பிறந்தேயிருக்கமாட்டார்கள்.இது கறுப்பு வெள்ளை படம் என்பதால் இப்போது பார்க்கவும் முடியாது. இப்படி நீங்களும் பார்த்த சோகப்படங்களைப் பற்றி எழுதலாமே. http://www.youtube.com/watch?v=uNVeKrzBbr0
-
- 9 replies
- 7.1k views
-
-
செவ்வாய்கிழமை மேலும் சில பரவசப் படங்கள் போட்டிருக்கு. பார்த்து பரவசமாகுங்க !!
-
- 19 replies
- 1.5k views
-
-
A film without a story::
-
- 0 replies
- 571 views
-
-
பாவலர் அறிவுமதி அண்ணன் அவர்கள் அண்மையில் எழுதியுள்ள ஒரு ஆய்வுக் கட்டுரையைப் படித்தேன். அதில் எவ்வளவோ அதிர்ச்சிதரும் எம சமூகத்திற்கான தகவல்களும் பொதிந்து கிடக்கின்றது. யாழ்கள உறவுகளுக்காக இங்கே தருகின்றேன். இது தொடர்பாக அறிவுமதி அண்ணனோடு உரையாடினேன். இதோ உங்களுக்காக அதை வழங்குகின்றேன். நன்றி: கீற்று இணையம். பார்ப்பன வாத்தியார்கள் பாவலர் அறிவுமதி ஞாநி இப்போது தமிழ்ச்சமுகத்தின் பாலியல் வாத்தியாராகப் பதவி உயர்வு பெற்றுவிட்டார். அதனால்தான் ஆனந்த விகடனில் 'அறிந்தும் அறியாமலும்' எழுதுகிறார். மூன்று வயது ஆண்குறி விறைப்பது குறித்தும், மூன்று வயது பெண்குறி பிசுபிசுப்பது குறித்தும் எழுதி எழுதி... முதன் முதலாக எப்போது நீங்கள் அதைத் தொட்டது.. மு…
-
- 9 replies
- 3.2k views
-
-
நான் கடவுள் நாயகி யார் என்பது அந்தக் கடவுளுக்குத்தான் கரெக்டாக தெரியும் போல.அந்த அளவுக்கு பெரும் குழப்பமாக இருக்கிறது. நான் கடவுள் படத்தின் ஆரம்பத்திலிருந்தே பல பஞ்சாயத்துக்கள் தொடர்ந்தபடி உள்ளன.முதலில் அஜீத் நடிப்பதாக இருந்தது. பின்னர் என்ன நடந்ததோ, அஜீத் தூக்கப்பட்டார். ஆர்யா கடவுளாக்கப்பட்டார். பாவனா நாயகியாக நடிப்பதாக இருந்தது. அவரை வைத்து சில காட்சிகளைக் கூட படமாக்கி விட்டார் பாவனா. இந்த நிலையில் பாவனா சரியில்லை என்று கூறி அவரைத் தூக்கி விட்டார். இடையில் படமே கை மாறி விட்டது. முதலி்ல் தயாரிப்பாளராகஇருந்த தேனப்பன் சமீபத்தில் அதிலிருந்து விலகிக் கொண்டு விட்டார். இப்படிஅடுத்தடுத்து குழப்பத்தில் சிக்கித் தவிக்கும் நான் கடவுள் படத்தின் நாயகி யா…
-
- 0 replies
- 893 views
-
-
[size=4]என்னோட ஃபேவரிட் ஹீரோ டென்சல் வாஷிங்டன்(Denzel Washington) நடித்த "பிளைட் Flight (2012)" படம் யாரவது பார்த்திங்களா? படம் எப்படி இருக்கு? இந்த வாரம் பார்க்கலாமுன்னு இருக்கேன். படம் பற்றிய உங்களது பார்வை எனக்கு தேவை........[/size]
-
- 0 replies
- 434 views
-
-
பாலச்சந்திரனின் ஒளிப்படம் ஜோதிகா நடிக்கும் படத்தில் இயக்குநர் பிரம்மாவின் இயக்கத்தில் ஜோதிகா நடித்திருக்கும் திரைப்படம் மகளிர் மட்டும். அந்தத் திரைப்படத்தின் முன்னோட்டம் அண்மையில் வெளியானது. அதில் விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் வே.பிரபாகரனின் புதல்வன் பாலச்சந்திரனின் ஒளிப்படம் ஏந்தியவாறு பெண்கள் விளக்கை கையில் வைத்துக் கொண்டு போராட்டம் நடத்துவது போன்ற காட்சி அமைந்துள்ளது. மெரினாவில் இந்தப் போராட்டம் நடத்தப்பட்டதாகவே காட்சி அமைக்கப்பட்டுள்ளது. பாலச்சந்திரன் எத்தனை காலங்கள் கடந்தாலும் இந்த 21ஆம் நூற்றாண்டில் நடந்த மிகப் பெரும் மனிதப் படுகொ…
-
- 0 replies
- 370 views
-
-
முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்த ‘கத்தி’ படம் கடந்த வருடம் வெளியானது. இப்படத்தை லைக்கா நிறுவனம் தயாரித்திருந்தது. இப்படம் வெளியாகி சூப்பர் ஹிட்டானது. மேலும் வணீக ரீதியாகவும் வெற்றியடைந்தது. இப்படத்தை தொடர்ந்து லைக்கா நிறுவனம் சங்கர் இயக்கத்தில் ரஜினி நடிக்க இருக்கும் ‘எந்திரன் 2’ படத்தை தயாரிக்க இருக்கிறது. இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க இருக்கிறது. இதற்கிடையில் இந்நிறுவனம் படங்களை வாங்கி விநியோகம் செய்ய இருக்கிறது. சமீபத்தில் தனுஷ் தயாரிப்பில் விஜய் சேதுபதி-நயன்தாரா ஜோடியாக நடித்துள்ள ‘நானும் ரௌடிதான்’ படத்தை விநியோகம் செய்யும் உரிமையை வாங்கியது. மேலும் வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகியிருக்கும் ‘விசாரணை’ படத்தையும் லைக்கா நிறுவனம் வாங்கியது. தற்போது இந்…
-
- 0 replies
- 309 views
-
-
பாலா போட்ட போட்டில் ஓடிப் போன 'பவர் ஸ்டார்' சீனிவாசன்! எப்பவுமே டென்ஷனாக இருக்கும் இயக்குநர் பாலாவை எக்குத்தப்பாக டென்ஷனாக்கி கொந்தளிக்க வைத்து விட்டாராம் நமது 'பவர் ஸ்டார்' சீனிவாசன்.! அதர்வாவை நாயகனாக வைத்து பரதேசி என்ற படத்தை சிரத்தையாக இயக்கி வருகிறார் பாலா. கூலித் தோட்டத் தொழிலாளர்கள் குறித்த கதை இது. மிகவும் சீரியஸான கதை என்பதால் படப்பிடிப்புத் தளமே படு கவனமாக செயல்பட்டு வருகிறதாம். வழக்கமாக பாலா படங்களில் வினோதமான, வித்தியாசமான கதாபாத்திரங்களைப் பார்க்கலாம். நந்தாவில் லொடுக்குப் பாண்டி அதற்கு ஒரு உதாரணம். அதேபோல பரதேசி படத்திலும் இப்படி ஒரு கிராக்குத்தனமான கேரக்டர் இருக்கிறதாம். அதற்கு யாரைப் போடலாம் என்று யோசித்தபோது யார் அவருக்கு ஐடியா கொடுத்…
-
- 15 replies
- 2.2k views
-
-
சேது, நந்தா, பிதாமகன், நான் கடவுள், அவன் இவன் ஆகிய படங்களை இயக்கிய இயக்குனர் பாலா, 'பரதேசி' என பெயர் இடப்பட்டிருக்கும் புதிய படத்தை வித்தியாசமான கதை பின்னணியில் இயக்கியிருக்கிறார். 1930-களில் நடந்த உண்மைச் சம்பவங்களை மையமாகக் கொண்டு இத்திரைப்படம் உருவாகியிருக்கிறது. அதர்வா, வேதிகா, தன்ஷிகா ஆகியோர் நடித்துள்ள இப்படத்திற்கு இசை ஜி.வி.பிரகாஷ். படப்பிடிப்பு சிவகங்கை மாவட்டத்திலுள்ள சாலூர், மானாமதுரை மற்றும் கேரள மாநிலம் மூணார், தலையார், தேனி மாவட்ட கண்ணக்கரை வனப் பகுதிகளில் சுமார் 90 நாட்கள் நடைபெற்றது. செப்டம்பர் 19 லண்டனில் இத்திரைபடத்தின் பாடல் மற்றும் டிரைலர் லண்டனில் வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது Vikatan Cinema
-
- 16 replies
- 5.9k views
-
-
பாலாவின் ‘வர்மா’ கைவிடப்பட்டது! பாலா இயக்கத்தில் உருவான ‘வர்மா’ படத்தைக் கைவிடுவதாக E4 என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தெரிவித்துள்ளது. தெலுங்கில் வெளியான அர்ஜுன் ரெட்டி படத்தின் தமிழ் ரீமேக்கை பாலா ‘வர்மா’ என்ற பெயரில் இயக்கியுள்ளார். விக்ரம் மகன் துருவ் கதாநாயகனாக அறிமுகமாகும் இந்தப் படத்தில் அவருக்கு ஜோடியாக மேகா நடித்துள்ளார். படத்தின் பணிகள் நிறைவடைந்து காதலர் தினத்துக்கு வெளியாவதாக இருந்தது. ஆனால் விலங்குகள் நல வாரியத்தில் தடையில்லா சான்றிதழ் பெறுவதில் தாமதமானதால் படத்தின் வெளியீடு தள்ளிப்போனது. தற்போது தயாரிப்பு நிறுவனம் படத்தை கைவிடுவதாக அறிக்கை வெளியிட்டுள்ளது. அர்ஜுன் ரெட்டியின் தமிழ் ரீமேக்கை ‘ஃபர்ஸ்ட் காப்பி’ அடிப்படையில் தயாரித்து கொடுப்பதாகப் ப…
-
- 2 replies
- 932 views
-
-
பாலியல் தொல்லை : 14 பேர் பட்டியலை வெளியிட்ட - நடிகை ரேவதி சம்பத் திருவனந்தபுரம் நடிகை, உளவியல் நிபுணர், சமூக ஆர்வலர் எனப் பன்முகம்கொண்டவர் ரேவதி சம்பத் (வயது 27). கோவையில் உள்ள கே.எஸ்.ஜி கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் உளவியலில் பட்டம் பெற்றுள்ளார். அவரது மிகப் பெரிய படைப்புகளில் வாஃப்ட் என்ற குறும்படம் அடங்கும். இந்த் குறும்படம் அவர் சினிமாவில் அறிமுகமாவதற்கு ஒரு வருடத்திற்கு முன் வெளியிடப்பட்டது. 2019-ல் `பட்னாகர்’ என்ற திரைப்படத்தில் போலீஸ் அதிகாரியாக அறிமுகமானார். இவர் தற்போது, தனக்கு பாலியல் தொல்லை தந்தவர்கள் என 14 பேருடைய பட்டியலை தன்னுடைய பேஸ்புக் பக்கத்தில் வெளியிட்டிருக்கிறார். ``இவர்கள் என்னை பாலியல் ரீதிய…
-
- 0 replies
- 317 views
-
-
பாலியல் ரீதியாக என் அப்பா என்னை துன்புறுத்தினார் -குஷ்பூ கொடுத்த ஷாக்! JegadeeshMar 06, 2023 10:32AM தேசிய மகளிர் ஆணைய உறுப்பினராகச் சமீபத்தில் குஷ்பூ பொறுப்பேற்றார். இதற்கிடையே நிகழ்ச்சி ஒன்றில் பேசிய குஷ்பு, தனது சிறு வயது வாழ்க்கை குறித்து தனக்கு நேர்ந்த பிரச்சினைகள் குறித்தும் பகிர்ந்து கொண்டார். தர்மத்தின் தலைவன் படம் மூலம் தமிழ் திரையுலகில் கதாநாயகியாக அறிமுகமானவர் குஷ்பூ. ரஜினி, கமல் என 80-களின் முன்னணி நட்சத்திரங்களுடன் பல படங்களில் சேர்ந்து நடித்திருக்கிறார். பாஜக தேசிய செயற்குழு உறுப்பினராக இருந்த குஷ்பூ சமீபத்தில் தேசிய மகளிர் ஆணைய உறுப்பினராக நியமிக்கப்பட்டார். மம்தா குமாரி, டெலினா கோங்தூப் ஆகியோருடன் குஷ்பூ-வும் தேசிய மகளிர் ஆ…
-
- 8 replies
- 949 views
- 1 follower
-
-
பாலியல் வன்கொடுமை (678 - Egypt Film) ஒரு பெண் தன்னுடைய வீட்டிலிருந்து வெளியே செல்வதற்குமுன், ஏராளமான கேள்விகளை தனக்குள்ளே கேட்டுக்கொள்ள வேண்டியிருக்கிறது. நான் போகிற இடம் எனக்குப் பாதுகாப்பானதுதானா? நான் எந்த உடையினை அணிய வேண்டும்? அந்த உடை மிகவும் இருக்கமானதாக இருக்கிறதா? அந்த உடை அணிந்தால், என்னுடைய உடலை வெளிக்காட்டுவதுபோல் இருந்துவிடுமா? எதிலே நான் அவ்விடத்தை அடையப்போகிறேன்? நான் போகவேண்டிய இடத்தில், தனியே நான் நடக்கலாமா? அல்லது ஆண் துணையுடன்தான் நடக்கவேண்டுமா? இப்படியான கேள்விகள் பெண்களின் அன்றாட வாழ்க்கையில் அங்கமாகிப் போயிருக்கிறது. பெண்களுக்கு நிகழ்த்தப்படுகிற உடல்ரீதியான வன்கொடுமைகளே இதற்கு முக்கிய காரணமாக இருக்கிறது. …
-
- 0 replies
- 1.1k views
-
-
ஒரு பெண் தன்னுடைய வீட்டிலிருந்து வெளியே செல்வதற்குமுன், ஏராளமான கேள்விகளை தனக்குள்ளே கேட்டுக்கொள்ள வேண்டியிருக்கிறது. நான் போகிற இடம் எனக்குப் பாதுகாப்பானதுதானா? நான் எந்த உடையினை அணிய வேண்டும்? அந்த உடை மிகவும் இருக்கமானதாக இருக்கிறதா? அந்த உடை அணிந்தால், என்னுடைய உடலை வெளிக்காட்டுவதுபோல் இருந்துவிடுமா? எதிலே நான் அவ்விடத்தை அடையப்போகிறேன்? நான் போகவேண்டிய இடத்தில், தனியே நான் நடக்கலாமா? அல்லது ஆண் துணையுடன்தான் நடக்கவேண்டுமா? இப்படியான கேள்விகள் பெண்களின் அன்றாட வாழ்க்கையில் அங்கமாகிப் போயிருக்கிறது. பெண்களுக்கு நிகழ்த்தப்படுகிற உடல்ரீதியான வன்கொடுமைகளே இதற்கு முக்கிய காரணமாக இருக்கிறது. (நன்றி - விக்கிபீடியா) கதைச்சுருக்கம்: எகிப்த…
-
- 1 reply
- 1.2k views
-
-
பாலியல் வல்லுறவு குற்றங்களுக்கு சினிமா காரணம் என்று விமர்சனங்கள் கிளம்பியுள்ளன. இதற்கு பதில் அளித்து நடிகை குஷ்பு கூறியதாவது:- மக்கள் எல்லா மீடியாக்களையும் பார்க்கின்றனர். இதில் சினிமாவை மட்டும் ஏன் குறை சொல்ல வேண்டும்? சினிமா என்பது பொழுது போக்கு துறையின் ஒரு பகுதி. நூறு ஆண்டுகள் சினிமா இருக்கிறது. குற்றங்கள் நடக்கும்போது அதன்மேல் பழிபோடக் கூடாது. இளைஞர்கள் வீட்டில் எப்படி வளர்க்கப்படுகிறார்கள் என்பதை வைத்துதான் பெண்கள் மீதான அவர்களின் பார்வைகள் தீர்மானிக்கப்படுகிறது. திரைப்படங்கள் காலத்திற்கேற்ப மாறக்கூடியது. ஒரு காலத்தில் முத்தக் காட்சிக்கு இரண்டு பூக்கள் முத்தமிடுவதுபோல் சினிமாவில் காட்டினார்கள். இப்போது நேரடியாகவே உதட்டோடு உதடு முத்தமிட்டு நடிக்கின்றனர். சினிமா …
-
- 0 replies
- 496 views
-
-
பலாத்காரம் செய்பவர்களுடன் சண்டைபோட ஒவ்வொரு பெண்ணுக்கும் கராத்தே கற்றுத் தரவேண்டும் என்றார் நீது சந்திரா. ‘ஆதிபகவன் உள்ளிட்ட படங்களில் நடித்திருப்பவர் நீது சந்திரா. இவர் கூறியதுகடந்த ஆண்டு டெல்லியில் மருத்துவக்கலூரி மாணவி ஒரு கும்பலால் பலாத்காரம் செய்யப்பட்டார். அதில் குற்றவாளிக்களுக்கு தண்டனை கிடைத்தது. அந்த வருத்தம் ஆறுவதற்குள் சமீபத்தில் மும்பையில் ரவுடிகள் சிலரால் பெண் பத்திரிகையாளர் பலாத்காரம் செய்யப்பட்டிருக்கிறார். ஒரு சம்பவம் நடந்த சில மாதங்களிலேயே மீண்டும் ஒரு அசம்பாவித சம்பவம் நடந்திருக்கிறது.இதுபோன்ற சம்பவங்களை எதிர்கொள்ள பெண்கள் எல்லோருக்கும் மார்ஷல் ஆர்ட் எனப்படும் சண்டை பயிற்சிகளை கற்றுத் தர வேண்டும். குறிப்பாக 4 முதல் 12 வயது வரையுள்ள குழந்தைகள் எல்லோருக்…
-
- 0 replies
- 391 views
-
-
பாலிவுட் நடிகருடன் காதலை முறித்துக்கொண்டார் அக்ஷரா ஹாசன்! [sunday 2014-09-21 17:00] பாலிவுட் நடிகருடன் காதலை முறித்துக்கொண்டார் அக்ஷரா ஹாசன்.கமல்ஹாசனின் 2வது மகள் அக்ஷரா. மும்பையில் தாய் சரிகாவுடன் வசிக்கிறார். அமிதாப்பச்சன், தனுஷ் நடிக்கும் ‘ஷமிதாப் இந்தி படத்தில் நடித்து வருகிறார். நடிக்க வருவதற்கு முன் இந்தி நடிகர் நஸ்ருதீன் ஷா மகன் விவான் ஷாவை அக்ஷரா காதலித்தார். இருவரும் பல இடங்களில் ஜாலியாக சுற்றினர். இதையடுத்து இருவரும் காதலிப்பதாக தகவல் வெளியானது. அதை இருவரும் மறுக்கவில்லை. கமலின் மூத்த மகள் ஸ்ருதிஹாசன் நடிக்க வந்தபிறகு அக்ஷராவுக்கும் நடிப்பதற்கான நிறைய வாய்ப்புகள் வந்தது. அதை ஏற்காமல் ஒதுங்கி இருந்தார். இந்நிலையில் ‘ஷமிதாப்‘ படத்தில் …
-
- 2 replies
- 804 views
-
-
பிரபுதேவா நயன்தாராவுக்காக முதல் மனைவி ரமலத்தை பிரிந்து, விவகாரத்து பெற்று அவரையே திருமணம் செய்ய இருந்த நிலையில் அவர்களுக்குள் மனகசப்பு ஏற்பட்டு இருவரும் பிரிந்தனர். இதற்கிடையே பிரபுதேவா குழந்தைகளுக்காக மறுமணம் செய்ய போவதாக செய்திகள் வெளிவந்தன. ஒரு சிலநடிகைகளுடன் கிசுகிசு ஏற்பட்டு திருமணம் செய்து கொளவதாக வதந்தியும் ஏற்பட்டது. இதுகுறித்து பிரபுதேவா கூறுகையில், இப்போதைக்கு மறுமணம் பற்றிய எண்ணம் எதுவும் கிடையாது. அப்படி செய்வதவாக இருந்தால் நானே மீடியாக்களே கூப்பிட்டு சொல்வேன். தற்போது எனது கவனம் எல்லாம் சினிமாவில் தான் இருக்கிறது. ஆனாலும் பிரபுதேவா தற்போது முன்னணி பாலிவுட் நடிகை ஒருவருடன் நெருக்கமாக பழகி வருவதாகவும் அவரையே திருமணம் செய்து கொள்ள இருப்பதாகவும் பாலிவுட்டில் ப…
-
- 0 replies
- 786 views
-
-
பாலிவுட் வாய்ப்பு கேட்டால் படுக்கைக்கு அழைப்பதா? - மனம் திறக்கும் நடிகைகள் பகிர்க பாலிவுட்டில் நடித்து திரை நட்சத்திரமாக வேண்டும் என்ற கனவுடன் ஒவ்வொரு ஆண்டும் ஆயிரக்கணக்கான ஆண்களும் பெண்களும் இந்திய சினிமாவின் தலைநகரம் என்றழைக்கப்படும் மும்பை நோக்கி செல்கின்றனர். படத்தின் காப்புரிமைGETTY IMAGES Image captionநடிகை உஷா ஜாதவ் ஆனால் கனவை எட்ட அவர்கள் படும்பாடு ஒரு கெட்ட கனவாக மாறுகிறது. இயக்குநர்கள் மற்றும் தயாரிப்பாளர்களால் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளானதாக கூறும் பல நடிகைகளிடம் பேசியது பிபிசி. ஆறு ஆண்டுகளுக்கு முன், தன் பெற்றோரை சம்மதிக்க வைத்து சிறு கிராமத்தில் இருந்து பாலிவுட் கனவு…
-
- 0 replies
- 869 views
-
-
பாலிவுட்டின் புகழ்பெற்ற நடன இயக்குனர் சரோஜ் கான் மாரடைப்பால் காலமானா பாலிவுட் நடன இயக்குநர் சரோஜ் கான் : கோப்புப்படம் பாலிவுட்டில் புகழ்பெற்ற நடன இயக்குனர் சரோஜ் கான் மாரடைப்பால் இன்று காலமானார். அவருக்கு வயது71. பாலிவுட்டில் இன்னும் மறக்க முடியாத பாடல்களாக இருக்கும் 'ஏக் தோ தீன்', 'தாக் தாக்', 'ஹவா ஹவா', 'தம்மா தம்மா' போன்ற புகழ்பெற்ற பாடல்களுக்கு நடன இயக்குனராக இருந்தவர் சரோஜ்கான் என்பது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக நடிகை மறைந்த நடிகை ஸ்ரீதேவி, மாதுரி தீட்சித்தின் பெரும்பாலான படங்களுக்கு ஆஸ்தான நடன இயக்குனராக சரோஜ் கான் பணியாற்றியுள்ளார் மூன்று முறை தேசிய விருதுகளை வென்ற சரோஜ் கான், கடந்த சில மாதங்களாக உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட…
-
- 0 replies
- 384 views
-