வண்ணத் திரை
சினிமா விமர்சனம் | சினிமாச் செய்திகள் | கருத்துகள்
வண்ணத் திரை பகுதியில் சினிமா விமர்சனம், சினிமாச் செய்திகள், உலக சினிமா சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் சினிமா விமர்சனங்களுக்கும் தரமான சினிமா சம்பந்தமான கட்டுரைகளுக்கும் முன்னுரிமை கொடுத்தல் வேண்டும். அளவுக்கதிகமான சினிமாச் செய்திகளையும், கிசுகிசு செய்திகளையும் தவிர்க்கவேண்டும்.
5547 topics in this forum
-
Play video, "மஞ்சும்மல் பாய்ஸ்: கொடைக்கானல் குணா குகை சம்பவத்தை தழுவிய படம் எப்படி உள்ளது?", கால அளவு 4,28 04:28 காணொளிக் குறிப்பு, மஞ்சும்மல் பாய்ஸ்: கொடைக்கானல் குணா குகை சம்பவத்தை தழுவிய படம் எப்படி உள்ளது? 28 பிப்ரவரி 2024 புதுப்பிக்கப்பட்டது 29 பிப்ரவரி 2024 மலையாள சினிமாவில் சமீபத்தில் வெளியான திரைப்படங்கள் நல்ல வரவேற்பை பெற்றுள்ளன. பிரமயுகம், பிரேமலு வரிசையில் பிப்ரவரி 22ம் தேதி வெளியான திரைப்படம் மஞ்சும்மல் பாய்ஸ். விமர்சன ரீதியாக பெரும் வரவேற்பையும் பாராட்டையும் பெற்ற இந்த திரைப்படம் குறித்து ஊடகங்கள் என்ன சொல்கின்றன? கேரளா மாநிலம் எர்ணாகுளம் மாவட்டத்தைச் சேர்ந்த மஞ்சும்மல் எனும் சிற…
-
-
- 29 replies
- 3.2k views
- 2 followers
-
-
'விண்ட்ஸ் ஆப் சேஞ்ச்' -படப்பிடிப்புகாக இலங்கை போனார் ஸ்ரேயா! ரெடி என்ற படத்தின் படப்பிடிப்புக்காக நடிகை அசின் இலங்கை போனதும், அதைத் தொடர்ந்து எழுந்த பிரச்சினைகளும் நினைவிருக்கலாம். இப்போது சத்தமில்லாமல் இன்னொரு நடிகை இலங்கைக்குப் போயிருக்கிறார். அவர் ஸ்ரேயா. தீபா மேத்தா இயக்கும் விண்ட்ஸ் ஆப் சேஞ்ச் படத்தின் ஷூட்டிங்குக்காக அவர் இலங்கையில் இப்போது முகாமிட்டுள்ளார். கடந்த வாரம் சென்னையில நடந்த ஐபிஎல் போட்டியின் துவக்க விழாவில் அவர் ஷாரூக்கானுடன் சேர்ந்து நடனம் ஆடியது நினைவிருக்கலாம். இலங்கையில் படப்பிடிப்பிலிருந்து நேராக சென்னை வந்த அவர், நிகழ்ச்சி முடிந்ததும் மீண்டும் இலங்கை சென்றுவிட்டாராம். இலங்கை மிக அழகான நாடு, படப்பிடிப்புக்கு ஏற்ற…
-
- 1 reply
- 3.2k views
-
-
பாவலர் அறிவுமதி அண்ணன் அவர்கள் அண்மையில் எழுதியுள்ள ஒரு ஆய்வுக் கட்டுரையைப் படித்தேன். அதில் எவ்வளவோ அதிர்ச்சிதரும் எம சமூகத்திற்கான தகவல்களும் பொதிந்து கிடக்கின்றது. யாழ்கள உறவுகளுக்காக இங்கே தருகின்றேன். இது தொடர்பாக அறிவுமதி அண்ணனோடு உரையாடினேன். இதோ உங்களுக்காக அதை வழங்குகின்றேன். நன்றி: கீற்று இணையம். பார்ப்பன வாத்தியார்கள் பாவலர் அறிவுமதி ஞாநி இப்போது தமிழ்ச்சமுகத்தின் பாலியல் வாத்தியாராகப் பதவி உயர்வு பெற்றுவிட்டார். அதனால்தான் ஆனந்த விகடனில் 'அறிந்தும் அறியாமலும்' எழுதுகிறார். மூன்று வயது ஆண்குறி விறைப்பது குறித்தும், மூன்று வயது பெண்குறி பிசுபிசுப்பது குறித்தும் எழுதி எழுதி... முதன் முதலாக எப்போது நீங்கள் அதைத் தொட்டது.. மு…
-
- 9 replies
- 3.2k views
-
-
யுகபாரதி இன்றைய இலக்கிய உலகில் தனக்கென ஒரு அடையாளத்தைப் பதித்துகொண்டுள்ள இளங்கவிஞர். மரபுக்கவிதைகளாகட்டும் , புதுக்கவிதைகளாகட்டும், இல்லை திரைப்படப் பாடல்களாகட்டும் - யாவுமே யுகபாரதிக்கு இயல்பாகவே கை வந்திருக்கிறது. தனது கவிதை தொகுப்புகளுக்கு இரண்டு முறை தமிழக அரசின் விருதுகளையும் குறள் பீடப் பாராட்டு இதழும் யுகபாரதி பெற்றிருக்கிறார். கல்கி வார இதழில் திரைப்படப் பாடல்கள், பாடலாசிரியர்கள் பற்றி அவர் ஆய்வு பூர்வமாக எழுதிவரும் கட்டுரைத் தொடர் மிகுந்த வரவேற்பைப் பெற்றுள்ளது. அவரது ஆளுமையைப் பிரதிபலிக்கும் அவரது நடைச்சிறப்பு அவரது வெற்றிக்குக் காரணம். இனி யுகபாரதியுடன் சிவ. ஜம்புநாதனின் நேர்முகம்: யுக பாரதி தங்களின் இயற்பெயரா? என் இயற்பெயர் பிரேம்குமார். நான் 13 வது வயதி…
-
- 0 replies
- 3.2k views
-
-
-
http://sinnakuddy1.blogspot.com/2007/01/blog-post_5063.html http://sinnakuddy1.blogspot.com/2007/01/2.html http://sinnakuddy1.blogspot.com/2007/01/mgr-1.html
-
- 19 replies
- 3.2k views
-
-
ஐங்கரன் நிறுவனத்தை வாங்கியது ஈரோஸ் தென்னிந்திய தமிழ் திரைப்படங்களில் பெரும்பாலானவற்றின் வெளிநாட்டு உரிமையை வாங்கி அவற்றை ஐரோப்பா, அமெரிக்கா, கனடா, அவுஸ்ரேலியா, சிங்கப்பூர் மற்றும் மலேசியா உள்ளிட்ட பல நாடுகளில் வெளியிட்டு வரும் ஐங்கரன் நிறுவனம் தாயகம் இணுவிலை சேர்ந்த கருணாமூர்த்தி என்பவருக்கு சொந்தமானது. ஏறத்தாள 600 தமிழ் படங்கள் மற்றும் 25 தயாரிப்பில் உள்ள படங்களின் உரிமை அவர்கள் வசம் உள்ளது. இந்நிலையில் ஐங்கரன் நிறுவனத்தின் 51 வீத பங்குகளை ஈரோஸ் நிறுவனம் வாங்கியுள்ளது. ஈரோஸ் நிறுவனம் நீண்டகாலமாக ஹிந்தி திரைப்படங்களை வெளிநாடியில் திரையிட்டு வந்ததுடன் திரைபட தயாரிப்பு, விநியோகம், திரையரங்குகள் உள்ளிட்ட பலதுறைகளிலும் ஆட்சி செலுத்தியும் வந்துள்ளது. இப்போது ஐங்கரன் …
-
- 6 replies
- 3.2k views
-
-
நான் இன்னும் ஏழாம் அறிவின் தெலுங்குப் பதிப்பையோ அல்லது ஹிந்தி பதிப்பையோ பார்க்கவில்லை; ஆனால் facebook இல் மற்றும் விகடனின் பின்னூட்டங்களில் வந்த செய்திகளின் அடிப்படையில் இதனை எழுதுகின்றேன் :நிழலி ------------------------------------------------------------------------------------- ஏழாம் அறிவின் தமிழ் (Original) பதிப்பில் போதி தர்மனை தமிழ் மன்னன் ; பல்லவ மன்னனின் வாரிசாக 5 ஆம் நூற்றாண்டினை சார்ந்தவர் என்றும் காஞ்சிபுரத்தில் பிறந்தவர் என்றும் காட்டிய முருகதாஸ் தெலுங்குப் பதிப்பில்: அவர் குண்டூர்ல (கவனிக்க: கேரளாவின் குன்னூர் அல்ல) பிறந்தவர் என்றும் ஹிந்திப் பதிப்பில் அவர் தாராவில் பகுதியில் பிறந்தவர் என்றும் காட்டியுள்ளாராம் ..தமிழர் பெருமையை ஒரு…
-
- 10 replies
- 3.2k views
-
-
உலகளவில், தமிழில், இதுவரை ஏறத்தாழ 6000க்கும் மேற்பட்ட திரைப்படங்கள் வெளிவந்துள்ளன. இப்பட்டியல், உலகின் பல பகுதிகளிலிருந்தும், தமிழில் வெளிவந்த, அனைத்து திரைப்படங்களையும் ஆண்டு வரிசையில் பட்டியலிட முனைகின்றது. 1940 அபண உத்தமபுத்திரன் ஊர்வசி சாகசம் காள மேகம் கிருஷ்ணன் தூது நவீன தெனாலிராமன் சந்திரகுப்த சாணக்யா தருதலை தங்கவேலு சகுந்தலை சதி மகானந்தா சதி முரளி சத்யவாணி தமிழ் தாய் (மாத்ரூ தர்மம்) தானசூர கர்ணா திலோத்தமா திருமங்கை ஆழ்வார் தேச பக்தி நவீன விக்ரமாதித்தன் புத்திமான் பலவான் ஆவான் நீலமலை கை பக்த சேகா பக்த கோரகும்பர் பக்த துளதிதாஸ் பக்தி (அம்பரீஷன்…
-
- 14 replies
- 3.2k views
-
-
( இணையத்தில் சினிமா பற்றிய கட்டுரைகளை தேடிக்கொண்டிருந்தபோது, சாம்ராஜ் என்பவரின் இக் கட்டுரை காணக்கிடைத்தது, மலையாள திரைப்படங்களில் தமிழர்களை எப்படி தொடர்ந்து இழிவாக சித்தரிக்கப்படுகின்றனர் என்பதை மிகுந்த பொறுப்புணர்வோடு எழுதியுள்ளார். திரைப்பட ஆர்வலர்களை பொதுவாக அணுகும்போது, தவறாது சில மலையாள சினிமாக்களின் பெயர்களை சொல்லி, அவற்றை பெருமைபடுத்தி பேசி மகிழ்வார்கள். ஆனால் தமிழர்களை இத்தனை அவமானப்படுத்தும் அதன் போக்கையோ, தமிழர்களின் மீது, அது கொண்டுள்ள காழ்ப்புணர்ச்சியை பற்றியே வாய் திறக்கவே மாட்டார்கள். ஆகவே, இக் கட்டுரையை வாசித்தபோது மிகவும் அதிர்ச்சியாகவும், அவமானமாகவும் இருந்தது. தமிழ் சினிமா ஆர்வலர்களும், சினிமா கனவுகளுடன் திரியும் என்போன்றவர்களும் அறிந்துக்கொள்ள வேண்டு…
-
- 20 replies
- 3.2k views
-
-
சிம்பு தனது காதலை ஒப்புக்கொண்டதில் இருந்தே அடுதடுத்து அதிரடி டுவிட்களைக் கொடுத்து கலங்கடித்து வருகிறார் சிம்பு! நேற்றய சிம்புவின் டிவிட்டரில் “ எனது பெற்றோர்களின் சம்மதத்துடன் ஹன்சிகாவைத் திருமணம் செய்து கொள்வேன்” என்று தெரிவித்துள்ளார். சிம்பு- ஹன்ஷிகா இருவரும் வேட்டை மன்னன், வாலு ஆகிய படங்களில் ஒப்பந்தமான போதே இருவருக்கும் காதல் என்று செய்தி பலரும் பரவியது. அப்போதும் இருவரும் மறுக்கவில்லை. See more at: http://vuin.com/news/tamil/what-is-the-connection-between-ajith-shalini-and-simbu-hansika
-
- 1 reply
- 3.2k views
-
-
சோனா - அரசியலுக்கு வந்த சோதனை எதையும் தாங்கும் இதயம் உள்ளவர்கள் தமிழர்கள் என்பதற்காக இப்படியா? நடிகை சோனா விஜய்யின் அரசியல் செயல்பாட்டில் பங்கெடுக்கப் போகிறாராம். இது சோனாவின் பிறந்த நாள் செய்தி. சீனாவைத் தெரியாதவர்களுக்கும் சோனாவைத் தெரியும். இருந்தாலும் ஒரு அறிமுகம். குசேலன் படத்தில் வடிவேலு பார்த்து நிற்க டைட்டான உடையில் கவர்ச்சியாக உடற்பயிற்சி செய்வாரே அவர்தான் இந்த சோனா. வெளுத்த தோல், கும்மென்ற உடல்வாகு. இவைதான் அவரின் சினிமா முதலீடு. அரசியல்வாதிகளின் குடும்பத்தினர் ஊரை அடித்து உலையில் போடும் ஆபாசத்துடன் ஒப்பிடுகையில் சோனாவின் முதலீடு எவ்வளவோ கௌரவமானது. சோனாவுக்கு நேற்று பிறந்தநாளாம். நடிகர் விஜய் ரசிகர்களின் பிள்ளைகளை அழைத்து…
-
- 7 replies
- 3.2k views
- 1 follower
-
-
ஷாப்பிங் சென்றபோது பரபரப்பு;நயன்தாரா & பிரபுதேவாவை துபாயில் ரசிகர்கள் முற்றுகை! துபாயில் ஷாப்பிங் செய்யச் சென்ற நயன்தாரா - பிரபுதேவா ஜோடியை ரசிகர்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. பிரபுதேவா இயக்கத்தில் வில்லு படத்தில் நயன்தாரா நடித்தார். அப்போது இருவருக்கும் காதல் மலர்ந்தது. இவர்களது காதல் விவகாரம், கோலிவுட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. Ôநயன்தாராவுடன் காதல் எனது தனிப்பட்ட விஷயம் என பிரபுதேவா கூறினார். இந்த காதலை மறைக்காத நயன்தாரா, திருமணம் செய்யும்போது அனைவருக்கும் தெரிவிப்பேன்Õ என்றார். பிரபுதேவாவின் பெயரை அவர் தனது கையில் பச்சை (டாடூ) குத்தியிருக்கிறார். நயன்தாரா ஷ¨ட்டிங் செல்லும் இடங்களுக்கெல்லாம் பிரபுதேவாவும் செல்வதாக கூறப்பட்டது. இந்நி…
-
- 5 replies
- 3.2k views
-
-
என்னதால் வெளிஉலகத்துக்கு ரெண்டு பேரும் பஞ்ச் டயலாக் பேசியே சண்டை போட்டுக்கிற மாதிரி தெரிஞ்சாலும் ராத்திரியானா சிம்புவும், தனுஷும் ஒண்ணா சரக்கடிச்சு ஒண்ணா வாந்தியெடுப்பாங்கன்னு சத்தியம் பண்ணுவாரு போல இந்த நியூஸ் கெளப்பி விட்ட புண்ணியவான். அந்த ரேஞ்சுல தான் இருக்கு நேத்து கோடம்பாக்கத்துல புதுசா கெளம்பியிருக்குற செய்தி. சிம்புவும், தனுஷும் புதிதாக ஒரு படத்தில் இணைந்து நடிக்கப் போகிறார்கள் என்பது தான் கோலிவுட் வாலாக்கள் நேற்று வாய் பிளந்து பேசும் அதிசய செய்தியாக உள்ளது. ஆமாம், இரண்டு பேரும் பேரும் சேர்ந்து ரஜினி, கமல் இணைந்து நடித்த ‘இளமை ஊஞ்சலாடுகிறது’ படம் ரீமேக்கில் ஹீரோக்களாக நடிக்கிறார்களாம். 1978-ல் இந்தப்படத்தில் ரஜினி,கமலுக்கு ஜோடியாக ஸ்ரீபிரியாவும், ஜெயசித்ரா…
-
- 0 replies
- 3.2k views
-
-
தமிழ் சினிமாவின் வர்த்தகத்தை ஒவ்வொரு முறையும் அடுத்துக்கட்டத்திற்கு எடுத்து செல்பவர்கள் தான் ரஜினியும் ஷங்கரும், அவர்கள் இருவரும் இணைந்து ஒரு படம் செய்தால் அந்த வளர்ச்சியை சிவாஜி, எந்திரனில் பார்த்து இருப்போம், தற்போது அடுத்தக்கட்டமாக உலகமே வியக்கும் 2.0 ஒரு படைப்பை இருவரும் கொடுக்க, ரசிகர்களுக்கு இப்படம் செம்ம விருந்தானதா? பார்ப்போம். கதைக்களம் படத்தின் ஆரம்பத்திலேயே அக்ஷய் குமார் செல்போன் டவரில் தூக்கு போட்டு இறக்கின்றார். அதை தொடர்ந்து அடுத்த நாளில் இருந்து தமிழகத்தில் உள்ள அனைத்து செல்போன்களும் தொலைந்து போகிறது. இந்த மாயம் எப்படி நிகழ்கிறது என்று ஆராய்ச்சிக்குழு அரசாங்கத்தின் கீழ் ஆராய்ச்சி செய்யும் போதே பல செல்போன் உரிமையாளர்களும், டெலிகாம் மினிஷ்டரும்…
-
- 19 replies
- 3.2k views
-
-
ரஜினியைப் போன்ற உயர்ந்த குணமுள்ள உத்தம மனிதனை என் வாழ்நாளில் கண்டதில்லை. அவருக்கு கோயில் கட்டி கும்பிடணும் என்று நெகிழ்கிறார் வைகைப் புயல் வடிவேலு. இந்திரலோகத்தில் நா அழகப்பன் படத்தின் தோல்விக்குப் பிறகு எந்தப் பத்திரிக்கையாளரிடமும் பேசுவதில்லை என முடிவெடுத்திருந்த வடிவேலு, ஒரு வழியாக தன் கோபத்தை ஒதுக்கி வைத்துவிட்டு, மீடியாக்களிடம் பேசத் தொடங்கியுள்ளார். குசேலன் படப்பிடிப்பு முடிந்த பிறகு, அந்தப் பட அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டார். அவர் கூறியதாவது: குசேலன் படத்துல நான் நடிக்கக் காரணமே அண்ணன் சூப்பர் ஸ்டார் ரஜினிதான். அவரைப் பத்தி ஒரே வார்த்தையில சொல்லணும்னா... மனிதருள் மாணிக்கம். சந்திரமுகி படத்தைவிட இந்தப் படத்துலதான் அண்ணன் ரஜினியின் அருமைகளைத் தெரி…
-
- 6 replies
- 3.2k views
-
-
ஈழத்துத் தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் மாயா இப்பதிவில் இலங்கையிலிருந்து வெளிவந்த திரைப்படங்களையும் சில திரைப்படங்களின் விபரங்களையும் உள்ளடக்க முனைகிறேன் நான் சிறியவன் ? ? சில திரைப்படங்கள் விடுபட்டிருக்கலாம். தெரிந்தவர்கள் பின்னூட்டம் மூலம் தெரியப்படுத்தினால் மிகவும் உதவியாயிருக்கும் நூலகமொன்றில் நேரம்போகாமல் ? ? புத்தகமொன்றைப்புரட்டிக்கெ
-
- 17 replies
- 3.2k views
-
-
கோட்டையபட்டினம் நாட்டின் தலைமைத்தளபதி கோச்சடையான். தன் படைவீரர்களைக் காக்க அவர் செய்யும் ஒரு செயலால், தேசத்துரோக குற்றம் சாட்டப்பட்டு கொல்லப்படுகிறார். கோச்சடையானின் மகன் ராணா அவர் மீதான பழியை நீக்கி, பழிவாங்குவதே கதை. (அப்போ இந்தப் படம் ராணா தானேன்னு கேட்கக்கூடாது) முதலிலேயே சொல்லிவிடுகிறேன்…நாம் பயந்த அளவிற்கு படம் மோசம் இல்லை. படம் ஆரம்பித்து கொஞ்ச நேரத்திற்கு ‘இது ரஜினி தானா? சரத்குமார் தானா? தீபிகா தானா?’ என்று நம் மனம் ஆராய்ச்சியில் இறங்குவது வாஸ்தவம் தான். உயிரோடு இருக்கும் ஆட்களின் தோற்றத்தில் பொம்மைகள் நடமாடும்போது, நாம் கம்பேர் பண்ணுவது இயல்பு தான். ஆனால் முதல் அரைமணி நேரத்தில் ‘ஓகே’ என்று செட்டில் ஆகிவிடுகிறோம். சிறுவன் ராணா கோட்டயப்பட்டினம் நாட்டில்…
-
- 11 replies
- 3.2k views
-
-
சாதாரண எம் எல் ஏ வா இருக்கும் ஹீரோ சி எம்மையே மிரட்டி உதவி சி எம் ஆகிடறார். அவருக்கும் அவரோட அல்லக்கைக்கும் நடக்கும் காமெடி கலாட்டாக்கள் கொஞ்சம் .ஆதிவாசிகள் நிலத்தை அபகரிக்க பண்ற அட்டூழியங்கள் கொலைகள் என இன்னொரு டிராக். எப்படி திரைக்கதை எழுதறதுனு ஒரே குழப்பமாகி சும்மா வசனங்களாலும் , சத்யராஜ் - மணி வண்ணன் காம்பினேஷன் காட்சிகளால் மட்டுமே படத்தைத்தூக்கி நிறுத்திடலாம்கற நப்பாசைல எடுத்த படம் இது. சும்மா சொல்லக்கூடாது , இத்தனை வருஷங்கள் ஆகியும் சத்யராஜ் - மணி வண்ணன் பிரமாதப்படுத்தி இருக்காங்க . எகத்தாளம் , எள்ளல் நக்கல் எல்லாம் செம.ஆனா எல்லாம் பிட்டு பிட்டா இருக்கு. அதான் மைனஸ் . படத்தோட ஒட்டலை. ரொம்ப செயற்கையா இருக்கு சத்யராஜ் கெட்டப் கன கச்சிதம். போலீஸ் ஆக வ…
-
- 3 replies
- 3.2k views
-
-
செக்கச்சிவந்த வானம் திரை விமர்சனம் தமிழ் சினிமாவில் ஒரு சிலருக்கு மட்டுமே படம் வெற்றி தோல்வி தாண்டி ஒவ்வொரு படத்திற்கான எதிர்ப்பார்ப்பும் விண்ணை முட்டும். அப்படி படத்திற்கு படம் எதிர்ப்பார்ப்பை எகிற வைப்பவர் தான் மணிரத்னம். அவருடைய இயக்கத்தில் இன்று வெளிவந்துள்ளது செக்கச்சிவந்த வானம். ரகுமான் இப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் கூறியிருப்பார், இது நாயகன் ஸ்டைல் படம் என்று, மேலும் மணிரத்னம் புல் ஃபார்மில் உள்ளார் என்றும் தெரிவித்தார், அவரின் வார்த்தைகள் உண்மையானதா? பார்ப்போம். கதைக்களம் பிரகாஷ்ராஜ் தமிழகத்தின் மிகப்பெரும் புள்ளி, விஜய் சேதுபதி ட்ரைலரில் சொல்வது போல் மதிப்பிற்கு உரிய கிரிமினல் தான் பிரகாஷ்ராஜ்.…
-
- 4 replies
- 3.2k views
-
-
விஜயகாந்த்துக்கு நெஞ்சுவலி: மருத்துவமனையில் அனுமதி ஜனவரி 06, 2006 சென்னை: தேசிய முற்போக்கு திராவிட கழகத் தலைவரும், நடிகருமான விஜயகாந்த் திடீர் நெஞ்சு வலி ஏற்பட்டது. இதையடுத்து அவர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சென்னை சாலிகிராமத்தில் உள்ள வீட்டில் விஜயகாந்த் நேற்று தனது குடும்பத்தினருடன் இருந்தபோது, இரவு 11 மணியளவில் திடீரென அவருக்கு நெஞ்சு வலி ஏற்பட்டது. இதையடுத்து உடனடியாக முகப்பேரில் உள்ள மெட்ராஸ் மிஷன் மருத்துவமனைக்கு அவர் கொண்டு செல்லப்பட்டார். அவசர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்ட விஜயகாந்த்துக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. பல சோதனைகளும் நடத்தப்பட்டன. இதையடுத்து அவர் தனி அறைக்கு மாற்றப்பட்டார். 2 நாட்கள் மருத்துவ…
-
- 17 replies
- 3.1k views
-
-
அநாகரீகம் (வயது வந்தவர்கட்கு மட்டும்) http://youtu.be/ACWOdkYfpg0
-
- 1 reply
- 3.1k views
-
-
பார்க்க அழுத்துடா http://puspaviji.net/page65.html
-
- 11 replies
- 3.1k views
-
-
காலா : இன்னொரு பராசக்தி June 9, 2018 ஷோபாசக்தி இப்போதெல்லாம் திரையரங்குகளிற்குச் சென்று தமிழ்ப் படம் பார்ப்பதில் ஆர்வம் போய்விட்டது. வயதாக வயதாகச் சகிப்புத்தன்மை குறைந்துவருவது வழமைதானே. ஆனால் இன்று திரையரங்கம் சென்று காலா பார்த்தேன். பாரிஸில் கடந்த மூன்று மாதங்களாகவே தொடருந்து வேலைநிறுத்தம். ‘சனாதிபதி மக்ரோன் அவர்களே பிரான்ஸ் விற்பனைக்கல்ல’ என்பது போராடும் தொழிலாளர்களின் முழக்கமாயிருக்கிறது. இந்த தொடருந்துப் பிரச்சினையாலும் திரையரங்கில் முதற் சில காட்சிகளில் ரஜினி ரசிகர்கள் எழுப்பும் ஆரவாரக் கூச்சல்களுக்கு அஞ்சியும் சில நாட்கள் கழித்து படத்தைப் பொறுமையாகப் பார்த்துக்கொள்ளலாம் என்ற எண்ணத்தில்தான் இன்று காலைவரை இருந்தேன். ஆனால் தினமலர், ‘ரஞ்சித் சூழ…
-
- 13 replies
- 3.1k views
- 1 follower
-
-
பாடகி ஜென்சியுடனான வானொலிப் பேட்டி இரண்டு வருஷங்களுக்கு முன்னர் இயக்குனர் மகேந்திரனின் மகன் ஜான் மகேந்திரனின் நட்புக் கிடைத்திருந்தது. அவர் ஆணிவேர் என்ற ஈழத்துக் கதைப்பின்னணியை வைத்துப் படம் பண்ணியிருந்த அனுபவங்களை வானொலிப்பேட்டிக்காகப் பகிர்ந்திருந்தார். ஒரு சில நாட்களின் பின்னர் ஜான் மகேந்திரன் தன்னுடைய சரவெடி படத்துக்காக ஶ்ரீகாந்த் தேவா இசையில் சரவெடி என்ற படத்துக்காக மீண்டும் ஜென்சியைப் பாடவைத்திருப்பதாக மின்மடல் வந்திருந்தது. அவரிடம் ஜென்சியை ஒரு வானொலிப்பேட்டி எடுக்க வேண்டும் தொடர்பிலக்கம் கொடுக்க முடியுமா என்று கேட்டேன். ஜென்சியின் இலக்கத்தைக் கொடுத்து விட்டு, கொஞ்சம் சென்னைப்பாஷையில் பேசுங்க அப்பத்தான் புரியும் என்று சொல்லி வைத்திருந்தார். ஜென்சியின் இலக்க…
-
- 9 replies
- 3.1k views
-