வண்ணத் திரை
சினிமா விமர்சனம் | சினிமாச் செய்திகள் | கருத்துகள்
வண்ணத் திரை பகுதியில் சினிமா விமர்சனம், சினிமாச் செய்திகள், உலக சினிமா சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் சினிமா விமர்சனங்களுக்கும் தரமான சினிமா சம்பந்தமான கட்டுரைகளுக்கும் முன்னுரிமை கொடுத்தல் வேண்டும். அளவுக்கதிகமான சினிமாச் செய்திகளையும், கிசுகிசு செய்திகளையும் தவிர்க்கவேண்டும்.
5547 topics in this forum
-
கலைப்படம் - தமிழ்ச் சினிமா தவறவிட்ட அத்தியாயம் தாஜ் கனவுகளைச் சுட்டு காசு பார்க்கும் வியாபாரத்தில் அதிஷ்டம் வாய்ந்தது சினிமா! இதில் அமெரிக்காவின் தாயாரிப்புகள் அமர்க்களப்படுத்தும் ரகமென்றால், அடுத்த கலக்கல் இந்திய தயாரிப்புகள்தான். படங்களின் எண்ணிக்கைகளில், தொழில் நுட்பத் திறமைகளில், இன்னும் மிதமிஞ்சிய அதன் கற்பனை வளத்திலும்கூட நம்ம பாலிவுட்டும் கோலிவுட்டும் ஹாலிவுட்டை விட்டேனாபார் என்ற ரீதியில் துரத்திக்கொண்டே இருக்கிறது. ‘கோலிவுட்’ என்று செல்லமாக அழைக்கப்படும் நம்ம கோடம்பாக்கத்தை, பார்க்க கிடைக்கிறபோதெல்லாம் கட்டத்தெரியாமல் கட்டிய கட்டி வரிசைகளுக்கிடையேயான சாலைகளில், அதன் சந்துப்போந்துகளில் சதாநேரமும் திமிரி வழியும் மக்கள் கூட்டம் எப்பவும் மாறா காட்சி!…
-
- 2 replies
- 1.4k views
-
-
தற்போது இந்திய திரயுலகை அதிரடி கவர்ச்சி மூலம் கலக்கி வருபவர் நடிகை ஸ்ருதிஹாசன். இவர் ஏற்கனவே நடிகர் சித்தார்த்தை காதலித்துடன் அவருடன் சேர்ந்து குடித்தனம் நடத்தியதாக பேசப்பட்டவர். பின்னர் இருவரும் பிரிந்து விட்டனர். இப்படி பல கிசு கிசுகிசுக்களில் சிக்கி வலம் வரும் நடிகை ஸ்ருதி தற்போது கிரிக்கெட் வீரர் ரெய்னாவுடன் நெருங்கி பழகுவதாக தகவல் வெளியாகியுள்ளது. ஐ.பி.எல். கிரிக்கெட்டில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் அதிரடி ஆட்டக்காரராக ரெய்னா உள்ளார். சமீபத்தில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிக்கு எதிராக நடந்த போட்டியில் 52 பந்தில் 99 ரன்கள் எடுத்து கிரிக்கெட் ரசிகர்களை கவர்ந்தார். அந்த போட்டியை ஸ்ருதிஹாசனும் நேரில் பார்த்து ரெயினாவை உற்சாகப்படுத்தினார். அதன் பின்னர் அடிக்கடி இருவரும் …
-
- 2 replies
- 1.4k views
-
-
அழகான கண்களை தானம் செய்தார் சினேகா! .புன்னகை அரசி என்று ரசிகர்களால் வர்ணிக்கப்படும் நடிகை சினேகா தனது கண்களை நேற்று தானம் செய்தார். இதற்கான படிவத்தின் கையெழுத்திட்டு ராஜன் ஐ கேர் மருத்துவமனைக்கு அவர் வழங்கினார். பல்வேறு சமூக பணிகளில் ஆர்வம் காட்டி வரும் சினேகா சமீபத்தில் கூட போலியோ இல்லாத இந்தியாவை உருவாக்கும் ரோட்டரி கிளப் முயற்சிக்கு ஆதரவு திரட்டும் வகையில் தன்னை அந்த அமைப்பில் இணைத்துக் கொண்டு நிதியுதவியும் செய்தார். இப்போது தனது கண்களை தானம் செய்துள்ளார் சினேகா. இதற்கான நிகழ்ச்சி இன்று காலை சென்னை ராஜன் ஐ கேர் மருத்துவமனையில் நடந்தது. கண்தான பத்திரத்தில் கையெழுத்திட்டு மருத்துவமனை நிர்வாகத்திடம் வழங்கிய சினேகா, "கண்தானம் செய்வதன் மூலம், வா…
-
- 2 replies
- 1.6k views
-
-
தமிழ் சினிமாவை பொறுத்தவரை திருமணம் ஆகும்வரை தான் ஹீரோயின் மார்க்கெட். திருமணம் ஆகி குழந்தை பெற்றுவிட்டால், அக்கா, ஆண்ட்டி வேடங்கள்தான் கிடைக்கும். இதற்கு பயந்து கொண்டே திருமணத்தை தள்ளிவைக்கின்றார்கள் நடிகைகள். இன்னும் சில நடிகைகள் திருமணம் ஆனாலும் தேடிப்பார்.காம்.குழந்தை பெறுவதை ஒத்தி வைக்கின்றார்கள். ஐஸ்வர்யாராய் திருமணம் ஆகி, மூன்று ஆண்டுகள் வரை குழந்தை பெறாமல் ஹீரோயினாக நடித்துவந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. சினேகா மற்றும் ஜெனிலியா ஐஸ்வர்யாராயை பின்பற்றி, குழந்தை பெறுவதை தள்ளிவைத்துள்ளதாக கோலிவுட்டில் கிசுகிசுக்கப்படுகிறது. கே.ஆர்.விஜயாவுக்குப்பிறகு புன்னகை அரசி என்ற அடைமொழியுடன் கோடம்பாக்கத்தில் முன்னணி நடிகையாக திகழ்ந்தவர் சினேகா. கடந்த ஆண்டு நடிகர் பிரசன்னாவ…
-
- 2 replies
- 972 views
-
-
பாதாள பைரவியும் ஹாரிபாட்டரும் இன்று எனது மாமா வீட்டில் தொலைக்காட்சிகளை சேனல்களை மாற்றிக்கொண்டிருக்கும்போது,சன் DTH ன் உருப்படியான சேனலான தமிழ் சினிமா கிளப்பை காண நேர்ந்தது.அதில் ஏதோ கருப்பு வெள்ளைத்திரைப்படம் ஓடிக்கொண்டிருந்தது.ஒரு நிமிடக்காட்சியைப்பார்த்ததும் தான் தெரிந்தது,அது பாதாள பைரவி என்ற தமிழ் டப்பிங் தெலுங்கு படம் என்று.நான் போன வாரம் இந்த படத்தின் அரைமணிநேரக்காட்சிகளை ,இதே சேனலில் பார்த்ததால்,எனக்கு இந்த படம் முழுவதையும் பார்க்க வேண்டுமென தோன்றியது.படத்தையும் பார்த்தேன்.என்னை வியப்புக்குள்ளாக்கி,ஒரு நிமிடம் கூட போர் அடிக்காமல்,அவ்வளவு அருமையாக இழுத்துச்சென்றது இத்திரைப்படம். சரி,கதையை பற்றி சிறிதளவு சொல்லிவிட்டு ,நான் சொல்லவந்த கருத்தை தெரி…
-
- 2 replies
- 4.2k views
-
-
தமிழ் திரையுலகில் முன்னணி நகைச்சுவை நடிகராக இருக்கும் சூரி, தனது ஓட்டலில் வேலை பார்க்கும் தொழிலாளர்களுக்கு சம்பளத்துடன் விடுப்பு வழங்கியுள்ளார். .. கொரோனா வைரஸ்’ ஒட்டுமொத்த உலகையும் மிரட்டிக் கொண்டிருக்கும் இந்த வேளையில், அரசு பிறப்பித்துள்ள ஊரடங்கால் பல்வேறு துறையினரும் வீட்டில் முடங்கி உள்ளனர். அந்த வகையில் பசி, தூக்கம் மறந்து வேலை செய்து வந்த பிரபல நடிகர்-நடிகைகளுக்கும் கட்டாய ஓய்வு கிடைத்துள்ளது. இந்த ஒய்வு நேரத்தை அவர்கள் தங்கள் குடும்பத்தினருடன் செலவழித்து வருகின்றனர். இதுகுறித்து நகைச்சுவை நடிகர் சூரி கூறியதாவது: “மனைவி குழந்தைகளுடன் பேசக்கூட நேரம் இல்லாமல், ஓடி ஓடி உழைத்துக் கொண்டிருந்த எனக்கு பயம் கலந்த ஓய்வு கிடைத்து இருக்கிறது. இந்த ஓய்வில், வீட…
-
- 2 replies
- 623 views
-
-
"கேளடி கண்மணியில்" எஸ்.பி. பீ மூச்சு விடாமல் பாடிய இந்தப்பாடல் ஒலிப்பதிவின் கைங்கரியம் என்று சொல்லப்படுவதை நேரில் பாடி நிரூபிக்கிறார். எஸ்பிபி ஒரு மேடை நிகழ்ச்சியில். யாழ்ப்பாணத்தைச்சேர்ந்த பாடகர் ரகுநாதன் மேடையில் இந்தப்பாடலை அப்படியே பாடுவதை கேட்டிருக்கிறேன் திரைப்படத்தில் - ஆரம்பத்தில் வரும் இளையராஜவின் படங்களுக்கு பிறகு பாட்டு ஆரம்பிக்கிறது.
-
- 2 replies
- 2.6k views
-
-
சூரியன் உதிக்கிறானோ இல்லையோ, குசேலன் பற்றிய செய்திகள் இல்லாமல் விடிவதில்லை தமிழர்களின் பொழுது. புளோரா நடிக்கிறார், சுஜா நடிக்கிறார் என்று நாளரு கவர்ச்சியும், பொழுதொரு அட்ராக்ஷனுமாக வளர்கிற குசேலன் பற்றி இன்னொரு புதிய செய்தி. நடிப்பாரோ, அல்லது நடிக்க மாட்டாரோ என்று நினைத்துக் கொண்டிருந்தார்கள். ஒரு பாடல் காட்சியில் ரஜினியோடு ஆட சம்மதித்துவிட்டாராம் கமல். அதில்லாமல் ஒரு காட்சியில் நடிக்கவும் சம்மதித்திருக்கிறாராம். நடிகர் கமல்ஹாசனாகவே படத்தில் தோன்றுகிறார். இளமை ஊஞ்சலாடுகிறது படத்திற்கு பிறகு இருவரும் ஒன்று சேரும் படம் இது. இடையில் இருவரையும் சேர்ந்து நடிக்க வைத்துவிட எத்தனையோ தயாரிப்பாளர்கள் முட்டி மோதினாலும், தனித்தனியாக நடிப்பது என்பதில் உறுதியாக இருந்தார்கள் இருவரும். வ…
-
- 2 replies
- 1.2k views
-
-
வட கொரியத்தலைவரைக் கேவலப்படுத்துமுகமாக அமெரிக்கா அண்மையில் ஒரு படமெடுத்திருந்தது.அந்தப்படத்தை திரையரங்குகளில் வெளியிடும் உரிமையை சோனி நிறுவனம் பெற்றிருந்தது. நிலைமை இவ்வாறு இருக்க சோனி நிறுவனத்தை வட கொரிய அரசு (ஹேக்) முடக்கியது.இது பெரிய செய்தியாக வெளியிடப்பட்டிருந்தாலும் காரணம் சொல்லப்படவில்லை.ஆனால் இந்தப்படம் திரை அரங்குகளில் வெளியாகினால் மீண்டுமொரு 9-11 ஐ அமெரிக்கா சந்திக்க நேரிடுமென வட கொரிய அரசு எச்சரித்தது. நிலைமையைச்சமாளிக்க முடியாமல் தற்போது அந்தப்படத்தை யூ டியூப் மூலமாக $6.95 க்கு வெளியிட்டுவிட்டார்கள்.
-
- 2 replies
- 785 views
-
-
வேலுப்பிள்ளை பிரபாகரனின் வாழ்க்கை வரலாறு கதையில் நடிக்கின்றார் பாபி சிம்ஹா! தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் வாழ்க்கை வரலாறு படமாக்கப்படவுள்ளது. வெங்கடேஷ்குமார் இயக்கும் இந்த படத்துக்கு ‘சீறும் புலிகள்’ என்று பெயரிட்டுள்ளனர். ஸ்டுடியோ 18 பட நிறுவனம் இந்தப் படத்தை தயாரிக்கிறது. பட வெளியீடு தொடர்பாக உத்தியோகபூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது. பிரபாகரனின் இளம் வயது வாழ்க்கை, குடும்பம், போராளியாக அவர் மாறிய சூழ்நிலை, சிங்கள இராணுவத்துக்கும் விடுதலைப் புலிகளுக்கும் நடந்த போர் என்று அனைத்தையும் இந்த படத்தில் காட்சிப்படுத்துகின்றனர். பெரும்பகுதி படப்பிடிப்பை காட்டுப்பகுதிகளில் நடத்துகின்றனர். இந்த படத்தில் நடிகர் பாபி சிம்ஹா தமிழீழ விடுத…
-
- 2 replies
- 930 views
-
-
10 லட்சம் இருந்தா காப்பாத்திடலாம்.. கடைசியில் சேஷுவுக்கு யாருமே உதவில்லை.. சென்னை: காமெடி நடிகர் சேசு உடல்நலக்குறைவு காரணமாக உயிரிழந்தது ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. "மண்ணெண்ணெய்.. வேப்பண்ணெய்.. விளக்கெண்ணெய்.. நீ எக்கேடு கெட்டா எனக்கென்ன?" என பாரதிராஜாவின் மண்வாசனை படத்தை ஸ்பூஃப் செய்து கிழவி வேடமிட்டு லொள்ளு சபாவில் நடித்து ஏகப்பட்ட ரசிகர்களை கவர்ந்தவர் தான் சேஷு. இவர் முகத்தை வைத்து கொடுக்கும் ரியாக்ஷனை பார்த்தாலே குபிரென சிரிக்காதவர்களும் சிரித்து விடுவார்கள். அந்த அளவுக்கு நகைச்சுவை இவரது உடம்பிலேயே ஊறிக் கிடந்தது. லொள்ளு சபா விஜய் டிவியில் லொள்ளு சபா நிகழ்ச்சியில் நடிப்பதற்கு முன்பே சன் டிவியில் ஒளிபரப்பான சூப்பர் டூப்பர் நிகழ்ச்சியி…
-
- 2 replies
- 418 views
-
-
கல்யாணம் செய்து குடியும் குடித்தனமாக செட்டில் ஆனபிறகும் லைலாவுக்கு போகவில்லை நடிப்பு ஆசை. இன்னும் ஒரு வருஷம் கழித்து நடிக்க வருவேன் என மும்பையிலிருந்து பயமுறுத்திக் கொண்டிருக்கிறார். ஏன் திடீரென்று லைலா புராணம்? காரணம் இருக்கிறது. மும்பையில் இருக்கும் லைலாவுக்கு போன் போட்டு நடிக்க வரும்படி அழைத்திருக்கிறது 'சபரி' யூனிட். 'கள்ளழகரில்' விஜயகாந்துக்கு ஜோடியாக நடித்தவர்தான் லைலா. ஆனாலும் ஏனோ நடிக்க முடியாது என்று மறுத்திருக்கிறார். மீண்டும் நடிப்பதற்கு கை நிறைய கண்டிஷன்ஸ் வைத்திருக்கிறார் லைலா. அதில் ஒன்று, ரொமான்ஸ் கதையாக இருக்கவேண்டும். கலைப்படங்கள் என்றாலும் பாதகமில்லை. மேக்கப் போட்டு பிஸியாக நடித்துக் கொண்டிருந்தவருக்கு குடும்ப வாழ்க்கை எப்படி இருக…
-
- 2 replies
- 1.3k views
-
-
பாதிக்கப்பட்ட தன் மகளுக்காக ஆதிக்க சாதியை எதிர்த்து தந்தை ஒருவர் நடத்தும் நீதிக்கான போராட்டத்தில் தீர்ப்பும் நீதியும் வெவ்வேறாக இருந்தால் அதுதான் ‘பொம்மை நாயகி’. நுனிநாக்கு ஆங்கிலத்தில் தன் மகள் பேசுவதைக் கண்டு, ‘ஏம்பொண்ணு’ என பெருமைகொள்ளும் வேலு (யோகிபாபு) சாதாரண டீ மாஸ்டர். அன்றைக்கான கூலியில் நாட்களைக் கடத்தும் வேலு, மனைவி கயல்விழி (சுபத்ரா), மகள் பொம்மை நாயகி (ஸ்ரீமதி)யுடன் மகிழ்ச்சிக்கு குறைவில்லாத வாழ்க்கையை வாழ்ந்து வருகிறார். டீக்கடை உரிமையாளர் அதனை விற்கும் நிலைக்கு வரும்போது, வேலுவுக்கு வேலை பறிபோகிறது. சொந்தமாக கடையை வாங்கலாம் என எண்ணி பணம் திரட்டிக்கொண்டிருக்கும்போது, அவரது மகள் பொம்மை நாயகி திருவிழா ஒன்றில் திடீரென காணாமல் போகிறார். தன் …
-
- 2 replies
- 306 views
- 1 follower
-
-
கதாநாயகியாக ஒரு திருநங்கை நடித்திருக்கும் தமிழ்ப் படம்! 'ஊரோரம் புளியமரம்’ வகையறாப் பாடல்களுக்கு கேலிப் பொருளாக மட்டுமே பயன்பட்டு வந்த திருநங்கை சமூகத்தைப்பற்றி நேர்மறையாகப் பேசுகிறாள் இந்த 'நர்த்தகி’. வணிக நோக்கம் தவிர்த்த, இந்த முயற்சிக்காகவே இயக்குநர் விஜயபத்மாவுக்கும் தயாரிப்பாளர் கீதாவுக்கும் வாழ்த்துக்கள்! தன் ஒரே மகன் தன்னைப்போல சிலம்பு வீரனாக வளர வேண்டும் என்று நினைக்கும் தந்தை, கணவன் காட்டுவதே உலகம் என்று தனது ஆசாபாசங்களைக்கூட புதைத்துக்கொண்டு வாழும் அம்மா, விவரம் புரிந்த வயதில் இருந்தே தன்னைக் கணவனாக மனதில் பதித்துக்கொண்டு வாழும் மாமன் மகள்... இப்படி ஒரு சூழலில், ஒருவன் தன்னைப் பெண்ணாக உணர்ந்தால்? சிறுவன் சுப்பு மனதளவில் தன்னைப் பெண்ணாக உணர்கிறா…
-
- 2 replies
- 1.7k views
-
-
காப்பான்: சினிமா விமர்சனம். திரைப்படம் : காப்பான் நடிகர்கள் : சூர்யா, மோகன்லால், ஆர்யா, சாயிஷா, போமான் இரானி, பூர்ணா, சமுத்திரக்கனி இசை: ஹாரிஸ் ஜெயராஜ் இயக்கம் : கே.வி. ஆனந்த் அயன், மாற்றான் படங்களுக்குப் பிறகு சூர்யாவும் இயக்குனர் கே.வி. ஆனந்தும் இணைந்திருக்கும் மூன்றாவது படம் இது. கிராமத்தில் வசிக்கும் கதிர் (சூர்யா) ஒர் ஆர்கானிக் விவசாயி. (பயப்பட வேண்டாம். கொஞ்ச நேரம்தான் அந்த பாத்திரம்). ஆனால், உண்மையில் அவர் ராணுவ உளவுப் பிரிவைச் சேர்ந்தவர். அவர் பிறகு இந்தியப் பிரதமரின் சிறப்புப் பாதுகாப்புப் படையில் இணைகிறார். பிரதமருக்கு வரும் ஆபத்துகள், அதிலிருந்து அவரைக் காப்பாற்ற கதிர் செய்யும் சாகசங்கள்தான் மீதிப் பட…
-
- 2 replies
- 1.2k views
-
-
The old dreams were good dreams; they didn't work out, but glad I had them. #Robert from The Bridges of Madison County ஒரு வறண்ட மதிய வேளையில், அமெரிக்காவில் மேடிசன் கவுண்ட்டில் உள்ள ஐவா எனும் கிராமத்திலுள்ள ஒரு பண்ணை வீட்டில், ப்ரான்செஸ்கா இறந்த ஓரிரு நாட்களில், அவளுடைய காப்புப்பெட்டகத்தை, அவளின் பிள்ளைகளிடம் (மகன் மைக்கேல் மற்றும் மகள் கரோலின்) கொடுத்துச் செல்கின்றனர், வங்கியாளர்கள்.அதில் சில கடிதங்களும், புகைப்படங்களும் இருக்கின்றன. தங்களது குடும்ப வழக்கிலேயே இல்லாத முறையான, இறந்தபின் உடலை புதைக்காமல் எரிக்கச் சொல்லி வேண்டும் அந்த கடிதத்தைப் படிக்கின்றனர். “என் உடலை எரித்து அதன் சாம்பலை, ரோஸ்மேன் பாலத்தின் மீது தூவுங்கள். இது என் கடைசி ஆசை” என்று தொடங்கும் அந்தக…
-
- 2 replies
- 878 views
-
-
சிலம்பாட்டத்தில் கைதேர்ந்த சமந்தா - வீடியோ இணைப்பு நடிகை சமந்தா சிலம்பாட்டத்தில் கைதேர்ந்தவராக உருவாகியிருக்கிறார். இதுகுறித்த செய்தியை கீழே பார்ப்போம். சமந்தாவுக்கும் - தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவுக்கும் இந்த வருடத்தில் திருமணம் நடக்கவிருக்கிறது. இதனால், அதிகமான படங்களில் நடிக்க ஒப்புக்கொள்ளாமல், இதுவரை ஒத்துக்கொண்ட படங்களில் நடித்துக் கொடுத்துவிடுவது என்று முடிவு செய்து, அந்த படங்களில் மட்டுமே நடித்து வருகிறார். அந்த வரிசையில், விஜய் நடிப்பில் உருவாகும் புதிய படம், பொன்ராம் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கும் புதிய படம், சாவித்ரி வாழ…
-
- 2 replies
- 702 views
-
-
'ஆளை விடுங்க...' - மும்பை கிளம்பிய அசின்! போகிற இடமெல்லாம் கறுப்புக் கொடி, ஆர்ப்பாட்டம், படத்துக்கு செருப்படி என தமிழ் உணர்வாளர்கள் காட்டிய கடும் எதிர்ப்பில் அரண்டு போய்விட்டார் இலங்கை புகழ் அசின். இதனால் தமிழகத்திலிருந்து கேரளாவுக்கு படப்பிடிப்பை ஷிப்ட் பண்ண வேண்டிய நிலைக்கு ஆளானார். ஆனால் அங்கும் போராட்டக்காரர்கள் வருவதாக சொல்லப்பட 'எப்போது முடியும் இந்தப் படம்.... எப்போது மும்பைக்குப் பறக்கலாம்' எனக் காத்திருந்தாராம் அசின். ஒருவழியாக நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை பிற்பகல் காவலன் படப்பிடிப்பு முடிந்தது. இதையொட்டி பூசணிக்காய் உடைக்கப்பட்டது. பின்னர் விஜய், இயக்குநர் சித்திக் உள்ளிட்ட படப்பிடிப்புக் குழுவினரிடம் விடைபெற்றுக் கொண்டு ஹோட்டலுக்குப்…
-
- 2 replies
- 952 views
-
-
ஈழப்போரின் சாயல்கொண்ட போர் அவலங்கள் ரதன் மதிய உணவிற்காக விடுதி சாப்பாட்டுக் கூடத்துக்குச் செல்லும் போது அந்த ஹெலிகப்ரரைக் கண்டேன். எமது பாடசாலை விளையாட்டு மைதானத்தை நோக்கி பறந்து வந்து கொண்டிருந்தது. எமது பாடசாலைக்கு ஏன்? என்ற கேள்வி மனதினுள் எழ மைதானத்தையொட்டியுள்ள பாதையின் ஊடாக உணவு மண்டபத்தை அடைந்தபோது சாப்பிடுவதற்கான மூன்றாவது மணியும் அடித்துவிடவே உள்ளே சென்றுவிட்டேன். சாப்பிட்டுக் கொண்டிருக்கும்பொழுது மைதானத்துக்குள் இறங்கிய ஹெலியில் இருந்து இராணுவ அதிகாரிகள் இறங்கினார்கள். எனது சக மாணவர்கள் மத்தியில் இவர்கள் இங்கு ஏன் என்ற கேள்விகள் எழுந்தபோதும் இலகுவாக எங்களுக்கு விடையும் கிடைத்துவிட்டது. எமது …
-
- 2 replies
- 1.1k views
-
-
இலங்கையில் நடைபெறவுள்ள திரைப்பட விழாவில் பங்கேற்க வருமாறு அனுப்பப் பட்ட அழைப்பிதழை வாங்க தமிழ் சினிமாவின் முன்னணி ஹீரோக்கள் மறுத்துள்ளனர் என்பதுதான் கோலிவுட்டின் லேட்டஸ்ட் பரபரப்பு டாக். இலங்கை தலைநகர் கொழும்பில் வருகிற ஜூன் மாதம் 3ம்தேதி முதல் 5ம்தேதி வரை ஐ.ஐ.எப்.ஏ. எனப்படும் சர்வதேச இந்திய திரைப்பட விருது வழங்கும் விழா நடக்கிறது. இதில் சிறப்பு விருந்தினர்களாக பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன் அவரது மகன் அபிஷேக் பச்சன், மருமகள் ஐஸ்வர்யா ராய் உள்ளிட்டோர் கலந்து கொள்கிறார்கள். இந்த விழாவில் பங்கேற்க வருமாறு தமிழின் முன்னணி நாயகர்களுக்கு இலங்கை அரசு சார்பிலும், அமிதாப் பச்சன் சார்பிலும் அழைப்பிதழ் அனுப்பப் பட்டிருக்கிறாம். இலங்கையில் நடக்கும் விழா என்பதால் அழைப்பிதழை ப…
-
- 2 replies
- 888 views
-
-
ஆங்கில படங்களை தளுவிய தமிழ் படங்கள் Brewster’s Millions – அருணாசலம் Hardcore – மகாநதி Planes Trains and Automobiles – அன்பேசிவம் What bob can do – தெனாலி Very Bad things – பஞ்சதந்திரம் Too Much – காதலா காதலா She Devil – சதிலீலாவதி Corsican Brothers – அபூர்வ சகோதரர்கள் Life of David Gale – விருமாண்டி Barefoot in the park – அலைபாயுதே Hot bubblegum and American Pie – பாய்ஸ் Butch Cassidy & The Sundance Kid – திருடா திருடா Sense and Sensibility – கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் Shop around the corner – காதல்கோட்டை Big – நியூ Sliding Doors – 12B Fear – காதல் கொண்டேன் 21 grams – சர்வம் Bangkok Dangerous – பட்டியல் Network –…
-
- 2 replies
- 1.6k views
-
-
Scent of a Woman நடிகர்கள் – அல் பாசினோ, க்ரிஸ் ஓ டோனல் இயக்குனர் – மார்டின் ப்ரெஸ்ட் தயாரிப்பாளர் – மார்டின் ப்ரெஸ்ட் ஒளிப்பதிவாளர் – டொனால்ட் ஈ.தொரின் இசை – தாமஸ் நியூமேன் Scent of a Woman உணர்வுகளின் ஆழங்களைத் தீண்டிச் செல்லும் அற்புதமான ஒரு திரைப்படம். உயர்நிலைப் பள்ளி மாணவனான சார்லஸ் சிம்ஸ் (க்ரிஸ் ஓ டோனல்) ஸ்காலர்ஷிப்பில் பாஸ்டனின் மிகப் பெரிய பள்ளியில் உயர் கல்வி பயில்கிறான். அவர்கள் ஊரில் வார இறுதியில் நன்றி கூறும் தினம் கொண்டாடப்படுகிறது என்பதால் மாணவர்கள் அதற்கான நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்துகொண்டிருந்தார்கள். எதாவது பகுதி நேர வேலை செய்தால்தான் சார்லி தன் மற்ற செலவுகளை சமாளிக்க முடியும். பள்ளி நோட்டிஸ் போர்டில் வேலைக்கான படிமம…
-
- 2 replies
- 1k views
-
-
ராக்கி - திரை விமர்சனம் முரளிதரன் காசி விஸ்வநாதன் பிபிசி தமிழ் 25 நிமிடங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,ROWDY PICTURES படக்குறிப்பு, ராக்கி திரைப்படம் நடிகர்கள்: பாரதிராஜா, வசந்த் ரவி, ரோகிணி, ரவீனா ரவி; ஒளிப்பதிவு: ஸ்ரேயாஸ் கிருஷ்ணா; இசை: தர்புகா சிவா; இயக்கம்: அருண் மாதேஸ்வரன். இந்த ஆண்டின் துவக்கத்தில் 'ராக்கி' படத்தின் டீஸர் வெளியானபோது தமிழ் சினிமா ரசிகர்கள் அதிர்ந்துதான் போனார்கள். அந்த டீசரில் நின்று கொண்டிருக்கும் ஒரு நபர், உட்கார்ந்திருக்கும் ஒரு நபரை துருப்பிடித்த ரம்பத்தை வைத்து நிதானமாக அறுக்கும் காட்சி பார்ப்பவர்களை நிலைகுலைய வைத்தது. டீஸரே இப்படியிர…
-
- 2 replies
- 613 views
-
-
சினிமா விமர்சனம் - ஜூங்கா இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர Messenger இதை பகிர டுவிட்டரில் இதை பகிர மின்னஞ்சல் பகிர்க படத்தின் காப்புரிமைFACEBOOK திரைப்படம் ஜூங்கா நடிகர்கள் விஜய் சேதுபதி, சாயிஷா, யோகி பாபு, சரண்யா பொன்வண்ணன், மடோனா சபாஸ்டியன், சுரேஷ் மேனன், ராதாரவி …
-
- 2 replies
- 1.5k views
-
-
மேற்கு தொடர்ச்சி மலை திரை விமர்சனம் தி மேற்கு தொடர்ச்சி மலை திரை விமர்சனம் தமிழ் சினிமாவில் எப்போதாவது தான் தரமான படங்கள் வரும். அப்படி சில படங்கள் வந்தாலும் நம்மில் எத்தனை பேர் அந்த படத்தை திரையரங்கில் பார்க்கின்றோம் என்பது கேள்விக்குறி, அப்படி தரமான கதைக்களத்தில் லெனில் இயக்கி விஜய் சேதுபதி தயாரித்து இன்று வெளிவந்துள்ள படம் படம் தான் மேற்கு தொடர்ச்சி மலை. கதைக்களம் மேற்கு தொடர்ச்சி மலை இப்படம் வருவதற்கு முன்பே பல விருது விழாக்களில…
-
- 2 replies
- 2k views
-