ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142751 topics in this forum
-
போரியல் கோட்பாடுகளும் தந்திரோபாய நகர்வுகளும் -புரட்சி (தாயகம்)- 'எதிரிகள் முன்னேறும் போது, நாங்கள் பின்வாங்குவோம். 'எதிரிகள் ஓய்வெடுக்கும்போது நாம் தொல்லை கொடுப்போம். 'எதிரிகள் களைப்படையும்போது, நாம் தாக்குவோம். 'எதிரிகள் பின்வாங்கும்போது நாம் முன்னேறுவோம்.' - மாவோ சேதுங் பெரிய மற்றும் வலுவான படையைக் கொண்டிருக்கும் ஒருதரப்பு பலம் குறைந்த சிறிய படையைக் கொண்டிருக்கும் தரப்பைப் பொதுவாக வெற்றி கொள்ளும் என்ற மரபுவழிச் சிந்தனை நவீன போரியல் கோட்பாட்டின்படி தவறு என்பதை அமெரிக்க இராணுவ ஆய்வாளரும் முன்னாள் விமானப்படை விமானியுமான கேணல் ஜோன் ஆர்.போயிட் அவர்கள் கடந்த காலப் போரியல் வரலாறுகளை விரிவாக ஆராய்ந்ததன் அடிப்படையில் நிறுவியிருக்கின்றார். அதாவது விரை…
-
- 4 replies
- 3k views
-
-
சிரி லன்கா அரசாங்க அறிவித்தல். [முத்திரை மாற்றம்]
-
- 7 replies
- 3k views
-
-
நடவடிக்கை படையணி ஐந்து (Task Force V) எனப்படும் 65 ஆவது டிவிசனை உருவாக்கும் முயற்சிகளில் சிறிலங்கா படைத்தரப்பு ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. தொடர்ந்து வாசிக்க
-
- 26 replies
- 3k views
-
-
போரை இடையில் நிறுத்த கூடாது இலங்கை அரசு செய்வது சரியே என்று சோ ராமசாமி தெரிவித்துள்ளான் இலங்கையில் நடக்கும் யுத்தம் விடுதலை புலிகளுக்கு எதிரானதே அன்றி தமிழ் மகளுக்கு அல்ல என்று தெரிவிதுள்ளலான் மேலும் இந்திய தனது உதவியை இலங்கை இராணுவத்துக்கு தொடர்ந்து மேற்கொள்ளவேண்டும் அதுவே இலங்கை பிரச்சனைக்கு தீர்வாகும் என தான் நம்பு வதாக தெரிவித்துள்ளான் இவன்னின் நகைச்சுவை பேச்சை பார்க்க கீழ் அழுத்தவும் http://www.youtube.com/watch?v=-U0MA_2ZdyI&eurl= தமிழகமே இப்படியான எட்டப்பனை விட்டு வைக்காதீர்கள் எம் இனத்தின் அழிவுக்கு இவாங்களின் பாங்கு அதிகம் இப்படியான மானம் கேட்ட எட்டபர்கள் இருக்கும் வரை தமிழன் என்ரும் உரிமையோடு வாழவே முடியாது
-
- 26 replies
- 3k views
-
-
ஒரு கோடி மக்கள் வாழும் சென்னை மாநகரத்தின் பரபரப்பிற்கு மத்தியில் ஒரிடத்தில் மட்டும் அமைதியும், சோகமும், ஆற்றாமையும் கடலென பொங்கி வழிகிறது. அந்த இடம் தாயகம். ம.தி.மு.கவின் தலைமை அலுவலகம். நேற்று முளைத்த காளான் கட்சிகள், லெட்டர் பேடு கட்சிகளெல்லாம் ஊடகங்களில் ஆரவாரமாக வலம் வந்து கொண்டிருக்கும் போது அந்த தலைவர் மட்டும் அவரது அண்ணா நகர் வீட்டில், தனிமையில் பேச முடியாமல், துக்கத்தை பகிர்ந்து கொள்ள முடியாமல் தன்னைத்தானே சிறைவைத்துக் கொண்டு அடைந்து போயிருக்கிறார். அவர் வைகோ. தமிழக சட்டமன்ற தேர்தல் குறித்த வினவின் முதல் கட்டுரையே இப்படி ஒரு சோக சக்கரவர்த்தியைப் பற்றி பேச வேண்டியிருப்பதில் எங்களுக்கும் கொஞ்சம் வருத்தம்தான். ஆனாலும் கூர்ந்து கவனித்தால் இது சோகமில்லை, நகைச்சுவை…
-
- 19 replies
- 3k views
-
-
கடற்படையினரால் இன்வென்சிபல் கப்பலை மூழ்கடித்த விடுதலைப்புலிகளின் தற்கொலை குண்டுதாரிக்கு கடைசியாக லண்டன் மற்றும் கிளிநொச்சியிலிருந்து தொலைபேசி அழைப்புகள் கிடைத்துள்ளதாக விசாரணைகளின் போது தெரிய வருகிறது. இதுதொடர்பாக விசாரணைகளில் ஈடுபட்டு வரும் விசாரணைக்குழு கடற்படையின் சுழியோடி.................. தொடர்ந்து வாசிக்க......................... http://isoorya.blogspot.com/2008/05/blog-post_5200.html
-
- 4 replies
- 3k views
-
-
பூசாரி மேற்கொண்ட தாக்குதலில் அண்ணன் உயிரிழப்பு, தங்கை படுகாயம்! பூசாரியொருவர் மேற்கொண்ட தாக்குதலில் ஒருவர் உயிரிழந்த சம்பவம் மட்டக்களப்பு, மாங்கேணி பிரதேசத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குறித்த பகுதியில் பேய்,பிசாசு, ஆவிகளை விரட்டியடிக்கும் நடவடிக்கைகள் இடம் பெற்றுவருவதாகக் கூறப்படும் ஆலயமொன்றிலேயே இச்சம்பவம் இடம் பெற்றுள்ளது. சம்பவ தினமான நேற்று முன்தினம் குறித்த பூசாரியிடம் அண்ணன், தங்கை என இருவர் சென்றுள்ள நிலையில் குறித்த பூசாரி இருவரையும் தாக்கியுள்ளதாகக் கூறப்படுகின்றது. இந்நிலையில் படுகாயமடைந்த அண்ணன் உயிரிழந்துள்ள நிலையில் தங்கை வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார் எனக் கூறப்படுகின்றது.…
-
- 36 replies
- 3k views
-
-
வடகொரியா தனது ரொக்கட்டை ஏவியமை தமக்கு பெரும் கவலையளிப்பதாக இலங்கை அரசாங்கம் அறிவித்துள்ளது. இது தொடர்பில் வெளிவிவகார அமைச்சு விடுத்துள்ள ஊடக அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, கொரிய ஜனநாயக மக்கள் குடியரசு ஏவுகணை தொழில்நுட்பத்தை பயன்படுத்தி ராக்கெட் ஒன்றை ஏவியுள்ளமை கவலையளிக்கின்றது. இந்த செயற்பாடானது ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபையின் தீர்மானமான 1874 யை மீறுகின்ற செயலாகும். 'இந்த சூழ்நிலையில் தொடர்புடைய பங்குதாரர்களுக்கு இடையே பேச்சுவார்த்தை மற்றும் ஒத்துழைப்பே கட்டாயம் தேவைப்படுகின்றது என்பதை தாம் அறிந்திருப்பதால் இந்த செயற்பாடு கவலையளிப்பதாக அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. வடகொரியா ரொக்கட்டை ஏவியமைக்கு ஐக்கிய நாடுகள் சபையின் செயல…
-
- 0 replies
- 3k views
-
-
ஆதாரம்: நேத்திரா தொலைக்காட்சியில் வீரசிங்கம் ஆனந்தசங்கரியின் பேட்டி
-
- 13 replies
- 3k views
-
-
உணர்வுக்கும் அறிவுக்கும் இடையிலான போராட்டம் - விக்னேஸ்வரன் சிறப்புப் பேட்டி COMMENT (28) · இலங்கையின் வடக்கு மாகாண முதல்வர் சி.வி.விக்னேஸ்வரன் யாழ்ப்பாணம் முதல்வர் அலுவலகத்தில் வைத்து இலங்கையின் வடக்கு மாகாண முதல்வர் சி.வி.விக்னேஸ்வரன், ‘தி இந்து’வுக்கு அளித்த பிரத்தியேக பேட்டி. இதில், இலங்கைத் தமிழர் நிலை பற்றியும் இந்தியத் தமிழர்களின் உணர்வுகள் குறித்தும் அடிக்கடி ஏற்படும் மீனவர் கைது குறித்தும் முற்றிலும் வித்தியாசமான கோணத்தில் தனது மனநிலையைப் பகிர்ந்துகொள்கிறார் விக்னேஸ்வரன். அரசியல்வாதியாக இருந்தும் அரசியலற்ற சமூகக் கண்ணோட்டத்துடன் அவர் கூறியதாவது: “ஒன்றுபட்ட இலங்கைக்குள் தீர்வு” என்பது உங்கள் நிலைப்பாடாக உள்ளது. ஆனால், தமிழகத்தைச் சேர்ந்த பல்…
-
- 22 replies
- 3k views
-
-
வன்முறையைக் கைவிட்டால் புலிகளுடன் பேச்சுகளுக்குத் தயார்: அமைச்சர் ரோகித போகல்லாகம [வியாழக்கிழமை, 2 ஓகஸ்ட் 2007, 18:39 ஈழம்] [சி.கனகரத்தினம்] தமிழீழ விடுதலைப் புலிகள் பயங்கரவாதத்தையும், வன்முறையையும் கைவிட்டால் பேச்சுவார்த்தை நடத்தத் தயாராக இருப்பதாக சிறிலங்காவின் வெளிவிவகார அமைச்சர் ரோகித போகல்லாகம தெரிவித்துள்ளார். மணிலாவில் ஆசிய பாதுகாப்பு சபையின் கூட்டத்தின் பின்னர் இன்று வியாழக்கிழமை ஊடகவியலாளர்களிடம் ரோகித போகல்லாகம கூறியதாவது: இலங்கையில் அரசியல் பேச்சுக்கள் மூலம் உள்நாட்டு யுத்தத்தை முடிவுக்குக் கொண்டுவரும் நடவடிக்கைகளை அரசாங்கம் கைவிடவில்லை. ஆனால் போராளிகள் தங்களது நேர்மையை வெளிப்படுத்த வேண்டும். விடுதலைப் புலிகளுடன் நாளையே பேச்சுக்களை நடாத்…
-
- 10 replies
- 3k views
-
-
“தேசியத் தலைவரின்” பெயரால் … : அஜித் 1. இலங்கை அரசியல் பின்புலம் 60 ஆண்டு இலங்கை அரச பேரினவாத அரசியல், 70 களின் பின்னர் அரசியல், பொருளாதார, கலாச்சார ஒடுக்குமுறை என்ற தளத்திலிருந்து நேரடியான அரச இயந்திரத்தின் வன்முறையாக வளர்ச்சியடைந்தது. உறுதியான மக்கள் சார்ந்த அரசியலை முன்வைத்துத் திட்டமிடப்ப்படாத தமிழ்ப் பேசும் மக்களின் எதிர்ப்புப் போராட்டம் அரச வன்முறையை எதிர்கொள்ளும் ஆயுதப் போராட்டத்தின் தேவையை உருவாக்கியது. 80களில் இலங்கை அரசின் திட்டமிட்ட இனப்படுகொலை பல அப்பாவித் தமிழர்களின் உயிர்களைப் பலிகொண்டது. ஆயுதப் போரட்ட்த்திற்கான சமூக அங்கீகாரமும் தேவையும் பல ஆயுதக் குழுக்களை உருவாக்கியது. 80 களின் சமூகப் புறச் சூழல் போராட்டத்தின் தேவையை எவ்வாறு உருவ…
-
- 32 replies
- 3k views
-
-
காட்டு பலம் காட்டி சம்பூரை பிடித்தவர்கள் வீரியங்கள் தாம் பேசி விரைந்தனர் வன்னி நோக்கி காரியங்கள் கைமீறி போகுதென்றே - சம்பூரை விட்டு பிரிகின்றார்; வீரியங்கள் என்னாச்சு அடர்ந்த கானகத்தின் எல்லையோர கிராமத்தின் ஒரு மாலை பொழுதில் இளைஞ்சன் ஒருவன் அங்கிருந்த குடிசை நோக்கி வருகிறான். பசி வந்தால் பத்தும் பறந்துபோவும் என்பார்களே அதனால் தானவோ என்னவோ அங்கிருந்த மூதாட்டியிடம் உணவு கேட்கின்றான். அடுக்களைக்கு செல்கிறால் பாட்டி, அங்கேயோ அனைத்தும் கழுவி கவிழ்திருக்கிறது மெல்ல திரும்பியவள், திருப்பி அனுப்பாமல், தின்பதற்க்கு சில பழம் கொடுத்து, சிறிது காத்திரு தம்பி, சூடான உணவை சுவையுடன் தருகிறேன் என்றே அகன்றாள் அவ்விடம் விட்டு அவன் பதில் மொழி கேளாமல். காத்திருந்தான் இளைஞன்…
-
- 7 replies
- 3k views
-
-
எறிகணை வீச்சில் மயிரிழையில் உயிர்தப்பிய 53 ஆவது படைப்பிரிவின் கட்டளைத் தளபதி [ஞாயிற்றுக்கிழமை, 18 பெப்ரவரி 2007, 06:45 ஈழம்] [க.திருக்குமார்] யாழ். தென்மராட்சி கொடிகாமத்தில் உள்ள சிறிலங்கா இராணுவத்தினரின் 53 ஆவது படைப்பிரிவின் தலைமையகம் மீது தமிழீழ விடுதலைப் புலிகள் நடத்திய எறிகணை வீச்சுத் தாக்குதலில் இருந்து அப்படைப்பிரிவின் கட்டளைத் தளபதியான பிரிக்கேடியர் சிறீநாத் ராஜபக்ச மயிரிழையில் உயிர்தப்பியுள்ளார். இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது: "புதிதாக உருவாக்கப்பட்ட 'மெகனைஸ்' படைபிரிவின் தலைமையக திறப்பு விழா கொடிகாமத்தில் உள்ள 53 ஆவது படைப்பிரிவின் தலைமையகத்தில் கடந்த வாரம் ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது. விழாவிற்கு வந்திருந்த அதிகாரிகள், 53 ஆ…
-
- 12 replies
- 3k views
-
-
இலங்கைக்கு எதிராக 30 நாடுகளில் வழக்கு! ஈழப்போரின் இறுதிக்கட்டத்தில் இலங்கை ராணுவத்தின் போர்க் குற்றங்கள் தொடர்பாக ஐ.நா. நிபுணர் குழுவினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையின் அடிப்படையில் இலங்கை அரசின் உயர் மட்டத்திலுள்ளவர்களுக்கு எதிராக 30 நாடுகளில் வழக்குத் தொடர புலம்பெயர்ந்துள்ள தமிழர் அமைப்புகள் முயற்சிகளை மேற்கொண்டு வருவதாக செய்தி வெளியாகி உள்ளது. மேற்கு ஐரோப்பா, கிழக்கு ஐரோப்பா மற்றும் ஆசியாக்கண்டத்தின் சில நாடுகளிலும் இத்தகைய வழக்குகளைத் தொடுப்பதற்கான முயற்சிகள் நடந்து வருகின்றன. இதற்கு ஆதரவாக செல்வந்தர்கள், நிதி நிறுவனங்கள் மற்றும் தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் ஆகியவை உதவுவதற்கு முன்வந்துள்ளன. முதற்கட்டமாக இலங்கை அரசின் முக்கியஸ்தர்களுக்கு எதிராக சில நா…
-
- 1 reply
- 3k views
-
-
பொருத்து வீட்டுத்திட்டத்துக்கு யாழ்ப்பாணத்தில் 189பேர் விண்ணப்பம் -எம்.றொசாந்த் பொருத்து வீட்டுத்திட்டத்துக்கு, யாழ்ப்பாணத்திலிருந்து இதுவரை 189பேர் விண்ணப்பித்துள்ளதாக, யாழ். மாவட்டச் செயலகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. வடக்கு, கிழக்கில் 65 ஆயிரம் பொருத்து வீடுகளை நிர்மாணிக்கும் அரசாங்கத்தின்; திட்டத்துக்கு, பரவலாக எதிர்ப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. எங்களுடைய சூழல், சுற்றுவட்டாரம், கலாசாரம் ஆகியவற்றுக்கு, இவ்வீடு பொருந்தாது எனவும் ஒரு வீடு அமைக்க செலவு செய்யும் 2.1 மில்லியன் ரூபாயில் 2 அல்லது 3 கல் வீடுகளை அமைக்க முடியும். பொருத்து வீட்டுக்கான காலம் 30 வருடங்களே எனத் தெரிவிக்கப்பட்டு, பொருத்து வீட்டுத்திட்டத்துக்கு ப…
-
- 41 replies
- 3k views
-
-
http://www.dinamalar.com/General_detail.asp?news_id=22230
-
- 4 replies
- 3k views
-
-
''நாங்கள் மிகப் பத்திரமாக இருக்கிறோம்" உயிருடன் குருவி: தேடத் தொடங்கிவிட்ட இன்டர்போல் : ஜூனியர் விகடன் [ சனிக்கிழமை, 20 மார்ச் 2010, 01:06.25 PM GMT +05:30 ] ''பொட்டு அம்மான் உயிருடன் இருக்கிறார். விடுதலைப் புலிகளின் உளவுத்துறை மறுபடியும் இயங்கத் தொடங்கி இருக்கிறது!'' - இப்படி அறிவித்திருப்பது ஈழ ஆர்வலர்கள் யாருமல்ல... இண்டர்போல் பொலிஸ்! இவ்வாறு தமிழக சஞ்சிகையான ஜூனியர் விகடன் தனது இவ்வார இதழின் அட்டைச் சிறப்புச் செய்தியாக பிரசுரித்துள்ளது. அதில் தொடர்ந்து தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:- விடுதலைப் புலிகளின் தேசியத் தலைவர் பிரபாகரன் கொல்லப்பட்டதாகச் சொல்லி, நந்திக்கடலில் பிரேதத்தைக் காட்டிய இலங்கை அரசு, பொட்டு அம்மான் குறித்த எந்தத் தகவலையும் உறுதிப்படுத்தவில்ல…
-
- 26 replies
- 3k views
-
-
உண்மை புலிகள் ">" type="application/x-shockwave-flash" allowscriptaccess="always" allowfullscreen="true" width="480" height="295"> &feature=rec-HM-r2
-
- 0 replies
- 3k views
-
-
மணலாற்றில் இராணுவம் மீண்டும் ஒரு வலிந்த தாக்கமலை ஆரம்பித்துள்ளது. இத்தகவலை தமிழீழ விடுதலைப் புலிகளின் இராணுவப் பேச்சாளர் திரு. இளந்திரையன் தெரிவித்துள்ளார். இன்று சனிக்கிழமை காலை 6.00 மணிக்கு ஆரம்பிக்கப்பட்ட இந்த ஆக்கிரமிப்பு நடவடிக்கையை கொக்குத்தொடுவாய், மண்கிண்டிமலை ஆகிய இடங்களில் புலிகள் வழிமறித்து தாக்கி வருகின்றனர். இதைத் தொடர்ந்து த.வி.புலிகளால் மணலாறு சின்னபுர, கல்குளம் இராணுவமுகாம் மீதும் ஆட்டிலறி தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. http://www.pathivu.com/index.php?subaction...amp;ucat=2& SLA launches offensive in Ma'nalaa'ru [TamilNet, Saturday, 26 April 2008, 07:32 GMT] Liberation Tigers of Tamileelam (LTTE) defensive units were confronti…
-
- 4 replies
- 3k views
-
-
விடுதலைப் புலிகளின் தலைவர் வே.பிரபாகரன் சரணடைவதற்கு 24 மணித்தியாலங்கள் அவகாசம் வழங்கியுள்ளதாக சிறிலங்கா அரசாங்கத்தின் பாதுகாப்புத்துறை விவகாரங்களுக்கான பேச்சாளரும் அமைச்சருமான கேகலிய ரம்புக்வெல இன்று ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளதாக கொழும்பில் இருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன. இன்று பாதுகாப்பு வலையம் மீது சிறீலங்கா இராணுவத்தினர் பாரிய இராணுவ நடவடிக்கையினை நடத்தியதில் 1000ற்கும் மேற்பட்ட பொது மக்கள் கொல்லப்பட்டும் பலர் படுகாயமடைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. வரும் நாட்களில் சிறீலங்கா இராணுவத்தினர் கடும் தாக்குதல்களை நடத்த திட்டமிட்டுள்ளதாக இராணுவத் தரப்பில் இருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன. http://www.tamilseythi.com/srilanka/colomb...2009-04-…
-
- 8 replies
- 3k views
-
-
http://www.youtube.com/watch?v=DrzOtL-jdrc அவுஸ்திரெலியாவில் சிங்கள அணி விளையாடும் போது விளையாட்டு வேறு அரசியல் வேறு என்று சிங்களத்துக்கு வாக்காளத்து வாங்கும் தமிழர்களுக்காக(???????) இங்கே நான் இணைத்திருக்கிறேன்.
-
- 36 replies
- 3k views
-
-
தமிழீழம் ஏற்கனவே உருவாகி விட்டதா? தமிழீழம் ஏற்கனவே அங்கீகரிக்கப்பட்டு விட்டதா? 'தேசத்தின் குரல்' அன்ரன் பாலாசிங்கத்தின் துணைவியார் திருமதி அடேல் பாலசிங்கம் தமிழீழ விடுதலைப் புலிகளின் சர்வதேச பேச்சாளராக நியமிக்கப் படலாம் எனச் செய்திகள் வந்துகொண்டிருக்கும் இவ்வேளையில் இச்செய்தியானது சர்வதேச ஊடகங்களில் பரப்பப்பட்டுள்ள அல்லது பரப்பப்படும் விதமானது தமிழீழம் ஏற்கனவே உருவாகி விட்டதா? தமிழீழம் ஏற்கனவே அங்கீகரிக்கப்பட்டு விட்டதா? தமிழீழத்தை சர்வதேச ஊடகங்கள் மனத்தளவில் அங்கீகரித்து விட்டனவா என்ற கேள்வியை எழுப்பியுள்ளது. சர்வதேச ஊடகங்களில் திருமதி அடேல் பாலசிங்கம் மறைந்த முன்னால் இந்தியப் பிரதமர் திரு ராஜீவ் காந்தியின் மனைவி சோனியா காந்தியுடன் ஒப்பிட்டுப் பேசப்பட்டுள்ளமையே…
-
- 9 replies
- 3k views
-
-
[புதன்கிழமை, 28 நவம்பர் 2007, 12:50 PM ஈழம்] சிறிலங்கா இராணுவத்தினர் பற்றிய தகவல்களை அறிய விடுதலைப்புலிகள் உயர் தொழில்நுட்பங்களையும், கணணி மென்பொருட்களையும் பயன்படுத்தி வருவதாக த பொட்டம்லைன் பத்திரிகை தெரிவித்துள்ளது. அந்த இதழில் வெளியாகியுள்ள செய்தி விவரம்: விடுதலைப்புலிகளின் வான்படையை வடிவமைப்பதில் பிரதான பங்கு வகித்தவர் கேணல் சங்கர். அவர் ஒரு வான் பொறியியலாளர். சங்கருக்குப் பின்னர் ரத்னம் மாஸ்ரர் தற்போது வான்படையின் கட்டளை தளபதியாக பணியாற்றி வருகின்றார். ரத்னம் மாஸ்ரர் என்பது அவரது இயக்க பெயராகும், அவரது உண்மையான பெயர் யாருக்கும் தெரியாது. ரத்னம் மாஸ்ரர் சரளமாக ஆங்கிலம் பேசுவார், அவர் அவுஸ்திரேலியாவில் வான் பொறியியல் கல்வி பயின்றவர். அதன் பின்னர் அமெரிக…
-
- 11 replies
- 3k views
-
-
சீனாவில் இருந்து அதி நவீன டாங்கிகள் 160 இலங்கைப் படையினருக்கு அனுப்பி வைப்பு? சீனாவில் இருந்து 160 டாங்கிகள் இலங்கைப் படையினருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. விடுதலைப் புலிகளுக்கு எதிரான இறுதிக் கட்ட யுத்தம் என அரசாங்கம் தெரிவித்து வரும் நிலையில் முல்லைத் தீவை நோக்கிய நகர்வில் எதிர்பாராத விளைவுகளை சந்திக்க நேரிடும் எனக் கருதிய இலங்கை அரசு சீனா மற்றும் பாகிஸ்தான் நாடுகளிடம் இருந்து நவீன கனரக ஆயுதங்களைக் கொள்வனவு செய்வதில் ஈடுபட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஸ பாகிஸ்;தான் சென்ற நிலையில் மறுபுறம் சீன அரசிடமும் ஆயுத உதவிகள் கோரப்பட்டதாக உள்ளகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. கு…
-
- 5 replies
- 3k views
-