ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143496 topics in this forum
-
“எனது தந்தை தமிழ் மக்களுக்கு நியாயத்தை வழங்குவார்“ சதுரிக்கா சிறிசேன தனது தந்தையும், ஜனாதிபதியுமான மைத்திரிபால சிறிசேன வடக்கில் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நியாயத்தைப் பெற்றுக்கொடுப்பார் என சதுரிக்கா சிறிசேன நம்பிக்கை வெளியிட்டுள்ளார். ஜனாதிபதி பல தடவைகள் யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்டு அந்த மக்களின் பிரச்சினைகள் தொடர்பில் அறிந்துகொண்டுள்ளதாகவும் அவர் வலியுறுத்தினார். ஊடகவியலாளர்கள் சிலரை சந்தித்த சதுரிக்கா சிறிசேன ஊடகவியலாளர்களுக்கு எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளித்தார், இந்த சந்தர்ப்பத்தில் வடக்கில் யுத்தத்தால் நிறைய பெண்கள் பாதிப்புக்களை எதிர்நோக்கியுள்ளனர். உங்கள் தந்தை 201…
-
- 17 replies
- 1.8k views
-
-
யாழில் புலிக்கு படையெடுப்பு இன்றைய தினம் நடிகர் விஜயின் புலி திரைப்படம் உலகெங்கும் வெளியாகும் என அறிவிக்கப்பட்டு இருந்தது. அந்த வகையில் யாழ்ப்பாணத்திலும் குறித்த திரைப்படம் ராஜா, மெஜெஸ்டிக் கொம்பிளக்ஸ் தியேட்டர்களில் இன்று காலை வெளியாகும் என அறிவிக்கப்பட்டு இருந்தது. திரைப்படத்தை பார்ப்பதற்கு அதிகாலை முதலே அதிகளவான ரசிகர்கள் திரையரங்குகள் நோக்கி படையெடுத்தனர். ஆனாலும் குறித்த நேரத்துக்கு திரைப்படம் வெளியாகாததால் ரசிகர்களிடையே கொந்தளிப்பு ஏற்பட்டது.பின்னர் புலித்திரைப்படம் திரையிடப்பட்டதால் ரசிகர்களின் கொந்தளிப்பு குதூகலிப்பாக மாறியது. http://on…
-
- 17 replies
- 1.6k views
-
-
யுத்த நிறுத்த ஒப்பந்தம்- சமாதானப் பேச்சு இனி இல்லை- சீண்டிய சிங்களம் விரைவில் மண்டியிடும்: சு.ப.தமிழ்ச்செல்வன் யுத்த நிறுத்த ஒப்பந்தத்தை கடைப்பிடிக்காத நிலைக்கு சிறிலங்கா அரசாங்கம் தள்ளியிருக்கிறது என்றும் தமிழீழ மக்களின் பலத்தையும் உணர்வையும் சீண்டிப்பார்த்திருக்கும் மகிந்த ராஜபக்ச அதற்கான விளைவை விரைவில் சந்திப்பார் என்றும் தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளர் சு.ப. தமிழ்ச்செல்வன் எச்சரித்துள்ளார். கிளிநொச்சியில் இன்று புதன்கிழமை இலங்கைக்கான நோர்வே தூதுவர் ஹன்ஸ் பிறட்ஸ்கர் தலைமையிலான குழுவினரைச் சந்தித்த பின்னர் ஊடகவியலாளர்களிடம் சு.ப. தமிழ்ச்செல்வன் கூறியதாவது: நோர்வே தூதுவரைக் கொண்ட தூதுக்குழுவினரை இன்று சந்தித்து விரிவாகக் கலந்துரையாடி…
-
- 16 replies
- 3.9k views
-
-
ஞாயிறு 02-04-2006 17:45 மணி தமிழீழம் [நிருபர் சிறீதரன்] ஆசிரியை தாக்கி மாணவி வையித்திய சாலையில். பாடசாலையில் பரீட்சை எழுதிக் கொண்டு இருந்த மாணவி ஏனைய மாணவிகளைப் போன்று பரீட்சையெழுதவில்லையெனக் கூறி மாணவியை ஆசிரியை தாக்கியதில் மாணவி யாழ்ப்பாணம் போதனா வையித்திய சாலையின் 15ம் விடுதியில் அணுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார். வலிகாமம் கல்வி வலயத்திற்கு உட்பட்ட உடுவில் கல்விகச் கோட்டத்தில் அமைந்துள்ள ஏழாலை சைவசன்மார்க்க வித்தியாலயத்தில் இந்த தாக்குதல் சம்பவம் கடந்த வெள்ளிக் கிழமை இடம் பெற்றுள்ளது. ஏழாலை மத்தியைச் சேர்ந்த ஆண்டு இரண்டில் கல்வி கற்கும் தெய்வேந்திரம் குமுதினி வயது 07 என்பவரே ஆசிரியையினால் தலையை வாங்கில் பிடித்து மோதியதில் கண…
-
- 16 replies
- 2.7k views
-
-
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சம்பந்தன், நேற்று நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலுக்கான வாக்களிப்பின் போது வாக்களிக்கவில்லை. அவர், சுகயீனமடைந்துள்ளதாகவும் அதனால் திருகோணமலைக்கு செல்லாமல் கொழும்பிலேயே தங்கிவிட்டதாகவும் கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன. http://www.tamilmirror.lk/137269
-
- 16 replies
- 936 views
-
-
இலங்கையில் தமிழ் பொதுமக்களின் அழிவைத் தவிர்ப்பதற்கு ஐ.நா. அமைதிகாக்கும் படையை அனுப்புமாறு கோருவதற்கான வேளை செயலாளர் நாயகம் பான் கீ மூனுக்கு வந்துள்ளதாக தெற்காசியாவுடனான உறவுகளுக்கான ஐரோப்பிய பாராளுமன்றக் குழுவின் தலைவர் றொபேர்ட் இவான்ஸ் வலியுறுத்தியுள்ளார். இலங்கையில் தமிழ் மக்களுக்கு மனிதாபிமான உதவிகள் வழங்கப்படவேண்டியது அவசியம் என்ற தலைப்பில் றொபேர்ட் இவான்ஸ் ஐ.நா. செயலாளர் நாயகம் பான் கீ மூனுக்கு அனுப்பியுள்ள கடிதம் நேற்று வெள்ளிக்கிழமை லண்டன் ரைம்ஸ் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்டிருக்கிறது. அதில் றொபேர்ட் இவான்ஸ் தெரிவித்திருப்பதாவது:- ஐயா இலங்கையில் இரு தரப்பினராலும் நிபந்தனையற்ற யுத்தநிறுத்தம் ஒன்று உடனடியாக மேற்கொள்ளப்படவேண்டும் என்பதை நான் ஏற்ற…
-
- 16 replies
- 2.4k views
-
-
கனடாவின் மொன்றியலில் பிராந்தியத்தில் இலங்கைத் தமிழர் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளதுடன், சம்பவம் தொடர்பில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். 40 வயதான ஜெயராசன் மாணிக்கராஜா என்பவரே கொலை செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக 34 வயதான நபர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவம் கடந்த திங்கட் கிழமை இரவு 9.30 அளவில் இடம்பெற்றுள்ளது. மூன்று பிள்ளைகளின் தந்தையான மாணிக்கராஜா உணவகம் ஒன்றில் பணியாற்றி வந்துள்ளார். அவர் படுகாயமடைந்த நிலையில், உணவகத்திற்கு அருகில் உள்ள வீதி ஒன்றில் கிடந்த நிலையில், வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டார். வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் வழியில் அவர் உயிரிழந்துள்ளார். அவரது கழுத்து பகுதியில் கத்தியால் தாக்கப்பட்ட காயங்கள் காணப்பட்டுள்ளன. அருகில…
-
- 16 replies
- 1.8k views
-
-
யாழில் முஸ்லிம்கள் கதவடைப்பு யாழில் முஸ்லிம்கள் கதவடைப்பு யாழ்ப்பாண முஸ்லீம்கள் இன்று கதவடைப்புப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அம்பாறை, கண்டி ஆகிய பகுதிகளில் முஸ்லிம்களுக்கு எதிராக இடம்பெற்ற வன்முறைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்தே இந்தக் கதவடைப்பு போராட்டம் நடத்தப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டது. http://newuthayan.com/story/74585.html
-
- 16 replies
- 1.4k views
-
-
பிரபாகரனுக்கு படிப்பறிவு இல்லை – பாலசிங்கத்திற்கும் இருந்ததா என்பது சந்தேகமே என்கிறார் சரத் பொன்சேகா! December 23, 2021 தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் படிப்பறிவு இல்லாதவர் எனத் தெரிவித்த ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் சரத் பொன்சேகா, ”பயங்கரவாத அமைப்பில் ஆரம்பத்தில் இருந்தவர்கள் எவருக்கும் அவ்வளவாக படிப்பறிவு இல்லை.” எனவும் தெரிவித்தார். இது தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்த அவர், தமிழ் மக்களின் பிரதிநிதிகள், தனி இராஜ்ஜியம் உள்ளிட்ட வாக்குறுதிகளை வழங்கி நாடாளுமன்றத்துள் பிரவேசித்தனர். பின்னர் இந்த வாக்குறுதிகளை அவர்கள் நிறைவேற்றவில்லை. இதனாலேயே ஆயுதப் போராட்டம் ஏற்பட்டது எனக் குறிப்பிட்டுள்ளார். நாட்டை …
-
- 16 replies
- 1.4k views
- 1 follower
-
-
சுகவீனமடைந்த பூரண ஓய்விலிருக்கும் முன்னாள் அமைச்சர் அனுரா பண்டாரநாயக்கவின் உடல்நிலை மேலும் மோசமடைந்ததையடுத்து அவர் கொழும்பிலுள்ள நவலோக வைத்தியசாலையில் மருத்துவ அவசர சேவைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருப்பதாக அறிவிக்கப்பட்டிருக்கின்றது. உயிராபத்தை உதிர்நோக்கியிருக்கும் நோயாளிகளே நவலோக வைத்தியசாலையில் மருத்துவ அவசர சேவைப் பிரிவில் அனுமதிக்கப்படுகின்றார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. உடல்நிலை மோசமடைந்ததையடுத்து ஜனவரி முதல் பகுதியில் அவசர மருத்துவ சிகிச்சைக்காக சிங்கப்பூர் கொண்டு செல்லப்பட்ட அனுரா பண்டாரநாயக்க பின்னர் ஓரளவு குணமடைந்த நிலையில் கொழும்பு திரும்பியிருந்தார்;. கொழும்பில் பொது நிகழ்ச்சிகள் எதிலும் கலந்துகொள்ளாமல் பூரண ஓய்விலிருக்குமாறு அநுரா அறிவுறுத்தப்பட்டிருந…
-
- 16 replies
- 3.1k views
-
-
இனவாத வார்த்தைகளால் பிரதேச செயலக குழுவினரை திட்டிய விகாராதிபதி சட்டவிரோத காணி அபகரிப்பைத் தடுக்கச்சென்ற மட்டக்களப்பு பட்டிப்பளை பிரதேச செயலக குழுவினரை கடுமையான இனவாத வார்த்தைகளால் திட்டியதோடு தமிழர்கள் அனைவரையும் புலிகள் என மங்களராமய விகாராதிபதி அம்பிட்டிய சுமன ரத்தின தேரர் கூறியமை தமிழ் மக்கள் மத்தியில் பெரும் அச்ச நிலையை உருவாக்கியுள்ளது. இச் சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது, அரச காணிகளை தங்களுக்கு வழங்குமாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்த மட்டக்களப்பு மங்களராமய விகாரதிபதி அம்பிட்டிய சுமன ரத்தின தேரர், அங்கு சென்ற பட்டிப்பளை பிரதேச செயலாளரையும் அரச உத்தியோகத்தர்களையும் கடுமையாக திட்டியுள்…
-
- 16 replies
- 1.2k views
-
-
க.பொ.த.(உ/த) பரீட்சை பெறுபேறுகள் வெளியீடு 2013ஆம் ஆண்டு க.பொ.த.(உஃத) பரீட்சை பெறுபேறுகள் சற்று முன்னர் வெளியானது. இந்நிலையில், பரீட்சை பெறுபேறுகளை என்ற http://www.doenets.lk/exam/contact.html இணையத்தளத்தின் ஊடாக பார்வையிட முடியும் என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார். http://www.virakesari.lk/?q=node/360034
-
- 16 replies
- 4.7k views
-
-
இலங்கையில் ரூ.745 கோடி நீலக்கல் தொகுப்பு: வீட்டின் பின்புறம் தற்செயலாக கிடைத்தது அன்பரசன் எத்திராஜன் பிபிசி செய்திகள் 3 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,MR GAMAGE படக்குறிப்பு, ரத்தினவியல் வல்லுநர் காமினி ஜோய்சா நட்சத்திர நீலக்கல் தொகுப்பை ஆராய்கிறார். இந்திய ரூபாயில் இதன் மதிப்பு சுமார் 745 கோடி இருக்கும் என்று வல்லுநர்கள் கூறுகின்றனர். உலகின் மிகப்பெரிய நட்சத்திர நீலக்கல் தொகுப்பு வீட்டின் பின்புறம் தற்செயலாக கண்டுபிடிக்கப்பட்டதாக இலங்கை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். ரத்தினங்கள் அதிகம் காணப்படும் ரத்தினபுரா பகுதியில் உள்ள தமது வீட்டின் …
-
- 16 replies
- 1.3k views
- 1 follower
-
-
இனப் பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும் என்ற நிபந்தனையை சர்வதேச நாணய நிதியம் விதிக்க வேண்டும் – செல்வம்! இனப்பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும் என்ற நிபந்தனையை சர்வதேச நாணய நிதியம் விதிக்க வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வலியுறுத்தியுள்ளது. நாடாளுமன்றத்தில் நேற்று(புதன்கிழமை) உரையாற்றிய போதே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் இவ்வாறு வலியுறுத்தியுள்ளார். இனப்பிரச்சினைக்கு தீர்வு என்பது காலம் காலமாக ஏமாற்றப்படும் ஒரு செயற்படாகவே காணப்படுகிறது. தமிழர்களின் உரிமைகளை அழித்து சிங்கள குடியேற்றத்தை ஸ்தாபிக்கும் பணிகளை அரச அதிகாரிகள் துரிதமாக முன்னெடுத்து வருகிறார்கள் எனவும் அவர் குறிப்பிட்டுள…
-
- 16 replies
- 1k views
- 1 follower
-
-
திங்கள் 09-04-2007 19:46 மணி தமிழீழம் [பதிவு நிருபர்] பிரான்ஸ் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் பிரதிநிதிகளின் கைது நடவடிக்கைக்கு எதிர்ப்புத் தெரிவித்து இன்று திங்கட்கிழமை பிற்பகல் 2 மணியளவில் ரொக்கட்றோ சதுக்கத்தில் இரண்டாயிரத்துக்கு மேற்பட்ட மக்கள் ஒன்று கூடி எதிர்ப்பு நடவடிக்கையை ஆரம்பிக்க இருந்தவேளை பிரஞ்சு காவல்துறையினரால் பொதுமக்கள் அனைவரும் திருப்பியனுப்ப முற்பட்டவேளை தமிழ் மக்கள் இன்னொரு பகுதியில் கூடி எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர். இதனையடுத்து ரொக்கட்றோ நகரபிதா வருகைதந்து அனைவரையும் அமைதியாகத் திரும்புமாறு கேட்டுக்கொண்டதையடுத்தும் பொதுமக்கள் இன்னொரு புறத்தில் ஒன்றுகூடியுள்ளனர். இதேவேளை பிரச்சு காவல்துறையினர் ரொக்கட்றோ பிரதேசத்தில் காணும்…
-
- 16 replies
- 4.4k views
-
-
Talk to Al Jazeera - Mahinda Rajapaksa: 'This is all propaganda'
-
- 16 replies
- 1.2k views
-
-
வடக்குப் பிரச்சினையில் திடீர் திருப்பம்! நம்பிக்கையில்லா தீர்மானத்தை மீளப் பெற்றுக் கொள்ள இணக்கம்! தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனுக்கும், வடக்கு முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனுக்கும் இடையே நடந்த சமரசப் பேச்சை அடுத்து முதல்வருக்கு எதிராகக் கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லாத் தீர்மானம் மீளப் பெறுவதற்குத் தீர்மானிக்கப்பட்டிருக்கின்றது. அத்துடன் குற்றஞ்சாட்டப்பட்டாத அமைச்சர்களை பதவியில் நீடிக்க விடுவதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளது. http://uthayandaily.com/story/6879.html
-
- 16 replies
- 2k views
- 1 follower
-
-
த.தே.கூட்டமைப்புக்கான அமெரிக்க அழைப்பின் பின்னணி ஒரு பக்கத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு எதிரான விமர்சனங்களும், குற்றச்சாட்டுகளும் தீவிரம் பெற்று வருகின்ற நிலையில், அவர்களை நோக்கி சர்வதேச சமூகத்தின் கதவுகள் திறக்கத் தொடங்கியுள்ளன. அடுத்த வாரத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர்கள் நால்வர் அமெரிக்காவுக்குப் பயணம் மேற்கொள்ளப் போவது முக்கியமானதொரு திருப்புமுனையாகவே கருதப்படுகிறது. அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் அழைப்பின் பேரிலேயே இந்தப் பயணம் இடம்பெறவுள்ளது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன், நாடாளுமன்ற உறுப்பினர்கள் மாவை. சேனாதிராசா, சுரேஷ் பிரேமச்சந்திரன், எம்.ஏ. சுமந்திரன் ஆகியோரே அமெரிக்கா செல்லவுள்ளனர். இவர்களு…
-
- 16 replies
- 1.8k views
-
-
தமிழரசுக் கட்சியைத் தவிர்த்து தமிழினம் முன்செல்ல முடியாது”: கஜேந்திரகுமார் எம்.பி. கருத்து December 31, 2024 “தமிழரசுக் கட்சி பிரதான கட்சியாக உள்ளமையால் அந்தக் கட்சியைத் தவிர்த்து தமிழினம் முன்செல்ல முடியாது.” இவ்வாறு தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் யாழ்ப்பாணம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்தார். மேலும் இலங்கைத் தமிழரசுக் கட்சியும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் மக்கள் மத்தியில் இருந்த செல்வாக்கை இழந்த பாதையைத் தொடர்கின்ற வகையில் கட்சியின் முடிவுகள், பதவிகள் அமையக்கூடாது. கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் மக்கள் வழங்கியுள்ள தீர்ப்பைச் சரியாகப் புரிந்துகொண்டு, மக்களால் நிராகரிக்கப்பட்ட ஒரு சிலரின் ஆதிக்கத்தைக் கட…
-
-
- 16 replies
- 1.3k views
-
-
கதிர்காமத்தில் நள்ளிரவில் பதற்றம் கதிர்காமத்தில், பொலிஸாரின் சமிக்ஞையையும் மீறி மோட்டார் சைக்கிளைச் செலுத்திச் சென்றதாகக் கூறி பொலிஸார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் நபர் ஒருவர் உயிரிழந்தார். இதனால் கோபமடைந்த அப்பகுதி மக்கள் பொலிஸ் நிலையம் மீது கல்வீசித் தாக்குதல் நடத்தினர். அதைத் தடுப்பதற்காக பொலிஸார் கண்ணீர் புகை குண்டுகளைப் பிரயோகித்தனர். இதையடுத்து அங்கு பரபரப்பு தோன்றியது. சம்பவத்தை நேரில் கண்ட நபர் ஒருவர் விவரித்ததாவது: குறித்த நபர் நேற்று இரவு சுமார் பத்து மணியளவில் கடையில் பொருட்களை வாங்கிக்கொண்டு வீடு திரும்பியுள்ளார். அவர் பொலிஸாருக்கு மிக நெருக்கத்தில் வரும்போது மோட்டார் சைக்கிளை நிறுத்துமாறு பொலிஸார…
-
- 16 replies
- 1k views
-
-
கொழும்பு : விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரன் இலங்கையை விட்டு தப்பிச் சென்றிருக்கலாம் என்று இலங்கை ராணுவத் தளபதி சரத் பொன்சேகா கூறியுள்ளார். இலங்கையில் தற்போது விடுதலைப்புலிகளுடன் நடைபெற்று வரும் போரில் ராணுவத்திற்கு ஒரு சில மாதங்களில் முழு வெற்றி கிட்டிவிடும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். பிரபாகரன் தனது குடும்பத்தை மிகவும் நேசிப்பவர் என்றும், எனவே ராணுவம் தன்னை நெருங்கும் வரை அவர் காத்திருக்க மாட்டார் என்று கூறிய பொன்சேகா, பிரபாகரன் ஏற்கெனவே கடல் மார்க்கமாக இலங்கையை விட்டு தப்பிச் சென்றிருக்கலாம் என்று செய்தியாளர்களிடம் கூறியுள்ளார். பிரபாகரன் எங்கு சென்றிருப்பார் என்பது பற்றி கருத்து தெரிவிக்க மறுத்த பொன்சேகா , பிரபாகரன் சயனைட் விழுங்கி தற்கொ…
-
- 16 replies
- 3.4k views
-
-
வன்னியில் விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டுக்குள் இருந்து கடந்த இரண்ரை மாதங்களில் 75,000 அதிக மக்கள் இடம்பெயர்ந்து மிகவும் நெருக்கடியான நிலையில் வாழ்வதாக ஐநா அறிவித்துள்ளது. இதற்கிடையே விடுதலைப்புலிகளின் முழங்காவில் தளத்தைக் கைப்பற்றிய சிறீலங்காப் படையினர் கிளிநொச்சி நகரில் இருந்து வெறும் 15 கிலோமீற்றர்கள் தொலைவிலேயே நிலைகொண்டுள்ளதாக படைத்தரப்பு பிபிசிக்குத் தெரிவித்துள்ளது..! http://news.bbc.co.uk/1/hi/world/south_asia/7560052.stm
-
- 16 replies
- 4.1k views
-
-
சிறிலங்காவுக்கு போர்க் கருவிகளோ ஆயுதங்களோ இந்தியா அனுப்பவில்லை என்று பிரதமரும் அமைச்சர்களும் எப்போதோ தெரிவித்துவிட்டனர் என்று தமிழ்நாடு முதலமைச்சர் கலைஞர் மு.கருணாநிதி தெரிவித்துள்ளார். சென்னையில் உள்ள தலைமைச் செயலகத்தில் ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்கு முதலமைச்சர் கருணாநிதி நேற்று சனிக்கிழமை பதிலளித்தார். இலங்கை தொடர்பாக கேட்கப்பட்ட கேள்விகளுக்கு அவர் அளித்த பதில்கள் வருமாறு: போர் முடிந்து இலங்கையிலே பல மாதங்கள் ஆன போதிலும், இன்னும் மூன்று லட்சம் தமிழர்கள் திறந்தவெளி சிறைச்சாலையில் வாழ்கிற சூழ்நிலை பற்றி இந்திய அரசுக்கு நீங்கள் வலியுறுத்துவீர்களா? பதில்: நாங்கள் இந்திய அரசுக்கு தொடர்ந்து வலியுறுத்தி கொண்டு வருகிறோம். இந்திய அரசு இதிலே இன்னும் அதிகமாக…
-
- 16 replies
- 1.6k views
-
-
வரும் 8ம் நாள் நடக்கவுள்ள ஜனாதிபதி தேர்தல் எதிரணியின் பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனாவின் உருவத்தை கொண்ட ஏ. ஆர் சிறிசேனா என்ற ஒருவரின் படத்தினையும் கொடிச்சின்னத்தினையும் இன்று காலை யாழ்ப்பாணத்திலிருந்து வெளிவரும் அனைத்து பத்திரிகைகளிலும் குறித்த விளம்பரம் முன்பக்கத்தில் பாரியளவில் பிரசுரிக்கப்பட்டுள்ளது. http://www.pathivu.com/news/36637/57//d,article_full.aspx
-
- 16 replies
- 1.6k views
-
-
சிறீபதி சூரியாராச்சி கைது முன்னால் அமைச்சர் சிறீபதி சூரியாராச்சி கைது செய்யப் பட்டதாக சக்தி fM செய்திகள் தெரிவிக்கின்றன
-
- 16 replies
- 2.9k views
-