ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142782 topics in this forum
-
'சிறிலங்கா சிங்களபவுத்தநாடு, தமிழர்களே உங்களுக்கு இங்கு உரிமை இல்லை' என்று அண்மையில் சிங்கள இராணுவத்தளபதியும், சிங்கள பிரதம மந்திரியும் கூறிய கருத்தால் சிங்களத்துடன் ஒட்டி இருந்து கொண்டு, சிங்களம் தமிழர்களுக்கான உரிமைகளை வழங்கப் போகிறது என்ற பசப்பு வார்த்தைகளை வீசியபடி, தமிழின ஒழிப்பிற்கு சிங்களத்துக்கு துணை போகும் தமிழ் ஒட்டுக்குழுக்கள், தங்களை "மெள்ளவும் முடியாமல், விழுங்கவும் முடியாமல்" தர்மசங்கடமான நிலைக்கு தள்ளி இருப்பதாக தெரிவித்திருக்கின்றன. சிங்கள இராணுவத்தளபதியும், சிங்கள பிரதம மந்திரியும் கூறிய கருத்துக்கள் எந்த ஒரு மானமுள்ள ஈழத்தமிழனையும் அதிர்ச்சிக்கோ அல்லது ஆச்சரியத்திற்கோ கொண்டு செல்லவில்லை. கடந்த 60 ஆண்டுகளாக ஈழத்தமிழன் சிங்கள இனவெறி மிருகங்களிடமிருந்…
-
- 2 replies
- 2.6k views
-
-
விடுதலைப்புலிகள் கள்ளத்தோணியில் இந்தியா வந்துள்ளனர். அவர்களது ஆதரவாளர்களால் தமிழகத்தின் பாதுகாப்புக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. இது தொடர்பாக மத்திய உள்விவகாரத்துறை இணை செயலாளர் தர்மேந்திர சர்மா வெளியிட்டுள்ள அறிவிக்கையில், ’’தமிழகத்தில் தடை விதிக்கப்பட்டிருந்தும், இலங்கையில் நிலவும் கொந்தளிப்பை பயன்படுத்தி விடுதலைப்புலிகள் இயக்கத்துக்கு ஆதரவு திரட்ட அதன் ஆதரவு அமைப்புகள், ஊர்வலங்கள், ஆர்ப்பாட்டங்கள் நடத்தி அமைதியற்ற நிலையை ஏற்படுத்தி, தமிழகத்துக்கு ஒரு பாதுகாப்பற்ற நிலையை ஏற்படுத்தியுள்ளனர். இலங்கையில் பெரும்பாலான விடுதலைப்புலிகள் கொல்லப்பட்டுவிட்டாலும், எஞ்சியுள்ள போராளிகளும், தலைவர்களும், அவர்களது லட்சியமான தமிழ் ஈழத்தை …
-
- 21 replies
- 2.6k views
-
-
(Chris Ryan)கிருஸ் ரையனை இராணுவ மற்றும் போலீஸ் மட்டத்தில் தெரியாதவர்கள் யாரும் இருக்கமாட்டார்கள். உலகப் புகழ்பெற்ற மற்றும் பரபரப்பாகப் பேசப்படும் இவரது இராணுவப் பயிற்சிகள் மற்றும் நூல்கள் என்பன உலகப்பிரசித்தி வாய்ந்தவை. தற்போது இவர் தாமாகவே முன்வந்து, இலங்கை அதிரடிப்படையினருக்கு தாமே பயிற்சிகளை வழங்கியிருப்பதாகத் தெரிவித்து பெரும் அதிர்ச்சியை தோற்றுவித்துள்ளார். காணொளிகளுடன் கூடிய இராணுவ பயிற்றுவிப்புகளை படமாக்கி, தான் எவ்வாறு இலங்கை இராணுவத்தையும், அதிரடிப்படையினரையும் போருக்கு தயார்செய்தார் என்பதை விளக்கும் காட்சிகளாக பிரசுரித்துள்ளார் கிருஸ்.விடுதலைப் புலிகளுடனான போரின் போது பல வெளிநாட்டு அரசாங்கங்கள் உதவிபுரிந்தது யாவரும் அறிந்த உண்மை இருப்பினும் தனிப்பட்ட ர…
-
- 3 replies
- 2.6k views
-
-
வெறும் தற்கொலை என்று மட்டுமே அனைத்து ஊடகங்களும், உயிரிழப்புடன் சம்பந்தப்பட்டவர்களும் முடித்து விட்ட யாழ் பல்கலைக்கழக மாணவியின் கொலை தொடர்பாகப் பல திடுக்கிடும் விடயங்கள் கிடைத்துள்ளது. முள்ளிவாய்க்காலில் தப்பி வந்த போதும் யாழ் பல்கலைக்கழகத்தின் இரக்கமற்ற மனங்களில் இருந்து தப்பிவிட முடியவில்லை என்ற நிலைதான் அனேக வன்னி மாணவர்களுக்கு ஏற்பட்டுள்ளது. இரக்கத்தனமற்ற பகிடிவதை, அதற்கும் அப்பால் மாணவர்களை தற்கொலை வரை தூண்டும் பல்கலைக்கழக நிர்வாகத்தின் கீழ்த்தரமான நடவடிக்கைகள் என கொடுமைகள் நீண்டு செல்கின்றன. கடந்த வாரத்திலும் இதற்கு உதாரணமான சம்பவங்கள் உண்டு.பெளஜிகா என்ற யாழ்.பல்கலைக் கழகத்தின் 3ம் வருட பொருளியல் துறை மாணவி தற்கொலை செய்து கொண்டதாக தகவல்கள் நேற்று வெளிவந்தன. இ…
-
- 17 replies
- 2.6k views
-
-
"இது தமிழர்களை இழிவு படுத்தும் படம்" - படம் பார்த்து விட்டுச் சீறிய தமிழ் ஆர்வலர்கள் விடுதலைப்புலிகளை எதிர்த்து ஒரு சினிமா. சூடேறும் இலங்கை அரசியல்!’ என்ற தலைப்பில் கடந்த 13.02.08 குமுதம் ரிப்போர்ட்டர் இதழில் ஒரு கவர் ஸ்டோரி வெளியிட்டிருந்தோம். அதன் தொடர்ச்சியாக இவ்வளவு விறுவிறு சம்பவங்கள் நடக்கும் என்று நாமே எதிர்பார்க்கவில்லை. அந்தப் படத்தின் பெயர் மட்டும்தான் ‘பிரபாகரன்’. ஆனால், அது முழுக்க முழுக்க இலங்கை அரசின் பரிபூரண ஆசியோடு, புலிகளுக்கு எதிராக உருவாக்கப்பட்ட படம் என்ற சந்தேகம் ஆரம்பத்திலேயே பலருக்கு இருந்தது. அந்தப் படத்தை இயக்கிய சிங்கள இயக்குனர் துவாசா பெரிஷ§க்கு ரொம்பத்தான் துணிச்சல். படத்தின் இறுதி எடிட்டிங்கை முடித்து, ஐம்பதுக்கும் மேற்பட்ட பிரிண்டு…
-
- 3 replies
- 2.6k views
-
-
ஆலயங்களில் மிருக பலிக்கு முற்றாக தடை: யாழ் மேல் நீதிமன்று அதிரடி உத்தரவு யாழ் குடாநாட்டு எல்லைக்குட்பட்ட இந்து ஆலயங்களில் மிருகங்கள் பலியிடப்படுவதற்கு முற்றாக தடை விதித்து யாழ் நீதி மன்று நேற்று தீர்ப்பளித்துள்ளது. அகில இலங்கை சைவ மகா சபையினால் ஆலயங்களில் வேள்விகளை தடுத்து நிறுத்த இடைக்கால உத்தரவு பிறப்பிக்குமாறு கோரி மனு தாக்கல் செய்யப்பட்டது. இதற்கு யாழ். மேல் நீதிமன்றம் கடந்த வருடம் ஏப்ரல் மாதம் 01 ஆம் திகதி இடைக்காலத் தடையுத்தரவு ஒன்றை பிறப்பித்தது. இந் நிலையில் குறித்த மனு மீதான விசாரணை இன்று மேல் நீதிமன்றத்தில் எடுத்துக்கொள்ளப்பட்ட போதே நீதிபதி இளஞ்செழியன் இந்த உத்தரவை பிறப்பித்தாா். http…
-
- 27 replies
- 2.6k views
-
-
யாழ்.பல்கலைக் கழகத்தில் பொலித்தீனுக்கு தடை July 29, 2019 யாழ்.பல்கலைக் கழகத்தில் பொலித்தீன் பாவனைகளை தடை செய்ய தீர்மானித்துள்ளதாக பல்கலை கல்வி சமூகம் தெரிவித்துள்ளது. அது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில் , உக்க கூடிய பொருட்களை பயன்படுத்துவதன் மூலம் சூழல் சமநிலையை பேண முடியும். அதன் மூலம் உள்ளூர் உற்பத்திகளையும் ஊக்குவிக்க முடியும். அதன் மூலம் பொலித்தீன் பாவனையை கட்டுப்படுத்த முடியும். இந்த செயற்பாட்டை மாணவர்கள் மத்தியில் இருந்து ஆரம்பிக்கவுள்ளோம். அதற்கு மாணவர்கள் பூரண ஆதரவை தருவதற்கு முன் வந்துள்ளனர்.அந்த வகையில் எதிர்வரும் 15 ஆம் திகதி முதல் சிற்றுண்டி சாலையில் பொலித்தீன் பாவனையை இல்லாமல் செய்து அதற்கு மாற்றீடாக வாழையிலை , தாமரையிலை ஆக்கியவற்றை பயன…
-
- 17 replies
- 2.6k views
- 1 follower
-
-
2012 லண்டன் ஒலிம்பிக் துவக்கவிழாவிற்கு இலங்கை ரூபாவாகினிக் கூட்டுத்தாபன குழுவினருக்கு அனுமதி இல்லை: 27 ஜூலை 2012 2012 லண்டன் ஒலிம்பிக் துவக்கவிழாவிற்கு இலங்கை ரூபாவாகினிக் கூட்டுத்தாபன குழுவினருக்கு அனுமதி இல்லை:- 2012 லண்டன் ஒலிம்பிக் துவக்கவிழாவான இன்று இலங்கை அரசாங்கத்தின் உத்தியோகபூர்வ தொலைக்காட்சியான ரூபவாகினிக் கூட்டுத்தாபனத்தின் ஊடகவியலாளர்கள் ஒலிம்பிக் அரங்கிற்கு அனுமதிக்கப்படவில்லை என தகவல்கள் வெளியாகி உள்ளன. ஒலிம்பிக் தொடக்க விழாவை இலங்கை நேயர்களுக்கு ஒளிபரப்பவும் செய்திகளை அனுப்பவும் பிரித்தானியாவுக்கு விஜயம் மேற்கொண்டுள்ள தொலைக்காட்சிக் குழுவினர் ஒலிம்பிக் ஆரம்பவிழாவிற்கு அனுமதிக்கவில்லை என தெரியவருகிறது. எனினும் இதற்கான உத்தியோகபூ…
-
- 16 replies
- 2.6k views
-
-
வடமாகாணம் இந்திய அரசால் எவ்வாறு கவனிக்கப்படுகின்றதோ, அதுபோன்று கிழக்கு மாகாணத்திலும் தமிழ், முஸ்லிம் மக்களை இந்தியா கவனிக்கும் என்று இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் கூறியுள்ளதாக கிழக்கு மாகாண முதலமைச்சரின் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. இலங்கைக்கு உத்தியோக பூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸை சந்தித்து கலந்துரையாடினார். இதற்கான சந்திப்பு கொழும்பு தாஜ் சமுத்திரா ஹோட்டலில் நேற்று நடைபெற்றது. அதன்போதே இந்த உறுதிமொழியை வழங்கியுள்ளார். இந்த சந்திப்பில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் நகர அபிவிருத்தி, நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு அமைச்சருமான ரவூப் ஹக்கீம், கட்சியின் செயலாளர் சுகா…
-
- 28 replies
- 2.6k views
-
-
சிறீலங்காவில் தொடரும் வன்முறைகள்: அமெரிக்கா கவனத்தில் எடுக்கும் சிறீலங்காவில் தொடர்ச்சியாக இடம்பெறும் கடுமையான மனித உரிமை மீறல்களோடு, குற்றவாளிகளை சட்டத்தின் முன் நிறுத்துவதிலும் எவ்விதமான முன்னேற்றமும் தென்படவில்லை என சிறீலங்காவிற்கான அமெரிக்க தூதுவர் இன்று தெரிவித்துள்ளார். சிறீலங்கா அரசு ஒருதலைப்பட்சமாக போர் நிறுத்த ஒப்பந்தத்தில் விலகியதையும் அமெரிக்கா கவனத்தில் எடுத்திருப்பதாக மனித உரிமை மீறல்கள் பற்றி நடாத்தப்பட்ட சர்வதேச கருத்தரங்கில் பங்காற்றி உரையாற்றியபோது மேற் கண்ட கருத்துக்களை அமெரிக்க தூதுவர் ரொபேர்ட் முகாபே தெரிவித்துள்ளார். சிறீலங்காவில் கடுமையான மனித உரிமை மீறல் காரணமாக கடந்த வாரம் சிறீலங்காவிற்கான பாதுகாப்பு ஆயுதங்களை இறக்குமதி செய்வதற்க…
-
- 13 replies
- 2.6k views
-
-
வன்னியில் பணிபுரிந்த பெண் ஊடகவியலாளரான இசைப்பிரியாவின் கொடூரமான படுகொலை தொடர்பாக வெளிவந்திருக்கம் புதிய தகவல்கள் இது ஒரு அப்பட்டமான போர்க் குற்றம் என்பதை உறுதிப்படுத்துவதாக அமைந்திருக்கின்றது என இது தொடர்பான தகவல்களைச் சேகரிக்கும் ஐரோப்பிய ஊடக வட்டாரங்கள் தெரிவித்தன. 27 வயதான 'சோபா' எனப்படும் இசைப்பிரியா விடுதலைப் புலிகள் அமைப்பிடம் ஆயுதப் பயிற்சிகள் எதனையும் பெற்றுக்கொள்ளாத ஒருவர் என்பதுடன், இருதய நோயினால் பாதிக்கப்பட்ட நோயாளியாக அவர் இருந்தமையால் ஊடகத் துறையிலேயே அவர் தொடர்ந்து பணிபுரிந்து வந்ததாகக் கூறப்படுகிறது. வன்னிப் பகுதிக்கு விஜயம் செய்த அமெரிக்க மற்றும் அவுஸ்திரேலிய மருத்துவக்குழுவினரிடம் இவர் தன்னுடைய இருதய நோய் தொடர்பிலான மருத்துவ பரிசோத…
-
- 4 replies
- 2.6k views
-
-
எமது கட்சியில் இருந்து நீக்கப்பட்ட வி.மணிவண்ணனை ஆதரித்து, கட்சியின் கொள்கைக்கு துரோகம் செய்த யாழ்ப்பாணம் மாநகர சபையின் 10 உறுப்பினர்களும் கட்சியில் இருந்து நீக்கப்படுவார்கள் என்று கஜேந்திரகுமார் பொன்னம்பலம் இன்று (30) சற்றுமுன் தெரிவித்துள்ளார். அத்துடன் மணிவண்ணனை ஆதரித்ததன் மூலம் கட்சியின் கொள்கைக்கு துரோகம் இழைத்து, யாழ்ப்பணம் மாநகர சபையின் எமது கட்சியை பிரதிநித்துவப்படுத்தும் உறுப்பினர்கள் பத்துப்பேர் டக்ளஸ் தேவானந்தாவுடன், கைகோர்த்து கட்டிப்பிடித்துக் கொண்டுள்ளனர். அவர்களை எமது இயக்கத்தில் இருந்து நீக்குவோம் என்றும் அவர் தெரிவித்தார். டக்ளஸை கட்டிப்பிடித்துக் கொண்டு இருக்கும் 10 பேரும் கட்சியில் இருந்து நீக்கப்படுவார்கள்! | NewUthayan
-
- 27 replies
- 2.6k views
- 1 follower
-
-
பயங்கரவாதம் என்ற போர்வையில் தனி நாட்டை அமைக்க புலிகள் முயற்சித்தால் கிள்ளி எறிவோம் சபையில் அமைச்சர் மங்கள சூளுரை இனப்பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்கு அரசாங்கம் முன்னுரிமை வழங்கி வருகின்றது. இருந்தபோதிலும் பயங்கரவாத செயற்பாடுகளை புலிகள் கைவிடவில்லை. பயங்கரவாதம் என்ற போர்வையில் தனிநாட்டை அமைக்கும் முயற்சியில் புலிகள் ஈடுபடுவார்களேயானால் அதனை கிள்ளி எறிவதற்கும் அரசாங்கம் தயங்காது என்று வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்தார். சமாதான நடவடிக்கைகள் புலிகளின் கைகளிலேயே தங்கியுள்ளது. விடுதலைப் புலிகளின் செயற்பாடுகளை சர்வதேச சமூகம் அங்கீகரிக்காது. பேச்சு மூலம் தீர்வு காண்பதற்கு அரசாங்கம் தயாராகவே உள்ளது என்றும் அவர் மேலும் கூறினார். வரவு செலவுத் திட்டம் தொடர்பான வ…
-
- 8 replies
- 2.6k views
-
-
500 அடி உயரத்தில் பறந்த விடுதலைப் புலிகளின் வானூர்திகள். கட்டுநாயக்க வான்படைத் தளம் மீது தாக்குதல் நடத்திய விடுதலைப் புலிகளின் வானூர்திகள், புத்தளம் மாவட்டத்தில் உள்ள வில்பத்து காட்டுப்பகுதிக்கு மேலாக தெற்கு நோக்கி பறந்து சென்றதனை கண்டதாக வில்பத்து சரணாலயப் பகுதியில் உள்ள ஒலுமடுவப் பகுதியில் வசிக்கும் மக்களும் ஊர்காவல் படையினரும் தெரிவித்திருக்கின்றனர். இது தொடர்பில் அவர்கள் தெரிவித்துள்ளதாவது: இரு வானூர்திகளும் நில மட்டத்தில் இருந்து 500 தொடக்கம் 600 அடி உயரத்தில் பறந்து சென்றன. அவை எழுப்பிய ஓசைகள் மிகவும் அதிகமாகவும் ஏனைய விமானங்களில் இருந்து வேறுபட்டதாகவும் இருந்தன. நாங்கள் கண்ட வானூர்திகள் விடுதலைப் புலிகளின் வானூர்திகளாக இருக்கலாம் என்ற சந்தே…
-
- 8 replies
- 2.6k views
-
-
யாழ்.இந்து ஆரம்ப பாடசாலையின் நூற்றாண்டு விழா பேரணி யாழ். இந்து ஆரம்ப பாடசாலையின் நூற்றாண்டு விழாவின் ஆரம்ப நிகழ்வு இன்று காலை நடைபெற்றது. இன்று இடம்பெற்ற நுற்றாண்டு விழா பேரணியில் அதிபர், முன்னாள் அதிபர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள், பழைய மாணவர்கள், நலன்விரும்பிகள் என பலரும் கலந்து கொண்டனர். பாடசாலை முன்றிலில் இருந்து காலை 7 மணிக்கு ஆரம்பமான பேரணி அரசடி வீதி - கே.கே.எஸ்.வீதி - கன்னாதிட்டி வீதி - கஸ்தூரியார் வீதி - நாவலர் வீதி - பிறவுண் வீதி - மீண்டும் அரசடி வீதி வழியாக பாடசாலை மைதானத்தை அடைந்தது. இன்றைய பேரணியில் மாணவர்களின் ஒயிலாட்டம், மயிலாட்டம, குதிரையாட்டம், செம்பு நடனம் போன்ற பல்வேறு கலை நிகழ்வுகளும் இடம்பெற்றன. …
-
- 12 replies
- 2.6k views
-
-
கட்டுநாயக்க விமானப்படைத் தளத்தையும், கொழும்பில் விமானப்படையின் தலைமையகத்தையும் தாக்குவதற்கு மீண்டும் ஒரு முறை தமிழீழ விடுதலைப் புலிகள் மேற்கொண்ட திறமை மிக்க முயற்சி அதிர்ச்சியைத் தந்துள்ளது என கேணல் ஆர்.ஹரிஹரன் தெரிவித்துள்ளார். புலிகளின் இரண்டு இலகு ரக விமானங்களின் மூலம் துணிகரம்மிக்க முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். கேணல் ஹரிஹரன் தெற்காசியா தொடர்பான இராணுவப் புலனாய்வுப் பிரிவின் நிபுணத்துவம்மிக்க ஒருவராவார். தற்போது ஓய்வு பெற்றுள்ள அவர் 1987 முதல் 1990 வரையான காலப்பகுதியில் இலங்கையில் இந்திய அமைதிகாக்கும் படையின் புலனாய்வுத்துறை அதிகாரியாகப் பணியாற்றியுள்ளார். அவர் மேலும் கூறுகையில், கடந்த 20 ஆம் திகதி இரவு 9.45 மணியளவில் கட்டுந…
-
- 4 replies
- 2.6k views
-
-
(எச்சரிக்கை: கண்டிப்பாக இளகிய மனமுடயவர்கள் இதில் உள்ள காணொளியைப் பார்க்க வேண்டாம்) உலகம் இன்று சிரித்துக் கொண்டிருக்கிறது. ஏன் தெரியுமா? புலிகள் அழிகிறார்கள் என்றும்?? பயங்கரவாதம் என்ற ஒன்று வேரோடு ஒழிக்கப்படுகிறது என்றும், இனிமேல் யாருமே உலகில் தனி நாடு கேட்டுப் போராடமாட்டார்கள் எனும் துணிவிலும் உலகம் இன்று இலங்கை அரசின் பயங்கரவாத ஒழிப்பு நடவடிக்கைகளை உற்றுப் பார்த்து உதவிகள் பல வழங்கி ஊமையாயிருக்கிறதாம். புலிகள் ஒழிகிறார்கள் என்ற போர்வையில் இன்று அழிந்து கொண்டிருப்பது அப்பாவித் தமிழ் மக்கள்? அந்த அப்பாவிகள் யார்? இடம்பெயர்ந்து இனியும் ஓட இடமின்றி ‘பிறந்த மண்ணிற்குப் போவதற்குப் பாஸ் எடுப்பதிலும் பார்க்க இறந்து படல் மேல்’ என்ற இறுமாப்போடு இருக்கின்ற பாதுகாப…
-
- 4 replies
- 2.6k views
-
-
இந்திய றோவின் மாறுவேடம் . மேலதிக விவரங்களுக்கு http://www.athirvu.com/target_news.php?sub...amp;ucat=3& நன்றி அதிர்வு
-
- 8 replies
- 2.6k views
-
-
-
உலகத்தமிழர்களே சிங்கள அரச படைகளின் தமிழ் இனப்படுகொலைக்கு எதிராக கிளர்ந்தெளுங்கள். ஜ ஞாயிற்றுக்கிழமைஇ 13 ஆகஸ்ட் 2006 ஸ ஜ மௌலானா ஸ உலகம் எங்கும் வாழும் ஈழத்தமிழர்களே கிளர்ந்தெளுங்கள் எங்கள் ஈழத்தமிழர்களின் உறவுகள் யாழ் குடாநாட்டில் ஊரடங்கு சட்டம் என்று கூறிக்கொண்டு இலங்கை இராணுவம் இனப்படுகொலைகளை தமிழ்மக்கள் மீது கட்டவிழ்த்;துவிடுவதற்கு பாரிய முயற்சியை செய்து கொண்டு இருக்கிறது. இதன் முதல் கட்டமாக யாழ் குடாநாட்டில் கைத் தொலைபேசிகளை செயலிழக்க செய்துள்ளது. மின்சாரம் துண்டிக்கபட்டுள்ளது. மக்களை வீடுகளுக்கு வெளியே வரவிடாமல் தடுக்கின்றது. தமது படையினரின் பாதுகாப்பு அரணாக யாழ் குடாநாட்டு மக்களை இலங்கை அரசு பயன்படுத்துகின்றது. தற்போது முகமாலையில் இருந்த படையினர் தப்பி ஓடி…
-
- 10 replies
- 2.6k views
-
-
திருமலை மாவீரர் துயிலும் இல்லம் சிறிலங்கா இராணுவத்தினரால் சிதைப்பு திருகோணமலை, மூதூர் கிழக்கு ஆலங்குளத்தில் உள்ள மாவீரர் துயிலும் இல்லத்தை சிறிலங்கா இராணுவத்தினர் சிதைத்து அழித்துள்ளனர். கனரக ஆயுத தளவாடங்கள் மற்றும் இராணுவத் தாங்கிகள் உதவியுடன், இந்த மாவீரர் துயிலும் இல்லத்திற்குள் கடந்த நவம்பர் 25 ஆம் நாள் நுழைந்த இராணுவத்தினர், மிக மோசமான அழிவுகளை ஏற்படுத்தியுள்ளனர். இந்த ஈன இரக்கமற்ற தாக்குதலை உறுதிப்படுத்திய திருகோணமலை மாவட்ட அரசியல்துறைப் பொறுப்பாளர் சி.எழிலன், நாகரிகமடைந்துள்ள தற்போதைய உலகில், எந்த நாட்டின் இராணுவமும் இத்தகைய கேவலமான செயலில் ஈடுபடாது என்றும் தெரிவித்தார். மாவீரர் நாள் கடைப்பிடிப்பிற்கு இரு நாட்களே இருந்த நிலையில், திட்…
-
- 13 replies
- 2.6k views
-
-
பிரதமருக்கு கறுப்புக் கொடி : பழ.நெடுமாறன் உட்பட 300 பேர் கைது on 08-01-2009 04:08 Published in : செய்திகள், தமிழகம் சென்னையில் நடைபெறும் வெளிநாடு இந்தியர் மாநாட்டில் கலந்து கொள்வதற்காக சென்னை வந்துள்ள பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு கறுப்புக் கொடி காட்ட முயன்ற தமிழர் தேசிய இயக்க தலைவர் பழ.நெடுமாறன் உட்ப்ட 300 பேர் கைது செய்யப்பட்டனர். ஈழத் தமிழர் பிரச்சனையில் அக்கறை காட்டாத பிரதமரை கண்டித்து கறுப்புக் கொடி காட்டப் போவதாக ப்ழ.நெடுமாறன் முன்னரே அறிவித்திருந்தார். adhikaalai
-
- 3 replies
- 2.6k views
-
-
http://www.yarl.com/files/110614_ravi_uk.mp3
-
- 12 replies
- 2.6k views
- 1 follower
-
-
சிறிலங்காவின் அகோர போர் வெறியினால் வன்னியிலே மக்கள் தாங்கொணா வேதனையை அனுபவிப்பதால் பொங்கல் திருநாள் கொண்டாட்டங்கள் அனைத்தையும் நிறுத்துமாறு புலம்பெயர் ஈழத்தமிழர் அமைப்பு கோரியுள்ளது. இதன் அமெரிக்கா, ஐரோப்பிய, அவுஸ்திரேலியப் பிரதிநிதிகள் நேற்று இவ்வேண்டுகோளை விடுத்துள்ளனர். மக்கள் மிகநெருக்கமாகக் குவிந்துள்ள வன்னிப்பகுதி மீதான கடும் தாக்குதல்களுக்கு சிறிலங்காவின் ஒட்டுமொத்த இராணுவமும் தயாராகி வரும்வேளையில், அவ்வமைப்பின் பிரதிநிதிகள் விடுத்துள்ள வேண்டுகோளில் மேலும் தெரிவிக்கப் பட்டுள்ளதாவது, "வன்னியிலுள்ள தமிழ் மக்கள் மீதான சிறிலங்கா இராணுவத்தின் இன அழிப்புத் தாக்குதலைத் தடுக்கக்கூடிய அழுத்தம் தமிழ்நாட்டிலிருந்து மட்டுமே வரமுடியும். சிறிலங்காவினால் நடத்தப்படும் இன…
-
- 9 replies
- 2.6k views
-
-
மன்னார் கட்டையடம்பன் பகுதியில் ஆழ ஊடுருவும் படையணியினர் மீது நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை மாலை விடுதலைப் புலிகள் நடத்திய தாக்குதலில் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார். ஞாயிற்றுக்கிழமை காலை ஒட்டுசுட்டான் பகுதியில் ஆழ ஊடுருவும் படையினர் நடத்திய தாக்குதலில் இரு பொதுமக்கள் கொல்லப்பட்டதுடன் முழங்காவில் முட்கொம்பன் பகுதியில் இவர்கள் நடத்திய கிளேமோர் தாக்குதலில் அம்புலன்ஸ் சாரதியொருவர் படுகாயமடைந்தார். மன்னார் கட்டையடம்பன் பகுதியில் பொதுமக்கள் மீது தாக்குதலை நடத்தும் நோக்கில் ஊடுருவிய ஆழு ஊடுருவும் படையினர் மீது தாங்கள் நடத்திய தாக்குதலில் ஒருவர் கொல்லப்பட்டதுடன் மற்றொருவர் படுகாயம் அடைந்துள்ளதாக புலிகள் தெரிவித்துள்ளனர். இந்தத் தாக்குதலில் கொல்லப்பட்ட இராணுவச் சிப…
-
- 0 replies
- 2.6k views
-