Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. வீடுகளுக்கு பொலிஸ் பாதுகாப்பு -செல்வநாயகம் கபிலன் அச்சுவேலி தெற்கு மற்றும் நவக்கிரி பகுதியில் 3 வீடுகள் இடம்பெற்ற கொள்ளைச் சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டு, விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள சந்தேகநபர்களின் சகாக்களால், வீட்டு உரிமையாளர்களுக்கு அச்சுறுத்தல் இருப்பதால் அவர்களின் வீடுகளுக்கு பாதுகாப்பு வழங்குமாறு மல்லாகம் நீதவான் நீதிமன்ற நீதவான் ரீ.கருணாகரன், அச்சுவேலிப் பொலிஸாருக்கு திங்கட்கிழமை (18) உத்தரவிட்டார். மேலும், கொள்ளைச் சம்பவம் தொடர்பில் கைதாகிய சந்தேகநபர்களை எதிர்வரும் மே மாதம் 2ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்கவும் நீதவான் உத்தரவிட்டார். மூன்று வீடுகளில் 2 மில்லியன் ரூபாய் பெறுமதியான ந…

  2. கொழும்பில் இடம்பெற்ற 15ஆவது சார்க் மாநாட்டில் கலந்து கொள்வதற்காக வருகை தந்திருந்த இந்தியாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே.நாராயணன் அரசாங்கத்தின் பாதுகாப்பு நடவடிக்கைகளில் கொண்டிருந்த திடமான நம்பிக்கையின் காரணமாகவே வாடகைக் காரின் மூலம் ஹோட்டலுக்கு புறப்பட்டுச் சென்றார். அத்துடன் இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங்கின் பாதுகாப்பு தொடர்பில் ஏற்பட்ட பிரச்சினையும் அரசாங்கத்தால் மேற்கொள்ளப்பட்ட பாதுகாப்பு நடவடிக்கையின் ஒருவகைத் தந்திரமேயாகும் என்று அரசாங்கத்தின் பாதுகாப்பு விவகாரங்களுக்கான பேச்சாளரும் அமைச்சருமான கெஹெலிய ரம்புக்வெல தெரிவித்தார். தேசிய பாதுகாப்பிற்கான ஊடக மத்திய நிலையத்தில் இன்று வியாழக்கிழமை நடைபெற்ற விஷேட செய்தியாளர் மாநாட்டில் ஊடகவியலாளர் ஒருவர் கேட்ட கேள்வி…

  3. Gavitha இலங்கையிலுள்ள மதரஸக்களையும் காதி நிதிமன்றங்களையும் இல்லாமல் ஒழிப்பதற்கு, தற்போதுள்ள இந்த அரசாங்கம், பொதுத் தேர்தலுக்கு முன்னர் பதிலளிக்கவேண்டும் என, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் வண.அத்துரலிய ரத்தண தேரர் தெரிவித்தார். கொழும்பில் இன்று (12) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில், நாட்டின் தேசிய பாதுகாப்பைக் கருத்தில் கொண்டே, தற்போதைய ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்‌ஷவுக்கு, தேர்தல் காலத்தில் ஆதரவு வழங்கியதாகவும் நாட்டிலுள்ள மதரஸாக்களை இல்லாமல் செய்வதாகவும் காதி நீதிமன்றங்களை இல்லாம் செய்வதாகவும் அப்போது வாக்குறுதி அளிக்கப்பட்டிருந்த நிலையில், ப…

  4. ஐ.தே.க.வுடன் பசில் கூட்டணி பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷ, அயல்நாடொன்றில் உதவியுடன், ஐக்கிய தேசியக் கட்சிக்காக, ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியை பிரிக்கும் சதி முயற்சியொன்றில் ஈடுபட்டுள்ளார் என விளையாட்டுத்துறை அமைச்சர் தயாசிறி ஜயசேகர, தெரிவித்தார். கொழும்பு, டாலி வீதியில் அமைந்துள்ள சு.க.வின் கட்சித் தலைமையகத்தில் இன்று இடம்பெற்ற செய்தியாளர் மாநாடொன்றின் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார். அங்கு தொடர்ந்து உரையாற்றிய அமைச்சர் ஜயசேகர, 'மஹிந்த ராஜபக்ஷ மீது நாம் அன்பு கொண்டுள்ளோம். அதனாலேயே, பசில் ராஜபக்ஷவின் சதித் திட்டத்துக்குள் மூழ்கி ஏமாற்றமடைய வேண்டாம் என்று மஹிந்தவருக்கு கூறுகின்றோம். அவர், சு.க.வின் காலி மேதினக் கூட்டத்துக்க…

  5. யாழில் இருவர் மீது வாள்வெட்டு! நல்லூர் சட்டநாதர் வீதியில் இனந்தெரியாத நபர்கள் இரண்டு இளைஞர்களை வாளால் வெட்டிய கொடூரச் சம்பவம் நேற்று இரவு நடைபெற்றுள்ளது. குறித்த பகுதியில் உள்ள வீடொன்றிற்குள் நுழைவதற்காக இந்த இனந்தெரியாத நபர்கள் இரவு 9.20 மணியளவில் வீட்டின் முன் கதவினை கோடரியால் வெட்டியுள்ளனர். எனினும் வீட்டின் உள்ளே நுழைய முடியாத இனந்தெரியாத நபர்கள், வீட்டை உடைக்கும் முயற்சியினை கைவிட்டு விட்டுச் செல்லும் போது, அந்த வீதியால் ஆட்டோவில் பயணித்த ஆட்டோ சாரதி மீதும், மோட்டார் சைக்கிளில் பயணித்த இளைஞர் மீதும் வாள்வெட்டினை மேற்கொண்டுள்ளனர். மதிவேந்…

  6. தமிழீழ விடுதலைப் புலிகளின் வான்படையினரால் அண்மையில் திருகோணமலை துறைமுகப் பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட வான் குண்டுத் தாக்குதல்கள் நிராயுதபாணிகளாகச் சென்ற படையினரை இலக்கு வைத்து மேற்கொள்ளப்பட்டதாகப் புலனாய்வுத் தகவல்கள் தெரிவிக்கின்றன. நிராயுதபாணிகளாகச் செல்லும் இராணுவப் படையினரை ஏற்றிச் செல்லும் ஜெட்லைனர் என்ற கப்பலை இலக்கு வைத்தே இந்தத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதாக சுட்டிக் காட்டப்படுகிறது. விடுமுறைக் காலத்தை முடித்து மீண்டும் யாழ்ப்பாணப் பிரதேசத்தில் கடமையில் ஈடுபடச் செல்லவிருந்த படையினர் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இலகுரக விமானங்கள் பற்றிய ராடர் தகவல்கள் வழங்கப்பட்ட இரண்டு மூன்று நிமிடங்களில் புலிகள் இந்தத் தாக்குதல்களை மேற்கொண்டுள்ளதாகத் தெரிவிக்கப…

  7. நோர்வேயில் 25 தமிழ் குடும்பங்கள் சாகும் வரையில் உண்ணாவிரதம் 02 அக்டோபர் 2012 நோர்வேயில் சுமார் 25 தமிழ் குடும்பங்கள் சாகும் வரையில் உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர். நோர்வே நலன்புரி அதிகாரிகளினால் பலவந்தமாக அழைத்துச் செல்லப்பட்ட தமது பிள்ளைகளை மீள ஒப்படைக்குமாறு கோரி இந்தத் தமிழ்க் குடும்பங்கள் உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பித்துள்ளன. ஒஸ்லோவின் டொம் கிர்கன் பகுதியில் தமிழ் குடும்பங்கள் இந்த உண்ணாவிராதப் போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர். இந்தியா, பாகிஸ்தான், மத்திய கிழக்கு மற்றும் ஈராக்கிய குடும்பங்களைச் சேர்ந்த பிள்ளைகளும் இவ்வாறு பலவந்தமாக அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர். இந்தக் குடும்பங்களைச் சேர்ந்தவர்களும் தமிழ் பெற்றோரின் போராட்டத்திற்கு ஆதரவளித்த…

  8. வடமாகாணம் கொரோனா அபாய வலயமாகப் பிரகடனப்படுத்தப்படவில்லை March 28, 2020 வடமாகாணம் கொரோனா அபாய வலயமாகப் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளதாக வெளியான தகவiலை ஜனாதிபதி ஊடகப்பிரிவு மறுத்துள்ளது. வட மாகாணம், கொரோனா அபாய வலயமாகப் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளதாக சமூக ஊடகங்களில் தகவல்கள் பரப்பப்பட்டு வந்த நிலையிலேயே இவ்வாறு மாறுப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை கொரோனா பரவக் கூடிய அபாய வலயமாக கொழும்பு, களுத்துறை, கம்பஹா மாவட்டங்களில் அதிகளவான கொரொனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டதன் காரணமாக அம்மாவட்டங்களை அபாய வலயங்களாக அரசாங்கம் பிரகடனப்படுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது #வடமாகாணம் #கொரோனா #அபாயவலயம் http://globaltamilnews.net/2020/13…

    • 1 reply
    • 312 views
  9. அம்பாறை உடும்பன்குள வனப்பகுதியில் சிறிலங்கா சிறப்பு அதிரடிப்படையினருக்கு எதிராக நடத்தப்பட்ட தாக்குதல் சம்பவங்களில் படையினர் நால்வர் கொல்லப்பட்டுள்ளனர். எழு பேர் படுகாயமடைந்துள்ளனர். தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 851 views
  10. மழையால் யாழில் 5 ஆயிரம் பேர் பாதிப்பு (ரி.விரூஷன்) யாழ்ப்பாணத்தில் கடந்த இரு நாட்களாக நிலவும் மழையுடன் கூடிய சீரற்ற காலநிலையால் 5ஆயிரத்து எண்ணுற்றி நான்கு பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ திணைக்களத்தின் யாழ் மாவட்ட உதவிப்பணிப்பாளர் ச.ரவி தெரிவித்துள்ளார். அத்துடன் மழையுடன் கூடிய சீரற்ற காலநிலையினால் 17 வீடுகள் முற்றாகவும் 172 வீடுகள் பகுதியளவிலும் சேதமடைந்துள்ளதாகவும் அவர் புள்ளிவிபரங்களை மேற்கோள்காட்டி தெரிவித்துள்ளார். வங்காளவிரிகூடாவில் ஏற்பட்ட தாழமுக்கத்தால் நாட்டின் சகல இடங்களிலும் பலத்த காற்றுடன் கூடிய மழை பெய்துவருகின்றது. இந்நிலையில் யாழ்ப்பாணதிலும் மக்களின் இயல்பு வாழ்க்கையை பாதித்துள்ளது. இந்ந…

  11. கொரோனா அச்சுறுத்தல் – திருக்கோணேஸ்வரர் ஆலய வருடாந்த திருவிழா ஒத்திவைப்பு கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பஞ்ச ஈஸ்வரங்களில் பாடல் பெற்ற தலமான திருக்கோணேஸ்வரர் ஆலயத்தின் வருடாந்த திருவிழா ஒத்திவைக்கப்பட்டுள்ளது. நாட்டில் நிலவுகின்ற அசாதாரண சூழலைக் கருத்திற்கொண்டு திருக்கோணேஸ்வரர் ஆலய பரிபாலன சபை இந்தத் தீர்மானத்தை எடுத்துள்ளது. தேவார முதலிகளில் முதல்வரான திருஞானசம்பந்தரால் கோணமாமலை அமர்ந்தார் என போற்றிப் பாடப்பட்ட திருக்கோணேஸ்வரர் ஆலயம் வரலாற்று தொன்மைமிக்கதாகும். கிழக்கின் அடையாளச்சின்னமாக விளங்கும் இந்த பாரம்பரிய திருத்தலத்தின் வருடாந்த திருவிழா பங்குனி உத்தரமான எதிர்வரும் 6ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமாக இருந்தது. எனினும்,கொரோனா தொற்று அச்சத்தால் …

    • 1 reply
    • 282 views
  12. உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 93 ஆக உயர்வு நாட்டில் ஏற்­பட்ட சீரற்ற கால­நி­லை­யினால் பாதிக்கப்­பட்ட மக்­களின் தொகை 2 இலட்­சத்து 88 ஆயி­ரத்து 768ஆக குறை­வ­டைந்­துள்­ளது. அத்துடன் 41ஆயி­ரத்து 460 குடும்­பங்­களை சேர்ந்த ஒரு இலட்­சத்து 85 ஆயி­ரத்து 933 பேர்கள் இன்னும் தற்­கா­லிக முகாம்­களில் தங்­க­வைக்­கப்­பட்­டுள்­ளனர். மேலும் நாட­ளா­விய ரீதியில் அனர்த்­தங்­களில் சிக்கி உயி­ரி­ழந்­தோரின் எண்­ணிக்கை 93ஆக அதி­க­ரித்­துள்­ள­து என்று அனர்த்த முகா­மைத்­துவ மத்­திய நிலையம் தெரி­வித்­துள்­ளது. கடந்த ஒரு­வார கால­மாக நாட்டில் நில­விய சீரற்ற கால­நி­லையின் கார­ண­மாக நாட­ளா­விய ரீதியில் பல்­வேறு பாதிப்­புகள் ஏற்­பட்­டி­ருந்­தன. இந்த நிலை­மைகள் தொடர்பில் தக­வல்கள் வெள…

  13. மீண்டும் வீட்டிலிருந்து பணியாற்றும் வாரம் ஆரம்பம் Editorial / 2020 ஏப்ரல் 06 , மு.ப. 08:06 - 0 - 23 இன்று (06) முதல் எதிர்வரும் 10 ஆம் திகதி வரையான காலப்பகுதி, மீண்டும் வீட்டிலிருந்து பணியாற்றும் வாரமாக அறிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா தொற்று காரணமாக கடந்த மாதம் 20 ஆம் திகதி முதல் 27 ஆம் திகதி வரையான காலப்பகுதி வீட்டிலிருந்து பணியாற்றும் வாரமாக முதல் முறையான பிரகடனப்படுத்தப்பட்டிருந்தது. பின்னர், கடந்த மாதம் 30 ஆம் திகதி முதல் ஏப்ரல் மாதம் 3 ஆம் திகதி வரை மீண்டும் வீட்டிலிருந்து பணியாற்றும் வாரமாக அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில், இன்று முதல் வீட்டிலிருந்து பணியாற்றும் மூன்றாவது வாரம் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. http://www.tamilmirror.lk/செ…

    • 4 replies
    • 413 views
  14. தமிழ்நாட்டில் உள்ள திராவிடர் கழகத்தினால் அறிவிக்கப்பட்டிருந்த தொடருந்து மறியல் போராட்டம் தமிழ்நாடு காவல்துறையால் தடைசெய்யப்பட்டு போராட்டத்தில் கலந்துகொள்ள அணிதிரண்டோர் அனைவரும் கைது செய்யப்பட்டதால் இன்று சென்னையில் பரபரப்பு ஏற்பட்டது. ஏற்கனவே அறிவித்திருந்தபடி இன்று செவ்வாய்க்கிழமை காலையிலிருந்தே தொடருந்து மறியல் போராட்டத்தில் பங்கேற்க தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலிருந்தும் திராவிடர் கழகத்தினர் சென்னை - வேப்பேரியில் அமைந்துள்ள பெரியார் திடலில் குவிந்தனர். இவர்களுடன் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் அமைப்பினர் போன்ற அமைப்புக்களைச் சேர்ந்தவர்களும் பங்கேற்க வந்திருந்தனர். பெரியார் திடலிலிருந்து திராவிடர் கழகத்தின் தலைவர…

  15. 16 Nov, 2025 | 06:15 PM ஆயுதப்படைகளின் நினைவேந்தல் மற்றும் பொப்பி மலர் தின அனுஷ்டிப்பு பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தலைமையில் ஞாயிற்றுக்கிழமை (16) கொழும்பு விஹாரமகாதேவி பூங்காவில் நிறுவப்பட்டிருக்கும் முதலாம் மற்றும் இரண்டாம் உலகப் போர்களில் உயிர்த்தியாகம் செய்த இராணுவ உறுப்பினர்களை நினைவுகூரும் நினைவுச் சின்னத்தின் முன்னிலையில் மிகுந்த கௌரவத்துடன் நடைபெற்றது. இந்த நினைவுச் சின்னம் கொழும்பில் செனோடாப் போர் நினைவிடம் (Cenotaph War Memorial) என அழைக்கப்படுகிறது. இது அப்போதைய இலங்கை இராணுவ அதிகாரிகள் இரு உலகப் போர்களிலும் (முதலாம் உலகப் போர் மற்றும் இரண்டாம் உலகப் போர்) உயிர்நீத்தவர்களை நினைவுகூரும் வகையில் நிறுவப்பட்ட ஒரு நினைவுச்சின்னமாகும். இது, சர் எட்வின் லேன்ட்ஸீர் …

  16. கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களில் உள்ள அகதிகளுக்கு உணவுப் பொருள்களை எடுத்துச் செல்லவிருந்த லொறிகளில் ஒன்றுக்குள் இருந்து 2.5 கிலோ எடையுள்ள அதிசக்திவாய்ந்த வெடிபொருள்கள் நேற்றுப் பிற்பகல் 3.30 மணிக்கு மீட்கப்பட்டன என்று பாதுகாப்பு அமைச்சு நேற்று இரவு அறிவித்தது.வவுனியா செயலகத்தால் வாடகைக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த 30 லொறிகளில் ஒன்றிலிருந்தே வெடி பொருள்கள் மீட்கப்பட்டன. இது குறித்து பாதுகாப்பு அமைச்சு பின்வருமாறு விவரித்துள்ளது. ஓமந்தைச் சோதனை நிலையத்தில் படையினர் லொறிகளை சோதனை செய்தபோது குறிப்பிட்ட ஒரு லொறியிலிருந்து வெடிபொருள் மீட்கப்பட்டது. அதனையடுத்து மேலதிக விசாரணைக்காக லொறியின் சாரதியை படையினர் தடுத்துவைத்துள்ளனர். லொறியும் தடுத்துவைக்கப்பட்டுள்ளது. நாளை …

    • 5 replies
    • 1.3k views
  17. [size=4]இலங்கையில் தமிழ் மக்களின் விடிவுக்காகப் போராடிய தமிழீழ விடுதலைப்புலிகள் மீதான இந்திய அரசின் தடையை நீக்கக் கோரி இந்திய தீர்ப்பாயத்தில் சத்தியவோலை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. தமிழீழ விடுதலைப்புலிகளின் சுவிட்ஸர்லாந்தின் இணைப்பாளர் சிவனேசன் எனப்படுபவர் இந்தச் சத்திய ஓலையை சென்னையில் உள்ள சட்டத்தரணியான ராதாகிருஸ்ணன் மூலம் சமர்ப்பித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இதில், சிவநேசன், இந்தியாவில் விடுதலைப்புலிகளுக்கு எதிரான தடையை எதிர்த்து வாதங்களை முன் வைத்துள்ளார். தமிழ் மக்களின் உயிர்களையும் உடமைகளையும் பாதுகாப்பதற்காகவே விடுதலைப்புலிகள் போராடினர் எனவும் இந்தியாவில் தற்போது விடுதலைப்புலிகளின் எவ்வித நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படுவதில்ல…

  18. தூசணத்தைத் தோற்கடிப்போம்: பிரதமர் அழகன் கனகராஜ் நிதியமைச்சர் ரவி கருணாநாயக்கவுக்கு எதிராக, நாடாளுமன்றத்தில் இன்று கொண்டு வரப்பட்டிருக்கின்ற நம்பிக்கையில்லாப் பிரேரணை தூசணம் எனவும் அதனைத் தோற்கடிப்போம் எனவும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார். நாடாளுமன்றத்தில் இடம்பெற்றுக் கொண்டிருக்கும் நம்பிக்கையில்லாப் பிரேரணை மீதான விவாதத்தின் போதே, பிரதமர் மேற்கண்டவாறு தெரிவித்தார். நாடாளுமன்ற உறுப்பினர் தினேஷ் குணவர்தன உள்ளிட்ட ஒன்றிணைந்த எதிர்க்கட்சிகளின் உறுப்பினர்கள் 35 பேர் இணைந்து இந்த நம்பிக்கையில்லா பிரேரணையை முன்வைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது. - See more at: http://www.tamilmirror.lk/1742…

  19. (எம்.எப்.எம்.பஸீர்) களுத்துறை - கெலிடோ கடற்கரை மற்றும் கல்கிசை கடற்கரைக்கு இடைப்பட்ட கரையோர பிரதேசத்தில் செயற்கை கடற் கரையை அமைக்கும் பணிகள் இடம்பெற்று வருகின்றன. இந் நிலையில் இந்த செயற்கை கரையோர அமைப்பு ஊடாக சூழல் சார் பிரச்சினைகள் ஏற்படலாம் என பிரதேச மக்கள் அச்சம் கொண்டுள்ளனர். இவ்வாறான பின்னணியில் குறித்த திட்டம் அமுல் செய்யப்படும் பகுதிகளில் கடும் பாதுகாப்பு அமுல் செய்யப்பட்டுள்ளதுடன், வெளிநாட்டு நிருவனம் ஒன்று உள் நாட்டு நிறுவனம் ஒன்றுடன் இணைந்து இந் நடவடிக்கைகளை தொடர்வதாக அறிய முடிகின்றது. இந்த செயற்கை கடற்கரை திட்டம் தொடர்பில் அமைச்சரவை அனுமதி பெறப்பட்டுள்ளதாகவும், இந்த திட்டம் நிறைவடைந்ததும் பிரதேசத்தின் மீன் பிடி மற்றும் சுற்றுலாத் து…

    • 2 replies
    • 591 views
  20. http://isooryavidz.blogspot.com/2008/10/gt...sri-lankas.html GTV Unmayin Tharisanam: Sri Lanka's Psychological Operations against the Tamils Part-2 GTV Unmayin Tharisanam: Sri Lanka's Psychological Operations against the Tamils Part-3

  21. ஊரடங்கு சட்ட நடைமுறையும் தேசிய அடையாள அட்டையும்: ஜனாதிபதி ஊடகப் பிரிவு விளக்கம் ஊரடங்கு சட்ட நடைமுறையும் தேசிய அடையாள அட்டையும்: ஜனாதிபதி ஊடகப் பிரிவு விளக்கம் ஊரடங்கு சட்ட நடைமுறையும் தேசிய அடையாள அட்டை இலக்க அடிப்படையில் அத்தியாவசிய நடமாட்ட ஏற்பாடுகளும் தொடர்பாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கை: கொழும்பு, கம்பஹா, களுத்துறை மற்றும் புத்தளம் ஆகிய மாவட்டங்களில் தற்போது நடைமுறையில் இருக்கும் ஊரடங்குச் சட்டம் மே மாதம் 04ஆம் திகதி, திங்கள், அதிகாலை 5.00 மணி வரையும் தொடர்ந்தும் அமுலில் இருக்கும். ஏனைய அனைத்து மாவட்டங்களிலும் ஊரடங்குச் சட்டம் – ஏப்ரல் 27, திங்கள், அதிகாலை 5.00 மணிக்கு நீக்கப்பட்டு, அதே நாள், இரவு 8.00…

  22. அனர்த்தத்தால் மன அழுத்தத்திற்கு ஆளாகியிருந்தால் 1926ஐ அழைக்கவும் Dec 8, 2025 - 08:16 AM அனர்த்தங்கள் காரணமாக மன அழுத்த நிலைமைகள் ஏற்பட்டிருப்பின், தேசிய மனநல நிறுவகத்தின் 1926 என்ற தொலைபேசி இலக்கத்தைத் தொடர்புகொண்டு தேவையான ஆலோசனைகளைப் பெற்றுக்கொள்ளுமாறு சுகாதார பிரிவினர் பொதுமக்களுக்கு அறிவித்துள்ளனர். இவ்வாறான அனர்த்த நிலையின் பின்னர் அது எமது மனதை நேரடியாகப் பாதிக்கக்கூடும் எனவும், அதன் காரணமாக மக்களிடையே மன அழுத்தம் ஏற்படுவது சாதாரணமாகக் காணக்கூடிய ஒன்று எனவும் ராகம மருத்துவ பீடத்தின் சிறுவர் மற்றும் இளம்பருவ மனநல மருத்துவ நிபுணர், பேராசிரியர் மியுரு சந்திரதாச தெரிவித்தார். நீங்கள் அத்தகைய அழுத்தத்திற்கு ஆளாகியிருந்தால், முதலில் பிரச்சினையை அடையாளம் காண வேண்டும் …

  23. சர்வ கட்சி கூட்டத்தை விஜயகாந்தும் புறக்கணிப்பு ஈழத்தமிழர் பிரச்சினைக்காக கருணாநிதி கூட்டியுள்ள அனைத்து கட்சிக் கூட்டத்தில் தே.மு.தி.க. பங்கேற்காது என்று நடிகரும் கட்சித் தலைவருமான விஜயகாந்த தெரிவித்துள்ளார். இது குறித்த அறிக்கையில்; : ஈழத்தமிழர் பிரச்சiனைக்காக இந்திய கம்யூனிஸ்ட் கட்சி நடத்திய உண்ணாவிரதப் போராட்டத்தில் எங்களைப் போன்றவர்கள் கலந்து கொண்ட போது, 'ஈழத்தமிழர்களுக்கு எதிரானவர்களும், அரைகுறை ஆதரவாhளர்களும் கலந்து கொண்டார்கள்" என்று கருணாநிதி குறிப்பிட்டமை ஒரு சுமுக சூழ்நிலையை உருவாக்கக் கூடியதா? 1956 முதல் இலங்கைத் தமிழர்களுக்காக உண்மையாகப் பாடுபடுவது தி.மு.க.தான் என்று கருணாநிதி கூறிய பிறகு மற்றக் கட்சிகளுக்கு இதில் என்ன வேலை என்று கேட்பதாகத்தானே …

  24. [size=1][/size] [size=4]நவம்பர் மாதத்தை மாவீரர் மாதம் என கடைப்பிடிப்பது அவரவர் விருப்பமே என கனடா தமிழ்ப் பேரவை அறிவித்துள்ளது. கனடாவில் வாழும் தமிழர்களை ஒருங்கிணைக்கும் முக்கிய அமைப்பான கனடியத் தமிழர் பேரவை, இதுவரையிலும் மாவீரர் மாதம் என்று ஒன்று கடைப்பிடிக்கவில்லை. இருபது வருடமாக இல்லாத ஒன்றை புதிதாக சிலர் ஆரம்பித்துள்ளனர். இப்படி ஒரு மாதத்தை கடைப்பிடிப்பது அவரவர் சொந்த விருப்பத்தற்குரியது. யார் மீதும் வலுக்கட்டாயமாக திணிக்க முயல்வது ஜனநாயகத்திற்கு எதிரானது என்று அறிவித்துள்ளனர். இது தொடர்பான அப்பேரவையின் அறிக்கை: கடந்த இருபது ஆண்டுகளுக்கும் மேலாக நவம்பர் 27ம் தேதி மாவீரர் தினமாக அனுசரிக்கப்பட்டுவருகிறது. அதையொட்டிய வாரம் முழுவதும் உணர்வு பூர்வமான நிக…

  25. தமிழக அரசியல்வாதிகள் விடுதலைப் புலிகளிடம் பணம் பெற்றுக் கொண்டுள்ளனர் – கோதபாய: தமிழக அரசியல்வாதிகள் தமிழீழ விடுதலைப் புலிகளிடம் பணத்தைப் பெற்றுக் கொண்டு செயற்படுவதாக பாதுகாப்புச் செயலாளர் கோதபாய ராஜபக்ஷ குற்றம் சுமத்தியுள்ளார். யுத்தம் நிறுத்தப்பட வேண்டும் என அழுத்தங்களைப் பிரயோகிக்குமாறு குறித்த அரசியல்வாதிகளுக்கு புலிகள் லஞ்சம் வழங்கியுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். ஈழத் தமிழர்களுக்கு ஆதரவு தெரிவித்து திராவிட முன்னேற்றக் கழகத்தின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஏற்கனவே தமது இராஜினாமா கடிதங்களை சமர்ப்பித்துள்ளனர். விடுதலைப் புலிகளின் பிரச்சார நடவடிக்கைகளுக்காக தமிழக அரசியல்வாதிகளுக்கு பணம் கொடுக்கப்பட்டுள்ளமை தொடர்பான தகவல்கள் கிடைக்கப் பெற்றுள்ளதாக கோதப…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.