ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143501 topics in this forum
-
இலங்கையை பூர்வீகமாகக் கொண்ட அனைவரும்,வெளிநாட்டுப் பணத்தை, இலங்கையில் வைப்பிலிட முடியும்… நாட்டினுள்ளும் நாட்டுக்கு வெளியேயும் உள்ள அனைத்து இலங்கையர்களுக்கும் தனிப்பட்ட வெளிநாட்டு பணத்தை சம்பாதிப்பதற்கும், சேமிப்பதற்கும் முதலிடுவதற்கும் தாம் விரும்பிய வங்கியொன்றில் வைப்பிலிடுவதற்கும் புதிய வங்கிக் கணக்கொன்று தற்போது அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அது விசேட வைப்புக் கணக்கு என பெயரிடப்பட்டுள்ளது. புதிய கணக்கு தற்காலிக அல்லது நிலையான வைப்புகளை செய்யக்கூடியதாக இருப்பது குறிப்பிடத்தக்கது. நாட்டினுள்ளும் நாட்டுக்கு வெளியேயும் வாழும் இலங்கையர்களுக்கும் இரட்டை பிராஜா உரிமையுள்ளவர்களுக்கும் ஏனைய நாடுகளில் வசிக்கும் இலங்கை பூர்வீகத்தை கொண்டவர்களுக்கும் இலங்கைக்கு வெளியே வேறு ந…
-
- 15 replies
- 1.6k views
-
-
ஜோசப் பரராஜசிங்கத்தை எச்சரித்த மகிந்த ராஜபக்ச: அம்பலப்படுத்துகிறது பிரான்ஸ் தமிழர் மனித உரிமைகள் மையம் மட்டக்களப்பில் படுகொலை செய்யப்பட்ட மாமனிதர் ஜோசப் பரராஜசிங்கத்தை சிறிலங்கா அரச தலைவர் மகிந்த ராஜபக்ச தேர்தலுக்கு முன்பாக எச்சரித்திருந்தார் என்ற உண்மையை பிரான்ஸ் தமிழர் மனித உரிமைகள் மையம் அம்பலப்படுத்தியுள்ளது. பிரான்ஸ் தமிழர் மனித உரிமைகள் மையத்தின் பொதுச் செயலாளர் ச.வி.கிருபாகரன் வெளியிட்டுள்ள அறிக்கை: கடந்த செப்டம்பர் 6 ஆம் நாள் மட்டக்களப்பு நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கம், கொழும்பில் வெளியாகும் 'டெய்லி மிரர்' பத்திரிகைக்கு மகிந்த ராஜபக்சவின் தேர்தல் பிரச்சாரம் பற்றி வழங்கிய செவ்வியில் "ராஜபக்ச போர்ப் பறை சாற்றுகிறார்" என்று கூறியிருந்தார…
-
- 15 replies
- 3.4k views
-
-
நெடியவனின் கைது ஆறுதலை ஏற்படுத்தியுள்ளது – எமில்டா சுகுமார் 24 மே 2011 தமிழீழ விடுதலைப் புலிகளின் நோர்வே தலைவர் நெடியவன் கைது செய்யப்பட்டமை மன ஆறுதலை ஏற்படுத்தியுள்ளதாக யாழ்ப்பாண மாவட்டச் செயலாளர் எமில்டா சுகுமார் தெரிவித்துள்ளார். மிக அண்மைக்காலம் வரையில் நெடியவன் தமக்கு கொலை மிரட்டல் விடுத்து வந்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார். மின் அஞ்சல்களின் மூலம் நெடியவன் தமக்கு அச்சுறுத்தல் விடுத்து வந்ததாக அவர் தெரிவித்துள்ளார். அரசாங்கத்திற்கு ஆதரவளிக்காது பதவியை இராஜினாமா செய்யுமாறு நெடியவன் தம்மிடம் கோரியதாக அவர் குறிப்பிட்டுள்ளார். தம்மையும் தமது குடும்பத்தாரையும் படுகொலை செய்யப் போவதாக நெடியவன் மிரட்டி வந்ததாக அவர் தெரிவித்துள்ளார். இதன் …
-
- 15 replies
- 1.2k views
- 1 follower
-
-
2012ல் மகிந்தர் தனது ஆட்சியை இழப்பார் என நீயா நானா நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பல யோசியர்கள் கூறியுள்ளனர். இதனை அடுத்து ஏன் அவர் ஆட்சிபீடத்தில் இருந்து இறங்க நேரிடும் என்பது போன்ற விடையங்களை அவர்கள் விளக்கியுள்ளனர். சிலருக்கும் யோசியம் மேல் நம்பிக்கை கிடையாது தான்! இருந்தாலும் இவர்கள் கூறுவது தமிழர்களுக்கு மனதளவிலாவது ஆறுதலைக் கொடுக்கும் என்பதில் ஐயமில்லை. காணொளியைப் பாருங்கள். http://youtu.be/4NuavHlqftY http://www.vannionli...01/2012_02.html
-
- 15 replies
- 2.4k views
-
-
பொதுநலவாய (கொமன்வெல்த்) அமைப்பிலிருந்து பாகிஸ்தான் நீக்கப்பட்டமைக்கு சிறிலங்கா திடீரென எதிர்ப்புத் தெரிவித்துள்ளது. தொடர்ந்து வாசிக்க
-
- 15 replies
- 3.1k views
-
-
ஆந்திர மாநிலத்தில் தமிழர்கள் சுட்டுக்கொலை செய்யப்பட்டதற்கு வடக்கு மாகாண சபையில் கண்டன தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்த மாதத்தின் இரண்டாம் வாரத்தில் இந்தியா ஆந்திரமாநிலம் திருப்பதிக்கு அருகில் 20 தமிழர்கள் செம்மரக் கடத்தலுடன் தொடர்புள்ளவர்கள் என்று கூறி செம்மரக் கடத்தல் தடுப்பு பிரிவு பொலிஸாரினால் சுட்டுக்கொலை செய்யப்பட்டனர். சம்பவம் தொடர்பில் இன்று நடைபெற்று வரும் 28 ஆவது வடக்கு மாகாண சபையின் மாதாந்த கூட்டத்தில் வடக்கு முதல்வரால் சபையில் எடுத்துக் கொள்ளப்பட்டு குறித்த செயற்பாட்டிற்கு கண்டன தீர்மானமும் நிறைவேற்றப்பட்டது. தொடர்ந்து உரையாற்றிய முதல்வர் க.வி. விக்கினேஸ்வரன் , 20 தமிழர்கள் எதுவித விசாரணையும் இன்றி சுட்டுக்கொலை செய்யப்பட்டதனால் அங்கு தொ…
-
- 15 replies
- 1.7k views
-
-
மூன்று யுத்தக்கப்பல்கள் மற்றும் யுத்த உலங்குவானூர்திகள் சகிதம் ஆயிரக்கணக்கான இந்தியப் படையினர் கொழும்புக்கு விரைவு. சார்க் தலைவர்களை புலிகள் ஆகாயம் அல்லது கடல் மார்க்கமாகத் தாக்கலாமாம். Indian troops for South Asian summit in Sri Lanka 1 hour ago COLOMBO (AFP) India is to send thousands of troops, war ships and helicopters to Sri Lanka as part of security for next month's South Asian summit in Colombo, diplomatic sources said Sunday. New Delhi is planning to send three war ships with a combined force of up to 3,000 security personnel because of fears that Tamil Tiger rebels could stage land, sea or air attacks, diplomats and officials said. …
-
- 15 replies
- 3.1k views
-
-
விடுதலைப் புலிகளின் சர்வதேசப் பொறுப்பாளராக செயற்பட்ட குமரன் பத்மநாதன் கைதுசெய்யப்பட்டிருந்த போதிலும் விடுதலைப் புலிகளின் சர்வதேச வலையமைப்பு தொடர்ந்தும் செயற்பட்டுவருவதை உறுதிப்படுத்தி இராணுவப் புலனாய்வுப் பிரிவின் தலைவர் ஒருவர் பாதுகாப்புப் பேரவைக்கு சமர்ப்பிக்க தயாரித்திருந்த அறிக்கையொன்றை பாதுகாப்புச் செயலாளர் திடீரென இடைநிறுத்தியதாக புலனாய்வுப் பிரிவின் உட்தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன. விடுதலைப் புலிகள் சர்வதேச ரீதியில் மேற்கொண்டுவரும் ஆயுத வியாபாரம் உள்ளிட்ட வர்த்தக நடவடிக்கைகளில் கிடைக்கும் இலாபத்தை மெக்சிக்கோவிலுள்ள மூன்று வங்கிக் கணக்குகளில் வைப்பிலிட்டு வருவது குறித்த சில சாட்சியங்களையும் முன்வைக்க அந்த அதிகாரி திட்டமிட்டிருந்ததாகக் கூறப்படுகிறது. இதேவேள…
-
- 15 replies
- 3.5k views
-
-
காணாமல் போனவர்களை முன்னிறுத்தி பொதுசன ஜக்கிய முன்னணி வேட்பாளர் அங்கயன் இராமநாதன் நடத்திய பிரச்சார கூட்டம் அடிதடியினில் முடிந்துள்ளது.காணாமல் போனவர்களை விடுவிப்பதற்காக நடவடிக்கை எனக்கூறி அவர்களின் உறவுகளை யாழ்.நகரிலுள்ள விடுதி ஒன்றிற்கு அழைத்த அங்கஜன் பிரசார கூட்டமொன்றை அவர்களிடையே நடத்த முயற்சித்திருந்தார்.இந்நடவடிக்கைகளினால் அதிருப்தி அடைந்த காணாமல் போனோரது உறவுகள் முரண்படத்தொடங்கின.இதனை தவறென தட்டிகேட்க முற்பட்ட சகாதேவன் என்பவர் மீது அங்கயனின் ஆதவாளரான பெண்மணியொருவர் தாக்குதல் நடத்தியுள்ளார். இதனையடுத்து நடந்த குழப்பங்களையடுத்து இலங்கை காவல்துறை தலையீடுகளை மேற்கொண்டதுடன் மேலதிக விசாரணைக்கென அழைத்து சென்று வாக்குமூலங்களை பதிவு செய்ததாக கூறப்படுகின்றது.அத்துடன் நீதிமன்றி…
-
- 15 replies
- 2.4k views
-
-
வன்முறை முடிவுக்கு வந்ததால் தான் சர்வதேச ஆதரவு கிடைத்தது - மீண்டும் வன்முறையை ஆதரிக்க முடியாது: வன்முறை முடிவுக்கு வந்து தமிழ் சமூகம் அஹிம்சை வழியில் செயற்பட தொடங்கியுள்ளதால் தான் சர்வதேச ஆதரவு கிடைத்தள்ளது எனவே நாம் மீண்டும் வன்முறையை ஆதரிக்க முடியாது என தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சி தலைவருமான இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். இந்திய துணை தூதரகத்தின் ஏற்பாட்டில் யாழ்,இந்துக்கல்லூரியில் காந்தி ஜெயந்தி தினம் கொண்டாடப்பட்டது. அந் நிகழ்வில் பிரதம விருந்தினராக கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவ்வாறு தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில், மஹாத்மா காந்தி இந்தியாவின் சுதந்திரத்திற்காக அஹிம்சை வழியில் போராடினார். அவர் பிரிவினையை ஆதரிக்கவில்லை …
-
- 15 replies
- 1.1k views
-
-
இலங்கை விவகாரங்களைக் கையாள்வது தொடர்பில் இதுவரை காலமும் பின் பற்றிவந்த கொள்கையில் முக்கியத்துவம் வாய்ந்த மாற்றங்களைச் செய்வதற்கு இந்திய மத்திய அரசு தீர்மானித்திருக்கிறது என உயர்மட்ட இராஜதந்திர வட்டாரங்கள் உறுதியாகத் தெரிவிக்கின்றன. காங்கிரஸின் இந்த முக்கியத்துவம் வாய்ந்த தீர்மானம் இலங்கை அரசின் உயர் மட்டத்திற்குப் பெரும் அதிர்ச்சியைக் கொடுத்திருக்கிறது எனவும் அந்த வட்டாரங்கள் குறிப்பிட்டன. ஜெனிவா மாநாட்டில் இலங்கைக்கு எதிரான பிரேரணைக்கு இந்தியா ஆதரவளித்த பின்னர் இலங்கை அரசின் மூத்த அமைச்சர் ஒருவர் கொழும்பிலுள்ள இந்தியத் தூதுவரைச் சந்தித்து மிக நீண்டநேரம் பேச்சு நடத்தி இலங்கையின் கவலையை வெளியிட்டிருந்தார். அதேசமயம், தற்போதைய நிலைமைகள் குறித்து இந்திய மத்திய அரசின…
-
- 15 replies
- 1.8k views
-
-
இலங்கையில் பாதிக்கப்பட்ட தமிழர்களுக்கு வழங்குவதற்காக 2000 தொன் அரிசி, பருப்பு உள்ளிட்ட நிவாரணப் பொருட்களை செஞ்சிலுவை சங்க நிர்வாகியிடம் முதல்வர் கருணாநிதி நேற்று வழங்கினார். இலங்கையில் இராணுவத் தாக்குதலில் பாதிக்கப்பட்ட தமிழர்களுக்கு நிதியும், நிவாரணப் பொருட்களும் அனுப்பப்படும் என்று முதல்வர் கருணாநிதி கூறியிருந்தார். அதன்படி தமிழக அரசு சார்பில் 80 ஆயிரம் பேருக்கு வழங்குவதற்காக துணி வகைகள், அரிசி, பருப்பு, சீனி, மருந்து பொருட்கள், தேயிலை, சோப்பு, பற்பசை, வேட்டி, கைலி, சேலை, ஆடைகள், துண்டுகள், படுக்கை விரிப்புகள் போன்ற நிவாரணப் பொருட்கள் 80 ஆயிரம் பொதிகள் தயாரிக்கப்பட்டன. நிவாரணப் பொருட்களை பெற்றுக் கொள்வதற்காக சர்வதேச செஞ்சிலுவை சங்கத்தின் இலங்கை கொழும்பு ஒருங்கிணைப்பாளர்…
-
- 15 replies
- 1.7k views
-
-
ரம்பாவை மணப்பவர் விடுதலைப் புலிகள் ஆதரவாளரா? நடிகை ரம்பாவை மணக்கும் கனடா தமிழ் தொழிலதிபர் இந்திரன் விடுதலைப் புலி ஆதரவாளர் என்று வெளியான செய்திகளை மறுத்துள்ளனர் ரம்பாவும் அவரது அண்ணன் வாசுவும். இந்தத் திருமணத்தை விரும்பாத சிலர் செய்யும் சதி இது என்று அவர்கள் தெரிவித்துள்ளனர். தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகியாக இருந்தவர் ரம்பா. ரஜினி, கமல் என அனைவருடனும் ஜோடி போட்டவர். ரம்பாவுக்கும் கனடா தொழில் அதிபர் இந்திரனுக்கும் சமீபத்தில் திருமணம் நிச்சயமானது. இந்திரன் மேஜிக்வுட்ஸ் என்ற பெயரில் இன்டீரியர் டிசைனிங் கம்பெனி நடத்துகிறார். இலங்கையை பூர்வீகமாகக் கொண்ட தமிழர். இந்த நிறுவனம் ரம்பாவை சில மாதங்களுக்கு முன் விளம்பர தூதுவராக நியமித்தது. அப்போது இந்திரனுக்கும் ரம்பாவுக்க…
-
- 15 replies
- 3.9k views
-
-
பொதுத் தேர்தலில் யானைச் சின்னத்தில் போட்டியிடத் தயாராக இருக்குமாறு ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க கட்சியின் நிர்வாகக் குழுவிற்கு அறிவித்துள்ளார். ஜனாதிபதித் தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்ட பின்னர் நடைபெற்ற ஐக்கிய தேசியக் கட்சியின் நிர்வாகக் குழுக் கூட்டத்தில் அவர் இதனைத் தெரிவித்தார். மேலும், நாடளாவிய ரீதியில் ஒவ்வொரு மாவட்டத்திற்கும் வேட்புமனுத் தயாரிக்கும் போது புதிதாக ஐந்து பேருக்கு வாய்ப்பு வழங்குமாறும் அவர் மேலும் அறிவுறுத்தியுள்ளார். இந்த கலந்துரையாடலில் ஜனாதிபதி தேர்தல் முடிவுகள் குறித்தும் ஆராயப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது. Thinakkural.lk
-
-
- 15 replies
- 1k views
- 2 followers
-
-
சம்பந்தன் இல்லையென்றால் தமிழர்களுக்கு விடிவு இல்லை – சிறிதரன்! தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா சம்பந்தன் இல்லையென்றால் தமிழர்களுக்கு எந்தக் காலத்திலும் விடிவு இல்லையென தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தெரிவித்துள்ளார். தொலைக்காட்சியொன்றின் நேர்காணலிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். அத்துடன், அண்மையில் நடைபெற்ற வடமாகாண குழப்பத்துக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை கட்சியாகப் பதிவுசெய்யாமையே காரணமென கேட்கப்பட்ட கேள்வியொன்றுக்குப் பதிலளிக்கையில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை பதிவுசெய்வதற்கு எந்தவொரு இடையூறுகளும் இதுவரை ஏற்படவில்லை. ஆனால் இதில் இணைந்துள்ள மூன்று கட்சிகளும் சம அந்தஸ்துக் கேட்…
-
- 15 replies
- 2.3k views
- 1 follower
-
-
கிளிநொச்சி தமிழரசுக்கட்சி உறுப்பினர்களை எதிர்க்கட்சித் தலைவர் சந்தித்தார் கிளிநொச்சி மாவட்ட தமிழரசுக் கட்சி உறுப்பினர்களுக்கும் எதிர்க்கட்சித் தலைவர் ஆர்.சம்பந்தனுக்கும் இடையிலான சந்திப்பொன்று கிளிநொச்சி கூட்டுறவாளர் மண்டபத்தில் நடைபெற்றது. கொள்கைபரப்புச் செயலாளர் வேளமாளிதன் தலைமையில் ஆரம்பமான இக் கலந்துரையாடலில் கிளிநொச்சியின் அரசியல் மற்றும் அபிவிருத்தி சம்பந்தமான பல்வேறு கருத்துக்கள் கலந்துரையாடப்பட்டன. இக் கலந்துரையாடலில் பாராளுமன்ற உறுப்பினர் சிறிதரன், மாகாணசபை உறுப்பினர்கள் கிளிநொச்சி மாவட்ட தமிழரசுக்கட்சி உறுப்பினர்கள் எனப் பலரும் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது. http://www.virakesari.lk/article/21791
-
- 15 replies
- 671 views
-
-
வடக்கு மாகாணசபையின் உறுப்பினரான அனந்தி எழிலன் தேர்தலில் போட்டியிடுவதற்காக முன்வந்த நாளிலிருந்து ஊடகக் கவனத்தை அதிகமாக ஈர்க்கும் ஒருவராக விளங்கி வருகின்றார். தமிழ் ஊடகங்களை மாத்திரமன்றி சிங்கள ஊடகங்களையும் இவர் தொடர்பான செய்திகள் ஆக்கிரமித்து வருகின்றன. இவர் கூறிய விடயங்கள் செய்திகளாக வெளிவருகின்ற அதேவேளை இவர் கூறாத விடயங்களும் செய்திகள் ஆக்கப்படுகின்றன. மறுபுறம், சிங்களப் பேரினவாதத்தைக் கக்கும் ஊடகங்களோ ‘அனந்தி சிரித்தால் குற்றம், கதைத்தால் குற்றம், நடந்தாலும் குற்றம்” என்ற பாணியில் செய்திகளை வெளியிட்டு வருகின்றன. இந்த வரிசையில் அனந்தி அவர்களின் அண்மைக்காலச் செயற்பாடுகளைக் கருத்தில் எடுத்து, விடுதலைப் புலிகளின் முன்னைநாள் போராளிகளைப் போன்று, அவர் தடுத்து வைக்கப்பட்டுப் …
-
- 15 replies
- 1.7k views
-
-
எம்.றொசாந்த் காட்டுக்குள் ஓர் ஒதுக்குப்புறமாக சென்று, காலை கடனை முடித்து விட்டு, வீடுக்குத் திரும்பிக்கொண்டிருந்தவர் மீது இராணுவத்தினர், தாக்குதல் நடத்தியுள்ள சம்பவமொன்று யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றுள்ளது. அவர் மீது கேபிளால் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் புன்னாலைக்கட்டுவன் வடக்கு, கப்பன்புலவு பகுதியை சேர்ந்த ஒருவர் மீதே நேற்றைய (7) தினம் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பில், தாக்குதலுக்கு உள்ளானவர் கருத்துரைக்கையில், உடுவில் பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட புன்னாலைக்கட்டுவன், வடக்கு கப்பன் புலவு பகுதியில் வசிக்கும் சுமார் 10 குடும்பங்கள் மலசல கூட வசதிகள் அற்ற நிலையில் வசித்து வருகின்றோம். “இது குறித்து பலதடவைகள் அதிகார…
-
- 15 replies
- 1.5k views
-
-
சம்பந்தருடைய மரணத்திற்குப் பின்னர் தலைவராவதற்கான பயணத்தை நாங்கள் மேற்கொள்ளவில்லை – பிள்ளையான் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனின் மரணத்திற்கு பின்னர் தலைவராவதற்கான பயணத்தினை நாங்கள் மேற்கொள்ளவில்லையென தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் தலைவரும் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான சிவநேசதுரை சந்திரகாந்தன தெரிவித்துள்ளார்.எங்களுடைய மக்களோடு உறுதியாக இருந்து பணி செய்து அவர்களுடைய தலைவர்கள் அவர்களுடைய கடந்தகால தலைவர்கள் விட்ட பிழைகளை சரி செய்து இந்த மண்ணிலே வாழக்கூடிய நம்பிக்கையை கட்டியெழுப்ப கூடிய மக்கள் கூட்டத்தை நாங்கள் உருவாக்குவதற்கு பாடுபடுகிறோம் என அவர் மேலும் தெரிவித்துள்ளார். இதன்போது மேலும…
-
- 15 replies
- 1k views
-
-
ஏழாலை மயிலங்காடு சிறிமுருகன் வித்தியாலயத்தில் கல்வி பயிலும் 26 பாடசாலை மாணவர்களும் பூச்சிமருந்து கலந்த நீரை அருந்தியதால் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இன்று காலை பாடசாலை மாணவர்கள் தண்ணீர் அருந்துவதற்காகச் சென்றுள்ளனர்.எனினும் தண்ணீரில் துர்நாற்றம் வீசியுள்ளது.சிலர் தண்ணீரை அருந்தவில்லை.சிலர் தண்ணீர் அருந்தியுள்ளனர்.தண்ணீர் அருந்தாத மாணவர்கள் தண்ணீரில் துர்நாற்றம் வீசுவதாக உடனடியாக அதிபர் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டதையடுத்து குறித்த நீர்த்தாங்கியின் மேல் ஏறி பார்த்த பொழுது பயிர்களுக்கு அடிக்கப்படும் பூச்சிமருந்து போத்தல் இருந்தது கண்டறியப்பட்டுள்ளது. உடனடியாக பூச்சிமருந்து கலந்த நீரை அருந்திய மாணவர்கள் 26 பேரும் தற்பாதுகாப்பு நடவடிக்கைக்காக யாழ்…
-
- 15 replies
- 2.2k views
-
-
ஆசிய கோப்பை துடுப்பாட்டப் போட்டியின் இறுதி ஆட்டத்தில் இந்திய அணிக்கு எதிராக சிறப்பாக விளையாடி, சிறிலங்காவின் வெற்றிக்கு வழிசமைத்த சுழல் பந்துவீச்சாளரும் சிறிலங்கா இராணுவத்தைச் சேர்ந்தவருமான அஜந்த மென்டிசை இரண்டாவது லெப்ரினனாக அந்நாட்டின் அரச தலைவர் மகிந்த ராஜபக்ச பதவி உயர்த்தியுள்ளார். தொடர்ந்து வாசிக்க
-
- 15 replies
- 2.2k views
- 1 follower
-
-
ஐ.நாவைப் பகைத்தால் பேராபத்தைச் சந்திக்க நேரிடும் - அரசுக்கு சம்பந்தன் கடும் எச்சரிக்கை.! "ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளரின் குற்றச்சாட்டுக்களை இலங்கை அரசு நிராகரிப்பதால் எவ்வித பயனையும் பெறாது. மாறாக பாதகமான பின்விளைவுகளையே சந்திக்கும். எனவே, ஐ.நா. உள்ளிட்ட சர்வதேச சமூகத்துடன் முட்டிமோதுவதை இந்த அரசு நிறுத்த வேண்டும். எதிர்வரும் மார்ச் மாதத்துக்குள் ஐ.நா. தீர்மானத்தின் பரிந்துரைகளை அரசு நிறைவேற்றியே தீரவேண்டும். இல்லையேல் பேராபத்தை அரசும் நாடு சந்திக்கும்." - இவ்வாறு எச்சரிக்கை விடுத்துள்ளார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன். ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர் மிச்செல் பச்லெட் அம்மையார் ஐ.நா. மனித உரிமைகள் சபையின் 45 ஆவது அமர்வின் ஆரம…
-
- 15 replies
- 1.5k views
-
-
-
- 15 replies
- 2k views
-
-
லக்சர் ஈ தொய்பா அமைப்பு இலங்கையிலும்செயற்படுகின்றது. - அமெரிக்கா வவுனியா நிருபர் சனிக்கிழமை , மார்ச் 27, 2010 பாகிஸ்தான் ஆதரவில் செயற்படும் லக்சர் ஈ தொய்பா ஆயுத குழு இலங்கையிலும் பரவியுள்ளதாக அமெரிக்காவின் பசுபிக் கட்டளை தளபதி ரொபேட் விலாட் தெரிவித்துள்ளார். இந்தியாவில் மும்பை குண்டு தாக்குதலிற்கும் இவர்கள் தான் காரணமாக இருந்தவர்கள் என கூறிய விலாட், இந்த அமைப்பு இந்தியா, பங்களாதேஷ், மாலைதீவு மற்றும் இலங்கை ஆகிய நாடுகளில் பரவி செயற்படுகின்றது. இவர்களை கட்டுப்படுத்த இந்தியாவுடன் சேர்ந்து செயற்படுகின்றோம் எனவும் கூறியுள்ளார் விலாட் அவர்கள். http://www.eelanatham.net/story/%E0%AE%B2%E0%AE%95%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%88-%E0%AE%A4%E0%AF%8A%E…
-
- 15 replies
- 1.1k views
-
-
தமிழ் தேசிய கூட்டமைப்பிலிருந்து யாரும் வெளியேறலாம்: சுமந்திரன் தமிழ் தேசிய கூட்டமைப்பிலிருந்து யாரும் வெளியேறலாம். இணைய விரும்புவோரும் இணையலாம் அவர்களை நாம் வரவேற்போம் என தமிழ் தேசிய கூட்டமைப்பு கட்சியின் பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்தார். இன்று யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் இவ்வாறு தெரிவித்தார். தமிழ் தேசிய கூட்டமைப்பிலிருந்து பிரிந்து தனித்துச் செயற்படப் போவதாக ஈபி.ஆர்.எல்.எப்பின் தலைவர் சுரேஸ் பிரேமச்சந்திரன் அண்மை நாள்களாகக் கூறிவரும் நிலையிலேயே நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் இன்று இதனைத் தெரிவித்தார். https://news.ibctamil.com/ta/internal-affairs/Nobo…
-
- 15 replies
- 1.4k views
-