ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143515 topics in this forum
-
சுமார் இரண்டு வருடங்களுக்கு பின்னர் இலங்கை அரசாங்கம் தமிழீழ விடுதலைப் புலிகளுடன் பேச்சுவார்த்தைகளை நடத்த விருப்பம் வெளியிட்டுள்ளது. ஜனாதிபதியின் சகோதரரும் நாடாளுமன்ற உறுப்பினருமான பசில் ராஜபக்ச இது தொடர்பாக கருத்தை ஆங்கிலச் செய்தித்தாள் ஒன்றுக்கு வெளியிட்டுள்ளார். பெரும்பாலான தமிழர்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அமைப்பு என்ற ரீதியில் இந்தப் பேச்சுவார்த்தையை அரசாங்கம் எதிர்பார்ப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார். எனினும் கடந்த ஜனவரியில் முறிந்துபோன போர்நிறுத்த உடன்படிக்கையை மீண்டும் நடைமுறைப்படுத்துவது தொடர்பான கருத்தை அவர் நிராகரித்தார். ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தாம் தமிழீழ விடுதலைப் புலிகளுடன் பேசத்தயார் என குறிப்பிட்டிருந்தமையையும் பசில் ராஜபக்ச சுட்டிக்காட்டி…
-
- 8 replies
- 2.4k views
-
-
வன்னியில் உள்ள ஐ. நா பணியாளர்களை அங்கிருந்து வெளியேற புலிகள் அனுமதிக்க வேண்டும்'- ஐ.நா வேண்டுகோள் தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பினர் வன்னியில் தமது கட்டுப்பாட்டிலுள்ள பிரதேசங்களில் பணியாற்றும் ஐ.நா பணியாளர்களை, அங்கிருந்து வெளியேற அனுமதி மறுத்து வருவதாகக் கூறும் இலங்கைக்கான ஐக்கிய நாடுகள் ஸ்தாபனத்தின் தலைமையகம், ஐ.நா பணியாளர்களையும் அவர்களில் சார்ந்திருப்போரையும் உடனேயே அங்கிருந்து வெளியேற அனுமதிக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்திருக்கிறது. இது குறித்து ஐ.நாவின் கொழும்பு அலுவலகம் இன்று வியாழக்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையொன்றில் விடுதலைப்புலிகள் இவ்வாறு ஐ.நாவிற்காக பணியாற்றும் உள்ளூர் பணியாளர்களையும், அவர்களில் சார்ந்திருப்போரையும் அங்கிருந்து வெளியேற முடிய…
-
- 7 replies
- 2.4k views
-
-
யாழ்ப்பாணம் உரும்பிராயில் 9 வயது சிறுமி மீது பாலியல் வல்லுறுவு! யாழ்ப்பாணம் உரும்பிராயில் 9 அகவையுடைய சிறுமி மீது பாலியல் வல்லுறுவு மேற்கொள்ளப்பட்டுள்ளது.சிறு
-
- 6 replies
- 2.4k views
- 1 follower
-
-
புலிகளின் மௌனம் எதற்காக? [30 - September - 2007] -ச.ப.நிர்மானுசன்- "உபாயங்கள் எல்லாவற்றையும் சொல்லமுடியாது, சொல்வது எல்லாவற்றையும் நடைமுறைப்படுத்த முடியாது. மறுமுனையில் நோக்கினால், நடைமுறைப்படுத்தப்பட்டது எல்லாம் சிந்திக்கப்பட்டதாக இருக்கும், கணிசமானளவு வெளியில் கூறக்கூடியதாக இருக்கும்". களம் காலத்தை மாற்றுமா, காலம் களத்தை மாற்றுமா என்ற வினாவிற்கும் மேற்கூறிய சூட்சுமத்துக்கும் பலத்த பொருத்தப்பாடுகள் உள்ளது என கடந்த வாரப் பத்தியிலே குறிப்பிட்டிருந்தேன். மேற்கூறிய எனது குறிப்பு பல்வேறு தரப்பினரிடம் வெவ்வேறு விதமான விமர்சனங்களை தோற்றுவித்ததாக அறிய முடிந்தது. ஆயிரம் கருத்துக்கள் மோதட்டும், ஆக்கபூர்வமான விமர்சனங்கள்மலரட்டும் என்று மக்களுக்காக போராடியவர்கள…
-
- 1 reply
- 2.4k views
-
-
தமிழீழ விடுதலைப் போராட்ட வரலாற்றில் இதுவரை 18,742 மாவீரர்கள் வீரச்சாவு. தமிழீழ விடுதலைப் போராட்ட வரலாற்றில் இதுவரை வீரச்சாவடைந்த மாவீரர்களின் எண்ணிக்கை 18742 என தமிழீழ மாவீரர் பணிமனை அறிவித்துள்ளது. 27.11.1982ம் ஆண்டு தொடக்கம் 20.11.2006ம் ஆண்டு வரை வீரச்சாவடைந்த மாவீரர்களின் விரிப்பு வெளிவந்துள்ளது. மாவீரர்கள் ஆண் மாவீரர்கள் - 14677 பெண் மாவீரர்கள் - 4065 மொத்த மாவீரர்கள் - 18742 கரும்புலிகள் தரைக் கரும்புலிகள் - 79 கடற்கரும்புலிகள் - 220 மொத்தக் கரும்புலிகள் - 299 எல்லைப்படை மாவீரர் - 279 நாட்டுப் பற்றாளர்கள் - 454 http://www.pathivu.com/index.php?subaction...amp;ucat=2&
-
- 12 replies
- 2.4k views
-
-
ஜனாதிபதித் தேர்தல் நடைபெற்ற கடந்த 26ம் திகதி இரவு இராணுவத்தினர் சிலரால் தேர்தல் ஆணையாளர் தயானந்த திஸாநாயக்கவின் மகள், மனைவி ஆகியோர் கடத்திச் செல்லப்பட்டு வோடஸ் எஜ் விடுதியில் தடுத்துவைக்கப்பட்டிருந்ததாகதகவல்கள் கிடைத்திருப்பதாக ஐக்கிய தேசியக் கட்சியின் சிரேஸ்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் தெரிவித்துள்ளதாக சிங்கள இணையம் தகவல் வெளியிட்டுள்ளது. தேர்தல் ஆணையாளரின் மகள் வீட்டிலிருந்து வெளியில் செல்வதைக் கடுமையான நிராகரித்ததாகவும் இதனையடுத்து படையினர் அவரைத் தாக்கி பலவந்தமாக அழைத்துச் சென்றதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இந்தச் சம்பவம் கடந்த 26ம் திகதி இரவு 12.30 அளவில் இடம்பெற்றதாகவும் இவர்கள் மறுநாள் 27ம் திகதி மாலை 5 மணிக்கே விடுவிக்கப்பட்டதாகவும் அந்த நாடாளுமன்ற உறுப்…
-
- 4 replies
- 2.4k views
-
-
ஜனாதிபதியின் பொதுமன்னிப்பின் கீழ் நேற்று விடுதலை செய்யப்பட்ட முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேக்காவுக்கு எதிராக கொழும்பு நகரில் பல இடங்களில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன. ' நன்றி மறந்த பாம்பு விடுதலை! மக்களே கவனமாக இருங்கள்' என சிங்களத்தில் எழுப்பட்ட சுவரொட்டிகள் கொழும்பு நகரில் ஒட்டப்பட்டுள்ளன. எனினும் இந்த சுவரொட்டி யாரால் ஒட்டப்பட்டது என்ற தகவல் அதில் காணப்படவில்லை. http://www.globaltam...IN/article.aspx
-
- 5 replies
- 2.4k views
-
-
மத்திய அரசுக்கு வேதனை தரும் முடிவு எடுக்க மாட்டேன் : கருணாநிதி பேட்டி சென்னை: இலங்கைத் தமிழர் பிரச்னை குறித்து வெளியுறவுத் துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜியுடன் சென்னையில் நேற்று நடந்த பேச்சுவார்த்தைக்குப் பின் முதல்வர் கருணாநிதி கூறியதாவது:பிரணாப் முகர்ஜி என்னுடன் பேசினார். அவர் தெரிவித்த விஷயங்கள் எல்லாம் முடிவடைந்தால் தான் முழு திருப்தி; முடிவடையும் என நம்புகிறேன். நார்வே முயற்சி அடிப்படையில் போர் நிறுத்தம் என்பது இப்போது ஆகாது. அதுபற்றிய பேச்சு இல்லை. இலங்கைப் பிரச்னை 40 ஆண்டுகளாக நடந்துவரும் போராட்டம்; நான்கு நாட்களில் முடிக்க முடியாது.போர் நிறுத்தம் என்பது, பொதுமக்களைக் காப்பாற்றத்தான். இலங்கை அரசின் உறுதிமொழி, பொதுமக்களை நிச்சயம் தாக்க மாட்டோம் என்பது. போர் நிறுத்தத…
-
- 10 replies
- 2.4k views
-
-
தமிழக அரசு இன்னும் பதினெட்டு நாள்களுக் குள் தமிழீழத்தை ஆதரித்து சட்ட சபையில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும். அவ்வாறு செய்யாவிடில் தீவுத்திடலில் 1000 தமிழர்கள் தீப்பந்தம் ஏந்தி தமிழீழத்துக்கு வெளிச்சம் காட்டுவோம். இவ்வாறு தெரிவித்திருக்கிறார் பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் டாக்டர் ராமதாஸ். இலங்கைத் தமிழர்களை சுட்டுக்கொல்லும் சிங்கள அரசைக் கண்டித்தும் இலங்கை அரசுக்கு கண்டனம் தெரிவிக்க மத்திய மாநில அரசுகளை வலியுறுத்தியும் பா.ம.க. சார்பில் தொடர் முழக்கப் போராட்டம் சென்னை ஆழ்வார் பேட்டை இலங்கைத் தூதரகம் முன்பு நேற்று நடந்தது. போராட்டத்துக்கு பா.ம.க. நிறுவுனர் டாக்டர் ராமதாஸ் தலைமை வகித்தார். அங்கு அவர் பேசியவை வருமாறு: ஈழத் தமிழர்களைக் கூண்டோடு ஒழித்து விடவேண்டும் …
-
- 1 reply
- 2.4k views
-
-
விடுதலைப் புலிகளின் அமைப்பின் முன்னணி தலைவர்களில் ஒருவரான கேர்ணல் நகுலன் என்பவர் திருமணம் செய்து கொண்டுள்ளதால், புலம்பெயர் நாடுகளில் உள்ள விடுதலைப் புலிகளின் உறுப்பினர்கள் கடும் கோபம் கொண்டுள்ளதாக சிங்கள இணையத்தளம் ஒன்று தெரிவித்துள்ளது. நகுலன் போர் நடைபெற்ற போது இறந்து விட்டார் என்று கருத்திய போதிலும் அண்மையில் அவர் யாழ்ப்பாணத்தில் பெண்ணொருவரை திருமணம் செய்து இல்லறவாழ்கையில் நுழைந்துள்ளார். புலிகளின் தலைவர் வே. பிரபாகரனின் மறைவிற்கு பின்னர், புலிகள் அமைப்பின் ஆயுதப் பிரிவிற்கு நகுலன் தலைமையேற்பார் புலம்பெயர் புலிகளின் நம்பிக்கை கொண்டிருந்தனர். எவ்வாறாயினும் நகுலனின் திருமணம் வைபவத்தில் புலிகளின் முன்னாள் ஊடகப் பேச்சாளர் தயா மாஸ்டர் உட்பட முன்னாள் புலி உறுப்பினர்…
-
- 20 replies
- 2.4k views
-
-
இலங்கையை நொறுக்கி, அள்ள.. அமெரிக்கா தீவிரம் - 100 பிரதிநிதிகளை களம் இறக்கியது! கொழும்பு: ஐ.நா. மனித உரிமைகள் கவுன்சில் கூட்டத்தில் இலங்கைக்கு எதிராக தான் கொண்டு வந்துள்ள தீர்மானத்தை வெற்றிகரமாக நிறைவேற்றும் பணியை சிறப்பாக மேற்கொள்வதற்காக வெளியுறவுத்துறையைச் சேர்ந்த 100 பிரதிநிதிகளை அமெரிக்கா களம் இறக்கியுள்ளதாக செய்திகள் கூறுகின்றன. மார்ச் 19 அல்லது 22ம் தேதி இலங்கைக்கு எதிரான தீர்மானம் மீது விவாதமும், தொடர்ந்து வாக்கெடுப்பும் நடைபெறவுள்ளதாக கூறப்படுகிறது. எனவே இலங்கைக்கு எதிரான தனது ஆதரவு வேட்டையை அமெரிக்கா தீவிரப்படுத்தியுள்ளது. மொத்தம் 47 உறுப்பினர்களைக் கொண்ட மனித உரிமைக் கவுன்சிலில் 22 நாடுகள் தங்களது ஆதரவை இதுவரை தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும் சில…
-
- 8 replies
- 2.4k views
-
-
ஒட்டுக் குழுத் தலைவரின் பாசிசப் படுகொலைகள் வெளிச்சத்துக்கு வருகின்றன!!! ஜ வெள்ளிக்கிழமைஇ 31 ஆகஸ்ட் 2007 ஸ ஜ ஜெயராசா ஸ ஈ.பி.டி.பி. ஒட்டுக் குழுவிலிருந்து வெளியேறி தலைமறைவாக உள்ள கிருபன் வெளியிடும் தகவல்கள். டக்ளஸ் ஆரம்பத்தில் கொழும்புக்கு வரும்போது வெறும் பத்துப் பேர் வரையே அவனுடன் இருந்தனர். கொழும்பில் உள்ள பிற ஒட்டுக்குழுக்களில் இருந்த முன்னை நாள் உறுப்பினர்களைத் தொடர்பு கொண்டு உள் ஊரில் ஆட்களைத் திரட்டியுள்ளான். இவ்வாறு திரட்டுபவர்களுக்கு அரசு தரும் கூலிப் பணம் பத்தாயிரம் ரூபா தருவதாகக் கூறி மலையகப் பகுதிகளிலும், 1991 க்குப் பின் தீவுப்பகுதிகளிலும், 1994 இல் இடம் பெயர்ந்த முகாம்களிலும் ஆட்களைச் சேர்த்துள்ளான். இதன்போது இணையும் ஆட்களில் எல்.ரி.ரி. ஆட்களும் இருக்கக…
-
- 1 reply
- 2.4k views
-
-
மூதூர் கிழக்கை கைப்பற்ற சிறிலங்கா இராணுவம் முயற்சி: புலிகள் பதில் தாக்குதல் [திங்கட்கிழமை, 28 ஓகஸ்ட் 2006, 15:03 ஈழம்] [ம.சேரமான்] திருகோணமலை மூதூர் கிழக்குப் பகுதியைக் கைப்பற்றும் நோக்கில் சிறிலங்கா இராணுவத்தினர் மும்முனையில் பாரிய அளவிலான இராணுவ நடவடிக்கை ஒன்றைத் தொடங்கியுள்ளனர். தமிழீழ விடுதலைப் புலிகளின் நிர்வாகப் பகுதிகளை நோக்கி பல்குழல் மற்றும் ஆட்லறி எறிகணைத் தாக்குதல்களுடன் இன்று அதிகாலை 4.30மணிக்கு நகர்வு முயற்சியினை சிறிலங்கா இராணுவத்தினர் தொடங்கினர். இந் நடவடிக்கைக்கு ஆதரவாக சிறிலங்கா கடற்படையினரும் தாக்குதல்களை மேற்கொண்டு வருவதாகவும் திருகோணமலை மாவட்ட அரசியல்துறைப் பொறுப்பாளர் சி.எழிலன் எமக்குத் தெரிவித்தார். சிறிலங்கா இராணுவத்தின் இ…
-
- 16 replies
- 2.4k views
-
-
எரிக் சொல்ஹெய்ம் ஜனாதிபதியின் ஆலோசகராக நியமனம் ! ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் ஆலோசகராக நோர்வேயின் சர்வதேச அபிவிருத்தி மற்றும் சுற்றாடல் முன்னாள் அமைச்சர் எரிக் சொல்ஹெய்ம் நியமிக்கப்பட்டுள்ளார். அவரோடு மாலைதீவு முன்னாள் ஜனாதிபதி மொஹமட் நஷீட்டும் ஜனாதிபதியின் ஆலோசகராக நியமிக்கப்பட்டுள்ளார். இவர்கள் சர்வதேச பருவநிலை தொடர்பான ஆலோசனைகளை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு வழங்குவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்று காலை இடம்பெற்ற ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுடனான சந்திப்பு மிகவும் சிறப்பு மிக்கது என எரிக் சொல்ஹெய்ம் தெரிவித்துள்ளார். மேலும் பசுமைப் பொருளாதார மறுசீரமைப்பு மற்றும் இலங்கையின் காலநிலை தொடர்பான தலைமைத்துவத்திற்கான தொ…
-
- 37 replies
- 2.4k views
- 1 follower
-
-
http://www.yarl.com/videoclips/view_video....75065399b0d1e48
-
- 1 reply
- 2.4k views
-
-
முன்னாள் அமைச்சரும் முன்னாள் ஜனாதிபதி சந்திரகா வின் சகோதரரும், இலங்கையின் முன்னாள் இரு பிரதமர்களினதும் மகனான அனுரா பண்டாரநாயக்கா மரணமடைந்துள்ளதாக ஊடகங்கள் தெரிவிக்கின்றன.சில காலமாக நோய் காரணமாக வைத்தியசாலையில் இவர் அனுமதிக்கபட்டிருந்தார். ஜானா
-
- 13 replies
- 2.4k views
-
-
வடபோர்முனை சமரில் மீட்கப்பட்ட ஆயுதங்களின் விபரம் [ த.இன்பன் ] - [ ஏப்பிரல் 23, 2008 - 08:20 PM - GMT ] வடபோர்முனையில் சிறிலங்கா படையினர் மேற்கொண்ட பாரிய நகர்வு முயற்சி மீதான விடுதலைப் புலிகளின் முறியடிப்புத் தாக்குதலின்போது பெருமளவு போராயுதங்களை விடுதலைப் புலிகள் மீட்டுள்ளனர். அவற்றின் விபரங்கள் வருமாறு: ரி-56-2ரக துப்பாக்கிகள் - 42 ரி-56-1ரக துப்பாக்கிகள் - 03 ரி-56 இலகு ரக இயந்திர துப்பாக்கி(எல்.எம்.ஜி) - 05 பி.கே. நடுத்தர இயந்திரத் துப்பாக்ககிகள் - 02 ஆர்.பி.ஜி உந்துகணைகள் - 05 40 மி.மீ. கிரனைட் லோஞ்சர்ஸ் - 03 கவச எதிர்ப்பு ஆர்.பி.ஜி கணைகள் - 07 மனித எதிர்ப்பு ஆர்.பி.ஜி கணைகள் - 21 ஆர்.பி.ஜி புரப்ளர்ஸ் - 26 தலைக்கவசங்கள் - 12 …
-
- 2 replies
- 2.4k views
-
-
தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தன் முன்னாள் உறுப்பினரும், தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவருமான பிள்ளையான் என அழைக்கப்படும் சிவனேசதுரை சந்திரகாந்தன் மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக் குழுவின் இணைத் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். பாராளுமன்ற கட்டிடத் தொகுதியில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ முன்னிலையில் அவர் இந்த பதவியை பொறுப்பேற்றார். முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பரராஜசிங்கம் கொலை வழக்கில் பிள்ளையான் தற்போது விளக்கமறியில் உள்ளமையும் குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/90467
-
- 23 replies
- 2.4k views
-
-
இலங்கையில் தமிழ் பொதுமக்களின் அழிவைத் தவிர்ப்பதற்கு ஐ.நா. அமைதிகாக்கும் படையை அனுப்புமாறு கோருவதற்கான வேளை செயலாளர் நாயகம் பான் கீ மூனுக்கு வந்துள்ளதாக தெற்காசியாவுடனான உறவுகளுக்கான ஐரோப்பிய பாராளுமன்றக் குழுவின் தலைவர் றொபேர்ட் இவான்ஸ் வலியுறுத்தியுள்ளார். இலங்கையில் தமிழ் மக்களுக்கு மனிதாபிமான உதவிகள் வழங்கப்படவேண்டியது அவசியம் என்ற தலைப்பில் றொபேர்ட் இவான்ஸ் ஐ.நா. செயலாளர் நாயகம் பான் கீ மூனுக்கு அனுப்பியுள்ள கடிதம் நேற்று வெள்ளிக்கிழமை லண்டன் ரைம்ஸ் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்டிருக்கிறது. அதில் றொபேர்ட் இவான்ஸ் தெரிவித்திருப்பதாவது:- ஐயா இலங்கையில் இரு தரப்பினராலும் நிபந்தனையற்ற யுத்தநிறுத்தம் ஒன்று உடனடியாக மேற்கொள்ளப்படவேண்டும் என்பதை நான் ஏற்ற…
-
- 16 replies
- 2.4k views
-
-
தமிழர்களுக்காக குரல் குடுப்பதினால் என்னையும் பயங்கரவாதி என்று சொல்லுகிறார்கள் - அவுச்திரெலியா தொழில்கட்சி பாராளுமன்ற உறுப்பினர் ஜோன் மேர்வி http://www.tamilbrisbane.com/video/johnmurphy.htm
-
- 3 replies
- 2.4k views
-
-
இனங்காணப்படாத நோயினால் பீடிக்கப்பட்ட இராணுவச் சிப்பாய் ஒருவர் உயிரிழந்துள்ளதாக வவுனியா காவற்துறையினர் தெரிவித்துள்ளனர். மன்னார் பெரியதம்பனை பிரதேசத்தில் கடமையில் ஈடுபட்டிருந்த இராணுவச் சிப்பாயே இவ்வாறு உயிரிழந்துள்ளார், நோயினால் பீடிக்கப்பட்ட இந்த சிப்பாய் வவுனியா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த போது உயிரிழந்துள்ளார். இதேவேளை இந்த இனங்காணப்படாத நோயயினால் பீடிக்கப்பட்ட மற்றுமொரு சிப்பாய் வவுனியா வைத்தியாசாலையில் இருந்து அனுராதபுரம் வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாகவும் காவற்துறையினர் கூறியுள்ளனர். http://isoorya.blogspot.com/ http://isoorya.blogspot.com/ http://isoorya.blogspot.com/ http://isoorya.blogspot.com/
-
- 11 replies
- 2.4k views
-
-
http://www.pathivu.com/tv/index.php?mact=N...nt01returnid=51
-
- 0 replies
- 2.4k views
-
-
கடந்த வாரம் ஈபிடிபி துணை இராணுவ ஆயுதக்குழுவின் உப தலைவரென்று கூறப்படும் யாழ் வடமராட்சி கரவெட்டி ஆனைப்பந்தியை சேர்ந்த செல்வி மகேஸ்வரி வேலாயுதம், அவரது தாயாரது இல்லத்தில் வைத்து இனந்தெரியாதோரால் சுட்டுக் கொல்லப்பட்டதும், அக்கொலையை விடுதலைப்புலிகளே மேற்கொண்டதாக இலங்கை அரசும், அதன் துணை இராணுவக்குழுக்களும் போட்டி போட்டு பிரச்சாரங்களில் ஈடுபட்டு வருவதும் தெரிந்ததே. http://www.orunews.com/?p=1101
-
- 4 replies
- 2.4k views
-
-
வன்னித் தமிழ் மக்களின் வாழ்விடங்களைப் பறித்து.. அவர்களின் உயிர் வாழ்வை நிராகரித்து நிற்கும் சிங்கள பேரினவாத தேசத்திற்கு யாழ்ப்பாண அரசாங்க அதிபர் கணேசின் ஏற்பாட்டின் கீழ் சிறீலங்கா படையினரால் ஆக்கிரமிக்கப்பட்ட ஏ 9 நெடுஞ்சாலை வழியாக கருவாடு, இறால் , வெங்காயம், பீற்றூட் போன்ற பொருட்கள் சிங்கள தேசத்திற்கு புரதச் சத்தூட்டி ஆடம்பரமாக வாழ அனுப்பப்படுகின்றனவாம். ஆனால் வன்னியில் வாழும் மக்களை இதே சிங்கள தேசம் பட்டினி போட்டுக் கொல்வதை இந்த யாழ்ப்பாண அரசாங்க அதிபர் ஒரு தடவை தானும் மனிதாபிமானக் கண்ணோட்டத்தில் பார்த்துக் கருத்துக் கூறவில்லை என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. யாழ்ப்பாண மக்களின் தேவையையே பூர்த்தி செய்ய போதிய கடல் வாழ் புரத உணவுகள் இல்லாத நிலையில் ஒட்டுக்குழுக்கள…
-
- 18 replies
- 2.4k views
-
-
யாழிலுள்ள ஞானம் விடுதியின் பாதுக்காப்பை பலப்படுத்துமாறு இந்தியா ஆலோசனை திகதி: 28.12.2008 // தமிழீழம் // [சங்கிலியன்] யாழ்ப்பாணம் ஞானம் உல்லாச விடுதியில் பாதுகாப்பைப் படையினர் இந்திய விமானப்படை அதிகாரிகளின் ஆலோசனைகளுக்கு இணங்க பலப்படுத்தி வருகின்றனர். விடுதலைப் புலிகளின் வான் தாக்குதலுக்கு ஈடுகொள்ளும் வகையில் பாரிய பதுங்குகுழி பங்களா போன்று இங்கு அமைக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்படுகிறது. பலாலியில் வைத்து இந்திய விமானப்படை அதிகாரிகள் இவ் ஆலோசனையை வழங்கினாராம். கடந்த வாரம் இரு இந்திய விமானப்படையினர் பலாலிக்குச் சென்று ஆலோசனைகளை நடத்தியிருந்தது தெரிந்ததே. சங்கதி
-
- 0 replies
- 2.4k views
-