ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142786 topics in this forum
-
சிறிலங்கா இராணுவத்துடன் சேர்ந்தியங்கும் துணை இராணுவக் குழுவான கருணா குழு, மற்றொரு துணை இராணுவக் குழுவான ஈ.பி.டி.பியினருடன் இணைய உள்ளதாக சிங்கள வார ஏடான "லக்பிம" தெரிவித்துள்ளது. தொடர்ந்து வாசிக்க
-
- 9 replies
- 2.4k views
-
-
2ஆம் இணைப்பு‐கே.பி உட்பட 21 பேரை விசேட விமானத்தில் அரசாங்கம் வடக்கிற்கு அழைத்துச் சென்றுள்ளது ‐ விஜிதஹேரத் குற்றச்சாட்டு‐ 22 June 10 11:31 am (BST) கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள விடுதலைப்புலிகளின் முக்கியஸ்தரும் அந்த அமைப்பின் தலைவர்களில் ஒருவரான கேபி மற்றும் 20 வெளிநாட்டு தமிழ் பிரதிநிதிகள் அடங்களாக 21 பேர் வடக்கிற்கு விஜயம் செய்துள்ளதாக ஜனநாயக தேசிய கூட்டமைப்பு தெரிவிக்கின்றது. இவர்களை அரசாங்கமே கொழும்பிலிருந்து அழைத்துச் சென்று பத்திரமாக கொழும்பிற்கு திருப்பி அழைத்து வந்துள்ளதாகவும் ஜனநாயக தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் விஜித்த ஹேரத் குற்றம் சாட்டுகின்றார். அரச விமானம் ஊடாக அழைத்துச் செல்லப்பட்ட இவர்கள் பலாலி முகாமிற்குச் சென்ற…
-
- 18 replies
- 2.4k views
-
-
இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் அரசியலமைப்பின் 70 ஆவது சரத்தின் மூலம் தனக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களின் அடிப்படையில் மற்றும் 1981 ஆம் ஆண்டு இலக்கம் 1 ஆம் இலக்க நாடாளுமன்றத் தேர்தல்கள் சட்டத்தின் 10 வது பிரிவின் விதிகளின்படி ஜனாதிபதி வர்த்தமானியை வெளியிட்டுள்ளார். இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் பாராளுமன்றத்தை கலைத்து புதிய பாராளுமன்றத்தை 2024 நவம்பர் 21 ஆம் திகதி கூட்டுவதற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. மேலும் 2024 ஆம் ஆண்டு நவம்பர் 14 ஆம் தேதி புதிய நாடாளுமன்ற உறுப்பினர்களைத் தேர்ந்தெடுப்பதற்கான தேதியாகவும் அது நிர்ணயிக்கிறது. வர்த்தமானி அறிவித்தல் மேலும் அக்டோபர் 04 ஆம் தேதி தொடங்கி அக்டோபர் 11, 2024 நண்பகல் 12 மணிக்கு முடிவடையும் காலத்தை வே…
-
-
- 37 replies
- 2.4k views
- 2 followers
-
-
யாழ். பல்கலைக்கழகத்தில் கல்வி பயிலும் சிங்கள மாணவிகள் தங்கிருக்கும் வீட்டுக்கு இனம்தெரியாத நபர்கள் மது போத்தல்கள் மற்றும் கற்கள் என்பனவற்றை வீசி தாக்குதல் நடத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. யாழ். பல்கலைக்கழகத்திற்கு பின் புறமாக உள்ள கம்பஸ் லேனில் தனியார் வீடு ஒன்றை வாடகைக்கு பெற்று சிங்கள மாணவிகள் தங்கி கல்வி கற்று வருகின்றனர். நேற்று நள்ளிரவு மது போதையில் குறித்த வீட்டுக்கு சென்ற சிலர் கத்தி கூச்சலிட்டதுடன், வாயில் கதவையும் தள்ளி திறக்க முற்பட்டுள்ளனர். கதவை திறக்க முடியாது போனமையினால் வீட்டுக்கு கற்கள் மற்றும் வெற்று மது போத்தல்கள் என்பவற்றை வீசியுள்ளார்கள். இதனால் வீட்டு யன்னல் கண்ணாடிகள் உடைந்துள்ளதுடன் வீட்டின் முன்பகுதி முழுவதும் வீசப்பட்ட போத்தல்களின் கண்ணாடிகள் ச…
-
- 30 replies
- 2.4k views
-
-
போர் நிறுத்த ஒப்பந்தத்தை தொடர்ந்தும் நடைமுறைப்படுத்தத் தயாராக இருப்பதாக தமிழீழ விடுதலைப் புலிகள் அறிவித்துள்ளதனை சிறிலங்கா அரசாங்கம் நிராகரித்துள்ளது. தொடர்ந்து வாசிக்க
-
- 6 replies
- 2.4k views
-
-
கொலை வெறிப்பாடல் வெளிவந்ததை தொடர்ந்து உலகெங்கிலும் உள்ள பல்வேறு கலைஞர்களும், ரசிகர்களும் பல்வேறுபட்ட பாடலின் பதிப்புக்களை வெளியிட்டவண்ணம் உள்ளனர். அதன் புதிய வடிவமாக தற்போது யாழ்ப்பாணத்திலிருந்து வெளியிடப்பட்டுள்ள “என் தமிழ் மொழிமேல் உனக்கேன் இந்த கொலவெறிடா” இவ் இசைக் காணொளியில் யாழ்ப்பாணத்தை மையப்படுத்தி நகரின் தோற்றத்தினை காண்பிக்கும் காட்சிகள் இணைக்கப்பட்டுள்ளதுடன் யாழில் முதன் முதலாக அதி உயர் வடிவத்தில் (1080p HD)தயாரிக்கப்பட்டுள்ளது. கொலவெறிப்பாடலின் வரிகளை முற்றிலுமாக மாற்றியமைத்து இசைக்கு மேலும் மெருகூட்டிய பாடலின் பரிணாமம் பலரையும் வெகுவாக கவர்ந்துள்ளது. இளம் இசையமைப்பாளர் எஸ்.ஜே.ஸ்ரலின் அவர்கள் பாடல் வரிகளை எழுதி, பாடலையும் பாடியுள்ளார். அண்மையில் இவர் இசையமை…
-
- 7 replies
- 2.4k views
-
-
பேராதனை பல்கலைக்கழக மாணவி பானுசா சிவப்பிரகாசம் தற்கொலை தொடர்பினில் முன்னாள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் மற்றும் புலனாய்வு கட்டமைப்பின் முன்னாள் பணிப்பாளர் ஹெந்தவிதாரண ஆகியோரினை பங்காளிகளாக கொண்ட டாண் தொலைக்காட்சி குழும ஊடகவியலாளர் ஒருவர் தேடப்படுகின்றார். அர்ஜீனன் கோவிந்தபிள்ளை என்றழைக்கப்படும் குறித்த நபர் தன்னையொரு ஊடகவியலாளர் எனவும் தன்னை காவல்துறையோ எவருமோ ஒன்றும் செய்யமாட்டாதெனவும் சவால் விடுத்தே பாலியல் துண்புறுத்தல்களை செய்திருந்ததாக தெரியவருகின்றது. முகப்புத்தகம் மற்றும் கைதொலைபேசி ஊடாக விடுக்கப்பட்ட தொடர்ச்சியான பாலியல் துன்புறுத்தல்கள் காரணமாகவே குறித்த மாணவி தற்கொலை செய்து கொண்டுள்ளமை விசாரணைகளினில் கண்டறியப்பட்டுள்ளது. மாணவியின் தற்கொலையினையடுத்து குறித…
-
- 2 replies
- 2.4k views
-
-
இலங்கையின் வடபகுதியில் சிறிலங்கா மேற்கொண்டு வரும் இராணுவ நடவடிக்கைகளுக்கு இந்தியா பெருமளவில் உதவுகிறது என்று இந்திய கொள்கை வகுப்புப் பிரிவான "றோ"வின் முன்னாள் அதிகாரி பி.இராமன் தெரிவித்துள்ளார். தொடர்ந்து வாசிக்க
-
- 7 replies
- 2.4k views
-
-
ஊடகவியலாளர் சிவராம் படுகொலை லலித் குகன் காணாமலாக்கப்பட்டமை உட்பட் முக்கிய ஏழு சம்பவங்கள் குறித்து விசாரணைகளை துரிதப்படுத்துமாறு பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சு பொலிஸாருக்கு உத்தரவிட்டுள்ளது. உயிர்த்த ஞாயிறு தாக்குதல் மத்திய வங்கி பிணைமுறி மோசடி குறித்த விசாரணைகளையும் தீவிரப்படுத்துமாறு பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சு வேண்டுகோள் விடுத்துள்ளது. https://www.virakesari.lk/article/196135
-
-
- 37 replies
- 2.4k views
- 1 follower
-
-
http://sundaytimes.lk/090906/International/int_01.html http://www.tamilnet.com/art.html?catid=79&artid=25467
-
- 1 reply
- 2.4k views
-
-
கதிர்காமம் நோக்கிய யாத்திரைக்கு அனுமதி கிடைத்துள்ளது May 23, 2020 யாழிலில் இருந்து கதிர்காமத்தை நோக்கிய யாத்திரையை ஆரம்பிக்கவுள்ளதாக யாத்திரைக்கு தலமை தாங்கி செல்லவுள்ள சி. ஜெயசங்கரன் தெரிவித்துள்ளார். யாழ்.ஊடக அமையத்தில் இன்று மாலை நடைபெற்ற ஊடக சந்திப்பின் போதே அவ்வாறு தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில் , கொரோனோ வைரஸ் தாக்கத்தினால் , இம்முறை கதிர்காமம் நோக்கிய பாதயாத்திரை தடைப்படும் என எண்ணியிருந்தோம். ஆனால் முருகனின் அருளால் இம்முறை யாத்திரைக்கு அருள் கிடைத்துள்ளது. எமக்கு பாத யாத்திரை செல்வதற்கான அனுமதி தற்போது கிடைத்துள்ளது. எதிர்வரும் 30ஆம் திகதி தொண்டமனாறு செல்வச்சந்நிதியில் இருந்து , மோகனதாஸிடம் வேல் பெற்று , கதிர்காமத்தை ந…
-
- 15 replies
- 2.4k views
-
-
விதுரன் வன்னியில் யுத்த நிலைமை மோசமடைகிறது. பூநகரி மற்றும் கிளிநொச்சி நோக்கிய படை நகர்வு மிகத் தீவிரமடைந்துள்ள நிலையில் விடுதலைப் புலிகளின் பதில் தாக்குதலும் தீவிரமடையத் தொடங்கியுள்ளது. நீண்ட நாட்களாக மௌனம் சாதித்து வந்த புலிகள் போர்க்கோலம் பூண்டு விட்டதால் இனி வன்னிக் களமுனை அதிரப்போகிறது. இதுவரை இருந்த நிலைமை இனியில்லையென்ற நிலையில் புலிகளின் பதிலடியை இனி ஒவ்வொரு கணமும் படையினர் எதிர்கொள்ளப் போகின்றனர். வன்னியை முழுமையாகக் கைப்பற்றிவிட வேண்டுமென்பதற்காக அரசும் படைத்தரப்பும் எதனையும் செய்யத் தயாராகிவிட்டன. வன்னியிலுள்ள நான்கு இலட்சத்திற்கும் மேற்பட்ட மக்களை வெளியேற்றிவிட்டு வன்னியை முழுமையாகக் கைப்பற்றிவிடுவதற்காக சர்வதேச சமூகத்துடனும் சர்வதேச தொண்டர் அமைப…
-
- 0 replies
- 2.4k views
-
-
உடனடியாக வடக்கு- கிழக்கில் சர்வஜன வாக்கெடுப்பை நடத்துங்கள்: நாட்டில் தமிழர்கள் இணைந்துவாழ முடியாது..! (ஆர்.யசி, எம்.ஆர்.எம்.வசீம்) பிரபாகரனை கொன்று இழுத்து வந்தேன் என ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ கூறியுள்ளமையே இந்த நாட்டில் திட்டமிட்ட இனப்படுகொலை இடம்பெற்றுள்ளது என்பதற்கு இருக்கும் மிக முக்கிய வாக்குமூலமாகும். இதனை பிரதான சாட்சியாக வைத்து சர்வதேச மனித உரிமை அமைப்புகள் இலங்கைக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.ஸ்ரீதரன் சபையில் தெரிவித்தார். தமிழர்கள் இனியும் இந்த நாட்டின் சிங்களவர்களுடன் இணைந்து வாழ முடியுமா என்பதை அறிந்துகொள்ள வடக்கு -கிழக்கில் சர்வஜன வாக்கெடுப்பு ஒன்றினை நடத்த சர்வதேச நாடுகள் முன்வர வ…
-
- 29 replies
- 2.4k views
-
-
இவ்வாண்டிற்கான தேசியத் தலைவரின் கொள்கைப்பிரகடண உரை என்னவாக இருக்கும்? யாருக்காவது ஏதாவது யோசனைகள்???? *தமிழீழப்பிரகடணம் *ஒப்பந்தத்தை கிளித்தெறிந்து முழுமையான போர் *மீண்டும் பேச்சுகள் பெறுமையிளந்து காத்திருக்கிறோம்........
-
- 7 replies
- 2.4k views
-
-
யாழ்.பல்கலையில் நாளை தியாகி சிவகுமாரனின் நினைவு நிகழ்வு தமிழின விடுதலைக்காய் முதல் முதலில் வீரச்சாவடைந்த தியாகி பொன்.சிவகுமா ரனின் நிகழ்வும் தமிழீழ மாணவர் எழுச்சி நாள் நிகழ்வும் நாளை செவ்வாய்கிழமை முற்பகல் 10 மணிக்கு யாழ்.பல்கலைக்கழக கைலாசபதி கலை யரங்க முன்றிலில் நடைபெறவுள்ளது இதேவேளை தமிழீழ மாணவர் எழுச்சி நாளை முன்னிட்டு கிளிநொச்சி மாவட்ட அனைத்து பல் கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற் பாட்டில் நேற்று முகமாலை முன்னரங்கள நிலைகளுக்குச் சென்ற மாணவர்கள் முன் னரங்க நிலைத் தளபதிகள் போராளிகளைச் சந்தித்ததுடன் தாம் கொண்டு சென்ற உண வுப் பொருள்களையும் அவர்களுக்கு வழங் கினர். -உதயன்
-
- 8 replies
- 2.4k views
-
-
யாழ். பல்கலையில் மிருகத்தனம்- புதுமுக மாணவனின் செவிப்பறை கை, கால் உடைந்தது! Published on March 29, 2012-6:11 pm · யாழ். பல்கலைக்கழகத்தின் சிரேஸ்ட மாணவர்களினால் மேற்கொள்ள ப்பட்ட பகிடிவதையினால் பல்கலைக்கழக முதலாம் வருட கலை பீட மாணவன் படுகாயமடைந்த நிலையில் இன்று வியாழக்கிழமை யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். பல்கலைக்கழகத்திற்குள் வைத்து இந்த மாணவனை சிரேஸ்ட மாணவர்கள் பலர் தாக்கியுள்ளதாகவும், மாணவனின் செவிப்பறை உடைக்கப்பட்டு காது கேட்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும், கை, கால்களும் உடைக்கப்பட்டு படுகாயமடைந்துள்ளார் என்றும் அந்த மாணவனின் பெற்றோர் யாழ். பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர். யாழ். பல்கலைக்கழக கலை பீடத்தின் முதலாம் வருட மாணவனா…
-
- 28 replies
- 2.4k views
-
-
முன்னாள் போராளி- மனைவி- தற்கொலையும் மர்மங்களும்-குளோபல் தமிழ்ச் செய்திகளின் புலனாய்வுச் செய்தியாளர் வாழ்க்கை வெறுத்துவிட்டது அதனால் குறுணல் நஞ்சைக் குடித்து தற்கொலை செய்கிறோம் என்று குறிப்பிட்டு முன்னாள் போராளியும் அவரது மனைவியும் தற்கொலை செய்து கொண்ட சம்பவத்தின் பின்னணியில் வறுமை காரணம் அல்ல என கண்டறியப்பட்டுள்ளது. முல்லைத்தீவு, முள்ளியவளை என்ற முகவரியைச் சேர்ந்த 29 வயதான நிரஞ்சனும் 27 வயதான சங்கீதாவும் இவ்வாறு தற்கொலை செய்துள்ளனர். இந்த சம்பவம் கடந்த 16ஆம் திகதி இடம்பெற்றுள்ளது. தமது மரணத்திற்கான காரணமாக வாழ்க்கை வெறுத்து விட்டதால் இந்த முடிவுக்கு வந்ததாக குறித்த முன்னாள் போராளியும் அவரது மனைவி சங்கீதாவும் தமது மரண சாசனத்தில் குறிப்பிட்டுள்ளனர். எதற்காக வ…
-
- 18 replies
- 2.4k views
-
-
சிறிலங்கா வான் படையினர் இன்று நடத்திய தாக்குதல் குறித்து வெளியிடப்படும் தகவல்களை மலிவுப்பரப்புரை என்று வர்ணித்திருக்கும் தமிழீழ விடுதலைப் புலிகளின் படைத்துறைப் பேச்சாளர் இராசையா இளந்திரையன், இந்த தகவல்களில் எதுவித உண்மையும் இல்லை என்று "புதினம்" இணையத்தளத்திடம் தெரிவித்துள்ளார். தொடர்ந்து வாசிக்க
-
- 1 reply
- 2.4k views
-
-
ஜெனிவா : ஐ.நா சபையின் மனித உரிமைகள் குழுவில் இலங்கையில் நடைபெற்ற போரில் நடந்த மனித உரிமை மீறல்கள் குறித்து இலங்கை விசாரிக்க வேண்டும் என்று தாக்கல் செய்த தீர்மானம் வெற்றி பெற்றது அறிந்ததே. இச்சூழலில் இலங்கைக்கு எதிராக வாக்களித்தவர்களை இலங்கை மிரட்டியதாக ஐ.நா சபையின் மனித உரிமை தலைவர் நவி பிள்ளை புகார் கூறியுள்ளார். எப்படியாவது அமெரிக்கா கொண்டு வந்த இத்தீர்மானம் தோற்கடிக்கப்பட வேண்டும் என்று இலங்கை பம்பரமாக வேலை செய்தும் தீர்மானம் வெற்றி பெற்றது. இலங்கையில் நடைபெற்ற போரில் இலங்கைக்கு பெரிதும் உதவியதாக சொல்லப்படும் இந்தியா தமிழக கட்சிகளின் அழுத்தத்தால் இலங்கைக்கு எதிரான நிலைப்பாடு எடுத்ததும் தீர்மானம் வெற்றி பெற முக்கிய காரணமாக அமைந்தது. இச்சூழலில் ஒட்டெடுப்புக்கு முன…
-
- 12 replies
- 2.4k views
-
-
வணங்காமண் கப்பல் மீது இந்திய கடற்படை சந்தேகம்-வெளியேற உத்தரவு திங்கள்கிழமை, ஜூன் 22, 2009, 17:26 [iST] சென்னை: வன்னித் தமிழர்களுக்காக ஐரோப்பிய தமிழர்கள் அனுப்பி வைத்த நிவாரணப் பொருட்களுடன், இலங்கைக்குச் சென்று அங்கிருந்து திருப்பி விடப்பட்டு, சென்னை அருகே நின்று கொண்டிருந்த வணங்காமண் கப்பல் சந்தேகத்திற்குரியதாக இருப்பதாகவும், இந்திய கடல் எல்லையை விட்டு செல்லுமாறும் இந்தியா இன்று உத்தரவிட்டது. இந்த உத்தரவைத் தொடர்ந்து சென்னை அருகே நின்று கொண்டிருந்த வணங்காமண் கப்பல் அங்கிருந்து கிளம்பிச் சென்றது. ஐரோப்பிய நாடுகளில் வசிக்கும் தமிழர்கள், வன்னித் தமிழர்களுக்காக உணவு, மருந்து, குடிநீர் உள்ளிட்டவற்றை சேகரித்து கேப்டன் அலி என்ற சிரிய நாட்டுக் கப்பலில் அனு…
-
- 11 replies
- 2.4k views
-
-
சிங்களவர் எதிர் சிங்களவர் - இந்த முறை ஆயுதம் தூக்கப்போவது யார்? - வேல்ஸ் இல் இருந்து அருஷ் Posted by: on Oct 23, 2010 தென்னிலங்கை மக்களும், அரசியல் கட்சிகளும் சிறீலங்கா அரசுக்கு எதிராக போராடும் நிலை மெல்ல மெல்ல உருவாகி வருகின்றது. சிறீலங்கா அரச தலைவர் மகிந்தா ராஜபக்சாவின் அதிகாரம் தற்போது சிங்கள மக்களுக்கும் அச்சுறுத்தலாக மாறியதன் விளைவு தான் இது. 1971 ஆம் ஆண்டு மக்கள் விடுதலை முன்னனி எனப்படும் ஜே.வி.பியினர் மேற்கொண்ட புரட்சியை தொடர்ந்து பல பத்தாயிரம் சிங்கள இளைஞர்கள் படுகொலை செய்யப்பட்டடிருந்தனர். இந்திய இராணுவத்தின் துணையுடன் தான் சிறீமாவோ பண்டாரநாயக்கா அரசு அதனை நிறைவேற்றியிருந்தது. அன்று இந்தியர்களை பகைவர்களாக தமது மனதில் பதித்துக் கொண்ட சிங்கள இனம் …
-
- 8 replies
- 2.4k views
-
-
Monday, June 13, 2011, 22:09உலகம் பிரித்தானியாவின் சனல்-4 தொலைக்காட்சி நாளை (14-06-2011) இரவு ஒளிபரப்பவுள்ள ‘இலங்கையின் படுகொலைக்களம்’ என்ற நிகழ்ச்சியைப் பார்க்குமாறு தனது இரசிகர்களிடம் மயா (MIA) என அழைக்கப்படும் உலகப் புகழ்பெற்ற முதலாவது ஈழத்து பொப் பாடகி மாதங்கி அழைப்பு விடுத்துள்ளார். http://twitter.com/#!/_M_I_A_ ருவிற்றர் (Twitter) வலையில் மட்டும் இரண்டு இலட்சத்து ஆறாயிரத்திற்கு மேற்பட்ட இரசிகர்களைக் கொண்டுள்ள அனைத்துலக தமிழ் பாடகியான மயா, ருவிற்றர் இணையவலை மூலம் தனது இரசிகர்களிடம் இந்தக் கோரிக்கையை முன்வைத்திருப்பதுடன், பிரித்தானியா தவிர்ந்த ஏனைய நாடுகளிலுள்ளவர்கள் பார்ப்பதற்கு ஏதுவாக சனல-4 (Channel-4) தொலைக்காட்சியின் இணைய இணைப்பையும் அதில் இணைத்திருக்க…
-
- 21 replies
- 2.4k views
- 1 follower
-
-
மாவை – அனந்தி – சுமந்திரன் அமெரிக்கா பயணமாகின்றனர்:- 28 அக்டோபர் 2013 தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள் அமெரிக்காவிற்கு விஜயம் செய்துள்ளனர். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களான எம்.ஏ. சுமந்திரன் மற்றும் மாவை சேனாதிராஜா ஆகிய இருவருமே இவ்வாறு அமெரிக்காவிற்கு விஜயம் செய்ய உள்ளனர். நான்கு நாள் விஜயமொன்றை மேற்கொண்டு பாராளுமன்ற உறுப்பினர்கள் அமெரிக்காவிற்கு விஜயம் செய்ய உள்ளனர். அமெரிக்கத் தமிழ்;ப் பேரவையினால் விடுக்கப்பட்ட அழைப்பினை ஏற்றுக் கொண்டு குறித்த பாராளுமன்ற உறுப்பினர்கள் அமெரிக்கா விஜயம் செய்ய உள்ளனர். இதேவேளை, அமெரிக்க அரசாங்கத் தரப்பினரை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள் சந்திப்பார்களா என்பது உற…
-
- 31 replies
- 2.4k views
-
-
தள்ளாடியை நோக்கிப் புலிகள் சனி இரவு கடும் ஷெல் தாக்குதல் [Monday March 03 2008 06:48:22 AM GMT] [யாழினி] மன்னார், தள்ளாடிப் படைமுகாம் மற்றும் முருங்கன் பொலிஸ் காவலரண் ஆகியவற்றின்மீது நேற்றுமுன்தினம் இரவு 9.15 மணியிலிருந்து விடுதலைப் புலிகள், கடும் ஷெல் தாக்குதல்களை நடத்தினர். மன்னார், மாந்தை தோப்புப் பகுதியிலிருந்தே இந்தத் தாக்குதல்களை அவர்கள் மேற்கொண்டனர் என்று கூறப்படுகின்றது. இந்தத் தாக்குதல்களை அடுத்து நேற்றுக்காலை 7.15 மணியிலிருந்து நண்பகல் 12 மணிவரை தலைமன்னார் மதவாச்சி இடையிலான போக்குவரத்துகள் முற்றாகத் தடைப்பட்டிருந்தன. இதேசமயம், மன்னார் மூர் வீதி மற்றும் மன்னார் பொதுவைத்தியசாலைப் பிரதான வீதி ஆகிய இடங்களில் படையினர் மற்றும் பொலிஸா…
-
- 1 reply
- 2.4k views
-
-
நன்றி, வாழ்த்துக்கள். The people who signed this formal request are humbly asking you to take action to end the war in Sri Lanka. Total Signatures : 110042
-
- 4 replies
- 2.4k views
-