ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143520 topics in this forum
-
தீயினில் வெந்த தியாகி முத்துக்குமரனின் பிறந்த நாள் இன்று தமிழீழத்தைக் காக்கக்கோரி தன்னுயிரைக்கொடுத்து தமிழகத்தில் பேரெழுச்சியை ஏற்படுத்திய ஈகி முத்துக்குமரனின் பிறந்த நாள் இன்று. தமிழ்நாட்டு மக்களால் மறக்கப்பட்ட அத்தியாகியை மீனகம் மூலம் மீண்டும் உங்களுக்கு நாங்கள் நினைவுபடுத்துகிறோம். தமிழ்நாடு, தூத்துக்குடி மாவட்டம், புலியநல்லூரைச் சேர்ந்த முத்துக்குமரன் (28) எனும் இளைஞர் சென்னை நுங்கம்பாக்கத்தில் நடுவண் அரசு அலுவலகங்கள் அமைந்துள்ள சாஸ்திரி பவனுக்கு சனவரி 29 அன்று காலை வந்து திடீரென, ஈழத்தமிழர்களை வாழ்த்தி முழக்கமிட்டும், அவர்களைக் காப்பாற்ற கோரியும் சத்தமிட்டபடி மண்எண்ணெயை உடலில் ஊற்றி தீயை பற்ற வைத்தார். அவர் கையிலிருந்த ஈழத்தமிழரின் போராட்டத்திற்…
-
- 16 replies
- 2.2k views
-
-
விடுதலைப்புலிகள் தொடர்பில் கனடாவின் நிலைப்பாடு தொடர்பில் இலங்கை இராணுவம் கவலை! கனடாவில் நடைபெறுகின்ற தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு ஆதரவான அமைப்புகளின் நிகழ்வுகள் தொடர்பில் கனேடிய அரசாங்க் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரப்பட்டுள்ளது. இலங்கை இராணுவ பேச்சாளர் ருவான் வணிகசூரிய இதனைக் கோரியுள்ளார்.கொழும்பில் நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் வைத்து அவர் இதனைத் தெரிவித்துள்ளார். கனடாவில் முக்கிய அதிகாரி ஒருவர், விடுதலைப் புலிகள் தடை செய்யப்பட்ட இயக்கம் இல்லை என்று அறிவித்திருப்பதாக அவர் இதன் போது கவலை தெரிவித்துள்ளார். இவ்வாறான கருத்துக்களுக்கு கனேடிய அரசாங்கம் இடமளிக்க கூடாது என்றும் அவர் தெரிவித்துள்ளார். http://tamilleader.com/?p=33101
-
- 1 reply
- 2.2k views
-
-
புலிகள் பதிலடிகொடுக்க முனைந்தால் அதனை எதிர்கொள்ள படைத்தரப்புத் தாயார் எனச்சவால் விடுத்துள்ளமை ரம்புக்கலவின் அறியாமையைக் காட்டுகிறது. புலிகள் பதிலடி கொடுக்க முனைந்தால் அதனைச்சந்திக்க படையனர் தயாரென பாதுகாப்பு விவகாரங்களுக்காகப் பேசவல்லவரும் அமைச்சருமான கெஹலிய ரம்புக்வெல தெரிவித்திருப்பது புலிகளின் போரியல் வரலாற்றை அறிநிதிருக்கவில்லை அல்லது மறந்துவிட்டுப்பேசுகிறார் என எண்ணவேண்டியுள்ளது. குடும்பிமலையைக் கைப்பற்றியவுடன் கிழக்கு மாகானத்தை முழமையாக படையினர் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்து அங்கிருந்து புலிகள் விரட்டியடிக்கப்பட்டுவிட்டன
-
- 1 reply
- 2.2k views
-
-
கொலன்னாவை நகரசபைத் தலைவரான ரவீந்திர உதயசாந்தவை வெள்ளை வானில் சென்றோர் கடத்திச் செல்ல மேற்கொண்ட முயற்சி தோல்வியில் முடிந்துள்ளதாக குளோபல் தமிழ்ச் செய்தியாளர் தெரிவித்துள்ளார். இன்றிரவு இலங்கை நேரம் பத்து மணியளவில் வெள்ளை வானில் சென்றோர் கொலன்னாவை நகர சபைத் தலைவரைக் கடத்திச் செல்ல முயற்சித்த போது நகர சபைத் தலைவரின் அதரவாளர்களுக்கும் கடத்தல்காரர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. இதன் பின்னர் வெள்ளை வானில் சென்றோர் தப்பிச் செல்ல முயற்சித்தனர். இருப்பினும் அவர்களை கொலன்னாவைச் சந்தியில் வைத்து நகர சபைத் தலைவரின் ஆதரவாளர்கள் சுற்றி வளைத்து பிடித்துள்ளனர். கொலன்னாவை நகர சபைத் தலைவரைக் கடத்திச் செல்வதற்காக WP CC 8649 என்ற இலக்கத்தைக் கொண்ட வெள்ளை வானில் சென்றோர் இராணுவத்தி…
-
- 11 replies
- 2.2k views
-
-
நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் உத்தியோகபூர்வ செய்தித்தளமானwww.naathamnews.com இணையத்தளத்தை பிரதமர் வி.உருத்திரகுமாரன் அவர்கள் தொடக்கிவைத்தார். நா.த.அரசாங்கத்தின் உத்தியோகபூர்வ மூன்றாவது பாராளுமன்ற அமர்வு அமெரிக்காவில் இடம்பெற்று வருகின்றது. இந்த அமர்வின் போதே நாதம் செய்திகள் இணையத்தளத்தை பிரதமர் வி.உருத்திரகுமாரன் அவர்கள் தொடக்கிவைத்தார். நாதம் செய்தித்தளத்தில் நா.த.அரசாங்கம் உத்தியோகபூர்வ செய்திகள் மற்றும் அறிக்கைகளை அனைவரும் பார்வையிடலாம். இதேவேளை தமிழர் நலனை முன்னிறுத்திய பிற செய்திகளும் இத்தளத்தில் இணைக்கப்படும் என தகவல்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதேவேளை நா.த.அரசாங்கத்தின் தகவல்துறை அமைச்சகத்தின் செயற்த்திட்டங்களின் விரிவாக்கத்தின் ஒரு கட்டம…
-
- 2 replies
- 2.2k views
-
-
மாவிலாறு நோக்கி சிங்களப் படைகள் பாரிய படை நகர்வு - பாண்டியன் வுhரசளனயலஇ 10 யுரபரளவ 2006 11:59 மாவிலாறு அணைப்பகுதியை ஆக்கிரமிக்கும் நோக்குடன் கல்லாறு படைத்தளத்திலிருந்து ஆயிரக்கணக்கான சிங்கள இராணுவத்தினர் பாரிய ஆக்கிரமிப்பு முயற்சி ஒன்றை மேற்கொண்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆட்டிலறி மற்றும் பல்குழல் பீரங்களின் செறிவான சூட்டாதரவோடும் வான்படை வானூர்திகளின் குண்டு வீச்சுக்களோடும் இன்று அதிகாலை 4.00 மணியளவில் ஸ்ரீலங்கா இராணுவத்தினர் பாரிய நகர்வை ஆரம்பித்தனர். இவர்களின் நகர்வு முயற்சிக்கு எதிராக போராளிகள் தீவிர தாக்குதலை ஆரம்பித்தனர். இதனையடுத்து இரு தரப்பிற்கும் இடையே உக்கிர மோதல்கள் தொடர்ந்து கொண்டிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஸ்ர…
-
- 7 replies
- 2.2k views
-
-
கடந்த இரு நாட்களாக CNN தொலைக்காட்ச்சி தொடர்ந்து இலங்கை பிரச்சினைகளுக்கு செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து ஒளிபரப்பி கொண்டு இருக்கிறது... (( என்ன நாசமோ யாமறியேன்)) அவர்கள் கைகளில் TRO வாயிலாக கிடைத்த காணொளியை தொடர்ச்சியாக ஒளிபரப்பி வருகிறார்கள்... தொடர்ந்தும் அவைகளுக்கு இலங்கை அதிகாரிகளால் பொய்யான புனைகதைகள் எல்லாம் காரணமாக சொல்லபடுகிறது... அவர்களை சிங்களவர்கள் குழப்பாது இருக்க உண்மை விபரங்களை மின்னஞ்சல் செய்து உதவுங்கள்... சில காண் ஒளிப்படங்கள்... இது பழயது எண்டாலும்
-
- 14 replies
- 2.2k views
-
-
கிளிநொச்சி, பூநகரிக்குப் பின்னரும் நீளப்போகின்ற மரபுவழிப் போர் 09/11/2008 -------------------------------------------------------------------------------- விடுதலைப் புலிகள் மரபுவழியில் போரிடும் திறனை இழந்து விட்டதாக சில மாதங்களுக்கு முன்னர் இராணுவத் தளபதி லெப்.ஜெனரல் சரத் பொன்சேகா ஒரு கருத்தை வெளியிட்டிருந்தார். ஆனால் இப்போதும் அவர்கள் மரபுவழியிலான தற்காப்புச் சண்டைகளையே நடத்திக் கொண்டிருக்கின்றனர். இதை நிரூபிக்க வேறு ஆதாரங்கள் ஏதும் தேவையில்லை. அரசாங்கம் தரும் போர்க்கள நிலைவரப் புள்ளிவிபரங்களே போதும். மன்னாரின் வடபகுதியில் புலிகள் சண்டையின்றி பின் விலகிக் கொண்டபோது தான் இராணுவத் தளபதி லெப்.ஜெனரல் சரத் பொன்சேகா அவ்வாறு கூறியிருந்தார். அவரது கூற்று நூற…
-
- 6 replies
- 2.2k views
-
-
இறுதி யுத்தத்தில் 24,100 படையினர் பலி! - சிங்கள ஊடகம் தமிழீழ விடுதலைப்புலிகளை அழித்தொழிப்பதற்காக இறுதியாக சிறிலங்கா அரசாங்கம் 2006 இல் மாவிலாற்றில் ஆரம்பித்த படை நடவடிக்கைகளில் இருந்து இறுதிப்படை நடவடிக்கைகள்வரை சிறி லங்கா இராணுவத்தில் 24 100 இராணுவத்தினர் பலியாகியிருப்பதாகவும், (இதில் தப்பியோடியோர் -காணாமற்போனோர் பட்டியல் உள்ளடக்கப்படவில்லை) இராணுவப் பதிவுகள் உறுதிப்படுத்தியுள்ள போதிலும் இந்த எண்ணிக்கைகளை தலைகீழாக மாற்றியே சிறி லங்கா அரசாங்கம் அறிவித்துள்ளதாக சிங்கள அமைப்பொன்றை ஆதாரமாகக்காட்டி ஊடகமொன்று தகவல் வெளியிட்டுள்ளது. அதில் ஆரம்பம் முதலே தமது இழப்புக்களை சிறி லங்கா இராணுவத்தினர் மிகையாக குறைத்தே செய்திகளை வெளியிட்டுவருவதாக சிங்கள மக்களுக்கே புரியும் எனவும்…
-
- 1 reply
- 2.2k views
-
-
இலங்கை விவகாரத்தில் இந்தியா குளறுபடித்தனமான நிலைப்பாட்டில் 06.03.2008 இலங்கை இனப்பிரச்சினை தொடர்பான விவகாரத்தில் இந்தியாவின் நிலைப்பாடு பற்றிய சமிக்ஞைகள் மீண்டும் குளறுபடித்தனமாகவே வருகின்றன. ""இலங்கை விவகாரத்தை இந்தியா கையாளும்போது, இலங்கைத் தமிழர்கள் பற்றிய சிரத்தை இந்தியாவுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் விடயமாகும். அதை விலக்கி இந்தியா நடந்து கொள்ளவே முடியாது.'' என்ற சாரப்பட இந்திய நாடாளுமன்றத்தில் அறிவிக்கின்றார் இந்திய வெளிவிவகார அமைச்சர் பிரணாப் முகர்ஜி. அது வெறும் நாடாளுமன்றப் பேச்சு மட்டுமல்ல. இந்தியாவின் வெளிநாட்டுக் கொள்கை நிலைப்பாட்டை இந்திய நாடாளுமன்றத்துக்கும் இந்திய தேசத்துக்கும் இந்திய வெளிவிவகார அமைச்சர் எடுத்துக் கூறும் கொள்கை விளக்க உரையாகும். …
-
- 11 replies
- 2.2k views
-
-
தமிழீழத் தேசியத் தலைவர் வே.பிரபாகரனை ‘தீர்த்துக்கட்ட’ சோனியா பிறப்பித்த ரகசிய உத்தரவு? ஈழத் தமிழர் பிரச்சினையில் அரசியல் தீர்வுக்கான முயற்சிகளை சீர்குலைத்து, ராணுவ மோதலுக்கு ஊக்கப்படுத்தியது இந்தியாவும் – சோனியாவும் தான் என்ற அதிர்ச்சியான தகவல்கள் வெளிவந்துள்ளன. தமிழ்நாட்டைச் சார்ந்த ஓய்வு பெற்ற அதிகாரிகள் குழு, ராஜபக்சேவுடன் மேற்கொண்ட பேச்சுவார்த்தைகளை இந்தியாவும் சோனியாவும் தடுத்து நிறுத்தியுள்ளனர். இதுபற்றி பேச்சுவார்த்தை முயற்சிகளில் ஈடுபட்ட ஓய்வு பெற்ற அய்.ஏ.எஸ். அதிகாரி எம்.ஜி.தேவசகாயம் மற்றும் ‘ஸ்டேட்ஸ்மென்’ ஆங்கில நாளேட்டின் மூத்த செய்தியாளராகப் பணியாற்றி ஓய்வு பெற்ற சாம் ராஜப்பா ஆகியோர் தனித்தனியாக எழுதிய கட்டுரைகள் – இணையதளங்களில் இடம் பெற்றுள்ளன. குழு…
-
- 2 replies
- 2.2k views
-
-
‘ஸ்ரீதேவி இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ்’ ரயில் சேவை ஆரம்பம். ‘ஸ்ரீதேவி இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ்’ என்ற பெயரில் யாழ்ப்பாணத்திற்கான புதிய ரயில் சேவை ஆரம்பிக்கப்படவுள்ளது. கொழும்பு கோட்டையிலிருந்து இன்று மாலை 3.55 மணிக்கு புறப்படும் ‘ஸ்ரீதேவி இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ்’ இரவு 10 மணிக்கு யாழ்ப்பாணத்தை சென்றடையவுள்ளது. அத்துடன், குறித்த ரயில் இரவு 10.16 காங்கேசன்துறையை சென்றடையும் என எதிர்பார்க்கப்படுகின்றது. அதேபோன்று காங்கேசன்துறையிலிருந்து அதிகாலை 3.45 மணிக்கு புறப்பட்டுஇ யாழ்ப்பாணத்தை வந்தடைந்து யாழ்ப்பாணத்தில் இருந்து காலை 4.05 புறப்பட்டு கொழும்பு கோட்டையினை காலை 10.24 மணிக்கு ‘ஸ்ரீதேவி இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ்’ வந்தடையவுள்ளது. இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்…
-
- 23 replies
- 2.2k views
-
-
பூநகரி மீது எறிகணைத் தாக்குதல்: கண்காணிப்புக் குழுத் தலைவர் உயிர் தப்பினார் [புதன்கிழமை, 8 நவம்பர் 2006, 17:51 ஈழம்] [தெ.சந்திரநாதன்] பூநகரி இறங்குதுறையைப் பரிசீலிப்பதற்காக உத்தியோகபூர்வமாக சென்ற கண்காணிப்புக் குழுவினரை நோக்கி சிறிலங்கா இராணுவம் எறிகணை வீச்சுத் தாக்குதலை இன்று புதன்கிழமை நடத்தியுள்ளது. ஏ-9 பாதைக்குப் பதிலாக பூநகரி இறங்குதுறையைப் பயன்படுத்தலாம் என்று சிறிலங்கா அரசு யோசனை தெரிவித்திருந்தது. ஆனால் அரசின் தாக்குதல்களால் பூநகரி இறங்குதுறை ஏற்கனவே பாதிக்கப்பட்டுள்ளது எனவும் இவ்வாறான போக்குவரத்திற்கு அது உகந்ததல்ல எனவும் விடுதலைப் புலிகள் தெரிவித்திருந்தனர். இந்நிலையில், பூநகரி இறங்குதுறையைப் பரிசீலிப்பதற்காக, சிறிலங்கா அரசின் முன்கூட்டிய அனும…
-
- 10 replies
- 2.2k views
-
-
வன்னிப் பகுதியில் அதிகரித்திருக்கும் மோதல்களால் கிளிநொச்சி நகரப் பகுதியிலிருந்து அனைத்துப் பொதுமக்களும் இடம்பெயர்ந்திருப்பதாக ஐக்கிய நாடுகள் தலைமையாகக் கொண்ட மனித நேய அமைப்புக்களின் ஒன்றியம் வெளியிட்டுள்ள இறுதி அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. கிளிநொச்சி நோக்கிய அரசாங்கப் படைகளின் வான் தாக்குதல்கள் மற்றும் எறிகணைத் தாக்குதல்களால் பல்வேறு பகுதிகளிலிருந்து இடம்பெயர்ந்து கிளிநொச்சியில் தங்கியிருந்த ஆயிரக்கணக்கான மக்கள் தற்பொழுது முல்லைத்தீவை நோக்கி இடம்பெயர்ந்திருப்பதாக மனிதநேய அமைப்புக்களின் ஒன்றியம் தெரிவித்துள்ளது. “பெரும்பாலும் கிளிநொச்சியில் தங்கியிருந்த அனைவரும் முல்லைத்தீவு மாவட்டத்துக்கு இடம்பெயர்ந்துள்ளனர்” என அந்த ஒன்றியத்தின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டு…
-
- 3 replies
- 2.2k views
-
-
திருமலை துறைமுகம் மீதான தாக்குதலில் புலிகள் முதன் முறையாக கடலில் தரித்து நின்று தாக்கக்கூடிய சீ- பிளேன் வகை விமானத்தை பாவித்துள்ளதாக படைதரப்பு சந்தேகம் வெளியிட்டுள்ளது. திருமலை துறைமுகத்துக்கு மிகஅண்மையாக இருந்தே விமானங்கள் பறப்பினை மேற்கொண்டதாகவும்,இதனால் ராடர் திரையில் விமானங்கள் 2 நிமிடங்களுக்கு முன்னரே தெரிந்ததாகவும் ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்திருப்பதாக கடற்படை அதிகாரி ஒருவர் தெரிவித்தார். இது புலிகளிடம் பல்வேறு விமானங்கள் இருப்பதை அரசாங்கத்துக்கு புலப்படுத்தியிருப்பத்தாகவு
-
- 1 reply
- 2.2k views
-
-
விடுதலைப்புலிகள் புத்துயிர் பெற முயலும்அதேவேளை தங்கள் மதத்தினை பிழையாக விளங்கிக்கொண்டுள்ள தீவிரவாத இளைஞர் குழுவொன்று நாட்டின் அமைதி நிலையை குழப்புவதற்கு முயலும் இந்தவேளையில் இவ்வாறன சக்திகளை கண்காணித்து நாட்டை பாதுகாப்பாக வைத்திருப்பதில் புலனாய்வு அமைப்புகள் ஆற்றவேண்டிய முக்கிய பங்களிப்பு உள்ளது என பாதுகாப்பு செயலாளர் கமால் குணரட்ண யாழ்ப்பாணத்தில் கருத்து வெளியிட்டுள்ளார். யாழ் குடாநாட்டிற்கான விஜயத்தின் போது படையினர் மத்தியில் உரையாற்றுகையில் அவர் இதனைதெரிவித்துள்ளார். முஸ்லீம்தீவிரவாத சக்திகள் நாட்டில் பேரழிவை ஏற்படுத்தியுள்ள என தெரிவித்துள்ள பாதுகாப்பு செயலாளர் அவர்கள் நாட்டின் பொருளாதாரத்தைஅழித்துள்ளதுடன் சந்தேகத்தையும் அச்சத்தையும் உருவாக்கியுள்ளனர் எனவு…
-
- 18 replies
- 2.2k views
- 1 follower
-
-
ஏமாறாதே ஏமாறாதே! ஏமாற்றாதே ஏமாற்றாதே! “மானிட வாழ்வென வாழ்வென நொந்து...” இந்தப் பாடல் வரிகள் பட்டினத்தடிகளுக்கு உரித்தானவை.மானிட வாழ்வில் இறுதிக்கால சோகத்தை அனுபவ வாயிலாக உணர்ந்து பாடப்பெற்ற இந்த வரிகளை ஈழத் தமிழ் மக்கள் பல வரு டங்களாக அனுபவித்து கண்ணீர் விடுகின்றனர். இடப் பெயர்வுகள், சொத்தழிவுகள், உயிரி ழப்புக்கள், காணாமல் போனவர்களின் சோகங்கள், ஊனங்கள், முட்கம்பி முகாம்கள், குடிசை வாழ்வு இப்படி எத்தனையே சோகங்கள் எங்கள் வாழ்வை நாசம் செய்துவிட்டன. முற்றுப் பெறாத தொடர் சோகமாக இருக்கும் இத் துன்பியலில் இருந்து விடுபடுவ தற்கான வழியை இறைவனே வகுத்தருள வேண்டும். அந்த நம்பிக்கையைத் தவிர தமிழ் மக்களிடம் வேறு எதுவும் இல்லை. முப்பது ஆண்டுகால யுத்தமும் இனப் பிரச்சினையும…
-
- 2 replies
- 2.2k views
-
-
கடந்த 5ம் திகதி தை மாதம் 2009 பிறிட்சிஸ் தமிழ் போறம்( தமிழ் படுத்துவது நல்லது அல்ல)... BritishTamilsForum அமைப்பாளர் ஒருவர் ஆனையிறவு கிளிநொச்சி விடுதலை பற்றி BBC செய்தி சேவை கேட்க்கும் கேள்விக்கு அளிக்கும் பதிலும்... http://uk.youtube.com/user/BritishTamilsForum
-
- 6 replies
- 2.2k views
-
-
கணிகையர் இல்லங்கள் அறிமுகப்படுத்தப்பட்டு அவற்றுக்காக நாதியற்ற இளம் தமிழ்ப் பெண்கள் கொண்டு செல்லப்படுகின்றனர் என்று தெரிவித்தார் வடக்கு மாகாண முதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரன். "இளைஞர்களது உணர்வுகளை மழுங்கடிக்கச் செய்ய இன்று பல பிழையான நடவடிக்கைகள் அவர்களுக்கு ஊட்டப்பட்டு வருகின்றன. இளைஞர்களின் உணர்வுகள், தங்களுக்குப் பாதகமாக ஆற்றுப்படுத்தப்பட்டுவிடுமோ (வழிப்படுத்தப்பட்டு) என்று எண்ணும் சிலரால் போதைப் பொருள்கள் இளைஞர், யுவதிகள் மத்தியில் அறிமுகப்படுத்தப்படுகின்றன. வடமாகாணத்தில் இதுவரை காலமும் இல்லாத இந்தப் பழக்கம் தற்போது பரவிவருகின்றது. இந்தப் பொறிக்குள் அகப்படாமல் நீங்கள் தப்பித்துக் கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும். அண்மையில் கணிகையர் இல்லங்கள் (விபசார விடுதிகள்) அறிமு…
-
- 26 replies
- 2.2k views
-
-
கொழும்புத்துறை, பாசையூர், அரியாலை கிழக்கு கடற்கரையோரங்களில் உள்ள படைநிலைகளில் இருந்து நேற்று மாலை 7.00 மணியில் இருந்து அதிகாலை வரை கடலை நோக்கி படையினர் பீரங்கித் தாக்குதலையும், சரமாரியான துப்பாக்கி பிரயோகங்களையும் மேற்கொண்டதாக இப்பிரதேச மீனவர்கள் தெரிவிக்கின்றனர். கடலில் சில மர்ம படகுகள் நடமாடியதை கரையில் படைஅரண்களில் இருந்த படையினர் கண்டதாகவும் இதனால் அச்சமடைந்த படையினர் துப்பாக்கி வேட்டுக்களை கடலை நோக்கி தீர்த்ததுடன் பீரங்கித் தாக்குதலையும் மேற்கொண்டதாக இப்பிரதேச செய்திகள் தெரிவிக்கின்றனர். கொழும்புத்துறையில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னரும் கடலில் ரோந்து நடவடிக்கையில் ஈடுபபட்டிருந்த கடற்படையின் இரண்டு படகுகள் நோக்கி கரையில் பாதுகாப்பு அரணில் இருந்த படை…
-
- 2 replies
- 2.2k views
-
-
திரு செ.பத்மநாதன் அவர்கள் கைது செய்யப்பட்ட பின்னரும் நாம் அவருடன் தொடர்புகளைப் பேணுவதாகவும் அவரது வழிகாட்டலில் செயற்படுவதாகவும் வதந்திகளை சிலர் பரப்ப முனைவதான தகவல்கள் எமக்குக் கிடைத்துள்ளன. நாம் அவருடன் எந்தவகையான தொடர்புகளையும் பேணவில்லை. அவரது வழிகாட்டலில் செயற்படவும் இல்லை. இந்த விசமத்தனமான வதந்தி பரப்பும் முயற்சிஇ நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் அமைக்கும் எமது முயற்சிக்கு இடையூறு விளைவிக்கும் கெட்ட உள்நோக்கம் கொண்டதாகவே நாம் கருதுகிறோம்.' இவ்வாறு இணையத்தளம் ஒன்றுக்கு (நநடயஅநநெறள.உழஅ) அளித்த செவ்வியொன்றில் நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் அமைப்பதற்கான செயற்குழுவின் இணைப்பாளர் திரு விசுவநாதன் ருத்ரகுமாரன் தெரிவித்துள்ளார். இது தொடர்பான கேள்வியொன்றிற்கு ருத்ரகுமாரன் அள…
-
- 13 replies
- 2.2k views
-
-
அதிகாரப் பகிர்வு பற்றி தமிழர் தரப்பிலிருந்து தெளிவான உறுதிமொழி வழங்கப்பட வேண்டும் நாடாளுமன்றில் நேற்று ஹக்கீம் அறிவிப்பு. வடக்கு கிழக்கு இணைப்புக்கு முஸ்லிம்கள் நிபந்தனையின்றி ஆதரவு தரவேண்டும் என்றுகொருவதை ஏற்க முடியாது. இணைந்த வடக்கு, கிழக்கிற்குள் முஸ்லிம்களுக்கு வழங்கபடும் அதிகாரம் என்ன என்பது பற்றித் தமிழர் தலைமைகள் தெளிவான உறுதி மொழிகளைத் தெரிவிக்க வேண்டும். அவ்வாறு செய்யாமல் இணைப்புக்கு ஆதரவு கோரினால் ஒருபோதும் நிபந்தனைகளற்ற முறையில் முஸ்லிம்கள் இணைப்புக்கு ஆதரவு வழங்க முன் வரமாட்டார்கள். சுடர் ஒளி தலைப்புச் செய்தியின் ஒரு பகுதி நன்றி சுடர் ஒளி 11 ஜன 2007
-
- 7 replies
- 2.2k views
-
-
கண்டியில் கிளைமோர் தாக்குதல் - சிறப்பு அதிரடிப் படையின் உயர் அதிகாரி உபுல் செனிவிரத்தின பலி சிறீலங்கா சிறப்பு அதிரடிப்படையின் மூத்த காவல்துறை அத்தியட்சகர் உபுல் செனிவிரத்தின இன்று அதிகாலை 4.00 மணியளவில் கண்டியில் நடைபெற்ற கிளைமோர் தாக்குதலில் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. தனது பணிக்காக அவர் சென்று கொண்டிந்தவேளை அவரது ஊர்தி கிளைமோர் தாக்குதலில் சிக்கியது. இதில் படுகாயமடைந்த அவர் உடனடியாக மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டு சிகிச்சை பெற்றுவந்த நிலையில் இன்று காலை 6.10 மணியளவில் உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் பற்றிய மேலதிக தகவல்கள் கிடைக்கவில்லை. நன்றி : சங்கதி
-
- 6 replies
- 2.2k views
-
-
யாழ் தென்மராச்சி சரசாலைப் பகுதியில் நான்கு சிறீலங்கா படையினர் கடத்தல். யாழ் தென்மராச்சி சரசாலைப் பகுதியில் நான்கு சிறீலங்கா உந்துருளி படையினர் காணாமல் போயுள்ளதாக தெரியவருகிறது. இதுதொடர்பில் மேலும் தெரியவருகையில் சரசாலைப்பகுதியில் இரு இளைஞர்களை துரத்திச் சென்ற நான்கு உந்துருளிப்படையினரே காணாமல் போயுள்ளதாக தெரியவருகிறது. -Pathivu-
-
- 7 replies
- 2.2k views
-
-
ம.ம.முன்னணியின் தலைவர் பெ.சந்திரசேகரன் இன்று காலை காலமானார் by வீரகேசரி இணையம் மலையக மக்கள் முன்னணியின் தலைவரும் அமைச்சருமான பெ.சந்திரசேகரன் இன்று அதிகாலை காலமானார் என கட்சியின் பேச்சாளர் தெரிவித்துள்ளார். http://beta.virakesari.lk/article.aspx?id=17638&channel=Important
-
- 11 replies
- 2.2k views
-