ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143530 topics in this forum
-
(எம்.எப்.எம்.பஸீர்) கொழும்பு துறைமுகத்துக்கு வட மேல் திசையில், 9.5 கடல் மைல் தூரத்தில், கொழும்பு துறைமுகத்துக்குள் நுழையும் நோக்குடன் நங்கூரமிடப்பட்டிருந்த சரக்குக் கப்பலில் பரவிய திடீர் தீ மிக மோசமான நிலையில் அக்கப்பலை ஆட்கொண்டுள்ளது. இந்நிலையில் நேற்று காலை குறித்த கப்பலில் தீ பரவலுக்கு இடையே இரு வெடிப்பு சம்பவங்கள் இடம்பெற்றுள்ள நிலையில் கப்பல் ஊழியர்கள் இருவர் இதன்போது காயமடைந்துள்ளனர். இந்நிலையில் காயமடைந்த கப்பல் ஊழியர்களான இந்தியர்கள் இருவரும் சிகிச்சைகளுக்காக கொழும்பு தேசிய வைத்தியசாலையில் கடர்படையினரால் அனுமதிக்கப்பட்டதாக கடற்படை ஊடகப் பேச்சாளர் கெப்டன் இந்திக டி சில்வா கூறினார். அத்துடன் அக்கப்பலின் பணிக் குழுவில் இருந்த ஏனைய 23 பேரையும் பாதுகாப்…
-
- 10 replies
- 753 views
-
-
கியூ.ஆர். குறியீட்டு முறை இரத்தாகும் காலம் குறித்து காஞ்சன விஜேசேகர தெரிவிப்பு Published By: VISHNU 21 FEB, 2023 | 05:44 PM தேசிய எரிபொருள் விநியோகத்துக்காக அறிமுகப்படுத்தப்பட்ட QR குறியீட்டு முறையானது இன்னும் மூன்று அல்லது நான்கு மாதங்களில் இரத்துச் செய்யப்படுவதாகவும், சாதாரண நிலைமைகளின் கீழ் நாட்டில் தொடர்ச்சியாக எரிபொருளை வழங்க முடியும் எனவும் மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் கருத்து தெரிவித்த அவர், சீரான எரிபொருள் விநியோகத்துக்கான தற்காலிக தீர்வாக QR குறியீடு அறிமுகப்படுத்தப்பட்டதாக கூறியுள்ளார். நாட்டில் அடுத்த சில மாதங்களுக்கு மி…
-
- 10 replies
- 1k views
- 1 follower
-
-
மாஹோ சந்தி முதல் அநுராதபுரம் வரையான வடக்கு தொடருந்து பாதை திருத்தப் பணிகளுக்காக 6 மாதங்களுக்கு மூடப்படவுள்ளதாக தொடருந்து திணைக்களம் தெரிவித்துள்ளது. இதன்படி, அடுத்த வருடம் ஜனவரி மாதம் 7 ஆம் திகதி முதல் எதிர்வரும் 6 மாதங்களுக்கு குறித்த தொடருந்து மார்க்கம் மூடப்படவுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. குறித்த சந்தர்ப்பங்களில், கொழும்பிலிருந்து மாஹோ சந்தி வரையிலும், அநுராதப்புரத்திலிருந்து காங்கேசன்துறை வரையில், மாத்திரமே தொடருந்துகள் இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. வடக்கு தொடருந்து மார்க்கத்தில் மாஹோ மற்றும் ஓமந்தை வரையில் இரண்டாம் கட்ட திருத்தப்பணிகளுக்காக இவ்வாறு மூடப்படவுள்ளதாக தொடருந்து திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. https://thinakkural.lk/article/284285
-
- 10 replies
- 707 views
- 1 follower
-
-
தீபாவளி, பொங்கல், குடியரசு தினம், சுதந்திர தினம் ….பண்டிகை நாட்களையெல்லாம் திரைப்பட நடிகர்களின் வாழ்த்துச் செய்தி, நேர்காணல்கள், படங்களால் நிரப்பியது போய் இப்போது ஈழப் போராட்டம் கூட சினிமாக்காரர்களை வைத்துத்தான் நடத்தவேண்டுமென்றால் என்னவென்று சொல்ல? 80களில் பல்லாயிரக்கணக்கில் மேற்கத்திய நாடுகளுக்கு புலம்பெயர்ந்த ஈழத் தமிழர்கள் தங்களது விடுதலைப் போராட்ட உணர்வை எடுத்துச் சென்றார்களோ இல்லையோ தமிழ் சினிமாவையும் கூட மறக்காமல் கொண்டு சென்றனர். அதன் விளைவாக 90கள் மற்றும் 2000ஆம் ஆண்டுகளில் தமிழ் திரைப்படங்களுக்கு உலகச் சந்தை தோன்றியது. தமிழ் சினிமா வசூல், தமிழகத்தில் ஏ,பி.சி என்று பிரிக்கப்படுவது போல சர்வதேச அளவிலும் வினியோகம் செய்து விற்கப்பட்டது. வரவு அதிகமாக…
-
- 10 replies
- 2.7k views
-
-
http://www.tamilnaatham.com/advert/2009/jan/20090122/PJ118/ http://www.tamilnaatham.com/advert/2009/ja...090122/PARA204/
-
- 10 replies
- 5.5k views
-
-
2004 ஆம் ஆண்டு டிசம்பர் 26 ஆம் திகதி என்பது இலங்கையில் மாத்திரமல்ல, உலகத்தில் யாராலும் மறக்க முடியாதவொரு நாளாகும். இலங்கையில் சுமார் 35 ஆயிரத்துக்கும் மேற்பட்ட உயிர்களை காவு கொண்ட, ஐயாயிரத்துக்கும் மேற்பட்டோரை காணாமல் ஆக்கிய சுனாமி பேரலை ஏற்பட்டு இன்றுடன் 15 வருடங்கள் பூர்த்தியாகின்றன. 2004 ஆம் ஆண்டு ஏற்பட்ட சுனாமியால் உயிரிழந்த மக்களை நினைவு கூறும் முகமாக கடந்த 2005 ஆம் ஆண்டு அமைச்சரவையில் மேற்கொண்ட தீர்மானத்தின் மூலம் ஒவ்வொரு வருடமும் டிசம்பர் மாதம் 26 திகதி தேசிய பாதுகாப்பு தினமாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. அதற்கமைய ஒவ்வொரு வருடமும் டிசம்பர் 26 ஆம் திகதி தேசிய பாதுகாப்பு தினத்தில் சுனாமியில் உயிரிழந்த மக்கள் நாடளாவிய ரீதியில் நினைவு கூறப்படுகின…
-
- 10 replies
- 1.4k views
-
-
நிதி மோசடி தண்டனை பெற்றவருக்கு மன்னிப்பு : ஜனாதிபதி, சிறைச்சாலை திணைக்களத்தின் முரண்பட்ட அறிக்கை; உண்மை எதுவென தெளிவுபடுத்த வேண்டும் என்கிறார் நிசாம் காரியப்பர் 07 JUN, 2025 | 10:28 PM நிதி மோசடி குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டு, தண்டனை பெற்ற நபருக்கு பொதுமன்னிப்பு வழங்கப்பட்டதாக கூறப்படும் விவகாரம் தொடர்பில் அரசாங்கம் தெளிவுபடுத்த வேண்டும் என்று ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் செயலாளர் நாயகமும் பாராளுமன்ற உறுப்பினருமான ஜனாதிபதி சட்டத்தரணி நிசாம் காரியப்பர் கோரிக்கை விடுத்துள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்; கடந்த காலத்தில் நிதி மோசடியில் குற்றவாளியாக நிரூபிக்கப்பட்ட டபிள்யூ எச். அதுல திலகரத்ன என்பவருக்கு ஜனாதிபதியினால் பொதுமன்னிப்பு வழங்கப்பட்டதாக ஊடகங்களில் பர…
-
- 10 replies
- 564 views
- 1 follower
-
-
கொழும்பு வந்து சேர்ந்துள்ள இந்திய பாதுகாப்பு படைப்பிரிவின் ஒரு தொகுதி [வியாழக்கிழமை, 24 யூலை 2008, 01:46 மு.ப ஈழம்] [ந.ரகுராம்] சார்க் மாநாட்டில் கலந்துகொள்ளும் இந்தியப் பிரதமருக்கு பாதுகாப்பு அளிக்கவுள்ள அந்நாட்டு பாதுகாப்பு படைத்தொகுதி ஒன்று ஏற்கனவே சிறிலங்காவுக்கு வந்து சேர்ந்திருப்பதாகவும் இன்னும் ஒரு தொகுதி வரவுள்ளதாகவும் சிறிலங்காவின் பாதுகாப்பு விவகாரங்களுக்கான பேச்சாளரும், அமைச்சருமான கேலிய ரம்புக்வல தெரிவித்துள்ளார். இந்திய தலைவர் ஒருவர் வெளிநாடு செல்லும்போது, அவருக்கு அளிக்கப்படும் வழமையான பாதுகாப்பை விட, சிறிது அதிகமான பாதுகாப்பு ஏற்பாடுகள், கொழும்பு வரவுள்ள பிரதமர் மன்மோகனுக்கு அளிக்கப்படுகின்றன என்று அவர் மேலும் தெரிவித்தார். தற்போது கொழும்பு வந…
-
- 10 replies
- 1.4k views
-
-
ஓமந்தையிலிருந்து படையினர் புளியங்குளத்திற்கு முன்நகர்வு [19 - November - 2008] [Font Size - A - A - A] * வன்னிக்கான தரை வழிப் பாதை திறக்கப்படவில்லை வவுனியா, ஓமந்தை இராணுவ சோதனை நிலையத்திற்கு சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தினர் (ஐ.சி.ஆர்.சி.) நேற்று செவ்வாய்க் கிழமை காலை செல்லாததால் வன்னிக்கான தரைவழிப்பாதை ("ஏ9' வீதி) மூடப்பட்டிருந்தது. ஓமந்தையில் நிலை கொண்டிருந்த படையினர் "ஏ9' வீதியூடாக புளியங்குளம் சென்றுள்ளதாகக் கூறப்படுவதையடுத்தே ஐ.சி.ஆர்.சி.யினர் நேற்று சோதனை நிலையப் பணிக்குச் செல்லவில்லையெனத் தெரிவிக்கப்படுகிறது. புளியங்குளத்திலிருந்து விடுதலைப் புலிகள் வெளியேறி விட்டதால் எதுவித மோதலுமின்றி ஓமந்தையிலிருந்து படையினர் புளியங்குளம் சந்திக்கு சென…
-
- 10 replies
- 2.8k views
-
-
இந்திய அரசோடு சேர்ந்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் முதுகில் குத்துகின்றதா?!: உலகத் தமிழினம் கொதிப்பு [ஞாயிற்றுக்கிழமை, 12 ஏப்ரல் 2009, 07:46 பி.ப ஈழம்] [கொழும்பு நிருபர்] தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் பழுத்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலர், இந்திய வெளியுறவு செயலாளர் சிவ்சங்கர் மேனனை சந்திக்கச் செல்லுவதற்கு முடிவெடுத்து விட்டதாக செய்திகள் வெளியாகின்றன. இந்நிலையில் வன்னியில் உள்ள தமிழர்கள் சிறிலங்கா அரசின் மரணப் பொறிக்குள் சிக்குண்டு தவிப்பதற்கு யார் காரணம் என்பது அவர்களுக்குத் தெரியாதது அல்ல என கொழும்பில் அரசியல் விமர்சகர்கள் கருத்து வெளியிட்டுள்ளனர். சிவ்சங்கர் மேனனின் அழைப்பை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முன்னர் நிராகரித்திருந்தது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எடு…
-
- 10 replies
- 1.9k views
-
-
அமெரிக்காவிலுள்ள ஐ.நா. தலைமையகத்துக்கு முன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட இலங்கையர்கள் (நா.தனுஜா) உயிர்த்த ஞாயிறுதினப் பயங்கரவாதத்தாக்குதல்களுக்கு நீதிகோரி, நேற்று நியூயோர்க்கில் அமைந்துள்ள ஐக்கிய நாடுகள் சபையின் தலைமை அலுவலகத்திற்கு முன்னால் அமெரிக்கவாழ் இலங்கைப்பிரஜைகளால் ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. ஐக்கிய நாடுகள் சபையின் 76 ஆவது பொதுச்சபைக்கூட்டம் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் தலைமையில் தலைநகர் நியூயோர்க்கில் கடந்த செவ்வாய்கிழமை ஆரம்பமான நிலையில், பொதுச்சபை அமர்வின் இரண்டாம் நாளான நேற்று புதன்கிழமை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ உலகத்தலைவர்கள் முன்நிலையில் உரையாற்றினார். இவ்வாறானதொரு சூழ்நிலையிலேயே கடந்த 2019 ஆம் ஆண்டு இலங்கையில் இடம்பெற…
-
- 10 replies
- 1k views
-
-
அமெரிக்காவின் அழுத்தங்களை மீறி ஈரான் நாட்டுக்கு 4 நாட்கள் பயணமாக சிறிலங்கா அரச தலைவர் மகிந்த ராஜபக்ச இன்று செல்கிறார். தொடர்ந்து வாசிக்க
-
- 10 replies
- 1.8k views
-
-
காணி உறுதி, வெள்ளை கொடியுடன் உயர்பாதுகாப்பு வலய முள்வேலிகளை தாண்டுவோம் காணி உறுதி, வெள்ளை கொடியுடன் உயர்பாதுகாப்பு வலய முள்வேலிகளை தாண்டுவோம் என்று இடம்பெயர்ந்து நலன்புரி நிலையத்தில் வசிக்கும் முத்தையா சிவானந்தன் தெரிவித்துள்ளார். தேசிய மீனவர் ஒத்துழைப்பு இயக்கத்தின் ஏற்பாட்டில் இன்று காலை யாழ்.ரில்கோ விருந்தனர் விடுதியில் இடம்பெயர்ந்து வாழும் மக்கள் மற்றும் பெண் தலைமைத்துவ குடும்பங்கள் தொடர்பான விஷேட கலந்துரையாடல் இடம்பெற்றது. இந்நிகழ்வில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில், எமது சொந்த நிலங்களில் இருந்து இடம்பெயர்ந்து 26 வருடங்கள் ஆகிவிட்டன இதுவரைக்கும் எனது குடும்பம் மாத்திரம் 16 வீடுகள் மாறி இருக்கின்றோம். கடந்த 90ம் ஆண்டு முதல் எ…
-
- 10 replies
- 992 views
-
-
முஸ்லிம் சமய கலாசார திணைக்களத்தின் கீழ் பதிவு செய்யப்பட்டுள்ள பள்ளிவாசல்களின் விபரங்களை குற்றப்புலனாய்வு பிரிவு கோரியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. புத்தசாசன மற்றும் சமய விவகார அமைச்சின் கீழுள்ள முஸ்லிம் சமய கலாச்சார திணைக்களத்திலேயே பள்ளிவாசல்களை பதிவு செய்ய வேண்டும். அனுமதியற்ற வழிபாட்டு தலங்கள் முறியடித்தல் மற்றும் மத ரீதியான மோதல்களை தடுப்பதல் ஆகிய நோக்கங்களுடன் இந்நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது. நாட்டிலுள்ள பள்ளிவாசல்களின் எண்ணிக்கை, அவற்றின் பெயர், பதிவு செய்யப்பட்டுள்ள காலம் உள்ளிட்ட பல தகவல்களை குற்றப்புலனாய்வு பிரிவு முஸ்லிம் சமய கலாச்சார திணைக்களத்திடம் கோரியுள்ளது. முஸ்லிம் சமய கலாச்சார திணைக்களத்திற்கு இன்று வெள்ளிக்கிழமை சென்…
-
- 10 replies
- 909 views
- 1 follower
-
-
அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா வடக்கில் மீனவர்களிடமிருந்தும், தனியார் பேருந்து உரிமையாளர்களிடமிருந்தும் கப்பம் பெற்றுவருவதாக வடக்கின் இராணுவத் தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன. கொழும்பு - யாழ்ப்பாணம் பயணத்திற்கான ஒருவழிக் கட்டணமாக தற்போது தலா பயணியிடம் 2000 ரூபா அறவிடப்படுகிறது. இந்த நிலையில், அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிற்கு கப்பம் கொடுக்காவிடின், பயணியிடம் அறவிடப்படும் தொகையை 1100 ரூபாவாக உரிமையாளர்களுக்கு குறைக்க முடியுமென இராணுவத்தின் உயர் அதிகாரியொருவர் தெரிவித்தார். அத்துடன், அமைச்சரின் சகாக்கள் நாள்தோறும் தம்மிடம் கப்பப் பணம் சேகரித்து வருவதாக வடக்கிலுள்ள மீனவர்கள் இராணுவத்திற்கு தொடர்ச்சியாக முறைப்பாடு செய்துவருவதாக அந்தத் தகவல்கள் மேலும் தெரிவிக்கின்றன. …
-
- 10 replies
- 1.5k views
-
-
சம்பூர் அனல்மின் நிலையத்துக்கான கூட்டு ஒப்பந்தம் இன்று கைச்சாத்திடப்படும். ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸ முன்னிலையில் திருகோணமலை சம்பூரில் நிர்மாணிக்கப்படவுள்ள இரண்டாவது அனல் மின் நிலையத்திற்கான கூட்டு ஒப்பந்தம் இன்று கைச்சாத்திடப்படும். இலங்கை - இந்திய அரசாங்கங்களுக்கு இடையில் செய்து கொள்ளப்படவுள்ள இந்த கூட்டு ஒப்பந்தத்தில் இந்திய அரசாங்கத்தின் சார்பில் மின் சக்தி மற்றும் எரிபொருள் துறை அமைச்சின் செயலாளர் ஆர்.வி. சாபி கைச்சாத்திடுவார். இந்தியாவின் தேசிய நிறுவனமான தேசிய அனல் மின்சக்தி நிறுவனத்தின் கீழ் மேற்கொள்ளப்படவுள்ள இந்த திட்டத்திற்கு 500 மில்லியன் டொலர்கள் முதலீடு செய்யப்படவுள்ளன. இத்திட்டத்திற்கு இந்திய அரசாங்கத்தினால் 350 அமெரிக்க டொலர்கள் கடனுதவியாக வழங்கப…
-
- 10 replies
- 2.1k views
-
-
இரு மொழிகளையும் தாய்மொழியாக ஏற்கவேண்டும் ; வாசு -சொர்ணகுமார் சொரூபன், சுமித்தி தங்கராசா தமிழ், சிங்களம் ஆகிய இரண்டு மொழிகளையும் எமது தாய்மொழியாக ஏற்றுக்கொள்ள வேண்டும். அவ்வாறு ஏற்றுக்கொண்டால் எந்தப் பிரச்சினைகளும் இல்லையென மொழிகள் மற்றும் சமூக ஒருமைப்பாட்டு அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்தார். அரச கரும மொழிகள் ஆணைக்குழுவினால் வடமாகாணத்தில் அழைக்கப்பட்ட பாடசாலைகளுக்கிடையில் நடத்தப்பட்ட விவாதத் தொடரில் வெற்றியீட்டிய மாணவ, மாணவிகளுக்கான பரிசளிப்பு விழா நிகழ்வு பிற்பகல் யாழ்.பல்கலைக்கழக கைலாசபதி கலையரங்கில் இன்று நடைபெற்றது. இந்நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு உரையாற்றும் போதே வாசுதேவ இவ்வாறு தெரிவித்தார். இந்நிகழ்வில் வடமாகாண முதலமைச்சர் சி.வி…
-
- 10 replies
- 597 views
-
-
உள்ளுராட்சித் தேர்தலில் தெருவிளக்கைப் பொருத்துவதற்கே கூட்டமைப்புக்கு ஆணை வழங்கப்பட்டுள்ளது! - பசில் ராஜபக்ச உள்ளூராட்சி சபைத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பெற்ற வெற்றி, அமெரிக்க இராஜாங்க அமைச்சர் ஹில்லரிக்கும், தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கும் இடையிலான சந்திப்பு மற்றும் அமெரிக்க காங்கிரஸின' வெளிவிவகாரக் குழுவின் தீத்மானம் ஆகியவை தொடர்பில் சிறிலங்காவின் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ச கடுந்தொனியில் கருத்துக்களை வெளியிட்டுள்ளார். உள்ளுராட்சி சபைத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பெற்ற வெற்றி என்பது தமிழ் மக்கள் அவர்களுக்கு வழங்கிய ஆணை என்று கருதமுடியாது என பசில் ராஜபக்ச தெரிவித்துள்ளார். அத்துடன், இலங்கையின் பிரதேச சபைத் தேர்தலில…
-
- 10 replies
- 1.4k views
-
-
பருத்தித்துறையில் இரு கிராமங்களுக்கு இடையில் மோதல் -இராணுவத்தினர் களமிறக்கப்பட்டனர் December 26, 2019 பருத்தித்துறையில் கொட்டடி மற்றும் முனை ஆகிய இரு கிராமங்களைச் சேர்ந்த சிலருக்கு இடையே ஏற்பட்ட மோதல் இரண்டு கிராமங்களுக்கு இடையிலான மோதலாக மாறியுள்ளது. இரண்டு கிராம மக்களும் மோதிக் கொண்டதில் பலர் காயமடைந்துள்ளதுடன் அப் பிரதேசங்களில் தரித்து நின்றிருந்த வாகனங்களும் அடித்து சேதமாக்கப்பட்டுள்ளன. இந்தச் சம்பவம் நேற்று (25) மாலை இடம்பெற்றது என்று காவல்துறையினர் தெரிவித்தனர். படுகாயமடைந்தவர்களில் ஐவர் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர். இவ்வாறு இரண்டு கிராம மக்களும் மாறி மாறி மோதலில் ஈடுபட்டதால் அப் பிரதேசமே களோபரமானதாகக் காணப…
-
- 10 replies
- 2.1k views
-
-
அடங்காப்பற்றின் இறுதி மன்னன் மாவீரன் பண்டாரவன்னியனின் சிலை நேற்றைய தினம் மல்லாவி நகரில் திறந்து வைக்கப்பட்டுள்ளது. வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் வைத்திய காலாநிதி சிவப்பிரகாசம் சிவமோகனின் பன்முகப்படுத்தப்பட்ட நிதி ஒதுக்கீட்டில், முல்லைத்தீவு மாவட்டத்தில் அமைக்கப்பட்டு வரும் எட்டு சிலைகளில் ஒன்றாக மாவீரன் பண்டாரவன்னியனின் திருவுருவச்சிலை மல்லாவி நகரின் மத்தியில் அமைக்கப்பட்டு நேற்று கோலாகலமாக திறந்து வைக்கப்பட்டது. http://www.tamilwin.com/lifestyle/01/130383?ref=home
-
- 10 replies
- 1.7k views
-
-
ஐ.தே.க. தலைமைப் பொறுப்பை ஏற்க கரு ஜயசூரிய இணக்கம்: சஜித் எம்.பி. நாட்டையும் நாட்டு மக்களின் நலனையும் பாதுகாப்பதற்காக உயர்மட்டக் குழுவின் வேண்டுகோளுக்கிணங்க ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமைப் பொறுப்பை ஏற்பதற்கு கரு ஜயசூரிய இணக்கம் தெரிவித்துள்ளதாக சஜித் பிரேமதாச தெரிவித்தார். இன்று பிற்பகல் கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் உரையாற்றுகையிலேயே ஐ.தே.க. பிரதித் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சஜித் பிரேமதாச மேற்படி கூறினார். அங்கு தொடர்ந்தும் உரையாற்றிய அவர் கூறுகையில், எமது நாடும் நாட்டு மக்களும் வரலாற்று ரீதியான ஆட்சி மாற்றத்தை வேண்டி நிற்கும் தருணம் ஏற்பட்டுள்ளது. காரணம் தற்போதுள்ள ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கம் நாட்டின் சொத்துக்களையு…
-
- 10 replies
- 647 views
-
-
தமிழ் மக்கள் என் மீது நம்பிக்கை கொள்ளுங்கள் - கோத்தாபய Published by J Anojan on 2019-10-28 15:41:02 (இராஜதுரை ஹஷான்) தமிழ் மக்கள் என் மீது நம்பிக்கை கொள்ளுங்கள் கௌரவமாக வாழும் சூழலை நிச்சயம் உருவாக்குவேன் என ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோத்தாபய ராஜபக்ஷ தெரிவித்தார். வவுனியா நகரில் இன்று இடம்பெற்ற பொதுஜன பெரமுனவின் தேர்தல் பிரச்சார கூட்டத்தில் கலந்துகொண்டு கருத்துரைக்கையில் அவர் மேற்கண்டாறு குறிப்பிட்டார். நாட்டு மக்களின் எதிர்கால முன்னேற்றத்தினை கருத்திற் கொண்டு சிறந்த தேர்தல் கொள்கை பிரகடனத்தை வெளிப்படுத்தியுள்ளோம். கிராமிய கைத்தொழில், விவசாயத்தை மேம்படுத்துவதற்கான தெளிவான கொள்கை திட்டங்களை உள்ளடக்க…
-
- 10 replies
- 2.7k views
-
-
தமிழீழ விடுதலைப் புலிகளின் முத்திரைகளைக் கொண்ட கடிதங்கள் மற்றும் பொதிகள் தொடர்பில் சர்வதேச தபால் ஒன்றியத்தில் சில விதிகளை புறக்கணிக்கத் தீர்மானித்துள்ளதாக சிறீலங்கா தபால் மா அதிபர் எம்.கே.பி. திசாநாயக்க தெரிவித்துள்ளார். சர்வதேச தபால் ஒன்றியத்தின் விதிகளின்படி எந்தவொரு முத்திரையும் அங்கத்துவ நாடொன்றினால் அங்கீகரிக்கப்பட்டால் அது சர்வதேச நாடுகளின் தபால் சேவைகளின்போது ஏற்றுக்கொள்ளப்பட்டு அங்கத்துவ நாடுகளில் முத்திரை ஒட்டப்பட்ட தபால்கள் எந்த நாட்டுக்கும் அனுப்ப முடியும். தமிழீழ விடுதலைப் புலிகளின் முத்திரை ஒட்டப்பட்ட தபால்களை சிறீலங்காக்கு அனுப்ப வேண்டாம் என பிரான்ஸ் தபால்துறைக்கு கூறியுள்ளதாக திசாநாயக்க தெரிவித்துள்ளார். உள்நாட்டு சட்டங்கள், விதிகளின்படியே செயற்படப் போவ…
-
- 10 replies
- 1.5k views
-
-
சிவாஜிலிங்கம் பயங்கரவாத விசாரணைப் பிரிவினரால் விசாரணைக்கு அழைப்பு Dec 26, 20190 தமிழினப் படுகொலை வாரமாக முள்ளிவாய்க்கால் நினைவுகூரலை வருடாவருடம் முன்னெடுத்து வந்தமை தொடர்பில் நாளை பயங்கரவாத குற்றத் தடுப்பு விசாரணைப் பரிவினரால் கொழும்பு நன்காம் மாடிக்கு விசாரணைக்கு அழைக்கப்படுவதாக விடுக்கப்பட்ட அழைப்புக் கடிதம் இன்று சிவாஜிலிங்கத்திடம் கொடுக்கப்பட்டுள்ளது.தமிழ் தேசியக் கட்சியின் பொதுச் செயலாளரும் வடக்கு மாகாணசபையின் முன்னாள் உறுப்பினருமான எம்.கே.சிவாஜிலிங்கம் பயங்கரவாத குற்றத் தடுப்பு விசாரணைப் பரிவினரால் விசாரணைக்காக அழைக்கப்பட்டுள்ளார். http://www.samakalam.com/செய்திகள்/சிவாஜிலிங்கம்-தமிழினப்-ப/
-
- 10 replies
- 1.4k views
-
-
கிளிநொச்சியின் பின் விடுதலைப் புலிகள் கிளிநொச்சி வீழ்ச்சி கண்டபின் விடுதலைப் புலிகளால் மீண்டும் மேலெழுந்துவர முடியுமா? இலங்கைத் தமிழரின் நோக்கம் நம்பிக்கையற்றதாகி விட்டதா? புலிகளை தோற்கடிப்பதால் சமாதானம் ஏற்படுமா? பயங்கரவாதம் மற்றும் விடுதலைப் புலிகள் தொடர்பாக இரட்டைத் தனமான நிலைப்பாட்டை இந்தியா கடைப்பிடிக்கின்றதா? இக்கேள்விகளுக்கு இந்தியா அமைச்சரவை செயலகத்தின் முன்னாள் மேலதிக செயலாளர் பி.ராமன் பதிலளித்திருக்கிறார். விடுதலைப் புலிகளின் நிர்வாகத் தலைநகராக இருந்த கிளிநொச்சியை 2 ஜனவரி 2009 இல் இலங்கை இராணுவம் கைப்பற்றியதையடுத்து அது தொடர்பாக நான் எழுதிய கட்டுரை குறித்து பல கேள்விகள் எனக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளன. அவற்றில் சிலவற்றுக்குப் பதிலளிக்க நான் முயற…
-
- 10 replies
- 4.5k views
-