ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142811 topics in this forum
-
இயக்குனர் சீமான் தமிழக காவல்துறையினரால் கைது செய்யப்பட்டதாக வரும் தகவல்கள் தவறானவை என எமது தமிழக செய்தியாளர் எமக்கு தெரிவித்தார்.இன்று மாலை 7.45 வரை சீமான் வீட்டிலே உள்ளாதாக அவர் மேலும் தெரிவித்தார். http://www.tamilseythi.com/
-
- 5 replies
- 2k views
-
-
தமிழீழம் இந்தியாவுக்கு எதிரானது - டெசோ மாநாடு அறிவிப்புக்குப் பின் மத்திய அரசு அறிவிப்பு டெல்லி: இந்தியாவுக்கு எதிரான தமிழீழ விடுதலைப் புலிகளின் நிலைப்பாடு தொடருவது என்பது இந்திய குடிமக்களின் பெரும் அச்சுறுத்தலாக இருப்பதால் அந்த இயக்கத்தின் மீதான தடை நீட்டிக்கப்படுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. மத்திய உள்துறை அமைச்சகத்தின் சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் தொடர்ந்து இந்தியாவுக்கு எதிரான நிலைப்பாட்டைக் கொண்டிருப்பதால் இந்திய குடிமக்களின் பாதுகாப்புக்கு பெரும் அச்சுறுத்தல் உருவாகியுள்ளது. இதனால் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தை சட்டவிரோத இயக்கமாக அறிவிக்க வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது. தமிழ் பிரிவினைவாத குழுக்…
-
- 15 replies
- 2k views
-
-
பிரான்ஸ்சில் உள்ள இலங்கை தூதரகத்தில் பறக்கவிடப்பட்டிருந்த இலங்கையின் தேசியக்கொடியை அங்குள்ள விடுதலைப் புலிகள் இயக்கம்தைச் சேர்ந்த சிலர் கழற்றிச் சென்று விட்டனர், என்று தெரிவிக்கப்படுகிறது. வெளிநாட்டமைச்சர் ரோஹித விசேட விஜயமொன்றை மேற் கொண்டு நேற்று முன்தினம் காலை பிரான்ஸ் சென்றடைந்தார். அமைச்சரின் இந்த விஜயத்த்துக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் முகமாகவே விடுதலைப்புலிகள் இவ்வாறு செயற்பட்டிருக்கன்றனர் என்று வெளிநாட்டமைச்சின் பேச்சாளரொருவர் தெரிவித்தார். விடுதலைப்புலிகள் அமைப்பு பிரான்ஸில் தடைசெய்யபட்டுள்ளது என்று பிரன்ஸ் அரசு ஏற்கனவே தெரிவித்திருந்தது. என்றாலும் விடுதலைப்புலிகள் இன்னமும் அங்கு செயற்படுகின்றனர் என்பதை இந்தச் சம்பவம் உறுதி செய்துள்ளது. இதனைப் பிரான்ஸ்…
-
- 0 replies
- 2k views
-
-
[Friday November 09 2007 11:30:11 PM GMT] [யாழ் வாணன்] கடந்த பெப்ரவரி மாதம் 28ஆம் நாளன்று, அனைத்துலக கடற்பரப்பில் சிறீலங்கா கடற்படையினருடன் இடம்பெற்ற மோதல்களில், ஏழு போராளிகள் வீரச்சாவை அணைத்துக் கொண்டிருப்பதாக, தமிழீழ விடுதலைப் புலிகள் அறிவித்துள்ளனர். லெப்.கேணல் தென்னவன் என்றழைக்கப்படும், யாழ் செம்பியன்பற்றுப் பகுதியை சேர்ந்த பரிமேலழகர் சிவானந்தம், லெப்.கேணல் இளமுருகன் என்றழைக்கப்படும், யாழ் மாவட்டத்தை சேர்ந்த பாலசுந்தரம் பாலராமன், லெப்.கேணல் கோகுலன் என்றழைக்கப்படும், யாழ் மாவட்டத்தை நிலையான முகவரியாகவும், கிளிநொச்சி இரத்தினபுரத்தை இடைக்கால முகவரியாகவும் கொண்டிருந்த கோபாலகிரு~;ணன் சிவனேஸ்வரன், மேஜர் சுடர்மணி எனற் ழைக்கப்படும் யாழ் மாவட்டத்தை நிலையான முகவரியாக…
-
- 5 replies
- 2k views
-
-
நடிகர் ஜே.கே.ரித்தீஷ் தெரிந்து பல காரியங்களை செய்கிறார் என்றால், யாருக்கும் தெரியாமலும் பல உதவிகளை செய்து வருகிறார். தற்போது சென்னை நடிகர் சங்கத்தில்... இலங்கை தமிழர்களுக்காக நடிகர்கள் உண்ணாவிரதம் இருந்தபோது அமைக்கப்பட்ட மேடை அலங்காரம்... சேர், ஒலி பெருக்கி என ஒட்டுமொத்த செலவையும் ரீத்தீஷே ஏற்றுள்ளார்.இதன் மொத்த செலவு மூன்று லட்சத்திற்கும் மேல். அதேபோல சென்னை சாலிகிராமத்தில் செந்தில் ஸ்டுடியோ வளாகத்தில் நடைபெற்ற திரைப்பட தொழிலாளர் சம்மேளனம் நடத்திய உண்ணாவிரதப் பந்தல் மற்றும் மேடைக்கான மொத்த செலவையும் இவரே ஏற்றுள்ளார். இதுபற்றி மீடியாக்காரர்கள் கேட்க, அனைவரின் ஒத்துழைப்போடுதான் செய்தோம் என்றதோடு வெளியேயும் இதுபற்றி மூச்சு விடவில்லையாம். நன்றி : தமிழ்யாகூ(ம…
-
- 3 replies
- 2k views
-
-
இறுதி யுத்த நாட்களில் 40,000 பொதுமக்கள் வரையில் கொல்லப்பட்டிருப்பதாக ஐநாவின் முன்னாள் பேச்சாளர் கோர்டன் விஸ் ஒத்துக் கொண்டிருக்கிறார். பொதுமக்கள் பெருமளவில் கொல்லப்படவில்லை என்று மறுத்து வரும் சிறிலங்கா அரச வட்டாரங்களில் இந்தக் கூற்று பெரும் அதிர்ச்சியையும் கோபத்தையும் ஏற்படுத்தியிருப்பதாக கொழும்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன. அவுஸ்திரேலிய ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்திற்கு வழங்கியுள்ள செவ்வியிலேயே அவர் இந்த உண்மையை ஒத்துக் கொண்டிருக்கிறார். 14 ஆண்டு காலம் ஐநாவில் பணியாற்றிய கோர்டன் தற்போது பதவியை இராஜினமாச் செய்து விட்டு சொந்த இடமான அவுஸ்திரேலியாவிற்குத் திரும்பியிருக்கிறார். தான் இந்தத் தகவல்களைத் தமிழர்களிடமிருந்தோ விடுதலைப் புலிகளிடமிருந்தோ திரட்டவில்லை என…
-
- 19 replies
- 2k views
-
-
ஐ.நா நிபுணர் குழுவின் அறிக்கையில் கூறப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் பொய் என்பதை நிரூபிக்க சிறிலங்கா இராணுவம் நடவடிக்கை எடுத்துள்ளதாக என்று சிறலங்கா இராணுவத் தளபதி லெப்.ஜெனரல் ஜெகத் ஜெயசூரிய தெரிவித்துள்ளார். கொழும்பு றொக் ஹவுசில் நேற்று சிறிலங்கா இராணுவத்தின் கவசப்படைப் பிரிவின் 56வது ஆண்டு நிறைவை முன்னிட்டு இடம்பெற்ற நிகழ்வில் உரையாற்றிய போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார். “ஐ.நா நிபுணர்குழு அறிக்கையில் கூறப்பட்டுள்ள ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளுக்கு சிறிலங்கா இராணுவம் பதில் அளிக்கவுள்ளது. இந்த அறிக்கையை தயாரிக்கும் நடவடிக்கைகள் நிறைவடைந்துள்ளன. போரின் இறுதிக்கட்டத்தில் வன்னியின் கிழக்கில் நிலைகொண்டிருந்த படைப்பிரிவுகள் பற்றிய தவறான தகவல்களை ஐ.…
-
- 0 replies
- 2k views
-
-
ஈழத்தில் போர் உக்கிரமாக நடந்து கொண்டிருந்த போது ஒரு மிகப்பெரிய நாடகத்தை அப்போது பாரளுமன்றத் தேர்தலை சந்திக்க காத்துக் கொண்டிருந்த ஆளும் காங்கிரசு கட்சி மேற்கொண்டதை எம் மக்கள் மறந்திருக்க மாட்டார்கள். போரின் இறுதி நிலை என்று இலங்கை இராணுவம் அறிவித்து இந்தியாவின் உதவியுடன் தமிழ் மக்களை துவம்சம் செய்து கொண்டிருந்த போது தமிழகத்தில் காங்கிரசின் கூட்டணிக்கட்சித் தலைவரான திரு. கருணாநிதி அவர்களின் தலைமையில் உண்ணாவிரதம் என்னும் ஒரு தற்காலிக நாடகத்தை சென்னை மெரினாவில் அரங்கேற்றிக் கொண்டே போரை இலங்கை அரசு நிறுத்தி விட்டதாக கூறி இந்திய ஊடகங்களைக் கொண்டு பரப்புரை செய்தது இந்திய அரசு. தமிழர்களாகிய நாமும் வாய் பிளந்து அட தமிழினத்தலைவரின் உண்ணாவிரதத்திற்கு இவ்வளவு சக்தியா என்று ஆ…
-
- 7 replies
- 2k views
-
-
வான்புலிகளைச் சமாளிக்க வாடகை மிக் - 29 ரக வானூர்தி வான் புலிகளின் தாக்குதல்களால் சிறிலங்காவில் உருவாகியிருக்கும் அச்சுறுத்தலைச் சமாளிப்பதற்காக மிக் - 29 ரக வானூர்தி ஒன்றை சிறிலங்கா வான்படை அவசரமாக வாடகைக்குப் பெற்றுக்கொள்ளவிருக்கின்றது. உக்ரேனிலிருந்து அதிநவீன மிக்-29 ரக வானூர்திகள் சிலவற்றைக் கொள்வனவு செய்வதற்கான முயற்சிகளை அரசாங்கம் மேற்கொண்டிருக்கின்ற போதிலும், அவற்றைப் பெற்றுக்கொள்வதில் காலதாமதம் ஏற்படும் என்பதால்தான் அவசரமாக வாடகைக்கு மிக்-29 ரக வானூர்தி ஒன்றைப் பெற்றுக்கொள்வதற்கான முயற்சியில் சிறிலங்கா அரசாங்கம் இப்போது இறங்கியிருக்கின்றது. மிக்-29 ரக வானூர்திகளைச் செலுத்துவதில் சிறிலங்கா வான்படையினருக்கு அனுபவம் இல்லாமையால், உக்ரேனிலிருந்து வானோடி…
-
- 4 replies
- 2k views
-
-
வடபோர்முனைத்தாக்குதல் கேணல் தீபன் வழிநடத்தலில் இடம்பெற்றதாக விடுதலைப்புலிகள் தெரிவிப்பு என ஐபீசீ செய்தி வெளியிட்டுள்ளது.. மேலதிக விபரங்கள் தெரிந்தவர்கள் இங்கே இணையுங்கள்.. வாழ்த்துக்கள் தீபன் அண்ணா!! ;)
-
- 1 reply
- 2k views
-
-
புலிகளுக்கு வழங்கப்பட்ட 150 கோடி ரூபா குறித்து பாராளுமன்ற தெரிவுக்குழுவை நியமிக்க வேண்டும் [18 - June - 2007] * ஜே.வி.பி. வலியுறுத்துகிறது -டிட்டோ குகன்- அரசாங்கத்தினால் விடுதலைப்புலிகளுக்கு 150 கோடி ரூபா இலஞ்சம் வழங்கப்பட்டதா அல்லது இல்லையா என்பதை உறுதிப்படுத்திக்கொள்ள இவ் விவகாரம் குறித்து விசாரிக்கவென பாராளுமன்ற தெரிவுக்குழுவொன்றை நியமிக்க வேண்டுமென ஜே.வி.பி.யும் வலியுறுத்தியுள்ளது. பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சி இவ் விடயம் தொடர்பில் பாராளுமன்ற தெரிவுக்குழுவொன்றை நியமித்து விசாரிக்க வேண்டுமென தொடர்ந்தும் வலியுறுத்தி வரும் நிலையிலேயே ஜே.வி.பி.யும் இவ்வாறு தெரிவித்திருக்கின்றது. அரசாங்கத்தினால் இரகசியமான முறையில் விடுதலைப் ப…
-
- 1 reply
- 2k views
-
-
200 ஏக்கர் நிலத்தில் தொழில் பேட்டை :மட்டக்களப்பில் பலருக்கு தொழில் வாய்ப்பு - வியாழேந்திரன் (ஆர்.யசி, எம்.ஆர்.எம்.வஸீம்) மட்டக்களப்பு மாவட்டத்தில் 200 ஏக்கர் நிலத்தில் தொழில் பேட்டை ஒன்றை அமைத்து ஆயிரத்துக்கும் அதிகமானவர்களுக்கு தொழில் வாய்ப்புக்களை பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுத்துள்ளோம் என என ராஜங்க அமைச்சர் வியாழேந்திரன் தெரிவித்தார். பாராளுமன்றத்தில் இன்று வியாழக்கிழமை இடம்பெற்ற அடுத்த வருடத்துக்கான வரவு செலவு திட்டத்தில் கமத்தொழில், நீர்ப்பாசன அமைச்சுகள் மற்றும் இராஜாங்க அமைச்சுகளுக்கான நிதி ஒதுக்கீடு தொடர்பிலான குழுநிலை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார். அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில், கடந்த அரசா…
-
- 18 replies
- 2k views
-
-
அச்சுறுத்தல்: கொழும்பிலிருந்து ஐ.நா.அதிகாரி வெளியேறினார் [செவ்வாய்க்கிழமை, 26 யூன் 2007, 15:15 ஈழம்] [சி.கனகரத்தினம்] சிறிலங்கா தலைநகர் கொழும்பில் உள்ள ஐக்கிய நாடுகள் சபையின் அலுவலக நிதிப் பிரிவு திட்ட அதிகாரி வாசுகி மகேந்திரனுக்கு பணம் அறவிடும் கும்பல் அச்சுறுத்தல் விடுத்ததால் அவர் சிறிலங்காவிலிருந்து குடும்பத்தினருடன் வெளியேறி உள்ளார். சிறிலங்காவிலிருந்து தான் வெளியேறுவதற்கு முன்பாக கடத்தல்கள் தொடர்பான மக்கள் கண்காணிப்புக் குழுவின் ஒருங்கிணைப்பாளரும், மேலக மக்கள் முன்னணியின் கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசனிடம் அவர் முறைப்பாடு செய்துள்ளார். வாசுகி மற்றும் அவரது கணவர் மகேந்திரன் இருவரும் ஹவ்லொக் வீதியில் வசித்து வந்தனர். நேற்று மு…
-
- 2 replies
- 2k views
-
-
வடக்கு முதல்வரின் உரைகளின் தொகுப்பு- ‘நீதியரசர் பேசுகிறார்’ நூல் வெளியீடு ஆரம்பம்!! வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன் இதுவரை ஆற்றிய உரைகளின் தொகுப்பு நூலான ‘நீதியரசர் பேசுகிறார்’ நூலின் வெளியீட்டு விழா யாழ்ப்பாணம் வீரசிங்கம் மண்டபத்தில் சற்றுமுன்னர் ஆரம்பமாகியுள்ளது. நிகழ்வில் எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன், நாடாளுமன்ற உறுப்பினர்கள் மாவை சேனாதிராசா, எம்.ஏ.சுமந்திரன், செல்வம் அடைக்கலநாதன், த.சித்தார்த்தன், ஈ.சரவணபவன் மற்றும் யாழ்ப்பாண மாநகர சபை முதல்வர் இ.ஆர்னோல்ட், மாகாண அமைச்சர்கள், மாகாண சபை உறுப்பினர்கள் உட்பட பல அரசியல் பிரமுகர்…
-
- 7 replies
- 2k views
-
-
யாழில் விமான நிலையத்தை அமைத்து நாட்டை பிரித்துவிட்டார்களா? – ஜனாதிபதி வேட்பாளர் சந்தேகம் யாழில் சர்வதேச விமான நிலையத்தை அமைத்துள்ளதன் மூலம் நாட்டை பிரித்துவிட்டார்களோ என்ற சந்தேகம் எழுந்துள்ளதாக ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும், ஜனசெத பெரமுனவின் தலைவர் பத்தரமுல்ல சீலாரத்தன தேரர் தெரிவித்துள்ளார். கட்டுநாயக்கவில் நடந்த தேர்தல் பரப்புரைக் கூட்டத்தில் உரையாற்றியபோதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில், “பிரதமர் ரணில் விக்ரமசிங்க வடக்கில் விமான நிலையம் ஒன்றை அமைக்கத் தொடங்கி விட்டார். இதன் மூலம் இந்தியாவையும் இலங்கையையும் இணைக்க முடியும். அவர்கள் ஏற்கனவே நாட்டைப் பிரித்துவிட்டார்களோ என்ற தீவிரமான சந்தேகத்தை இது ஏற்படுத்தியுள்ளது. …
-
- 23 replies
- 2k views
-
-
ரவிராஜ் கொலையை கண்டித்த யுத்த விரோதிகள் கோதாபய மீதான கொலைமுயற்சியை ஏன் கண்டிக்கவில்லை அளுத்கமகே கேள்வி ரவிராஜின் படுகொலையை `வெட்கம் வெட்கமென' கண்டித்த யுத்த விரோதிகள், கோதாபய ராஜபக்ஷ மீதான கொலை முயற்சியை ஏன் கண்டிக்கவில்லையென பிரதியமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே கேள்வியெழுப்பினார். பாராளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற பாதுகாப்பு மற்றும் உட்துறை அமைச்சு மீதான நிதியொதுக்கீட்டு விவாதத்தில் உரையாற்றுகையிலேயே இவ்வாறு கூறிய அவர் மேலும் தெரிவித்ததாவது; "தமிழ் மக்களுக்கு இந்த நாட்டில் எந்த பிரச்சினையும் இல்லையென யாராவது கூறுவார்களானால் அதனை நான் ஏற்க மாட்டேன். தமிழ் மக்களுக்கு பிரச்சினைகள் உண்டு ஆனால், அதற்கு யுத்தம் தான் தீர்வில்லை. எனவே, புலிகள் சமாதான…
-
- 9 replies
- 2k views
-
-
இந்தியா எங்களுக்கு நல்ல தீர்வைப்பெற்றுத்தரும் என்பது பகல்கனவே? மாறாக சிங்களம் எதை விரும்புகிறதோ அதைத்தவிர இவர்களால் ஒன்றும் செய்துவிடமுடியாது. காரணம் இலங்கையை தங்கள் செல்வாக்கில் வைத்திருக்கும் போட்டி இப்போது அமெரிக்கா சீனா பாகிஸ்தான் இந்தியா மற்றும் பல நாடுகளிடையே போட்டி நிலவுகிறது. இதனால் சிங்களவன் யார் பக்கம் செல்வான் என்று எதிர்பார்த்தால் சிங்களவன் எதை விரும்புகிறானோ அதை ஏற்றுக்கொண்டு ஆதரவுதரும் நாட்டுக்கே முன்னுரிமை என்ற அடிப்படையில் அமையும். இந்தியாவின் நிலைப்பாடு என்றைக்கோ தெரிந்த விசயம் அவர்கள் இந்தியாவின் அங்கமான கச்சதீவைக்கூட தாரைவார்த்தவர்களாச்சே இவர்களுகு தமிழர்களின் அபிலாசைகள் ஒருபொருட்டாக மதிக்கமாட்டார்கள் மாறாக கட்டாயமாக ஒரு தீர்வை திணிப்பார்கள். தமிழ…
-
- 7 replies
- 2k views
-
-
மூலச் செய்திக்கு: http://www.tamilcanadian.com/news/tamil/index.php?action=full_news&id=௫௫௯௮ புதுவை இரத்தினதுரையின் விடுதலை குறித்து டக்ளஸிடம் அவரின் சகோதரி வேண்டுகோள் விடுதலைப் புலிகள் இயக்கத்தில் முன் னர் செயற்பட்ட முக்கியஸ்தர்களில் ஒரு வரும் கவிஞருமான புதுவை இரத்தின துரையின் விடுதலை குறித்து அவரது சகோதரி இராசலட்சுமி நேற்றுமுன்தினம் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவைச் சந் தித்து வேண்டுகோள் விடுத்துள்ளார். புதுவையின் சகோதரி தனது கணவரான பத்மநாதனுடன் வந்து அமைச்சரைச் சந்தித்தார் என்று சமூக சேவைகள் மற்றும் சமூக நலத்துறை அமைச்சினால் வெளியி டப்பட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப் பட்டுள்ளது. அந்தக் குறிப்பில் மேலும் தெரிவிக்கப் பட்டுள்ளதாவது முள்ளிவாய்க்காலில் ந…
-
- 9 replies
- 2k views
-
-
விடுதலைப் புலிகளை கிழக்கில் இருந்து அகற்றி அதனை முற்றாக மீட்டுவிட்டதாக சிறீலங்கா கேக் வெட்டி பெரும் கொண்டாட்டங்களை நடத்தி முடித்துவிட்ட நிலையில், தற்போது கிழக்கில் விடுதலைப் புலிகளின் தாக்குதல்கள் அதிகரிக்கத் தொடங்கியுள்ளன. சிறீலங்காவின் கிழக்கின் உதயம் பிரச்சாரத் திட்டத்தை நொருக்கும் வகையில் கிழக்கில் விடுதலைப் புலிகளின் உதயம் அதிகரித்துள்ளது. தினந்தோறும் நடைபெறும் தாக்குதல்களால் சிறீலங்கா அரச படைகளும் அதன் துணை இராணுவக் குழுக்களும் பெரும் இழப்புக்களைச் சந்தித்து வருவதால் அச்சமடைந்துள்ளன. இந்நிலையில், சிறீலங்காவின் தலைநகர் கொழும்பு மற்றும் கிழக்கு மாகாணத்தின் பாதுகாப்புக்களை ஆட்டங்காண வைப்பதே தற்போது தமிழீழ விடுதலைப் புலிகளின் முக்கிய நோக்கம் என்று கொழும…
-
- 0 replies
- 2k views
-
-
வீரகேசரி இணையம் - மன்னார், மடு பிரதேசத்தின் மீது விமானப்படையினரின் குண்டுவீச்சு விமானங்கள் நேற்றுக்காலை குண்டுத் தாக்குதல்களை மேற்கொண்டுள்ளன. இன்று 7.30 மணியளவில் மேற்கொள்ளப்பட்ட இத்தாக்குதலின்போது விடுதலைப்புலிகளின் மூன்று பிரதான முகாம்கள் முற்றாக அழிக்கப்பட்டதாக தேசிய பாதுகாப்புக்கான ஊடக மத்திய நிலையம் தெரிவித்தது. வடக்கு, கிழக்கில் விடுதலைப்புலிகளால் மேற்கொள்ளப்பட்டுவரும் தாக்குதல் நடவடிக்கைகளுக்கான பிரதான களங்களாக விளங்கும் மூன்று முகாம்கள் மீதே இக்குண்டுத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டாதகவும் ஊடக மத்திய நிலையம் தெரிவித்தது. விமானப்படையின் புலனாய்வுப் பிரிவினர் மற்றும் தரைப்படையினரால் இலக்கு வைக்கப்பட்ட பிரதேசத்தின் மீதே இத்தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதன…
-
- 2 replies
- 2k views
-
-
தம்முடன் இணைந்து கடற்தொழிலாளர்கள் காவற்கடமையில் ஈ.டுபட வேண்டும். - படையினர் பணிப்பு. ................................................................................ ............................. யாழ்ப்பாணம் குருநகர் கடற்தொழிலாளர்களை தம்முடன் இணைந்து இரவு நேரக் கடலோரக் காவற்கடமையில் ஈடுபட வேண்டுமென சிறிலங்காப கடற்படையினர். கடற்தொழிலாளர் சங்கப் பிரதிநிதிகளிடம் நேற்று வலியுறுத்தியுள்ளனர். இதற்கு கடற்தொழிலாளர்கள் மறுப்புத்தெரிவித்துள்ளனர். இதே வேளை யாழ்ப்பாணத்திலுள்ள சிறிலங்கா படையினரின் உயர் பாதுகாப்புவலயங்கள் மேலும் விரிவாக்கப்படுமே அன்றி ஒருபோதும் அகற்றப்படமாட்டாது என்றும் மாவட்ட சிறிலங்காப் படைத் தளபதி ஜி.ஏ.சந்திரசிறி தெரிவித்துள்ளமையும் இங்கு குறிப்பிட…
-
- 6 replies
- 2k views
-
-
''பொட்டு அம்மானின் புதிய புகைப்படம்'' எனக் குறிப்பிட்டு இணையத்தளத்தில் புகைப்படமொன்றை வெளியிட்டுள்ளது. மேலும் http://tamilworldtoday.com/?p=16166
-
- 1 reply
- 2k views
-
-
வவுனியா விமானப்படை முகாமில் உள்ள ராடர் மையத்தை அழிக்கும் நோக்கில் நேற்று முன்தினம் செயற்பட்ட விடுதலைப்புலிகளின் தற்கொலை தாக்குதல் அணியினர் வன்னி படைத்தலைமையகத்திற்கு அருகில் உள்ள சமனலகுளம் தமிழ் கிராமத்தில் இரண்டு நாட்கள் தங்கியிருந்தனர் என பாதுகாப்புத் தரப்பினருக்கு தகவல் வெளியாகியுள்ளது. வன்னி பாதுகாப்பு தலைமையகத்திற்கு கிழக்கில் காட்டு பகுதியை எல்லையாகக் கொண்ட சமனலகுளத்தில் உள்ள வீடு ஒன்றில் அங்கிருந்தவர்களை வெளியேற்றி விட்டு இவர்கள் தற்காலிகமாக தங்கியிருந்தாகத் தெரிவிக்கப்படுகிறது. செய்மதி தொலைபேசியூடாக வன்னியில் உள்ள புலித்தலைவர்களுடன் இந்த கரும்புலிகள் தொடர்புகளைக் கொண்டிருந்தனர் எனவும் தகவல்கள் கிடைத்துள்ளன. கரும்புலிகள் பயன்படுத்தியதாகக் கூறப்படும் செய்ம…
-
- 0 replies
- 2k views
-
-
புத்த பகவானுக்கு சிலை எடுத்த தமிழன் வியாழன், 12 மே 2011 07:13 இலங்கையில் தமிழர் ஒருவர் புத்த பகவானுக்கு சொந்தச் செலவில் மாபெரும் சிலை அமைத்து - கட்டிடம் எழுப்பிக் கொடுத்து உள்ளார். தமிழர் விடுதலைக் கூட்டணியின் மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் எம்.பி சாம் தம்பிமுத்துவின் புதல்வரும், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மட்டக் களப்பு மாவட்ட பிரதம இணைப்பாளர்களில் ஒருவருமான அருண் தம்பிமுத்துவே 10 மில்லியன் ரூபாய் செலவில் இத்திருப்பணியைச் செய்து உள்ளார். மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள ஸ்ரீமங்களா ராம ராஜ மகா விகாரையில் இக்கட்டிடம் அமைத்துக் கொடுக்கப்பட்டு உள்ளது. தங்க முலாம் பூசப்பட்ட புத்தர் சிலை தாய்லாந்தில் இருந்து கொண்டு வரப்பட்டு உள்ளது. இன்று இக்கட்டிடம் திற…
-
- 5 replies
- 2k views
- 1 follower
-
-
இலங்கைக்கு அனுப்பப்படவுள்ள இந்தியா நாடாளுமன்றக் குழுவில் இருந்து அதிமுக திடீரென விலகிக் கொண்டது, புதுடெல்லியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனால், இந்தக் குழுவின் பயணம் தொடர்பான முடிவில் மாற்றம் ஏற்படலாம் என்று இந்திய ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது. இலங்கையில் போருக்குப் பிந்திய சூழ்நிலைகள் குறித்து அறிந்து வருவதற்காக, அனைத்துக்கட்சி குழுவை அனுப்ப இந்திய அரசு அண்மையில் எடுத்திருந்தது. இதன்படி, நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவர் சுஸ்மா சுவராஜ் தலைமையிலான 15 பேர் கொண்ட குழு வரும் 16ம் நாள் இலங்கை செல்வதற்குத் திட்டமிடப்பட்டுள்ளது. இந்த குழு அமைக்கப்பட்டதிலேயே பல்வேறு குழப்பங்கள் இருப்பதாக கூறப்படுகிறது. குழுவில் யார், யார் இடம்பெறுவர் என்ற எ…
-
- 11 replies
- 2k views
-