ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143540 topics in this forum
-
உயிர்க் குழிகள்! ஈழத்தின் காட்டுப் பகுதி ஒன்றில் சில கூடாரங்கள். ஊர் ஊராக இடம் பெயர்ந்து இறுதியில் அந்தப் பகுதிக்கு வந்து கூடாரங்கள் அமைத்துச் சில குடும்பங்கள் தங்கியிருக்கின்றன. அந்த மக்கள் சொந்த தேசத்திலேயே அகதிகளாக வாழும் அவல நிலைக்கு ஆளாகிப்போனவர்கள். அங்கே அந்த இலங்கை அரசு தமிழீழ மக்கள் வாழும் குடியிருப்புகளின் மீது குண்டு மழை பொழிவது வழக்கம். வீடுகள்தான் என்றில்லை, வயல்வெளிகள் எரிகின்றன. வழிபாட்டுத் தலங்கள் சிதைகின்றன. பள்ளிக்கூடத்திலும், மருத்துவமனையிலும்கூட குண்டுகள் விழுந்துள்ளன. எனவே, காட்டுப் பகுதிதான் கொஞ்சம் பாதுகாப்பாக இருக்கும் என்று கருதி, அந்தக் குடும்பங்கள் அங்கே கூடாரங்கள் அமைத்துள்ளன. ஆனாலும், உணவுக்கு என்ன செய்வது? கனிகளே உணவு. மழை…
-
- 3 replies
- 1.9k views
-
-
அரசிற்கும் கருணா குழுவுக்கும் தொடர்புகள் உள்ளன: புலனாய்வுத்துறை அதிகாரியின் மனைவி சிறிலங்கா அரச தலைவர் தேர்தலுக்குப் பின்னர் கிழக்கு மாகாணத்தில் உள்ள மட்டக்களப்பிற்கு சென்று கருணாவை சந்தித்து வருமாறு தனது கணவரை அரசாங்கம் அனுப்பியதாக சிறிலங்காவின் குற்றப் புலனாய்வுத்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ள கடற்படை அதிகாரியான லெப். கொமாண்டர் றோகண கமெகேயின் மனைவி ராசிக பிரியதர்சினி நேற்று தெரிவித்துள்ளார். தமிழீழ விடுதலைப் புலிகளுடன் தொடர்புகள் உள்ளதாக கூறி சிறிலங்கா கடற்படையின் புலனாய்வுத்துறையின் அதிகாரியான லெப். கொமாண்டர் றோகண கமெகே கடந்த செவ்வாய்க்கிழமை சிறிலங்காவின் குற்றப் புலனாய்வுத்துறையினரால் கைது செய்யப்பட்டிருந்தார். இது தொடர்பில் ஊடகவியலாளர்களுக்கு அ…
-
- 4 replies
- 1.9k views
-
-
மலேசிய இளைஞர்கள் நடத்திய தாக்குதல் சம்பவமொன்றில் காயமடைந்த கொழும்பு பம்பலப்பிட்டி இந்துக் கல்லூரி பழையமாணவனான சிறிசாரங்கன் (2005 A/L கணிதப்பிரிவு) உயிரிழந்துள்ளார். மலேசியாவில் கல்விபயிலும் இந்திய மாணவர்களைக் குறிவைத்து மலேசிய இளைஞர்கள் குழுவொன்று கடந்த 26ஆம் திகதி தாக்குதல் நடத்தியது. இந்திய மாணவர்கள் என நினைத்து இலங்கை மாணவர்கள் இருவர் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டது. http://www.tamilskynews.com/index.php?opti...0&Itemid=53
-
- 6 replies
- 1.9k views
-
-
மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் வியாளேந்திரன் அவர்கள் தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கும் பாராளுமன்ற அமர்வுகளுக்கு செல்லாமல் தனது மாவட்டத்தில் டியுசன் கொடுத்து கொண்டு உழைத்து கொண்டு திரிகிறார் என வாக்களித்த மக்கள் ஆதங்கப் படுகின்றனர். பாராளுமன்றம் செல்ல வாக்களித்த மக்களை ஏமாற்றி பணம் சம்பாதிக்கும் தனது தொழிலையே இவர் செய்து கொண்டிருப்பது மாவட்ட மக்களை பெரும் ஏமாற்றத்துக்கு உள்ளாகி உள்ளது. அண்மையில் இவரது டுயுசன் கட்டவுட்கள் நகர வீதி முழுவதும் காட்சிப் படுத்தப் பட்டிருத்தமை மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருத்தது. பாராளுமன்றம் சென்று இன பிரச்சனைக்கு தீர்வு காண்பார் என கனவு கண்டார்கலாம் ஆனால் இலக்கணம் சங்ககாலம் சங்கமருவிய காலம் என தமிழரின் தீர்…
-
- 14 replies
- 1.9k views
-
-
மதியுரைஞர் அன்ரன் பாலசிங்கம் அவர்கள் வன்னியை வந்தடைந்தார் இன்று காலை 09.30 மணியளவில் பாலசிங்கம் தம்பதியினர் கிளிநொச்சிசியினை வந்தடைந்தனர் ஸ்ரீலங்கா விமானப்படைக்குச் சொந்தமான விமானப்படை உலங்கவானூர்தி மூலம் கிளிநொச்சி பரவிப்பாஞ்சான் சந்திரன் விளையாட்டு மைதானத்தை வந்தடைந்த மதியுரைஞரினை அரசியல் துறைப் பொறுப்பாளர் சு.ப தமிழ்ச்செல்வன வரவேற்றார். அதன்போது கேணல்சூசை, முக்கியஉறுப்பினர் பாலகுமாரன் உள்ளிட்ட விடுதலைப்புலிகளின் முக்கிய உறுப்பினர்கள் பலரும் வரவேற்றனர்.இன்று மதியுரைஞர் அவர்கள் தேசியத்தலைவர் அவர்களைச் சந்தித்து பேச்சு வார்த்தைகள் தொடர்பாக கலந்துரையாடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது தகவல் மூலம்- சங்கதி
-
- 7 replies
- 1.9k views
-
-
மக்களின் கவனங்களை திசை திருப்பி யதார்த்த நிலமைகளை மறைக்கும் விதமாக யாழ்ப்பாணத்தில் இசை நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன. நேற்று முன்தினம் யாழ்ப்பாணம் வடமாராட்சிப் பகுதியில் புதுவருடத் திருவிழா என்ற இசை நிகழ்ச்சி நடத்தப்பட்டது என்று எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார். நேற்றைய தினம் யாழ்ப்பாணம் துரையப்பா விளையாட்டரங்கில் ஏற்பாடு செய்யப்பட்ட இசை நிகழ்ச்சியில் ஆயிரக்கணக்கான மக்கள் கலந்து கொணடதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். யாழ் இராணுவத்தளபதி மேஜர் ஜெனரல் மகிந்தஹத்துருசிங்கவின் ஏற்பாட்டில் நடக்கும் இந்த இசை நிகழ்ச்சிகளை டான் தமிழ் தொலைக்காட்சி அனுசரனை வழங்கி நடத்துகிறது. இந்த இசை நிகழ்ச்சியில் தமிழ் சிங்களப் பாடல்கள் பாடப்பட்டு கவர்ச்சி நடனங்களும் இடம்பெறுவதாக எமது ச…
-
- 5 replies
- 1.9k views
- 1 follower
-
-
தமிழர் பிரதேசங்களை பௌத்த மயமாக்கும் செயற்பாடுகள் தொடர்சியாக இடம்பெற்று வருகின்றன! மட்டக்களப்பு, தாதியர் பயிற்சிக் கல்லூரியில் புத்தர்சிலை நிறுவப்பட்டமை வட கிழக்கினை பௌத்தமயமாக்கும் நிகழ்ச்சிநிரலின் தொடர்ச்சியாக இருக்கக்கூடாது ” என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் கோ.கருணாகரம் தெரிவித்துள்ளார். மட்டக்களப்பு தாதியர் பயிற்சிக்கல்லூரியின் முன்னால் புத்தர்சிலை நிறுவப்பட்டமை குறித்து ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது ” மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் தாதியர் பயிற்சிக் கல்லூரிக்கு முன்னால் புத்தர் சிலையொன்று திடீரென்று நிறுவப்பட்டுள்ளது. தாதியர் பயிற்சிக் கல்லூரியின் அதிபர் பௌத்த …
-
-
- 29 replies
- 1.9k views
-
-
மஹிந்த ராஜபக்ச தலைமையிலான அரசாங்கத்தில் வர்த்தக மற்றும் வாணிப்பத்துறை அமைச்சுப் பொறுப்பை தான் கேட்டிருப்பதாகவும், அதனை வழங்கத் இணக்கம் தெரிவித்துள்ளதால் நாளைய தினம் காலை அவருடன் இணைந்துகொள்ளவுள்ளதாவும் ஈபிஆர்எல்எப் கட்சியின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் ஐ.பி.சி தமிழுக்குத் தெரிவித்தார். தமிழ் தேசியக் கூட்டமைப்பைச் சேர்ந்த மேலும் மூன்று நாடாளுமன்ற உறுப்பினர்கள் மஹிந்த ராஜபக்சவுடன் இணைந்துகொள்வதற்கு பேரம்பேசி வருவதாக வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் தெரிவித்துள்ளார். அவர்களின் பெயர்களையும் குறிப்பிட்டு அதற்காக அவர்கள் பெற்றுக்கொள்ளவுள்ள சன்மானங்கள் தொடர்பிலான பட்டியலையும் வெளியிட்ட…
-
- 11 replies
- 1.9k views
-
-
லண்டனில் இருந்து வந்தவரின் பெறுமதிமிக்க பொருட்கள் மாயம் [28 - January - 2008] லண்டனில் இருந்து விடுமுறையில் விமானம் மூலம் இலங்கைக்கு வந்த குடும்பத்தவர் ஒருவரின் பெறுமதிமிக்க பொருட்கள் காணாமல் போன சம்பவம் தொடர்பாக அவர் சம்பந்தப்பட்ட விமான நிறுவனத்திடமும், அதிகாரிகளிடமும் முறையிட்டுள்ளார். கிளாஸ்கோ விமான நிலையத்தில் இருந்து ஈ.கே.26 இலக்க எமிரேட்ஸ் விமானத்தில் 21 ஆம் திகதி பி.ப.1.30 மணிக்கு முதலில் துபாய்க்கு பயணமானார். ஏழு மணி நேரப்பயணத்தின் பின்னர் துபாய் நேரப்படி 12.55 க்கு துபாய் விமான நிலையத்தையடைந்தார். அங்கு சுமார் 5 மணிநேரம் தங்கியிருந்த பின்னர் ஈ.கே.559 இலக்க விமானத்தில் மாலை 5.30 மணிக்கு (துபாய் நேரம்) புறப்பட்டு கட்டு நாயக்க விமான நிலையத்த…
-
- 4 replies
- 1.9k views
-
-
இலங்கைக்கு எதிரான அமெரிக்க தீர்மானம்: வாக்களித்த நாடுகளின் முழுப்பட்டியல் ஐக்கிய நாடுகள் மனித உரிமை குழுவில் இலங்கைக்கு எதிராக அமெரிக்கா முன்வைத்த தீர்மானத்துக்கு 24 நாடுகள் ஆதரவாக வாக்களித்துள்ளது. 15 நாடுகள் எதிராகவும், 8 நாடுகள் வாக்களிப்பை புறக்கணித்தும் இருந்தன. தீர்மானத்திற்கு ஆதரவாக வாக்களித்த நாடுகள்: 01.இந்தியா 02.பெல்ஜியம் 03.பெனின் 04.கேமரூன் 05.சிலி 06.கோஸ்டாரிக்கா 07.செக் குடியரசு 08.கௌதமாலா 09.ஹங்கேரி 10.ஆஸ்திரேலியா 11.இத்தாலி 12.லிபியா 13.மொரிசியஸ் 14.மெக்சிகோ 15.நைஜீரியா 16.நார்வே 17.பெரு 18.போலந்து 19.மால்டோவா குடியரசு 20.ரோமானியா 21.ஸ்பெயின் 22.சுவிட்சர்லாந்து 23. அமெர…
-
- 7 replies
- 1.9k views
-
-
மதிமுகவை கூட்டணியை விட்டு ஜெயலலிதா விரட்டியதில் கர்நாடகம் மற்றும் தமிழகத்தைச் சேர்ந்த இரு நிறுவனங்களுக்கு முக்கிய பங்கு இருப்பதாகப் பேசப்படுகிறது. முதலில் நாடாளுமன்றத் தொகுதிக்கு ஒரு சட்டமன்றத் தொகுதி என்ற கணக்கில் அதிமுகவிடம் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கோரிய இடங்கள் மொத்தம் 39. இப்படித்தான் அவருக்கு்ம் இரு கட்சிகளுக்கும் இடையே பேச்சுவார்த்தை ஆரம்பித்தது. ஜெயலலிதாவின் முன்னாள் உட்கார்ந்து இருக்கிறார்களா.. இல்லை நின்று கொண்டிருக்கிறார்களே என்று யூகிக்க முடியாத அளவுக்கு 'எஸ் டைப் சேர்'மாதிரியே உட்கார்ந்து தரையை மட்டுமே பார்க்கும் அதிகாரம் கொண்டவர்களான ஓ.பன்னீர்செல்வம், செங்கோட்டையன் ஆகியோர் தான் வைகோவிடம் இந்த 39 தொகுதி பட்டியலை வாங்கிச் சென்றனர். போனவர்கள் போனது…
-
- 8 replies
- 1.9k views
-
-
தமிழீழக் கொள்கை வலுப்பெறுகிறது அரசுதான் அதற்கு தென்பூட்டுகிறது! ஐக்கிய தேசியக் கட்சி சாடல் ஐக்கிய தேசியக் கட்சியால் தோற்கடிக்கப்பட்ட புலிகளின் தமிழீழக்கொள்கை மீண்டும் வலுப்பெற்றுள்ளது. மஹிந்த ராஜ பக்ஷவின் அரசு அந்தக் கொள்கைக்குத் தென்பூட்டி வளர்த்து வருகிறது. விடுதலைப் புலிகள் தொடர்ந்து நடத்திவரும் விமா னத் தாக்குதல்கள் இதனையே தெளிவுபடுத்துகின்றன. இவ்வாறு நேற்று அரசைச் சாடியிருக்கின்றது எதிர்க்கட்சி யான ஐக்கிய தேசியக் கட்சி. ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோன் அமரதுங்க நேற்று எதிர்க் கட்சித் தலைவரின் அலுவலகத்தில் இடம் பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றுகையில் தெரிவித்த தாவது: புலிகள் தற்போது விமானத் தாக்குதல்களை மேற்கொள்ளத் த…
-
- 5 replies
- 1.9k views
-
-
ஒட்டுமொத்த தமிழரும்- சிங்களவரும் தமிழீழவிடுதலைப்புலிகள் பின்தள்ளப்படுகின்றார்கள் அவர்களது பகுதிகள் சுருங்கிச்செல்கின்றன.....என்றவ ாறு சில அம்புக்குறிகள் மூலம் அப்பகுதிகளை சுட்டிக்காட்டியபடியும் அவை எப்படி சுருங்கிச்செல்கின்றன அல்லது தமது படைகள் எவ்வாறு பின்தள்ளியவாறு முன்னோக்கிச்செல்கின்றன என வரைபடங்கள் மூலம் காட்டியபோது.... அவற்றைப்பார்த்த நாம் மிகவும் சுருங்கிவிட்டதாகவும் எமது இனம் மிகவும் சிறியதாகிவிட்டதாகவும் கணித்தோம். ஆனால் நண்பர்களே நான் வேறுமாதிரி சிந்தித்தேன் அதாவது ஸ்ரீலங்கா என்கின்ற தேசத்தைச்சுற்றி இருக்கும் உலகத்தமிழர்கள் எல்லோரையும் ஒன்றிணைத்துப்பார்க்கும்போத
-
- 4 replies
- 1.9k views
-
-
புதன் 21-11-2007 17:26 மணி தமிழீழம் [தாயகன்] தம்பனையில் முன்னகர்வு முயற்சி முறியடிப்பு மன்னார் - வவுனியா எல்லையிலுள்ள தம்பனையில் இன்று காலை 8.00 மணியவில் சிறீலங்காப் படையினர் மேற்கொண்ட முன்னகர்வு முயற்சி முறியடிக்கப்பட்டுள்ளதாக விடுதலைப் புலிகள் அறிவித்துள்ளனர். விடுதலைப் புலிகளின் முறியடிப்புத் தாக்குதலுக்கு முகம் கொடுக்க முடியாத படையினர் பின்வாங்கிச் சென்றதாக தமிழீழ படைத்துறைப் பேச்சாளர் இராசையா இளந்திரையன் தெரிவித்தார். இன்றைய மோதலில் சிறீலங்காப் படையினருக்கு ஏற்பட்ட இழப்பு இதுவரை தெரிய வரவில்லை. http://www.pathivu.com/
-
- 2 replies
- 1.9k views
-
-
சிறீலங்கா துணைப்படைக்கூலிக் குழுக்களான கருணா – பிள்ளையான் கும்பல்களுக்கு மத்தயில் வெடித்துள்ள உட்பூசல்கள் வெளிநாடுகளில் இயங்கும் உளவாளிகளிடையேயும் பரவியுள்ளது. சிலவாரங்களுக்கு முன் ஐரோப்பிய நாடொன்றில் இயங்கிவரும் உளவாளியின் சகா ஒருவர் திருமலை மூதூரில் வைத்து பிள்ளையான் குழுவினரால் சுட்டுக்கொல்லப்பட்டிருந்தா
-
- 0 replies
- 1.9k views
-
-
யால காட்டுப்பகுதியில் வைத்து சிறிலங்கா நேற்று மாலை 3.30 மணியளவில் விடுதலைப் புலிகள் நடத்திய தாக்குதலில் நான்கு ஊர்காவல் படையினர் கொல்லப்பட்டுள்ளனர். யால காட்டுப்பகுதியில் சுற்றுக்காவல் சென்ற ஊர்காவல் படையினரே விடுதலைப் புலிகளின் தாக்குதலுக்கு இலக்காகியுள்ளனர். இதன்போது ஊர்காவல்படையினரிடமிருந்து ஆயுதங்களையும் விடுதலைப் புலிகள் கைப்பற்றியுள்ளனர். 4 homeguards killed Yala jungles [TamilNet, Monday, 04 February 2008, 06:53 GMT] Four members of the homeguards, an auxillary force of the Sri Lanka armed forces, were killed in an attack by the Liberation Tigers in the Yala jungles in the south-east of the island, around 3.30 p.m., Sunday. The home guards …
-
- 4 replies
- 1.9k views
-
-
சிறீலங்கா அரசு ஐ.நா.வின் நிபுணர் குழு எழுதிய “மானுடத்திற்கு எதிரான குற்றங்கள்” அறிக்கையின் ஒரு பகுதி வெளியானதால், இடிந்துபோய் உட்கார்ந்தது. அதை முறியடிக்க எண்ணி, ராஜபக்சே அரசு, ஐ.நா.வை முதலில் மிரட்டியது. பிறகு அறிககையை அதிகாரபூர்வமாக வெளியிடவேண்டாம் என்று கெஞ்சி கேட்டுக்கொண்டது. அதற்கும் ஐ.நா.மசியாது போல தெரிந்த உடனே, ருஷ்யா மூலம் நிர்ப்பந்தம் கொடுத்து, ஐ.நா. பாதுகாப்பு குழு அந்த அறிக்கையை வெளியிட இடாமல் தடுக்க முயற்சிக்கிறது. அதேபோல சீனாவையும் தனக்கு சாதகமாக வாதாட ஐ.நாவில் ஏற்பாடு செய்து வருகிறது. அதே நேரம், அமெரிக்காவில் உள்ள சிறீலங்கா அரசுக்கு ஆதரவாக இருக்கும் சில செனட் உறுப்பினர்களை வைத்து, ஐ.நா.வில் சிறீலங்காவுக்காக வாதாட எர்பாடு செய்துள்ளது. இதுபோன்ற “சதி” வேலைகள…
-
- 1 reply
- 1.9k views
-
-
சிங்களப் பேரினவாதம் முன்பு இருந்ததை விட அதி உச்சவெறியுடன் ஆர்பாரித்து எழுந்து ஈழத்தமிழினத்தை அழிப்பதற்கு இந்திய ஆளும் வாக்கமே முழக் காரணம் என்பதில் அநேகமாக யாருக்கும் மாற்றுக் கருத்து இருக்க முடியாது. சிறீலங்கா மற்றும் இந்தியப் படைகளின் கூட்டணிப் படையெடுப்பில் இருந்து ஈழத் தமிழ் மக்களை காப்பாற்றுவற்கு இன்று உலகத் தமிழ் மக்கள் ஒரே நேர் கோட்டில் ஆர்பரித்து எழுந்திருப்பது ஆறதல் தரும் மாற்றமேயாகும். இன்றைய உலகமயமாதல் சூழலில் சந்தைப் பொருளாதார நலன் ஒன்றையே குறிக்கோளாகக் கொண்டு செயற்படும் மேற்குலகமும் அதன் கட்டுப்பாட்டுக்குள் இருக்கும் ஐநா சபை முதலான இன்னோரன்ன பிற அமைப்புக்களும் உடனடியாக தலையிட்டு தமிழனப் படுகொலையை தடுத்து நிறுத்தி நமது உறவுகளை காப்பாற்றும் என்று நா…
-
- 7 replies
- 1.9k views
-
-
யாழ்ப்பாணத்தில் திடீர் தாக்குதலை நடத்த நகரும் புலிகளின் விசேட படையணிகள் ஜ02 - ழுஉவழடிநச - 2008ஸ ஜகுழவெ ளுணைந - யு - யு - யுஸ புலிகள் இயக்கம் யாழ்ப்பாணத்தில் அரச படையினரின் சில கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த முகாம்கள் மீது திடீர் தாக்குதல்களை மேற்கொள்ளத் திட்டமிட்டிருப்பதாகவும் இதற்காக புலிகள் இயக்கத்தின் சில விசேட குழுவினர் தற்போது யாழ்ப்பாணம் நோக்கி நகர்ந்து வருவதாகவும் இவற்றில் சில குழுவினர் சாவகச்சேரிப் பிரதேசத்தை அண்டியுள்ள பற்றைகள் அடர்ந்த பகுதிகள் மற்றும் காட்டுப் பகுதிகளில் தங்கியிருப்பதாகவும் பாதுகாப்புத்துறையின் வடபகுதி புலனாய்வு பிரிவினருக்குத் தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன. இதுபற்றி யாழ்ப்பாணம் பாதுகாப்புத்துறை வட்டாரங்களில் கூறப்படும் தகவல்களுக்கே…
-
- 5 replies
- 1.9k views
-
-
பாபநாசம்: இலங்கை அதிபர் மகிந்தா ராஜபக்சேவின் தங்கை கணவர் திருக்குமார் நடேசன் பாபநாசம் அருகே உள்ள அகஸ்தியர் மலைக்கு வருகை தந்தார். தமிழர்களுக்கு எதிராக அவர் பூஜை செய்ததாக தகவல் பரவியதால் பரபரப்பு ஏற்பட்டது. இலங்கை அதிபர் ராஜபக்சேவின் தங்கை நிருபமா பக்சே. இவரது கணவர் எம்பி திருக்குமார் நடேசன். நேற்று காலை பாபநாசம் வந்த இவர் அகஸ்தியர் அருவி அருகேயுள்ள அகஸ்தியர் கோயிலில் வழிபட்டார். அதன்பின்னர் அங்குள்ள முருகன் சன்னதியில் நடைபெற்ற சிறப்பு பூஜையில் அவர் கலந்து கொண்டார். அவருடன் இலங்கை ழிலாளர் காங்கிரஸ் தலைவர் மணிமுத்து, சிலோன் இன்டர்நேஷனல் வங்கி மேலாளர் ராகவன் உள்பட 25 பேர் வந்திருந்தனர். தமிழர்களுக்கு எதிராக பூஜை - யாகம்? தரிசனத்தை முடித்து விட்டு திருக்…
-
- 1 reply
- 1.9k views
-
-
புலிகள் கொல்லப்பட்டமைக்கு கெலஉறுமயவின் ஒரே ஒரு அமைச்சர் பாட்டாளி சம்பிக ரணவக்க கண்டனம் தெரிவித்துள்ளார்! பிற் குறிப்பு: தீவிர இனவாதியான இவர் நாலு கால் புலிகளை அப்பாவிகளாக இனம் கண்டு கரிசனை செலுத்தும் அதே வேளை இரண்டு கால் புலிகளையும் அவர்கள் சார்பான தமிழர்களையும் கடத்தி காணமற் போகச் செய்தல் என்பவற்றை வெளிப்படையாக ஆதரிப்பவராகவும் விளங்குகிறார்! புத்தம் சரணம் கச்சாமி, தர்மம் சரணம் கச்சாமி!
-
- 1 reply
- 1.9k views
-
-
அநுராதபுரம் - கெப்பிடிகொலவில் கினளமோர் குண்டுவெடிப்பு இன்று ஞாயிறு 06.04.2008 காலை 08.45 மணியளவில் சிறிலங்கா விசேட அதிரடிப்படையினரும் சிங்கள ஊர்காவல்படையினரும் பயணித்த வாகனம் ஒன்று கினளமோர் தாக்குதலுக்கு இலக்காகியுள்ளது. அநுராதபுரம் - கெப்பிடிகொலவில் உள்ள கல்மிலவீதியில் இத்தாக்குதல் இடம்பெற்றுள்ளது. இரு ஊர்காவல்படையினர் மட்டுமே காயப்பட்டுள்ளதாக சிறிலங்கா இராணுவத்தினர் கூறுகின்றனர். ஆனால் இழப்புகள் அதிகமாக இருக்கலாம் என உறுதி செய்யப்படாத தகவல்கள் தெரிவிக்கின்றன. மன்னார் மற்றும் மணலாறு களமுனைகளின் தாக்கத்தினால் அண்மையில் கிழக்கில் இருந்து விசேட அதிரடிப்படையினரை இப்பகுதிக் சிறிலங்கா நகர்த்தியிருந்தது. புதுவருட தினத்தன்று ஆரம்பித்துள்ள இத்தாக்குதல்…
-
- 0 replies
- 1.9k views
-
-
முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா நிரந்தரமாக நாட்டை விட்டு வெளியேறத் தீர்மானம்? www.globaltamilnews.com முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்கா நிரந்தரமாக நாட்டை விட்டு வெளியேறத் தீர்மானித்திருப்பதாகத் தெரிய வருகிறது. 'வோர்ட்டர்ஸ் ஏஜ்' வழக்கில் வழங்கப்பட்ட தீர்ப்புக்கமைய 30 இலட்சம் ரூபாய் நட்ட ஈட்டைச் செலுத்தி விட்டு அவர் நாட்டை விட்டு வெளியேறத் தீர்மானித்திருக்கிறார். உயர்நீதிமன்றத் தீர்ப்புக்கமைய அவர் ஊழல் மற்றும் லஞ்ச விசாரணைக்குழுவின் விசாரணைக்கு முகம் கொடுக்க வேண்டியுள்ளார். திருமதி குமாரணதுங்க கொழும்பு றொஸ்மிட் பிளேஸிலுள்ள தனது காணியையும் வீட்டையும் விற்பதற்காக பிரபல காணி விற்பனை தரகர் ஒருவரிடம் பொறுப்பை ஒப்படைத்துள்ளதாகவும் தெரிய வருகிறது. இத்தகைய …
-
- 12 replies
- 1.9k views
-
-
தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையால் தாக்கப்பட்டு வருகிறார்கள். படுகொலை செய்யப்பட்டு உள்ளனர். இதற்கு அரசியல் சாயம் பூச வேண்டாம். இங்கு நாம் இந்த கண்டன பொதுக்கூட்டத்தை நடத்துகிறோம். இது சென்னை கோட்டையை மட்டுமல்ல, டெல்லி கோட்டை வரை எட்டும். இலங்கை இராணுவத்தால் தமிழக மீனவர்கள் தாக்கப்படுவது தொடர்ந்து வருகிறது. இதை மத்திய, மாநில அரசுகள் வேடிக்கை பார்க்கிறது. கடந்த சில வருடங்களாக ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவர்கள் தாக்கப்பட்டு உள்ளனர். 500 க்கும் மேற்பட்ட மீனவர்கள் கொல்லப்பட்டு உள்ளனர். நூற்றுக்கணக்கான மீனவர்களும் சிறை பிடிக்கப்பட்டு விடுவிக்கப்பட்டு உள்ளனர். நாகை மீனவர் ஜெயக்குமார் கொடூரமாக கொலை செய்யப்பட்டு உள்ளார். அவரை கழுத்தை கயிற்றால் நெரித்து கொலை செய்து கடலில்…
-
- 11 replies
- 1.9k views
-
-
பாகிஸ்தானின் லஷ்கர்-இ-தொய்பா தீவிரவாதிகள் கொழும்பில் இராணுவ பயிற்சி முகாம் ஒன்றை நடத்தி வருகின்றார்கள் என்று பரபரப்புத் தகவல் ஒன்று கசிந்துள்ளது. இந்தியாவின் மராட்டிய மாநில பொலிஸாரால் கைது செய்யப்பட்டிருக்கும் தீவிரவாதி ஒருவர் அவரது வாக்குமூலத்தில் இவ்வதிரடித் தகவலை வழங்கி உள்ளார். மராட்டிய மாநிலம் புனேயில் உள்ள பேக்கரி ஒன்றில் கடந்த பெப்ரவரி மாதம் 13 ஆம் திகதி குண்டுத் தாக்குதல் ஒன்று நடத்தப்பட்டது. இதில் 17 பேர் உயிர் இழந்தனர். 56 பேர் காயம் அடைந்தனர்.இது தொடர்பாக மராட்டிய பொலிஸார் விசாரணை நடத்தி குண்டு வைத்தவர்களைக் கண்டு பிடித்துள்ளார்கள். இவர்களில் ஒருவர் ஹிமாயத் பெய்க் . இவர் பாகிஸ்தானின் லஹ்கர் -இ-தொய்பா இயக்கத்தைச் சேர்ந்தவர். இலங்கையின் …
-
- 5 replies
- 1.9k views
-