ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142830 topics in this forum
-
ஜெனரல் சரத் பொன்சேகாவின் மனைவிக்கு இராணுவத்தினூடாக 44 மிலியன் ரூபாய்களுக்கு மெர்சிடஸ் பென்ஸ் கார் ஒன்றைப் பெற்றுக் கொடுத்துள்ளதாக 'த சன்டே லீடர்' பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது. பொன்சேகா இவ்வருட இறுதியில் சேவையில் இருந்த ஓய்வு பெறப் போவதாக செய்திகள் அடிபடுவது அறிந்ததே. மார்ச் 14ம் திகதி வாங்கப்பட்ட இவ் வாகனத்தில் எந்தவித பாதுகாப்பு அம்சங்களும் இல்லாததுடன் வாங்கப்பட்ட ஆவணங்களில் இது இராணுவ அதி உயர் அதிகாரியான சரத் பொன்சேகாவின் பாவனைக்காக வாங்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இவ் விடயம் பற்றி இராணுவ பேச்சாளர் உதய நாணயக்காரவிடம் வினவிய பொழுது, இவ்விடயம் பற்றி தமக்கு எதுவும் தெரியாதெனவும், மெர்சிடஸ் பென்ஸை இலங்கைக்கு இறக்குமதி செய்யும் ஒரே நிறுவனமான 'டீம…
-
- 7 replies
- 1.8k views
-
-
பிரபாகரன் மாவீரன் என்பது மகிந்தவுக்கும் தெரியும்! - TNAஇன் முதன்மை வேட்பாளர் விக்னேஸ்வரன் உரை!! தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் ஒரு மாவீரன் என்பதை சிறிலங்கா ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச கூட ஏற்றுக் கொண்டுள்ளார் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முதலமைச்சர் வேட்பாளரும் முன்னாள் நீதியரசருமான சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.. வல்வெட்டித்துறையில் இடம்பெற்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பரப்புரைக் கூட்டத்திலேயே அவர் இவ்வாறு கூயுள்ளார். இது தொடர்பில் விக்னேஸ்வரன் தனதுரையில் மேலும் தெரிவித்துள்ளதாவது: 'வல்வெட்டித்துறை விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் பிறந்த மண். அந்த மண்ணில் நின்றுகொண்டு நான் சொல்கிறேன், பிரபாகரன் பயங்கரவாதி அல்ல. அவர் ஒரு மாவீரன். இதனை நான் …
-
- 21 replies
- 1.8k views
-
-
அரசாங்கப் படையினரிடம் சரணடையப் போவதில்லை புலிகள் மீண்டும் வலியுறுத்து : அரசாங்கப் படையினரிடம் சரணடையப் போவதில்லை என தமிழீழ விடுதலைப் புலிகள் மீண்டும் வலியுறுத்தியுள்ளனர். தமிழ்ச் சிவிலியன்களை மனிதய கேடயமாக பயன்படுத்தி வருவதாக தெரிவிக்கப்படும் கருத்தை ஏற்றுக்கொள்ள முடியாதென தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளர் பா.நடேசன் தெரிவித்துள்ளார். யுத்த களத்தில் எவ்வாறான நிலைமைகளை எதிர்நோக்கினாலும் தமிழீழ போராட்டம் தொடரும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். தமிழ் மக்களின் தமிழீழ பேராட்டம் எந்தக் காரணத்திற்காகவும் கைவிடப்பட மாட்டாதென அவர் குறிப்பிட்டுள்ளார். சிவிலியன் பாதுகாப்பை கருத்திற் கொண்டு இலங்கை அரசாங்கத்தை யுத்தம் நிறுத்தமொன்றுக்கு…
-
- 2 replies
- 1.8k views
-
-
சென்னை பாமக நிறுவனர் ராமதாசை, திமுக மத்திய அமைச்சர் டி.ஆர். பாலு சந்தித்துப் பேசினார். இரு கட்சிகள் இடையே மீண்டும் சமரசம் செய்து வைக்கும் முயற்சியாக இந்த சந்திப்பு நடந்ததாகக் கூறப்படுகிறது. விழுப்புரம் அருகே தைலாபுரத்தில் உள்ள ராமதாசின் வீட்டில் நேற்றிரவு இந்த சந்திப்பு நடந்ததாக, பாமக வட்டாரங்கள் தெரிவித்தன. சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேல் நீடித்த இந்த சந்திப்பின் போது, இலங்கைத் தமிழர் நலன் விஷயத்தில் இரு கட்சிகளும் இணைந்து போராட வேண்டும் என்று யோசனை முன் வைக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. பழைய கருத்து வேறுபாடுகளை மறந்து விட்டு திமுக கூட்டணியில் பாமக மீண்டும் இணைய வேண்டும் என்று ராமதாஸை டி.ஆர். பாலு கேட்டுக் கொண்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. கருணாந…
-
- 3 replies
- 1.8k views
-
-
மட்டக்களப்பு பங்குடாவெளியிலுள்ள கருணா குழுவினரின் முகாம் கடந்த வியாழக்கிழமை தாக்குதலுக்குள்ளானமை யாவரும் அறிந்ததே. செங்கலடி- பதுளை வீதியில் பங்குடாவெளியிலுள்ள இந்த முகாம் செங்கலடியில் இருந்து மேற்கே 5 கிலோமீற்றர் தூத்திலும் மட்டக்களப்பு நகரத்திலிருந்து 16 கிலோமீற்றர் தூரத்திலும் அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. கருணா குழுவினரின் இந்த முகாமில் வியாழக்கிழமை இரவு 9 மணியளவில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் கருணா குழு உறுப்பினரான முகாம் பொறுப்பாளரும் மற்றொருவரும் உடனிருந்த பிள்ளையான் குழு உறுப்பினர்களால் உணவருந்திக்கொண்டிருந்த வேளை சுட்டுக்கொல்லப்பட்டனர். இவர்களை சுட்டுக் கொலைசெய்த 7 பிள்ளையான் குழு உறுப்பினர்களும் அங்கிருந்த ஆயுதங்களுடன் தலைமறைவாகியுள்ள நிலையில…
-
- 0 replies
- 1.8k views
-
-
கொழும்பில் துப்பாக்கிச்சூடு - இரு படையினர் காயம் [ த.இன்பன் ] - [ ஓக்ரோபர் 05, 2007 - 03:51 PM - GMT ] சிறிலங்கா தலைநகர் கொழும்பின் மாளிகாவத்தைப் பகுதியில் பொது உடையில் நின்றிருந்த சிறிலங்கா படையினர் மீது அடையாளம் தெரியாத நபர்கள் மேற்கொண்ட துப்பாக்கிச்சூட்டில் இரு படையினர் படுகாயமடைந்துள்ளனர். மாளிகாவத்தைப் பகுதியில் உள்ள தருசலாம் வித்தியாலயத்திற்கு அருகே பொது உடையில் பொது உடையில் கடமையில் ஈடுபட்ட படையினரை இலக்கு வைத்து விடுதலைப் புலிகளின் பிஸ்ரல் அணியினர் பகல் 2.30 மணியளவில் துப்பாக்கிச்சூட்டை நடத்தியதாக சிறிலங்கா அரசு தெரிவித்துள்ளது. இதன்போது காயமடைந்த படையினர் இருவரும் கொழும்பு தேசிய மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளதாகவும் அரசு மேலும் தெரி…
-
- 2 replies
- 1.8k views
-
-
புலிகளால் நேசிக்கப்பட்ட பிரசன்ன விதானகேயை புதிதாக முழைத்த தமிழ்த் தேசியப் பித்தர்களுக்கு தெரியுமா? 27 ஜூன் 2014 பிரசன்னவிதானகே VS மீடியா மினிஸ்ரர் சரத் அமுனுகம என்ற பிரதான வழக்கு இலங்கையின் சட்ட மானவர்களுக்கு பாடமாக இருப்பது தெரியுமா? குளோபல் தமிழ்ச் செய்திகளிற்காக வரதராஜன்:- திரைப்பட இயக்குனர் பிரசன்னா விதானகே நெறிப்படுத்தியுள்ள திரைப்படத்தை நான் இதுவரையில் பார்த்ததில்லை. ஆயினும் அந்த திரைப்படம் திரையிடுவதற்கு முன்னரே பலரும் அதனைப் பற்றி எழுதத் தொடங்கி உள்ளதுடன் அதனைத் தடை செய்யவேண்டும் எனக் கிளர்ந்து எழுந்துள்ளமை பின்னர் அது காட்சிப்படுத்தப் பட்டபோது சில குறுகிய விடயங்களையிட்டு விமர்சிக்கப்பட்டமை போன்ற செய்திகள் -என்னை இந்தக் குறிப்பை எழுத வைத்தது. …
-
- 23 replies
- 1.8k views
-
-
கொழும்பில் ரயில் மீது கண்ணிவெடி தாக்குதல்: 300 பயணிகள் தப்பினர் வியாழக்கிழமை, டிசம்பர் 20, 2007 கொழும்பு: கொழும்பில் பயணிகள் ரயில் மீது நடந்த கண்ணிவெடித் தாக்குதலில் 300 பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். திரிகோணமலையில் இருந்து கொழும்பு சென்ற ரயில் நேற்றிரவு 8.30 மணியளவில் கண்ணி வெடியில் சிக்கியது. தண்டவாளத்தில் வைக்கப்பட்டிருந்த கண்ணி வெடி பயங்கரமாக வெடித்து சிதறியதில் ரயில் என்ஜினும், தண்டவாளமும் சேதமடைந்தன. ஆனால், இந்த தாக்குதலில் அதிர்ஷ்டவசமாக ரயிலில் இருந்த 300 பயணிகளும் உயிர் தப்பினர். விடுதலைப் புலிகள் தான் இந்த தாக்குதலை நடத்தியதாக இலங்கை ராணுவம் கூறியுள்ளது. பிரபாகரன் காயம் உண்மை-இலங்கை: இதற்கிடையே விடுதலைப் புலிகள…
-
- 3 replies
- 1.8k views
-
-
இலங்கை அரச படையினருக்கு எதிரான யுத்த்தில் ஈடுபட்ட தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தைச் சேர்ந்த மாவீரர்களின் படங்களை பெற்றோர்கள் தங்கள் வீடுகளில் கொழுவுவதற்கு எந்தத் தடையும் இல்லை என்று கிளிநொச்சி மாவட்ட தளபதி பிரிக்கேடியர் ரேணுகா ரொவல் தெரிவித்தார். இன்று முறிகண்டியில் நிலப்பிரச்சினை தொடர்பான சந்திப்பில் அப்பகுதி மக்கள் மத்தியில் உரையாற்றிய பொழுதே அவர் இவ்வாறு தெரிவித்தார். இராணுவத்தினர் சில மக்களுக்கு வீடுகளை கட்டிக் கொடுத்தனர் என்றும் அந்த வீடுகளுக்கு குடியேறிய மக்கள் முதன் முதலில் ஆணிகளை அடித்து சில படங்களை கொலுவினார்கள் என்று கிளிநொச்சி மாவட்ட தளபதி பிரிக்கேடியர் ரேணுகா ரொவல் குறிப்பிட்டார். அந்தப் படங்கள் யாருடையவை தெரியுமா என்று கேட்ட இராணுவத்தளபத…
-
- 4 replies
- 1.8k views
-
-
முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பகுதியில் இளம் குடும்பஸ்தர் ஒருவர் கடந்த இரண்டு நாட்களாக காணாமல் போயுள்ளதாக புதுக்குடியிருப்பு பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடொன்று பதிவு செய்யப்பட்டுள்ளது . புதுக்குடியிருப்பு கோம்பாவில் இரண்டாம் வட்டாரத்தினை சேர்ந்த விஜயரட்ணம் தனுசன் (வயது 30) என்ற இளம் குடும்பஸ்தர் கடந்த 07.10.2019 இரவு புதுக்குடியிருப்பு நகரப்பகுதியில் உள்ள உணவகம் ஒன்றுக்கு சென்று சாப்பாடு வாங்கிவருவதாக மனைவிக்கு சொல்லிவிட்டு சென்ற நிலையில் வீடுதிரும்பவில்லை இவர் பயணம் செய்த மோட்டார் சைக்கிள் மற்றும் தலைக்கவசம் என்பன அருகில் உள்ள ஒழுங்கையில் கண்டெடுக்கப்பட்டுள்ளன . தனது கணவர் காணாமல் போனது பற்றி கருத்து தெரிவித்த மனைவி கராத்தே வகுப்புகள…
-
- 22 replies
- 1.8k views
-
-
மொனறாகல மாவட்டம் புத்தள தம்பகோட்டப் பகுதியில் தமிழீழ விடுதலைப் புலிகள் இன்று நடத்திய அதிரடித் தாக்குதலை அடுத்து அம்பாந்தோட்ட மாவட்டத்தில் யாலவில் அமைக்கப்பட்ட இராணுவத்தின் கூட்டுப்படை ஒருங்கிணைப்புக் கட்டளை மையத்திற்கு தளபதியாக நியமிக்கப்பட்ட பிரிகேடியர் சுதந்த ரணசிங்க அப்பதவியில் இருந்து தூக்கி எறியப்பட்டுள்ளார். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 1.8k views
-
-
யாழில் வாள் வெட்டுக்குழு எனும் சந்தேகத்தில் மாணவன் உட்பட ஐவர் கைது – குளோபல் தமிழ்ச் செய்தியாளர்:- யாழில் உள்ள பிரபல பாடசாலை மாணவன் உட்பட ஐந்து பேர் வாள் வெட்டுகுழுவை சேர்ந்தவர்கள் எனும் சந்தேகத்தில் கோப்பாய் பொலிசாரினால் கைது செய்யப்பட்டு உள்ளனர். கோப்பாய் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தலைமையிலான விஷேட பொலிஸ் குழுவினரால் குறித்த ஐந்து நபர்களும் கைது செய்யப்பட்டு உள்ளனர். உரும்பிராய் பகுதியை சேர்ந்த இருவர் உட்பட , கோப்பாய் மத்தி , திருநெல்வேலி , மற்றும் சுன்னாகம் பகுதிகளை சேர்ந்தவர்களே கைது செய்யப்பட்டு உள்ளனர். குறித்த குழுவில் கைது செய்யப்பட்டவர்கள் 16, தொடக்கம் 20 வயதுக…
-
- 3 replies
- 1.8k views
-
-
யாழ்ப்பாணத்தில் அமைக்கப்பட்டுள்ள மிக உயரமான விகாரைக்கு கலசம் வைப்பு Share on FacebookShare on Twitter யாழ்ப்பாணம் காங்கேசன்துறை, தையிட்டிப் பகுதியில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள விகாரை ஒன்றிற்கு கலசம் வைக்கும் நிகழ்வுகள் மிக இரகசியமாக இன்றைய தினம்(வியாழக்கிழமை) இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த நிகழ்வினை முன்னிட்டு அப்பகுதியில் பெருமளவான இராணுவம் மற்றும் பொலிஸார் குவிக்கப்பட்டு பாதுகாப்புப் பலப்படுத்தப்பட்டு இருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டது. அதேவேளை தையிட்டில் அமைக்கப்பட்டுள்ள இந்த விகாரையே யாழ்ப்பாணத்தில் அமைக்கப்பட்டுள்ள மிக உயரமான விகாரை எனவும் த…
-
- 31 replies
- 1.8k views
- 1 follower
-
-
கிளிநொச்சி மருத்துவமனை சூழ கடும் எறிகணை தாக்குதல்கள். நோயாளிகள் அல்லோலகல்லோலம் கிளிநொச்சி மருத்துவமனையைச் சூழ்ந்த பகுதிகளில் இன்று அதிகாலை 2 மணியளவில் கடும் எறிகணை தாக்குதல்கள் நடத்தப்பட்டதனால் - அங்கு தங்கியிருந்து சிகிச்சை பெற்ற நோயாளிகள் பெரும் பீதிக்கு உள்ளாகியதாக கிளிநொச்சியில் இருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்தத் தாக்குதல்களையடுத்து மாடியில் இருந்த நோயாளிகள் அனைவரும் பாதுகாப்புக்காக மருத்துவ மனையின் தளப்பகுதியில் வந்திருந்தனர். பொழுது விடிந்ததும் இஙகு தங்கியிருந்த சிகிச்சை பெற்ற பல நோயாளர்கள் தமது வீடுகளுக்குச் சென்று விட்டதாக கிளிநொச்சி பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார். மரு…
-
- 6 replies
- 1.8k views
-
-
நோர்வேயில் உள்ள தமிழர்கள் மத்தியில் எந்தளவுக்கு விரக்தி மனப்பான்மை காணப்படுகின்றது என்பதை என்னால் புரிந்துகொள்ள முடிகின்றது எனத் தெரிவித்த நோர்வேயின் அனைத்துலக அபிவிருத்திக்கான அமைச்சர் எரிக் சொல்ஹெய்ம், இருந்தபோதிலும் தன்னால் அற்புதங்கள் எதனையும் செய்துவிட முடியாது எனவும் குறிப்பிட்டிருக்கின்றார். நோர்வேயில் தமிழ் மக்கள் மேற்கொண்டு வரும் போராட்டங்கள் தொடர்பாகவும், நோர்வே அரசாங்கத்துக்கு அவர்கள் கொடுத்து வரும் அழுத்தங்கள் தொடர்பாகவும் கருத்து வெளியிடுகையிலேயே நோர்வேயின் அமைச்சரும் 2002 ஆம் ஆண்டில் இருந்து சிறிலங்கா அரசாங்கத்துக்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இடையிலான சமாதானப் பேச்சுக்களுக்கு அனுசரணையாளராக இருந்தவருமான எரிக் சொல்ஹெய்ம் இவ்வாறு தெரிவித்…
-
- 16 replies
- 1.8k views
-
-
இரணைமடு குளத்தின் இன்றைய நிலை Written by editor | August 15, 2014 | Comments Off இரணைமடு குளத்தின் இன்றைய நிலை http://www.e-jaffna.com/archives/29839
-
- 9 replies
- 1.8k views
-
-
கேதீஸ் லோகநாதன் படுகொலையில் மகிந்த ராஜபக்ச? சிறிலங்கா சமாதான செயலகத்தின் பிரதிப் பணிப்பாளர் கேதீஸ் லோகநாதன் படுகொலையில் சிறிலங்கா அரச தலைவர் மகிந்த ராஜபக்சவுக்கு தொடர்பிருப்பதாக ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. புடழடியட நுடநஉவசழ-நேறளநெவ என்ற ஊடகத்தில் இச்செய்தி வெளியானதாக தமிழ்கனேடியன் இணையதளம் பிரசுரித்துள்ளது. அச்செய்தி விவரம்: கேதீஸ்வரன் படுகொலை செய்யப்படுவதற்கு முன்பாக மகிந்தவின் உள்வட்டாரங்களான பசில் ராஜபக்ச மற்றும் கோத்தபாய ராஜபக்ச ஆகியோருடன் தொலைபேசியில் உரையாடியுள்ளார். மூதூரில் 17 அரச சார்பற்ற பணியாளர்களை சிறிலங்கா இஆணுவத்தினர் படுகொலை செய்தமை குறித்த தனது விசனத்தை இந்த உரையாடலில் கேதீஸ் லோகநாதன் வெளிப்படுத்தினார். அமைதி முயற்சிகளில்…
-
- 3 replies
- 1.8k views
-
-
கிழக்கு தேர்தலில் கருணா குழு போட்டியிட முடியாது. கிழக்கு மாகாணத்தில் இவ்வருட முடிவிற்கு முன் இடம்பெறவுள்ள மாகாண சபை தேர்தலில் கருணா குழுவினர் போட்டியிடமுடியாது எனத்தெரியவருகிறது. கருணா குழுவினர் 20 அலுவலகங்கள் கிழக்கு மாகாணத்திலும் மற்றயவை பொல்கென்கொட கொழும்பிலும் அமைந்துள்ளபோதிலும் தேர்தல் ஆணையாளர் தயானந்த திஸ்ஸநாயக்காவினால் அரசியல்கட்சியாக 2007 யூலை 10 வெளியிட்ட அரசியல் கட்சிகளின் வரிசையில் இடம்பெறவில்லை எனத்தெரியவருகிறது. 2004 ஒக்ரோபர் மாதம் 12 ம் திகதி கருணாகுழுவின் செயலாளர் ஜி.ஆர்.கணராஜா அவர்களால் அரசியல் கட்சியாக பதிவுசெய்ய ஆவணங்கள் கையளிக்கப்பட்ட போதும் இறுதியாக தேர்தல் திணைக்களத்தால் யூலை 10 , 2007 வெளியிடப்பட்ட அரசியல் கட்சி வரிசையில் கருணாகுழுவிற…
-
- 8 replies
- 1.8k views
-
-
சென்ற வெள்ளிக்கிழமை சிட்னியில் அவுஸ்திரெலியா சிறிலங்கா அணிக்கு இடையிலே துடுப்பாட்டப் போட்டி ஒன்று நடைபெற்றது. 'தமிழர்களின் குரல்' என்ற இளையோரின் அமைப்பு அவுஸ்திரெலியா அணிக்கு ஆதரவு தரும்படி கேட்டிருந்தது. இந்த அமைப்பில் பெரும்பாலும் அவுஸ்திரெலியாவில் பிறந்த பல்கலைக்கழகத்தில் கல்வி கற்கும் தமிழ் மாணவர்களே அதிகமாக இருந்தார்கள். துடுப்பாட்ட மைதானத்துக்கு செல்வதற்கான நுளைவுச்சீட்டு, 'WHOSE SIDE ARE YOU ON?' என்ற வசனம் எழுதப்பட்ட மேலாடை, 'Go Aussi Go' என்று எழுதப்பட்ட கொடி போன்றவற்றை தமிழர்களின் குரல் அமைப்பின் மூலம் பெற்றுக் கொண்டு வேலையில் அரை நாள் விடுமுறை கேட்டுக் கொண்டு துடுப்பாட்டம் பார்க்க சென்றேன் என்னுடன் வேலை செய்யும் பெரும்பாலான அவுஸ்திரெலியர்களுக்கு நான் அவ…
-
- 26 replies
- 1.8k views
-
-
கருணாகுழுவினர் மீது நடத்தப்பட்ட அதிரடித் தாக்குதலும் வெளிச்சத்துக்கு வரும் உண்மைகளும்! ஓட்டுக்குழுக்களின் அடாவடித்தனத்துக்கு முடிவே இல்லையா? மக்கள் விசனம்! மட்டக்களப்பு- செங்கலடி பதுளை விதியிலுள்ள பிள்ளையார் கோவிலுக்கு அருகிலுள்ள மறைவிடம் ஒன்றில் உறங்கிக்கொண்டிருந்த - கருணா குழு உறுப்பினர்கள் மீது இன்று அதிகாலை நடத்தப்பட்ட அதிரடித்தாக்குதலில் கருணாகுழு உறுப்பினர்கள் மூவர் அந்த இடத்திலேயே பலியாகியுள்ளதுடன் ஏழுபேர் படுகாயங்களுக்குள்ளாகி மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டு இன்று மாலை 4.30 மணியளவில் பொலநறுவை வைத்தியசாலைக்கு மேலதிக சிகிச்சைக்காக கொண்டுசெல்லப்பட்டுள்ளனர். இன்று அதிகாலை 1.30 மணியளவில் இடம்பெற்ற இந்தத் தாக்குதலி…
-
- 0 replies
- 1.8k views
-
-
அமைச்சர் சரத் பவார் கன்னத்தில் பளார் விட்ட இளைஞர்- கொல்ல நினைத்ததாக ஆவேசப் பேச்சு!வியாழக்கிழமை, நவம்பர் 24, 2011, 14:24 [iST] A A A NewsletterIts Free!உங்கள் இன்பாக்சி்ல் லேட்டஸ்ட் செய்திகள்டெல்லி: மத்திய உணவுத் துறை அமைச்சர் சரத்பவாரை கன்னத்தில் அறைந்த ஹர்விந்தர் சிங் என்பவர் கைது செய்யப்பட்டார். இந்த சம்பவத்தால் டெல்லியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மத்தி்ய உணவுத் துறை அமைச்சர் சரத் பவார் டெல்லியில் உள்ள என்.டி.எம்.சி. அரங்கிற்கு சென்றிருந்தார். அங்கிருந்து வெளியே வந்தபோது திடீர் என்று ஒரு இளைஞர் யாரும் எதிர்பாரா விதமாக சரத் பவாரின் கன்னத்தில் அறைந்தார். இதில் சரத் பவார் நிலைகுலைந்து சுவரில் சாய்ந்தார். உடனே அங்கிருந்த பாதுகாப்பு அதிகாரிகள் அந்த இளைஞரை அடித்து, உ…
-
- 5 replies
- 1.8k views
-
-
நான் பலியாடாக்கப்பட்டுள்ளேன்! அனந்தி அறிவிப்பு! சித்தார்த்தனிற்கான பிரச்சார விடயத்தினில் திட்டமிட்ட வகையினில் பலியாடாக்கப்பட்டிருப்பதாக வடமாகாணசபை உறுப்பினர் அனந்தி சசிதரன் தெரிவித்துள்ளார்.நாடாளுமன்ற தேர்தலில் கூட்டமைப்பின் சுமந்திரன் மற்றும் சித்தார்த்தனை மக்கள் நிராகரிக்க வேண்டுமென ஏற்கனவே விடுத்த ஊடக அறிக்கையினில் தான் அறிவித்ததை அனந்தி நினைவு கூர்ந்துள்ளார்.குறித்த நிகழ்விற்கு தான் அழைக்கப்பட்டிருந்ததாகவும் அது தேர்தல் பரப்புரை கூட்டமாக இருக்குமென தனக்கு தெரியாதென தெரிவித்த அனந்தி தான் பேசாதவற்றினை பேசியதாக சித்தார்த்தன் தரப்பே ஊடகங்களிற்கு அனுப்பியதாகவும் தெரிவிக்கின்றார்.யாழினில் கடந்த காலங்களினில் டக்ளஸ் எத்தகைய கொலைகளை அரங்கேற்றினாரோ அதற்கு ஈடாக சித்தார்த்தன…
-
- 40 replies
- 1.8k views
-
-
இரு அமெரிக்க பிரஜைகளால் இந்த விண்ணப்பம் உருவாக்கப்பட்டுள்ளது இதில் கையொப்பமிட்டு ஜநா பொது செயலாளருக்கு அனுப்புங்கள் கையொப்பம் இட இங்கே கிளிக் செய்யுங்கள் குறிப்பு-இதைல் கையொப்பமிட நீங்கள் பணம் செலுத்த வேண்டியது இல்லை This petition has been created by two concerned U.S. citizens, Ellyn Shander, MD and Lisa Hanson. Sign the petition and add your voice: http://www.ipetitions.com/petition/srilankaunappeal/. (Please note that you do not have to make a donation to sign this petition). Copy of the petition is given below. [அவ்விண்ணப்பதின் பிரதி] Humanitarian Petition to the UN Secretary-General Ban Ki-moon United Nations Headquarters U…
-
- 3 replies
- 1.8k views
-
-
விடுதலைப்புலிகளின் ஆதரவு சக்திகளுக்கெதிரான நிலைப்பாட்டையே தமிழ்நாடு கடைப்பிடிக்க வேண்டும்: ஆனந்தசங்கரி! தமிழ்நாட்டில் அமையும் புதிய அரசாங்கம் விடுதலைப்புலிகளின் ஆதரவு சக்திகளுக்கெதிரான நிலைப்பாட்டையே கடைப்பிடிக்க வேண்டுமென தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் ஆனந்த சங்கரி கோரிக்கை விடுத்துள்ளார். மகிந்த ராசபக்சவுக்கு எதிராகவோ அல்லது சிறிலங்காவின் ஆளும் கட்சிக்கு எதிராகவோ தமிழ்நாடு முதலமைச்சர் ஜெயலலிதா பேசக்கூடாது என்றும் வெளிநாடுகளில் புலிகளுக்கு ஆதராக செயற்படும் அமைப்புக்களை ஒழித்துக்கட்ட மகிந்த ராசபக்ச எடுக்கும் நடவடிக்கைகளுக்கு பூரண ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றும் ஆனந்தசங்கரி தெரிவித்துள்ளார்.இலங்கையின் இறைமை, ஐக்கியம் என்பவற்றைப் பாதுகாப்பதற்கு ஒத்தாசை…
-
- 4 replies
- 1.8k views
-
-
யாழ்ப்பாணம் - பலாலி விமான நிலையத்தின் ஊடாக இந்தியாவுக்கான மற்றுமொரு தினசரி விமான சேவை ஆரம்பிக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. குறித்த தகவலை துறைமுகங்கள் கப்பற்றுறை மற்றும் விமான சேவைகள் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார்.ஜனாதிபதி ஊடக மையத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அமைச்சர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். விமான நிறுவனத்துடன் பேச்சுவார்த்தை அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில், யாழ். பலாலி விமான நிலையத்தின் ஊடாக இந்தியாவுக்கான மற்றுமொரு தினசரி விமான சேவை ஆரம்பிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் இண்டிகோ விமான சேவை நிறுவனத்துடன் பேச்சுவார்த்தைகளை இலங்கை அரசு ஆரம்பித்துள்ளது. அத்துடன், மத்தள விமான நிலையம் தொடர…
-
-
- 17 replies
- 1.8k views
- 1 follower
-