Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. இலங்கையில் பிபிசி தமிழ் சேவையில் ஒலிபரப்பாகிய தேசியத் தலைவரின் உரையை தடை செய்தது - இலங்கை அரசாங்கம் வெள்ளி, 28 நவம்பர் 2008, 23:41 மணி தமிழீழம் [செய்தியாளர் மயூரன்] இலண்டன் பிபிசி தமிழ் சேவையில் ஒலிபரப்பாகிய தமிழீழ விடுதலை புலிகளின் தலைவர் மேதகு வே. பிரபாகரன் அவர்கள் ஆற்றிய உரையை கேட்கவிடாது தடை செய்தது இலங்கை அரசாங்கம்.இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் தேசிய சேவைனுடாக ஒலிபரப்பாகும் இலண்டன் பிபிசி தமிழ் சேவை செய்தி ஒளிபரப்பின் இலங்கைக் கண்னோட்டம் தொடங்கியதும் கேட்க முடியாதவாறு தடைசெய்யப்பட்டது. இதேவேளை இலங்கை கண்னோட்டம் முடிவடைந்த பின்னர் இந்தியக் கண்னோட்டம் தொடர்ந்து தெளிவாக ஒலிபரப்பாகியது.இலங்கையில் 90 விகிதமான தமிழர்கள் விரும்பி கேட்கும் இலண்டன் பிபிசி …

    • 3 replies
    • 1.8k views
  2. . ஆஸ்திரேலியா சென்றுள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன், அங்கு இலங்கை அபிவிருத்தி மற்றும் நல்லிணக்க நடவடிக்கைகளுக்கான ஆஸ்திரேலிய வெளிவிவகார அமைச்சர் யூலி பிஷப்பை சந்தித்து கலந்துரையாடினார். இந்தச் சந்திப்பில் புலம்பெயர் அமைப்புப் பிரதிநிதிகளும் பங்குகொண்டனர். http://www.tamilcnnlk.com/

  3. குளோபல் தமிழ் நியூஸ் (GTN) இணையத்தளம் தானே தன்னைச்சுற்றி உருவாக்கியிருக்கிற குழப்பத்திற்கான விளக்கம் இது பதிவு, மீனகம், ஈழம் நியூஸ் ஆகிய இணையத்தளங்கள் தமது கட்டுரை ஒன்றை மறுபிரசுரம் செய்துள்ளதாக குளோபல் தமிழ் நியூஸ் என்னும் இணையத்தளம் குற்றம் சுமத்தி செய்தி ஒன்றை கடந்த 01ம் திகதி வெளியிட்டுள்ளது. இந்தக் குற்றச்சாட்டுக் குறித்த தன்னிலை விளக்கம் ஒன்றை பதிவு செய்ய செய்யவேண்டிய கடப்பாடு எங்களுக்கு உள்ளது. வியாபார நோக்கங்களை பெரும்பாலும் முதன்மைப்படுத்தி இணையத்தளங்களை நடத்திவரும் இணையங்களில் இருந்து செய்திகளை மறுபிரசுரம் செய்யும் போது யாருக்கும் ஆத்திரமும் கோபமும் வருவது சகஜமே. அதனை நாம் முதலில் ஏற்றுக்கொள்கிறோம். ஆனால் எமது நிலைப்பாடு என்பது வேறுபட்டது. முள்ளி…

    • 13 replies
    • 1.8k views
  4. எதிர்வரும் நாடாளுமன்றத்தேர்தலில் போட்டியிடவுள்ள தமிழ் தேசிய கூட்டமைப்பின் வேட்பாளர் தேர்வு முடிவுகள் இன்று வெள்ளிக்கிழமை வெளியிடப்படும் என கூட்டமைப்பு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான சிவாஜிலிங்கம்.ஸ்ரீகாந்தா ஆகியோர் உட்பட முக்கியமான சிலருக்கு இத்தேர்தலில் போட்டியிடும் சந்தர்ப்பம் வழங்கப்படா மாட்டாது என திட்டவட்டமாக முடிவாகியுள்ளதாகவும் கூறப்படுகின்றது. சிவாஜிலிங்கம்,ஸ்ரீகாந்தா ஆகியோருக்கு எதிராக கூட்டமைப்பு சட்ட நடவடிக்கை எடுக்க முடியாது எனவும் மாறாக ரெலோ கட்சியே சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கூட்டமைப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன. http://www.eelanatham.net/story/%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%B5…

  5. யாழ்பல்கலைகழத்தில் பதற்றம் பொலிஸார் குவிப்பு யாழ் பல்கலைகழகத்தில் பல்கலைகழக மாணவர்களுக்கும் பொலிஸாருக்கும் இடையில் ஏற்பட்டமுறுகல் நிலையை தொடர்ந்து பதற்றமான சூழ்நிலை உருவாகியுள்ளது, பல்கலைகழக வாயிலில் கறுப்புடையணிந்த மாணவர்கள்காணப்பட்டவேளை காவல்துறையினர் அவர்களை உள்ளே செல்லுமாறு உத்தரவிட்டதை தொடர்ந்தே முறுகல் நிலை உருவானது. மேலதிக காவல்துறையினர் அப்பகுதிக்கு அழைக்கப்பட்ட நிலையில் மேலும் குழப்பமான நிலை உருவாகியுள்ளது. இதனை தொடர்ந்து இராணுவத்தினரும்அப்பகுதிக்கு விரைந்துள்ளதை தொடர்ந்து பதட்டமான சூழல்உருவாகியுள்ளது. யாழ்பல்கலைகழக மாணவர்கள் இன்று திலீபனுக்கு அஞ்சலி செலுத்துவார்கள் என்ற எதிர்பார்ப்பில் பெருமளவு குவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கத…

    • 11 replies
    • 1.8k views
  6. புலிகளின் பின்னகர்வின் உண்மை வடிவம் என்ன? -பரணி கிருஸ்ணரஜனி- பல தசாப்தங்களைத் தாண்டி நீண்டு தொடரும் தமிழீழ விடுதலைப் போராட்டம் ஒரு முக்கியமான திருப்பத்தில் வந்து மையம் கொண்டுள்ளது. வரலாற்றின் மோசமான திருப்பம் இது. இந்த இக்கட்டான இடத்தில் வைத்து எமது போராட்டத்தை நாமே புரிந்து கொள்ள முற்படுவதென்பது கேலிக்கிடமானது மட்டுமல்ல நகைப்புக்குரியதும்கூட... ஆனால் அண்மைய களநிலவரங்களும் அதைச்சுற்றி வரையப்பட்ட (புனையப்பட்ட என்ற சொல்லாடல்தான் பொருத்தமாக இருக்கும்) கருத்துருவாக்கங்களும் மேற்படி அபத்தங்களையும் மீறி எமக்கான வரலாற்றின் மேற்படி தெரிவாக எஞ்சி நிற்கிறது. ஒரு போராட்டம் தொடர்பான புரிதல் என்பதை பொதுவாக இரு வகைமைப்படுத்தலாம். ஒன்று அந்தப் போராட்டத்தை …

  7. தேர்தல் அமளியில் நாடு – மூன்று பிள்ளைகளின் தந்தையான முன்னாள் போராளி மரணம் : குளோபல் தமிழ் செய்தியாளர் நாடு தேர்தல் அமளியில் காணப்படுகின்ற நிலையில் வன்னியில் விசுவமடுவில் முன்னாள் போராளி ஒருவர் மரணமடைந்துள்ளார். மூன்று பிள்ளைகளின் தந்தையான வீரப்பன் என்று அழைக்கப்படும் சந்திரச்செல்வனின் மரணம் அப் பகுதி மக்களை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தில் இணைந்த இவர், போராட்டத்தின்போது தனது இரண்டு கால்களை இழந்ததுடன் தனது இரண்டு கைகளிலும் கடும் காயத்திற்கு உள்ளாகியிருந்தார். விசுவமடுவில் வசித்து வந்த இவர் இன்று 8ஆம் திகதி மரணமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. நாட்டுக்காக போராட்டத்தில் இண…

  8. கருணா அணியினரின் அலுவலகம் தாக்குதலுக்கு உள்ளானது ஜஆழனெயல ஆயசஉh 05 2007 07:28:35 Pஆ புஆவுஸ ஜயாழ் வாணன்ஸ மயிலம்பாவெளியில் கருணா அணி எனப்படும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளின் அலுவகம் நேற்றிரவு விடுதலைப் புலிகளின் தாக்குதலுக்கு இலக்கானதாக ஏறாவூர் பொலிசார் தெரிவிக்கின்றனர். சம்பவத்தில் அலுவலகம் அமைந்திருந்த கட்டிடடம் முற்றாக சேதமடைந்துள்ளதோடுஇ அந்த அமைப்பைச் சேர்ந்த ஒருவர் மற்றும் அருகிலுள்ள பாடசாலையொன்றில் தங்கியிருந்த ஒரு பெண் உட்பட 4 சிவிலியன்கள் காயமடைந்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. தாக்குதலில் தரைமட்டமான அலுவலகம் டிடிஉ.உழஅ http://www.tamilwin.com/article.php?artiId...;token=dispNews

  9. கடலுக்கு அடியில் மூழ்கிய படகு, நீடிக்கின்றது மர்மம்! செவ்வாய், 08 பெப்ரவரி 2011 16:22 அரச அதிகார சபை ஒன்றுக்குச் சொந்தமான இயந்திர படகு ஒன்று இலட்சக்கணக்காண ரூபாய் பெறுமதியான இயந்திர உபகரணங்களுடன் பாணந்துறை பிரதேசத்துக்கு அப்பால் நடுக்கடலில் மூழ்கி உள்ளது. சமீபத்திய கடும் மழையோடு வீசிய உக்கிர புயலால் இது இழுத்துச் செல்லப்பட்டுள்ளது. இருந்தாலும் இச்சம்பவத்தில் ஏதோ ஒரு மர்மம் இருக்கின்றது என நம்பப்படுகின்றது. கடலுக்கு அடியில் சிக்கி இருக்கும் இப் படகை மீட்கின்றமைக்கு அதிகாரிகள் எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் இருக்கின்றார்கள் என்றும் அலட்சியப் போக்கை கடைப்பிடிக்கிறார்கள் என்றும் குற்றம் சாட்டப்படுகின்றது. இப்படகு கடலுக்கு அடியில் சிக்கி இருப்பது குறித்த…

  10. முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேக்கா விடுதலை செய்யப்பட்டதால் மகிழ்ச்சியடைந்து, பட்டாசுக்களை கொளுத்திய சில இராணுவ முகாம்கள் தொடர்பாக உடனடியாக விசாரணைகளை நடத்தி, அதற்கு பொறுப்புக் கூறவேண்டிய அதிகாரிகள் குறித்து தனக்கு அறிக்கை சமர்பிக்குமாறு பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ நேற்று (22) குற்றப்புலனாய்வுப் பிரிவினருக்கு உத்தரவிட்டுள்ளார். சரத் பொன்சேக்கா நேற்று முன்தினம் விடுதலை செய்யப்படவிருந்ததை முன்னிட்டு, சில இராணுவ முகாம்களில் தொடர்ந்தும் பட்டாசுகள் கொளுத்தப்பட்டன. யாழ்ப்பாணம் கஜபா படைப்பிரிவின் நகர காவலரண், காங்கேசன்துறை, ரத்மலானை கலால் படையணி தலைமையகம், பேசாலை - காரைநகர் துறைமுக காவலரண், கல்லடி இராணுவ தலைமையகம், வவுனியா 22 வது படைப்பிரிவு, மாந்தோட்டம…

  11. பிபிஸி நிருபர் கொழும்பில் இருந்து செய்தி தெரிவிக்கிறாரா அல்லது கருத்து வெளியிடுகிறாரா? கொழும்பை வாஸஸ்தலமாக கொண்டுள்ள பிபிஸி நிருபர் ரோலண்ட் போர்க் (Roland Buerk) திறமான எழுத்தும் ஆராய்ச்சி திறனும் கொண்டவர், அவர் விரும்பியபடி கொழும்பு, குருனாகல அல்லது மட்டக்களப்பு ஆகிய இடங்களில் இருந்து செய்திகள் வழங்க முடியும். அவருடைய நாட்டில் ஸ்ரீலங்கா ஒரு சிப்பியாகும். அவர் சமாதானம், ஸ்ரீலங்கா அரசாங்கம், வரையறுக்கப்பட்ட அதிகாரப்பகிர்வு, மற்றும் தசாப்தகாலமாக சிங்கள அரசு ஆட்சியாளர்களால் சிறுபான்மை தமிழர்கள் மீது அதிகாரம் செலுத்துவதாக தமிழர்கள் தெரிவிக்கும் முறைப்பாடுகள் பற்றி எல்லாம் எழுதுகிறார். ஆனால் தூரதிர்ஸ்டவஸமாக அவருக்கு சிங்கள முதற்பெயரை (first name) குடும்பபெயர்…

    • 0 replies
    • 1.8k views
  12. போர்ப் பகுதிகளில் நிலைமைகள் மிகவும் மோசமாகி வருவதன் காரணமாக சிறுவர்கள் பலியாவதைக் கண்டு பேரதிர்ச்சியடைவதாக ஆயுத மோதல்களில் சிக்கியுள்ள சிறுவர்களுக்கான ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகத்தின் சிறப்புப் பிரதிநிதி ராதிகா குமாரசாமி தெரிவித்திருக்கின்றார். இது தொடர்பாக பி.பி.சி. செய்திச் சேவைக்குப் பேட்டி ஒன்றை வழங்கிய ராதிகா குமாரசாமி, "மோதல்கள் தீவிரமடைந்து வருவதையிட்டும், அதன் மூலம் சிறுவர்கள் பெருமளவுக்குப் பாதிக்கப்படுவதையிட்டும் நான் பேரதிர்ச்சியடைந்தேன்" எனத் தெரிவித்திருக்கின்றார். இது தொடர்பாக அவர் மேலும் குறிப்பிட்டிருப்பதாவது: "போர் இடம்பெறும் பகுதிகளின் தற்போதைய நிலைமை நினைத்துப் பார்க்க முடியாதளவுக்கு மிகவும் மோசமாக இருக்கின்றது. இந்த மோதல்ளில் …

    • 17 replies
    • 1.8k views
  13. தமிழ்நாட்டின் ஈரோடு மாவட்டம் கோபியில் பிரிகேடியர் சு.ப.தமிழ்ச்செல்வன் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து வைக்கப்பட்டிருந்த பதாகையை அகற்ற முயன்ற காங்கிரஸ் கட்சியினருக்கு தமிழின உணர்வாளர்கள் தக்க பதிலடி கொடுத்துள்ளனர். தொடர்ந்து வாசிக்க

  14. படிப்பினைகள் ஆணைக்குழுவின் நல்லிணக்கத்துக்கான அறிக்கையை அமெரிக்கா நிராகரித்துள்ள நிலையில், இது தொடர்பாக இலங்கை அரசுடன் இராஜதந்திர ரீதியிலான பேச்சுகள் இடம்பெற்று வருகின்றன என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. அமெரிக்காவின் தெற்கு, மத்திய ஆசியப் பிராந்தியங்களுக்கான உதவி இராஜாங்கச் செயலர் றொபேட் ஓபிளேக், இலங்கை வெளிவிவகார அமைச்சின் உயர் மட்ட அதிகாரிகளுடன் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு இது விடயம் தொடர்பாக தொடர்ந்து கலந்துரையாடி வருகின்றார் என்று கொழும்பிலுள்ள அமெரிக்கத் தூதரக வட்டாரங்கள் தெரிவித்தன. அதே சமயம் கொழும்பிலுள்ள அமெரிக்கத் தூதுவர் பற்றீஸியா புற்ரெனிஸும் இலங்கை அரசுடன் தொடர்ந்து பேச்சு நடத்தி வருகிறார் என்றும் தெரிவிக்கப்பட்டது. நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கை குறைபா…

    • 2 replies
    • 1.8k views
  15. மட்டக்களப்பில் 13 வயது சிறுமியையும் 19 வயது யுவதியையும் கடத்திச் சென்று பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தினர் என இரு முஸ்லிம் இளைஞர்கள் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. இந்தக் வக்கிர சம்பவம் மட்டக்களப்பு கிரான் தெற்கு வாகனேரி பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது. குறித்த சிறுமியையும் யுவதியையும் கடத்திச சென்ற முஸ்லிம் இளைஞர்கள் இருவரையும் வன்புணர்வுக்கு உட்படுத்திய பின்னர் மறுநாள் கடத்திய இடத்திலேயே விட்டுச் சென்றுள்ளனர். பாதிக்கப்பட்ட இருவரும் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர். இது குறித்துப் பொலிஸார் நடவடிக்கை எடுத்ததாகத் தெரியவில்லை பாதிக்கப்பட்டவர்கள் சார்பில் தெரிவிக்கப்பட்டது. - http://malarum.com/article/tam/2016/04/06/14245/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%A…

  16. தாயகத்தை நேசித்த தாயகத்துக்காய் இரத்த உறவுகளை உடன் பிறந்த சகோதரர்களையெல்லாம் கொடுத்துவிட்டு இன்று அடுத்த நேரச் சோற்றுக்கே வழியின்றித் தவிக்கும் ஒரு குடும்பத்தின் தலைவனின் கதைகளிலிருந்து சிலதுளிகள் நேயர்களே உங்களுக்காக….!

  17. சிக்கல் நிறைந்த போர்க்களத்தில் அடுத்து நடக்கப் போவது என்ன? [ ஆய்வு:அங்கதன் ] ஞாயிறு, 29 மார்ச் 2009 21:44 வன்னிச் சமர் இப்போது புதுக்குடியிருப்பின் எல்லைகளைக் கடக்கின்ற நிலையை அடைந்திருக்கிறது. புதுக்குடியிருப்புச் சந்தியை இந்த மாதத் தொடக்கத்தில் கைப்பற்றிய படையினர், புதுக்குடியிருப்புப் பிரதேசம் முழுவதையும் கைப்பற்ற இன்னும் சண்டையிட வேண்டிய நிலையில் உள்ளனர். கிளிநொச்சியைக் கைப்பற்றவோ, பூநகரியைக் கைப்பற்றவோ, மாங்குளம் அல்லது மல்லாவி, துணுக்காய், முல்லைத்தீவு நகரங்களைக் ஆய்வு:அங்கதன் கைப்பற்றவோ, படையினர் இதுபோன்று அங்குலம் அங்குலமாகச் சண்டையிட வேண்டிய நிலை ஏற்பட்டிருக்கவில்லை. மேற்படி நகரங்களின் சில பகுதிகள் கைப்பற்றப்பட்டதும், அவற்றை முழுமை…

  18. MISSION WATER SHED படை நடவடிக்கை முறியடிப்பு: 15 படையினர் பலி! 50 மேற்பட்டோர் படுகாயம். திருமலை ஈச்சிலம்பற்று மாவிலாறு பகுதியைக் கைப்பற்றும் நோக்கத்துடன், இன்று சிறீலங்கா படைகளால் பெருமெடுப்பில் ஆரம்பிக்கப்பட்ட வலிந்த மும்முனை படைநகர்வு முயற்சி, தமிழீழ விடுதலைப் புலிகளால் வெற்றிரமாக முறியடிக்கப்பட்டுள்ளது. இன்று காலை 8:30 மணியளவில், கிபிர் மற்றும் மிக் ரக விமானங்கள் குண்டுகளைப் பொழிய, ஆட்லறி - பல்குழல் எறிகணை சூட்டாதரவுடன், கனரக யுத்த தளபாடங்கள் சகிதம் முன்னேற முற்பட்ட சிறீலங்கா படைகள் மீது, தமிழீழ விடுதலைப் புலிகளால் உக்கிர பதிலடி தாக்குதல்கள் தொடுக்கப்பட்டன. திருமங்கலம் படை முகாமில் இருந்து, தமிழீழ விடுதலைப் புலிகளின் நிர்வாகத்திற்கு உட்பட்ட அங்கோடை பக…

  19. எதியோப்பியாவில் நடைபெற்று வந்த தொடர்ச்சியான யுத்தம் காரணமாக ஏற்பட்ட பொருளாதார வீழ்ச்சியை அடுத்தே எரித்திரியா என்ற தனி நாடொன்று உருவானதாகவும், அவ்வாறான நிலைமையொன்று இலங்கையிலும் ஏற்படக்கூடிய சூழல் உருவாகி வருவதாகவும் ஸ்ரீலங்கா சு.க.மக்கள் பிரிவின் பிரதான அமைப்பாளரும் முன்னாள் அமைச்சரும் ஸ்ரீபதி சூரியாராச்சி தெரிவித்தார். பாராளுமன்றில் வெள்ளியன்று நடைபெற்ற வரவு-செலவு திட்டத்தின் மீதான விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றிய அவர் மேலும் தெரிவித்ததாவது :- அமைச்சரவையில் முழுமையாக ஆராய்ந்தே வரவு செலவுத் திட்டம் சமர்ப்பிக்கப்படும்.எனினும், பல சிரே~;ட அமைச்சர்கள் அரசில் இருக்கும் நிலையில் பாராளுமன்றப் பிரவேசம் இடம் பெற்ற சில வாரங்கள் மட்டுமே முடிவடைந்த நிலையில் பசில் ராஜப…

  20. பிரபாகரன் பெயரைச் சொல்லி பணம் சம்பாதிக்கிறார்கள்!- இடி இடிக்கிறார் இமானுவேல் [ வியாழக்கிழமை, 01 ஓகஸ்ட் 2013, 02:17.57 AM GMT ] [ விகடன் ] ஈழத்தில் முள்ளிவாய்க்கால் இனப் படுகொலைக்குப் பிறகு திக்கற்று நின்ற ஈழத் தமிழர்கள், இப்போது மிகுந்த மரியாதையுடனும் நம்பிக்கையுடனும் உச்சரிக்கும் பெயர்... பாதர் இமானுவேல். கிறிஸ்துவ மத போதகரான இவர், ஈழத் தமிழர் இன ஒழிப்புக்கு எதிராக உலக அரங்கில் நீதி கேட்டுப் போராடும் அறிவாயுதப் போராளி. தன் வலி மிகுந்த‌ எழுத்தினால், ,ராஜதந்திர‌ப் பேச்சினால், உலக நாடுகளிடையே இவர்மேற் கொள்ளும் 'டிப்ளமேட்டிக்� வேலைகளால், ராஜபக்சவுக்கு சிம்மசொப்பனமாக மாறி இருக்கிறார் பாதர் இமானுவேல். 80 வய தைத் தொட்டிருக்கும் இமானுவேல், இப் போது ஜெர்மனியில் குருமடம் ஒன்றி…

  21. 150வது நிலவரம் தொடர்பான விளம்பரம் - 1 http://www.yarl.com/videoclips/view_video....b5e3f94d95b11da 150வது நிலவரம் தொடர்பான விளம்பரம் - 2 http://www.yarl.com/videoclips/view_video....5400904f03d8e6a

  22. வன்னியில் மக்கள் தஞ்சமடைந்துள்ள பகுதிகளை நோக்கி இலங்கை படையினர் தொடர்ந்தும் எறிகணை தாக்குதல்களை மேற்கொண்டு வருதாகவும் விசேடமாக புதுக்குடியிருப்பு – பரந்தன் வீதியில் வழியாக அரசாங்கம் அறிவித்துள்ள பாதுகாப்பு வலய பகுதிக்கு செல்வது மிகவும் ஆபத்தான பயணம் எனவும் வன்னிக்கு சென்று நேற்று முன்தினம் திரும்பியுள்ள மதகுரு ஒருவர் தெரிவித்துள்ளார். வீதியில் காணப்படும் மரங்களிலும் வீதிகளிலும் மனித மாமிசங்கள் சிதறி காணப்படுகிறது. பாதுகாப்பு வலய பகுதிகளை நோக்கி மக்கள் வெள்ளம் சென்று கொண்டிருகிறது. மக்கள் கடும் வெயில் மற்றும் மழையிலும் மரத்தடிகளில் வசித்து வருகின்றனர். இவர்களுக்கான உணவு இல்லை. சில மக்கள் சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தின் உணவு களஞ்சியத்தை உடைத்து உணவு பொருட்களை எடுத்துக…

  23. தெற்காசியாவின் மூன்றாவது பெரும்படை -அருஸ் (வேல்ஸ்)- இந்த மிலேனியத்தின் ஆரம்பத்தில் தென் ஆசியாவின் பெரும் சமர்க்களமாக இலங்கை மாறியிருந்தது. இரண்டாம் உலகப் போருக்கு பின்னரான இராணுவத்தின் பேரழிவு ஒன்று குறுகிய காலத்தில் இந்த சின்னஞ்சிறிய தீவில் நிகழப்போகின்றதோ என அனைத்துலகம் அங்கலாய்த்த வேளையில் நோர்வேயின் அனுசரணையுடன் போர் ஓய்வுக்கு வந்தது. விடுதலைப் புலிகளுடன் சமாதானப் பேச்சுக்களை நடத்தவும் படை நடவடிக்கைகளை நிறுத்தவும் சந்திரிகா குமாரதுங்க தலைமையிலான முந்தைய அரசாங்கம் சம்மதித்தது. போரும் சமாதானமும் ஒருங்கே பயணிக்க முடியாது என்ற தத்துவமும், போரின் மூலம் சமாதானத்தை எட்டுதல் என்ற ஏமாற்றுத் தனங்களினதும் உண்மைத்தன்மையும் புரிய ஆரம்பித்தது. படைவலுச்…

    • 1 reply
    • 1.8k views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.