ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143540 topics in this forum
-
ஹிகாத் ஆயுதக்குழுவின் இராணுவ மரியாதையுடன் ஹிஸ்புல்லாவுக்கு வரவேற்பு. காத்தான்குடி மத்திய கல்லூரியின் 89ஆவது விளையாட்டுப் போட்டிக்கு பிரதம அதிதியாக வருகை தந்த கிழக்கு மாகாண ஆளுநர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாவிற்கு ஆயுதப்பயிற்சி வழங்கப்பட்ட ஹிகாத் ஆயுதக்குழுவினரால் இராணுவ மரியாதையுடனான வரவேற்பு வழங்கப்பட்டுள்ளது. தமிழர்களை அழிப்பதற்காக முஸ்லீம் இளைஞர்களுக்கு ஆயுதப்பயிற்சி வழங்கி அவர்களுக்கு ஆயுதங்களை வழங்கினேன் என ஹிஸ்புல்லா சில வருடங்களுக்கு முதல் காணொளி ஒன்றின் மூலம் தெரிவித்திருந்தார். காத்தான்குடியில் பெருந்தொகையானவர்களுக்கு சட்டவிரோதமாக ஆயுதங்கள் வழங்கப்பட்டிருப்பதாகவும், அவர்களுக்கு ஆயுதப்பயிற்சிகளும் வழங்கப்பட்டிருப்பதாகவும் வெளிவந்த தகவல்களை உறுதிப்ப…
-
- 9 replies
- 1.3k views
-
-
யாழ்.பல்கலைக்கழக மாணவன் லத்தீஸ் கடத்தப்பட்டுள்ளார் 28 நவம்பர் 2011 குளோபல் தமிழ்ச்செய்திகள் : யாழ்.பல்கலைக்கழக சித்த மருத்துவபீட மாணவனான வேதாரணியம் லத்தீஸ் (27 வயது) கடத்தப்பட்ட சம்பவம் மாணவ சூழலிடையே பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.நேற்றிரவு யாழ்.திருநெல்வேலியிலுள்ள பாலசிங்கம் விடுதியிலுள்ள தனது சக நணபர்ளை சந்தித்து விட்டு கைதடியிலுள்ள தனது விடுதிக்கு திரும்பிக்கொண்டிருக்கையிலேயே இவர் கடத்தப்பட்டிருக்கலாமென குடும்பத்தவர்கள் சந்தேகிக்கின்றனர். வடமராட்சி கிழக்கு மருதங்கேணியை சொந்த இடமாக கொண்ட இவர் வன்னியில் படையினரால் பிடிக்கப்பட்டிருந்த நிலையில் அண்மையிலேயே பூஸா தடுப்பு முகாமிலிருந்து இழுபறிகளின் பின்னர் விடுவிக்கப்பட்டிருந…
-
- 9 replies
- 1.8k views
-
-
தமது அச்சுறுத்தலுக்கு அடங்காது தொடர்ந்து செய்ற்பட்டு வரும் மகேஸ்வரன் எம்.பி. யைக் கொன்று, அதற்கான பொறுப்பை ஈ.பி.டி.பி மீது சுமத்தி அதன் மீது கறைபூசி, 'ஒரு கல்லில் இருகனி பறிக்கும் செயலில்' ஈடுபட்டிருக்கின்றனர் விடுதலைப் புலிகள். இவ்வாறு குற்றம் சுமத்தியிருக்கின்றது ஈழமக்கள் ஜனநாயக கட்சி(ஈ.பி.டி.பி) இது தொடர்பான அக்கட்சியின் ஊடகப் பிரிவு நேற்று 'அரசியல் படுகொலைகளுக்கான பழிகளை அடுத்தவர்கள் மீது சுமத்துவது அரசியல் காழ்ப்புணர்ச்சிகளின் வெளிப்பாடாகும். என்ற தலைப்பில் வெளியிடப்பட்ட அறிக்ககையிலேயே இவ்விடயம் தெரிவிக்கபட்டுள்ளது. முழு அறிக்கை :- 'உனது கருத்தை நான் ஏற்றுக் கொள்ளவில்லை. ஆனாலும் நீ கருதுச் சொல்லும் உனது சுதந்திரத்திற்காக எனது உயிரைக் கொடுத்தும…
-
- 9 replies
- 3.1k views
-
-
கதவுகளைத் திறந்து வைத்திருப்பது மாத்திரமே எனது பொறுப்பு.!! யாழ்ப்பாணம் வடமராட்சி பகுதியில் நடைபெற்ற நிகழ்வில் கலந்துகொண்டிருந்த தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தமது கட்சியில் இருந்து எவரையும் வௌியில் அனுப்பவில்லை எனவும் பிரிந்து சென்றவர்கள் ஒற்றுமையாக மீண்டும் இணைந்துகொள்ள முடியும் எனவும் குறிப்பிட்டார். சி.வி.விக்னேஸ்வரன் முதலமைச்சர் பதவிக்காலம் முடியும் வரை கூட்டமைப்பில் இருந்துவிட்டு, அடுத்தநாள் புதுக்கட்சி ஆரம்பித்துவிட்டதாகவும் அவர் தன்னை மாற்றுத்தலைமை என கூறிக்கொள்வதாகவும் சுமந்திரன் குறிப்பிட்டார். கஜேந்திரகுமாரும் தன்னை மாற்றுத்தலைமை என கூறிக்கொள்வதாகக் குறிப்பிட்ட சுமந்திரன், தமிழ் தேசியக் கூட்டமைப்பில் இருந…
-
- 9 replies
- 1.4k views
-
-
பிரபாகரனுக்கு சிலை எழுப்ப ஆசைப்படும் டக்ளஸ் தேவானந்தா நான் கூறுவது உங்களிற்கு கொஞ்சம் ஓவராகக்கூடத் தெரியலாம். துட்டகைமுனுவுக்கும் எல்லாளனுக்கும் இடையில நடந்த சண்டையில் எல்லாளன் கொல்லப்பட்டபிறகு துட்டகைமுனு எல்லாளனுடைய சிலைய நிறுவி அதற்கு மரியாதை செலுத்தவேண்டும் என ஒரு சட்டத்தை அன்று கொண்டு வந்திருந்தான். அது வரலாற்றுப் பதிவுகளில் உள்ளது. அதுபோல இங்கும் செய்யப்படவேண்டும் என நான் எதிர்வரும் 6ம் திகதி பாராளுமன்றில் கொண்டுவரவிருக்கும் எனது தனிநபர் பிரேரணையில் தீர்மானம் நிறைவேற்றவிருக்கிறேன் என ஈபிடிபி கட்சித்தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். இதில் யார் துட்டகைமுனு, யார் எல்லாளன் என ஊடகவியலாளர்கள் கேள்வி …
-
- 9 replies
- 1.7k views
-
-
மட்டக்களப்பு கல்லடியிலுள்ள ஹோட்டலொன்றுக்குச் சொந்தமான நாய் ஒன்றினைக்; கொள்ளையிட முயன்றார்களென்ற சந்தேகத்தின் பேரில் களுவாஞ்சிக்குடிப் பிரதேச சபைத் தலைவரையும் அவரது மெய்ப்பாதுகாப்பாளர்களான பொலிஸ் கான்ஸ்டபிள்கள் மூவரையும் காத்தான்குடிப் பொலிஸார் இன்று (17) அதிகாலையில் கைதுசெய்தனர். இந்த நால்வரும் இன்று அதிகாலையில் கல்லடியில் அமைந்துள்ள பிரிட்ஜ் வியூ ஹோட்டலுக்குள் நுழைந்து அங்கிருந்த சுமார் 15 ஆயிரம் ரூபா பெறுமதியான டொக்கமன் இன நாயொன்றைக் கொள்ளையிட்டது தொடர்பாகவே இவர்கள் கைது செய்யப்பட்டனர். இந்தச் சம்பவம் இன்று அதிகாலை 2.30 மணியளவில் இடம்பெற்றது. களுவாஞ்சிக்குடி பிரதேச சபையின் தலைவரான மேகசுந்தரம் விநோதராஜ் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் இயக்க அங்கத்தவராவார். …
-
- 9 replies
- 2.4k views
-
-
சம்பந்தனுக்கு ரிஷாட் கடிதம் (நமது நிருபர்) சமரசப் பேச்சுவார்த்தையின் மூலம் திரு கோணமலை ஷண்முகா இந்து மகளிர் கல் லூரியின் அபாயா பிரச்சினைக்கு நியாய மான தீர்வைக்காண உதவுமாறுதமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும், எதிர்கட்சித் தலைவருமான இரா. சம்பந்தனுக்கு, அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும், அமைச்சருமான ரிஷாட் பதியுதீன் எழுதியுள்ள கடிதத்தில் வேண்டுகோள் விடுத்துள்ளார். திருகோணமலை ஷண்முகா இந்து மகளிர் கல்லூரியில் முஸ்லிம் ஆசிரியர்கள், ஹபாயா ஆடை அணிவதில் ஏற்பட்டிருக்கும் சர்ச்சை தொடர்பிலேயே எதிர்கட்சித் தலைவருக்கு, அமைச்சர் ரிஷாட் பதியுதீன் எழுதியுள்ள கடிதத்தில் இந்த வேண்டுகோளை விடுத்துள்ளார். இந்தக் கடிதத்தில் அமைச்சர்மேலும் குற…
-
- 9 replies
- 1.3k views
-
-
சிறிலங்காவில் இனப்பிரச்சனை இல்லை பயங்கரவாதமே உண்டு: மகாநாயக்கர் [திங்கட்கிழமை, 23 ஏப்ரல் 2007, 14:16 ஈழம்] [அ.அருணாசலம்] சிறிலங்காவில் இனப்பிரச்சனை என்பது இல்லை. நாட்டின் ஒரு பகுதியை ஒரு குழு கோருவதால் பயங்கரவாதப் பிரச்சினையே தோன்றியுள்ளது என்று அஸ்கிரிய பீடத்தின் சியம் நிகாயா பிரிவைச் சேர்ந்த உடுகம சிறீ புத்தரகித தேரர் தெரிவித்துள்ளார். இத்தாலிய தலைநகர் ரோமில் மகிந்த ராஜபக்சவும் இதனை ஒத்த கருத்தை தெரிவித்ததை தேரர் வரவேற்றுள்ளார். விழா ஒன்றில் கடந்த சனிக்கிழமை கலந்து கொண்டு உடுகம சிறீ புத்தரகித தேரர் பேசியதாவது: இந்த நாட்டின் பெரும்பாலான மக்கள் அமைதியாக வாழ்கின்றனர், அவர்களுக்கு எந்த சமூகம், எந்த மதம் என்ற பிரச்சனைகள் இருப்பதில்லை. இந்துக்கள் நாட…
-
- 9 replies
- 1.9k views
-
-
சம்பந்தன் நம்பிக்கை: பன்னாட்டுச் சமூகம் உன்னிப்பாக அவதானித்துக்கொண்டிருக்கின்றது எனவும் சுட்டிக்காட்டு தலைமை அமைச்சர் ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான அரசு புதிய அரசமைப்பைக் கொண்டு வந்தே தீரும். பன்னாட்டுச் சமூகத்துக்கு அளித்த வாக்குறுதியிலிருந்து இந்த அரசு பின்வாங்காது என்ற நம்பிக்கை எமக்கு இருக்கின்றது. இவ்வாறு தெரிவித்தார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தன். …
-
- 9 replies
- 1.4k views
-
-
அடங்காமண் நோக்கிப் பயணிக்கும் வணங்காமண் சொல்லும் செய்தி என்ன? - சி.இதயச்சந்திரன் இருளை விலக்கும் ஒளித்துளியைச் சுமந்து "வணங்கா மண்' என்கிற நிவாரணப் பொருட்களைத் தாங்கிய கப்பல் லண்டனிலிருந்து புறப்படப் போகிறது.ஐரோப்பாவிலிருந்து பாலஸ்தீனம் நோக்கிப் புறப்பட்ட "இடப்பெயர்வு "1947' (Exodos 1947) என்று பெயரிடப்பட்ட கப்பலே, "வணங்காமண்' நினைவூட்டுகிறது. வன்னி நோக்கிப் பயணிக்கும் இந்த "வணங்கா மண்' கப்பலின் நோக்கம், அவசர மனிதாபிமானத் தேவைகளை அடிப்படையாகக் கொண்டது. "இடப்பெயர்வு 1947' கப்பல் பயணம், இஸ்ரேல் என்ற யூத தேசத்தை நோக்கிய நகர்வினைக் கொண்டிருந்தாலும் வணங்காமண்ணின் தாயகப் பயணம், பல நாடுகளின் கரைகளை தொட்டுச் செல்லும் நிகழ்ச்சி நிரலை உள்ளடக்கி இருப்பதாக கூ…
-
- 9 replies
- 1.7k views
-
-
பாடசாலைகளில் சீனமொழியை ஒரு பாடமாக கற்பிக்க சிறிலங்கா அரசு முடிவு திகதி:16.08.2010, சிறிலங்காவில் உள்ள அனைத்துப் பாடசாலைகளிலும் விரைவில் சீனமொழி கற்பிக்கப்படவுள்ளது. இது தொடர்பான சுற்றறிக்கை விரைவில் பாடசாலைகளுக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளதாக சிறிலங்காவின் கல்வி அமைச்சர் பந்துல குணவர்த்தன தெரிவித்தார். அம்பாந்தோட்டையில் சீனாவின் உதவியுடன் நிறுவப்பட்ட துறைமுகத்தில் நீரை நிரப்பும் நிகழ்வில் பேசிய போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். “கொழும்பு லும்பினி வித்தியாலயத்தில் ஏற்கனவே சீன மொழியைக் கற்பிக்கும் நடவடிக்கைள் ஆரம்பிக்கப்பட்டு விட்டன. சீனாவின் நிதியுதவியுடன் இது மேற்கொள்ளப்படுகிறது. சீன மொழி கற்பிக்கும் திட்டத்தை ஏனைய பாடசாலைகளுக்கும் வ…
-
- 9 replies
- 1.3k views
-
-
தமிழக சட்டசபையில் முதலமைச்சர் ஜெயலலிதா ஜெயராமினால் கொண்டு வரப்பட்ட தீர்மானம் இந்திய நலனை பாதிப்பதாக ஜனதா கட்சியின் தலைவர் சுப்ரமணியம் சுவாமி தெரிவித்துள்ளார். இந்த தீர்மானம் எடுக்கப்பட்டதற்கான காரணம் ஐக்கிய நாடுகள் சபையின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள மனித உரிமை மீறல்களுடன் இலங்கை அரசாங்கத்திற்கு தொடர்பு இருப்பதாக குறிப்பிட்டதேயாகும் என அவர் குறிப்பிட்டுள்ளார். அத்துடன் அந்த அறிக்கையில் தமிழீழ விடுதலைப்புலிகளினாலும் மனித உரிமை மீறப்பட்டமை சுட்டிக்காட்டப்பட்டிருந்தது. எனினும் தமிழீழ விடுதலைப்புலிகளின் மனித உரிமை மீறல்கள் தொடர்பாக எந்தவிதமான பிரஸ்தாபமும் சட்டசபையில் ஜெயலிலதாவினால் மேற்கொள்ளப்படவில்லை என அவர் தெரிவித்தார். இந்தநிலையில் இலங்கைக்கு எதிர…
-
- 9 replies
- 1.6k views
- 1 follower
-
-
மாபெரும் அரசியல் வெற்றி - பிரித்தானிய தமிழர் பேரவை அண்மையில் மாரடைப்பால் உயிரிழுந்த தென்னாப்பிரிக்க பொது சேவை மற்றும் நிர்வாக சேவைகள் அமைச்சர் ராதகிருஷ்ண படையாச்சியின் மரண சடங்கு கடந்த 5 ஆம் திகதி நடைபெற்ற இறுதிச்சடங்கில் கலந்துக்கொண்ட உலக தமிழர் பேரவையின் பேச்சாளர் சுரேன் சுரேந்திரனுக்கு அரச மட்டத்திலான வரவேற்பு வழங்கப்பட்டமையானது புலம்பெயர் இலங்கை தமிழர்களுக்கு கிடைத்த மாபெரும் அரசியல் வெற்றி என பிரித்தானிய தமிழர் பேரவை தெரிவித்துள்ளது. சுரேன் சுரேந்திரன் பிரித்தானிய தமிழர் பேரவையின் தலைவராவார். இந்த இறுதிச்சடங்கில் உரையாற்றிய தென்னாப்பிரிக்க ஜனாதிபதி ஜேக்கப் ஜூமா, சகோதரர் படையாச்சியின் மரணம் தென்னாப்பிரிக்காவுக்கு மாத்திரமல்ல ஆப்பிரிக்க தேசிய காங்…
-
- 9 replies
- 2.6k views
-
-
"யாழ் ராணி" என்ற பெயரில்... விசேட ரயில் சேவை, இன்று யாழிலிருந்து... கிளிநொச்சிக்கு ஆரம்பிக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணத்துக்கும்-கிளிநொச்சிக்கும் இடையே யாழ் ராணி என்ற விசேட ரயில் சேவை இன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அரச பணியாளர்கள், யாழ்.பல்கலைக்கழக விரிவுரையாளர்கள், பணியாளர்களுக்கு வசதியாக இச்சேவையை ரயில் திணைக்களம் இன்று ஆரம்பித்துள்ளது. இதன்படி, காங்கேசன் துறையிலிருந்து காலை 6 மணிக்கு புறப்படும் யாழ் ராணி புகையிரதம் காலை 8.11 இக்கு முறிகண்டியை அடையும் என்றும் அங்கிருந்து மீண்டும், காலை 10 மணிக்கு யாழ்ப்பாணம் நோக்கிப் புறப்படும் புகையிரதம், காலை 11.20 இக்கு யாழ்ப்பாணத்தை வந்தடையும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், மீண்டும் பிற்பகல் 2 மணி…
-
- 9 replies
- 756 views
-
-
தாக்குதலில் கொல்லப்பட்ட இராணுவத்தின் ஒரு தொகுதிப்படங்கள்! நன்றிகள்:யாழ்கள உறவு வசந்தனுக்கு
-
- 9 replies
- 4k views
-
-
அனுராதபுரம் சிறையில் தற்போது பாரிய துப்பாக்கிச் சூட்டுச் சத்தங்கள் கேட்டவண்ணம் உள்ளன:- 24 ஜனவரி 2011 அனுராதபுரம் சிறையில் தற்போது பாரிய துப்பாக்கிச் சூட்டுச் சத்தங்கள் கேட்டவண்ணம் இருப்பதாக சிறையில் இருந்து ஜீரீஎன்னிற்குக் கிடைத்த செய்திகள் தெரிவிக்கின்றன. GTN
-
- 9 replies
- 2k views
-
-
ஒரு பௌத்தனும் இறக்காமல் திட்டமிடப்பட்ட குண்டு தாக்குதல்!! ஈஸ்ரர் படுகொலை குறித்துஅரசியல் ஆய்வாளர் திரு. மு. திருநாவுக்கரசு.
-
- 9 replies
- 1.7k views
- 1 follower
-
-
[size=4]இலங்கையில் பங்கு வர்த்தகத்தை முறைப்படுத்தி, கட்டுப்படுத்தும் அமைப்பான பங்கு வர்த்தக ஒழுங்குமுறை கண்காணிப்பு ஆணையத்தித்தின் தலைவர் பதவியிலிருந்து விலகுவதாக திலக் கருணரட்ண பிபிசி சந்தேஷ்யவிடம் தெரிவித்துள்ளார்.[/size] [size=4]தன் மீதும், இந்த ஒழுங்குமுறை ஆணையத்தின் மீதும் அதீதமான அழுத்தங்கள் அதிகரிப்பதன் காரணமாகவே தான் பதவி விலகுவதாகவும் கருணரட்ண கூறுகிறார்.[/size] [size=4][/size] [size=4] [/size] [size=4]பங்குச் சந்தையில் முதலீடுகளை செய்யும் சில தீய சிந்தனை உள்ளவர்களும் அவர்களை ஆதரிப்பவர்களிடமுமிருந்து தமக்கு அழுத்தம் வந்ததாகவும் அவர் கூறுகிறார்.[/size] [size=4]இலங்கையின் நிதிச் சந்தையில் விரும்பத்தகாத பல விஷயங்கள் நடைபெற்று வருவதாகவும் அவர் ப…
-
- 9 replies
- 851 views
-
-
விடுதலைப்புலிகள் என்ற பெயரில் இயங்கும் அனைத்து தரப்பும் ஒன்றிணைய வேண்டும் – மாவை அழைப்பு விடுதலைப்புலிகள் என்ற பெயரில் இயங்கும் கட்சிகள், அமைப்புக்கள் அனைத்தும் ஒன்றுபட்டு செயற்பட வேண்டும் என்று தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா தெரிவித்தார். புனர்வாழ்வளிக்கப்பட்ட விடுதலை புலிகள் கட்சிக்கும் தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜாவுக்கும் இடையில் வவுனியாவில் இன்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெற்ற கலந்துரையாடலின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்தபோதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், “விடுதலைப்புலி போராளிகள் பலர் என்னோடு சந்திக்கவேண்டும் என்று கோரிக்கைகளை முன்வைத்துவருகின்றனர். அந்தவகையில் இன்று புனர்வாழ்வுபெற்ற புலிகள் சார்ந்…
-
- 9 replies
- 1.4k views
-
-
'இலங்கையில் இடம்பெற்ற இறுதிக்கட்ட யுத்தத்தின் போது பாதுகாப்பு தரப்பினரால் பதியப்பட்டு பொறுப்பேற்கப்பட்ட எவரும் காணாமல் போகவில்லை' என்று பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்தார். இறுதி யுத்தத்தின் போது விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசங்களிலிருந்து இராணுவ கட்டுப்பாட்டுப் பகுதிகளுக்கு வந்தவர்கள், இந்திய வைத்தியசாலைகள் மற்றும் சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் (ஐ.சி.ஆர்.சி) ஆகியவற்றினூடாகவே வருகை தந்தனர். எனவே அவர்களிடம் போய்ச் சேர்ந்தவர்கள் தொடர்பில் இந்தியாவும் ஐ.சி.ஆர்.சி.யுமே பொறுப்புக்கூற வேண்டும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார். கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளுக்கு அமைய இராணுவ தளபதியினால் நியமிக்கப்பட்ட இராணுவ விசார…
-
- 9 replies
- 805 views
-
-
முள்ளிவாய்க்காலில் ஈழத் தமிழர்களுக்கு நடந்த கொடுமைகளை நினைவு கூறும் விதமாக உலகத் தமிழர் பேரமைப்பு சார்பில் தஞ்சை விளார் சாலையில் முள்ளிவாய்க்கால் நினைவு முற்றம் கட்டப்பட்டது. கட்டுமானப் பணிகள் தொடங்கிய காலத்தில் இருந்தே தடைகள் ஏற்பட்டது. இப்போது கட்டுமானப்பணிகள் முடிவுற்ற நிலையில் நவம்பர் 8ந் தேதி மாலை 5 மணிக்கு திறப்பு விழா நடைபெறும் என்றும், பழ.நெடுமாறன் திறக்கிறார் என்றும் அழைப்பிதழ்கள் வெளியிடப்பட்டது. இந்த முற்றம் திறப்பதில் சில சிக்கல்கள் உருவான நிலையில் செவ்வாய்க்கிழமை மதுரை உயர்நீதிமன்ற கிளை முற்றம் திறக்க அனுமதி அளித்தது. இந்த நிலையில் மேலும் 2 நாட்கள் இருக்கும் நிலையில் வேறு தடைகள் வந்து திறப்பு விழாவை தடை செய்து விடலாம் என்று எண்ணிய விழாக் குழுவினர், …
-
- 9 replies
- 1.5k views
-
-
(Lanka-e-News, Jan.14, 2010, 6.40PM) Defense Secretary Gotabaya Rajapakse was rushed to Singapore for treatment following a heart attack. When Gotabaya was attending a conference at Rattota on 12th, he had sustained the heart attack and was rushed to the Kandy teaching Hospital where he was admitted. Thereafter he was airlifted to Colombo and admitted to Durdans Private Hospital for emergency treatment. After being treated by Heart specialist Mohan Rajakaruna he was flown to Singapore for further medical treatment on the 12th. http://www.lankaenews.com/English/news.php?id=8939
-
- 9 replies
- 1.5k views
-
-
அமெரிக்க இராஜாங்க திணைக்களத்தின் பூகோள குற்றவியல் நீதிக்கான பணியகத்தில் போர்க்குற்ற விவகாரங்களைக் கையாளும் தூதுவர் ஸ்டீபன் ஜே.ரெப்பின் இலங்கை விஜயத்திற்கு எதிராக தேசிய ஓழுங்கமைப்பு ஒன்றியத்தினர் இன்று கொழும்பிலுள்ள அமெரிக்க தூதுவராலயத்திற்கு முன்பாக ஆர்ப்பட்டத்தில் ஈடுபட்டனர். (படங்கள்:பிரதீப் தில்ருக்ஷன) http://tamil.dailymirror.lk/--main/96206-2014-01-09-07-21-13.html
-
- 9 replies
- 508 views
-
-
தாக்கப்பட்ட தேவாலயம் ஒன்று இலங்கையின் தென்பகுதியில் ஞாயிற்றுக்கிழமை காலை மூன்று தேவாலயங்கள் தாக்கப்பட்டதாக கிறிஸ்தவக் குழுக்கள் கூறியுள்ளன. எவருக்கும் காயம் எதுவும் ஏற்படாவிட்டாலும், தேவாலயம் ஒன்றைச் சேர்ந்த ஒருவருக்கு கொலை மிரட்டல் விடப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்த தேவாலயங்களின் குறைந்தது இரண்டின் மீதான தாக்குதலிலாவது கடும்போக்கு பௌத்த மதகுருமாரும் கலந்து கொண்டதாக நேரில் பார்த்தவர்கள் கூறுகிறார்கள். இலங்கையின் தெற்கே ஹிக்கடுவை பகுதியில் உள்ள மூன்று தேவாலயங்கள் மீதே இந்தத் தாக்குதல் நடந்துள்ளது. குறைந்தபட்சம் 200 பேர் கொண்ட கும்பல் 20க்கும் அதிகமான பௌத்த மதகுருமார் தலைமையில் தமது வழிபாட்டின் போது வந்து, இரு தேவாலயங்களை அடுத்தடுத்து தாக்கியதாக அந்த தேவ…
-
- 9 replies
- 1.2k views
-
-
[size=4]பாகிஸ்தான் அணு ஆலையை அமைக்க உதவுகின்றதா? இந்தியாவின் வயிற்றில் புளியை கரைக்கின்றன சிங்களமும் பாகிஸ்தானும்.[/size] [size=4]சம்பூரில் அணு ஆலை ஒன்றை சிங்களத்திற்கு பாகிஸ்தான் அமைத்துக்கொடுக்க எண்ணியுள்ளதாக இந்தியா நம்புகின்றது. கடந்த வாரம் டெல்லி சென்ற சிங்களத்திற்கான தூதுவர் அசோக் இதுபற்றி கூறியுள்ளாராம். [/size] [size=6]Pakistan's help to Sri Lanka for Nuclear plant alarms India[/size] [size=6][size=5]Pakistan is all set to begin consultations with Sri Lanka to help set up a nuclear power plant in Trincomallee's Sampur, it is believed.[/size][/size] [size=6][size=5]The development is being viewed with concern in New Delhi since the Indian emb…
-
- 9 replies
- 1.2k views
-