ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142825 topics in this forum
-
சென்ற வெள்ளிக்கிழமை சிட்னியில் அவுஸ்திரெலியா சிறிலங்கா அணிக்கு இடையிலே துடுப்பாட்டப் போட்டி ஒன்று நடைபெற்றது. 'தமிழர்களின் குரல்' என்ற இளையோரின் அமைப்பு அவுஸ்திரெலியா அணிக்கு ஆதரவு தரும்படி கேட்டிருந்தது. இந்த அமைப்பில் பெரும்பாலும் அவுஸ்திரெலியாவில் பிறந்த பல்கலைக்கழகத்தில் கல்வி கற்கும் தமிழ் மாணவர்களே அதிகமாக இருந்தார்கள். துடுப்பாட்ட மைதானத்துக்கு செல்வதற்கான நுளைவுச்சீட்டு, 'WHOSE SIDE ARE YOU ON?' என்ற வசனம் எழுதப்பட்ட மேலாடை, 'Go Aussi Go' என்று எழுதப்பட்ட கொடி போன்றவற்றை தமிழர்களின் குரல் அமைப்பின் மூலம் பெற்றுக் கொண்டு வேலையில் அரை நாள் விடுமுறை கேட்டுக் கொண்டு துடுப்பாட்டம் பார்க்க சென்றேன் என்னுடன் வேலை செய்யும் பெரும்பாலான அவுஸ்திரெலியர்களுக்கு நான் அவ…
-
- 26 replies
- 1.8k views
-
-
தமிழ் தேசிய கூட்டமைப்பின் மட்டக்களப்பு நாடாளுமன்ற உறுப்பினர் ஞா.சிறிநேசன் கலந்து கொண்ட நிகழ்வொன்றில் இளைஞர்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இளைஞர்களின் எதிர்ப்பையடுத்து, நிகழ்வில் பாதியிலேயே அவர் வெளியேறி சென்றார். மட்டக்களப்பு குருமன்வெளியிலுள்ள ஆலயத்தின் மதில் மற்றும் விளையாட்டு மைதானம் ஆகியனவற்றிற்கு கம்பெரலிய ஒதுக்கீட்டிலான அபிவிருத்தி திட்டங்களிற்கு அடிக்கல் நாட்டும் நிகழ்வில் சிறிநேசன் கலந்து கொண்டிருந்தார். நிகழ்வில் சிறிநேசன் உரையாற்றிக் கொண்டிருந்தபோது, சில இளைஞர்கள் திடீரென மண்டபத்திற்குள் நுழைந்து, சிறிநேசனிடம் சரமாரியாக கேள்விகள் கேட்க ஆரம்பித்தனர். “உங்களை வாக்களித்து அனுப்பியது கம்பெரலிய கொண்டு வருவதற்கு அல்ல, எமக்கா…
-
- 1 reply
- 594 views
-
-
தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரான யோசப் பரராஜசிங்கத்தை சுட்டுக் கொன்ற குற்றச்சாட்டில் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் அமைப்பின் (பிள்ளையான் குழு) முக்கிய பிரமுகர்களான பிரதீப் மாஸ்டர் மற்றும் கஜன் மாமா ஆகியோரை 90 நாட்கள் தடுப்புக்காவலில் வைத்து விசாரணை செய்யுமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த 2005 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம், 25 ஆம் திகதி மட்டக்களப்பு சென். மேரிஸ் தேவாலயத்தில் ஆராதனையில் ஈடுபட்டிருந்த நாடாளுமன்ற உறுப்பினர் யோசப் பரராஜசிங்கம் இனந்தெரியாத நபர்களினால் சுட்டுப் படுகொலை செய்யப்பட்டிருந்தார். அதனைத் தொடர்ந்து விசாரணைகளை மேற்கொண்டிருந்த குற்றப்புலனாய்வுத் துறை கடந்த ஆட்சிகாலத்தில் விசாரணைகளை கைவிட்டிருந்தது. ஆட்சி மாற்றத்துடன் விசாரணைகள் மீளவும் …
-
- 0 replies
- 654 views
-
-
முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் திடீரென இராணுவத்தினர் வீதி தடையொன்றை அமைத்துள்ளனர். ஜனாதிபதித் தேர்தல் இன்று (21) நடைபெற்று முடிந்துள்ள நிலையில் முடிவுகள் வெளியாகி கொண்டு இருக்கும் சூழ்நிலையில் முல்லைதீவு புதுக்குடியிருப்பு நகர் பகுதியில் இராணுவத்தினரின் வீதி தடை ஒன்றை அமைத்துள்ளனர். வீதி தடை இந்தநிலையில், இன்று இரவு குறித்த வீதி தடை பகுதியில் இராணுவத்தினர் கண்காணிப்பில் ஈடுபட்டு வருவதை அவதானிக்க கூடியதாக இருக்கின்றது. கடந்த காலங்களில் கொரோனா மற்றும் குண்டுவெடிப்பு காலங்களில் புதுக் குடியிருப்பு நகர் பகுதியில் இராணுவத்தினர் வீதி தடை அமைத்து கண்காணிப்பு நடவடிக்கை முன்னெடுத்திருந்த நிலையில் நீண்ட காலமாக அகற்றப்பட்டு மக்களி…
-
-
- 3 replies
- 589 views
- 1 follower
-
-
தியத்தலாவ இராணுவத் தளத்தில் கருத்தரங்கு தியத்தலாவ இராணுவத் தளத்தில் சிறிலங்கா அரசதரப்பு அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான இரகசியக் கருத்தரங்கு ஆரம்பமாகியுள்ளது. இந்தக் கருத்தரங்கை ஆரம்பித்து வைப்பதற்காக சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச நேற்று மாலையே தியத்தலாவவைச் சென்றடைந்திருந்தார். “நாட்டின் எதிர்காலத்துக்கான பாதைவரைபு“ என்ற தலைப்பில் அரசதரப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள், அமைச்சர்களுக்கான இந்தக் கருத்தரங்கை சிறிலங்கா இராணுவ அக்கடமி ஏற்பாடு செய்துள்ளது. இந்த இரகசியக் கருத்தரங்கில் பங்கேற்கும் அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவருக்கும் தியத்தலாவ படைத்தளத்திலேயே தங்குமிட வசதிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளன. இன்றும் நாளையும் இடம்பெறும் …
-
- 2 replies
- 1.1k views
-
-
வீட்டு கழிவுப் பொருட்களைச் சேகரிக்க பைகள் :நல்லூர் பிரதேசசபை நடவடிக்கை நல்லூர் பிரதேச சபையினரால் வீட்டு கழிவு பொருட்களை சேகரிப்பதற்கு வீட்டு உரிமையாளர்களுக்கு பைகள் வழக்கப்படுகின்றன. நல்லூர் பிரதேச சபையின் எல்லைக்கு உட்பட்ட பிரதேசங்களில் உள்ள வீடுகளுக்கு பிரதேச சபை ஊழியர்கள் நேரில் சென்று அந்த பைகளை வழங்கி வருகின்றார்கள். வீட்டில் சேரும் கழிவு பொருட்களில் உக்க கூடிய கழிவு பொருட்களை இனிவரும் காலங்களில் நல்லூர் பிரதேச சபையினரால் அகற்றப்பட்ட மாட்டாது எனவும், உக்காத கழிவு பொருட்கனான பிளாஸ்ரிக், கண்ணாடி, போரன்றவற்றை தரம் பிரித்து வழங்கப்படும் பைகளில் சேகரித்து வைக்குமாறும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அத்துடன், குறிப்பிட்ட ஒரு நாளில் பிரதேச சபையின் குப்பை அகற்றும் வாகனம் …
-
- 4 replies
- 1.8k views
-
-
கோத்தபாய ஜனாதிபதி வேட்பாளராக அறிவிக்கப்படுவது உறுதி- வெளியாகியது புதிய தகவல் பொதுஜனபெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளராக முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ச நிறுத்தப்படுவது உறுதியாகிவிட்டது என சண்டே டைம்ஸ் தெரிவித்துள்ளது. ஆகஸ்ட் 11 ம் திகதி இடம்பெறவுள்ள கட்சியின் மாநாட்டில் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச கட்சியின் தலைமைப்பொறுப்பை உத்தியோகபூர்வமாக ஏற்றுக்கொள்வார் எனவும் அதன் பின்னர் அவர் அனேகமாக கட்சியின் ஜனாதிபதி வேட்பாளரை அறிவிப்பார் எனவும் சண்டே டைம்ஸ் தெரிவித்துள்ளது. சண்டே டைம்ஸ் மேலும் தெரிவித்துள்ளதாவது. இந்த சந்திப்பிற்கு முதல்நாள் பொதுஜனபெரமுனவின் கட்சி தலைவர்களிற்கு மகிந்த ராஜபக்ச தனது முடிவை தெரிவிப்பார். முன்னாள் பாதுகாப்பு செயலாள…
-
- 0 replies
- 530 views
-
-
மன்னார் களமுனையில் கொல்லப்படும் சிறிலங்கா இராணுவத்தின் உடலங்கள் மல்வத்து ஒயாவிற்கு ஒரு கிலோமீற்றர் தொலைவில் உள்ள ஊரலு பிரதேசத்தில் புதைக்கப்படுகிறது. இது இராணுவ உயர் அதிகாரிகளின் கட்டளையின் படி புதைக்கப்படுவதாக யுத்த களத்திலிருந்து தப்பியோடிய இராணுவத்தினர் தெரியப்படுத்தியதாக தகவல் தெரிவிக்கின்றன. காயமடைந்த இராணுவத்தினரை வைத்தியசாலைகக்கு கொண்டு வரப்படும் அதேவேளை கொல்லப்படும் இராணுவத்தினரது உடலங்களை மிக அரிதாகவே கொண்டு வரப்படுவதாக அனுராதபுரம், வவுனிய,, மன்னார் வைத்தியசாலை வட்டாரங்களில் இருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன. நன்றி : பதிவு
-
- 1 reply
- 2k views
-
-
ஆர்.எஸ்.எஸ். அறிக்கை குறித்து இந்து இளைஞர் பேரவை தலைவர் யோகேஸ்வரன் கவலை தெரிவிப்பு அமெரிக்காவின் தீர்மானத்திற்கு இந்தியா ஆதரவளிக்க கூடாது என பாரதீய ஜனதா கட்சியின் ஆதரவு இந்துமத அமைப்பான ஆர்.எஸ்.எஸ். இந்தியா அரசாங்கத்தை வலியுறுத்துவதாக கூறும் செய்தி கேட்டு மிகுந்த கவலை அடைந்துள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட இந்து இளைஞர் பேரவை தலைவர் சீ.யோகேஸ்வரன் தெரிவித்தார். அத்துடன், கிழக்கு இந்து ஒன்றியத் தலைவரும், இலங்கை இந்து பேரவையின் உபதலைவரும், விஷ்வ ஹிந்து பரிசத்தின் அரசியல் பிரதிநிதியும், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான சீனித்தம்பி யோகேஸ்வரன் அவசரமாக தமது அறிக்கையை ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் தலைமைப்பீடத்திற்கு வெளியிட்டுள்ளார். அவ்வ…
-
- 3 replies
- 833 views
-
-
இந்தியா பச்சோந்தி தனமாக இருக்க கூடாது. 13 ஆவது திருத்தத்தை எமது தலைவர் ஏற்றுக் கொள்ளவில்லை. ஆனால் எமது அரசியல் தலைவர்கள் வேறு என்ன தான் செய்வது என்று அதனை ஏற்றுக் கொண்டார்கள். ஆனால் அதில் காணி அதிகாரம் இல்லை பொலிஸ் அதிகாரமும் இல்லை. பிறகு எதற்காக எங்களுக்கு அந்த அதிகாரம் என வட மாகாணசபை உறுப்பினரும், வன்னி மாவட்ட தமிழரசுக் கட்சியின் வேட்பாளருமான து.ரவிகரன் தெரிவித்தார். இலங்கை தமிழரசுக் கட்சியின் வன்னி மாவட்ட வேட்பாளர்களின் அறிமுக நிகழ்வு வவுனியா நகரசபை மண்டபத்தில் நேற்று (19) இடம்பெற்றது. இதில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர், அபிவிருத்தியோடு எமது தீர்வை நோக்கி பயணிப்பதே எமது இலக்கு. ஆனால் எமது நில…
-
- 0 replies
- 389 views
- 1 follower
-
-
அரசாங்கத்தின் நகர்வுகளும் புலிகளின் எதிர் நகர்வுகளும் -அருஸ் (வேல்ஸ்)- இனப்பிரச்சினைக்கான தீர்வுத்திட்ட நகலை தயாரிப்பதற்காக 63 இற்கு மேற்பட்ட தடவை கூடிய அனைத்துக்கட்சி குழு அதன் தீர்வுத் திட்டத்தை இந்த வருடம் முன்வைத்து விடும், அடுத்த மாதம் முன்வைத்துவிடும் எனக் கூறப்பட்டுவந்த நிலையில் அதனை நம்பி ஏமாந்த அனைத்துலக சமூகம் தமது பொறுமையின் எல்லைகளை கடந்துவிட்டது. இலங்கை அரசின் போர் நடவடிக்கைகளுக்கு மறைமுகமாக ஆயுதங்கள், புலனாய்வுத் தகவல்கள், தொழில்நுட்ப உதவிகள் என மிக அதிகளவான உதவிகளை வழங்கிவரும் இந்திய மத்திய அரசும் ஏதாவது ஒரு தீர்வுத்திட்டத்தை பெயருக்காவது முன்வைப்பதன் மூலம் இராணுவத்தீர்வு என்ற வெளிப்படையான போக்கின் உக்கிரத்தை உலகின் கண்களில் இருந்து மறைத்…
-
- 3 replies
- 2.7k views
-
-
இந்தியாவுடன் இலங்கை அரசு ஒப்பந்தங்களில் ஈடுபடக்கூடாது!- ஹெல உறுமய அமைச்சர் சம்பிக்க இலங்கையின் பொருளாதார செயற்திட்டங்களின் போது இந்தியாவுக்கு தேவையற்ற சலுகைகளை அளித்து அந்நாட்டுடன் ஒப்பந்தங்களில் ஈடுபடக்கூடாது என்று ஆளும் சுதந்திரக் கூட்டமைப்பு அரசில் அங்கம் வகிக்கும் கடும்போக்கு தேசியவாதக் கட்சியான ஜாதிக ஹெல உறுமய தெரிவித்துள்ளது. கொழும்பில் வெள்ளிக்கிழமை மாலை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அக்கட்சியைச் சேர்ந்த அமைச்சர் சம்பிக்க ரணவக்க இந்தக் கருத்தை முன்வைத்துள்ளார். கடந்த காலங்களில் இலங்கை அரசு பொருளாதார மற்றும் பாதுகாப்பு திட்டங்களை முன்னெடுக்கும்போது இந்தியாவின் நலனைக் கருத்தில்கொண்டே செயற்பட்டதாகவும் ஹெல உறுமய தலைவர் கூறினார். ஜெனீவாவில் நிறைவேற…
-
- 0 replies
- 478 views
-
-
அவன்ட்கார்ட் பற்றி நான் கூறியவை அனைத்துமே உண்மை– திலக் மாரப்பன அவன்ட் கார்ட் ஆயுதக் கப்பல் குறித்து தாம் கூறியவை அனைத்துமே உண்மையே என சட்டம் ஒழுங்கு அமைச்சர் மாரப்பன தெரிவித்துள்ளார். தமக்கு எதிராக சில தரப்பினரும் சில கட்சிகளும் செய்து வரும் விமர்சனங்களை கண்டு எந்த வகையிலும் அஞ்சப் போவதில்லை என அவர் சுட்டிக்கட்டியுள்ளார். ஊடகங்களில் பிரபல்யம் அடையும் நோக்கில் சிலர் தமக்கு எதிராக இவ்வாறு பிரச்சாரம் செய்து வருகின்றனர் என அவர் குறிப்பிட்டுள்ளார். இவ்வாறு பிரல்யம் அடையும் நோக்கில் பிரச்சாரத்தில் ஈடுபடுவோர் பற்றி மக்கள் நன்கு அறிந்து வைத்துள்ளதாகத் தெரிவித்துள்ளார். அவன்ட் கார்ட் சம்பவம் குறித்த விடயங்கள் உண்மையா என எமத…
-
- 1 reply
- 750 views
-
-
“ஈழத் தமிழர்களின் இறைமை மீட்புக்கான அரசியல் போரில், ஏகோபித்த தலைமைத்துவத்தின் கீழ் தமிழ்த் தேசியக் கட்சிகள் அனைத்தையும் ஒருங்கிணைத்துப் பயணிப்பதற்கான எத்தனங்களை மேற்கொள்வேன் என்று இலங்கைத் தமிழரசுக் கட்சியின் யாழ்ப்பாணம் – கிளிநொச்சி தேர்தல் மாவட்ட முதன்மை வேட்பாளரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான சிவஞானம் சிறீதரன் தெரிவித்தார். நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு கிளிநொச்சி – செல்வாநகர் வட்டாரத்தில், இலங்கைத் தமிழரசுக் கட்சியின் செயற்பாட்டாளர்களைச் சந்தித்துக் கலந்துரையாடியபோதே அவர் மேற்கண்டவாறு கூறினார். அவர் மேலும் தெரிவித்ததாவது:- “தமிழ்த் தேசியக் கட்சிகளுக்கு உள்ளும் புறமுமாய் ஏற்பட்டுள்ள பிளவுகள், எமது மக்களிடையே பலத்த அதிருப்தியை ஏற்படுத்…
-
- 0 replies
- 118 views
- 1 follower
-
-
மீள்குடியேற்றப்பட்டோரின் உதவிகைள நிறுத்துகிறது அரசு! March 29th, 2012 அன்று வெளியிடப்பட்டது யுத்தத்தினால் பாதிக்கப்பட்டு மீள்குடியேற்றப்பட்டவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த வழங்கப்பட்டு வந்த உதவிகள் எதிர்வரும் யூன் மாதத்துடன் நிறுத்துவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. வடக்கு மாகாணத்தில் இடம்பெயர்ந்தவர்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வுகாண்பதற்காக இந்த வேலைத் திட்டம் ஐக்கிய நாடுகளின் அகதிகளுக்கான அலுவலகத்தின் அனுசரணையுடன் 2007ஆம் ஆண்டு 06ஆம் மாதம் முதலாம் திகதி முதல் முன்னெடுக்கப்பட்டு வந்தது. அரசாங்கத்தின் மீள்குடியேற்ற அமைச்சின் இணக்கப்பாட்டுடன் ஐ.நா. அகதிகளுக்கான அலுவலகம் இந்த செயல்திட்டத்தை முன்னெடுத்து வந்தது. இடம்பெயர்ந்தவர்களை மீள்குடியேற்றுதல், ஆ…
-
- 0 replies
- 483 views
-
-
அம்பாறையில் அங்கிலிக்கன் மதகுரு சுட்டுக்கொலை: மனைவியும் மகனும் காயம் அம்பாறையில் இனம் தெரியாத ஆயுததாரிகளால் அங்கிலிக்கன் மதகுரு ஒருவர் சுட்டுக்கொல்லப் பட்டுள்ளார். நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு இவர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார
-
- 2 replies
- 1.7k views
-
-
இறுதிக் கட்ட யுத்தத்தின் போது சரணடையாது தப்பிச் சென்ற தமிழீழ விடுதலைப் புலி உறுப்பினர்களை கைது செய்யும் நோக்கில் விசேட தேடுதல் வேட்டையொன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இராணுவத்தினரும், காவல்துறையினரும் கூட்டாக இணைந்து இந்த தேடுதல் வேட்டையை மேற்கொண்டுள்ளனர். கிழக்கு மாகாணத்தில் இந்த தேடுதல் வேட்டை ஆரம்பிக்கப்பட்டுள்ளது. சரணடையாது தப்பிச் சென்ற விடுதலைப் புலி உறுப்பினர்களை கைது செய்து, அவர்களுக்கு உரிய முறையில் புனர்வாழ்வு அளிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அரசாங்கம் அறிவித்துள்ளது. இறுதிக் கட்ட யுத்தத்தின் போது சுமார் 12000 விடுதலைப் புலி உறுப்பினர்கள் படையினரிடம் சரணடைந்தனர் என இராணுவப் பேச்சாளர் தெரிவித்துள்ளார். இவர்களில் 11500 பேருக்கு புனர்வாழ்வு அளிக்…
-
- 6 replies
- 994 views
-
-
தமிழ் அரசியல் கைதிகள் விடுதலை விவகாரம் தொடர்பாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் கடுமையான தொனியில் எடுத்துரைக்க தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தீர்மானித்துள்ளது. ஜனாதிபதி மைத்திரியின் வெற்றிக்காக பாடுபட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினருக்கான வெகுமதியாக தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை வாக்குறுதியளிக்கப்பட்டிருந்தது. எனினும் பதவிக்கு வந்து ஒருவருடமாகும் நிலையிலும் ஜனாதிபதியின் குறித்த வாக்குறுதி நிறைவேற்றப்படவில்லை. எனவே இது தொடர்பாக எதிர்க்கட்சித் தலைவர் சம்பந்தன் தலைமையில் ஜனாதிபதியுடன் எதிர்வரும் நாட்களில் கலந்துரையாடல் ஒன்றை நடத்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தீர்மானித்துள்ளது. இதன்போது கடுமையான தொனியில் இந்த விவகாரத்தை ஜனாதிபதியிடம் முன்வைக்கவும் கூட்டமைப்…
-
- 10 replies
- 1.2k views
-
-
ஜனநாயக தேசிய முன்னணிக்கான யாப்பு உருவாக்கம் முழுமையடைந்துள்ளது. கூட்டணி கைச்சாத்திடப்படும் போது ஐக்கிய தேசிய கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் அறிவிக்கப்படுவார். எதிர்க்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ஷ தனது குடும்ப உறுப்பினரை களமிறக்கியதை போன்று குடும்ப உறுப்பினரை களமிறக்க வேண்டிய தேவை கிடையாது என சுகாதாரத்துறை அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்தார். அலரிமாளிகையில் இன்று இடம் பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக் கொண்டு கருத்துரைக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். https://www.virakesari.lk/article/63666
-
- 0 replies
- 274 views
-
-
(எம்.ஆர்.எம்.வசீம்) 2028ஆகும் போது கடன் மீள செலுத்தும் பின்னணியை ஏற்படுத்திக்கொள்வதே நாடு எதிர்கொண்டுள்ள பாரிய சவாலாகும். சரியான திட்டமிடலை மேற்கொள்ளாவிட்டால் நாடு மீண்டும் வங்குரோத்து நிவைக்கு தள்ளப்படும் என முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். கொழும்பில் புதன்கிழமை (13) இடம்பெற்ற பெண்கள் சந்திப்பொன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார். அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில், இலங்கையில் இருக்கும் பிரதான பிரச்சினை பொருளாதாரமாகும். 2022ஆம் ஆண்டு பொருளாதாரம் முற்றாக வீழ்ச்சியடைந்தது. அதன் பிரகாரம் எமது நாடு வங்குராேத்தடைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டது. எமக்கு முதலாவதாக வங்குராேத்து நிலை…
-
- 4 replies
- 466 views
- 2 followers
-
-
அமெரிக்கர்கள் கொண்டு வந்த 6 பைகளில் என்ன இருந்தது? – விமல் வீரவன்ச Sep 05, 2019 | 2:24by கொழும்புச் செய்தியாளர் in செய்திகள் கொழும்பு ஹில்டன் விடுதியில் ஆறு பைகளுடன் வந்த அமெரிக்கர்கள் அதனைச் சோதனையிட அனுமதிக்கவில்லை என்றும், அமெரிக்க தூதரக வாகனத்தில் எடுத்துச் செல்லப்பட்ட அந்தப் பொதிகளில் என்ன இருந்தது என்று கேள்வி எழுப்பியுள்ளார் கூட்டு எதிரணியின் நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச. கொழும்பில் நேற்று செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “ஜூன் 30ஆம் நாள், அமெரிக்க விமான நிறுவனம் ஒன்றின் விமானத்தில் வந்த ஆறு அமெரிக்கர்கள், ஹில்டன் விடுதியில் தங்கச் சென்றனர். அவர்கள் கொண்டு சென்ற ஆறு பைகளையும், விடுதியின் பாதுகாவலர்கள் சோதனையிட முன…
-
- 3 replies
- 481 views
-
-
கடலில் குளிக்கச் சென்ற மாணவன் நீரில் மூழ்கி மரணம்; குளத்தில் நீராடிய இளைஞன் பலி; கிணற்றில் வீழ்ந்த சிறுவன் பரிதாப மரணம் இப்படியான துன்பம் மிகு செய்திகள் நாளாந்தம் ஊடகங்களில் வந்த வண்ணம் உள்ளன. இத்தகைய இழப்புகள் குறித்து நாம் கரிசனை கொள்ள வேண்டியது கட்டாயமானதாகும். நீச்சல் தெரிந்திருந்தால் இத்தகைய மரணங்களை தவிர்க்க முடியும் என்பது நிறுதிட்டமான உண்மை. எனினும் பொதுவில் நீச்சல் பயிற்சி பற்றி நாம் பெரிதாக அலட்டிக் கொள்வதில்லை. ஆனால் மேலை நாட்டவர்கள் பிள்ளை பிறந்து ஒரு வருடத்தை நெருங்குகின்ற போதே பிள்ளைக்கு நீச்சல் பயிற்சி கொடு க்க ஆரம்பித்து விடுவர். மேலை நாட்டில் நீச்சல் பயிற்சி என்பது கட்டாயமானது. ஒவ்வொரு பிள்ளையும் நீச்சல் பயிற்சியை கட்டாயம் கற்றிருக்க வேண்டும். …
-
- 1 reply
- 1k views
-
-
காலி – திலிதுற தோட்டத்தில் புதுவருட தினத்தன்று தமிழ் தொழிலாளர் குடும்பங்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல்கள் தொடர்பில் அதிகாரிகள் இன்னும் உரிய நடவடிக்கைகள் எடுக்கவில்லை என்று பிரதேச மக்கள் கவலை வெளியிட்டுள்ளனர். இரவு நேரத்தில் கத்திகள், தடிகள், பெற்றோல் குண்டுகள் சகிதம் வாகனத்தில் வந்தவர்கள் ஐந்து வீடுகளை தீவைத்து எரித்துவிட்டு, இன்னும் பல வீடுகளை தாக்கிச் தேப்படுத்திச் சென்றுவிட்டதாகவும் பிதேசத்தைச் சேர்ந்த தொழிற்சங்கப் பிரதிநிதி ஒருவர் தமிழோசையிடம் சுட்டிக்காட்டியுள்ளார். இந்த சம்பவத்தையடுத்து தமது பாதுகாப்புத் தொடர்பில் பெரிதும் அச்சமடைந்துள்ளதாக பிரதேச மக்கள் கூறுகின்றனர். இதேவேளை இந்த சம்பவத்துடன் பிரதேச அரசியல்வாதி ஒருவர் சம்பந்தப்பட்டிருப்பதாகவும் பிரதே…
-
- 0 replies
- 674 views
-
-
வெள்ளத்தினால் வவுணதீவு நல்லம்மாமடு அணைக்கட்டு சேதம் - புனரமைக்குமாறு விவசாயிகள் வேண்டுகோள் மட்டக்களப்பு மாவட்டத்தில் அண்மையில் ஏற்பட்ட பாரிய வெள்ளப் பெருக்கினால் வவுணதீவு பிரதேசத்துக்குட்பட்ட இலுப்பட்டிச்சேனை வயற்கண்ணத்தில் அமைந்துள்ள நல்லம்மா மடு எனும் அணைக்கட்டு முற்றாக சேதமடைந்துள்ளதாக அப்பகுதி விவசாயிகள் கவலை தெரிவிக்கின்றனர். இந்த அணைக்கட்டில் தேக்கப்படும் நீரைப் பயன்படுத்தி நாம் இப்பகுதியில் 1,050 ஏக்கர் வயலில் வேளாண்மை செய்து வருகிறோம். இது தற்போது உடைபெடுத்துள்ளதனால் எமது வாழ்வாதாரமாக அமைந்துள்ள வேளாண்மைச் செய்கை முற்றாக பாதிப்புறும் நிலைமை ஏற்பட்டுள்ளது என விவசாயிகள் தெரிவிக்கின்றனர். இந்நிலையில், பெரிதும் சேதமடைந…
-
- 0 replies
- 137 views
-
-
பாதாள குழுவின் முக்கிய ஆவணங்கள் பொரளையில் கண்டுபிடிப்பு பாதாள உலக கழவினின் குற்றவாளி ஒருவரது என சந்தேகிக்கப்படும் ஆவணங்களை பொரளை காவல்துறையினா் கைப்பற்றியுள்ளனர். நேற்று இரவு பொரளை பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட சற்றிவளைப்பு சோதனையின் போது இவ் ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக மேலும் படிக்க.. http://www.kalakam.com/forum/viewtopic.php?t=959
-
- 0 replies
- 570 views
-