ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142833 topics in this forum
-
முதலமைச்சர் பொதுச் சுடர் ஏற்றிவைத்து ஆரம்பித்து வைத்தார்:- முள்ளிவாய்க்கால் நினைவேந்தலின் பிரதான நிகழ்வினை வடக்கு முதல்வர் சி.வி.விக்னேஸ்வரன் பொதுச் சுடரினை ஏற்றிவைத்து ஆரம்பித்து வைத்தார். அதனைத் தொடர்ந்து எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தனும் பொதுச்சுடர் ஏற்றி அஞ்சலி செலுத்தியதனைத் தொடர்ந்து நாடாளுமன்ற உறுப்பினர்கள், மாகாண சபை உறுப்பினர்கள், பொதுமக்கள் என பலரும் உயிரிழந்த உறவுகளுக்கு அஞ்சலி செலுத்தினர். இதன்போது தமது உறவுகளை நினைத்து மக்கள் கண்ணீர் மல்க கதறியழுது மக்கள் தமது ஆற்றாமையை தீர்த்துள்ளனர். முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வில் முதன் முதலாக இம்முறை சர்வமதத் தலைவர்களும் கலந்துகொண்டுள்ளதோடு, அவர்களும் அஞ…
-
- 26 replies
- 1.8k views
- 2 followers
-
-
புலம்பெயர் தமிழர்கள் எந்த நிமிடமும் விழிப்பாயிருக்க வேண்டும். ஈழத்தமிழரின் விடுதலைப் போர் பயங்கரவாத முத்திரை குத்தப்பட்டு மனிதப்படுகொலையுடன் முடிவிற்கு கொண்டு வந்ததாக கூறும் இலங்கையரசு தமிழர்களை எந்தெந்த வகையில் அழிக்க முடியுமோ அந்தந்த வகையில் திட்டமிட்டு அழித்து வருகின்றமையை நாளாந்த செய்திகளிலிருந்து அறிய முடிகின்றது. ஈழத்தமிழர்களை இலங்கைத் தீவினின்றும் முற்றுமுழுதாக துடைத்தெறியும் தூர நோக்குடன்கூடிய திட்டமிடல் சிங்கள அரசியல்வாதிகள் மற்றும் இராணுவ அதிகாரிகளால் ஈழத்தில் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது. முற்றுமுழுதான மனிதப் படுகொலையை நடத்தி முடித்த இலங்கை ஜனாதிபதியின் நரபலி நடவடிக்கைகளை வெளி உலகிற்கு கொண்டு வந்து அவரைப் போர்க்குற்றவாளியாக்கும் நடவடிக்கைகளை புலம…
-
- 2 replies
- 1.8k views
-
-
கிழக்கு மாகாணசபையில் அங்கம் வகிக்கும் அரசியல்வாதிகளுக்குப் போதிய அறிவில்லை என தேச நிர்மாண அமைச்சர் விநாயகமூர்த்தி முரளீதரன் தெரிவித்துள்ளார். மட்டக்களப்பு ஆசிரியர் பயிற்சி கல்லூரியில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்ட போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். கிழக்கு மாகாண முதல்வர் ரியர் அட்மிரல் மொஹான் விஜேவிக்ரமவவை பணி நீக்கம் செய்யுமாறு மாகாணசபை உறுப்பினர்கள் விடுத்த கோரிக்கைக்கு பதிலளிக்கும் வகையில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார். மாகாணசபை உறுப்பினர்கள் பலர் தகுதியற்றவர்களாகவே காணப்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார். மிகவும் நேர்மையான, செயற்திறன் மிக்க ஆளுனரை பணி நீக்கம் செய்யுமாறு மாகாணசபை உறுப்பினர்கள் கோருவதன் ஊடாக அவர்களது அரசியல் ஞானம் புலப்படுவதா…
-
- 11 replies
- 1.8k views
-
-
யாழ்ப்பாணத்திலிருந்து தீவகம் துண்டிக்கப்படும் அபாயம் (படங்களுடன்) 2010-12-05 13:05:51 யாழ்ப்பாணத்திலிருந்து தீவகப் பகுதிகளை இணைக்கும் ஒரே ஒரு வீதியான பண்ணை வீதி உடைக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. தற்போது மேற்படி வீதிக்குக் குறுக்கே கடல் நீர் பாய்ந்த வண்ணம் உள்ளதுடன் காற்றும் அதிகளவாக வீசிக் கொண்டிருக்கின்றது. இதனால் கடலில் அலைகளின் வேகம் அதிகரித்து வீதி குறுக்காக உடைக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. http://newjaffna.com/fullview.php?id=MTEyMg==
-
- 1 reply
- 1.8k views
-
-
சிங்கள விமானப்படைக்குச் சொந்தமான மிக் 27 யுத்த விமானமொன்று புத்தளம் மாவட்டத்தின் தும்மலசூரிய பொலிஸ் பிரிவிலுள்ள ஹெவன பகுதியில் சற்றுமுன் வீழ்ந்துள்ளது. விமானம் வீழ்வதற்கு முன்னர் விமானத்திலிருந்து விமானி வெளியேற்றப்பட்டு பாதுகாப்பாக தரையிறங்கியுள்ளார் என விமானப்படை பேச்சாளர் குறூக் கப்டன் அன்டி விஜேசூரிய தெரிவித்தார். ரஷ்ய தயாரிப்பான இவ்விமானம் கட்டுநாயக்க விமானப்படைத் தளத்திலிருந்து புறப்பட்டு வழக்கமான பயிற்சிநடவடிக்கையில் ஈடுபட்டிருந்தபோதே இவ்விமானம் விபத்துக்குள்ளாகியுள்ளது. இவ்விமானம் வீழ்ந்தமைக்கான காரணம் இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை. எனினும் தொழில்நுட்ப கோளாறினால் இந்நிலை ஏற்பட்டிருக்கலாம் என நம்பப்படுகிறது. http://www.tamil.dailymirror.lk/…
-
- 6 replies
- 1.8k views
-
-
கனடாவுக்கு ஏத்துறோம் - ஏஜெண்சி முகவர் கைது. கனடாவுக்கு அனுப்பி வைப்பதாக கூறி 52 பேரிடம் வித்தியாசமாக சுத்தியவர் இன்று CID பொலிஸாரினால் கைதானார். 46 வயதான இந்த பெண்மணி, ஒவொருவரிடமும், அவர்களது பெயர்களிலேயே வங்கி கணக்கு திறந்து, பாஸ்புக், ATM கார்ட், PIN மட்டும் தன்னிடம் தந்து, பணத்தினை வங்கியில் இட்டு, தனக்கு அறிவிக்குமாறு சொல்லி இருந்தார். 50 பேர்களின் முறைப்பாடு கிடைத்ததால், அவரை கைது செய்ததாகவும், 26 இலட்ச்சம் பெறுமதியில் 350கிராம் தங்கமும் , 72 பாஸ்போர்ட்டும், 50 பாஸ்புக்குகள், 50 ATM கார்ட்கள், 50,000 ரூபா பணமும், பொலிஸாரினால் கையகப்படுத்தப் பட்டுள்ளன. நவகமுவா என்னும் ஊரில், திங்கள் இரவு இவர் கைதானார். அது சரி மிச்ச 2 பேர் எங்க.... கனடா…
-
- 9 replies
- 1.8k views
-
-
இலங்கையில் வாழும் தமிழர்களுக்கு தனியாக சிறப்பு அடையாள அட்டைகளை வழங்குமாறு ஜாதிக கெல உறுமய கட்சி தெரிவித்துள்ளது. தொடர்ந்து வாசிக்க
-
- 7 replies
- 1.8k views
-
-
மீண்டும் நெடுநாள் இடைவெளிக்குபின் வருகிறேன், என்னைய்யா திருகோணமலை மலை சூட்டோட சூடா ஆள் வருகுதோ எண்டா பாக்கிறியள், இல்லை ஐயா, திருகோணமலையில பூசை நடந்தது சந்தோசம் தான், ஆனால் பாருங்கோ ஊரில பொடியள் கனகச்சிதமா வேலை பார்க்கினம், வெளியில நாங்கள் தான் காயுறோம், அதுவும் தமிழர் கோட்டையாம் கனடாவின்ட சுத்தம் சொல்லி வேலையில்லை, நான் தலைவர் இல்லை, நான் புலி இல்லை எண்டபடியால் கனடாக்காரர பகைச்சுகொள்ள பயப்பட தெவையில்லை பாருங்கோ. 23/8/2008 அன்று இந்த தமிழ்ர் கோட்டையில "மனச்சாட்சியின் குரல்" கேட்டது பாருங்கோ, உடன நாங்களும் அடியடா புடியடா என்டு ஓடிபோய் பார்த்தால், பேருக்கு பழய சிங்கள அரசங்கத்துக்கு குழப்படி பண்ணாதயுங்கோ எண்டு போட்டு, எங்க பொடியள போட்டு கிழிச்சிருக்கினம், உவயள்ட நோக்கம…
-
- 1 reply
- 1.8k views
-
-
வடக்கு கிழக்கு பல்கலைக்கழக பிரதிநிதிகளுக்கும் தமிழ் கட்சிகளின் பிரதிநிதிகளுக்கும் இடையிலான நான்காவது சந்திப்பு இணக்கமேதும் எட்டப்படாமல் முடிவடைந்துள்ளது. பொது உடன்படிக்கையில் கட்சிகள் எவையும் ஒப்பமிடாத நிலையில் நாளை காலை மீண்டும் சந்திப்பு இடம்பெறவுள்ளது. இதேவேளை, ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களிடமும், சர்வதேச சமூகத்திடமும் தமிழர்கள் சார்பில் முன்வைக்கப்பட வேண்டிய சரத்துக்கள் அடங்கிய பொது உடன்படிக்கையில் கட்சிகள் முன்வைத்த திருத்தங்களுடன் நாளை பிற்பகல் 1.30 மணிக்கு ஒப்பமிடுவதற்கு கலந்துகொண்ட கட்சிப் பிரமுகர்களிடையே இணக்கம் ஏற்பட்டிருப்பதாக அறியவருகிறது. தமிழ் கட்சிகளின் ஒருமித்த முடிவு என்ன? – நான்காவது சுற்று பேச்சு இடம்பெறுகிறது …
-
- 9 replies
- 1.8k views
- 1 follower
-
-
http://activex.microsoft.com/activex/controls/mplayer/en/nsmp2inf.cab#Version=5,1,52,701"standby="Loading Microsoft® Windows® Media Player components..."type="application/x-oleobject" align="middle"> இலங்கை அரசின் பிரச்சாரத்தில் பலியாகும் தலைவர்களை பற்றிய கருத்துக்களும்...
-
- 0 replies
- 1.8k views
-
-
பிரான்ஸில் குடியுரிமை பெற்றவர்களின் குடும்பத்தினர் யாழில் இருந்தால் பிரான்ஸுக்கு அழைக்க வாய்ப்பு' பிரான்ஸில் சட்ட ரீதியாக புலம்பெயர்ந்து குடியுரிமை பெற்றவர்களின் குடும்பத்தினர்கள் யாழ்ப்பாணத்தில் இருந்தால் அவர்கள் பிரான்ஸில் தமது குடும்பத்தினருடன் சேர்ந்து வாழ்வதறகான நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளதாக இலங்கைக்கான பிரான்ஸ் தூதுவர் கிறிஸ்டினா ரொபின்சன் தெரிவித்ததாக யாழ். மாவட்ட செயலாளர் இமல்டா சுகுமார் தெரிவித்தார். யாழ். மாவட்ட செயலகத்தில் இன்று திங்கட்கிழமை இலங்கைக்கான பிரான்ஸ் தூதுவர் தன்னை சந்தித்து கலந்துரையாடிய போதே மேற்கண்டவாறு குறிப்பிட்டதாக யாழ். மாவட்ட செயலாளர் கூறினார். இது தொடர்பில் அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில், சமகால அரசியல் தமிழ் மக்களுக்கு …
-
- 5 replies
- 1.8k views
-
-
எனது அயலவர் ஒர் இலங்கைத் தமிழர் - ஆங்கிலத்தில் ஒரு விவரணப் படம். எமது இனம் இலங்கைத் தீவில் இனப் படுகொலைக்கு உள்ளாக்கப்பட்டதை அறிந்த ஒரு ஆங்கிலேயர் அது பற்றிய பின்னணியை ஆராய முற்படுவதை எடுத்துக்காட்டும் ஒரு விவரணம். இது பற்றிய உங்கள் எல்லோரதும் ஆரோக்கியமான கருத்துக்கள் இந்த விவரணத்தைத் தயாரித்தவர்களுக்கு பெரிதும் பயன்படும். தயவுசெய்து உங்களது கருத்துக்களைப் பகிர்ந்துகொள்ளுங்கள். இது ஆங்கிலேயர்கள் மத்தியில் காண்பிப்பதற்காகவே தயாரிக்கப்பட்டது என்பதையும் கவனத்திலெடுங்கள். நன்றியுடன் பரதன் http://www.youtube.com/watch?v=jFvUWiWPMO4&layer_token=eeed3f777741deec http://www.youtube.com/watch?v=hDUySKPWCDQ&layer_token=13c8276c85bbfcc
-
- 2 replies
- 1.8k views
-
-
போயஸ் தோட்டத்தில் குளிரூட்டப்பட்ட அறையில் சூப் குடித்துக் கொண்டிருப்பவருக்கு ஈழத் தமிழர் பிரச்சினை எப்படிப் புரியும்?: குமுதம் கேள்வி [செவ்வாய்க்கிழமை, 28 ஒக்ரோபர் 2008, 01:14 பி.ப ஈழம்] [க.நித்தியா] போயஸ் தோட்டத்தில் குளிரூட்டப்பட்ட அறையில் சூப் குடித்துக் கொண்டிருக்கும் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளர் ஜெயலலிதாவுக்கு ஈழத் தமிழர் பிரச்சினை எப்படிப் புரியும்? என்று குமுதம் வார இதழ் கேள்வி எழுப்பியுள்ளது. இது தொடர்பில் அந்த ஏட்டின் கேள்வி - பதில் பகுதியில் ஒரு வாசகர் எழுப்பியுள்ள கேள்விக்கு அளிக்கப்பட்ட பதில்: "இலங்கையில் நடப்பது அதன் உள்நாட்டுப் பிரச்னை. அதில் இந்தியா தலையிட முடியாது. கருணாநிதி முதலில் இதைப் புரிந்து கொள்ளட்டும்" என்று சொ…
-
- 4 replies
- 1.8k views
-
-
அமெரிக்காவின் அழுத்தங்களை மீறி ஈரான் நாட்டுக்கு 4 நாட்கள் பயணமாக சிறிலங்கா அரச தலைவர் மகிந்த ராஜபக்ச இன்று செல்கிறார். தொடர்ந்து வாசிக்க
-
- 10 replies
- 1.8k views
-
-
வடக்கு,கிழக்கு வான் பரப்பில் மீண்டும் சீறிப் பாயப் போகும் சீன விமானங்கள் [Monday, 2011-02-21 05:21:00] சீனாவிடமிருந்து இலங்கை பல விமானங்களைக் கொள்வனவு செய்யவுள்ளதாக விமானப்படைத் தளபதி தெரிவித்துள்ளார்.பயணிகள் விமான சேவைகளை விஸ்தரிக்கும் நோக்கிலேயே சீனாவிலிருந்து ஸியான் எம்.-60 ரக விமானங்களை இலங்கை கொள்வனவு செய்யவுள்ளது என விமானப்படை தளபதி எயார் சீவ் மார்ஷல் ரொஷான் குணதிலக்க தெரிவித்துள்ளார். இந்த விமானங்கள் மார்ச் - மே மாதங்களுக்கிடையில் இலங்கையை வந்தடையவுள்ளன. 40 ஆசனங்கள் கொண்ட இந்த விமானங்கள் சீனாவில் தயாரிக்கப்பட்டவையாகும். இலங்கை விமானப்படை தனது பயணிகள் விமான சேவைகள் மூலம் கடந்த வருடம் 24 கோடி ரூபாவை அரசாங்கத்திற்கு வருமானமாக பெற்றுக் கொடுத்துள்ளது. உ…
-
- 0 replies
- 1.8k views
-
-
தம்மையே உயிராயுதங்களாக்கிய கரும்புலிகள் நினைவை போற்ற தமிழர் தாயகம் எழுச்சிக் கோலம் தமிழீழ தாயக விடுதலைக்காக உயிராயுதங்களாக தம்மை அர்ப்பணித்து வீரகாவியங்களான கரும்புலிமாவீரர்களை போற்றுகின்ற கரும்புலிகள் நாளுக்காக தாயக தேசம் உணர்வெழுச்சியுடன் தயாராகிறது. கரும்புலி மாவீரர்கள் அனைவரையும் ஒன்று சேரப்போற்றுகின்ற நாள் யூலை 5. தாயகம் எங்கணும் கரும்புலி மாவீர்களின் திருவுருவப்படங்கள் தாங்கிய ஊர்திகளின் பவனிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. தாயகம் எங்கணும் மஞ்சள் சிவப்புக்கொடிகள் கட்டப்பட்டு எழுச்சிக்கோலம் பூண்டுள்ளது. கரும்புலிகளின் திருவுருவப்படங்கள் சுமந்த நினைவுப் பந்தல்கள் பொது இடங்களில் அமைக்கப்பட்டு வணக்க நிகழ்வுகள் நடைபெற்று வருகின்றன. கரும்புலி…
-
- 5 replies
- 1.8k views
-
-
ராஜபக்ஸவின் சகோதரர்கள் ஒன்றிணைந்து தமிழினத்தை ஒட்டு மொத்தமாக அழித்துவிட நினைக்கிறார்கள் : டாக்டர் ராமதாஸ். ஈழத்தமிழர்களின் பிரச்சினையின் உண்மைத்தன்மையை உணர்ந்து கொண்டு சிறிலங்கா தொடர்பான அணுகுமுறையை இந்தியா மாற்றிக்கொள்ள வேண்டுமென பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். தைலாபுரம் தோட்டத்தில் நேற்று முன்தினம் வியாழக்கிழமை ஊடகவியலாளர்களிடம் கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார். அவர் மேலும் கூறியுள்ளதாவது தங்களை எவரும் தனிமைப்படுத்த முடியாது என தெரிவித்துள்ள சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஸ, தமக்கு துணையாக சார்க் நாடுகள் உள்ளதாக கூறியுள்ளார். ஜனாதிபதி ராஜபக்ஸவின் சகோதரர்கள் ஒன்றிணைந்து தமிழினத்தை ஒட்டு மொத்தம…
-
- 4 replies
- 1.8k views
-
-
தீவிரமாக்கப்படும் படைபல அதிகரிப்பு -அருஸ் (வேல்ஸ்)- இலங்கை ஒரு முழு அளவிலான போருக்குள் மூழ்கிப்போயுள்ள அதேசமயம் மக்களும் என்றும் இல்லாதவாறான துன்பங்களுக்கு முகம்கொடுத்து வருகின்றனர். அதிலும் குறிப்பாக தமிழ்மக்கள் படும் துன்பங்கள் சொல்லில் அடங்காதவை. வடக்கு கிழக்கில் நேரடியான போருக்குள் சிக்கிக்தவித்த மக்கள் தமது அத்தியாவசியத் தேவைகளுக்கு என தலைநகருக்கு வந்தபோதும் அவர்களை கூட்டமாக அள்ளிச் சென்று பலவந்தமாக வெளியேற்றியமை உலகத்தை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. உலகம் இந்த அதிர்ச்சியில் இருந்து மீளமுன்னர் மற்றுமொரு ஆச்சரியமான செய்தியும் சொல்லப்பட்டுள்ளது. அதாவது இந்த வருடத்தில் படையினருக்கு மேலும் 50,000 இராணுவ வீரர்களை சேர்க்க அரசு முடிவெடுத்துள்ளது. கடந்த வாரம் இட…
-
- 3 replies
- 1.8k views
-
-
ஹோமாகம தேசிய வைத்தியசாலையில் பணிப்புரியும் வைத்தியரொருவரை, அவர் அணிந்துவந்திருந்த புர்காவை கழற்றும்படி பணித்தமையின் காரணமாக, தனது வைத்தியர் தொழிலை இராஜினாமா செய்த சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது. கடந்த ஏப்ரல் மாதம் குறித்த வைத்தியசாலையில் கடமையில் ஈடுபட்டுக்கொண்டிருந்த வேளையில், குறித்த வைத்திய அதிகாரி புர்கா அணிந்திருந்தமையின் காரணமாக, நோயாளரொருவர் அவரிடம் மருத்துவம் பெற்றுக்கொள்ள மறுத்துள்ளார். இந்நிலையில் வைத்தியசாலையிலிருந்து புர்காவை கழற்றிவிட்டு பணிக்கு வரும்படி வைத்தியசாலையின் சிரேஷ்ட வைத்திய அதிகாரியால் பணிப்பு விடுக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், வைத்தியசாலையிலிருந்து வெளியேறியிருந்த வைத்தியர், மே மாதம் 2ஆம் திகதி வரையில் வைத்தியசாலைக்கு வருகைத்தராதிருந்த…
-
- 14 replies
- 1.8k views
-
-
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினை எக்காரணம் கொண்டும் பதிவு செய்ய முடியாது என்று தமிழரசுக்கட்சியின் பொதுச் செயலாளரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராசா தெரிவித்திருக்கின்றார். இது குறித்து மேலும் தெரியவருவதாவது, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினை அரசியல் கட்சியாகப் பதிவு செய்ய முடியாது என்று தமிழரசுக்கட்சியின் உறுப்பினர்கள் மத்தியில் வவுனியாவில் கருத்துத் தெரிவித்த போது மாவை சேனாதிராசா கேள்வி தெரிவித்திருக்கின்றார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினை ஒரு அரசியல் கட்சியாகப் பதிவு செய்வதன் மூலம் பிரச்சினைகளைத் தீர்த்துக் கொள்ளலாமே என்று வவுனியாவைச் சேர்ந்த தமிழரசுக்கட்சி உறுப்பினர்கள் கேள்வி எழுப்பியிருக்கின்றனர். அதற்குப் பதிலளித்த ம…
-
- 9 replies
- 1.8k views
-
-
நாளுக்கு நாள் சிறிலங்கா படைகளினால் தமிழ் மக்கள் நூற்றுக்கணக்காக படுகொலை செய்யப்பட்டு வரும் சூழ்நிலையில், இனப்படுகொலைக்கு எதிராக சர்வதேசம் எங்கும் ஈழத்தமிழர்களின் போராட்டங்கள் வலுப்பெற்று, சர்வதேச சமூகத்தின் கண்டனங்கள் சிறிலங்கா அரசை நோக்கி திரும்பும் இவ்வேளையில், புலம்பெயர் தேசங்களில் வாழும் ஒட்டுக்குழுக்களின் உறுப்பினர்களுடன் அவசர சந்திப்பு ஒன்றுக்கு சிறிலங்கா அரசாங்கம் அழைப்பானை அனுப்பியுள்ளது. http://www.orunews.com/?p=3388#more-3388
-
- 14 replies
- 1.8k views
-
-
நாய்களை கட்டி வைக்கலாம், மனிதரை முடியுமா?' [23 - February - 2007] [Font Size - A - A - A] * மேலும் 6 ஐ.தே.க.எம்.பி.க்கள் அரசில் இணைவது உண்மையா என்ற கேள்விக்கு ஜோன்ஸ்டனின் பதில் -ப.பன்னீர்செல்வம்- நாய்கள் என்றால் கட்டி வைத்து பாதுகாக்கலாம். ஆனால், மனிதர்களை கட்டி வைத்து பாதுகாக்க முடியுமா? என கேள்வி எழுப்புகின்றார் ஐ.தே.கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ. கொழும்பில் நேற்று வியாழக்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டின் போது ஐ.தே.கட்சியிலிருந்து மேலும் 6 பேர் அரசாங்கத்துடன் இணையப் போவது உண்மையா என்று கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கும் போதே மேற்கண்ட விளக்கத்தை ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ எம்.பி. வழங்கினார். நாம் மனிதர்களுடனேயே அரச…
-
- 7 replies
- 1.8k views
-
-
வனவிலங்குகளை பாதுகாக்கவும் அவற்றுக்கு சரணாலயங்களை அமைக்கவும் நடவடிக்கையெடுத்துள்ள அரசாங்கம் தமிழ் மக்கள் மீது, குண்டுகளை வீசுவதுடன் அவர்களின் வாழ்விடங்களையும் அழித்து வருகின்றதென தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் கே. தங்கேஸ்வரி குற்றஞ்சாட்டினார். பாராளுமன்றத்தில் நேற்று வியாழக்கிழமை இடம்பெற்ற சுற்றாடல் இயற்கை வளங்கள் தொடர்பான திருத்த சட்டமூல விவாதத்தில் உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்த அவர் மேலும் கூறியதாவது; விலங்குகளுக்கு சரணாலயங்களையும் தாவரங்களுக்கு பூங்காக்களையும் அமைத்துக் கொடுக்கும் அமைச்சர்கள் வன்னியில் அகதிகளாக இடம்பெயர்ந்து வாழ்வதற்கு கூடாரங்களின்றியும் உண்பதற்கு உணவின்றியும், உயிருக்குப் போராடும் தமிழ் மக்கள் மீது மனிதாபிமானம் காட்டாத…
-
- 0 replies
- 1.8k views
-
-
மகிந்தரின் ரகசிய செயல் அம்பலம்! [ Monday, 26-09-2011 15:58 ] ஐ.நா. செயலாளர் நாயகம் பான் கீ மூனை சனிக்கிழமை இரவு சந்தித்த பின்னர் மின்தூக்கி அருகே காத்திருந்த போது ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவிடம் ஐ.நா.வுக்கான இலங்கையின் நிரந்தர வதிவிடப்பிரதிநிதி பாலித கோஹண தெரிவித்த தகவல்களை இன்னர்சிட்டி பிரஸ் வெளியிட்டுள்ளது. இது தொடர்பான ஒளிநாடாவையும் பதிவு செய்து தமது இணையத்தளத்திலும் அதனை இன்னர் சிட்டி பிரஸ் வெளியிட்டிருக்கின்றது. "நாங்கள் அவருக்கு அனுப்பியிருந்த ஒளிநாடாவை அவர் ஏற்கனவே பார்த்துள்ளார்" என்று பான் கீ மூன் தொடர்பாக ஜனாதிபதி மகிந்த ராஜுபக்ஷவிடம் பாலித கோஹண தெரிவித்திருக்கின்றார். "இலங்கையின் கொலைக் களங்கள்" என்ற பிரித்தானிய சனல் -04 தொலைக்காட்சி வெளியிட…
-
- 1 reply
- 1.8k views
-
-
கனடா சிற்றி நியூஸ் வாக்கெடுப்பு..வாக்களியுங்கள் .. கீழ் உள்ள இணைப்புக்கு சென்று.. முதலாவது தெரிவை தெரிவு செய்யுங்கள்.. Link : http://www.citynews.ca/
-
- 4 replies
- 1.8k views
-